சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

சென்னை மண்ணடி பகுதியில் மெட்ரோ ரெயிலுக்கு சுரங்கம் தோண்டியபோது கட்டிடங்களில் திடீர் விரிசல் Khan11

சென்னை மண்ணடி பகுதியில் மெட்ரோ ரெயிலுக்கு சுரங்கம் தோண்டியபோது கட்டிடங்களில் திடீர் விரிசல்

2 posters

Go down

சென்னை மண்ணடி பகுதியில் மெட்ரோ ரெயிலுக்கு சுரங்கம் தோண்டியபோது கட்டிடங்களில் திடீர் விரிசல் Empty சென்னை மண்ணடி பகுதியில் மெட்ரோ ரெயிலுக்கு சுரங்கம் தோண்டியபோது கட்டிடங்களில் திடீர் விரிசல்

Post by *சம்ஸ் Sun 10 Mar 2013 - 7:45

சென்னை மண்ணடி பகுதியில் மெட்ரோ ரெயிலுக்கு சுரங்கம் தோண்டியபோது கட்டிடங்களில் திடீர் விரிசல் 5345ac51-1335-4cba-8eb6-53baf9d25995_S_secvpf
சென்னை, மார்ச்.10-

சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்டிரல் முதல் பரங்கிமலை வரை ஒரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

2 வழித்தடங்களிலும் சேர்த்து மொத்தம் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைய உள்ளது. இதில், 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு பூமிக்கு அடியில் சுமார் 20 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரெயில் சுரங்க பாதை அமைய உள்ளது.

இதற்காக, சீனாவில் இருந்து ராட்சத வடிவிலான டனல் போரிங் எந்திரங்கள் 11 எண்ணிக்கையில் வாங்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களைக்கொண்டு, வண்ணாரப்பேட்டை, மே தினப்பூங்கா, கீழ்ப்பாக்கம் நேரு பூங்கா உள்பட ஒருசில பகுதிகளில் சுரங்க ரெயில் பாதை அமைக்கப்பட்டு வருகின்றன.

வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை அமைய உள்ள மெட்ரோ ரெயில் பாதையில், சைதாப்பேட்டை வரை பூமிக்கு அடியிலேயே சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இதுவரை, 2 வழித்தடங்களிலும் சேர்த்து 1400 மீட்டர் தூரத்திற்கு சுரங்க ரெயில் பாதை தோண்டப்பட்டுள்ளது. தொடர்ந்து விரைவாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த சில மாதங்களாக பிராட்வே மண்ணடி பகுதியில் பூமிக்கு அடியில் 17 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, டனல் போரிங் எந்திரம் மூலம் பூமி துளையிடப்படுகிறது. நேற்று காலை மண்ணடி மீரான் லெப்பை தெருவில் உள்ள வீடுகளில் சில திடீரென அதிர்ந்தன. இதனால், வீடுகளில் இருந்தவர்கள் பூமி அதிர்ச்சியாக இருக்குமோ? என்ற பயத்தில் வெளியே ஓடிவந்தனர். ஒருசில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்ததும் மெட்ரோ ரெயில் உயர் அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போதுதான், அந்த பகுதியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுவது தெரியவந்தது.

உடனடியாக, அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலிலும், 3 குடியிருப்புகளில் இருந்த பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர். மேலும், மீரான் லெப்பை தெரு வழியாக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. வீதிக்கு சீல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து, அப்பகுதியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கட்டிடங்களை கிராக் மீட்டர் கொண்டு கண்காணித்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, மெட்ரோ ரெயில் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, மண்ணடி பகுதியில் மட்டும்தான் குடியிருப்புகளுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இன்னும் 2 நாளில் இந்த பகுதியின் அடியில் பாதை அமைக்கும் பணி கடந்து சென்றுவிடும். அதுவரை விரிசல் ஏற்பட்ட குடியிருப்பில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படுவார்கள். அதன்பிறகு, கட்டிடங்களில் ஏற்பட்ட விரிசல் சரிசெய்து கொடுக்கப்படும் என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சென்னை மண்ணடி பகுதியில் மெட்ரோ ரெயிலுக்கு சுரங்கம் தோண்டியபோது கட்டிடங்களில் திடீர் விரிசல் Empty Re: சென்னை மண்ணடி பகுதியில் மெட்ரோ ரெயிலுக்கு சுரங்கம் தோண்டியபோது கட்டிடங்களில் திடீர் விரிசல்

Post by பானுஷபானா Sun 10 Mar 2013 - 10:50

அச்சோ என்னய்யா பண்றிங்க நல்லது பண்றேனு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics
» மெட்ரோ ரயில் சுரங்கம் தோண்ட, சீன இன்ஜினியர்கள்
» திருவெண்ணைநல்லூர் அருகே தண்டவாளத்தில் திடீர் விரிசல்: அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது
» சென்னை மெட்ரோ ரயில் திட்டம் - சில தகவல்கள்
» சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு: உணவு எடுத்துச்சென்ற வேனில் திடீர் தீ விபத்து
» யுகாதி, தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை மெட்ரோ ரயிலில் இன்று, நாளை கட்டணத்தில் 50% தள்ளுப்படி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum