சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Khan11

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 17:33

உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11.

* உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27.

* உலக முதியோர் தினம் அக்டோபர் 1.

* உலக அஞ்சலக நாள் அக்டோபர் 10.

* உலக மனித உரிமைகள் நாள் டிசம்பர் 10.

* உலக குடியிருப்பு நாள் அக்டோபர் 3.

* வானம்பாடி பறவையின் இதயம் நிமிடத்திற்கு ஆயிரம் தடவை துடிக்கும்.

* திமிங்கலத்தின் இதயம் நிமிடத்திற்கு 540 முறை துடிக்கும்.

* ஏழு குன்றுகளின் நகரம் என்றழைக்கப்படுவது வாடிகன் நகரம்.

* சீனாவின் தேசிய சின்னம் ரோஜா.

* நயாகரா நீர்வீழ்ச்சியில் ஒரு விநாடிக்கு 18,000 கன அடி தண்ணீர் கொட்டுகிறது.

* வில்லியம் கோட்டை கொல்கத்தாவில் உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 17:33

தேரையின் ஆயுள்காலம் சராசரி 35 ஆண்டுகள்.

* குடையை முதன்முதலில் சீன நாட்டவர்கள் கி.மு.11-ம் நூற்றாண்டில் பயன்படுத்தினர்.

* நாதஸ்வர வாத்தியக் குழலில் மொத்தம் 12 துளைகள் உள்ளன.

* "வைக்கம் வீரர்' எனும் பட்டப் பெயர் ஈ.வெ.ரா.பெரியாருக்கு மகாத்மா காந்தியடிகளால் சூட்டப்பட்டது.

* உலகின் மிகப் பெரிய நூல் நிலையம் மாஸ்கோவில் உள்ள லெனின் தேசிய நூல் நிலையம் ஆகும்.

* இலங்கையின் தேசிய பறவை மைனா.

* நமது உடலில் உள்ள மிக நீளமான எலும்பு தொடை எலும்பு.

* நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர்.

* கார்களின் நகரம் டெட்ராய்ட். இது அமெரிக்காவில் உள்ளது.

* காற்று நகரம் எனப்படுவது சிகாகோ.

* வெள்ளையர்களின் கல்லறை நகரம் கினியா.

* தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் லேண்டஸ் பார்ம்.

* மனித மூளையில் நரம்பு செல்கள் 10,000 கோடி உள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 17:33

உலகின் மிகப் பெரிய விமான சேவை நிறுவனம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ்.

* விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு ஜப்பான்.

* நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் ரவீந்தரநாத் தாகூர், 1913-ம் ஆண்டு (இலக்கியம்).

* நோபல் பரிசு பெற்ற இரண்டாவது இந்தியர் சர்.சி.வி.இராமன், 1930-ம் ஆண்டு (இயற்பியல்).

* மூன்றாவது இந்தியர் ஹர்கோபிந்த குரானா, 1968-ம் ஆண்டு (உடற்கூற்றுவியல்).

* நான்காவது இந்தியர் அன்னை தெரசா, 1979-ம் ஆண்டு (சமாதானம்).

* ஐந்தாவது இந்தியர் சந்திரசேகர், 1983-ம் ஆண்டு (இயற்பியல்).

* ஆறாவது இந்தியர் அமர்த்தியா சென், 1998-ம் ஆண்டு (பொருளாதாரம்).

* ஞானபீட விருது பெற்ற முதல் பெண் ஆஷா பூர்ண தேவி.

* உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி.

* முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்னா ராஜன் ஜார்ஜ்.

* முதல் பெண் விமான ஓட்டி பிரேம் மாத்தூர்.

* முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 17:34

உலகைக் கப்பலில் சுற்றி வந்த முதல் பெண் உஜ்ஜாவா ராய்.

* இந்தியாவிலேயே முதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு.

* கஜினி முகம்மது காலத்திய வரலாற்று ஆசிரியர் அல்பரூனி.

* வாஸ்கோடகாமா முதலாம் இம்மானுவேல் என்ற மன்னரின் உதவிப் பெற்று கடல் பயணத்தை மேற்கொண்டார்.

* உலக வானிலை ஆராய்ச்சி நிறுவனம் ஜெனிவா நாட்டில் உள்ளது.

* அகஸ்டஸ் சீசர் சிம்மாசனம் அமர்ந்த போது அவருக்கு வயது 19.

* சர் ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த போது அவருக்கு வயது 24.

* கலிலியோ தெர்மா மீட்டரைக் கண்டுபிடித்த போது அவருக்கு வயது 20.

* மார்கோ போலோ உலகப் பயணத்தைத் தொடங்கிய போது அவருக்கு வயது 20.

* பிட்மேன் சுருக்கெழுத்தை கண்டுபிடித்த போது அவருக்கு வயது 17.

* நெப்போலியன் பீரங்கிப் படையில் அதிகாரியாக நியமிக்கப்பட்ட போது அவருக்கு வயது 16.

* உலகிலேயே 75 சதவீதம் தேக்குமரம் ஏற்றுமதி செய்யும் நாடு பர்மா.

* உலகிலேயே பூமி அதிர்ச்சி அதிகம் ஏற்படும் நாடு ஜப்பான்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 17:34

இந்தியாவில் தொலைபேசி தயாரிப்பில் புகழ் பெற்ற நகரம் பெங்களூர்.

* செஞ்சிலுவைச் சங்கத்தை தோற்றுவித்தவர் ஜோண்டு வானட்.

* சுற்றுலாவை ஒரு தொழிலாக அங்கீகரித்த முதல் மாநிலம் கேரளா.

* சர்.சி.வி.இராமனும், அவரது மைத்துனர் சுப்பிரமணியம் சந்திரசேகரும் நோபல் பரிசு வாங்கியுள்ளனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 17:35

இந்தியாவின் பூங்கா நகரம் பெங்களூர்.

*ரஷியா என்னும் பழைய பெயரை உடைய நாடு ஜெர்மனி.

*தங்க உரோம நாடு என்பது ஆஸ்திரேலியா.

*சாசுவதமாகன நகரம் என்று ரோம் நகரம் அழைக்கப்படுகிறது.

*இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு 1911-ம் ஆண்டு மாற்றப்பட்டது.

*தங்கம் 60 நாடுகளில் வெட்டி எடுக்கப்படுகிறது.

*தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு இந்தியா.

*22 கேரட் தங்கம் என்பது 91.67% தூய்மையானது.

*தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுதோறும் 600 டன்கள் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.

*பூமியில் இன்னும் 41 ஆயிரம் டன் தங்கம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

*இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 காரட் தங்க நகைகளை விரும்பி அணிகிறார்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 17:35

அதிக புலனாய்வுத் துறை நிறுவனங்களைக் கொண்ட நாடு? - அமெரிக்கா

*நமது நாட்டில் எத்தனை துப்பறியும் நிறுவனங்கள் உள்ளன? - 3 (டி.ஐ.ஏ., ஐ.பி., ரா)

*சுபோ என்பது எந்த நாட்டின் உளவு ஸ்தாபனம்? - பின்லாந்து

*பிரேசில் நாட்டின் புலனாய்வுத் துறையின் பெயர்? - பிரேசிலியன் இன்டலிஜென்ஸ் ஏஜென்சி

*பின் என்றழைக்கப்படும் உளவு ஸ்தாபனம் எந்த நாட்டில் உள்ளது? - இந்தோனேஷியா

*எஸ்.எஸ்.எஸ் என்பது எந்த நாட்டின் புலனாய்வுத் துறை? - நைஜீரியா

*பாகிஸ்தானின் முதன்மையான உளவு ஸ்தாபனம்? - ஐ.எஸ்.ஐ.

*ஐ.எஸ்.டி., எஸ்.ஐ.டி ஆகிய இரண்டு உளவு ஸ்தாபனங்கள் உள்ள நாடு? - சிங்கப்பூர்.

*சபோ என்னும் உளவுத் துறை அமைப்பைக் கொண்டநாடு? - சுவீடன்

*1917-ம் ஆண்டு ரஷியாவில் தொடங்கப்பட்ட ரகசிய போலீஸ் துறை? - செகா

*சிஸ் என்றழைக்கப்படும் எம்.ஐ.6 என்பது எந்த நாட்டின் உளவு ஸ்தாபனம்? - இங்கிலாந்து

*ரஷியாவின் தற்போதைய பிரபல உளவு ஸ்தாபனம்? - கே.ஜி.பி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 17:36

முதன்முதலில் இந்திய சுதந்திரத்திற்கான போராட்டம் 1857ல் ஆரம்பமானது.

* இந்திய தேசிய காங்கிரஸ் 1895ல் துவங்கப்பட்டது.

* 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்ததால் விடுதலைப் போராட்டம் தீவிரம் அடைந்தது.

* இந்திய சுதந்திரத்திற்காக காந்திஜி மொத்தம் 6 ஆண்டு, ஐந்து மாதம் சிறைத் தண்டனை அனுபவித்தார்.

* காந்திஜியை, "தேசத் தந்தை' என்று முதன் முதலில் சொன்னவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தான்.

[color:0ad7="Green"]*
இந்திய தேசிய மூவண்ணக் கொடியை முதன்முதலில் வடிவமைத்தவர், பிக்காஜி
ருஸ்தம் காமா என்ற பெண்மணி தான். அதில் சில மாற்றங்கள் செய்து, சுதந்திரக்
கொடி உருவாயிற்று.

[color:0ad7="Red"]
* இந்திய சுதந்திர போராட்ட
காலத்தில், உஷா மேத்தா என்ற வீராங்கனை, ரகசிய வானொலி அலை ஒன்றை அமைத்து,
போராட்ட வீரர்களுக்கு செய்திகளை ரகசியமாக தெரிவித்து வந்தார். இதைக்
கண்டுபிடித்த ஆங்கிலேயர்கள், அப்பெண்மணிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை
அளித்தனர். அதை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் அவ்வீராங்கனை.

* இந்தியாவில் உள்ள நிரந்தர தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 516. சீனாவில் 63 ஆயிரத்து 555 மட்டுமே உள்ளது.

* சாலை விபத்துக்களால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆயிரத்து 500.

* பதினான்காவது மக்களவை மே, 2004ல் ஆரம்பித்த போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 52.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நேசமுடன் ஹாசிம் Wed 5 Jan 2011 - 17:40

:!+: :!+:


பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 18:17

உலகிலேயே அதிகமான ஊழியர்கள் கொண்ட நிறுவனம் இந்திய ரயில்வேதான்! அதில் 14 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.

* இந்தியாவில் 334 விமான நிலையங்கள் உள்ளன.

*
துணை நடிகர், நடிகைகள் உள்பட, "காந்தி' படத்தில் (1982ம் ஆண்டு) பங்கு
கொண்ட நடிகர், நடிகைகளின் எண்ணிக்கை மூன்று லட்சம். கின்னஸ் சாதனை இது.


* ஆக., 15, 1947ல் இந்தியாவின் ஜனத்தொகை 34.5 கோடியாக இருந்தது.

*
இதுவரை பிரதமராக பதவியேற்ற 13 பேர்களில் 8 பேர் உத்திரப் பிரதேசத்தை
சேர்ந்தவர்கள். அவர்கள்... நேரு, லால் பகதுõர் சாஸ்திரி, இந்திரா காந்தி,
சரண் சிங், ராஜீவ் காந்தி, வி.பி.சிங், சந்திர சேகர், வாஜ்பாய்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 18:37

அமிர்தசரஸ் நகரை நிர்மாணித்தவர் குரு ராம்தாஸ்.

* உலகின் மிக நீளமான நதி நைல் நதி
.
* உலகின் மிக அகலமான நதி அமேசான் நதி.

* உலகின் மிகப் பெரிய ரயில்வே நிலையம் நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் ரயில்வே நிலையமாகும்.

* உலகின் மிக நீளமான ரயில்வே நிலையம் ஸ்வீடன் நாட்டிலுள்ள ஸ்டார்விக் ரயில்வே நிலையமாகும்.

* உலகின் மிக நீளமான பூங்கா அமெரிக்காவில் உள்ள யெல்லோ ஸ்டோன் நேஷனல் பார்க் ஆகும்.

* உலகின் மிகப் பெரிய தீவு கிரீன்லாந்து. இது 1650 மைல்கள் நீளமும், 800 மைல்கள் அகலமும் உடையது.

* கடலுக்குள் சுமார் 13,000 வகையான மீன் வகைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

* இந்தியாவின் மிகப் பெரிய பால் பண்ணை குஜராத்தில் அமைந்துள்ளது.

* அண்டார்டிகா நிலப் பரப்பைச் சுமார் 1,000 மீட்டர் உயரத்திற்குப் பனிப் பாறைகள் சூழ்ந்துள்ளன.

* உலக சாக்லேட் தினம் ஜூலை 7-ம் தேதி.

* உலக கவிதை தினம் மார்ச் 21-ம் தேதி.

* உலக கேக் தினம் டிசம்பர் 9-ம் தேதி.

* உலக இனிப்பு தினம் அக்டோபர் 13-ம் தேதி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 18:37

உலக தண்ணீர் தினம் மார்ச் 22-ம் தேதி.

* உலக துக்க தினம் ஜனவரி 3-ம் தேதி.

* உலகிலேயே மிகப் பெரிய அஞ்சல் துறையை கொண்ட நாடு இந்தியா ஆகும்.

* தமிழில் வெளியான கதாநாயகன் இல்லாத படம் ஒளவையார்.

* தமிழில் முதல் இரட்டை வேடப் படம் உத்தமபுத்திரன்.

* தமிழில் முதல் பாடல்கள் இல்லாதப் படம் அந்த நாள்.

* இரண்டு இடைவேளைகள் கொண்டப் படம் சங்கம்.

* இந்தியாவின் முதல் 3-டி படம் மை டியர் குட்டிச் சாத்தான்.

* தமிழில் முதல் முழு நீள நகைச்சுவைப் படம் சபாபதி.

* ரெனே என்று பிரஞ்சு மருத்துவர் 1909-ம் ஆண்டு ஸ்டெதாஸ்கோப்பைக் கண்டுபிடித்தார்.

* 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி கடலுக்கே கம்பீரம் சேர்த்த டைட்டானிக் கப்பல் பனிப் பாறையில் மோதிக் கடலில் மூழ்கியது.

* பல ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் ஒரே உணவுப் பொருள் தேன் ஆகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 18:42

இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதல் தேசியப் பூங்கா கார்பெட் தேசிய பூங்கா.

* 1955-ம் ஆண்டு கின்னஸ் புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டது.

* உலகிலேயே அஞ்சல்துறையில் மிக அதிகமான அளவில் ஆட்கள் பணிபுரிவது ரஷ்யாவில் தான்.

* எதற்கும் பயன்படாத ஒரே மரம் பூஜம் என்ற மரம் தான்.

* மிகப் பெரிய கண் வங்கி இலங்கையில் இருக்கிறது.

* மிக அதிகளவில் தற்கொலை செய்து கொள்பவர்கள் ஹங்கேரி நாட்டவர்கள் தான்.

* மிக ஆழமான ஏரி ரஷ்யாவில் உள்ளது இதன் பெயர் ரஷிரோ. இதன் ஆழம் 6,365 அடிகள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 18:46

பலூனைக் கண்டுபிடித்தவர் மாண்ட் கோல்ஃபர்.

* ஆஸ்பிரினைக் கண்டுபிடித்தவர் டிரஸ்ஸர்.

* சைக்கிளைக் கண்டுபிடித்தவர் மாக் மில்லன்.

* கேஸ் ஸ்டவ்வைக் கண்டுபிடித்தவர் பன்ஸன்.

* டைப் ரைட்டரை கண்டுபிடித்தவர் ஹென்றிமில்.

* எக்ஸ்ரே கதிர்களைக் கண்டுபிடித்தவர் ராண்ட்ஜன்.

* உலகில் கரும்பைப் பயிரிட்ட முதல் நாடு இந்தியா.

* "காதல் ஆப்பிள்' என்று அழைக்கப்படும் காய்கறி தக்காளி.

* அஞ்சல் அட்டையை முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு ஆஸ்திரேலியா.

* செயற்கை மழையைக் கண்டுபிடித்தவர் இர்வின் லாங்மூர்.

* முதலில் உலக வரைபடத்தை வரைந்தவர் இராடோஸ்தானிஸ்.

* பிரதமரும், அமைச்சர்களும் இல்லாத நாடு ஸ்விட்சர்லாந்து.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 18:49

சூயைஸ் கால்வாயை அமைத்தவர் ஃபெர்டினன்ட்-டி-லெஸப்.

* சர்வதேச நீதிமன்றம் உள்ள இடம் தி ஹேக்.

* எகிப்தின் பிரமிடுகளில் மிகப் பெரியது கிúஸ என்னும் பிரமிடு.

* துருக்கியின் வரலாற்று சிறப்புமிக்க நகரம் இஸ்தான்புல்.

* இத்தாலியின் கொடியை வடிவமைத்தவர் நெப்போலியன்.

* நெருப்புக் கோழி அதிகமாக உள்ள நாடு ஆப்பிரிக்கா.

* கூடைப் பந்தாட்டத்தைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் நைஸ் மித்.

* கையுந்து பந்தாட்டம் கண்டுபிடிக்கப்பட்ட நாடு அமெரிக்கா.

* உலகின் முதல் குடியரசு நாடு ஸ்பார்ட்டா.

* உலகில் மிக உயரமான புத்தர் சிலை உள்ள நாடு தைவான் (152 அடி).

* உலகின் மிகப் பெரிய வளைகுடா உள்ள நாடு மெக்ஸிகோ.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 18:54

மிகப் பெரிய நூலகம் அமெரிக்காவில் உள்ளது.

* மிகப் பெரிய அரண்மனை பிரான்சில் உள்ளது.

* மிகப் பெரிய கடிகாரம் உள்ள இடம் அமெரிக்காவில் உள்ள கோல்கேட் கட்டடம்.

* மிகப் பெரிய பாலம் உள்ள இடம் சான் பிரான்சிஸ்கோ.

* மிகப் பெரிய அணைக்கட்டு உள்ள நாடு அமெரிக்கா.

* உலகின் மிகப் பெரிய சர்ச் உள்ள இடம் ரோம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 18:59

அக்பரின் தோழர் பீர்பாலின் இயற்பெயர் மகேஷ்தாஸ்.

* எம்.பி.ஏ. பட்டம் பெற்ற ஒரே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்.

* சீனா ஒரு முறை தனது நாட்டு நாணயமாக மூங்கிலை பயன்படுத்தியது.

* உலகின் முதல் அணுசக்தி கப்பலின் பெயர் லெனின்.

* புகழ்பெற்ற பார்பி பொம்மையின் நண்பன் பெயர் கென்.

* 1879-ல் தபால் கார்டின் விலை ஒரு பைசா தான்.

* மழை அளவை அளக்கும் கருவி ரெயின் கேஜ்.

* உலகில் மொத்தம் 224 நாடுகள் உள்ளன.

* உலக புகையிலை எதிர்ப்பு தினம் அக்டோபர் 11.

* உலக போதைப் பொருள் எதிர்ப்பு தினம் ஜூன் 26.

* உலக செவிலியர் தினம் மே 12.

* கடற்படை தினம் டிசம்பர் 4.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 19:06

மக்கள் தொகை தினம் ஜூலை 11.

* ஹீரோஷிமா தினம் ஆகஸ்ட் 6.

* உலகில் உள்ள 30 நாடுகளுக்கு கடற்கரையே கிடையாது.

* உலகில் மிகுதியான மக்களால் பேசப்படும் மொழி மண்டாரின். இது சீன மக்களால் பேசப்படுகிறது.

* அமெரிக்காவைச் சேர்ந்த பிளாக்வெல் அம்மையார் தான் உலகின் முதல் பெண் மருத்துவர்.

* முதன்முதலில் உலக மொழிகளிலேயே தமிழில் தான் அகரவரிசை தோன்றியது.

* உலகின் முதல் எலக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர் "கொலாஸஸ்-1'.

* இறந்த உடல் தண்ணீரில் மிதக்கக் காரணம் என்சைம்கள் சுரப்பதால் தான்.

* நண்டுகளுக்கு தலை இல்லை.

* பன்னீர்ப் பூ இரவில் தான் மலரும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 19:07

கருவேப்பிலையில் வைட்டமின்-ஏ சத்து அதிகம் உள்ளது.

* பைசா கோபுரம் கட்டி முடிக்க 174 ஆண்டுகள் ஆயின.

*எகிப்தில் வெள்ளைத் தங்கம் எனப்படுவது பருத்தி.

* நெருப்புக் கோழியை ஒட்டகப் பறவை என்று அழைக்கப்படுகிறது.

* நீந்தத் தெரியாத மிருகம் ஒட்டகம்.

* உலகில் பருத்தி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு சீனா.

* சில்வர் சிறந்த மின் கடத்தியாக செயல்படுகிறது.

* மிகவும் வெப்பமான கிரகம் வீனஸ்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 19:09

தக்காளியில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருப்பது தண்ணீரே.

*அமெரிக்காவின் பெல் ஆய்வகத்தில் பணி புரியும்போதே, தங்கள் ஆய்விற்காக 11 விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

*பிரபஞ்சத்தில் மிக சாதாரணமாகக் காணப்படும் அணு, ஹைட்ரஜன்.

*Trichodesmiym erykhracum எனும் பூஞ்சையின் (Algac) நிறம் படிவதால் உருவான சிவப்பு நிறத்தால்தான் செங்கடலுக்கு அப்பெயர் வந்தது.

*இதயத்திற்கு இடம் கொடுப்பதற்காக மனித உடலின் இடதுபக்க நுரையீரல், வலது பக்கத்தை விடவும் சற்றே சிறிதாக அமைந்துள்ளது.

*பரவலாக அறியப்பட்டு வந்த பறவைக் காய்ச்சல் முதன் முதலில் அறிப்பட்டது இத்தாலியில்.

*இன்டர்நெட் உலகின் தவிர்க்க முடியாத ஒன்றான 'world wide web' (www) எனும் பெயரை உருவாக்கியவர் திமோத்தி ஜான் பெர்னர்ஸ்-லீ என்பவரே.

*தோலின் எடை மனித உடலின் மொத்த எடையில் சுமார் 16% வருகிறது.

*மனித உடலில் உள்ள இரும்புச் சத்தின் 65 சதவிகிதமும் ஹீமோகுளோபினில் உள்ளது.

*நீல நிறத்திற்கு மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. மூளை அமைதி ஹார்மோன்களை வெளிப்படுத்த இது தூண்டுகிறது.

*நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வே, முதல் உலகப்போரில் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருந்தார்.

*புகழ்பெற்ற அமெரிக்க திரைப்பட நிறுவமான எம்.ஜி.எம் சின்னத்தில் கம்பீரமாக கர்ஜிக்கும் சிங்கத்தின் பெயர் ''லியோ''

*திபெத்தியர் தேனீரில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பும், வெண்ணெயும் சேர்க்கின்றனர்.

*உலகம் அதிகளவில் வர்த்தகம் செய்யப்படும் பொருள் பெட்ரோலியம். இதற்கு அடுத்தபடியாக வருவது காப்பி.

*உலகின் முதல் செல்லுலார் தொலைபேசியை தயாரித்த நிறுவனம் ''மோட்டோரோலா''

*உலக மொழிகளில் 90% இன்னுமும் இன்டர்நெட்டில் பயன்படுத்தப்படவில்லை.

*நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தபால் தலையை முதன் முதலில் வெளியிட்ட நாடு ''இந்தியா''

*மாவீரன் நெப்போலியனின் அன்புக்கு பாத்திரமான குதிரையின் பெயர் 'மரேங்கோ' மாவீரன் அலெக்சாண்டரின் குதிரையின் பெயர் 'ப்யூஸிபாலஸ்'

*ஜப்பானியர்களும்,
சீனர்களும் ஒருவகை குச்சியால் உணவை எடுத்து உண்பதைக் காண்கிறோம். மெல்லிய
அந்தக் குச்சியின் பெயர் 'சாப்ஸ்டிக்ஸ்' (Chopstricks)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 19:16

உலகில் சூரியன் முதன் முதலில் உதிக்கும் நாடு ஜப்பான். அதுபோல் இந்தியாவில் சூரியன் உதிக்கும் மாநிலம் அருணாசலப் பிரதேசம்.

*தேயிலை
'பச்சைத் தங்கம்' என்றும், பருத்தி 'வெள்ளைத் தங்கம்' என்றும், பெட்ரோல்
'திரவத் தங்கம் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகின்றன.

*தங்கத்தின் மதிப்பு உலகச் சந்தையில் லண்டன் நகரிலும், வைரத்தின் மதிப்பு நெதர்லாந்து நாட்டிலுமே நிர்ணயிக்கப்படுகின்றள.

*எகிப்தில் மஞ்சள் நிறமும், துருக்கியில் ஊதா நிறமும், சீனாவில் வெள்ளை நிறமும் துக்க நிறங்களாகக் கருதப்படுகின்றன.

*உற்பத்தியில்: அரிசி, கோதுமையில் சீனாவும், சோளம் அமெரிக்காவும், பார்லியில் ரஷ்யாவும். முதலிடம் வகிக்கின்றன.

*ஐ.நா. ஜெனரல் அசெம்பிளி தலைவரான முதல் இந்தியர் - விஜயலக்சுமி பண்டிட்.

*ஐ.நா வில் முதன் முதலாக இந்தியில் பேசியவர் - அடல் பிகாரி வாஜ்பாய்.

*சர்வதேச நீதிமன்றத்தில் நீதிபதிகளான இந்தியர்கள் - பி.என்.ராவ், நாகேந்திர சிங், ஆர்.எஸ்.பாதக்.

*உலக சுகாதார நிறுவனத் தலைவரான முதல் இந்தியப் பெண்மணி ராஜ்குமாரி அம்ரித் கெளர்.

*இன்ஃபொசிஸின் பெங்களூர் வளர்ச்சி மையத்திலுள்ள கஸ்டமர் கெயர் சென்டரில் ஆசியாவிலேயே மிகப் பெரிய 'வீடியோ சுவர்' உள்ளது.

*சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்ட கன்னிமாரா நூலகம்தான் இந்தியாவின் முதல் நவீன நூலகம்.

*இந்தியாவில் முதல் மருத்துவமனை 1664ல் புனித ஜார்ஜ் கோட்டையில் ஆரம்பிக்கப்பட்டது.

*சென்னையில் 1819ல் ஆரம்பிக்கப்பட்ட கண் சிகிச்சை நிறுவனம்தான் ஆசியாவிலேயே மிகப் பழமையானது.

*தமிழ் தட்டச்சுப் பொறியைக் கண்டுபிடித்தவர், சுந்தரம் ஐயர் (தஞ்சாவூர்)

*தமிழில் சுருக்கெழுத்து முறையை அறிமுகம் செய்தவர் சீனிவாசராவ்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Wed 5 Jan 2011 - 19:17

பிரபலமான ஜெமினி இரட்டையர்கள் சிலையில் இடம்பெற்றுள்ள
சிறுவர்களின் பெயர்கள் 'கேஸ்டர்' மற்றும் 'போலக்ஸ்'.

*காஷ்மீரில்,
இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலுள்ள கடைசி இராணுவ போஸ்ட், ''கமல் போஸ்ட்''.
இதிலிருக்கும் பாலம் அமல் சேது (சமாதான பாலம்) எனப்படுகிறது.

*காஷ்மீரில், இந்தியா - பாகிஸ்தான் எல்லையின் முதல் பாகிஸ்தான் இராணுவ போஸ்ட் 'சக்கோத்தி'.

*ரயில் தண்டவானங்களுக்கிடையேயான அகலத்தின் அடிப்படை: பிராட்கேஜ் 1.69மீ, மீட்டர்கேஜ் 1மீ, மற்றும் நேரோகேஜ் 0.762மீ.

*இந்தியாவில் கல்கத்தா தேசிய நூலகத்திற்கு அடுத்து, பாராளுமன்ற நூலகமே இரண்டாவது பெரிய நூலகம்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Thu 6 Jan 2011 - 11:10

இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணி ராகேஷ் சர்மா. (03.04.1984 - சோயுஸ் ட்டி-11)

*ஜி.எம்.சி.பாலயோகியே, சுதந்திரத்திற்குப் பின் பிறந்த லோக்சபை சபா நாயகர்.

*அந்தமான்
- நிக்கோபார் தீவுகள் கி.மு இரண்டாம் நூற்றாண்டின் புகழ் பெற்ற கிரேக்க
வானியலாளரும், புவியியலாளருமான பதாலமாயுஸ் உருவாக்கிய வரைபடத்திலேயே இடம்
பெற்றிருந்தன.

*எந்த இரு வரிக் குதிரைகளின் உடலிலுள்ள வரிகளும் ஒன்று போல் இருப்பதில்லை.

*வேனிற் காலத்தைவிட குளிர் காலத்தில் நகங்கள் மெதுவாகவே வளர்கின்றன.

*உலகளவில் 18 வயதிற்கு கீழேயுள்ள பதினைந்து குழந்தைகளில் ஒருவர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர்.

*கண்ணாடியை
மறு சுழற்சி செய்வதில் சுவிட்சர்லாந்து முன்னிலையில் உள்ளது.
சுவிட்சர்லாந்தின் 95% கண்ணாடிப் பொருட்களும் மறு சுழற்சி செய்யப்பட்டு
விடுகின்றனவாம்.

*அமெரிக்கா அரசியல் சட்டமே தற்போது செயல்பாட்டில் இருக்கும், எழுத்து வடிவிலான மிகப் பழமையான தேசிய அரசியல் சட்டம்.

*சர்வதேச சோஷலிஸ்ட் காங்கிரஸே 1889ல் மே தினத்தை சர்வதேச தொழிலாளர் தினமாக்கியது.

*பிரபலமான ''டிராகுலா''வின் சிருஷ்டிகர்த்த பிராஸ்டோக்கர் 1912ல் அயர்லாந்தில் பிறந்தார்.

*சுவிட்சர்லாந்த் வருடத்திற்கொருமுறை தனது அதிபரைத் தேர்வு செய்கிறது.

*நான்காம் தலாய் லாமாவான யோன் -டான் -ரிக்யா -மட்ஷோ என்பவரே திபெத்தியர் அல்லாத ஒரே தலாய் லாமா,

*தேசியத் தேர்தலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடு நியூசிலாந்து.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Thu 6 Jan 2011 - 11:10

உலகில் மிகப்பெரும் தங்க இருப்பு கொண்ட நாடு தென்னாப்பிரிக்கா. மொத்த உலக
உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு இங்கிருந்தே எடுக்கப்படுகிறது.

*பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பதக்கம் வித்தியாசமானது. இதன் மறுபக்கத்தில் மேற்கோள் எதுவும் இருக்காது.

*விற்பனை அனுமதி வேண்டிய முதல் மரபணு மாற்ற உணவுத் தாவரம் ''தக்காளி''

*இரண்டாம்
உலகப் போரில் காரீயம் மற்றும் உலோகங்களுக்கு ஏற்பட்ட கடும் பற்றக்
குறையால் டூத் பேஸட்கள் பிளாஸ்டிக் உறைக்குள் பொதிந்து தரப்பட்டன. பிற்பாடு
இதுவே வழக்கமாகிப் போனது.

*உலகிலேயே அதிகமான முறை பாடப்படும் பாடல்
''ஹாப்பி பர்த் டே டுயூ'' எனும் பிறந்த நாள் பாடல்தான். இதை எழுதியவர்கள்
பெட்டி, மற்றும் மிஸ்டிரட் ஹில் சகோதரிகள்.

*உலகில் விளையும் ''அல்மனாட்'' கொட்டையின் 40% சாக்லேட் உற்பத்திக்கே பயன்படுத்தப்படுகின்றன.

*ஏதாவது ஒரு கணத்தில், பூமியின் ஏதாவது ஒரு பகுதியில் சுமார் 1800 இடிகள் இடிக்கின்றன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by நண்பன் Thu 6 Jan 2011 - 11:11

தாண்டக வேந்தர் எனப்படுபவர் யார்? - திருநாவுக்கரசர்

*நெடுநெல்வாடை ஆசிரியர் யார்? - நக்கீரர்

*பெரிய புராண உட்பிரிவுப் பெயர் என்ன? - சுருக்கம்

*பாண்டியன் பரிசு யார் படைப்பு? - பாரதிதாசன்

*திராவிட வேதம் என அழைக்கப்படுவது எது? - திருவாய் மொழி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்..... Empty Re: பொது அறிவுத்தகவல்கள் அறிவோம்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum