சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Khan11

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:23

First topic message reminder :

அங்கேரி


* அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
* உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
* எளிமையைப் பின் தொடர்ந்து சந்தேகம் வருகிறது.
* ஒரு செய்தியை நீ விளம்பரம் செய்ய வேண்டுமா? அதை மிக இரகசியமாக ஒரு பெண்ணிடம் கூறு.
* ஒரு கை மற்றொரு கையைக் கழுவுகிறது. இரண்டும் சேர்ந்து முகத்தைக் கழுவுகிறது.
* ஓடுகிறவன்தான் விழுவான்.
* கவலைக்கு மருந்து அதனைக் காலின் கீழ் போடுவதுதான்.
* குருடர் உலகில் ஒற்றைக் கண்ணன் அரசன்.
* சமாதானம் செய்து வைப்பவர் ஒருபோதும் தோல்வியே அடைவதில்லை.
* சமாதானம் விலைகொடுத்து வாங்கத் தகுந்தது.
* செயலே புகழ் பரப்பும்; வாய் அல்ல.
* சொந்தக் குழந்தை இல்லாதவன் மிகவும் அபாக்கியவான்.
* தூக்கி எறியும் குதிரையைவிட சுமந்து செல்லும் கழுதை மேலானது.
* தேன் இனித்தபோதிலும் அதை முள்ளோடு ஏற்காதே!
* பணம் பேசுகிறது; நாய்கள் குரைக்கின்றன.
* புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அவ்வாறு செய்யமாட்டான்.
* பேராசை முடிகிற இடத்தில் மகிழ்ச்சி தொடங்குகிறது.
* பொன், பெண், ஆடை இவைகளைப் பகல் வெளிச்சத்தில் தேர்ந்தெடு
* நட்சத்திரங்கள் கூச்சல் இடுவதில்லை.
* நண்பன் இல்லாதபோது உன் கைத்தடியுடன் கலந்து ஆலோசனை செய்.
* நீ உன் தாய்க்குக் கீழ்படியாவிட்டால், உன் மாற்றாந் தாய்க்குக் கீழ்படிவாய்.
* நெருப்பு நெருப்பை அணைக்காது.
* மிகப்பெரிய உதவியும் உதவியே. மிகச்சிறிய உதவியும் உதவியே.
* மூன்று ஆண்கள் பெண்களைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இளைஞர், வயோதிகர், நடுவயதினர்.
* நீதிபதியைவிட காலம்தான் உண்மையை வெளிக்கொணர்கிறது.
* நாணச் சிவப்பு நல்ல குணங்களின் வண்ணம்.
* ஓர் இளைஞனுக்கு மனைவி ஓர் ஆதாரம். கைத்தடி அவனுக்கு ஆடம்பரம். ஒரு முதியவருக்கு மனைவி ஓர் ஆடம்பரம். கைத்தடி அவருக்கு ஆதாரம்.
* ஆந்தைக்கூட தன் குஞ்சைப் பருந்தாகத்தான் எண்ணுகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:34

சீனா

* அறத்தின் வாசல் திறப்பதற்குக் கடினம். ஆனால், சுலபமாக மூடப்படாது.
* தோண்டும் கலையில் ஒரு சுண்டெலிகூட தத்துவ ஞானிக்குப் போதிக்கலாம்.
* சாமர்த்தியமான மனிதன் பெரும் தொல்லைகளை சின்னவைகளாக மாற்றிவிடுகிறான். சின்னத் தொல்லைகளை ஒன்றமே இல்லாதவைகளாக மாற்றிவிடுகிறான்.
* சகிப்புத் தன்மை என்ற ஒருசொல்லே ஒரு வீட்டின் விலை மதிக்க முடியாதது.
* மனிதர்கள் நூறு ஆண்டுகள் வாழ்வதில்லை. எனினும் ஓராயிரம் ஆண்டுகளுடைய துன்பங்களுக்கு இடம் கொடுக்கிறார்கள்.
* சொர்க்கத்திற்கு ஒரு வழி இருக்கிறது. ஆனால், ஒருவரும் அதில் பயணம் செய்வதில்லை. நரகத்திற்கு வாசல் இல்லை. ஆனால், மனிதன் அங்கே உள்ளே போக ஊடுருவிச் செல்கிறான்.
* சோம்பேறி நீண்ட நூலைப் பயன்படுத்துகிறான். கைப்பழக்கம் இல்லாதவன் வளைந்த ஊசியைப் பயன்படுத்துகிறான்.
* கலகக்காரனாக இருப்பதைவிட நாகரீகமற்றவனாக இருப்பதே மேல்.
* நீ ஒரு நாட்டில் நுழையும்போது அங்கு விலக்கப்பட்டவைகள் என்னவென்று விசாரித்துக்கொள்.
* கைக்கும் வாய்க்கும இடையே நிறை இழப்பு இருக்கிறது.
* இழந்துபோனது எப்போதும் ஒரு தங்கப் பிடியைப் பெற்றிருக்கிறது.
* பத்தில் மூன்று பகுதி மனிதனுடைய திறமையைப் பொறுத்தது. பத்தில் ஏழு பகுதி அவனுடைய ஆடையை பொறுத்தது.
* புதுத் துணிகளும் பழைய நண்பர்களும் இனிப்பவர்கள்.
* சிறு அன்புடமையை மறக்காதே!. சிறு தவறுகளை நினைக்காதே!
* மனிதனின் இதயம் இயற்கையிலேயே நீதி நிறைந்தது.
* என்னுடைய தவறுகளை எனக்குச் சொல்பவர் என்னுடைய ஆசிரியராக இருக்கிறார். என்னுடைய புண்ணியங்களை எனக்குச் சொல்பவர் எனக்குத் தீங்கு செய்கிறார்.
* ஓராயிரம் மைல் தூரத்திற்கு அப்பாலும் அன்பு ஒன்று மட்டும் அழுத்தமாய் பதிகிறது. கண்டிப்பு அல்லவே அல்ல.
* வீட்டிலிருந்து வெகு தூரத்திற்குச்சென்று தூப தீபங்கள் கொளுத்துவதைவிட அருகிலேயே அன்புடைச் செயல் செய்வது மேலானது.
* பிறரைக் கடிந்து கொள்வதுடன் தன்னையே கடிந்துகொள்வதற்கும் உன் இதயத்தைப் பயன்படுத்தினால் குறைகள் குறைவாக இருக்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:34

ஒவ்வொரு காலையிலும் மனிதன் அவனுடைய தலைமுடியை வாரி ஒழுங்குபடுத்திக் கொள்கிறான். ஏன் அவனுடைய இதயத்தை அவ்வாறு செய்யக்கூடாது.
# கொடுப்பதன் எண்ணிக்கையைக் கொண்டு ஒரு மனிதனுடைய அன்பான இதயத்தை அளக்க முடியாது.
# தலைசிறந்த ஆறு சிறிய ஓடைகளை ஒதுக்குவதில்லை.
# ஆறுகள் ஊற்றுக்களைப் பெற்றிருக்கின்றன. மரங்கள் வேர்களைப் பெற்றிருக்கின்றன.
# ஒருவரை ஏழு குழந்தைகள் காத்திடார். அறிவுச் செடி காக்கும்.
# கடும் சினம், பேசும்போது அறிவுடைமை தன்முகத்தை முக்காடிட்டு மறைத்துக் கொள்கிறது.
# அறிஞர் என்ன செய்கிறார என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், சொல்ல முடியாததை ஒருபோதும் அவர் செய்வதில்லை.
# ஒன்றை எப்படிச் செய்வது என்று அறிபவர் அதைக் கடினம் எனக் காட்ட மாட்டார். கடினம் எனக் காண்பவர் அதை எப்படிச்செய்வது என அறியமாட்டார்.
# அறியாமை மனத்தின் இரவு. நிலவும் நட்சத்திரங்ளும் இல்லாத ஒரு இரவு.
# பார்க்கப்படுவதற்கு செய்யப்படும் அறம் உண்னையான அறம் அல்ல. பார்க்கப்டுவதற்கே பயங்கரமான பாவம் உண்மையான பாவம்.
# நீ தர்ம குணம் உள்ளவனாக இருந்தால், உன்னால் பணக்காரனாக முடியாது. நீ பணக்காரனாக இருந்தால் உன்னால் தர்ம குணம் உள்ளவனாக இருக்க முடியாது.
# ஒரே அறநெறியை உடைவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கின்றனர். ஒரே வியாபாரத்தை நடத்துகிறவர்கள் ஒருவர்யொருவர் வெறுக்கின்றனர்.
# அழகிய பறவைதான் கூண்டில் அடைபடுகிறது.
# பாலங்களைக் கட்டுபவரும், சாலைகளைச் சீர்படுத்துபவரும் இரு கண்களையும் இழந்து குருடராகிவிடுவார்கள். கொலை புரிபவரும், வீட்டுக்கு நெருப்பு வைப்பவரும் நீண்ட நாட்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்.
# அதிர்ஷ்டம் வந்தால் யார் வருவதில்லை? அதிர்ஷ்டம் வராவிட்டால்யர் வருவார்கள்?
# மெதுவாகப் போவதற்கு அஞ்சாதே! இன்னும் நின்றுகொண்டு இருப்பதற்கு மட்டும் அஞ்சு.
# அச்சத்தினால் சாகின்றவனுக்கு மாதா கோயில் முற்றத்தில் ஓர் இடத்திற்குத் தகுதியில்லை..
# அவைகள் உங்களுடைய சொந்தமானதைப் போல மனிதர்களுடைய புண்ணியங்களையும் பேசுங்கள். அவர்கள் அடைய வேண்டிய தண்டனைக்கு நீங்களே உரியவ்ர்கள் என்பதைப்போல் அவர்களுடைய பாவங்களைப் பேசுங்கள்.
# இந்த உலகத்தில் மகிழ்ச்சி எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் நலம் பெற வேண்டும் என்று விருப்பத்திலிருந்து எழுகிறது. இந்த உலகத்தில் துன்பம் எதுவாக இருந்தாலும் சுயநலத்திற்கு இடம் கொடுப்பதிலிருந்து அது தோன்றுகிறது.
# மருந்து குணமாக்க நோயைக் குணப்படுத்துகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:34

நீ மலைமேல் ஒருபோதும் ஏறவில்லை என்றால் சமதளம் எதைப்போல் இருக்கிறது என்று நீ ஒருபோதும் அறியமாட்டாய்.
# ஒரு பெரிய மனிதர், ஒரு சின்ன மனிதரின் தவறுகளைப் பார்க்கமாட்டார்.
# நீ வணங்குவதாக இருந்தால் தாழ வணங்கு.
# ஒரு மனிதன் வீட்டுக்கு வருபவர்களை வரவேற்காவிட்டால் தூர தேசம் போகும்போது அவன் உபசரிப்பவர்களைப் பெறமாட்டான்.
# நல்ல வினா ஒரு அழகிய மணியைப் போன்றது.
# வீடு கட்டு; உறவினர்களிடமிருந்து மிகத் தூரமாகவம், நீர் நலைகளுக்கு அருகாமையிலும்.
# அதிக வேலைக்காரர்கள் அதிகப் பகைவர்கள்.
# கேள்வி கேட்பவன் ஐந்து நிமிடங்களுக்குத்தான் முட்டாள் கேள்வியே கேட்காதவன் எப்போதும் முட்டாள்.
# இவ்வுலகில் முடியாத்து ஒன்றுமே இல்லை. ஒரே யொரு அச்சம் உறுதியுடைய மனிதர்கள் தேவைப்படுகின்றனர் என்பதுதான்.
# வயிற்றைப் பற்றியே நினைப்பவன் தலையைப் பட்டினி போடுகிறான்.
# மலைகளின் ஏகாந்தத்தில் படிப்பது பாதைகளின் சந்திப்பில் அமர்ந்துகொண்டு மனிதர்களின் பேச்சைக்கேட்பதற்குச்சம்ம்.
# மாபெரும் மனிதர்களின் அரண்மனைகள் முழுவதும் பெண்கள். ஏழைகளின் குடிசை முழுவதும் குழந்தைகள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:35

சுவிட்சர்லாந்து

* அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்துகொண்டே இருக்கும்.
* ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர். பெண்கள் குணத்தை ஒரு அழகாகப் பார்க்கின்றனர்.
* ஆயிரம் முறை தலை குனிந்து பிரார்த்தனை செய்வதைவிட மனிதன் ஒருவனுக்கு மகிழ்ச்சியைத் தரும் வேலையைச் செய்வது சாலச் சிறந்தது.
* உன்னை யார் நேசிக்கிறார்களோ, அது ஒரு நாயாக இருந்தாலும் கூட நீ அவர்களை நேசிப்பாயாக!
* உலகிற்கு வெட்கப்படாதவன் கடவுளுக்குப் பயப்படமாட்டான்.
* அயலான் வீட்டை நீ உலுக்கினால் உன் வீடு சீக்கிரம் உன் தலையில் விழும்.
* ஒரு சிறிய பழமொழியிலிருந்து நல்லதொரு, பாடத்தை மிக மலிவான இலையில் நீ காதால் வாங்கிக்கொண்டிரு.
* ஒவ்வொரு மனிதனும் மக்கள்.
* ஏழ்மையின் காரணமாக உன்னைத் தாழ்த்தாதே! செல்வத்தின் காரணமாக உன்னை உயர்த்தாதே!
* ஒரு வேலை உணவை இழத்தல் - நூறு வைத்தியர்களை அழைப்பதைவிட மேலானது.
* ஒருவன் ஒரு முறை கீழே விழுந்தால் எல்லோரும் அவனை மிதித்துவிடுவார்கள்.
* ஓர் ஆடு வேலியைத் தாண்டினால் மற்றவையும் அதனையே தொடரும்.
* தனது நடத்தை அளவுக்கு ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்கிறான்.
* திருமணம் மூடிய தட்டிலிட்ட உணவு.
* மனைவியின் முகத்தைப் பார்த்தாலே கணவனின் பண்பு புரியும்.
* புத்தகமும், நண்பர்களும் குறைவாகவும், நல்லதாகவும் இருக்க வேண்டும்.
* நன்மை செய்தாலும் சரி, தீமை செய்தாலும் சரி, ஒருவன் அதனைத் தனக்கே செய்கிறான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:35

ஜப்பான்

* அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரங்கள்.
* அன்பிருந்தால் பெரும் குறைகளையும் பொறுத்துக்கொள்ள முடியும். அன்பு குறைந்து போய்விட்டால் சிறிய குறைகள் கூட மாபெரும் குறைகளாகத் தெரியும்.
* அந்நியனை நம்புகிறவன் அழிந்து போவான்.
* அடக்கி வைத்திருப்பதைவிட திறந்துவிடுவது மேலானது.
* அறிஞர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள். முட்டாள்கள் அதைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.
* அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரை. அது தன்னுடைய எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது.
* ஆண்கள் வாய்ச் சண்டை போடும்போது எதிரியின் அயோக்கியத்தனங்கள் அம்பலமாகும். ஆனால், பெண்களோ எதிரிகளின் அவலட்சணத்தைத்தான் அம்பலப்படுத்துவார்கள்.
* இறந்தவனைத் தவிர எவரும் நிம்மதியாய் இல்லை.
* இருட்டிலும் தனிமையிலும் ஒழுக்கமாக இருக்கிறீர்களா? அதுதான் உண்மையான ஒழுக்கம்.
* இளைஞர்களுக்கு பதினெட்டு வயதில் பேயும் பேரழகியாகத் தோன்றும்.
* உச்சியிலிருந்து கீழே விழுந்தவனை ஒவ்வொருவனும் தள்ளிவிடுவான்.
* உள்ளம் நிறைந்துவிட்டால் உதடு பேசும்.
* உன்னை ஒருவன் ஒரு தடவை ஏமாற்றினால், அவனுக்கு அவமானம். இரண்டு தடவை ஏமாற்றினால், உனக்கு அவமானம்.
* என்னுடையது, உன்னுடையது என்றில்லாவிட்டால் உலகம் சொர்க்கமாக இருக்கும்
* ஏதாவது ஒரு மூலையில் பெண்ணொருத்தி இல்லாமல் ஒரு தீய கரியமும் நடந்ததில்லை.
* ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு பழக்கம்.
* ஒழுகும் கூரையும், பகையடையும் புகையடையும் கூண்டும், ஓயாமல் சண்டையிடும் மனைவியும் ஒருவனை வீட்டைவிட்டுக் கிளப்பிவிட முடியும்.
* ஒரு பாவம் நூறு பாவங்களை இழுத்துக்கொள்ளும்.
* ஒரு குற்றமுள்ள மனைவி வேண்டாமென்றால், இரு குற்றமுள்ளவள் வந்து சேருவாள்.
* ஒரு கதவு மூடும்போது வேறொரு கதவு திறக்கிறது.
* எதையும் தெரிந்து வீணாக்கும் பழக்கம் விரைவில் அதையே தேடி அலையச் செய்யும்.
* கள்வனின் தாய் மகிழ்ச்சியாலும பயத்தாலும் இரண்டு தடவை நடுங்குகிறாள்.
* எதற்கும் அளவுண்டு; தர்மத்திற்கு இல்லை.
* இளமையில் பட்ட அடிகள் முதுமையில்தான் உணரப்படுகின்றன.
* குழந்தை தன்னைத் தூக்கி வைத்திருப்பவரை அறியும்; தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துபவரை, அறியாது.
* கல்யாணமானவன் சம்பாதிக்க ஆரம்பித்தால், அவன் இறந்த பிறகுதான் பணக்காரனாகிறான்.
* சத்தியம், நிதானம், சகிப்புத் தன்மை ஆகிய மூன்றும்தான் அறிவை வளர்க்கின்றன.
* திருமணத்திற்குப் பெண்ணைத் தேடும்போது கண்களை மூடிக் கொண்டே கடவுளைத் தியானம் செய்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:36

கன்னியின் கற்பு கண்ணாடிப் பாத்திரம் போன்றது. உடைந்தால் உதவாது.
* துருப்பிடித்துத் தேய்வதைவிட உழைத்து தேய்வது மேலானது.
* மனிதனுக்கு வலிமை அளிப்பன மூன்று. மரட்டுப் பயில் உறங்குதல், குளிர்ந்த காற்றைச் சுவாசித்தல், உலர்ந்த உணவை உணவை உண்ணுதல்.
* வாழ்க்கையின் துன்பங்களுக்குப் புகழ் ஒரு எளிமயான பிரதிபலன்.
* வக்கீல் வீட்டின் கூரைகள் வழக்காடிகளின் தோல்களால் வேயப்பட்டிருக்கின்றன.
* முதுமைக்கு நூறு கோளாறுகள்.
* செல்வத்தைவிட ஒரு தொழில் மேலானது.
* வம்பு பேசுபவனின் வாய் சைத்தானின் தபால் பை.
* முடிந்ததைச் செய்துவிட்டால் அதுவே எல்லாவற்றிலும் மேலானது.
* மனிதன் பணத்தைக் கூட்டிக்கொண்டிருகிறான். கடவுளோ அவன் ஆயுளைக் கழித்துக்கொண்டிருக்கிறார்.
* பணம் என்பது என்ன தெரியுமா? கொஞ்சம் கடனை வாங்கிப்பார். அப்போது தெரியும்.
* மனிதர்கள் கொள்கைக் குருடர்கள்.
* நாம் வைத்திருப்பதைக் கொண்டல்ல. அதை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் இறுதி நாளில் கணக்கிடப்படும்.
* பணத்திற்காகத் திருமணம் செய்யாதே! அதை இன்னும் மலிவாகக் கடன் வாங்கலாம்.
* குழந்தைகள் இளமையாக இருக்கும்போது பெற்றோர்களுக்குத் தலைவலி.
* போக்கிரியைக் கட்ட வடம் வேண்டும். ஆனால், நாணயம் உள்ளவனைக் கட்ட நூலே போதும்.
* மனிதன் ஆகாயத்திலிருந்து கொலைக் குண்டுகளை வீசுகிறான். கடவுள் அவனைக் குளிர்விக்க.
* தகாத மனைவியுடன் ஏற்பட்ட வாழ்க்கையானது கண்ணில் பட்ட தூசி போலவும், செருப்பில் சிக்கிய கல்லைப் போலவும் இருக்கும்.
* பணம் இல்லாத மணிப்பர்ஸ் வெறும் தோல்தான். வேண்டுமானால் நாயை விட்டுச் சோதித்துப்பார்.
* புகழ், நீர்மட்டம்போல் பெரிதாகிப் பின்னர் மறைந்துவிடுகிறது.
* விஷயம் இல்லாமல் ஒருவன் நீண்ட நேரம் பேசலாம்.
* மூன்று செயல்கள் மகிழ்ச்சியான வாழ்க்கைக்குரியது; அவை சென்றதை மறபதுந நிகழ்காலத்தை நேர் வழியில் செலுத்துவது வருங்காலத்தைப்பற்றிச் சிந்திப்பது.
* எல்லா மனிதர்களும் உலகத்திற்கு வர ஒரே மாதிரி நுழைவு வாயிலைப் பெற்றுள்ளனர். ஆனால், வெளியேற அவ்வாறில்லை.
* நெருக்கடியில் துன்பப்படாதவன் ஒருபோதும் புத்தராக முடியாது.
* நல்ல விமர்சகர் மோசமாகச் செயல்படுபவர்.
* மற்றவர்கள் விழுந்ததைப் பற்றிச் சிந்திக்காதே! முன்னால் உள்ள பாதை வழுக்கலானது.
* என்னதான் கீழே விழுந்தாலும் நல்ல மனிதர்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.
* கல் மிதக்கும்போது இதழ்கள் அமிழ்ந்து விடுகின்றன.
* கண்கள் தங்களையே நம்புகின்றன. காதுகள் மற்றவர்களை நம்புகின்றன.
* அதிர்ஷ்டத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பது மரணத்திகாகக் காத்துக்கொண்டிருப்பதுதான்.
* தன்னுடைய அறியாமையை ஒத்துக்கொள்கிறவன் அதை ஒருமுறை காட்டுகிறான். தன்னுடைய அறியாமையை மறைக்கின்றவன் அதை பலமுறை காட்டுகிறான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:36

ஜெர்மனி

* அதிர்ஷ்டம் என்பவள் பலவீனமான கைகளையே பெற்றிருக்கிறாள். எவரை அவள் மேலே உயர்த்துகிறாளோ அவரை விரைவில் கீழே போட்டுவிடுகிறாள்.
* அயலானை நேசி. அதற்காக அவளையும் உன்னையும் பிரித்து வைக்கும் வேலியைப் பிரித்து வீசாதே!
* அன்பும் மனைவியும் இருப்பதுதான் வாழ்க்கை.
* அயோக்கியனைக் கேட்காதே! அவன் தன் கருத்தையே சொல்வான்.
* அநேக வேளைகளில் கவலை ஒரு சிறிய காரியத்திற்குப் பெரிய நிழலைத் தருகிறது.
* அன்னையின் அன்பிற்கு வயதே கிடையாது.
* இளம் மனைவி தன் நிழலாகவும் எதிரொலியாகவுமே இருக்க வேண்டும்.
* உங்களுடைய கவலைகளை உங்களுடைய முழங்காலுக்கு மேலே போக விடாதீர்கள்.
* உணவிற்குப் பின் ஓய்வு கொள். உன் பெற்றோர்கள் இறந்திருந்தாலும் கூட.
* எப்போதும் உங்களைச் சோம்பல் ஏமாற்றமால் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இன்று ஒரு நாளை அதற்கு விட்டுக் கொடுத்தால் அடுத்த நாளை அதுதானே திருடிக்கொள்ளும்.
* ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பயணம் கடினம். திரும்பி வருவது எளிது.
* எளிமையே உயர்ந்த இன்ப வாழ்க்கை.
* ஒவ்வொருவன் நெஞ்சிலும் ஒரு தேவாலயம் இருக்கிறது.
* உன்னடைய நோக்கம் தூய்மையான தென்றால் கடலின் மேலும் நடக்கலாம்.
* ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் சிரிப்பவன் முட்டாள். பெண்ணோடு பழகிய பின்னும் சிரிக்காதவன் ஏமாளி.
* ஒரு புலி இறக்கும்போது தனது தோலை விட்டுச் செல்கிறது. ஒரு மனிதன் தான் இறக்கும்போது தனது நற்பெயரை விட்டுச் செல்கிறான்.
* ஒரு பெண்ணுடைய உபதேசம் கேவலமானதுதான். ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாதவன் முட்டாளாகின்றான்.
* ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் கற்றுக்கொள்வாய்.
* கடவுள் பல இல்லாதவனுக்குப் பாதாம் கொட்டை வழங்குகறான்.
* பயத்தைக்குறை - துணிவைப் பெருக்கு
* உணவைக் குறை - உழைப்பைப் பெருக்கு
* குடியைக் குறை - மூச்சைப் பெருக்கு
* பேச்சைக் குறை - அன்பைப் பெருக்கு
* எல்லா நன்மைகளும் உன்னுடையதாகும்.
* கடன் வாங்குவது பிச்சை எடுப்பதின் அடுத்தபடி.
* கருணையை எதிர்க்கும் வலிமையுள்ள வாளாயுதம் எதுவுமே இல்லை.
* காரிகை, காற்று, காசு இவை மூன்றும் மாறிக்கொண்டே இருப்பவை.
* காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொள்கின்றவன் துன்பத்தில் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.
* குற்றத்தை ஒப்புக்கொள்வது நேர்மையின் முல்படி.
* தாயின் நற்குணம் கடவலைவிட ஆழமானது.
* த்தைஇன் நற்குணம் மலையைவிட உயரமானது.
* தீய மனைவி அறுபது வருடமாய்த் தீய்ந்துபோகும் பயிருக்குச் சம்மானவள்.
* பட்டாடை அணிந்து ரகம் செல்வதைவிட, கந்தை அணிந்து சொர்க்கம் செல்வது மேலானது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:36

பச்சாதப்ப்படாதவனை மன்னிப்பது எனபது நீரின் மேல் சித்திரம் வரைவதைப் போலாகும்.
# படுக்கப்போகும் முன் கவலைகளைச் செருப்போடு கழற்றி வைக்க வேண்டும்.
# பறவைக்குப் பயந்து விதைக்காமல் இருக்காதே!
# பெரிய பணக்கார்ர்கள் மூன்று தலைமுறைக்கு மேல் பெரிய பணக்கார்ர்களாக இருக்க முடியாது.
# மனித இனம் பெருந்தன்மையானதுதான். ஆனால், மனிதர்கள் சிறுமை உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
# மனைவியரும், படுக்கும் பாய்களும் வந்த புதிதில் சிறப்பாய் இருப்பவை.
# மூளையின் அறியாமையால் உடல் களைப்படைகிறது.
# மாமியாருக்கு மரியாதை காட்டினால் தினமும் மூன்று முறை வந்து சலிப்படையச் செய்வாள்.
# மூன்று பொருட்கள் மனதிற்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றன - நீர், பூக்கள், அழகிய முகம்.
# மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கே கோபம் வரும்.
# விகாரமான பெண் கண்ணாடியைக் கண்டு அஞ்சுவாள்.
# வெற்றி பெற்றவர்கள் அரசர்கள். தோல்வியுற்றவர்கள் திருடர்கள்.
# ஒருமுறை மகள் வாயில் நுழைகிறவன் மிக அரிதாகவே அவைகளிலிருந்து வெளியே வருகிறான்.
# ஒவ்வொரு மணிநேரமும் காயப்படுத்துகிறது. கடைசி மணிநேரம் கொன்றுவிடுகிறது.
# அரசர்களின் நாய்க்கும் பேன் பிடிப்பதுண்டு.
# புரிந்துகொள்வதற்கு கடினமானதை உங்கள் முன்னால் வையுங்கள். புரிந்துகொள்வதற்கு இலகுவானதை உங்கள் பின்னால் வையுங்கள்.
# பூமியில் ஒரு குடிசையைக் கட்டச் சாமர்த்தியம் இல்லாத பலர் காற்றில் கோட்டைகளைக் கட்டுகின்றனர்.
# திறந்த பெட்டி, துறவிகளையும் ஊழல் புரியச் செய்கிறது.
# மேன்மக்கள் பாவம் புரியம்போது ஏழை மக்கள், பாவபரிகாரம் செய்கிறார்கள்.
# பன்னிரண்டாவது வயதில் பிள்ளைப் பிராயமும், பதினெட்டாது வயதில் இளமையும், இருபத்தியோராவது வயதில் காதலும் முப்பதாவது வயதில் மனிதர்களின் விசுவாசமும், நாற்பதாவது வயதில் நம்பிக்கைகளும், ஐம்பதாவது வயதில் ஆசைகளும் அறுபதுக்குமேல் சிறுகச் சிறுக ஐம்புலன்களும் புதைக்க படுகின்றன.
# கைக்கும் வாய்க்கும் இடையே நிறைய இழப்பு இருக்கிறது.
# விடுமுறை நாட்கள் அரசைர்போல வருகிறது. பிச்சைக்காரர் போலப் போகிறது.
# ஒரு விதவை தாழ்ந்த தாழ்ந்த வேலி. அதன்மேல் ஒவ்வொருவரும் தாண்டுகிறார்கள்.
# இரண்டு பெண்கள் உள்ள அங்கே வீடே இல்லை.
# எப்போதுமே வாழப்போகிறோம் என்று ஒருவர் வீடுகட்ட வேண்டும். நாளையே சாகப்போகிறோம் என்று வாழ வேண்டும்.
# வெய்யிலில் இருப்பது ஒன்று பழுக்கிறது அல்லது உதிர்கிறது.
# நேர்மை எப்போதும் வெற்றி பெறுவதில்லை. ஆனால், வெற்றி எப்போதும் நேர்மையில் இருக்கிறது.
# முகஸ்துதி இனிய நஞ்சு
# பிர்ர்த்தனை செய், எந்த வேலையும் துணை புரியாது என்பதைப்போல, வேலை செய், எந்தப் பிரார்த்தனையும் துணை புரியாது என்பதைப்போல.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:37

ஸ்காட்லாந்து

* அறிவைவிட தைரியத்தினால்தான் பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன.
* அநேக சமயங்களில் ஒரு மனிதனின் அறியாமைக்காக ஒரு நாடே துன்பப்படுகிறது.
* அழகிய பெண் எது செய்தாலும் நம்மால் குற்றம் கண்டுபிடிக்க முடியாது.
* அடுத்த வீட்டுக்காரர் குழந்தைகளே எப்போதும் மோசமான குழந்தைகள்.
* அறிஞர்கள் அறிவைத் தேடுகிறார்கள். முட்டாள்கள் அதைப் பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.
* அழகான கடைக்காரி புளித்த கள்ளையும் விற்க முடியும்.
* அதிகப் பேச்சு, பொய் இவை இரண்டும் நெருங்கிய உறவினர்கள். ஆணும் பெண்ணும் தனியாக இருக்கும்போது அவர்களுக்கு இடையில் ஒரு உறுதியான சுவர் இருக்கட்டும்.
* ஆணகள் சந்திக்கும்போது ஒருவர் பேச்சை ஒருவர் கேட்கிறார்கள். பெண்கள் சந்திக்கும்போது ஒருவரையொருவர் பார்க்கிறார்கள்.
* இறந்துபோன மனைவியும், உயிருள்ள ஆடுகளும் ஒரு மனிதனைச் செல்வனாக்கும்.
* இதயமும் நாக்கும் சிறியவை. ஆனால், அவை ஒரு மனிதனின் உயர்வைக் காட்டுகின்றன.
* இளங்கன்னிகள் திராட்சைப் பழங்கள்.
* இளமையில் சூதாடுபவர்கள் முதுமையில் பிச்சை எடுப்பார்கள்.
* இசைக்கருவியைப் போல் காதலியை மீட்டிவிட்டு உயரே தூக்கி வைத்திட முடியாது.
* இதயம் சாவதைவிட கண்கள் சாவது மேலானது.
* உலகமானது வீர்ர்க்கே உரியது.
* உலகம் எப்படி இருக்கிறதோ அப்படியே கொள்ளுங்கள். எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்காதீர்கள்.
* உழைப்பின் வேர்கள் கசப்பானவை; அதன் கனிகள் இனிப்பானவை.
* கணவனின் அன்பு - பெண்ணின் வாழ்வு.
* கண் உள்ளவனைக் காட்டிலும் குருடன் குறைவாகவே தடுக்கி விழுகிறான்.
* கறுப்பும் ஒரு நிறமே.
* கண்ணாடிக்குள் இருக்கும் பெண்ணையே ஒவ்வொரு பெண்ணும் நேசிக்கிறாள்.
* கடன்படுகிறவன் எவனோ அவன் கவலையைத் தேடி கொண்டிருக்கிறாள்.
* கணவனுக்கு குணத்திற்கு முன்னால் அறிவு தேவை. மனைவிக்கு அறிவுக்கு முன்னால் குணம் தேவை.
* கடிதம் பாதி சந்திப்புக்குச் சமம்.
* காப்பியும் காதலும் சூடாயிருந்தால்தான் சுவைக்கும்.
* காதலின் கண்ணுக்கு ரோஜா மலர்தான் தெரியும். முட்கள் தெரியாது.
* குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பவள் காவிய மனைவி.
* குடுட்டுக் குதிரையை விற்பவன் அதன் கால்களைப் புகழ்வான் கொடுத்த வாக்குறுதகளை உடனே நிறைவேற்றாவிட்டால், அது நாளுக்கு நாள் தேய்ந்து விடும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:37

கூக்குரலைவிடப் பெருமூச்சு அதிக தூரம் செல்கிறது.
# சுருக்கம் விழுந்த கழுத்தில் முத்துமாலை அழுதுகொண்டு தொங்கும்.
# சொத்தையான விதையைப் போட்டுவிட்டு முளைக்கவில்லையே என்று வருந்துகிறவன் படுமுட்டாள்.
# தந்திரம் ஆடையணிந்து செல்ல வேண்டும். ஆனால் சத்தியம் நிர்வாணமாக செல்கிறது.
# தன்னை அறிவது அறிவு. தன்னை மறப்பது மடமை.
# தானும் கட்டளையிட மாட்டான். பிறரின் கட்டளைக்கும் கீழ்ப்படியமாட்டான். அவன்தான் ஒன்றும் உதவாதவன்.
# பணக்காரனாக விரும்புகிறவன் தனது மனசாட்சியை தன் பெட்டியினுள் வைத்துக்கொள்ள வேண்டும்.
# பயந்தவன் பத்து தைரியசாலிகளைப் பயந்தாங்கொள்ளிகளாக ஆக்கி விடுவான்.
# நட்பு என்ற செடிக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும்.
# நல்லவளாக இருப்பதைவிட அழகியா இருப்பதையே ஒவ்வொரு பெண்ணும் விருப்புகிறாள்.
# நீ மற்றவர்களுக்குக் கொடுக்க விரும்பாததை, மற்றவர்களிடமிருந்து நீ கேட்க்க் கூடாது.
# நீ போருக்குச் செல்லும்போது ஒரு தடவை பிரார்த்தனை செய். கடல் பயணம் செல்லும்போது இரண்டு தடவை பிரார்த்தனை செய். ஒரு பெண்ணை மனைவியாக ஏற்றுக்கொள்ளும்போத மூன்று தடவை பிரார்த்தனை செய்.
# நெருப்பில் ஊதினால் கண்களில் தீப்பொறிகள் விழும்.
# நீ பலமுள்ளவனாக இருக்க விரும்பினால் உன்னுடைய பலவீனங்களைத் தெரிந்துகொள்.
# நோயைத் தெரிந்து கொள்பவன்தான் மருத்துவன்.
# நெருப்புக்காகப் புகையைப் பொறுத்துக்கொள்கிறோம்.
# நேராக இதயத்திலிருந்து வருவது நேராக இதயத்திற்கு செல்கிறது.
# மனைவி வரும்வரை என் மகள் என்னுடைய மகள். என் மகள் அவள் வாழ்நாள் முழுவதும் என்னுடைய மகள்.
# முதுமை எல்லா நோய்களையும் ஏற்றுக்கொள்ளும் மருத்துவமனை.
# முதுமையில் எவ்வளவு தேவைப்படும் என்பது இளமைக்குத் தெரிந்தால் அது அடிக்கடி தன் பணப் பையை மூடிக்கொள்ளும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:38

ஹாலந்து

* ஒருவனிடத்தில் பணம் இருக்கிறது. மற்றொருவனிடத்தில் பணப் பை இருக்கிறது. உலகில் இப்படித்தான் நடக்கிறது.
* திருமணத்தை ஒரு முறை செய்துகொள்வது கடமை. இருமுறை செய்துகொள்வது முட்டாள்தனம். மும்முறை செய்து கொண்டாலோ பைத்தியக்காரத்தனம்.
* சன்னலருகே உட்காரந்திருக்கும பெண் ஒரு நெடுஞ்சாலையில் உள்ள மரத்தில் பழுத்திருக்கும் திராட்சைப் பழக் கொத்துக்களைப் போன்றவள்.
* சாபங்கள் - கோழிக்குஞ்சுகள் போன்றவை. அவை வீட்டிற்குத் திரும்பிவிடும்.
* நண்பர்கள்தான் மிக நெருங்கிய உறவினர். காதல் கடிதம் எழுதும் காதலி மெலிகிறாள். கடிதம் கொண்டுபோய்க் கொடுப்பவர்கள் இரு பக்கங்களிலும் பணம் கிடைப்பதால் கொழுக்கிறார்கள்.
* முடியாமைகள் மீது மோதிப் பார்ப்பதற்கு அறிவாளி எப்போதும் விரும்ப மாட்டான்.
* நீ என்பது என்னவென்று சொல். நீ யார் என்பதை நான் சொல்கிறேன்.
* நேற்று செய்த தவறை ஒத்தக்கொண்டால் இன்று நீ அறிவாளி என்பதை உணர்த்தும்.
* வைரம் போன்ற மகள் திருமணமானதும் கண்ணாடியாக மாறுகிறாள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:38

பல்கேரியா

* அவசர வேலை இரட்டிப்பு வேலை.
* ஆண்களைவிட பெண்களுக்குப் பசி இரட்டிப்பு, புத்தி நான்கு மடங்கு, ஆசைகள் எட்டு மடங்கு.
* இன்சொல் இரும்புக் கதவைத் திறக்கிறது.
* உலகில் மூன்று பொருட்கள் மிகவும் மதிப்புள்ளவைகளாக கணக்கிடப்படுகின்றன. அறிவு, தானியம், நட்பு.
* எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே ஆண்டவன் இருக்கிறான்.
* ஒருவனின் உள்ளச் சிந்தனைகள்தான் ஒரு மனிதனுடைய செல்வம்.
* என்னைத் துன்புறுத்துகிறவன் எனக்கு பலத்தைப் போதிக்கிறான்.
* ஓநாயைப் பார்த்தவன் ஒரு தனவை கூச்சலிடுவான். அதைப் பார்க்காதவன் இரண்டு தடவை கூச்சலிடுவான்.
* கடவுஇடம் கேட்டால் கிடைக்காதது ஒன்றுமில்லை.
* சக்தி அதிகமாக இருப்பினும் ஓட்டம் நிதானமாக இருப்பது நல்லது.
* சிரியுங்கள், உங்களுடன் சிரிக்க நிறையப்பேர் வருவார்கள். அழுங்கள், எவரும் உங்களுடன் வரமாட்டார்கள்.
* பசி தீர்ந்தவன் பசிக்கிறவனை நம்புவதில்லை.
* பழத்தைச் சாப்பிட பூவைப் பாதுகாத்தல் வேண்டும்.
* பணத்தில் ஒரு பகுதியை மகிழ்ச்சியாக செலவழிக்க வேண்டும். இரண்டு பகுதிகளை தொழில்களில் ஈடுபடுத்த வேண்டும். நான்காவது பகுதியைச் சேமித்து வைக்க வேண்டும். அது அவசரத்திற்கு உதவும்.
* பாலைக் கறப்பதற்கு முன் அவர்களைப் பசுவை தடவிக்கொடுக்கிறார்கள்.
* பொறுமை வாழ்வின் காய கல்பம். கள்வனுடைய தோழன் கள்வன்.
* மனம் கடல் போன்றது. பகுத்தறிவு கூரிய கத்தி போன்றது.
* மெதுவாகச் சாப்பிட்டால் வயிற்றுவலி வராது.
* மேகங்களைப்போல் நல்லவர்கள் கொடுப்பதற்காகவே பெறுகிறார்கள்.
* முயற்சி இல்லாத நம்பிக்கை, கப்பல் இல்லாக் கடல் யாத்திரை போன்றது.
* நீ நூறு வருடம் வாழ்பவனைப் போல் வேலை செய். நாளையே இறந்து விடுபவனைப்போல் சிந்தனை செய்.
* நரகத்திலிருந்து வந்தவன் கடும் சாம்பலுக்கு அஞ்சமட்டான்.
* நாக்கும் பற்களும் இடையிடையே சண்டையிடுகின்றன.
* நாளை விடிந்தால் நடக்கும் கதை யாருக்கும் தெரியாது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:39

விசாரித்தறிவது நஷ்டமும் அல்ல. கேவலமும் அல்ல. அதிகம் கொக்கரிக்கும் கோழி சின்ன முட்டைகளை இடும்.
# வருகை புரியாதவன் நல்லவன்.
# புண்ணியம் இல்லாமல் வீரன் இல்லை.
# இதயம் பேச விரும்பாவிட்டால் கண்கள் பேசும்.
# நீண்ட காலம் வாழ விரும்பினால் இதயத்தைத் திற.
# நம்முடைய இளமையில் பல விஷயங்கள் தவறாக இருப்பதாக நம்புகிறோம். முதுமையின் பல விஷயங்கள் உண்மையாக இருக்கிறதா என சந்தேகப்படுகிறோம்.
# இளமையில் திருமணம் செய்துகொள். நீ இன்னும் இளமையாக இருக்கும்போதே பெரிய குழந்தைகளை அடையலாம்.
# இளமை தெரிந்திருந்தால் முதுமை செய்ய முடிந்தால் அற்புதம் நிகழும்.
# கலப்பையும் மண்வெட்டியும் உலகிறகு உணவு ஊட்டுகின்றன.
# உணவுக்குகந்த பறைவைகள் நீண்ட காலம் வாழ்வதில்லை.
# தலைகள் உள்ள காலம் வரையில் தொப்பிகள் இருக்கும்.
# பல நல்ல வாய்ப்புகள் கதவின் மேல் கட்டப்படாததால் நழுவிவிடுகின்றன


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:39

பாரசீகம்

* ஒவ்வொரு வியாதிக்கும் இறைவன் ஒரு மூலிகையைப் படைத்திருக்கிறார்.
* ஒரு பவுண்டு அறிவைப் பெறுவதற்கு, பத்துப் பவுண்டு பகுத்தறிவைப் பெற வேண்டியிருக்கிறது.
* சட்டைப் பையிலுள்ள பூந்தோட்டத்தைப் போன்றது புத்தகம். முட்டை வேண்டுமென்பவன் கோழிகளின் சலசலப்பை பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
* பாவத்தில் வாழ்கிறவன் உயிரோடு புதைகப்படுவான்.
* நான்கு புத்தகங்களை வைத்திருப்பவனுக்கு நான்கு கண்கள்.
* கணவன் இல்லாத பெண் கடிவாளம் இல்லாத குதிரை.
* கடைசிப் பல் இருக்கும்வரை நரிக்கு பக்தி ஏற்படாது.
* கதவைத் தட்டாத காரணத்தால் எத்தனையோ வாய்ப்புகள் இழக்கப்பட்டிருக்கின்றன.
* கவலை இல்லாத தலை தோட்டத்தில் கிடக்கும் பூசணிக்காய் மாதிரி.
* சகுமில்லாத எவனும் பணக்காரனல்ல.
* எண்ணி ஒதுக்கி வைக்கப்பட்ட ஆடுகளையும் ஓநாய் தின்னும்.
* நீண்ட நாட்கள் வாழ விரும்பினால், நீ உன் இதயத்தை திற.
* கல்யாணத்திற்கு அழைப்பு வந்து செல்ல வேண்டும்; சாவிற்கு அழைக்காமலேயே செல்ல வேண்டும்.
* முதல் மனைவி மனைவியாக இருப்பாள். இரண்டாம் மனைவி வீட்டு எஜமானியாய் இருப்பாள். மூன்றாமவள் சிலுவைபோல் கும்பிட வைப்பாள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:39

பிரான்சு

* ஆசை இல்லாத மனிதன் ஆத்ம மகனல்ல.
* கண் மறைந்ததும் மனமும் மறைகிறது.
* வேட்கை வாலிபத்தின் தவறல்ல.
* காலத்தாலும், பொறுமையாலும் முசுக்கொட்டை இலை பட்டாசு ஆகிவிடுகிறது.
* முழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்துவிடாதே, உன்னை விழுங்கிவிடும்.
* பழம் இருக்கும் மரத்தை நோக்கித்தான் கற்களையும் கழிகளையும் விட்டெறிகிறார்கள்.
* பெண்ணால் துயரமே வரும். இருப்பினும் பெண் இல்லாத வீடே இருக்க முடியாது.
* பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம்; இல்லாதவனுக்கு கவலை.
* பணக்காரன் பைத்தியக்காரனைப் போல.
* முகத்துதி செய்வது திட்டுவதைவிட மோசமானது.
* கன்னிப் பெண்ணைச் சுட்டாலும் சுடு. ஆனால், அவளை அவதூறாக மட்டும் பேசாதே!
* மக்கள் உன் நற்பெயருக்கு தீங்குச் செய்யலாம். உன்னுடைய நற்குணத்திற்கு அல்ல.
* ஒவ்வொரு மனிதனும் தனது நாட்டை நேசிக்கிறான். அது நரகமாக இருந்தாலும் கூட.
* குறைவாகக் கொடுப்பவன் தனது நெஞ்சத்திலிருந்து கொடுக்கிறான். மிகுதியாக்க் கொடுப்பவன் தன் செல்வத்திலிருந்து கொடுக்கிறான்.
* மன்னன் ஒருபிடி உப்பைத் தனக்கென்று அள்ளினால், மறு வினாடி உப்பு மலையே காணாமல் போய்விடும்.
* வாலிபன் கண்ணாடி மூலம் பார்த்து அறிவதை, அனுபவசாலி செங்கல் மூலம் கூடப் பார்த்துத் தெரிந்துகொள்வான்.
* காதல், இருமல், புகை, பணம் ஆகியவை நெடுநாள் அந்தரங்கமாக இருக்க முடியாது. என்ன செலவழிக்கிறான் என்று அறிய மாட்டான்.
* சந்தேகப்படுபவனை வேலைக்கு வைக்கக் கூடாது. வேலை செய்கிறவர்களைச் சந்தேகப்படக்கூடாது.
* வேறு அழகு எதுவும் இல்லை, உண்மையைத் தவிர.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:40

லத்தீன்

* நாம் எப்போது ஆரம்பிப்பது என்று நினைக்கும்போது, அதுவே மிகுந்த தாமதமாகிறது.
* அவர்களுடைய இழப்பிற்காக நான் துக்கப்படுகிறேன்.. ஆனால் மிக அதிகமாக நான் காலம் இழந்ததற்கே துக்கப்படுகிறேன். எவரும் தங்கள் பணப்பையைக் காத்துக்கொள்ள முடியும் ஆனால், இழந்துபோன காலத்தை ஒருவரும் மீண்டும் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது.
* மூன்று நாளைக்குப் பின் ஒரு பெண், ஒரு விருந்தினர், மழை மூவரும் களைப்படையச் செய்கின்றனர்.
* கண்ணீரால் கடினமான வைரத்தையும் உருக்கலாம்.
* எங்கே சுதந்திரம் வீழ்கிறதோ அங்கே ஒருவரும் தைரியமாகப் பேச மாட்டார்கள்.
* மரியாதைகளும் ஒரு சுமையே.
* சிங்கப் படையை ஒரு கலைமான் ஏற்று நடத்துவதைவிட கலைமான்களின் படையை சிங்கம் தலைமையேற்று நடத்திச் செல்வது மிகப் பயங்கரமானதாக இருக்கும்.
* இன்று எனக்கு; நாளை உனக்கு.
* இரவும் தனிமையும் முழுக்க சாத்தான்களுடையன.
* நமக்கு மேலே உள்ள விஷயங்களும், நமக்குக் கீழேயுள்ள விடியல்களும் நமக்கு ஒன்றும் இல்லை.
* அதிகமாகத் தெரிந்துகொண்டிருப்பதைவிட குறைவாகத் தெரிந்துகொண்டிருப்பவர் இழப்பது மிகவும் சிறிதளவே.
* நிதானமாக ஆத்திரப்படு.
* பூமாலையில் உராய்ந்தால் பூ ஆதாரம்.
* ஆபத்து இல்லாமல் ஆபத்தை கடக்க முடியாது.
* செங்குத்தான மலைகள் முன்னாலே, ஓநாய்கள் பின்னாலே.
* ஆலாபனை இனிய பண்ணிசைப் பாடலின் நாற்றங்கால்.
* அறிவாளிகளால் உணர்வுகள் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்படுகின்றன. ஆனால், முட்டாள்களால் பரிமாறப்படுகின்றன


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:40

வீரம் குறைந்த நெஞ்சம் ஒருபோதும் அழகிய மங்கையைச் சொந்தமாக்கிக் கொள்ளாது.
# அழகிய முகமும் நல்ல அதிர்ஷ்டமும் ஒரே வழியில் பயணம் போகாது.
# அழுவதிலும் நிச்சயம் இன்பம் இருக்கிறது.
# மனிதன் இடத்தை அழகுபடுத்துகிறான். இடமல்ல மனிதனை அழகுபடுத்துவது.
# உன்னுடைய அரிவாள் தீட்டப்பட்டால் உன் வேலை தாமதமாகாது.
# அதிர்ஷ்டம் நிலையில்லா மனத்தினள். அவளால் கொடுக்கப்பட்டதை திரும்பவும் வேகமாக்க் கேட்கிறாள்.
# உண்மை வெறுப்பை வளர்க்கிறது. செல்வச் செழிப்பு செருக்கை வளர்க்கிறது. பாதுகாப்பு அபாயத்தை வளர்க்கிறது.
# ஒரு மனிதனை மிகவும் அதிகமாக அதிர்ஷ்டம் சீராட்டும்போது அது அவனை முட்டாளாக்குகிறது.
# அதிர்ஷ்டம் ஒரு கண்ணாடி. அது ஒளிவீசும் தருணத்தில் உடைந்துபோகிறது.
# யார் மற்றவர்களை அச்சுறுத்துகிறாரோ, அவரே மிகவும் அச்சத்திலிருக்கிறார்.
# பயன்படுத்து, பழுது படுத்தாதே.
# சமாதானத்தின் சிங்கமாக இருப்பவர்கள் அடிக்கடி போரில் மான்.
# பூனைகள் மிகவும் நேசிக்கின்றன. ஆனால், கால்களை நனைக்க விரும்பவில்லை.
# வியர்வை இல்லாமல் இனிமை இல்லை.
# நாக்கை மடக்கிக் கொள்கிற முட்டாளும் அறிவாளிதான்.
# நீரூற்றுகள் கூடத் தாகமாக இருப்பதாக முறையிட்டுக் கொள்கின்றன.
# ஆசைப்படுவது முடியாது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:41

மியான்மர்

* துறவிகள் மெலிந்தால் அழகு
விலங்குள் கொழுத்தால் அழகு
மனிதர்கள் படித்தால் அழகு
பெண்கள் மணந்தால் அழகு
* உன் ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தையையும் நம்பியிருந்தால் உனக்கு இரு கண்களும் இல்லை.
* நாய்களின் பிரார்த்தனைகள் எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், வானம் எலும்பு மழை பொழியும்.
* பள்ளிவாசல் எவ்வளவு பெரியதாகவும் இருக்கட்டும். இமாம் அவர்க்குத் தெரிந்ததைத்தான் போதனை செய்வார்.
* பேசுகிறவனைவிடக் கேட்பவனுக்கு அதிகப் புத்தி வேண்டும்.
* மனிதன் கல்லைவிடக் கடினமானவன். ரோஜா மலரைவிட மென்மையானவன்.
* தவறான பாதையில் நீ எவ்வளவு தூரம் சென்றிருந்தாலும் சரி, திரும்பி வா.
* மகிழ்ச்சியைக் காண்பதற்கு ஒருவன் களைக்கும்வரை நடக்க வேண்டும்.
* மூன்று பொருட்கள் இந்த மண்ணில் விலை மதிப்பற்றதாக்க் கணக்கிடப்படுகின்றன. அவை - அறிவுடைமை, தானியம், நட்புடைமை.
* உதய சூரியனின் வெயிலில் காய்வதும், கடும் பிணத்தின் புகையை சுவாசிப்பதும், வயதான மனைவியைப் பராமரிப்பதும், தயிர் உணவை இரவில் உண்பதும் எப்போதும் வாழ்வைச் சிதைக்கும்.
* ஒரு மரத்தினுடைய நிழலில் தங்குபவன் அதனுடைய கிளைகளை உடைப்பது சரியல்ல.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:41

நைஜீரியா

* ஆயிரம் தடைவை அளவு எடு. ஒரு தடவை வெட்டு.
* இதயம்தான் ஒருவனை நரகத்திற்கு அல்லது சொர்க்கத்திற்குக் கொண்டு செல்கிறது.
* உண்மையிலேயே அழகு வலிமை வாய்ந்தது.
* உழைப்புத்தான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனைவிட முந்தச் செய்கிறது.
* உயிர்கள் பல பிறவிகளை எடுப்பதற்குக் காரணம் அவை செய்த வினைகளின் பயனை அனுபவிப்பதற்கே ஆகும்.
* உன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளை உன் காதுகள் கேட்கட்டும்.
* உழைப்பு மதத்தில் பாதி.
* ஏழைகளுக்குக் கொடுப்பவன் கடவுளுக்குக்கடன் கொடுக்கிறான்.
* ஏழை தன் வயிற்றுக்கு உணவைத் தேடுகிறான். செல்வனோ தன் உணவிற்கு வயிற்றைத் தேடுகிறான்.
* ஒரு கண் எவ்வளவு பெரியதாக இருந்தபோதிலும் இரு கண்களே மேலானவை.
* கரடிக்கு ஒன்பது பாட்டுக்கள் தெரியும். எல்லாம் பேரிக்காய் பற்றி அல்லது தேனைப்பற்றி.
* குறைந்த ஆசை இன்ப வாழ்க்கை.
* சூரியன் நுழையாத இடத்தில் வைத்தியன் நுழைவான்.
* சாவின் அருகில் சென்றவனுக்கு உயிரின் மதிப்பு தெரியும்.
* தாங்க முடியாத அளவிற்கு நமக்கு ஒருபோதும் துன்பங்கள் ஏற்படுவதில்லை.
* கடன் ஏழைக்குப் பிறக்கும் முதல் குழந்தை.
* பச்சை இலைகளே எரிந்தால் காய்ந்த இலைகள் எம்மாத்திரம்?
* பெண் குழந்தையை அடித்து வளர்க்காதவன் பின்னால் தனது மார்பிலே அடித்துக்கொள்ள நேரிடும்.
* மலிவாக விற்பவன் கடனக்கு விற்கமாட்டான். கடனுக்கு விற்கிறவன் மலிவாக விற்கமாட்டான்.
* மிகவும் உயரமான மரத்திற்குக்கூட அடியில் கோடரி காத்துக் கொண்டிருக்கிறது.
* ஊழல் உயர் வட்டாரங்களில் ஆரம்பமாகிறது.
* நல்ல சுகத்தோடு இருப்பவனுக்குத் தினமும் திருமணம்.
* நாற்பது பெண்களில் ஒருபெண்ணின் சொற்களைக் கவனிப்பது நல்லது.
* வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒருபரீட்சை. ஆனால் அதன் முடிவுகளை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.
* விழுகிறவனுக்கு நண்பர்கள் இல்லை. தடுக்கி விழுந்து பார்.
* வியபாரம் வாழ்நாள் முழுவதற்கும் ஒரு சொத்து.
* மெழுகுவர்த்தி தனக்கு வெளிச்சம் தருவதில்லை.
* நீதிபதியிடமிருந்தும் வைத்தியனிடமிருந்தும் கடவுள் என்னைக் காப்பாற்றுவாராக!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:41

ஹிப்ரூ


* சிறந்த போதகர் - இதயம், சிறந்த ஆசிரியர் - காலம், சிறந்த நூல் - உலகம், சிறந்த நண்பர் - கடவுள்.
* துன்மார்கத்தவர்களின் மகிழ்ச்சியும், நன்மார்க்கத்தவர்களின் மனத்துயரும் அறிவுக்கு எட்டாதவைகளாக உள்ளன.
* பஞ்சம் ஏழாண்டுகள் நீடித்திருக்கிறது. ஆனால், அது வேலை செய்பவருடைய கதவு வழியாக்க் கடந்து செல்கிறது.
* அறிவுள்ள மனிதனின் அறிவுரையைக் கேட்பதாக இருந்தால் அவருடைய அறிவில் பாதி நீ பெற்றிருக்க வேண்டும்.
* நல்லதும், தீயதும் அறிந்தவர் ‘அறிஞர்’ என்று அழைக்கப்படுபவர் அல்லர். ஆனால், இரண்டு தீயவைகளில் குறைவான தீயதை அறியக்கூடிவரே அறிஞர்.
* அறிவு தலைக்கு கிரீடம். அடக்கம் காலுக்குச்செருப்பு.
* ஏழைகளுக்குத் திறக்காத கதவு வைத்தியனுக்குத் திறக்கும்.
* சத்தியம் கடவுளுடைய முத்திரை.
* இவ்வுலகில் கடமை என்ற பாதையே மறு உலகில் சொர்க்கத்தின் பாதை.
* மனிதனுடைய எல்லா நோய்களுக்கும் மூல காரணம் இரத்தம்.
* ஆசை கண்ணைக் குருடாக்குகிறது. காதைச் செவிடாக்குகிறது.
* கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழையல்லன். அதிகம் விரும்புகிறவன்தான் ஏழை.
* சொற்களை எடை போட வேண்டும் எண்ணக்கூடாது.
* கடலைப் பிரித்தால் சிற்றோடைகளாகிவிடும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:42

ஸ்பெயின்


* மரியாதையின் மலிவான பொருள் வேறில்லை.
* இறந்தவர்கள் இருப்பவர்களின் கண்களைத் திற்க்கிறார்கள்.
* இறைவன் ஏழையை நேசிக்கலாம். ஆனால், அழுக்கடைந்தவனை அல்ல.
* நண்பன் கேட்கும்போது ‘நாளை’ என்ற சொல் இல்லை.
* அகந்தை அல்லது பலவீனத்தால் ‘இல்லை’ என்று சொல்லாதே!
* வழக்கறிஞரின் பிரியம் சிறிதளவு செல்வம்
மருத்துவரின் பிரியம் சிறிதளவு உடல்நலம்
சன்னியாசியின் பிரியம் சிறிதளவு மரியாதை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:42

சயாம்


* வானத்தை நோக்கி ஒருவன் துப்பினால் அது அவன் முகத்திலேயே விழும்.
* தெளிவானதொரு குறிகோளை நோக்கி முயற்சி செய்.
* தாமரை இலை நீர்போல் பெண் மணம் நிலையற்றது.
* சமயத்தில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் தங்க ஆப்பிள் மாதிரி.
* ஆசிரியர்களை அவர்கள்முன்னிலையில் புகழ்ந்து பேசு. கீழ் அதிகாரகளை அவர்களுடைய வேலையைச்செய்து முடித்தபிறகு புகழந்து பேசு. நண்பர்களை அவர்கள் இல்லாதபோது புகழ்ந்து பேசு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:43

போஸ்னியா


* இரு பொருட்கள் உலகை ஆளுகின்றன. அவை ரட்சிப்பும், சிட்சிப்பும்.

யுக்ரேனியா


* கூன்னின் முதுகு கல்லறையில்தான் நிமிர்த்தப்படும்.
* குழந்தையைத் தூக்கி வைத்துக்கொள்ளும்போது கை நோகிறது. அதைக் கீழே விட்டால் மனம் நோகிறது.

வேல்ஸ்


* நீ ஒரு பாம்பைக் கொல்வதனால் அதனுடை வாயைக்கூட அழித்துவிடு.
* எது அடிக்கடி பார்க்கப்படவில்லையோ அது ஒதுக்கப்பட்டது.

பின்லாந்து


* முள்ளின் மேலே பிறந்தவன் முள்ளின் மேலேயே சாவைத் தேர்ந்தெடுப்பான்.
* நல்ல மணியின் ஓசை தூரத்திலும் கேட்கும். கெட்ட மணியின் ஓசை அதைவிட அதிக தூரத்தில் கேட்கும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:44

டச்சு


* துளை அளவிற்கு ஆணியும் துயர் அடைகிறது.
* கப்பல் முழுவதையும் இழப்பதைவிட நங்கூரத்தை இழப்பது மேல்.
* இரவும் இருளும் எண்ணங்களின் அன்னையர்.
* நீண்ட நேரமாக உண்பது, சுருக்கமாக வழிபாடு செய்வதை போலவே மிகவும் விரும்பப்படுகிறது.
* உண்மை கடவுளின் முத்திரை.
* சேதம் ஏதும இல்லாமல் எல்லா ஆதாயங்களுடன் உண்மை தோற்றமளிக்கிறது.
* எண்ணெய் ஆரம்பத்தில் சிறந்தது. தேன் முடிவில் சிறந்தது. மது நடுவில் சிறந்தது.
* வாலின் அறிவுரையை ஏற்றுக்கொண்டால் தலை தன் தலையை இழக்கிறது.
* தங்கத்தில் நட்டத்தைவிட தவிட்டில் வரும் ஆதாயம் மேல்.
* தூப கலசத்திலிருந்து வரும் புகையும் வாசனையும் பிரிக்க இயலாதவை.
* பொருளாசையே உலக அமைதியைக் கெடுக்கிறது.
* சமாதான காலத்தில் போர் சிப்பாய்கள் வெயில் காலத்தில் தீப்போல.
* மிகப்பெரும் அதிர்ஷ்டம் ஒரு நல்ல கணவன். அதற்கடுத்து நன்றியுள்ள வேலைக்காரன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by நண்பன் Tue 4 Jan 2011 - 23:44

பிலிப்பைன்ஸ்


* ஆத்மாவின் நோய்களே பாவங்கள்.
* அழுக்குப் பிடித்த கைகளை உடையவளை நம்பி நூல் சிக்கலை அவிழ்க்க கொடுக்காதே

நன்றி தமிழ் தேசம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உலகப்பழ மொழிபனள் தொகுப்பு - Page 2 Empty Re: உலகப்பழ மொழிபனள் தொகுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum