Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நண்பா...
+3
jasmin
முனாஸ் சுலைமான்
பார்த்திபன்
7 posters
Page 1 of 1
நண்பா...
ஒன்னாப்புப் படிக்கும்போதே
ஒன்னுமன்னா திரிஞ்சோம்!
நித்தம் தூங்கும் நேரம் மட்டுந்தான
ரெண்டு பெரும் பிரிஞ்சோம்!
ஒத்த முட்டாய் வாங்கி
அதக் காக்கா கடி கடிச்சோம்!
ஒத்துமையாச் சேந்துதான
ஒண்ணுக்குக் கூட அடிச்சோம்!
மூணாப்புல பிரிஞ்சதுக்கே
மூஞ்சி வீங்க அழுதோம்!
நட்பு எனும் கலப்ப வச்சு
ரெண்டு நெஞ்ச உழுதோம்!
என்னயடிச்ச கணக்கு டீச்சர்
கண்ணாடிய ஒடச்ச!
எங்க வீட்டு நோம்புக் கஞ்சி
உன் பூணூல் நனையக் குடிச்ச!
மனசு ஒண்ணா ஆனா பெறகு
மதத்த எங்க நெனச்சோம்?
பழனிமல பள்ளிவாசல்
ரெண்டையும் ஒண்ணா மதிச்சோம்!
நான் காச்ச வந்து கெடந்த்தப்ப
உன் வீட்டைக்கூட மறந்த!
பள்ளிக்கூடம் போகாம
என் பக்கத்திலேயே கெடந்த!
என் நாயி செத்ததுக்கே
ஏழு நாளு அழுத!
எம்மேல நீ வச்ச பாசம்
என்னன்னு நான் எழுத?
என் சைக்கிள் தொலஞ்சபெறகு
உன் சைக்கிள நீ தொடல!
நீ சைவமுன்னு தெரிஞ்சபெறகு
கவிச்சி என் நாக்குல படல!
பஞ்சம் வந்து பல்லக்காட்ட
பத்தாவதையே நான் தொடல!
நீ பன்னெண்டாவது முடிச்சபோதும்
நம்ம பந்தபாசம் கெடல!
காலேஜில எடம் கெடச்சு
கண்ணீரோட பிரிஞ்ச!
மாட்டு டாக்டர் படிப்புக்காக
மதுரையில சேந்த!
காஞ்சிபுரம் பொண்ணுமேல
காதலுன்னு சொன்ன!
அவக கண்ணப் பாத்து
பேசக்கூட தெம்பில்லாம நின்ன!
மறுநாளே கெளம்பி நானும்
மதுர வந்து சேந்தேன்!
ஒனக்குக்கூடத் தெரியாம
உன் காதல அவட்ட சொன்னேன்!
தேனாட்டம் கொரலிருந்தும்
தேனீயாட்டம் கொட்டுச்சு!
இங்கிதமே தெரியலன்னு
இங்கிலீசில் திட்டுச்சு!
வாரக் கடசி லீவுல என்
வாசக்கதவ தட்டுன!
அவ சம்மதிச்ச சேதி சொல்லி
என்னத் தூக்கி சுத்துன!
நாலுமாசம் வரைக்கும் எல்லாம்
நல்லபடியா போச்சு!
அதுக்குமேல கொஞ்சம்கொஞ்சமா
பேச்சு கொரஞ்சுபோச்சு!
படிப்ப முடிச்ச பின்னால
பழனி பக்கம் நகந்த!
ஆசப்பட்ட பொண்ணு பேர்ல
ஆஸ்பத்திரி தொறந்த!
மண்டக்குள்ள காதல் ஏற
மத்ததெல்லாம் மறந்த!
கல்யாணத்துக்குப் பெறகும்கூட
கண்டுக்காம இருந்த!
நடுவுல ஒரு பொண்ணு வந்தா
நட்பு என்ன சாகுமா?
நாக்கினிக்கப் பேசினாலும்
உன் நண்பன் போல ஆகுமா?
காதலுன்னு சொல்லும்போது
கரும்பாட்டம் இனிக்கும்!
நட்புன்னு சொல்லிப்பாரு
நரம்பெல்லாம் சிலுக்கும்!
என்னிக்காச்சும் ஒரு நாளு
என்னத் தேடி வருவ!
அதுக்குள்ள மறந்துறாத
எங்க வீட்டுத் தெருவ!
நிலவை.பார்த்திபன்
ஒன்னுமன்னா திரிஞ்சோம்!
நித்தம் தூங்கும் நேரம் மட்டுந்தான
ரெண்டு பெரும் பிரிஞ்சோம்!
ஒத்த முட்டாய் வாங்கி
அதக் காக்கா கடி கடிச்சோம்!
ஒத்துமையாச் சேந்துதான
ஒண்ணுக்குக் கூட அடிச்சோம்!
மூணாப்புல பிரிஞ்சதுக்கே
மூஞ்சி வீங்க அழுதோம்!
நட்பு எனும் கலப்ப வச்சு
ரெண்டு நெஞ்ச உழுதோம்!
என்னயடிச்ச கணக்கு டீச்சர்
கண்ணாடிய ஒடச்ச!
எங்க வீட்டு நோம்புக் கஞ்சி
உன் பூணூல் நனையக் குடிச்ச!
மனசு ஒண்ணா ஆனா பெறகு
மதத்த எங்க நெனச்சோம்?
பழனிமல பள்ளிவாசல்
ரெண்டையும் ஒண்ணா மதிச்சோம்!
நான் காச்ச வந்து கெடந்த்தப்ப
உன் வீட்டைக்கூட மறந்த!
பள்ளிக்கூடம் போகாம
என் பக்கத்திலேயே கெடந்த!
என் நாயி செத்ததுக்கே
ஏழு நாளு அழுத!
எம்மேல நீ வச்ச பாசம்
என்னன்னு நான் எழுத?
என் சைக்கிள் தொலஞ்சபெறகு
உன் சைக்கிள நீ தொடல!
நீ சைவமுன்னு தெரிஞ்சபெறகு
கவிச்சி என் நாக்குல படல!
பஞ்சம் வந்து பல்லக்காட்ட
பத்தாவதையே நான் தொடல!
நீ பன்னெண்டாவது முடிச்சபோதும்
நம்ம பந்தபாசம் கெடல!
காலேஜில எடம் கெடச்சு
கண்ணீரோட பிரிஞ்ச!
மாட்டு டாக்டர் படிப்புக்காக
மதுரையில சேந்த!
காஞ்சிபுரம் பொண்ணுமேல
காதலுன்னு சொன்ன!
அவக கண்ணப் பாத்து
பேசக்கூட தெம்பில்லாம நின்ன!
மறுநாளே கெளம்பி நானும்
மதுர வந்து சேந்தேன்!
ஒனக்குக்கூடத் தெரியாம
உன் காதல அவட்ட சொன்னேன்!
தேனாட்டம் கொரலிருந்தும்
தேனீயாட்டம் கொட்டுச்சு!
இங்கிதமே தெரியலன்னு
இங்கிலீசில் திட்டுச்சு!
வாரக் கடசி லீவுல என்
வாசக்கதவ தட்டுன!
அவ சம்மதிச்ச சேதி சொல்லி
என்னத் தூக்கி சுத்துன!
நாலுமாசம் வரைக்கும் எல்லாம்
நல்லபடியா போச்சு!
அதுக்குமேல கொஞ்சம்கொஞ்சமா
பேச்சு கொரஞ்சுபோச்சு!
படிப்ப முடிச்ச பின்னால
பழனி பக்கம் நகந்த!
ஆசப்பட்ட பொண்ணு பேர்ல
ஆஸ்பத்திரி தொறந்த!
மண்டக்குள்ள காதல் ஏற
மத்ததெல்லாம் மறந்த!
கல்யாணத்துக்குப் பெறகும்கூட
கண்டுக்காம இருந்த!
நடுவுல ஒரு பொண்ணு வந்தா
நட்பு என்ன சாகுமா?
நாக்கினிக்கப் பேசினாலும்
உன் நண்பன் போல ஆகுமா?
காதலுன்னு சொல்லும்போது
கரும்பாட்டம் இனிக்கும்!
நட்புன்னு சொல்லிப்பாரு
நரம்பெல்லாம் சிலுக்கும்!
என்னிக்காச்சும் ஒரு நாளு
என்னத் தேடி வருவ!
அதுக்குள்ள மறந்துறாத
எங்க வீட்டுத் தெருவ!
நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: நண்பா...
இதுக்கு எப்படி என்ன எழுத என்று உணமையில் நான் தடுமாறினேன் அப்படி அழகான வரிகள் உண்மைகள் நிஜமான என் சிறு வயது நினைவுகள் அப்படியே கண் முன்னே வந்து நிற்க்கிறது சூப்பரா பேச்சு வழக்கில் இது கிராமத்து தமிழ் போல இருக்கு
வாழ்த்துக்கள்: தோழரே
வாழ்த்துக்கள்: தோழரே
Re: நண்பா...
வாழ்துக்கள் பர்த்திபன்
நாட்டுபுற பாடலைப் போல நட்பு என்ற ஒன்றை இவ்வளவு அழகாக யாரும் சொல்லிவிட முடியாது .....மதத்தை , நிறத்தை ,இனத்தை .மொழியை மீறி மனிதனை இணைக்கும் கயிறு நட்பு ....
திருமணம் வரை மிக நெறுக்கமாக தொடரும் நட்பு திருமணத்திற்கு பின் எவ்வாறு நசிந்து போகிறது என்று அனுபவித்து எழுதியிருக்கிரார் கவிஞர் .அருமை அருமை
நாட்டுபுற பாடலைப் போல நட்பு என்ற ஒன்றை இவ்வளவு அழகாக யாரும் சொல்லிவிட முடியாது .....மதத்தை , நிறத்தை ,இனத்தை .மொழியை மீறி மனிதனை இணைக்கும் கயிறு நட்பு ....
திருமணம் வரை மிக நெறுக்கமாக தொடரும் நட்பு திருமணத்திற்கு பின் எவ்வாறு நசிந்து போகிறது என்று அனுபவித்து எழுதியிருக்கிரார் கவிஞர் .அருமை அருமை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நண்பா...
@. @. :flower:jasmin wrote:வாழ்துக்கள் பர்த்திபன்
நாட்டுபுற பாடலைப் போல நட்பு என்ற ஒன்றை இவ்வளவு அழகாக யாரும் சொல்லிவிட முடியாது .....மதத்தை , நிறத்தை ,இனத்தை .மொழியை மீறி மனிதனை இணைக்கும் கயிறு நட்பு ....
திருமணம் வரை மிக நெறுக்கமாக தொடரும் நட்பு திருமணத்திற்கு பின் எவ்வாறு நசிந்து போகிறது என்று அனுபவித்து எழுதியிருக்கிரார் கவிஞர் .அருமை அருமை
Re: நண்பா...
வாவ் சூபர் கவிதை பகிர்வுக்கு நன்றி
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: நண்பா...
நட்பைச்
சொல்லும் வரிகளில்
நம் கிராமத்து மண்வாசம்
என்
பால்யத்தையும் சற்று
தட்டி எழுப்பியது
மண்வாசனை நேசம் சொல்லும்
அழகிய வரிகள்
கவிஞருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
சொல்லும் வரிகளில்
நம் கிராமத்து மண்வாசம்
என்
பால்யத்தையும் சற்று
தட்டி எழுப்பியது
மண்வாசனை நேசம் சொல்லும்
அழகிய வரிகள்
கவிஞருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Re: நண்பா...
முனாஸ் சுலைமான் wrote:இதுக்கு எப்படி என்ன எழுத என்று உணமையில் நான் தடுமாறினேன் அப்படி அழகான வரிகள் உண்மைகள் நிஜமான என் சிறு வயது நினைவுகள் அப்படியே கண் முன்னே வந்து நிற்க்கிறது சூப்பரா பேச்சு வழக்கில் இது கிராமத்து தமிழ் போல இருக்கு
வாழ்த்துக்கள்: தோழரே
மிக்க நன்றி தோழரே! உங்கள் பாராட்டுகளுக்கு என் பணிவான நன்றிகள்! :];:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: நண்பா...
jasmin wrote:வாழ்துக்கள் பர்த்திபன்
நாட்டுபுற பாடலைப் போல நட்பு என்ற ஒன்றை இவ்வளவு அழகாக யாரும் சொல்லிவிட முடியாது .....மதத்தை , நிறத்தை ,இனத்தை .மொழியை மீறி மனிதனை இணைக்கும் கயிறு நட்பு ....
திருமணம் வரை மிக நெறுக்கமாக தொடரும் நட்பு திருமணத்திற்கு பின் எவ்வாறு நசிந்து போகிறது என்று அனுபவித்து எழுதியிருக்கிரார் கவிஞர் .அருமை அருமை
உங்கள் வாழ்த்துகளால் உற்சாகம் அடைந்தேன்! மிக்க நன்றி தோழி! :];:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: நண்பா...
mufees wrote:வாவ் சூபர் கவிதை பகிர்வுக்கு நன்றி
நன்றி நண்பரே! :];:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: நண்பா...
செய்தாலி wrote:நட்பைச்
சொல்லும் வரிகளில்
நம் கிராமத்து மண்வாசம்
என்
பால்யத்தையும் சற்று
தட்டி எழுப்பியது
மண்வாசனை நேசம் சொல்லும்
அழகிய வரிகள்
கவிஞருக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
சிறப்புக் கவிஞர் பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி! நன்றி தோழரே! :];:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Re: நண்பா...
நட்பை மையப்படுத்தி அருமையாக கிராமிய பாணியில் வடித்த கவிவரிகள் அத்தனையும் அருமை வாழ்த்துக்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நண்பா...
Atchaya wrote:நடுவுல ஒரு பொண்ணு வந்தா
நட்பு என்ன சாகுமா?
நாக்கினிக்கப் பேசினாலும்
உன் நண்பன் போல ஆகுமா?
நன்றி! நன்றி! நன்றி! :];:
பார்த்திபன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25
Similar topics
» anbukku anbu tharum nanbargalukku.....
» நண்பா உனக்காக சிந்திய வரிகள்
» நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?
» வேண்டாம் நண்பா மௌனம் ...!!!
» வலிக்குதடா நண்பா வலிக்குது
» நண்பா உனக்காக சிந்திய வரிகள்
» நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...?
» வேண்டாம் நண்பா மௌனம் ...!!!
» வலிக்குதடா நண்பா வலிக்குது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum