சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இந்தியணி தோல்வி. ஜாம்ஷெத் சதம். தொடரை வென்ற பாகிஸ்தான்... Khan11

இந்தியணி தோல்வி. ஜாம்ஷெத் சதம். தொடரை வென்ற பாகிஸ்தான்...

Go down

இந்தியணி தோல்வி. ஜாம்ஷெத் சதம். தொடரை வென்ற பாகிஸ்தான்... Empty இந்தியணி தோல்வி. ஜாம்ஷெத் சதம். தொடரை வென்ற பாகிஸ்தான்...

Post by ansar hayath Fri 4 Jan 2013 - 6:39



சொந்த மண்ணில் இந்திய அணியின் சோகம் தொடர்கிறது. பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோல்கட்டா ஒருநாள் போட்டியில் 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஜாம்ஷெத்தின் அபார சதம் கைகொடுக்க, பாகிஸ்தான் அணி தொடரை 2-0 என, வென்றது.

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது போட்டி நேற்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.

“டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் தோனி, “பீல்டிங்’ தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு பதில் ரவிந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

அபார துவக்கம்:
பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹபீஸ், ஜாம்ஷெத் இணைந்து அபார துவக்கம் கொடுத்தனர். டிண்டா ஓவரில் பவுண்டரி அடித்த ஜாம்ஷெத், புவனேஷ்வர் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகள் விளாசினார். ஹபீஸ் தன்பங்கிற்கு டிண்டா பந்துகளில் பவுண்டரிகளாக விளாச, ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.

ஹபீஸ், ஒருநாள் கிரிக்கெட்டில் 15வது அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 23.5 ஓவரில் 141 ரன்கள் சேர்த்த போது, ஹபீஸ் (76) ஜடேஜா சுழலில் வீழ்ந்தார்.

திடீர் திருப்பம்:
அசார் அலி (2), அனுபவ யூனிஸ் கான் (10), கேப்டன் மிஸ்பா (2) நிலைக்கவில்லை. இதன் பின் பாகிஸ்தான் அணியின் ரன்வேகம் குறைந்தது. டிண்டா பந்துகளில் 2 சிக்சர் அடித்த ஜாம்ஷெத், தனது 3வது சதம் அடித்தார். தவிர, இது, இத்தொடரில் தொடர்ந்து அடித்த இரண்டாவது சதம்.

தனது 9வது ஓவரை வீசிய ஜடேஜா, முதல் பந்தில் ஜாம்ஷெத்தை (106) வெளியேற்றினார். 3வது பந்தில் கம்ரான் அக்மலை “டக்’ அவுட்டாக்கினார். சோயப் மாலிக்கை (24), இஷாந்த் திருப்பி அனுப்பினார். சயீத் அஜ்மல் (7) ரன்கள் எடுத்தார்.

உமர் குல்லை (17) போல்டாக்கிய இஷாந்த் சர்மா, முகமது இர்பானை “டக்’ அவுட்டாக்கினார். கடைசி நேர தடுமாற்றத்தால் பாகிஸ்தான் அணி 48.3 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா, ரவிந்திர ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
மீண்டும் ஏமாற்றம்:
சுலப இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு மீண்டும் “டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். பொறுப்பற்ற “ஷாட்’ அடித்து விக்கெட்டுகளை வீணாக பறிகொடுத்தனர். டெஸ்ட் போல படுமந்தமா ஆடிய காம்பிர் 25 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து போல்டானார். விராத் கோஹ்லி (6) கம்ரான் அக்மலின் அசத்தல் ‘கேட்ச்சில்’ வெளியேறினார்.

இர்பான், ஜுனைடு பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிய சேவக்(31), உமர் குல்லின் வேகத்தில் அவுட்டானார். யுவராஜ் சிங் 9 ரன்னில் அவுட்டாக, இந்திய அணி 70 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ரெய்னா “அவுட்’:
தோனி, ரெய்னா இணைந்து கடந்த முறை போல, அணியை மீட்பர் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கேற்ப, ஒன்றும் இரண்டுமாக ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில், ரெய்னா (18) துரதிருஷ்டவசமாக “ஸ்டம்டு’ ஆனார். பந்துகளை வீணடித்த அஷ்வின் 3 ரன்னில் (22 பந்து) வெளியேற, இந்திய அணி மீள முடியாத சோகத்தில் ஆழ்ந்தது.

தோனி அரைசதம்:
வழக்கம் போல் “பேட்டிங்கில்’ சொதப்பிய ஜடேஜா (13), அஜ்மல் “சுழலில்’ சிக்கினார். இதே ஓவரில் புவனேஷ்வர் (0), டிண்டாவும் (0) வெளியேறினர். மீண்டும் ஒருமுறை தனிநபராக போராடிய கேப்டன் தோனி, ஜுனைடு ஓவரில் 3 பவுண்டரி விளாசி, அரைசதம் எட்டி ஆறுதல் அளித்தார். இஷாந்த் சர்மாவும் (2) போல்டாக, இந்திய அணி 48 ஒவரில், 165 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 85 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோனி(54) அவுட்டாகாமல் இருந்தார்.

பாகிஸ்தான் சார்பில் சயீத் அஜ்மல், ஜுனைடு கான் தலா 3, உமர் குல் 2 விக்கெட் வீழ்த்தினர்.
ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தற்போது பாகிஸ்தானுடான ஒருநாள் தொடரையும் 2-0 என பறிகொடுத்துள்ளது.

முக்கியத்துவமில்லாத மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 6ம் தேதி டில்லியில் நடக்கிறது.

வீரர்களுக்கு கவுரவம்:
கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் 1987ல் முதல் ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் போட்டி நடந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் முன்னாள் கேப்டன்கள் நேற்று கவுரவிக்கப்பட்டனர்.

கவாஸ்கர், கபில்தேவ், கங்குலி, கும்ளே, வெங்சர்க்கார், ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி, லட்சுமண், வாசிம் அக்ரம், இன்திகாப் ஆலம் உள்ளிட்ட 19 வீரர்கள் பலர் அலங்கரிக்கப்பட்ட திறந்த “ஜீப்பில்’ இவர்கள் மைதானத்தை வலம் வந்தனர். இவர்களுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நினைவுப் பரிசும், தலா ரூ. 1 லட்சமும் வழங்கினார்.

ஆதிக்கம் தொடர்கிறது:
கோல்கட்டா மண்ணில் பாகிஸ்தான் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. இந்தியாவுக்கு எதிராக 1987, 1989, 2004ல் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற இந்த அணி, நேற்று தொடர்ந்து நான்காவது முறையாக இந்தியாவை வீழ்த்தியது.

* தவிர, கோல்கட்டா மண்ணில் பங்கேற்ற 6 போட்டிகளில், 5ல் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

தொடரும் அவமானம்...
இந்திய அணி கடந்த 2012 துவக்கத்தில் இருந்து அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இதன் விவரம்:
* ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் (0-4), முத்தரப்பு தொடரில் தோல்வி
* ஆஸ்திரேலியாவுடன் “டுவென்டி-20′ தொடர் “டிரா’ (1-1).
* ஆசிய கோப்பையில் ஏமாற்றம்
* “டுவென்டி-20′ உலக கோப்பை தொடரில் “அவுட்’
* சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடரை இழந்தது (1-2).
* “டுவென்டி-20′ தொடரில் இங்கிலாந்துடன் சமன் (1-1).
* பாகிஸ்தானுடன் “டுவென்டி-20′ தொடர் “டிரா’ (1-1).
* பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் தோல்வி (0-2)

“ஹாட்ரிக்’ சதம்:
பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர் நாசிர் ஜாம்ஷெத், நேற்று சர்வதேச ஒருநாள் அரங்கில் மூன்றாவது சதத்தை பதிவு செய்தார். கடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவுடன் (தாகா, 2012, மார்ச்), முதல் சதம் (112) அடித்தார் ஜாம் ஷெத். தற்போதைய சென்னை (101), கோல்கட்டாவிலும் (106) அசத்தி, இந்தியாவுக்கு எதிராக “ஹாட்ரிக்’ சதத்தை பதிவு செய்தார்.

“விளையாடு அல்லது வெளியேறு’:
இந்திய அணியின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க, பி.சி.சி.ஐ., அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பழம்பெருமைகளை பேசிக் கொண்டு, அணியில் ஒட்டிக் கொண்டிருக்கும் “விளையாடாத’ சீனியர் வீரர்களை நீக்கி விட்டு, ரகானே, ராயுடு போன்ற இளம் பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

ஓயாத போட்டிகளும் வீழ்ச்சிக்கு ஒரு காரணம். இதனை தவிர்க்கும் பொருட்டு டெஸ்ட், ஒருநாள் போட்டி, “டுவென்டி-20′ என ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி அணியை உருவாக்கலாம். கேப்டன் தோனி மட்டும் தனிநபராக நின்று அனைத்து போட்டிகளிலும் வெற்றி தேடித் தர இயலாது. பகையை மறந்து அனைத்து வீரர்களும் நாட்டுக்காக ஒற்றுமையுடன் விளையாடினால் தான், அடுத்து நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலாவது சாதிக்க முடியும்.

145 “கேமரா’ கண்காணிப்பு:
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டம் கொடி கட்டிப் பறக்கும். இதனை உணர்ந்து ஐ.சி.சி., ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையத்தின்(ஏ.எஸ்.ஏஸ்.யு.,) சார்பில் நேற்று பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் முறையாக 145 “சிசிடிவி’ “கேமராக்கள்’ பொருத்தப்பட்டிருந்தன. பொதுவாக 129 “கேமராக்கள்’ தான் பொருத்தப்படும்.

இது குறித்து பெங்கால் கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில்,”"ஈடன் கார்டன் மைதானம் முழுவதும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இரு அணி வீரர்களின் “டிரஸ்சிங் ரூமில்’ தலா 8 கேமராக்கள் பொருத்தப்பட்டன. பத்திரிகையாளர் அறை உட்பட அனைத்து இடங்களிலும் “கேமரா’ பொருத்தப்பட்டன. வழக்கமாக ஏ.எஸ்.ஏஸ்.யு., அமைப்பை சேர்ந்த ஒருவர் தான் போட்டிக்கு பொறுப்பு ஏற்பார். இம்முறை 3 பேர் கொண்ட குழு போட்டியை கண்காணித்தது,”என்றார்.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum