Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரசு - TNA பேச்சைக் குழப்புவது சில தமிழ் ஊடகங்களின் நோக்கமா?
Page 1 of 1

உள்நோக்கம் என்ன எனப் புத்திஜீவிகள், மக்கள் கேள்வி
நமது அரசியல் நிருபர்
அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும்
சமாதானப் பேச்சுக்கள் குறித்து எதிர்மறையான செய்திகள் தமிழ்ப் பத்திரிகைகள்
சிலவற்றில் தொடர்ச்சியாக வெளிவரத் தொடங்கியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகள்
வெற்றியளிக்காது என்றும், பேச்சுக்களை எப்படியும் சிங்கள மக்கள் குழப்புவார்கள்
என்ற விதமான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
கொழும்பிலுள்ள முன்னாள் தமிழ் நீதியரசர் ஒருவரை இந்தப் பேச்சுக்கள் குறித்து
தொடர்புகொண்டு கேட்டுள்ள பத்திரிகையொன்று, இலங்கை அரசாங்கம் ஒருபோதும் தமிழ்
மக்களுக்கு நியாயமான தீர்வைத் தரப்போவதில்லை என்று அவர் கூறியதாக செய்தி
வெளியிட்டுள்ளது.
இதேபோல், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொண்டு இந்தச்
பேச்சுக்கள் குறித்துக் கேட்டுள்ள அந்தப் பத்திரிகை, அரசாங்கம் ஒருபோதும் அதிகாரப்
பகி ர்வை வழங்காது என்றும், தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு ஏமாறப் போகிறது என்றும்
அவர் கூறியதாக செய்தி வெளி யிட்டுள்ளது. பொதுவாகவே சமாதான முயற்சிகளுக்கு எதிர்ப்பு
காட்டிவரும் சில சிங்களத் தீவிரவாத சக்திகளிடம் தற் போதைய பேச்சுக்கள் பற்றிக்
கருத்துக் கேட்டு செய்தி வெளியிடுவதன் மூலம், இந்தச் சமாதான முயற்சிகள் வெற்றியளிக்
காது என்ற விதமான ஒரு மனநிலை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகிறது.
ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் போன்ற அமைப்புகள் தென்னிலங்கையில்
முன்னைப் போல் பலமான நிலையில் இன்று இல்லாத போதும், இந்தக் கட்சிகளின் சமாதானப்
பேச்சுக்களுக்கு எதிரான கருத்துகளுக்கு இத்தகைய தமிழ்ப் பத்திரிகைகளில் கூடுத ல்
முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.
அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள்
செப்டெம்பர் மாதம் சிறிது காலம் தடைப்பட்டிருந்தபோது, எந்த அடிப்படையுமின்றி
சமாதானப் பேச்சுக்கள் முறிந்து போய்விட்டதாக செய்தி வெளி யிட்ட இந்தப் பத்திரிகைகள்,
இப்போது சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் கண்டு அதிகாரப் பகிர்வு குறித்து
ஆராயும் நிலைக்கு முன்னேறியுள்ள நிலையில், பேச்சுக்கள் வெற்றியளிக்காது என்ற விதமான
மன நிலையைத் தோற்றுவிக்க முயற்சித்து வருவதைக் காண முடிகிறது. இதேவேளை, மற்றுமொரு
தமிழ்ப் பத்திரிகையொன்று, “இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுடைய பிரச்சினையைத்
தீர்க்கும் என்று யாரேனும் நம்பினால், அது மிகப் பெரும் தவறாகும்” என்று ஆரம்பித்து,
அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடத்தும் பேச்சுவார்த்தை முழுக்க
முழுக்க ஒரு நாடகமே என்று சாடும் விதமாக தலையங்கத்தை வெளி யிட்டுள்ளது.
இலங்கை அராசங்கம் மாத்திரமன்றி, இந்தியாவும்கூட இனப்பிரச்சினை தீர்க் கப்பட்டு விடக்
கூடாது என்றே விரும்பு வதாகவும், எதிர்மறையான கருத்துகள் இந்த தலையங்கத்தில்
வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனப் பிரச்சினைக்கான தீர்வு வெளியார் தலையீடு மூலமாக அன்றி, உள்நாட்டிலேயே காணப்பட
வேண்டும் என்ற தொனிப்பட, அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்த முன்னாள் இந்திய
வெளியுறவுச் செயலாளர் சியாம் சரண் தெரிவித்த கருத்தைத் திரிபு படுத்தி,
“இந்தியாவின் கவலையெல் லாம் இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடக்
கூடாது என்பதே” என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum