Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
உதயன்
4 posters
Page 1 of 1
உதயன்
ஒரு கொலைக்கு காரணமானவனை தேடும் தேடுதல் வேட்டைதான் கதை.
மதுரையில் பெரிய தாதாவாக விளங்கும் ஆசிஷ் வித்யார்த்தின் வீட்டில் ஒரு கொலை நடந்து விடுகிறது அந்த கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க ஆசிஷ் வித்யார்த்தின் கும்பலை சேர்ந்தவர்கள் ஊர் ஊராக தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள். ஆசிஷ் வித்யார்த்தின் கும்பலானது ஒவ்வொரு ஊரிலிருக்கும் முக்கிய ரவுடிகளிடமும், தன் வீட்டில் நடந்த கொலைக்கு யார் காரணம் என்று மிரட்டுகிறார்கள். அனைவரும் பயத்தில் தான் இல்லை என்று கூறிவிடுகிறார்கள். இறுதியாக அப்பு என்ற ரவுடிதான் அதற்கு காரணம் என்று கண்டு பிடித்து சென்னையை வந்தடைகிறார் ஆசிஷ் வித்யார்த்தி.
சென்னையில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரியும் வசந்தாக அருள்நிதி, அறிமுக நாயகியாக பிரணிதா(பிரியா) என்ற கதாபாத்திரத்தில் இணைய தள அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். எதேச்சையாக இந்த இரண்டு பேருக்கும் இடையேயான முதல் சந்திப்பு சிறு விபத்தில் நிகழ்கிறது. அதாவது, அருள்நிதி சென்று கொண்டிருக்கும் பைக் எதிர்பாராத விதமாக பிரணிதாவின் பைக்கின் மீது மோதுகிறது. அதிர்ச்சியில் திரும்பி பார்க்கும் பிரணிதாவின் முதல் பார்வையிலே, தன் மனதை பறிகொடுத்துவிடுகிறார். ஒருநாள் பிரணிதாவை சந்தித்து உடனடியாக திருமணம் பற்றி பேசி, அவரை காதலிக்க ஆரம்பிக்கிறார். பின்னர் தோழியின் வங்கி கடனுக்காக பிரணிதாவும் அருள்நிதியிடம் வந்து உதவி கேட்க, மோதலில் ஆரம்பித்தது சிறிய ஊடல்களுக்கிடையே காதலாக மாறுகிறது.
பிரணிதாவின் தந்தை ஒரு பெரிய தாதாவிடம் ஆடிட்டராக பணிபுரிபவர். இந்த காதலை இவர் எதிர்க்க, வசந்த்தை மிரட்ட வரும் அந்த பெரிய தாதாவின் தம்பி அருள்நிதியை கண்டவுடன் மிரண்டு போய், கத்தியால் குத்திவிட, அப்போது அங்கே வந்து அவனை கொன்றுவிடுகிறார் ஆசிஷ் வித்யார்த்தி. அவரை பார்த்தவுடன் வசந்த் 'அப்பா' என்று கூறியபடி சரிய, இடைவேளை ஆரம்பிக்கிறது. அருள்நிதி யார்? அவனுக்கும் அந்த பெரிய சக்திக்கும் என்ன பிரச்சினை? எதற்காக அருள்நிதியின் அப்பா அவர்களை தேடி வருகிறார்? இந்த காதல் ஜோடிகள் சேர்ந்தார்களா? இப்படி பல கேள்விகளுக்கு வள வளன்னு விடையளிக்கிறது க்ளைமாக்ஸ்!
சிங்கிள் ஆக்ட்டுக்கே ஃபீலிங்க்ஸ் காட்டத் தடுமாறும் ஹீரோவுக்கு இதில் டபுள் ஆக்ஷன். தானும் சிரமப்பட்டு நம்மையும் சிரமப்படுத்துகிறார் அருள்நிதி. இரண்டு கேரக்டருக்கும் என்னா வித்தியாசம்னா தாதா ஹீரோ பான்பராக்கோ வெற்றிலையோ போட்டிருப்பார். சாதா ஹீரோ டிரஸ் மட்டும் போட்டிருப்பார்... சில பேர் நேரில் பார்க்க அழகாக இருப்பார்கள் ஆனால் போட்டோவில் அவர்களை காண சகிக்காது. அதே சமயம் சிலர் போட்டோவில் நன்றாக இருப்பார்கள், ஆனால் நேரில் பார்த்தால் அவரா இவர்? என்று வினவும்படி இருப்பார்கள். நம்ம ஹீரோ அருள்நிதி போட்டோக்களில் பார்க்கையில் ஹான்ட்சமாகவே இருக்கிறார். நல்ல உயரம். சண்டை காட்சிகளில் திமிறியிருக்கிறார். ஆனால் நடிப்பென்று வரும் போது படு செயற்கை. ரீயாக்ஷனும் பாடி லாங்வேஜ்ஜும் ஒத்துவரலைனா கூலிங் கிளாசை போட்டு ஒப்பேத்திடலாம்னு யாராச்சும் சொல்லியிருப்பாங்க போல..! ஆனா.. சும்மா சொல்லக்கூடாது போட்டோக்களில் பார்க்கையில் உயரமான பில்லா அஜித்தை போல ஸ்மார்ட்டாகவே இருக்கிறார்.
கதாநாயகி பிரணிதாவின் முகத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம். சோ ஸ்வீட்.. நேர்த்தியான முகம், நல்ல முகபாவங்கள், ஒல்லியான உடல்வாகு செம கியூட்.. ஆனா பாப்பாவுக்கு ஓவர் ஆக்ஷன் தான் வருது.
டபுள் ஹீரோ இருந்தும் அவர்களை ஓவர்டேக் செய்து சிங்கிள்மேன் ஆர்மியாக அசத்துவது சந்தானம் தான். இரட்டை அர்த்தத்தில் பேசினால் மட்டுமே காமெடி என்று சந்தானத்திடம் யாரோ சொல்லி இருப்பார்கள் போல. அப்பப்பா... காது கூசுது. இந்த வட்டத்தை விட்டு சந்தானம் வெளியே வந்தா இன்னும் நல்ல காமெடிகளை தரமுடியும்.
படத்தின் கதை மற்றும் திரைக்கதை எண்பதுகளில் வந்த ரஜினி, கமல் படங்களை நினைவுப்படுத்துகிறது. இயக்குநர் சாப்ளின் பழைய படங்களை உல்டா பண்ணி எடுத்திருப்பார் போல... பழைய படத்தின் கதையை புது விதமாய் யோசிக்காமல் பழசாகவே எடுத்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் டச் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகிறது.. ஹீரோ சின்னப்பையன்கிட்ட ஐஸ்க்ரீம் குடுத்துவிட்டு அதை ஹீரோயினிடம் தரச்சொல்ல அவன் அவனோட ஆள் சிறுமிக்கு அதை தருவது அழகு.
விஜய் மில்டனின் ஒளிப்பதிவு படத்துக்கு ப்ளஸ். 'இத்தனை நாளாய் எங்கே இருந்தாய்' பாடல் காட்சிகளில் காமிரா கோணங்களும், ஹீரோயின் முக அழகை 100% மெருகேற்றி காட்டுகிறது. கிஷோரின் கத்திரி ஆங்காங்கே மழுங்கிப்போச்சு. படம் பூரா கண்ணியமாக பாடல்களை நுழைத்த இசையமைப்பாளர் மணிகாந்த் கத்ரி திடீர் என 'யக்கா யக்கா லக்கா லக்கா மேல இல்ல கீழே இல்ல ஆதரிப்பார் யாரும் இல்ல' என்ற மோசமாக டப்பாங் குத்துப்பாடல்களை நுழைத்து படத்தின் தரத்தை குறைத்துள்ளார். அபார்ட்மெண்ட்டில் ஹீரோ-ஹீரோயின், சிறுவர்-சிறுமிகள் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும்போது வரும் பின்னணி இசை அருமை.
ஒரு தனியார் வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக இருக்கும் ஹீரோ இப்படித்தான் கலர் போன ஜீன்ஸ் பேண்ட்டும், டக் இன் செய்யாத சட்டையுமாக படம் பூரா வருவாரா? டிராஃபிக்கில் மாட்டும் ஹீரோயின் நடுரோட்டில் சாவதானமாக மேக்கப் போடறாரே.. அதெப்படி?.... இப்படியே சின்னச் சின்ன கேள்விகள் இயக்குநரை கேட்கதான் தோணுது. இருந்தாலும் சற்றே புத்திசாலித்தனமான வசனங்களால் ஒருவழியா தம் பிடிச்சு ஒக்கார வச்சிட்டாரு.
உதயன் - அஸ்தமித்துப்போன விடியல்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உதயன்
உதயன் - அஸ்தமித்துப்போன விடியல்!
மீண்டும் உதயம் .ஐந்தாண்டுக்கு பின் .
மீண்டும் உதயம் .ஐந்தாண்டுக்கு பின் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» உதயன்’ செய்தி ஆசிரியர் மீதான தாக்குதல்:
» உதயன் நிறுவன பிரதம ஆசிரியர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
» உதயன் செய்தி ஆசிரியர் தாக்குதல்; பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு அறிக்கை
» அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் உதயன் மீது வழக்கு!
» உதயன் நிறுவன பிரதம ஆசிரியர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
» உதயன் செய்தி ஆசிரியர் தாக்குதல்; பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதிக்கு அறிக்கை
» அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் உதயன் மீது வழக்கு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|