சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36

» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30

» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29

» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28

» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26

» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25

» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24

» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: ஜெயலலிதா நன்றி Khan11

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: ஜெயலலிதா நன்றி

Go down

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: ஜெயலலிதா நன்றி Empty உள்ளாட்சி தேர்தலில் வெற்றி: ஜெயலலிதா நன்றி

Post by நண்பன் Sat 22 Oct 2011 - 10:44

முதல்- அமைச்சரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்ட நன்றி அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடந்து
முடிந்த திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தலிலும்,
உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் நீங்கள் அளித்த தீர்ப்புகளுக்கு முதலில்
என்னுடைய இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய
தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர். ஆட்சியைப் பற்றி
நீங்கள் என்ன எடை போட்டிருக்கிறீர்கள் என்பதை உலகம் தெரிந்து கொள்ள இந்தத்
தேர்தல் முடிவுகள் அமையும் என்று நான் உறுதிபட நம்பினேன். என்னுடைய
நம்பிக்கை மெய்ப்பட்டிருக்கிறது.

உங்களுடைய மகத்தான
தீர்ப்பு நான் எதிர்பார்த்ததைப் போலவே அமைந்திருக்கிறது. எனவே, உங்கள்
அனைவருக்கும் மிகுந்த மனநெகிழ்ச்சியோடு, அன்புப்பெருக்கோடு மீண்டும்
மீண்டும் நன்றி கூறி மகிழ்கிறேன். எண்ணற்ற இடர்ப்பாடுகள், பொருளாதார
பற்றாக்குறைகள், நிர்வாக சீர்கேடுகள், கடன் சுமைகள் என்று அனைத்து
முனைகளிலும் தாக்குதல்களுக்கு உள்ளாகி தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக
ஆட்சிப் பொறுப்பைத்தான் என்னிடம் ஐந்து மாதங்களுக்கு முன்னர் அளித்தீர்கள்.


இந்தக் குறுகிய காலத்திலேயே மக்களுக்கு அளித்த
வாக்குறுதிகள் பலவற்றை நடைமுறைப்படுத்தி உங்கள் அன்பை இந்த அரசு
பெற்றிருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகளே சாட்சி.

என்னுடைய
பணிகளுக்கெல்லாம் பாராட்டு கூறும் வகையிலும், பக்கபலமாக இருக்கும்
முறையிலும், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும்,
உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க. வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள்
மகத்தான வெற்றியை அளித்திருக்கிறீர்கள். 2011, ஏப்ரல் மாதம் நடைபெற்ற
சட்டமன்றப் பொதுத்தேர்தலில், திருச்சி மேற்கு தொகுதியில் மொத்தம் ஒரு
லட்சத்து 54 ஆயிரத்து 322 வாக்குகள், அதாவது, 74.93 சதவீத வாக்குகள்
பதிவாயின.

இதில், அ.தி.மு.க. 77 ஆயிரத்து 492
வாக்குகள் பெற்று, 7 ஆயிரத்து 179 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
பெற்றது. தற்போது நடைபெற்ற இடைத் தேர்தலில், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 433
வாக்குகள், அதாவது 61.15 சதவீத வாக்குகள் பதிவாயின. இதில், அ.தி.மு.க. 69
ஆயிரத்து 29 வாக்குகள் பெற்று, 14 ஆயிரத்து 684 வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற்றுள்ளது.

இந்த முறை நம்மோடு கூட்டணிக்
கட்சிகள் இல்லை. இருந்தும் கூட, முன்னரைக் காட்டிலும் இரு மடங்கு வாக்கு
வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். இதுவே, எனது
ஆட்சிக்கு நீங்கள் அளித்திருக்கும் நற்சான்றிதழ் என்று நான் கருதுகிறேன்.
மக்கள் நலப் பணிகள் அனைத்தையும் தொய்வின்றி, துடிப்போடு நடைமுறைப்
படுத்துவதில் என்னுடைய உழைப்பு உங்களுக்காக தொடர்ந்து கொண்டே இருக்கும்
என்ற வாக்குறுதியையும் இந்த நேரத்தில் உங்களுக்கு நான் அளிக்க
விரும்புகிறேன்.

இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட
அமைச்சர்களுக்கும், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கும், கழக
நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் என்னுடைய பாராட்டுகள். இதே
போன்று, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள 10 மாநகராட்சி மேயர்
பதவிகளுக்கும் கழக வேட்பாளர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள். நகரமன்றத்
தலைவர் தேர்தலில் கழக வேட்பாளர்கள் 88 இடங்களில் வென்றிருக்கிறார்கள்.

பேரூராட்சி
மன்றத் தலைவர் தேர்தலில் கழக வேட்பாளர்கள் 284 இடங்களில்
தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு
வருகின்ற மேலும் பல இடங்களில் கழக வேட்பாளர்களே வெற்றி வாய்ப்போடு
முன்னணியில் இருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்த வண்ணம் உள்ளது. இவை
மட்டும் அல்லாமல், கட்சி சின்னங்கள் இன்றி நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்
மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட்ட கழக உடன்பிறப்புகளும்
பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற இனிய செய்தியும் வருகிறது.

உள்ளாட்சி
மன்றங்கள் என்பவை ஜனநாயகத்தின் தொடக்கப் பள்ளி, நாற்றங்கால். வலுவான
உள்ளாட்சி அமைப்புகள், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும், அரசின் திட்டங்களை
செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அவசியம் என்று நான் பலமுறை உங்களுக்கு
நினைவூட்டி இருக்கிறேன். என்னுடைய கருத்தை ஏற்று, மாநில அரசின்
வளர்ச்சிப் பணிகள் எல்லாம் சிறப்பாக நடைபெறும் வகையில், அ.தி.மு.க.
வேட்பாளர்களை மாபெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறீர்கள்.

உள்ளாட்சி
மன்றத் தேர்தலில் அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும்,
உடன்பிறப்புகளுக்கும், கழகத்தின்பால் அன்பு கொண்ட தோழமைக் கட்சியினருக்கும்
என்னுடைய நன்றியையும், பாராட்டையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல்களில் போட்டியிட்ட கழக வேட்பாளர்கள் அனைவரும் ஆங்காங்கே உள்ள கழக
நிர்வாகிகளுடன் சேர்ந்து வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

நல்ல
ஆட்சி, நல்ல நிர்வாகம் வழியாக வளமான தமிழகம் காண்போம்! மற்ற
மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்!
இதுவே இந்தத் தருணத்தில் நான் உங்களுக்கு உறுதி கூறுகின்ற நல்ல
செய்தியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறும் எங்கள் கட்சியினர் தவறு செய்தால் வாக்களித்த மக்களே தண்டனை கொடுக்கலா
» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி
» உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி நீடிக்கும் கருணாநிதி பேட்டி
» உள்ளாட்சி தேர்தல்: ஜெயில் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிட முடியாது
» இலங்கை உள்ளாட்சி தேர்தல்: ராஜபக்சே கட்சி அமோக வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum