Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எல்லையில் 13வது நாளாக போராட்டம் அத்தியாவசிய பொருளுக்கு கேரளாவில் கடும் தட்டுப்பாடு
Page 1 of 1

உத்தமபாளையம்: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்வதால், தமிழக எல்லையில் போராட்டம் 13வது நாளாக தொடர்ந்தது. குமுளி பாதையில் போக்குவரத்து இல்லாததால் கேரளாவில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் பெரியாறு அணையின் உரிமையை விட்டு தரமாட்டோம், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேறியது.
இதனால் கேரளாவில் வன்முறை வெடித்தது. அங்குள்ள தமிழர்கள் தாக்கப்பட்டனர். பொதுமக்கள் தேவாரம் அருகே சாக்குலூத்துமெட்டு வழியாக மலைப்பாதையில் தப்பி வருகின்றனர். அவர்களுக்கு தேவாரம் பேரூராட்சி அலுவலகத்தில் தங்குவதற்கும், உணவு வழங்குவதற்கும் தேனி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. தமிழர்கள் தாக்கப்படும் தகவல்கள் பரவி வருவதால் கேரளாவுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகமெங்கும் வெடித்து வருகின்றன.
அத்தியாவசிய பொரு ளுக்கு தட்டுப்பாடு: ஏற்கனவே கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் கம்பம்மெட்டு, குமுளி, போடி மெட்டு வழியாக போவது கடந்த 13 நாளாக முற்றிலும் தடைபட்டுள்ளது. செங்கோட்டை, பாலக்காடு வழியாகவே தற்போது அத்தியாவசிய பொருட்கள் சென்றுகொண்டிருக்கின்றன. இதனால் கேரளாவில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காய்கறிகள் விலை உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், பால், காய்கறி உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போலீசாரின் உதவியோடு கேரளாவில் வாழும் தமிழர்கள் தாக்கப்படுவதாக தப்பி வந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, தமிழகத்துடனான மோதல் போக்கை தவிர்ப்பதற்கு கேரள அரசு முதற்கட்டமாக சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரளாவில் பணிபுரியும் தமிழக தோட்ட தொழிலாளர்களை ஜீப்புகளில் ஏற்றி வந்து தமிழக எல்லையான கம்பம் மெட்டு வரை, அம்மாநில போலீஸ் பாதுகாப்புடன் விட்டு வருகின்றனர்.
உண்ணாவிரதம்: இதற்கிடையே கேரளாவின் தாக்குதல்களை கண்டித்து பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆண்டிபட்டியில் வர்த்தகர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். போடி ரெங்கநாதபுரத்தில் ரெடிமேட் துணி உற்பத்தியாளர்கள் கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதம் இருந்தனர். தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், பழ.நெடுமாறன் பங்கேற்ற உண்ணாவிரதம் நடந்தது. தேனி அருகே கொடுவிலார்பட்டி, கோவிந்தநகரம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ரயில் மறியல் அறிவிப்பு: மதுரை வக்கீல் சங்க செயலாளர் ஏ.கே.ராமசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் நேற்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உருவபொம்மைகளை பாடை கட்டி தூக்கிக்கொண்டு கோர்ட்டை வலம் வந்தனர். அப்போது மத்திய, கேரள அரசுகளை கண்டித்து கோஷம் எழுப் பினர். வக்கீல் சங்க செய லாளர் ஏ.கே.ராமசாமி கூறுகையில், ‘‘திங்கட்கிழமை சங்க பொதுக்குழுவை கூட்டி தென் மாவட்ட வக்கீல்களை ஒன்றிணைத்து ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம்‘‘ என்றார்.
டிரைவர்கள் போராட்டம்: தமிழகத்தில் மிகப்பெரிய மார்க்கெட்டாக ஒட்டன்சத்திரம் இருந்து வருகிறது. இங்கு நாள்தோறும் 1,000 டன் காய்கறிகள் வரத்து இருக்கும். இதில் 700 டன் காய்கறிகள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும். இங்கிருந்து பாலக்காடு மற்றும் நாகர்கோவில் வழியாக அதிகளவில் அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து இந்த மார்க்கெட்டில் உள்ள 200 கடைகள் கடந்த வாரம் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தின.
தற்போது தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து போராட்டம் வலுத்து வருகின்றன. இந்நிலையில் ஒட்டன்சத்திரத்திலிருந்து கேரளாவுக்கு லாரிகளை ஓட்டி செல்லும் டிரைவர்கள், ‘கேரளாவுக்கு செல்லமாட்டோம்‘ என போராட்டம் செய்வதாக அறிவித்துள்ளனர். அவர்களிடம் வியாபாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் போராட்டம் தொடரும்பட்சத்தில் கேரளாவில் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.

Re: எல்லையில் 13வது நாளாக போராட்டம் அத்தியாவசிய பொருளுக்கு கேரளாவில் கடும் தட்டுப்பாடு
ரயில் மறியல் 254 பேர் கைது: முல்லை பெரியாறு பிரச்னையில் கேரள அரசை கண்டித்து திண்டுக்கல்லில் நேற்று ரயில்வே ஸ்டேஷன் முன், இந்திய ஜனநாயக கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை, நெல்லை, கோவை, தேனி, விருதுநகர், சிவ கங்கை, கரூர், புதுக் கோட்டை ஆகிய 9 மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது, குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. அதில் மணப்பாறையில் இருந்து வந்த இக்கட்சியைச் சேர்ந்த இருவர் பயணித்தனர். அனுமந்தநகர் வந்தபோது அபாயசங்கிலியை பிடித்து 2 பேரும் இழுத்தனர்.
இதனால் ரயில் நின்றது. தகவல் தெரிந்ததும் கட்சியினர் சிலர் அப்பகுதிக்குச் சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் தண்டவாளத்தில் படுத்து கேரள அரசை கண்டித்து கோஷமிட்டனர். இதனைத் தொடர்ந்து 254 பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள வாகனங்கள் மீது தாக்குதல்: தமிழகத்தில் கேரள மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் ஒன்றான பழநியில் தற்போது போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சில அமைப்பை சேர்ந்தவர்கள் கேரளத்தினரின் பேக்கரிகளை அடித்து உடைத்தனர். இதனால் பழநியில் உள்ள கேரள பேக்கரிகள் மூடப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களாக கேரள மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் மீதும் தாக்குதல் நடந்து வருகிறது.
கேரளத்தினரின் மகேந்திரா வேன் மற்றும் டூரிஸ்டர் வேன்களின் கண்ணாடிகள் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டன. நேற்று காலை கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 கார்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சண்முகநதி அருகே, மூணாறில் இருந்து பழநி வரும் கேரள அரசுக்கு சொந்தமான பஸ்சின் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்டது.
பஸ் நிலையத்தில் இருந்த கேரள பதிவு எண் கொண்ட ஐயப்ப பக்தர்களின் மினி பஸ்சின் கண்ணாடியும் பாளையம் சாலையில் நின்றிருந்த கேரள பதிவு எண் கொண்ட காரின் கண்ணாடியும் உடைக்கப்பட்டன

Similar topics
» கோவிலுக்கு யானை தானம் கேரளாவில் கடும் எதிர்ப்பு
» ஈவ்-டீசிங் தொல்லையால் பள்ளி செல்வதை நிறுத்திய 80 மாணவிகள், 5-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
» 10-வது நாளாக உண்ணாவிரதம்: அன்னாஹசாரே உடல் கடும் பாதிப்பு; டாக்டர்கள் எச்சரிக்கை
» கிழக்கு ஆப்பிரிக்காவில் கடும் வறட்சி: 1 கோடி மக்கள் உயிருக்கு போராட்டம்.
» கட்டிடம் கட்டுவதற்கான மணலுக்கு கடும் தட்டுப்பாடு:விலை குறைந்த பிறகும் சிக்கல் நீடிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum