Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....
+18
risana
யாதுமானவள்
ramees
இன்பத் அஹ்மத்
கலைவேந்தன்
rinos
gud boy
Inudeen
நிலாம்
பர்வின்
ஹம்னா
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
பர்ஹாத் பாறூக்
நண்பன்
*சம்ஸ்
kalainilaa
mdkhan
22 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....
First topic message reminder :
Last edited by mdkhan on Sat 17 Sep 2011 - 13:17; edited 1 time in total
mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....
jasmin wrote:50000 பதிப்புகளா அடெஙப்பா நண்பரே வாழ்துக்கள் மட்டும் போதாது
வேறு என்ன கொடுக்கப்போறிங்க ஜெஸ்மின்
எங்களுக்கும் சொல்லிட்டுக் கொடுங்க
Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....
jasmin wrote:50000 பதிப்புகளா அடெஙப்பா நண்பரே வாழ்துக்கள் மட்டும் போதாது
வாழ்த்தோடு கவிதையும் வரட்டும் ஜெஸ்மின்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....
அதானே சொல்லிடுங்க மேடம்நேசமுடன் ஹாசிம் wrote:jasmin wrote:50000 பதிப்புகளா அடெஙப்பா நண்பரே வாழ்துக்கள் மட்டும் போதாது
வேறு என்ன கொடுக்கப்போறிங்க ஜெஸ்மின்
எங்களுக்கும் சொல்லிட்டுக் கொடுங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....
வாழ்த்துக்கள் நண்பன் தாமதத்திற்கு மன்னிக்கவும்
கான் சார் அருமையாக வடிவமைத்துள்ளீர்கள் உங்களிடம் கற்றுக்கொள்ள வருகிறேன் வேலையோடு நேரம் போதாமல் உள்ளது கண்டிப்பாக கற்றுக்கொள்வேன் நன்றி உங்கள் வாழ்த்து சூப்பர்
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....
- Code:
50000 ஆயிரம் பதிவுகள் இட்டு வியக்கும்படியான சாதனை செய்த நம் அருமைச்
சகோதரன் நண்பன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்து.! இன்னும் இன்னும்
பல சாதனைகள் செய்ய வேண்டுமென்று வாழ்த்துகிறேன். செய்த சாதனைக்காக என்
கவிதையைப் பரிசாக்குகிறேன்
சேனையின் பாகனை(நண்பன்) வாழ்த்துகிறேன் - 100வரிக் கவிதை
நில்லாத தேரிந்த சேனையின் பாகனை
எல்லோரும் வாழ்த்தியபின் வாழ்த்தவே எண்ணினேன்
வில்லேறும் அம்பாகி வேகத்துடன் பதிப்போனை
எல்லோரும் மகிழ்ந்திடுமா றென்வாழ்த்தைக் கூறினேன் (1 )
எத்தனை உயர்வு எத்தனை நெகிழ்வு
இத்தனை ஆயிரம் பதிவிலே வியந்து
அத்தனை உறவுகளும் அன்பாலே இணைந்து
பித்தர்கள் போலிங்கு வாழ்த்தினர் மகிழ்ந்து (2 )
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துளியும்
ஒவ்வொரு மூச்சும் ஒவ்வொரு செயலும்
எவ்வாறு சேனையை உயர்த்துவோம் என்றே
தொய்யாது தொடர்ந்து சிந்தித்த தாலே (3 )
எம்மாலும் இயலும் என்பது உணர்த்தி
ஐம்பது ஆயிரம் அருமைப் பதிவுகள்
தும்மிடும் நேரத்தில் தனியனாய் பதித்து
எம்மை ஆழ்த்தினாய் வியப்பினில் முகிழ்த்தி! (4)
ஓயாது பதிவுகள் உடனடி பதில்கள்
தீகூட தோற்றிடும் வேகத்துடன் இட்டு
பாய்ந்தோடும் நதியாகி சேனைக்குள் நுழைந்து
செய்கின்றாய் சாதனைகள் முதன்முதலாய் யென்றும் (5)
கமகமக்கும் அறுசுவை போல் நீபதியும் பதிவினிலே
சுடச்சுடவே செய்திகளும் சில காதல் கவிதைகளும்
கண்கவரும் புகைப்படமும் கருத்துள்ள காணொளியும்
படிப்போரை காண்போரை உன்பக்கம் ஈர்த்துவிடும்(6)
அன்பான உள்ளமும் அமைதியான குணமும்
பண்பான பேச்சும் பகைவரையும் மாற்றும்
என்பதுதான் இவனென்ப தெல்லொரும் அறிந்ததுதான்
பின்பென்ன நான் சொல்ல இருக்கிறது இன்னும்? (7)
இருந்தாலும் அப்படியே செல்வதுதான் முறையோ
வெறும்வாயால் வாழ்கென்று வாழ்த்துவதுவும் அழகோ
பெரிதாகசொல் லிடவுமென்னிட மொன்றில்லை யானால்
சிறிதான சந்தேகம் கேட்கின்றேன் தீர்ப்பீர் (8)
காதலனைப் பிரிந்து காதலியும் இருப்பாளோ
காதலியைப் பிரிந்து காதலனும் உயிர்ப்பனோ
காதலியாய் சேனையினை ஏற்றானோ நண்பன்
கால்நிமடம் பிரியாமல் கட்டுண்டு கிடக்கின்றான் ? (9)
அச்சசோ நகைக்காதீர் அதுயெந்தன் சந்தேகம்
உச்சிமுதல் பாதம்வரை உறுத்தியதால் கேட்டிட்டேன்
எச்சில்பட்ட காதலியின் இதழ்விரும்பும் காதலன்போல்
உச்சிகுளிர்ந்து உள்ளானே அதனாலே கேட்டிட்டேன்(10)
ஐந்துநிமிடம் சேனைக்குள் வருவதற்குள் ஆயிரம்
நைந்துபோன வேலையெல்லாம் இழுக்கிறது நம்மை
கள்ளுண்ட போதையிலே மயங்கிட்ட வண்டுபோல்
இங்கேயே சுற்றுகிறான் எப்படித்தான் முடிகிறதோ? (11)
அக்காவின் வாழ்த்தென்ன இதுவரையில் இல்லையென்று
துக்கமாகி இருப்பாயோ என்றேதான் ஓடிவந்து
தொக்கிநிற்கும் சுவையெல்லாம் சேர்த்துவைத்து நானிங்கு
பக்குவமாய் வாழ்த்துசொல்ல பாத்தொடுத்தேன் பைந்தமிழில்(12)
அங்கமாக சேனையுனக்கு ஆகிவிட்ட காரணத்தால்
பங்கமொன்றும் நேர்ந்திடாது காப்பதுஉன் கடனென்று
எங்களுள்ளம் சேர்ந்திங்கு சொல்கிறது இன்னாளில்
அங்கனமே காத்துநீயும் அற்புதங்கள் செய்திடுவாய் (13)
எத்தனையோ அவமானம் வேறிடத்தில் அடைந்திட்டோம்
எத்தனையோ அனுபவங்கள் இங்குநாம் பெற்றிட்டோம்
எத்தனையோ தடைகளயும் இன்றுநாம் கடந்திட்டோம்
அத்தனையும் மீறிய வெற்றியையும் நாட்டிவிட்டோம் (14)
இத்தனைக்கும் காரணமான எதிரியையும் வாழ்த்திட்டோம்
புத்தனாகி பொறுமையெல்லாம் கைவரவும் பெற்றிட்டோம்
எத்தர்களும் வியந்துநமை அடையும்படி ஆக்கிட்டோம்
சுத்தர்களாய் இப்படியே சுயமானம் காத்திடுவோம் (15)
உள்ளபடி சொல்கின்றேன் உணர்ந்தபடி சொல்கின்றேன்
உள்ளமெல்லாம் கொள்ளைகொண்ட சேனையின் உயர்விற்கு
கள்ளமில்லா மனத்துடனே நீசெய்யும் சேவைதான்
உள்ளதிலே முதன்மையென்று உளமாற சொல்கின்றேன் (16)
என்கருத்தை எவரெல்லாம் ஏற்பாரோ நானறியேன்
என்கருத்தை மறுப்போர்கள் எவருமிரார் என்றறிவேன்
என்னைப்போல் உண்மையாக உணர்ந்தோர்கள் எல்லோரும்
என்னுள்ளம் சொல்லியபோல் சொல்லியே உவப்பார்கள் (17)
நெல்லின்மணி முற்றியபின் தலைவணங்கும் கதிர்போல்
நல்ல உயர்வடைந்தும் பணிவுடன்நீ இருப்பதனால்
முல்லைப்பூவின் வாசமாய் சேனையெங்கும் வீசுகிறாய்
செல்லப்பிள்ளை யாகநீயும் சேனையிலே உலவுகிறாய் (18)
சாதனைகள் செய்வது சேனையின் பொழுதுபோக்கு
சாதனை சாதனை என்பதுதான் நம்வாக்கு
சாதனை ஒன்றினை தனியொருவன் செய்தாலும்
தானொன்றி செய்ததுபோல் எல்லோரும் உணர்கின்றோம் (19)
இதுபோல அன்புடனே சேனையுடன் சேர்ந்திருந்து
மெதுவாக இல்லாமல் மேருவாய் உயர்த்திவிட்டு
ருதுவான மங்கைபோல் வனப்பாக்கி வைத்தஉன்னை
இதமான தமிழ்கொண்டு இன்புற்று வாழ்த்துகின்றேன் (20)
சம்ஸ்தந்த அட்டையும் ஹாசிமின் கவிதையும்
கான்செய்த வாழ்த்தும் கலைநிலாவின் கவியும்
அப்துல்லா அவர்களின் அருந்தமிழும் அழகாக
நண்பனுந்தன் சாதனைக்கு கிடைத்திட்ட முத்துக்கள் (21)
அவ்வாறே வாழ்த்திட நான்முனைந்து நிற்கின்றேன்
எவ்வாறு சொல்வேனோ எனவியர்த்தும் போகின்றேன்
இவ்வாறே பல சாதனை இனிதொடர்ந்து செய்யெனவே
இவ்வழகுத் தமிழெடுத்து வாழ்த்தாக்கிக் கொடுத்திட்டேன் (22)
அடுத்ததாய் என்வாழ்த்து நீயெட்டும் இலட்சத்திற்கு
எடுத்தடி வைத்திடுவாய் எட்டிட உன் இலட்சியத்தை
சொடுக்கிடும் வேளையிலே நீயதனைச் செய்திடுவாய்
படிக்கணும்நான் புதுத்தமிழை புதுவாழ்த்து எழுதிடவே! (23)
உள்ளூரும் உணர்வுகூட சேனையென் றாகியே
எல்லோர்க்கும் தோழனாய் ஆகிவிட்ட நண்பனை
எல்லோரும் போலத்தான் வாழ்த்தினென் நானும்
எல்லோரும் வாழ்த்தியபின் வாழ்தினேன் நானும்(24)
வாழ்க வாழ்கவென்று மனமுவந்து வாழ்த்துகின்றேன்
வளர்க வளர்கவென்று வாய்நிறைய வாழ்த்துகின்றேன்
செய்கசெய்க செய்கயின்னும் சாதனைகள் பலவென்று
மெய்சிலிர்த்து பொய்யின்றி மேன்மைபெற வாழ்த்துகின்றேன்! (25)
அன்புடனும் வாழ்த்துக்களுடனும் ,
யாதுமானவள்
[list]
[*]
50000 ஆயிரம் அரை இலட்சம் வாவ் எப்படி எங்க எப்ப நான் இதனை அடைவது வாழ்த்துக்கள் உறவே இன்னும் சேனையின் நாயகனாக முன்னேற என் வாழ்த்துக்களும் நன்றியும் இங்கு அனைவரும் அனைவரின் வாழ்த்தை விடவா என் வாழ்த்து பெரிது வாழ்த்திய அனைவருக்கும் வாழ்த்தப்பட்ட உடன் பிறப்பிற்க்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
Re: 50,000 பதிவுகளை தொட்டுவிட்ட நண்பன் வாழ்த்துகிறோம் உங்களை....
மிகவும் அழகான வாழ்த்து அட்டை தயாரித்து இருக்கும் அன்புத்தோழருக்கு வாழ்த்துக்கள் நண்பனுக்கு பாராட்டுகள்
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட பர்ஹாத் பாறூக் வாழ்த்துக்கிறோம் உங்களை ....
» நண்பன் | சம்ஸ் | ஹாசிம் வாழ்த்துகிறோம் உங்களை...
» ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
» 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
» நண்பன் | சம்ஸ் | ஹாசிம் வாழ்த்துகிறோம் உங்களை...
» ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
» 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...
» ஆயிரம் பதிவுகளை தொட்டுவிட்ட kiwi boy வாழ்த்துவோம் வாருங்கள்.
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum