Latest topics
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!by rammalar Today at 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Today at 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Today at 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Yesterday at 19:35
» பல்சுவை
by rammalar Yesterday at 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
மன அழுத்தம்
3 posters
Page 1 of 1
மன அழுத்தம்
உலகம் முழுவதும் 12 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக
உலக சுகாதார நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் 36 சதவீதத்துடன் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் மகிழ்ச்சி பற்றி உலகின் 18 நாடுகளில் 89 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் பிஎம்சி என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:
அதிக அளவிலான மன அழுத்த பாதிப்பில் இந்தியர்கள் 36 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளனர். இதுதவிர 9 சதவீதம் பேருக்கு மிதமான பாதிப்பு உள்ளது. மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவர்களின் சராசரி வயது 31.9 ஆக உள்ளது. இது சீனாவில் 18.8 ஆகவும், அமெரிக்காவில் 22.7 ஆகவும் உள்ளது. அடுத்தபடியாக நெதர்லாந்துவாசிகளில் 33.6 சதவீதம் பேர் அதிக மன அழுத்தம் கொண்டவர்களாக உள்ளனர். 3ம் இடத்தில் உள்ள பிரான்சில் 32.3 சதவீதம் பேரும், 4ம் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 30.9 சதவீதம் பேரும் அதிக மன அழுத்தம் கொண்டவர்களாக உள்ளனர். சீனாவில் இது வெறும் 12 சதவீதமாக உள்ளது.
உலகில் மொத்தம் 12 கோடி பேர் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு 8.5 லட்சம் பேர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். வேலைத் திறன், வாழக்கைத் தரம், உறவு முறைகள் ஆகியவற்றை இது வெகுவாக பாதிக்கிறது. ஏழை நாடுகளைவிட (20%) பணக்கார நாடுகளில் உள்ளவர்கள் (28%) அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
Re: மன அழுத்தம்
வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளுக்கு தீராத வியாதியோ, விபத்தோ, திடீர் மரணமோ ஏற்படுவது, வேலை பளு, போதிய வருமானம் கிடைக்காதது, தூக்கமின்மை ஆகியவையே மன அழுத்தத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
மன அழுத்தம் அதிகரிக்கும்போது, வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டு முடிவில் தற்கொலை எண்ணம் உருவாகிறது. அவ்வாறு மனிதனின் சராசரி வாழ்நாளை குறைக்கும் காரணிகளில் இது 4வது இடத்தில் உள்ளது. இது படிப்படியாக அதிகரித்து 2020ம் ஆண்டில் 2ம் இடத்துக்கு வந்து விட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
‘வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளுக்கு தீராத வியாதியோ, விபத்தோ, திடீர் மரணமோ ஏற்படுவது, குடும்ப பிரச்னை, வேலை பளு, போதிய வருமானம் கிடைக்காதது, தூக்கமின்மை ஆகியவையே மன அழுத்தத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது தெரியவந்துள்ளது’
எதற்கெடுத்தாலும் மனதை அதிகம் அலட்டிக் கொள்வதே மன அழுத்தத்திற்கு காரணம் என்கிறது ஆயுர்வேதம். அடைய விரும்பும் லட்சியத்தை எட்ட முடியாமல் போதல். பதற்றமாக செயல்படுதல், உணர்ச்சி வசப்பட்டு பேசுதல் போன்றவை மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் மன நலம் மட்டுமல்லாது உடல்நலமும் பாதிப்பிற்குள்ளாகிறது.
உடல்நல பாதிப்புகள்
மன அழுத்தம் தொடர்ந்து இருந்தால் உடலின் ஹார்மோன்களில் மாற்றத்தை உண்டாக்கும். மன அழுத்த நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. இதனால் தொற்று நோய்கள் ஏற்படும். அடிக்கடி மன அழுத்தம் ஏற்பட்டால், ரத்தக் கொதிப்பு அதிகமாகி, இதயம் பாதிக்கப்படும். வயிற்றில் அல்சர் ஏற்பட்டு புண் உண்டாகும்.
சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் மன அழுத்தத்தினால்தான் ஏற்படுகிறது.
உணவும் மன அழுத்தமும்
உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை மன அழுத்தம் போக்கும். இது தவிர நாம் உண்ணும் உணவும் மன அழுத்தத்தை போக்கும். அமுக்கிராக் கிழங்கு அஸ்வகந்தா – மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்து. நரம்புகளை பலப்படுத்தும். மூட்டு, திசுக்கள், இவற்றை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். நல்ல உறக்கத்தை உண்டாக்கும்.
வைட்டமின் சத்துக்கள்
அமெரிக்காவில் உள்ள அலாபாமா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படி வைட்டமின் ‘சி’ மன அழுத்தம் உண்டாக காரணமான ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் என்று தெரியவந்துள்ளது. ஆரஞ்சு ஜுஸ் வைட்டமின் ‘சி’ செறிந்தது. ஆனால் அதைவிட சிறந்தது நெல்லிக்காய். ஒரு நெல்லிக்காய், ஒரு ஆரஞ்சை விட இருமடங்கு வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. நெல்லி ஜூஸ் தினமும் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
அதிக கார்போ-ஹைடிரேட் உணவுகளும், பீன்ஸ், பருப்பு வகைகள் போன்றவற்றை மன அழுத்தத்தை குறைக்கும். இவை செரோடோனின் என்ற ஹார்மோன் அளவை அதிகரிக்க உதவும். இந்த ஹார்மோன் குறைந்தால் மன அழுத்தம் சுலபமாகத் தாக்கும்.
பச்சை காய்கறிகள், கீரைகள், ‘பி’ வைட்டமின் செறிந்தவை. இவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், செரோடோனின், டோஃபாமைன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும்.
டென்சன் குறைக்கும் பழச்சாறு
பழச்சாறுகள், குல்கந்த் செரித்த பால், லஸ்ஸி, உட்கொள்ளவும். உணவில் ஏலக்காய், கொத்தமல்லி, புதினா சேர்த்துக் கொள்ளவும். பாதம் பருப்பு தேங்காய் இவைகள் மன அழுத்தத்தை குறைக்கும். சீரகம் உடலுக்கு வலிவு தரும் உணவு செரிக்க உதவும்.
ஜாதிக்காய் ஆண்மை பெருக்கி, டானிக், டென்ஷனை குறைக்கும். மனதை அமைதிப்படுத்தும்.ஏலக்காய் டானிக், ஆண்மை பெருக்கி, ஞாபக சக்தி மேம்படும். அதிமதுரம் டானிக், உடலை வலுவாக்கும்.
மன அழுத்தம் குறைக்கும் ஓட்ஸ்
ஓட்ஸ் கஞ்சி மன அழுத்தத்தை குறைக்க உதவும். இந்த கஞ்சியுடன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொண்டால், தூங்க உதவும். மெலாடோனின் ஹார்மோன் உண்டாக்கும்.
முளை கட்டிய உளுந்தும் மன அழுத்தம் போக்க வல்லது. வேர்க்கடலை அடங்கிய சாக்லேட் மனதை அமைதிப்படுத்த உதவும் என்டோர்பின்ஸ் ஐ ஊக்குவிக்கும். மீன் உணவுகள் மனஅழுத்தம் உண்டாகும் அக்ரிசன் ஐ குறைக்கும்
Re: மன அழுத்தம்
இன்றைய நிலைக்கு ஏற்ற பதிவு .
நன்றி தோழரே .
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அழுத்தம் போக்கும் விரல் அழுத்தம்
» மன அழுத்தம்
» மன அழுத்தம்
» மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’
» இரத்த அழுத்தம்
» மன அழுத்தம்
» மன அழுத்தம்
» மன அழுத்தம் போக `சூயிங்க் கம்’
» இரத்த அழுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|