சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இலங்கையின் அதிவேக வீரன் சப்ரான்... Khan11

இலங்கையின் அதிவேக வீரன் சப்ரான்...

Go down

இலங்கையின் அதிவேக வீரன் சப்ரான்... Empty இலங்கையின் அதிவேக வீரன் சப்ரான்...

Post by ansar hayath Thu 3 Jan 2013 - 20:35

இலங்கையின் அதிவேக வீரன் சப்ரான்... 531979_453471751379896_318387708_n

உலகின் வேகமான மனிதன் யார் என்று கேட்டால் உங்கள் உதடுகள் உஸைன் போல்ட் என உச்சரிக்கும். இலங்கையின் இவ்வாண்டுக்கான அதிவேக மனிதன் யார் என்று தெரியுமா? அவர்தான் வெலி­கம எனும் நக­ரத்­திலே 1985ஆம் ஆண்டு ஜன­வரி 31ஆம் திகதி முஹம்மத் ஷரீப் -- பாத்­திமா நயி­முன்­திஸா தம்­ப­தி­யி­ன­ருக்குப் பிறந்த புதல்­வ­ரான சப்ரான். வெலி­கம, புதிய தெருவில் வசித்து வரும் இந்த வேக மனித தனது கல்­வியைப் பெற்­றுக்­கொண்­டது வெலி­பிட்­டிய சாஹிரா மகா வித்­தி­யா­ல­யத்­தி­லாகும். தற்­போது தேசிய அளவில் சாத­னை­க­ளுக்கு சொந்­தக்­கா­ர­ராக திகழும் சப்ரான், இலங்­கையின் அதி­வேக மனி­த­னாக வளர்ச்சி கண்ட கதை உங்­க­ளுக்குத் தெரி­யுமா? அது 1995ஆம் ஆண்டு. வெலி­பிட்­டிய சாஹிரா மகா வித்­தி­யா­ல­யத்தில் நடை­பெற்ற இல்ல விளை­யாட்டுப் போட்­டி­யே சப்­ரானை ஓட்டப் பாதை­க­ளுடன் தொடர்ந்தும் சங்­க­மிக்கச் செய்­தது என்றால் அது மிகை­யா­காது. இல்ல விளை­யாட்டுப் போட்­டியில் அதீத திற­மை­களை வெளிப்­ப­டுத்­தி­யதன் விளைவு சப்­ரானை அதே ஆண்டு மாவட்ட, மாகாண மட்டப் போட்­டி­க­ளையும் தாண்டி தேசிய ரீதியில் 75 மீற்றர், 100 மீற்றர் போட்­டி­களில் 3ஆம் இடத்தைப் பெற்­றுக்­கொ­டுத்­தது.


இன்று பிர­பல பாட­சா­லை­களில் காணப்­படும் விளை­யாட்டுப் பயிற்சி வச­தி­களில் 10% வசதி கூட இல்­லாத அப்­போ­தைய வெலிப்­பிட்­டிய ஸாஹிரா மகா வித்­தி­யா­லய மாணவன் தேசிய ரீதியில் பிர­கா­சித்­ததன் பின்­ன­ணியின் ரக­சியம் அப்­பா­ட­சா­லையில் கற்­பித்துக் கொண்­டி­ருந்த கலீல், ஹிதாயதுல்லாஹ் மற்றும் ஹரீர் மெள­லானா ஆகிய ஆசி­ரி­யர்கள் தனக்குத் தந்த பயிற்­சி­யென இன்றும் நன்­றி­யுடன் நினைவு கூறு­கிறார். அத்­துடன் பாட­சா­லையின் அதிபர் மற்றும் ஏனைய ஆசி­ரி­யர்­களின் ஆத­ரவு தன்னை மேலும் உற்­சா­கப்­ப­டுத்­தி­ய­தா­கவும் அவர் புள­காங்­கிதம் அடை­கிறார். பாட­சாலை ஆசி­ரி­யர்­களின் பயிற்­சியின் கீழ் தொடர்ந்தும் 1999ஆம் ஆண்­டு­வரை அகில இலங்கை பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான விளை­யாட்டுப் போட்­டி­களில் இறுதிச் சுற்­று­வரை தெரி­வான சப்­ரா­னுக்கு பதக்கம் வெல்ல முடி­யாமல் போனது. இதனால் மேல­திக பயிற்­சிகள் தேவை என்­பதை பாட­சாலை ஆசி­ரி­யர்கள் உணர்ந்ததன் விளைவு அக்­கு­ரஸ்ஸ கல்வி வல­யத்தின் விளை­யாட்­டுக்கள் தொடர்பில் பொறுப்­ப­தி­கா­ரி­யான பண்­டா­ரவின் உத­வி­யுடன் மாத்­தறை மாவட்ட விஷேட விளை­யாட்டுப் பயிற்­சி­யா­ள­ரான சுனில் ஜய­சிங்­கவின் விளை­யாட்டுப் பாச­றையில் மாணவரானார் சப்ரான். இதனைத் தொடர்ந்து சாத­னைகள் சப்­ரானை தேடி வந்­தன. 2000ஆம் ஆண்டு அகில இலங்கை நிறச் சாத­னையை நிலை நாட்­டிய சப்ரான் 2001ஆம் ஆண்டு 200 மீற்றர் ஓட்டப் போட்­டியில் சிறப்புப் பதி­வுடன் கூடிய வெற்­றி­யையும் 100 மீற்­றரில் முதலாம் இடத்­தையும் தன்­ன­கப்­ப­டுத்தி தனது மேல­திகப் பயிற்­சி­களின் பெறு­பேரை வெளிப்­ப­டுத்­தினார்.



இதனால் 2002ஆம் ஆண்டு தாய்­லாந்தின் பாங்கொக் நகரில் நடை­பெற்ற ஆசிய கனிஷ்ட மெய்­வல்­லுனர் போட்­டி­களில் கலந்­து­கொள்ளும் வாய்ப்பு சப்­ரா­னுக்கு கிடைத்­தது. இதனை விட 2003ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை­யான காலப் பகு­திக்குள் தேசிய பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான விளை­யாட்டுப் போட்­டி­களில் முதலாம் இடம் என்­பது 100M இலும், 200Mஇலும் சப்­ரா­னுக்­கா­கவே எழுதி வைக்­கப்­பட்­டதைப் போல தொடர்ந்தும் சொந்­த­மா­னது.இக்­காலப் பகு­திக்குள் ஓடு­வ­தற்குத் தேவை­யான பாத­ணிகள் மற்றும் உற்­சா­கங்­களை பல்­வேறு தரப்­பினர் வழங்­கி­ய­தாக நினைவு கூறும் வேகப்புயல் சப்ரான் தனது உற­வி­னர்­க­ளையும் பாட­சா­லையின் பழைய மாணவன் வாசிக், தான் கொழும்பு வந்த போது பயிற்சி காலத்தில் சில­காலம் அனு­ச­ரணை வழங்­கிய ரிஸ்மி ஹாஜியார் மற்றும் தங்­கு­வ­தற்கு இடம் வழங்­கிய ஹூசைன் ஹாஜியார் ஆகி­யோ­ரையும் தான் மறக்­க­வில்­லை­யென வாய் மலர்­கிறார். 2006ஆம் ஆண்டு கொழும்பில் நடை­பெற்ற தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்­டி­களில் 100M அஞ்­ச­லோட்டப் போட்­டியில் களம் காணும் வாய்ப்பு சப்­ரா­னுக்குக் கிடைத்­தது. அதன் விளைவு அவரை இரா­ணுவ விளை­யாட்டுப் பிரிவு ஒப்­பந்தம் செய்­யு­ம­ளவில் கொண்டு போய்­விட்­டது. குறித்த போட்­டி­களின் முடிவில் பல்­வேறு கழ­கங்­க­ளி­லி­ருந்தும் சப்­ரா­னுக்கு அழைப்பு வந்த போதும் அவர் இரா­ணுவ விளை­யாட்டுப் பிரி­வையே சிறந்­தது என தேர்ந்­தெ­டுத்தார். இப்­ப­டி­யான ஒரு வேகப்­புயல் எமது சமூ­கத்தில் உள்­ளதை நாம் கண்டு கொண்­டது அண்­மையில் நிறை­வ­டைந்த 38ஆவது தேசிய விளை­யாட்டுப் போட்­டி­க­ளி­லாகும். குறித்த விளை­யாட்டு விழாவில் 100M ஓட்டப் போட்­டியில் 10.64 செக்­கன்கள் என்ற இலங்­கைக்­கான சாத­னையை தன்­ன­கப்படுத்திய வேகமனிதன் சப்ரான், அடுத்த வருடம் இந்­தி­யாவில் நடை­பெறும் சார்க் விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்­கையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தப் போகிறார்.இந்­நி­லையில் இன்று நாம் வாழும் நாட்டில் பெரும்­பான்மை சமூ­கத்­த­வர்­களின் மனதில் பதிந்­துள்ள பிழை­யான பதி­வு­களை அழித்து சரி­யான நல்ல பதி­வு­களை ஏற்­ப­டுத்த சப்ரான் ஒரு துரும்பு என்றால் அது மிகை­யா­காது.



ஏனெனில் முஸ்­லிம்­களால் இந்­நாட்­டுக்கு பெருமை சேர்க்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தனை நாம் எடுத்­துக்­காட்ட வேண்­டிய ஒரு கட்­டா­யத்தில் உள்ளோம்.எனினும் எமது சமூகம் விளை­யாட்டு தொடர்பில் கவனம் மற்றும் அக்­க­றை­யற்றும் இருப்­பது கவ­லைக்­கு­ரி­யது. சாத­னைகள் பல படைக்க திற­மையை தன்­ன­கத்தே கொண்­டுள்ள சப்­ரா­னுக்கு தற்­போது உள்ள பிரச்­சினை ஒரு அனு­ச­ர­ணை­யே. கல்­விக்கும் இதர பல விட­யங்­க­ளுக்கும் அனு­ச­ரணை வழங்கும் பல வள்­ளல்கள் உள்ள எமது சமூ­கத்தில் ஒரு சாத­னை­யா­ள­ருக்கு அனு­ச­ரணை வழங்க யாரும் இல்­லையா என எண்ணத் தோன்­று­கி­றது. சமூ­கத்­துக்கும் நாட்­டுக்கும் பெருமை சேர்க்கப் போகும் சப்­ரானின் சாதனைப் பய­ணத்தில் கைகோர்த்து அவரின் தற்­போ­தைய தேவைகளான சில முக்கிய விட்டமின் வகைகள் மற்றும் R-4 உயர்ரக வகையிலான பாதணிகள் போன்றவற்றை பெற்றுக்கொடுக்க சமூகத் தலைமைகள் முன்வர வேண்டும். குடும்பத்தையும் பராமரித்துக் கொண்டு தற்போது கொழும்பிலுள்ள இலங்கை மெய்வல்லுனர் தங்குமிடத்தில் தங்கியிருந்து பயிற்சிகளைத் தொடர்ந்து வருகிறார். சிறப்பு விளையாட்டுப் பயிற்சியாளரான சுனில் குணவர்த்தனவிடம் பயிற்சிகளை தொடரும் சப்ரான் 2012ஆம் ஆண்டின் இலங்கையின் வேகமான விளையாட்டு வீரன் என்பதை மறந்து விடாதீர்கள்.

fb (nalla nanpan)
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum