சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அமெரிக்க வசந்தத்தை வழிநடத்தும் அரபு வசந்தம்  Khan11

அமெரிக்க வசந்தத்தை வழிநடத்தும் அரபு வசந்தம்

Go down

அமெரிக்க வசந்தத்தை வழிநடத்தும் அரபு வசந்தம்  Empty அமெரிக்க வசந்தத்தை வழிநடத்தும் அரபு வசந்தம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 16 Oct 2011 - 7:08

அரபுப் புரட்சிக்கு முன், அந்த நாடுகளின் அதிபர்களை ஆதரித்து வந்த அமெரிக்கா, புரட்சியின் போது அவர்களைக் கைவிட்டு, மக்கள் பக்கம் இருப்பதாகக் காட்டிக் கொண்டது. ஈரானிலும், அதுபோன்ற சூழல் உருவான போது, அதிபர் மக்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டும் என, அமெரிக்கா கருத்து கூறியது. அதற்குப் பதிலளித்த ஈரான் அதிபர் அகமதி நிஜாத், "எங்கள் நாட்டு உள் விவகாரங்களில், அமெரிக்கா தலையிட வேண்டாம். இதேபோன்ற மக்கள் எழுச்சி, விரைவில் அமெரிக்காவிலும் வரும்' என எச்சரித்தார்.

அவரது எச்சரிக்கை, தற்போது உண்மையாகியிருக்கிறது. நியூயார்க்கில் உள்ள வால் ஸ்டிரீட்வில் இயங்கும், அமெரிக்காவின் மிகப் பெரிய நிதி நிறுவனங்களுக்கு எதிராக, கடந்த செப்டம்பர் 17ம் தேதி, ஆயிரம் பேர் திரண்டு நடத்திய ஆர்ப்பாட்டம், வெளியுலகுக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த ஆர்ப்பாட்டம், தற்போது அமெரிக்கா முழுவதும் பரவி வருவதை அடுத்து, சர்வதேச ஊடகங்களின் கவனம், அதை நோக்கித் திரும்பியுள்ளது.

"வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்' என்ற அமைப்பு, தற்போது "வாஷிங்டன் ஆக்கிரமிப்பு இயக்கம்', "லாஸ் ஏஞ்சல்ஸ் ஆக்கிரமிப்பு இயக்கம்' என, பல்வேறு கிளைகளாகப் பிரிந்து, செயல்படத் துவங்கியுள்ளது. இன்றைய நிலையில், நாட்டின் 100க்கும் மேற்பட்ட நகரங்களில், மிக அமைதியான முறையில் இப்போராட்டம் நடந்து வருகிறது.
இப்போராட்டத்திற்கான அழைப்பு, கனடாவில் இருந்து வெளிவரும், "ஆட்பஸ்டர்ஸ்' இதழில், கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி, முதலில் வெளிவந்தது. அப்போது, எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டம், சூடு பிடித்துக் கொண்டிருந்த நேரம். "ஆட்பஸ்டர்ஸ்' இதழில், எகிப்திய போராட்டத்தை முன்னுதாரணமாகக் கொண்டு, அமெரிக்காவிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை எதிர்த்து, லட்சக்கணக்கானோர் வால் ஸ்டிரீட்வில் திரள வேண்டும் என்று, பிப்ரவரி 2ம் தேதி, தலையங்கம் அறைகூவல் விடுத்தது.

தொடர்ந்து, ஜூலை 13ம் தேதி, இந்தப் போராட்டத்திற்காக,"ஆக்குபை வால்ஸ்ட்ரீட்' என்ற "ட்விட்டர்' கணக்கை, "ஆட்பஸ்டர்ஸ்' துவங்கியது. இதையடுத்துத் தான், செப்டம்பர் 17ம் தேதி, ஆயிரம் பேர் திரண்டு வால் ஸ்டிரீட்வில், புகழ்பெற்ற பங்குச் சந்தை அடையாளமான காளைச் சிலை முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்' கோஷம், "நாங்கள் 99 சதவீதம்' என்பது தான். மீதமுள்ள ஒரு சதவீதம், கார்ப்பரேட் நிறுவனங்கள் என்பது கோஷத்தின் மீதி அர்த்தம்.

இந்த இயக்கம், அமெரிக்காவின் மோசமான நிதிக் கொள்கையையும், அரசின் கொள்கை முடிவுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த இரண்டுமே, உலகம் அறிந்தது தான் என்றாலும், அவற்றால் அமெரிக்காவின் சாதாரண, நடுத்தர மக்கள் எவ்விதம் பாதிப்படைந்துள்ளனர் என்பதை, உலகிற்குக் காட்டியது தான் இதன் சாதனை. துவக்கத்தில், இந்த ஆர்ப்பாட்டங்கள் வேலைவெட்டி அற்றவர்களால், பொழுதுபோக்கிற்காக நடத்தப்படுவது என, "வால்ஸ்ட்ரீட் ஜர்னல்' உள்ளிட்ட பிரபல பத்திரிகைகள், மதிப்பிட்டு தலையங்கம் எழுதின. தற்போது, இப்போராட்டத்தின் தாக்கத்தைக் குறித்து, ஆய்வுக் கட்டுரைகள் எழுதிக் குவிக்கின்றன. ஆனால், இதன் போக்கும் வீச்சும், அமெரிக்க அரசியலில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில், இந்த போராட்டத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என, நிபுணர்கள் கருதுகின்றனர்.

எகிப்து போராட்டத்திற்கும், இதற்கும் ஒப்புமை இருந்தாலும், குறிப்பிடத்தக்க வேற்றுமைகளும் உள்ளன. தலைமையில்லாதது, அரசுக்கு எதிர்ப்பு, அரசியல் கட்சிகளின் ஆதரவின்மை, பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தியது என, ஒற்றுமைகளை அடுக்கலாம்.

தாரிர் சதுக்கத்தில் நடந்ததைப் போல, நியூயார்க்கின் ஜுகோட்டி பூங்காவில் திரண்டுள்ள மக்கள், தங்கள் உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்கும், பூங்காவின் தூய்மைக்கும், தாங்களே பல குழுக்களை அமைத்துச் செயல்படுகின்றனர்.
அதேநேரம், மக்கள் வன்முறையில் ஈடுபடாதது, அரசு சமூக வலைத் தளங்களுக்குத் தடை விதிக்காதது, போராட்டங்களைத் தடுக்காதது, அதிபருக்கு எதிராக அன்றி, அரசின் நிதிக் கொள்கைக்கு எதிராக மட்டுமேயான போராட்டம் என, பல வேற்றுமைகளும் உள்ளன. இரண்டாவதாகக் குறிப்பிட்டவை, வால் ஸ்டிரீட் போராட்டத்திற்கு மட்டுமே பொருந்தும்.


ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும், அகிம்சை வழியிலேயே திகழ வேண்டும் என, "வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு' இயக்கத்தின் இணையதளத்தில் வற்புறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தங்கள் கோரிக்கை உலகளவில் ஆதரவைப் பெறும் எனவும், நம்பிக்கை தெரிவித்துள்ளனர் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள்.

இயக்கத்தைப் பற்றிய அறிமுகக் குறிப்பில், "அரபுப் புரட்சியின் அடிப்படையில் தான், இந்த இயக்கம் நடக்கிறது' என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். ஆக, இந்த ஆண்டு ஆரம்பத்தில் துவங்கிய அரபு வசந்தம், ஆண்டின் இறுதியில், அமெரிக்க வசந்தத்தில் கொண்டு போய் விட்டுள்ளது.


அமெரிக்க வசந்தத்தை வழிநடத்தும் அரபு வசந்தம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆந்திர மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய பிரான்ஸ் பெண்
» 30 அமெரிக்க வீரர்கள் பலி: ஹெலிகாப்டரை வீழ்த்திய தலிபான்கள் சுட்டுக்கொலை- அமெரிக்க படை பதிலடி
» அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் அமெரிக்க-கனடிய தமிழர்களின் போராட்டம்
» சிறீலங்கா இராணுவத்தை வழிநடத்தும் சிங்களப் பெண்மணி?!
» மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum