Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…by rammalar Yesterday at 3:17
» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59
» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58
» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56
» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54
» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52
» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38
» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41
» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
ஆண்மை தவறேல் - Aanmai Thavarael
Page 1 of 1
ஆண்மை தவறேல் - Aanmai Thavarael
தனி மனித ஒழுக்கம்தான் மனித இனத்தின் உயர்வு என்பதை சொல்லும் கதை.
கால்சென்டரில் வேலைப் பார்க்கும் துருவாவிற்கும், ஸ்ருதிக்கும் காதல். இருவரும் ஒரே வீட்டில் மேலும் கீழுமாய் வசிக்கிறார்கள். இவர்கள் காதலிக்கும் நேரம் அதிகாலை நாலு மணி முதல் ஆறு மணி வரை. ஏனென்றால் அப்போதுதான் ஸ்ருதி நைட் ஷிப்ட் பிபிஓ வேலை முடித்து வருவாள். துருவாவுக்கு டே ஷிப்ட். இந்நிலையில் ஒரு நாள் துருவா, ஸ்ருதியின் பிறந்தநாளுக்காக விஷ் பண்ண காத்திருக்க, அவனுடன் விளையாடும் நோக்கில் ஒளிந்து கொண்டு போன் செய்கிறாள். இடைப்பட்ட நேரத்தில் அவள் கடத்தப்படுகிறாள். அவளை கடத்தியவர்கள் யார்? எதற்கு கடத்தினார்கள்? என்ன செய்யப் போகிறார்கள்? ஸ்ருதியை துருவா கண்டுபிடித்தானா? என்பது மீதிக்கதை.
கதாநாயகன் துருவா, சில சமயம் வில்லன் போலிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் நடிக்கவும் முயற்சித்திருக்கிறார். கதாநாயகி ஸ்ருதி, பக்கத்து தெரு ஃபிகர் ரேஞ்ச். ஒருவேளை பார்க்க பார்க்கத்தான் பிடிக்கும் போல.. ஆனால் அவரை அறிமுகப்படுத்தும் போது பின்னணியில் வரும் 'பெண் என்பேன்.. பூ வெண்பேன்' என்கிற பி.பி.ஸ்ரீனிவாஸின் பழைய பாடலை ரீமிக்ஸி வரும் ஹம்மிங் அட்டகாசம். ஆனால் அதன் பிறகு பெரும்பாலான நேரங்களில் அழுது கொண்டேயிருக்க வேண்டியதாய் இருப்பதால் ஒன்றும் பெரிதாக சொல்வதற்கில்லை.
சம்பத்தின் கதாபாத்திரமும் அவர் காட்சிகளும் படத்தை ஜெட் வேகத்தில் நகர்த்திச் செல்கிறது. மற்ற கதாபாத்திரங்களான நந்தா சரவணன், சுப்பு பஞ்சு, லட்சுமி போன்றவர்களின் கதாபாத்திரம் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவாக இருக்கிறது.
எழுதி இயக்கிய குழந்தை வேலப்பன் இளவயதுக்காரர். இதுவரை யாரிடமும் உதவியாளராய் இல்லாமல் இந்த அளவிற்கு இயக்கியிருப்பது பாராட்டுக்குரியது. முக்கியமாய் போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளில், ஒவ்வொரு டிபார்ட்மெண்டாய் அலைக்கழிக்கும் காட்சிகள் இண்ட்ரஸ்டிங். ஆனால் போலீஸ்காரர்களுடன் விபச்சார விடுதிக்குள் போய் தேடும் காட்சிகளில் முகத்தில் அறையப் படவேண்டிய அதிர்ச்சி கிடைக்கவேயில்லை. ஏனென்றால் அம்மாதிரியான இடங்களின் களத்தைப் பற்றி தெரியாததே காரணம். ஆனால் திடீரென விபச்சார தடுப்பு கான்ஸ்டபிள் அவர் ஒருத்தராலத்தான் முடியும் என்று விஜயகாந்த் படம் போல ஒருவரைப் பற்றி சொல்வது, பின்பு அவரை பற்றிய காட்சிகள் வரும் போது அவர் குடித்துக் கொண்டு இருப்பது, போன்ற பல காட்சிகள் உவ்வே...
பெண்களை கடத்தும் அந்த வில்லன், கடைசிவரை அலட்டிக்கொள்ளாத அந்த பார்வை, சூழ்நிலையின் குரூரத்தை மேலும் கூர்மையாக்குகிறது. ஒருவனுக்காக வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்படும் அந்த இளம்பெண் ஓடும் காரிலிருந்து குதித்து மரணமடைவதெல்லாம் பேரதிர்ச்சியான காட்சி.
படத்தில் நடித்திருக்கும் எல்லா கேரக்டர்களுமே மீண்டும் ஒருமுறை கண் முன் வந்து போகிற அளவுக்கு இயல்பாக நடித்திருக்கிறார்கள். இன்டர்வெல் பிளாக்கில் ஜீப்போடு வெடிக்கும் சம்பத் பின்பு கோவாவில் ஜம்மென்று என்ட்ரி கொடுக்கிற காட்சி மட்டும் உலகமகா உப்புமா!
ப்ளஸ் என்றால் கதையை சொன்ன விதம். துருவாவுக்கும், ஸ்ருதிக்குமான காதல். இருவரது காதல் பற்றி துருவா சொல்லும் கதை என்று ஆங்காங்கே சுவாரஸ்ய தீற்றல்கள். சில இடங்களில் வசனம் நச். போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் உள்ளே வந்ததும் சாமி படத்துக்கு முன்னால் நின்று கும்பிட்டுவிட்டு, திருநீறு பூசிக் கொண்டு நிற்பது. பெண்ணைப் பற்றி ஏதுவும் தெரியாமல் இருக்கும் அம்மாக்களை சாடுவது, என்பது போன்ற விஷயங்களை பாராட்டத்தான் வேண்டும். க்ளைமாக்ஸில் யமுனா எப்பவும் நீ லேட்டாத்தான் வருவியா? என்று அழுதபடி அணைப்பது போன்ற காட்சிகள் சுவாரஸ்யம்.
மாதவிலக்கில் அவதியுறும் கடத்தப்பட்ட நான்கு பெண்களில் ஒருத்திக்கு கடத்தல்காரன் நாப்கின் கொடுக்கும் ஒரு காட்சி போதும், பெண்களை கடத்தி எத்தனை சிரத்தையுடன் சர்வதேச மாபியாக்களிடம் விற்கிறார்கள் என்பதற்கு..! இதுபோன்ற கொடூர கடத்தல்களின் நெட்வொர்க் எப்படி செயல்படுகிறது என்பதைக் காட்ட இயக்குநர் செய்திருக்கும் ஹோம் ஒர்க், நம்மை மூக்கில் விரல் வைக்கத் தூண்டுகிறது. நமக்கு அருகாமையில் சம்பங்கள் நிகழ்வது போன்று காட்சிகளை யதார்த்தமாக அமைத்து காட்டுவதில் மொத்தப் படக்குழுவும் வெற்றிபெற்றிருக்கிறது.
முக்கியமாக உண்மைக் குற்றங்களின் அடிப்படையிலான இந்தக்கதையில் கமர்ஷியல் அம்சங்களை அதிகம் நுழைக்காமல் யதார்த்தவகைப் படத்துக்கான கதைக்களத்தை கண்முன் நிறுத்தும் லொக்கேஷன்கள், பாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர்கள் தேர்வு என்று எல்லா அம்சங்களும் அபாரமான கலவையில் படத்தை தூக்கி நிறுத்தியிருக்கின்றன.
ஒளிப்பதிவாளர் அர்பிந்து சாரா, படத்தொகுப்பாளர் வி.ஜெ.பாபு ஆகியோர் திரைக்கதைக்கு ஏற்ப தங்களது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். மரியா மனோகரின் இசையில் 'சட்ட சட...' பாடல் நம்மை சிலிர்க்க வைக்கிறது. பின்னணி இசையிலும் நம்மை கவனிக்க வைத்திருக்கிறார்.
பெண் கடத்தலை பொறுப்புணர்வோடு அணுகாத தமிழ்சினிமாவில், இந்த சீரியஸ் பிரச்சினையை மிக கவனமாக, ஒரு காட்சியில் கூட முகம் சுளித்து விடாதபடி ஒரு விறுவிறு வெகுஜன சினிமாவாக தந்திருக்கும் அறிமுக இயக்குநர் குழந்தை வேலப்பனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
ஆண்மை தவறேல் - கம்பீரம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆண்மை புதுமைப்பித்தன்
» ஆண்மை நிலைக்க ...!
» ஆண்மை நிலைக்க ...!
» ஆண்மை பெருக்கும் உணவுகள்
» அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…
» ஆண்மை நிலைக்க ...!
» ஆண்மை நிலைக்க ...!
» ஆண்மை பெருக்கும் உணவுகள்
» அழகு.. ஆண்மை.. வெண்டைக்காய்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum