சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாம்பழ குல்ஃபி
by rammalar Today at 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41

» மோர்க்களி
by rammalar Today at 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

 இரண்டாம் உலகப்போர்: ஜப்பான் சரணாகதி  Khan11

இரண்டாம் உலகப்போர்: ஜப்பான் சரணாகதி

Go down

 இரண்டாம் உலகப்போர்: ஜப்பான் சரணாகதி  Empty இரண்டாம் உலகப்போர்: ஜப்பான் சரணாகதி

Post by *சம்ஸ் Sun 17 Feb 2013 - 7:59

 இரண்டாம் உலகப்போர்: ஜப்பான் சரணாகதி  841824c4-1b61-4eb5-8d47-0734cd47d7fd_S_secvpf

போரின்போது ஜப்பானிய மன்னராக இருந்தவர் ஹிரோ ஹிட்டோ. அவர் போரை
விரும்பவில்லை. என்றாலும், அவரைக் கேட்காமல் அமெரிக்காவின் பெர்ல்
துறைமுகத்தைத் தாக்கி, அமெரிக்காவை வலுச்சண்டைக்கு இழுத்தவர் பிரதமர் டோஜோ.
போரில் ஜப்பான் ஈடுபட அவரே காரணம்.

போரில் ஜப்பானுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைத்தபோது, அவரை ஜப்பான் மக்கள்
புகழ்ந்தனர். ஆனால் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தபோது, மக்களின்
வெறுப்புக்கு உள்ளானார். ஜப்பான் மீது அணுகுண்டுகள் வீசப்பட்டதைத்
தொடர்ந்து, மன்னர் ஹிரோஹிட்டோ மனம் கலங்கினார். 1945 ஆகஸ்டு 9-ந்தேதி
ஜப்பான் வானொலி மூலம், தனது சரணாகதியை அறிவித்தார்.

ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசியது வாழ்நாளில் இதுவே முதல் தடவை.
அதுமட்டுமல்ல நேச நாடுகளின் சேனாதிபதியாக இருந்து போரை நடத்திய அமெரிக்க
தளபதி மக்ஆர்தரைச் சந்தித்து "போருக்கு முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்"
என்றார்.
ஜப்பானிய தளபதிகள், அமெரிக்காவின் "மிசவுரி" என்ற போர்க்கப்பலுக்குச்
சென்றார்கள். அங்கு அமெரிக்காவின் பிரதம தளபதி மக்ஆர்தர் இருந்தார்.

அவரிடம், சரணாகதி பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுத்தனர். ஏற்கனவே ஹிட்லர்
தற்கொலை செய்து கொண்டதால், ஐரோப்பாவில் போர் முடிந்துவிட்டது. இப்போது
ஜப்பான் சரண் அடைந்ததைத் தொடர்ந்து உலகப்போர் முடிந்தது.
போருக்கு ஜப்பான் பிரதமர் டோஜாதான் காரணம் என்பது நேச நாடுகளுக்குத்
தெரியும்.

அவரைக் கைது செய்யத் தளபதிகள் சென்றபோது, அவர் துப்பாக்கியால்
சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொள்ள முயன்றார். என்றாலும் அவர் முயற்சி
தோல்வி அடைந்தது. நேசப் படைகளால் கைது செய்யப்பட்டார். அணுகுண்டு
வீசப்பட்டதும், ஜப்பான் மன்னர் ஹிரோஹிட்டோ, அமெரிக்க தளபதி மக்ஆர்தரை
சந்தித்து, ஜப்பான் சரண் அடைவதாக தெரிவித்தார்.

விசாரணையின்போது, டோஜோ "போருக்கு நான்தான் காரணம்; மன்னர் நிரபராதி" என்று
கூறினார்.
டோஜோ குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.
1948 டிசம்பர் 23-ந்தேதி டோஜோவும், மற்றும் சில ஜப்பான் ராணுவ அதிகாரிகளும்
தூக்கிலிடப்பட்டனர். இரண்டாவது உலகப் போரில் ஏற்பட்ட சேதம் எவ்வளவு என்று
யாராலும் சரியாகக் கணக்கிட இயலவில்லை.

போர் வீரர்களும், பொதுமக்களும் மொத்தம் 5 கோடிப்பேருக்கு மேல் பலியானதாக
மதிப்பிடப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான போர்க்கப்பல்களும், போர்
விமானங்களும் அழிந்தன. நாசமான நகரங்களுக்கு கணக்கே இல்லை. அணுகுண்டு
வீச்சினால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைவிட
மிக அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ஏனெனில் படுகாயம் அடைந்த பலர், சில நாட்களில் மரணம் அடைந்தனர். ஹிரோஷிமா
நகரில் உள்ள கல்லறைகளில், இறந்தவர்களின் 1,38,890 பெயர்கள்
பொறிக்கப்பட்டுள்ளன.
அணுகுண்டுகள் வெடித்த போது ஏற்பட்ட கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டு பார்வை
இழந்தவர்கள், உடல் வெந்து கருகிப் போனவர்கள் பல லட்சம் பேர்.


போர் டைரி 1944........


ஜன. 2: நியூகினியாவை அமெரிக்கா கைப்பற்றியது.


ஜன. 27: ஜெர்மனி ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட லெனின் கிராட் மீட்கப்பட்டது.


பிப். 16: சில இடங்களில் ஜப்பானிய ராணுவத்தை அமெரிக்க ராணுவம் தோற்கடித்தது.



பிப். 17: கானேவ் என்ற இடத்தில், ஜெர்மன் ராணுவத்தின் 10 டிவிஷன்களைச் சேர்ந்தவர்களை ரஷிய ராணுவம் சிறை பிடித்தது.


பிப். 20: ஜெர்மனி மீது பெரும் தாக்குதலை நேசப்படைகள் தொடங்கின.


பிப். 26: இந்த பெரும் தாக்குதலில் ஈடுபட்ட அமெரிக்க விமானப்படை வீரர்கள் 2,600 பேர் கொல்லப்பட்டனர்.


மார்ச். 18: ஹங்கேரி நாட்டை ஜெர்மனி கைப்பற்றியது.


மார்ச். 24: பெர்லின் மீது விமானத் தாக்குதல் நடத்திய நேச நாடுகளின்
விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால் 392 விமானப்படை வீரர்கள்
கொல்லப்பட்டனர்.


மார்ச். 28: ஜெர்மன் சிறையிலிருந்து தப்ப முயற்சித்த நேசப்படை வீரர்கள் 47 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


ஏப். 4: இந்தியாவில் உள்ள கோஹிமாவை ஜப்பானிய ராணுவம் தாக்கியது.


ஏப். 9: ஜப்பான் கைப்பற்றியிருந்த பர்மாவுக்குள், நேசப்படை வீரர்கள் 'பாரசூட்' மூலம் குதித்தனர்.


ஜுன் 4: ரோம் நகருக்குள் நேசப்படைகள் நுழைந்தன.


ஜுன் 5: இத்தாலி மன்னர் விக்டர் இம்மானுவேல் முடிதுறந்தார்.


ஜுன் 7: பெல்ஜியம் மன்னர் லியோ போல்டு கைது செய்யப்பட்டார்.


ஜுன் 13: இங்கிலாந்து நாட்டை தாக்க வந்த ஜெர்மனி விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.


ஜுன் 28: போப்ரூயிஸ்க் என்ற இடத்தில் நடந்த போரில் 34,000 ஜெர்மனி வீரர்கள் உயிர் இழந்தனர்.


ஜுலை 3: மின்ஸ்க் என்ற இடத்தில் நடந்த போரில் ஜெர்மனியை ரஷியா
தோற்கடித்தது. அங்கு 1 லட்சம் ஜெர்மனி ராணுவத்தினர், ரஷியாவிடம் யுத்தக்
கைதிகளாகப் பிடிபட்டனர்.


ஜுலை 18: ஜப்பான் பிரதமர் டோஜோ ராஜினாமா செய்தார்.


ஜுலை 30: பர்மாவில் 'மியிட்கினா' என்ற இடத்திலிருந்து ஜப்பான் படைகள் வெளியேறின.


ஆக. 2: இங்கிலாந்து நாட்டில், ஜெர்மனி விமானத் தாக்குதலால்


ஜுன் 13 முதல் இதுவரை 5,000 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது.


ஆக. 8: போலந்து நாட்டில் வார்சாவில் நடந்த போரில் போலந்தை சேர்ந்த 50 ஆயிரம் பேர் மாண்டனர்.


ஆக. 15: பிரான்ஸ் தென்பகுதியில் நேசப் படைகளின் விமானப் படையினர் ஆயிரக்கணக்கில் இறங்கினர். பாரீஸ் மீட்பு

ஆக. 25: ஜெர்மனி பிடியில் இருந்து, பாரீஸ் விடுவிக்கப்பட்டது.


செப். 2: பெல்ஜியத்துக்குள் பிரிட்டிஷ் படை நுழைந்தது.


செப். 6: யூகோஸ்லேவியா நாட்டுக்குள் ரஷியப்படை நுழைந்தது.


செப். 21: பிலிப்பைன்ஸ் நாட்டின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு வீசின.


அக். 7: ஹிட்லருக்கு எதிராக யூதர்கள் பெரும் கிளர்ச்சி செய்தனர். யூதர்களை விஷ வாயு மூலம் படுகொலை செய்யும் இடங்கள் அழிக்கப்பட்டன.


அக். 18: செக் நாட்டுக்குள் ரஷியாவின் செம்படைகள் புகுந்தன.


அக். 19: யூகோ தலைநகர் பெல்கிரேடை ரஷியப்படைகள் கைப்பற்றின.


அக். 20: ஒரு லட்சம் ராணுவத்தினருடன் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குள் நேசப்படைகளின் தளபதி மக் ஆர்தர் புகுந்தார்.

நவ. 4: அமெரிக்க ஜனாதிபதியாக நான்காவது முறையாக ரூஸ் வெல்ட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


நவ. 19: பர்மாவை ஜப்பானிடம் இருந்து மீட்க இங்கிலாந்து படைகள் பெருந்தாக்குதல் நடத்தின.


நவ. 20: யுத்தம் காரணமாக லண்டனில் இருந்த "இருட்டடிப்பு" முறை (இரவில் விளக்குகளை அணைத்து விடுவது) நீக்கப்பட்டது.

நவ. 25: ஜப்பானின் சரக்கு கப்பலை பிரிட்டனின் நீர்மூழ்கி கப்பல் தகர்த்தது.


டிச. 1: அமெரிக்காவின் முதலாவது "ஐந்து நட்சத்திர" அந்தஸ்து தள பதியாக ஐசனோவர் பொறுப்பு ஏற்றார்.


டிச. 4: ஜெர்மனி நகரங்கள் மீது பிரிட் டிஷ் விமானங்கள் குண்டு வீசின.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum