சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

பாலாவின் பரதேசி - விமர்சனம் Khan11

பாலாவின் பரதேசி - விமர்சனம்

2 posters

Go down

பாலாவின் பரதேசி - விமர்சனம் Empty பாலாவின் பரதேசி - விமர்சனம்

Post by Muthumohamed Fri 15 Mar 2013 - 21:39

தமிழ் சினிமா வரலாற்றில், ஏன் இந்திய சினிமா வரலாற்றில் திரைப்பட கலையின்உச்சகட்டத்தை தொட்ட மிகச்சில படங்களில் இந்த பரதேசியும் ஒன்று.
தமிழர்களாகிய நாம் தினம் தினம்3 முறை, 6 முறை அதுக்கும் மேலே என இஷ்டத்துக்கு அருந்தும் டீ-க்குப் பின்னால், அது எப்படி நம்மீது திணிக்கப்பட்டது.. அதற்காக அப்பாவி ஏழை மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள்.. எப்படி வஞ்சிக்கப்பட்டார்கள் என்ற ஒரு கதை இருக்கிறது என்பதே மிரட்சியாய் இருக்கிறது.

ஒரு வருமானமில்லாத சுதந்திரமான ஏழைகளாய் ஆட்டம்,பாட்டம், கேலி கூத்து என வாழ்ந்தவர்கள் வருமானத்தை தேடும் சூழ்நிலையில் எப்படி கொஞ்சம் கொஞ்சமாய் கொடூரமாய் கொத்தடிமைகளாய் மாற்றப்பட்டார்கள் என்பதை ஒரு நெஞ்சைக் கசக்கிப்பிழியும் அனுபவமாய் தருகிறார் பாலா.

கஷ்டப்படும் ஏழைகளுக்கு வேலை தரும் பெரிய மனிதர் கருங்காணியாய் வரும் அந்த நடிகரின் சிரிப்பில் துவங்குகிறது அந்த பச்சைத் துரோகம். 48 நாட்களாய் நடந்துடீ எஸ்டேட்டுக்குபோகும் அந்த பயணமும் அதன் பின்னனியில் வரும் பாடல் வரிகளும் பஞ்சம் பிழைக்கப் போவதன்வேதணையை அப்பட்டமாய் காட்டுகின்றன. அதனைத் தொடர்ந்துவரும் அடுத்தடுத்த ஒவ்வொரு நிமிடமும் நம்மை உலுக்கும் காட்சிகள். டீ எஸ்டேட்டுக்கு வந்துவிட்டோம்.
இனி எல்லாம் நல்லபடியாய் இருக்கும் என்ற அவர்களின் நம்பிக்கையில் கொஞ்சம் கொஞ்சமாய் ஊற்றப்படும் விஷம் தான் மொத்தக்கதையும். அதை விவரிப்பது நியாயமில்லை. பார்த்தால் மட்டுமே அந்த அனுபவம் புரியும்.

ஒரு சிறந்த படம் ரசிகனை என்ன செய்துவிட முடியும்? பார்ப்பவனை கதைக்குள் இழுந்து, உணர்வுகளை உள்வாங்கச்செய்து, நெஞ்சைப் பிழிந்து, கலங்கடித்து, அந்தக்கதையின் வாழ்க்கையை நாமும் வாழ்வதைப்போன்ற ஒரு அனுபவத்தைக் கொடுத்து.. அந்த சுக துக்கங்களை நம்மையும் உணரச்செய்து.. நாம் இதுவரை அலட்சியமாய் இருந்த சில விசயங்களையும் நமக்கு உணர்த்தி,சில நேரங்களில் நம்மை நாமே கேள்வி கேட்க வைத்து, போகப்போகஎந்தக் கேள்வியும் இல்லாமல் படத்தை மெய்மறந்து பார்க்கும் அனுவத்தைக் கொடுக்கும். அப்படி ஒரு படத்தை எடுக்க மிகச்சிறந்த ஒரு கலைஞனால் தான் முடியும். அவர்தான் பாலா. நான் கடவுள், அவன் இவன் போன்ற படங்களில் சற்று கீழே இறங்கியிருந்த பாலா இந்த பரதேசிமூலம் சிம்மாசனத்தில் ஏறியமர்கிறார்.

உலகத்தரமான படமென்றால் அது ஏதோ ஹாலிவுட் படங்களின் லொகேசன்களையும், ஷாட்களையும், அவர்களின் கருத்துக்களையும் காப்பியடித்து ஒப்பிப்பதில்லை.. நம் கதையை படமாக்கி அதை உலகமே பார்க்கச்செய்வது என கமலஹாசனுக்கும் பாடம் எடுக்கிறார் இந்தபாலா.
அத்தனை நடிகர்களும் நடிப்பை பற்றி நினைப்பேயில்லாமல் படம் பார்க்க வைக்கிறார்கள். செழியனின் கேமரா முதல் ஷாட்டிலிருந்து கடைசி ஷாட் வரை கதையை இன்னும் கணமாக்கித்தருகிறது. ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தின் தரத்தையறிந்து அதற்கேயுரித்தான இசையை பிரம்மாதமாய் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படம் தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமில்லை உலகில் எங்கேல்லாம் சினிமா ரசிக்கப்படுகிறதோ அங்கே எல்லாம் கௌரவிக்கப்படவேண்டிய படைப்பு.
இனி ஒவ்வொரு முறைடீ குடிக்கும் போதும் கொஞ்சம் உறுத்தல் வரத்தான் செய்யும். கேரளாவுக்கு டூர்போய் அந்த தேயிலைத்தோட்டங்களை பார்க்கும் போது வியப்பைத்தாண்டிய ஒரு வேதனை வரத்தான் செய்யும்.

சவுண்டு கேமிரா ஆக்ஷன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பாலாவின் பரதேசி - விமர்சனம் Empty Re: பாலாவின் பரதேசி - விமர்சனம்

Post by கைப்புள்ள Fri 15 Mar 2013 - 23:36

:”@: :”@:
பாலாவின் பரதேசி - விமர்சனம் Images?q=tbn:ANd9GcTXYKdu2azm9I25q72zW0Jn4f0bCw90ODIo_GvqHdi_9dwN5clmKw
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum