சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

அறிந்து கொள்வோம் 01 Khan11

அறிந்து கொள்வோம் 01

Go down

அறிந்து கொள்வோம் 01 Empty அறிந்து கொள்வோம் 01

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 11:09

o தீபாவளியன்று பிறந்த மதகுரு குருநானக்.

o ராஜிவ்காந்தி தனது 42வது வயதில் பிரதமர் ஆனார்.

o அரபிக் கடலின் ராணி கேரளம்

o உலகில் உள்ள மொத்தப் பரப்பரளவில் 71% தண்ணீர் உள்ளது.

o இந்தியாவின் தேசிய மரம் ஆலமரம்.

o செங்கற்களை கண்டுபிடித்தவர்கள் பாபிலோனியர்கள்

o கபடி விளையாட்டு தோன்றிய இடம் இந்தியா.

o நேரு பிறந்த போது அவர் தந்தை மோதிலால் நேருவின் வயது 28.

o இந்திராகாந்தி பிறந்த போது நேருவின் வயது 28.

o நேருவின் மனைவி கமலா நேரு இறந்தது பெப்ரவரி 28.

o நேரு தனது மனைவி கமலா நேரு இறந்த பிறகு வாழ்ந்த ஆண்டுகள் 28.

o நேருவின் உடல் தகனம் செய்யப்பட்ட நாள் மே 28.

o பெலுகா என்ற பெயர் கொண்ட திமிங்கிலங்கள் கடலின் அடி ஆழத்தில் 30 நிமிடங்கள் காற்று இன்றி உயிரோடு இருக்கும்.

o ரோடு ரன்னர் என்ற பெயருக்கு ஏற்றாற் போல இந்தப் பறவை மணிக்கு 40 கி மீட்டர் வேகத்தில் ஓடும். ஆனால் பறக்காது.

o ஒரு வளர்ந்த ஆண் யானை, ஒரு நாளைக்கு 63 கிலோ எடையுள்ள மரம். தழை புல் போன்றவற்றை சாப்பிடும்.

o ஒரே நேரத்தில் ஒரு ஆமை 120 முட்டைகள் இடும்.

o உலகில் கிடைக்கும் உலோகங்களில் மிகுந்த எடையுள்ளது. இரிடியம் ஆகும். அது
1804ல் பிரிட்டனைச் சேர்ந்த ஸ்மித்சன் டென்னண்ட் என்பவரால்
கண்டுபிடிக்கப்பட்டது. பிளாடடினம் தொகுதியைச் சேர்ந்த இந்த உலோகம் மிகுந்த
எடை கொண்டது.

ஒரு கன அடி இரிடியத்தின் எடை 660 கி. கி. உலோகங்களுள் மிகவும் இலேசானது
லித்தியம் 15 அடி லித்தியத்தின் எடை 150 கி. கி. பெரிய சாய்ந்தாடி மரத்தின்
ஒரு பக்கத்தில் 6 தொன் எடையுள்ள யானையை நிறுத்தி எதிர்ப்பக்கத்தில் 8 அடி
லித்தியத்தை வைத்தால் சமமாக இருக்கும்.

o அறிவியல் மேதை ஜேம்ஸ் வாட்டின் தந்தை ஒரு தச்சர்.

o அறிவியல் மேதை கெப்ளரின் தந்தை உணவு விடுதி நடத்தியவர்.

o இங்கிலாந்து முன்னாள் பிரதமர் தாட்சரின் தந்தை கீரை வியாபாரி.

o கணித மேதை காஸ் என்பவரின் தந்தை ஒரு கொத்தனார்.

o உலகிலேயே வருமான வரி இல்லாத நாடு குவைத்.

o ஜப்பான் நாட்டின் பழைய பெயர் நிப்பொன்.

o தும்பா ரொக்கெட் ஏவுதளம் கேரளாவில் உள்ளது.

o பனிக்கட்டியால் சூழப்பட்ட கண்டம் அந்தா¡ட்டிக்கா

o கடலில் கலக்காத நதி யமுனை.

o பசுவுக்கு நான்கு இரைப்பைகள் உள்ளன.

o ‘ராட்சத ஆமையின் எடை 40 கிலோ இருக்கும்.

o அமெரிக்காவில் உள்ள ‘சிகாகோ’ சர்வதேச விமான நிலையம் தான் பரபரப்பு
மிகுந்தது. இங்கிருந்து நாள் முழுவதும் சராசரி 42.5 வினாடியில் ஒரு விமானம்
கிளம்பும் அல்லது இறங்கும் ஒரு மணி நேரத்தில் 85 விமானங்கள் பறப்பதாகக்
கணக்கு. இந்தப் புள்ளிவிபரத்தின் படி ஒரு நாள் முழுவதும் 2,036 விமானங்கள்
வந்து போகின்றன. இன்னும் சொல்லப் போனால், வாரத்துக்கு 14,255 விமானங்கள்
என்றும், வருடத்திற்கு 7,41,272 விமானங்கள் ஏறி இறங்குகின்றன. விமானப்
போக்குவரத்தைச் சீராக இயக்கத் தேவையான நவீன சாதனங்கள் அனைத்தும் இங்கு
அமைந்துள்ளன.

o வட அமெரிக்காவில் பேரீச்சை மரம் அதிகளவில் பயிராகிறது. மேற்காசியா
மற்றும் தென் ஐரோப்பாவிலும் ஓரளவு பயிரிடப்படுகிறது. 100 அடி உயரம் வளரக்
கூடியது. 300 வருடங்கள் வரை பழங்கள் தரும். பேரீச்சம் பழம் சத்து
நிறைந்தது. பேரீச்சை மரத்தின் இலைகளைக் கொண்டு ஆபிரிக்கர்கள் தங்கள்
குடிசைகளுக்குக் கூரை போட்டுக் கொள்கின்றனர். இதிலிருந்து கயிறும்
தயாரிக்கப்படுகிறது. இதன் இளம் தண்டிலிருந்து ஒருவகைப் பானம்
தயாரிக்கப்படுகிறது.

o பெங்குவின் முட்டைகளை ஆண் பறவைதான் அடை காக்கும். சுமார் 60 நாட்கள் வரை
தந்தை பெங்குவின் அடை காத்து குஞ்சு பொரிக்கும். இந்த 60 நாட்களிலும் தந்தை
பெங்குவின் உணவு எதுவும் சாப்பிடுவதில்லை. இதனால் கிட்டத்த ட்ட 12 கிலோ
வரை இவை எடை குறைந்து விடு கின்றன. குஞ்சு பொரித்த பின் சில நாட்கள் வரை
தன் தொண்டையில் சுரக்கும் ஒரு வித திரவத்தை தந்தை பெங் குவின் பறவை தனது
குஞ்சு களுக்கு பால் போல கொடுக்கும். அதன் பிறகே தாய் பறவை குஞ்சைப்
பாதுகாப்பதில் கவனம் செலுத்தும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் 01 Empty Re: அறிந்து கொள்வோம் 01

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 11:10

o 111 111 111 என்ற எண்ணை 111 111 111 என்ற எண்ணால் பெருக்கினால்
வேடிக்கையான விடை கிடைக்கும். அந்த விடை 1234 5678 98765 4321 என்பதாகும்.

o உலகிலேயே மிகவும் சிறந்த உணவகம்? எல். புல்லி (ஸ்பெயின்)

o முந்திரிச்செடி 1660ம் ஆண்டில் முதன் முதலில் இந்தியாவில்
பயிரிடப்பட்டது. இச் செடி பிரேசில் நாட்டில் முதன் முதலாகக்
கண்டுபிடிக்கப்பட்டது.

o கழுதைகள் காதை வீசி ஆட்டினால் விடியும் முன்பு மழை பெய்யும் என்பது பிரான்ஸ் நாட்டு மக்களின் நம்பிக்கை.

o நண்பகலில் சிலந்தி வலை பின்னுவது மழை வருவதற்கான அறிகுறி என ஜப்பான் நாட்டு மக்கள் நம்புகின்றனர்.

o தங்கம் உலகம் முழுவதும் 60 நாடுகளில் அகழ்ந்து எடுக்கப்படுகின்றது.

o இங்கிலாந்து நாட்டு மக்கள் 9 கரட் தங்க நகைகளே அணிகிறார்கள்.

o சுத்தமான தங்கம் 99.99 சதவீதம் தூய்மையானது.

o தங்கம் அதிகமாக விற்பனையாகும் நாடு இந்தியா.

o அதிக அளவில் வெள்ளி எடுக்கப்படும் நாடு மெக்சிக்கோ ஆகும்.

o பிறந்த முயல் குட்டியின் உடை 49 முதல் 50 கிராம் வரை இருக்கும்.

o ரஷ்யாவில் பண்டைய காலத்தில் சுவரொட்டி அளவு ரூபா பழக்கத்தில் இருந்தது.

o அல்பட்ராஸ் என்னும் வெண்ணிறக் கடற் பறவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே ஒரு முட்டைதான் இடுகிறது.

o கடல் ஆமைகள் ஒரே சமயத்தில் 100 முதல் 150 முட்டைகள் இடும்.

o ஸ்டிக்கிள் பாக் என்ற மீன் கடற் தாவரங்களைக் கொண்டு கடலின் அடியில் கூடு கட்டி வாழும்

o அத்திலாந்திக்கின் ஒரு பகுதியான ஸர்காப்ஸ் கடல் உலகிலேயே மிக ஆழமானது. சில இடங்களில் அதன் ஆழம் 19,680 அடிகளாகும்.

o ரஷ்யாவில் உள்ள அஜாவ் என்ற கடல்தான் ஆழமற்றது. இதன் அதிகபட்ச ஆழமே 42. 64 அடி தான்.

o நேபாளத்தின் தேசிய விலங்கு பசு.

o போல்பொயின்ட் பேனாவைக் கண்டறிந்தவர் ஜோன்டி லார்ட்

o ஒரு சிறுநீரகத்தின் சராசரி எடை 150 கிராம்.

o உலகின் மிகப் பெரிய விமானம் போயிங் 747 ரக விமானம் ஆகும்.

o கறுப்பு நிறக் கொடி துக்கம் மற்றும் எதிர்ப்பை உணர்த்துகிறது.

o இந்திய ரயில்வே 1853ம் ஆண்டு மும்பையிலிருந்து தானே வரையி லான 34 கிலோ
மீட்டர் தூர முதல் பயணத்தை தொடங்கியது. இன்று உலகின் மிகப் பெரிய
போக்குவரத்து அமைப்புகளுள் ஒன்றாக விளங்குகிறது. இதன் மொத்த ரயில் பாதை
நீளம் 63,028 கி. மீ, பணியாளர்களின் எண்ணிக்கை 1.54 மில்லியன்.

o தமிழ்நாடு நிலப்பரப்பில் 7வது இடத்தையும், மக்கள் தொகையில் 6வது இடத்தையும் பிடித்துள்ளது.

o தமிழகத்தில் படிப்பறிவு விகிதம் 73.47%

o இந்தியாவின் 28வது மாநிலம் ஜார்க்கண்ட். இது 2000ம் ஆண்டில் உதயமானது.

o இந்திய யூனியன் பிரதேசங்களில் மிகப் பெரியது அந்தமான் நிக்கோபார்
தீவுகள். இங்குள்ளவர்கள் சட்டம் சம்பந்தப்பட்ட நீதித்துறை சார்ந்த
பிரச்சினைகளுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

o லட்சத் தீவின் பரப்பளவு 32 சதுர கி. மீட்டர். இங்குள்ளவர்கள் சட்டம்
சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு கேரளா உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும்.

o பாம்புக்கு காதுகள் கிடையாது. ஆனால் ஒலி அதிர்வுகளை உணரும் திறன் அதன் நாக்குகளுக்கு உண்டு.

o ஒரு நத்தைக்கு அதிகபட்சமாக 25 ஆயிரம் பற்கள் இருக்கும்

o ஆமைக்குப் பல் கிடையாது, கடினமான ஈறு போன்ற அமைப்பாலே அது உணவுகளை உண்கிறது.

o உயில் எழுதும் பழக்கத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் ரோமானியர்கள்.

o ஸ்பெயின் நாட்டில் தான் முதல் முதலில் நாணயம் தோன்றியது.

o துக்கத்தால் வரும் கண்ணீர் நம் உடலில் நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது.

o கடல் வாழ் உயிரினங்களில் ஒரு வகையான மீனுக்குக் கடல் முயல் என்று பெயர்.
இது தோற்றத்தில் பார்ப்பதற்கு முயலைப் போலவே இருக்கும். மீன் இனத்திலேயே
அதிக முட்டைகள் இடும் உயிரினம் கடல் முயல் தான். அதாவது ஒரு மாதத்தில் 11
கோடியே 95 இலட்சம் முட்டைகள் இடக் கூடியது.

o நீருக்கடியில் தங்குமிடத்தைக் கட்டிய முதல் நாடு? - சுவீடன்

o உலகின் மிகப் பழைமையான தங்கும் விடுதியின் பெயர் என்ன? அது எந்த நாட்டில் கட்டப்பட்டது?

ஹோசி ரியாகோன், ஜப்பான்.

o தனது வாழ்நாளை தங்கும் விடுதியிலேயே கழித்த அமெரிக்க கோடீஸ்வரர் - ஹோவர்ட் ஹக்ஸ்.

o உலகின் மிகப்பெரிய தங்கும் விடுதி - பர்ஜ் அல் அராப்

o அமேசான் காடுகளுக்குள் அமைந்த ஹோட்டலின் பெயர்?

அரிஸ் டவர்ஸ்

o உலகிலேயே மிகவும் சிறந்த உணவகம்? எல் புல்லி (ஸ்பெயின்)

o அமெரிக்காவிலேயே முதலிடத் தில் இருக்கும் உணவகம்? பெர் சி

o தி பெட் டக் என்பது எந்த நாட் டின் பிரபல உணவகம்? இங்கிலாந்து.

o பாஸ்தா என்பது இத்தாலி நாட்டின் பிரபல உணவு.

o சால்சா என்ற உணவு மெக்சிகோ நாட்டில் மிகவும் பிரபல்யமானது.

o தென்னிந்தியர்கள் காலை உணவாக அதிகம் சாப்பிடுவது -இட்லி

o காலை உணவில் சாக்லெட்டை அதிகம் சேர்த்துக் கொள்ளும் ஐரோப்பிய நாட்டவர் - ஸ்பெயின்

o பென்குவின் நின்ற நிலத்திலிருந்தே முட்டையிடும். பெங்குவின் பறவை
இனத்தைச் சேர்ந்தது. மேலும் அதனால் பறக்க முடியாது. ஆனால் நன்றாக நீந்தும்.

o கண்கள் காதுகளை போல பத்து மடங்கு உணர்வும், மூக்கைப் போல முப்பது மடங்கு உணர்வும் கொண்டவை.

o ரீங்காரப் பறவையின் முட்டை உலகிலேயே சிறிய முட்டை. அதன் எடை சுமார் 0.24 கிராம்.

o ஒரிசா மாநிலத்தில் யானை சந்தை உள்ளது.

o பைசா நகர சாய்வு கோபுரம் வட்ட வடிவிலானது. எட்டு அடுக்குகளைக் கொண்டது.

o ஆண் கழுதைக்கும், பெண் குதிரைக்கும் பிறக்கும் குட்டி கோவேரி கழுதை எனப்படும்.

o பெண் நீர் யானைகளைவிட ஆண் நீர் யானைகள் அதிக எடை உடையவை.

o 22 கரெட் தங்கம் என்பது 91.67 சதவீதம் தூய்மையானது.

o சோழ மன்னர்களுக்குரிய பட்டப் பெயர்கள் கிள்ளி செம்பியன், வளவன், சோழன், காவிரி நாடன், கண்டர் என்பதாகும்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் 01 Empty Re: அறிந்து கொள்வோம் 01

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 11:10

o பாண்டியருக்குரிய பட்டப் பெயர்கள். எழுதி, மாறன், பாண்டியன் பொருப்பின், செழியன்.

o சேரர்களுக்குரிய பட்டப் பெயர்கள் சேரன், வானவன், மலையன், போறையன், ஊழியன்.

o ஆபிரிக்காவில் உள்ள யானை களில் சில கறுப்பு நிறத் தந்தம் உடையனவாக இருக்கின்றன.

o கோழியின் உடலில் எட்டாயிரத்திற்கு மேற்பட்ட சிறகுகள் உள்ளன.

o சிங்கம் ஒரே பாய்ச்சலில் 24 அடி தூரம் பாயும்.

o உலகிலேயே மிகப்பெரிய நூலகம் மொஸ்கோவில் உள்ள லெனின் நூலகம்

o ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தின் பழைய பெயர், மெசபதேமியா

o உலகிலேயே மிகப் பெரிய கோயில் கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்.

o உலகிலேயே வெப்பமான இடம் லிபியாவில் உள்ள அசீஸியா

o உலகிலேயே மிகவும் குளிர்ந்த இடம் ரஷ்யாவில் உள்ள சைபீரியா

o மிக அதிகமுறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்கா.

o உலகநாடுகளில் உள்ள அனைத்து அணு ஆயுதங்களும் ஒரே நேரத்தில்
வெளிப்படுத்தும் ஆற்றலை காட்டிலும் பத்தே நிமிடங்களில் சூறாவளி அதிக ஆற்றலை
வெளிப்படுத்தும்.

o பெண்களைக் காட்டிலும் ஆண்கள் 6 மடங்கு அதிகமாக மின்னலால்
பாதிக்கப்படுகின்றனர். மற்ற மரங்களைக் காட்டிலும் கருவேல மரம் தான்
அதிகளவில் மின்னலால் பாதிக்கப்படுகிறது.

o மழையில் விற்றமின் கி12 உள்ளது. ஒரு மழைத்துளியின் வேகம் மணிக்கு 17 மைல்கள்.

o 1932 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட கடுங்குளிரில் நயாகரா அருவி முழுவதும் உறைந்து விட்டது.

o உலகம் முழுதும் சராசரியாக தினமும் பிறக்கும் குழந்தைகளில் 12 குழந்தைகள்
தவறுதலாக மாற்றப்பட்டு வேறு தம்பதியினரிடம் ஒப்படைக்கப்படுகின்றன.

o சொக்லேட்கள் நாய்களுக்கு முதல் எதிரி. இது பலருக்கும் தெரிவதில்லை.
சொக்லேட்கள் நாய்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தைக் கடுமையாக
பாதிக்கும். ஒரு சிறிய சொக்லேட்டை சாப்பிட்டால், நாய்க்குட்டி
உயிரிழக்கும்.

o புதைகுழியில் விழுந்து விட்டால் பத ற்றம் கொள்ளாமல் உங்கள் கால்களை
மெதுவாக உயர்த்தி, முதுகுப் பகுதியை மட்டும் கிடைமட்டமாக வைத்து படுத்தால்
மூழ்கமாட்டீர்கள்.

o முதலைகளிடம் மாட்டிக் கொண்டால் உடனே உங்கள் கைகளைக் கொண்டு அதன் கண்களை
குத்தி விட்டால், அடுத்த நொடியே உங்களை விட்டு விலகி விடும்.

o உலகில் அதிகப்படியானோர்க்கு சூட்டப்பட்டிருக்கும் பெயர், “முகம்மது” இது ஆய்வில் தெரியவந்துள்ள உண்மை.

o குழந்தைகள் நாளொன்றுக்கு 400 முறை வாய்விட்டுச் சிரிக்கின்றனர். ஆனால்
பெரியவர்கள் 16 முறை மட்டுமே சிரிக்கின்றதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

o சராசரியாக ஒரு நாளைக்கு 18 ஆயிரம் அடிகளை ஒரு மனிதன் எடுத்து வைக்கிறான்.

o பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கு 40% அதிகமாக வியர்க்கும்.

o மேற்கு சீனாவில் வசிக்கும் மக்கள் தேனீரில் சீனிக்கு பதிலாக உப்பைக் கலந்து குடிக்கின்றனர்.

o பெண்களை விட ஆண்கள் அதிகமாகச் சத்தம் போட்டு சிறிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

o அமெரிக்கர்களில் 40% பேர் பல் மருத்துவர்களிடம் சென்றதே இல்லை. இதனால் 55
வயதை நெருங்கும் போது ஏறக்குறைய 50% பேர் அதிகளவில் பற்கள் விழுந்து
‘பொக்கை’ வாயர்களாக மாறுகின்றனர். அதன் பிறகே மருத்துவர்களிடம் ஓடிச்
சென்று சிகிச்சை பெறுகின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அறிந்து கொள்வோம் 01 Empty Re: அறிந்து கொள்வோம் 01

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum