சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Khan11

நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??

2 posters

Go down

நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Empty நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??

Post by ahmad78 Wed 11 Apr 2012 - 11:38

நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??


ஆடையில் பெரும் புரட்சியாக, நாகரீகத்தின் மிகப்பெரிய மைல்கல்லாக, நீண்டகாலமாக மக்கள் மத்தியில் உலாவி வருவது ஜீன்ஸ் என்றால் மிகையல்ல..அனைத்து தரப்பினராலும் விரும்பி அணியப்படும் இந்த ஆடை ஆரம்பத்தில் கப்பலோட்டிகளையும்,பின் விவசாய நிலங்களில் பணி புரிபவர்களையும்,அதை தொடர்ந்து சுரங்கப்பணிகளில் ஈடுபடுபவர்களையும் பயனாளிகளாகக் கொண்டு, சில காலங்களில் அனைவரும் பயன்படுத்தும் ஆடையாக உருமாறியதை அனைவரும் அறிவோம்.

முதலில் முழுமையான கீழாடையாக வெளிவந்த ஜீன்ஸ் பிற்காலங்களில் நாகரீகத்தை?? தன்னுள் புகுத்திக்கொள்ள பல (ப்)பரீட்ச்சைகளுக்கு ஆளானது.ஆங்காங்கே கிழிசல்கள் உருவாக்கப்பட்டு அதை நவநாகரீகம் எனக் காட்டியது. ஆண்களுக்கு முட்டி, கிரண்டை என அந்த கிழிசல்கள் வரையறுக்கப்பட, அதை அணியும் பெண்களுக்கோ, இடஒதுக்கீடு வேறு இடங்களில்!.முன் பின் தொடைகளில், பின்புறத்தில், என அவை கிழித்தெடுக்கப்பட்டது. ஆணுக்கு முழுநீள ஆடை வழங்கிய நாகரீகம் ஏனோ பெண்ணுக்கு அதை அரைகுறையாக்கி உள்ளாடைக்கு மேலாடையாக்கியதோ தெரியவில்லை.

ஒன்று மட்டும் எனக்கு புலப்பட மறுக்கிறது. நாகரீகம் என்பது மனிதனை தரம் உயர்த்தும், அவனை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்லும் ஒரு படிநிலை என புரிகிறேன். உதாரணமாக, ஆடையில்லாத மனிதன் ஆடை அணிந்தால் அது நாகரீகம்.இதை ஏன் நாம் நாகரீகம் என வகைப்படுத்துகிறோம்? என்ற கேள்வி முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது ஆடையின்றி நிர்வாணியாக, ஆபாசமாக, அநாகரீகமாக அறியப்பட்ட மனிதன் ஆடை கொண்டு அவயங்கள் மறைத்து கண்ணியமாக, இருப்பதால் நாம் இதை நாகரீகம் என வகைப்படுத்துகிறோம்.ஆனால், உடலை மறைப்பதை முதன்மை காரணியாகக் கொண்ட ஆடையே, மறைக்க வேண்டிய அவயத்தை திறந்து காட்டும் மீள்நிலையை நாகரீகப் பட்டியலில் கொண்டுவருவது முரண்.

சரி, முடிந்த மட்டிலும் கிழித்தாகிவிட்டது,கிழித்துக் கிழித்து,கிழிக்கும் நாகரீகமும் கிழிந்து தொங்கிவிடவே, அடுத்தகட்ட நிலையை நோக்கி தன் பரிணாமத்தை உயர்த்திக்கொள்ள நாகரீக உலகு முயல, அதன் வெளிப்பாடாகவே சில ஆண்டுகளாக, கீழாடைகளை இடுப்பில் இருந்து ஒரு அங்குலத்திற்கும் மேலாக, Sorry கீழாக இறக்கி அணிவது என ஒரு மனதாக?!? முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது.

இதிலும் ஆணுக்கு பெண் சலைத்தவர்கள் இல்லை இல்லையா? பெண்களுக்கு ஆடையில் ஆபாசத்தை புகுத்துவது நாகரீக உலகுக்கு அல்வா கிண்டுவது போலென்றால்,அதை அணியும் நவநாகரீக?! நங்கைக்கோ அது அல்வா சாப்பிடுவது போல....

ஒருகாலத்தில் பெண்களின் உள்ளாடை வெளியே தெரிவது ஆபாசமாகப் பார்க்கப்பட்ட நிலையில், இன்றோ அது நாகரீகமாகிப்போனது வெட்கக்கேடு.ஆம் இப்பல்லாம் நாகரீக மங்கைகள் தங்களது உள்ளாடை தெரியும் வண்ணமே மேலாடை அணிகின்றனர். இதில் நாகரீகம் என்ற ஒன்று எங்கே ஒட்டிக்கொண்டுள்ளது எனத் தெரியவில்லை.அவர்கள் எண்ணுவது போல், அழகும் வழியவில்லை. மாறாக ஆபாசமும், வெற்றுக்கவர்ச்சியும், எதிர்பாலினத்தை பாலியல் ரீதியாக ஈர்க்கும் முயற்சியுமே பளிச்சிடுகிறது. இம்மாதிரியான நாகரீக?!? மேம்பாடு மேலாடையோடு நின்றால் போதுமா? கீழாடை என்ன பாவம் செய்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக, நாகரீக மங்கைகளும் இயன்றவரைக்கும் கீழாடையை இறக்கி அணிகின்றனர். இந்த இறக்கம் எதற்காக எனும் மாபெரும் காரணத்தை ஆங்கிலத்தில் சற்றே நாகரீகமாக?? கூகுள் அளித்தது. அதை தமிழில் மொழியாக்க விரும்பவில்லை.

Butt cleavage becomes visible while sitting or bending over.

எதுக்காகவாம்? இந்த எழவு விசிபில் ஆக இருக்கனும்? அற்பமான அடித்தட்டு ரக ஆபாசத்தை இந்த ஆடை வெளிப்படுத்தவில்லையா?. நாகரீகம், முன்னர் கண்ணியமான வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது.ஆனால், இப்போது எதன் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகிறது என்பதை விளக்க, மேற்சொன்ன ஆங்கில வாசகம் போதுமானதாக இருக்கும் என நம்புகிறேன்.

பெண்கள்தான் இப்படி என்றால்? இதையே ஆண்களும் செய்து துலைக்க என்ன கேடுவந்தது என புடிபடவில்லை.ஆம் ஆண்களும் லோ ரைஸ் ஜீன்ஸ் அணிய ஆரம்பித்துவிட்டார்கள். இதன் தனித்தன்மை?! என்னவென்றால் பார்ப்பவர்கள் ”ஐய்யோ எந்த நேரம் அவிழ்ந்து விழுமோ என பதைபதைக்கும் அளவுக்கு கீழே இறக்கி அணிந்து இருப்பர். மேலும் அவர்களின் உள்ளாடை பளிச்சென தெரியும் வண்ணம் இறக்கம் இருக்கும். இதில் அந்த உள்ளாடை எந்த ப்ராண்ட் என்பதில் மேலதிக பெருமை வேறு...

இந்தக்கருமங்களையெல்லாம் யாரும் பார்க்க விரும்புவோமா? ஆனால் அவர்களோ ”ய்யோ யோ.. ட்யூட்... யு வியர் ப்ளேபாய்’ஆ.... கூல்....” என கூவிக்கொள்கிறார்கள்... சரி இந்த எழவு எங்கிருந்து வந்தது என பார்த்தோமேயானால், விலங்குகளில் இருந்து வந்து துளைத்த ஒரு கேவலமான பழக்கம் நாகரீகமாக?!? உருமாறியிருப்பதை விளங்கிக்கொள்ளலாம்.

அதாவது இணைசேர விரும்பும் விலங்குகள் அதை தன் இணைக்கு உணர்த்த பல்வேறு யுக்திகளை பயன்படுத்துவதை நாம் அறிவோம்.வித்தியாசமாக குரல் எழுப்புவது,ஏதேனும் நருமணத்தை பரப்புவது, இதுபோல... இதில் வேறொரு செய்கையும் உண்டு.அதாவது தனது பின்புறத்தை தன் இணைக்கு காட்டி அதை ஈர்க்கும்.இது விலங்குகளுக்கு சரி.
நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  42170031757235827859219
ஆனால், இந்த வித்தையை முன்னர் மேலைநாட்டில் உள்ள சில சிறைக்கைதிகள், தான் உடலுறவு கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தன்னோடு உறவுகொள்ள விரும்புவோர் தன்னை அணுகலாம் என உணர்த்தவும் இப்படி தங்களின் கீழாடையை இறக்கி அணிந்திருக்கிறார்கள். விலங்காய் மாறியகாரணத்தால் கூண்டில் அடைபட்டவன்,மனிதனாய் மாறாமல் முழுவதும் விலங்காகவே மாறியதன் விளைவு இந்த ஈனச்செயல்.

எதைக் கடைப்பிடிப்பதென்ற வகைதொகையற்ற மாக்களோ,வாய் பிளந்தவர்களாக இந்த ஆபாசத்தையும் தனதாக்கிக்கொண்டார்கள். ம்ம்... இது தெரிந்தும் தெரியாமலும், நம்முன்னே அன்றாடம் ஆணோ பெண்ணோ இது போன்ற ஆடைகளுடன் மமதையாக உலாவருவதைக் காணமுடிகிறது. ஆனால் தாங்கள் ஒரு ஐந்தறிவு ஜீவராசியாக மனிதர்கள் மத்தியில் நடமாடுகிறோம் என்பதை அறிவார்களா?...

ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு அடையாளம் உண்டு.காக்கி உடை காவலாளரை உணர்த்தும், கருப்பு அங்கி வழக்கறிஞரை உணர்த்தும் வெள்ளை அங்கி மருத்துவரை உணர்த்தும். அதுபோல இப்படி இறக்கம் தரித்த ஆடை, பாலுறவுக்கு அலையும் வேசிகளை( ஆண்/ பெண்)த் தான் உணர்த்தும்.ஒருவர் முதுகில் பைத்தியம் என யாராவது ஒட்டிவிட்டால், அதை அறியாமல் நாள் முழுக்க சுத்திவருபவரைப் போன்று இவர்கள் இந்த ஆடையின் காரணம் அறியாமல் நாகரீகப் போர்வையில் ஆபாசப்பைத்தியங்களாக அலைகிறார்கள். இந்த ஆபாசக் காரணத்தை அறிந்தபின்பாவது அவர்கள் இம்மாதிரியான ஆடையை புறக்கணிப்பார்களா?...

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் – (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.


– அல் குர்ஆன் 7 : 26

அன்புடன்ரஜின்
http://sunmarkam.blogspot.com/2012/04/blog-post.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??  Empty Re: நாகரீகமே! நீ ஆபாசத்தின் மறு உருவோ??

Post by முனாஸ் சுலைமான் Wed 11 Apr 2012 - 12:23

##* :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum