சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம் Khan11

வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம்

Go down

வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம் Empty வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம்

Post by *சம்ஸ் Fri 4 Feb 2011 - 14:07

சுமார் ஒரு இலட்சம் மக்கள் பாதிப்பு
10 கோடி ரூபா அவசர ஒதுக்கீடு
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பெரும்பாலான பிரதேசங்க ளில் மீண்டும் பெய்து வரும் அடை மழை காரணமாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதிப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை இம்மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் நிவாரண நடவடிக்கைகளை வழங்க அரசாங்கம் 10 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனடிப்படையில் நிவாரண நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார்.

இம்மழை காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் கொடுப்பிலி, மேலும் கூறுகையில், கால நிலையில் மீண்டும் திடீரென ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக கிழக்கு, வடக்கு, மலையகம் உட்பட நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் கனத்த மழை பெய்து வருகின்றது.
வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம் N1-1


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம் Empty Re: வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம்

Post by *சம்ஸ் Fri 4 Feb 2011 - 14:08

இதன் விளைவாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, பதுளை, நுவரெலியா, பொலன்னறுவை, அனுராதபுரம், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இம் மாவட்டங்களில் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ள 8137 குடும்பங்களைச் சேர்ந்த 28 ஆயிரத்து 989 பேர் 147 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இம்மழை காரணமாக 725 வீடுகள் முழுமையாகவும், 3471 வீடுகள் பகுதியள விலும் சேதமடைந்துள்ளன.

இம் மழையினால் ஏற்பட்டுள்ள வெள் ளத்தினால் அம்பாறை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 347 குடும்பங்களைச் சேர்ந்த 43 ஆயிரத்து 741 பேரும், வவுனியா மாவட்டத்தில் 8023 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 419 பேரும், திருமலை மாவட்டத்தில் 3632 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்து 483 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 190 குடும்பங்களைச் சேர்ந்த 397 பேரும், அனுராதபுரம் மாவட்டத்தில் 142 குடும்பங்களைச் சேர்ந்த 482 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 168 குடும்பங்களைச் சேர்ந்த 638 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டார்.

காலநிலை

இதேநேரம் வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர்களுக்கான பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி குறிப்பிடுகையில், இலங்கைக்கு அருகில் தென் கிழக்காக தாழமுக்க நிலமை ஏற்பட்டிருப்பதன் விளைவாகவே மீண்டும் கனத்த மழை பெய்கின்றது. தற்போதைய மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக் காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேரம் மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக்கூடிய மழை மட்டக்களப்பில் 187.9 மில்லி மீற்றர்களாக பதிவாகியுள்ளது. என்றாலும் திருமலை, பொலன்னறுவை, அரலகங்வில, அம்பாறை, மஹியங்கனை உக்குவளை, உல்கிட்டிய போன்ற பல பிரதேசங்களிலும் அதிக மழை பெய்திருக்கின்றது.

தற்போதைய மழை காலநிலை எதிர்வரும் ஏப்ரல், மே மாதங்கள் வரையும் நீடிக்க முடியும் என நம்புகின்றோம்.

¡னினா தாக்கம் காரணமாகவே இம்மழைக் காலநிலை ஏற்பட்டிருக்கின்றது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம் Empty Re: வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம்

Post by *சம்ஸ் Fri 4 Feb 2011 - 14:09

வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம் N1தற்போதைய காலநிலை காரணமாக கிழக்கு, ஊவா, வட மத்தி, மத்தி ஆகிய மாகாணங்களில் இன்றும் கனத்த மழை பெய்யும் அதேவேளை கிழக்கு, தென் கிழக்கு, மன்னார் குடா கடல் பரப்புக்கள் கொந்தளிப்பாகவும் இருக்கும். அதனால் கடற்றொழிலில் முன்னெச்சரிக்கையோடு ஈடுபடுவது அவசியம் என்றார்.

மட்டு மாவட்டம்

(களுவாஞ்சிகுடி குறூப், ஏறாவூர் குறூப், பெரிய போரதீவு குறூப், புதிய காத்தான்குடி விசேட நிருபர்கள்)

ட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மாத இடைவெளிக்குள் மீண்டும் இரண்டாவது தடவையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி மாத முற்பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் முற்றாக வடிவதற்கு முன்னர் மீண்டும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் மக்களின் அன்றாட வாழ்வு ஸ்தம்பித்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மழையிலும் குளிரிலும் நலன்புரி நிலையங்களிலும் காலத்தை கழிக்க வேண்டிய அவல நிலைக்கு உட்பட்டுள்ளனர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம் Empty Re: வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம்

Post by *சம்ஸ் Fri 4 Feb 2011 - 14:09

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 48 மணித்தியாலத்துள் மட்டக்களப்பு மாவட்டத்தில் 253.9 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு காலநிலை அவதான நிலைய உத்தியோகத்தர் ஏ.எம்.எம். சாலிதீன் தெரிவித்தார்.

இந்த வருடத்தில் நேற்று காலை 8.30 மணிவரை 1600.4 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வருடாந்த சராசரி மழை வீழ்ச்சி 1651 மில்லி மீற்றர் என்பது குறிப்பிடத்தக்கது. மழை தொடர்ந்து பெய்த வண்ணமுள்ளது.

ட்டக்களப்பு வாவியில் கரைக்கு மேலால் வெள்ளம் பாய்கிறது. வாவி கரையிலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முறுத்தானை ஆறு அண்டல் ஓயா சில்லிக்கொடி ஆறு, மூங்கில் ஆறு, கிறட்டினை ஆறு, நாதனை ஆறு, வாழைச்சேனை ஆறு, பனிச்சங்கேணி ஆறு என்பன கரைபுரண்டு ஓடுகின்றன. கிறட்டினை ஆற்று கறுத்தப்பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.

மட்டக்களப்பு - கொழும்பு புகையிரத சேவை நேற்று காலை நடைபெறவில்லை. மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் மன்னம்பிட்டியில் வெள்ளம் பாய்வதால் கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, பொலன்னறுவை ஆகிய இடங்களுக்கான வாகனப் போக்குவரத்து நடைபெறவில்லை. மட்டு திருமலை வீதியில் பிள்ளையாரடியிலும் வெள்ளம் பாய்கிறது.

காரைதீவு - அம்பாறை வீதியிலும் மாவடிப்பள்ளி, வளத்தாப்பிட்டி ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மண்டூர் - வெல்லாவெளி வீதி, பட்டிருப்பு - வெல்லாவெளி வீதி, வெல்லாவெளி - பாலையடிவட்டை விதி, வலையறவு - வவுனதீவு வீதி, வவுனதீவு - மண்டபத்தடி வீதி, வவுனதீவு - குறிஞ்சாமுனை வீதி ஆகியனவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக இவ்வீதிகளினூடாக வானகப் போக்குவரத்துகளும் ஸ்தம்பித்துள்ளன.

மண்முனை துறை இயந்திரப் படகுச் சேவையும் நேற்று நடைபெறவில்லை. மட்டக்களப்பு வாவியில் மண்டூர், அம்பலாந்துறை ஆகிய இரண்டு ஓடத்துறைகளினூடாகவே பயணம் மேற்கொள்ளப்படுகின்றது. மண்டூர் ஓடத்துறை படகின் அடியில் ஓட்டை ஏற்பட்டுள்ளதினால் படகு பயணிகளுடன் வாவியில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா வீதி அபிவிருத்தி திணைக்கள பிரதம பொறியியலாளருடன் தொடர்பு கொண்டு மாற்று படகு வசதியை ஏற்படுத்துமாறு கேட்டுள்ளார்.

17 வருடங்களின் பின்னர் சேனநாயக்க சமுத்திரத்தின் 6 கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. 110 அடி உயரமுடைய இக்குளத்தில் நீர் நிரம்பி வழிவதன் காரணமாக நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அத்துடன், உன்னிச்சை, நவகிரி, உறுகாமம், வாகனேரி ஆகிய பாரிய நீர்ப்பாசன குளங்களும் நிரம்பி வழிவதால் அவற்றின் கதவுகளும் தொடர்ந்து திறந்து விடப்பட்டு பூரண கட்டுப்பாட்டினுள் வைக்கப்பட்டுள்ளதாக பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ் மோகனராஜா தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம் Empty Re: வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம்

Post by *சம்ஸ் Fri 4 Feb 2011 - 14:11

மழை வெள்ளம் காரணமாக கால்நடைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு இசை நடனக் கல்லூரி மற்றும் வந்தாறுமூலை வளாகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இசை நடனக் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உபவேந்தர் கலாநிதி கே. பிரேமகுமார் தெரிவித்தார்.

போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாதனவெளி வேத்துச் சேனை, ஆனை கட்டியவளி, ராணமடு போன்ற கிராமங்களும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்குள்ள மக்களின் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பண்டாரியா வெளி, படையான்டவெளி கிராமத்து மக்களும் வெள்ளத்தினால் இடம் பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளனர்.

7 நாட்களுக்கு உலர் உணவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 7 நாட்களுக்கு போதுமான உலர் உணவு வழங்கப்படவுள்ளது. இதற்கான பணிப்புரை மட்டக்களப்பு அரசாங்க அதிபரினால் பிரதேச செயலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக உணவுத் திட்டத்தினால் ஏற்கனவே 4 நாட்களுக்கான உலர் உணவு வழங்கப் பட்டன. இதனை வழங்காதவர்களுக்கே தற்போது 7 நாட்களுக்கான உலர் உணவு வழங்கப்படவுள்ளது.

வெள்ளம் அம்பாறை மாவட்டம்

(மருதமுனை தினகரன், சம்மாந்துறை குறூப், பெரிய நீலாவணை தினகரன், காரைதீவு குறூப், இறக்காமம் தினகரன் நிருபர்கள்)

பெரிய நீலாவணை தினகரன், காரைதீவு குறூப், இறக்காமம் தினகரன் நிருபர்கள்)

அம்பாறை மாவட்டத்தில் மீண்டும் பல கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் பெரிய நீலாவனை தொடக்கம் பொத்துவில் வரையான கிராமங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பாறை சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து தாழ்ந்த பிரதேசத்திலுள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறவில்லை. ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தந்திருந்த போதிலும் மாணவர்கள் வருகை தராததால் பாடசாலை நடைபெறவில்லை.

இதேவேளை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். ரி. ஏ. தெளபீக், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். அப்துல் ஜலீல், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ். எல். ஏ. றகீம் வெள்ளம் ஏற்பட்டுள்ள பாடசாலைகளைச் சென்று பார்வையிட்டனர்.

கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவில் நேற்று வரை ஏழாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 28, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்முனைப் பிரதேச செயலாளர் எம். எம். நெளபல் தெரிவித்தார்.

கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவின் பிரதேச செயலாளரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும் சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து அச்சம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

மேலும் கிட்டங்கிப்பாலம், மாவடிப் பள்ளிப் பாலம் என்பன நீர் நிறைந்து ஓடுகிறது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு ள்ளது.

பொத்துவிலில்
அடித்துச் செல்லப்பட்டவர்களின் சடலங்கள் மீட்பு; ஒரு சடலம் இன்னுமில்லை
(பொத்துவில் தினகரன் நிருபர் ஏ. சி. அகமதுலெப்பை)

பொத்துவில் பொலிஸ் பாதுகாப்பு பிரிவிற்குட்பட்ட ஹுலநுக, எனும் கிராமத்தில் ஹெட்ஓயா கள்ளாமுனை ஆற்றில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட ஒருவரின் சடலம் இன்னும் கிடைக்காமையால் கடற்படையினர் தேடுதல் நடத்துவதாக பொத்துல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டப்ளிவ். டி. எஸ். விக்கிரமசிங்க (ஐ.பி.) தெரிவித்தார்.

சேனை காவலுக்கு சென்று திரும்பி ஆற்றைக் கடக்கும்போது மூவரும் மூழ்கியதாகவும், மரணமடைந்த 18 வயதுடைய சின்னையா வசந்தி என்பவரின் தந்தையான பொன்னையா சின்னையா (பேரம்பலம்) (வயது 61) என்பவரின் சடலமே இன்னும் கிடைக்கவில்லை யென்றும் தெரிவித்தார்.

திருமணம் முடித்து ஒரு மாதம் முடிந்த நிலையில் சேனையில் காவலிருந்து வெள்ளத்தில் கணவன் பொல் வந்தகே பிரேம சந்திர (வயது 20) தோளில் தொங்கியவாறு கரையேறும் போது இளம் மனைவி நீரில் மூழ்கியதாகவும், அவரின் சடலம் பொத்துவில் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ. எல். ஹில்மியாவால் பரிசோதனை செய்யப்பட்டு உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொத்துவில் - மொனராகலை வீதியில் 2ம் கட்டையில் மதகு ஒன்று உடைந்தும், 10ம் கட்டையில் நீர் 4 அடி உயர்ந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

இதேவேளை, வெள்ளத்தால் - பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வட்டி வெளிஅல் ஹுதா, களப்புக்கட்டு அல்பலாஹ் பாடசாலைகளில் தங்கியுள்ளதுடன், பெரும்பாலானோர் உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

வர்களுக்கு சமைத்த உணவு, உலர் உணவு என்பவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் வழங்கப்பட்டன.

வயல் நிலங்களைவிட்டு
விவசாயிகள் வெளியேறினர் மரங்களில் ஏறி சிலர் உயிர் தப்பினர
(பொத்துவில் விஷேட நிருபர்)

தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் பெருமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பொத்துவில் விவசாயிகள் அறுவடை வேளையில் உள்ள தங்கள் வயல் நிலங்களை முழுமையாகக் கைவிட்டு வெளியேறியுள்ளார்கள்.

பெருவெள்ளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிப்பதால் உயிரைத் தப்பிக் கரை சேர்ந்ததாக அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

கச்சல்கொடி, வேகாமம், கரான்கோவை போன்ற கண்டங்களில் வெள்ளம் வாடிகளை மூடிச் செல்வதாகவும், சிலர் மரங்களின் மீது ஏறி உயிர்தப்பி இருப்பதாகவும், அவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

பொத்துவில் பிரதேசம் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதால், நீரை வெளியேற்றி மக்களுக்கு உதவும் தீவிர நடவடிக்கையில் பொத்துவில் பிரதேச செயலாளரும் பொத்துவில் பிரதேச சபையின் விஷேட ஆணையாளருமான யூ. எல். நியாஸ் ஈடுபட்டுள்ளார்.

தெ. கி. பல்கலைக்கழகம் நீரில் மூழ்கியது
ஒலுவில் விசேட நிருபர்)

அம்பாறை மாவட்டத்தில் டி. எஸ். சேனநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதையடுத்து களியோடை ஆற்று நீர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினுள் புகுந்து மீண்டும் பல கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் பிரதான மின்மாற்றி, விரிவுரையாளர் விடுதிகள் அமைந்துள்ள பிரதேசங்கள் நீரினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக நடவடிக்கைகள் யாவும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு சுமார் 48 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம் Vmj-head


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம் Empty Re: வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மந்தமான காலநிலை தொடரும்: வடக்கு, கிழக்கு, தெற்கில் மழை
» வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை
» வடக்கு - கிழக்கு இணைப்புப் பற்றி பேசப்படுமானால் அரசிலிருந்து வெளியேறுவேன்- ஹிஸ்புல்லாஹ்
» வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கும் ஹிஸ்புல்லாவின் நிலைப்பாட்டை வரவேற்கிறது உலமா கட்சி!
» வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள பெண்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்திரி மேளா கண்காட்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum