சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பசிக்க 7 வழிகள் Khan11

பசிக்க 7 வழிகள்

5 posters

Go down

பசிக்க 7 வழிகள் Empty பசிக்க 7 வழிகள்

Post by gud boy Sat 1 Oct 2011 - 18:36

ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை'. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே...

* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள்.

* சமைக்கும் உணவு சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பி சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகளானாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்து சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.

* உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையை மேலாண்மை செய்வது உடல் நலத்திற்கும், உணவு பழக்க வழக்கத்திற்கும் நல்லது.

* உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாக சாப்பிடுவதுதான் சரியான நேரத்திற்கு பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாக சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையை விட குறைவாக எடுத்துக் கொள்வதும் உடலுக்கு தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.

* சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளை சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசிப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான ஜீரணத்திற்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.

* சேர்க்க வேண்டிய உணவுகளை சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளை தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளை சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத் தீனி போன்ற உணவுகளை குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.

* எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்திற்கும் பக்க பலமாக இருக்க வேண்டுமல்லவா!
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

பசிக்க 7 வழிகள் Empty Re: பசிக்க 7 வழிகள்

Post by Atchaya Sat 1 Oct 2011 - 18:41

ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது உறவே...வாழ்த்துக்கள் தொடருங்கள்...அசத்துங்கள்.... :!+: :!+: :+=+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பசிக்க 7 வழிகள் Empty Re: பசிக்க 7 வழிகள்

Post by lafeer Sat 1 Oct 2011 - 19:37

நல்லபதிவு நன்றி நன்றி நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

பசிக்க 7 வழிகள் Empty Re: பசிக்க 7 வழிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 1 Oct 2011 - 19:38

பசிக்கிறதுக்கு வழிசொன்னா சாப்பாடு யார் தருவா

பசிக்கிறது இபப்வே


பசிக்க 7 வழிகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பசிக்க 7 வழிகள் Empty Re: பசிக்க 7 வழிகள்

Post by நண்பன் Sat 1 Oct 2011 - 22:40

Atchaya wrote:ஒவ்வொரு பதிவும் அருமையாக உள்ளது உறவே...வாழ்த்துக்கள் தொடருங்கள்...அசத்துங்கள்.... :!+: :!+: :+=+:
இன்று முழுக்க அருமையான கட்டுரைகள் மருத்துவத்தகவல்கள் என அனைத்தும் கிவி பாயின் ஆதிக்கமாக இருந்தது நன்றி நண்பா தொடருங்கள் என்றும் நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பசிக்க 7 வழிகள் Empty Re: பசிக்க 7 வழிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum