Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
அழகர்சாமியின் குதிரை - Azhagarsamiyin Kudhirai
Page 1 of 1
அழகர்சாமியின் குதிரை - Azhagarsamiyin Kudhirai
கிராமத்தில் அழகர்சாமி எனும் கடவுளின் வாகனமான மரக்குதிரை காணாமல் போகிறது. அப்போது அங்கே வரும் அழகர்சாமி எனும் பக்கத்தூர் குதிரைக்காரனின் குதிரை வழி தவறி இவர்களிடம் வந்து மாட்ட, அந்த குதிரை வந்த நேரத்தில் ஊரில் நல்லது நடக்க, சாமியே குதிரையை அனுப்பி வைப்பதாய் நம்பிக்கை வந்து பிடித்து வைக்கிறார்கள். குதிரையை தேடி வரும் அழகர்சாமிக்கு குதிரையை கொண்டு போனால் தான் அவனுடய திருமணம் இல்லாவிட்டால் அவ்வளவுதான் என்ற நிலைமை. அவனுடய குதிரை திரும்ப கிடைத்ததா? காணாமல் போன மரக்குதிரை என்னவாயிற்று? என்பதை கதை.
பாஸ்கர் சக்தியின் கொஞ்சமே பெரிய சிறுகதையை அல்லது குட்டிநாவலை படமாக்க முடிவு செய்த இயக்குநர் சுசீந்தரனுக்கு வாழ்த்துகள். மூலக்கதையை கொஞ்சமும் சிதைக்காமல் திரைக்கதை அமைத்து படமாக்கியமைக்கு பாராட்டுகள். பீச்சில் பொறுமையாக ஆற அமற நடைபோடும் குதிரையை போல கொட்டாவி விட்டபடி தொடங்கும் கதை இடைவேளைக்கு கொஞ்சம் முன்னால் தேசிங்குராஜா குதிரைபோல மின்னல் வேகத்தில் பாய்கிறது. இதற்கு நடுவே அழகான இரண்டு காதல், கிராமத்து கிண்டல்கள், கொஞ்சம் சென்டிமென்ட் என ஒரு கமர்ஷியல் படத்துக்கு தேவையான மசாலாக்களையும் ஆங்காங்கே தூவியிருப்பது அழகு!
படத்தின் ஹீரோ அப்புகுட்டி அசத்துகிறார். அவர் வந்தபிறகுதான் படம் ஜெட்வேகத்தில் பாய்கிறது. அவருடைய போர்ஷன் மிக குறைவாக இருப்பது ஒரு குறை. குதிரை இழந்து துக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிற விதம், சில இடங்களில் அழவைத்து, சிரிக்க வைத்து இன்னும் என்னவெல்லாமோ செய்யவைக்கிறது. இன்னொரு ஹீரோவாக வருகிற அந்த நாத்திக இளைஞன் பாத்திரமும் மிக அருமையாக நடித்திருக்கிறார். படத்தில் கவர்ந்தது கிராமத்து சிறுவனாக வருகிற அந்த எகத்தாளமான குட்டிப்பையனின் பாத்திரம்தான். அதுவே தனி சிறுகதையாக தெரிகிறது.
தலைப்பில் துவங்கி படம் வரை ரீமேக் செய்யும் ரீமேக் ஜாம்பவான்கள், பாஸ்கர் சக்தி போன்ற சிறுகதையாசிரியரை தொடர்புகொண்டாலே இதுபோன்ற எளிமையான அதே சமயத்தில் புதுமையான கதைகள் கிடைக்கும். பாஸ்கர் சக்தியின் வசனங்களில் நாத்திக வாசம் பலமாக வீசினாலும், படத்தின் கதைகளத்திற்கு அதுவே பக்க பலமாகவும் அமைகிறது. தனது வசங்களின் மூலம் ரசிகர்களை சிந்திக்க வைத்த இவர் சிரிக்கவும் வைக்கிறார்.
சரண்யா மோகன் தன் பாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார். கிராமத்துப் பெண் எப்படியிருப்பார், திருமணத்தை எதிர் நோக்கியிருக்கும் பெண் எப்படியிருப்பார் என உணர்ந்து நடித்திருக்கிறார். மலையாள மந்திரவாதியாக வரும் 'மேனஜர்' கிருஷ்ணமூர்த்தியும், குதிரையை கண்டுபிடிக்க வரும் போலீஸ்காரராக சூரியும் நடித்திருப்பது மட்டுமின்றி, படத்தின் காமெடி பகுதியையும் கவனித்துக் கொள்கின்றனர்.
சரண்யா மோகனைக் காட்டிலும் பிரபாகரனுக்கு காதலியாக நடித்திருக்கும் அத்வைதாவிற்கு நடிக்க நிறையவே வாய்ப்பு. அதை அம்மணியும் சவாலாக ஏற்றுக் கொண்டு சரியாக செய்து சபாஷ் வாங்கி விடுகிறார்.
பிரசிடென்ட் சண்டையில் திருவிழாவை நிறுத்த முயலும் எக்ஸ்பிரசிடென்ட், விவசாயம் செத்துபோய் பிள்ளைகளை திருப்பூருக்கு வேலைக்கு அனுப்பும் விதவைத்தாய், வேவு பார்க்க வந்த இடத்தில் சாமியாராக டெவலப் ஆகும் போலீஸ்காரர், ஊர் கோடாங்கியின் வயித்தெரிச்சல் என ஆங்காங்கே சின்னச்சின்னதாய் அழகான கதைகள். குதிரையை தொலைத்தவனுக்கும் குதிரையை பறிகொடுத்த கிராமத்திற்குமான மெயின் கதையில் மற்ற கதைகள் கைகால் மூக்கு வாய் போல ஆங்காங்கே சரியான இடத்தில் பொறுத்தமாக அமர்ந்து கொள்ளுகின்றன.
இளையராஜாவுக்கு கிராமத்து படங்கள் என்றாலே அல்வா சாப்பிடுவது மாதிரி! இதிலும் புகுந்து விளையாடியிருக்கிறார் மனிதர். நாயகனின் அறிமுக காட்சியில் வருகிற ஒரே ஒரு பிஜிஎம்மே போதும், அற்புதம்! (வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை). அது மட்டுமே தனியாக கிடைத்தால் மீண்டும் ஒரு முறை கேட்க வேண்டும். கொடுமை, படத்தில் அந்த குறிப்பிட்ட அற்புதமான பிஜிஎம் ஒரே ஒரு இடத்தில்தான் வருகிறது. அது போக குதிக்கிற குதிக்கிற குதிர குட்டி பாடலில், மனுஷன் அப்புகுட்டியின் பாத்திரமாகவே மாறிவிட்டார் போல.. குரலில் காதலை காட்டுகிறார்!
படத்தின் ஒளிப்பதிவாளர் தேனீ ஈஸ்வருக்கு இது முதல்படமாம்.. யாருகாதுல பூ சுத்தறீங்க.. என்னமா படம் பிடிச்சிருக்காரு! அதிலும் அந்த மலைப்பகுதிகளுக்குள் புகுந்து வெளியே வருகிற கேமரா.. ஏலேய் கேமராவ எங்கிட்டு வச்சுய்யா படமெடுத்தீங்க! படத்தின் வசனங்கள் பலதும் கதையில் வருகிற அதே வசனங்கள்தான் திரையில் பார்க்கும் போது அதன் வீரியம் இன்னும் அதிகமாகவே உணர முடிகிறது.
படத்தில் எல்லாமே நன்றாக இருந்தாலும், இரண்டு இடத்தில் குதிரை பின்னாங்காலில் உதைத்தது போல இருந்தது. ஒன்று இரண்டாம் நாயகனுக்கான மொக்கை டூயட் பாடல். அது இல்லாமலேயே அவனுடைய காதலின் வீரியத்தை பல காட்சிகளில் இயக்குநர் உணர்த்தியிருந்தார். இன்னொன்று குதிரை கெட்டவர்களை விரட்டி விரட்டி அடிப்பது.. ராமநாராயணனுக்கு அந்த காட்சியை சமர்ப்பிக்கலாம். படத்திற்கு திருஷ்டிபோல இருக்கும் இந்த காட்சிகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், மற்ற எல்லாமே அற்புதம்தான். பாஸ்கர்சக்தியின் எழுத்துக்கு மாலை மரியாதை செய்து குதிரையிலேற்றி ஊரோடு ஊர்வலம் வந்து திருவிழா எடுத்திருக்கிறார் சுசீந்திரன்.
கிராமத்துப்பெரிசுகளின் அலப்பறை, இளந்தாரிகளின் லந்து, சிறுசுகளின் சேட்டை, பெண்களின் முரட்டுத்தனம், மைனர்களின் வாழ்க்கை என கிராமத்து மனிதர்களின் இயல்பான உணர்வுகளை எந்தவித சினிமாபூச்சுமில்லாமல் அச்சு அசலாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. அண்மைக்கால கிராமத்துப்படங்கள் எல்லாமே வெட்டுக்குத்து வீச்சரிவாள் வேல்கம்பு என ரத்தமும் சதையுமாக சுற்றித்திரியும்போது இந்தபடத்தின் கதையோ அதிலிருந்து விலகி கிராமங்களின் மென்மையான பக்கங்களை அதன் பகடிகளை கிண்டல்கேலிகளை நகைச்சுவையை முன்வைப்பது நிச்சயம் பாராட்டுக்குரியது.
சமீப காலத்தில் இவ்வளவு நெகிழ்ச்சியான ஒரு தமிழ்ப் படத்தைப் பார்த்ததே இல்லை. அழகர்சாமி அவனுடைய காணாமல் போன குதிரையைக் கண்டு பிடித்ததும் அதை அப்பு அப்பு என்று கொஞ்சுவானே.. அழவைத்து விடுகிறது.
படத்தில் ஏராளமான குறைகள் உள்ளன. உதாரணமாக, அந்த மலையாள மாந்த்ரீகன் காட்சிகள் சகிக்கவில்லை. குதிரை வெட்டையை நீரில் கரைத்துக் கோமியமாகக் கொடுப்பது கொடுமை. இந்துக்களை மட்டும்தான் இப்படியெல்லாம் சினிமாவில் அவமானப்படுத்த முடியும். பசுவின் சாணமும் குதிரை வெட்டையும் ஒன்றா ஐயா?
ஆனால் இந்தக் குறைகளை மீறியும் அழகர்சாமியின் குதிரை ஒரு அற்புதமான அனுபவம்.
படத்தின் இயக்குநர் திருவிழா ஐஸ்வண்டிக்காரரைப் போல கிராமத்து மனிதர்களை ஒன்றுதிரட்டி யதார்த்த ஐஸ்கிரீமில் ஆயிரம் வர்ணங்களை ஊற்றி கொஞ்சமும் சுவை குறையாமல் கொடுத்திருக்கிறார். இந்த வகை முரட்டு ஐஸ் எப்போதும் திகட்டியதே இல்லை. இந்தப்படமும்! சுசீந்திரன் மற்றும் அவருடைய டீமினுடைய இந்த முயற்சி நிச்சயம் வெற்றியடையவேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே படம் முடிந்தபின் மனது முழுக்க நிரம்பியிருந்தது. இந்தபடத்தின் வெற்றி இதைப்போல இன்னும் பல படங்களுக்கான துவக்கமாக நம்பிக்கையாக இருக்கும். உலக சினிமா என்றெல்லாம் சொல்லத்தேவையில்லை. 'ஏலேய் இது நம்மூர் படம்யா' என மார்த்தட்டிக்கொள்ளலாம்.
அழகர்சாமியின் குதிரை - அம்சம்!
கூடல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» குதிரை இது அழகானது
» கடல் குதிரை
» நொண்டிக் குதிரை
» வாருங்கள் குதிரை போட்டிக்கு...
» நன்றியுள்ள விலங்கு குதிரை
» கடல் குதிரை
» நொண்டிக் குதிரை
» வாருங்கள் குதிரை போட்டிக்கு...
» நன்றியுள்ள விலங்கு குதிரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|