சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

கவிஞர் நீலாவணனின் Khan11

கவிஞர் நீலாவணனின்

3 posters

Go down

கவிஞர் நீலாவணனின் Empty கவிஞர் நீலாவணனின்

Post by veel Sat 27 Apr 2013 - 21:52

கவிஞர் நீலாவணனின்


கவிஞர் நீலாவணனின் Pic-31


கவிஞர் நீலாவணன் 31- 06- 1931ல் பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்தாயுள் வேத வைத்தியர் திரு. கேசகப்பிள்ளை, திருமதி. கே. தங்கம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வன் இவர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல வருடங்கள் நற்சேவை புரிந்த இவர், தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே ‘நீலாவணன்‘ என்னும் புனைபெயரை வரித்துக் கொண்டு கால்நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக எழுதி வந்தார். இவர் இயற்கை எய்தும் வரை முழுமூச்சோடு ஆக்க இலக்கியத்துக்கு – குறிப்பாக ஈழத்துத் தமிழ்க் கவிதைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இவர் 1948ல் இருந்து எழுதத் தொடங்கினார். சிறுகதை மூலம் எழுத்துலகில் பிரவேசித்து கவிதையும் சிறுகதையும் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது சுதந்திரன் ஆசிரியராக இருந்த திரு. எஸ். டி. சிவநாயகம் இதனைக் கண்ணுற்று “நீங்கள் நூற்றுக் கணக்கானவர்களுள் ஒருவராக இருப்பதிலும் பார்க்க, நாலைந்து பேர்களுள் ஒருவராகப் பிரகாசிக்கலாம். சிறுகதையை விட்டு விட்டுக் கவிதையையே எழுதுங்கள்” என்று அன்புக் கட்டளை இட்டார். அதனை ஏற்று நீலாவணன், ஏராளமான சிறந்த கவிதைகளையே எழுதிக் கொண்டிருந்தார். அக்காலத்தில் கவிதை எழுதுபவர்கள் சிறுகதை எழுதுபவர்களிலும் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனால் தற்போது நிலைமை எதிர்மாறாக உள்ளது.

1961ல், கல்முனைப் பகுதியில் உள்ள எழுத்தாளர்களை ஒன்று சேர்த்துக் கல்முனைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். அதன் தலைவராகப் பல வருடங்கள் பொறுப்பேற்று இப்பகுதியின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்கு வித்திட்டார்.

கவி அரங்குகள், விமர்சன அரங்குகள், நினைவு விழாக்கள், பாராட்டு விழாக்கள், நூல் அறிமுகங்கள், எழுதாளர் சந்திப்புக்கள் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கத்தால் இப்பகுதியில் முதன்முதலாகவும் மிகச் சிறப்பாகவும் நடைபெற நீலாவணன் காலாக இருந்தார்.

அகில இலங்கை ரீதியாக, தினகரன் பத்திரிகை மூலம் (1962ல்) நடைபெற்ற இலங்கையர்கோன் சிறுகதைப் போட்டி, இலங்கையர்கோன் விழா, ‘மழைக்கை‘ கவிதை நாடக அரங்கேற்றம் என்பன கல்முனை எழுத்தாளர் சங்கம் நடாத்திய குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளாகவும், இலக்கிய நெஞ்சங்களில் நீங்காது நிலைத்துள்ள பசுமை நினைவுகளாகவும் மிளிர்கின்றன. இவை யாவற்றுக்கும் முக்கிய ஆலோசகராகவும் நீலாவணன் விளங்கியதோடு அதற்காக பைசிக்கிள் ஓடி ஆதரவு திரட்டல் போன்ற உடல் உழைப்பு நல்குவதிலும் மிகுந்த உசாராகவே விளங்கினார்.

‘மழைக்கை’ கவிதை நாடகம் கிழக்கிலே (1963ல்) முதன் முதல் மேடை ஏறிய கவிதை நாடகமாகும். மகாபாரதத்தில் செஞ்சோற்றுக் கடன் தீர்த்த கர்ணனின் கடைசிகாலக் கதையைக் கருவாகக் கொண்ட இந்நாடகம் அறுசீர் விருத்தப் பாக்களினால் மிகவும் நயமான பேச்சோசைப் பண்பில் அமைக்கப் பெற்ற இலகு நடை மேடை நாடகம் ஆகும். இந் நாடகத்தில் மு. சடாட்சரம்- கர்ணன், நீலாவணன்- குந்திதேவி, மருதூர்க்கொத்தன்- கிருஷ்ணன், எம். ஏ. நுஃமான்- இந்திரப் பிராமணன், மருதூர்க்கனி- பிராமணன், கே. பீதாம்பரம்- இந்திரன் என்று பாத்திரமேற்று நடித்தமை குறிப்பிடத்தக்கது. ‘மழைக்கை’ 1964இல் வீரகேசரியிலும் வெளிவந்தது.

1966ல் ஜனாப் உஸ்மான் மேர்சா காட்டிய அன்பினால், அவரின் கிழக்குப் பதிப்பகத்தில் ‘பாடும் மீன்‘ இதழை -நீலாவணனை ஆசிரியராகக் கொண்டு- அச்சிட்டும் அது வெளிவராமலே போயிற்று.

1967ல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து (தலைவர்- சண்முகம் சிவலிங்கம், செயலாளர்- மு. சடாட்சரன், கௌரவ ஆசிரியர்- நீலாவணன், காப்பாளர்- கே. ஆர். அருளையா B.A) ‘பாடும் மீன்’ என்னும் இலக்கிய இதழை நடாத்தினார். அது இரண்டு இதழ்களே வந்தாலும் அதற்கு இலக்கிய உலகில் தனி இடம் உண்டு.

11- 01- 1975ல் இயற்கை எய்தினார்.

1976ல் இவரது ‘வழி‘ என்னும் முதலாவது கவிதை நூல் வெளிவந்தது. இது இலங்கை சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றுள்ளது.

1982ல் நீலாவணனது ‘வேளாண்மை‘க் காவியம் நூலுருவாக வெளிவந்துள்ளது. 2001ல் ‘ஒத்திகை‘ (கவிதைத் தொகுப்பு) வெளிவந்துள்ளது.

இவரது துணைவியார் திருமதி அளகேஸ்வரி சின்னத்துரை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு எழில்வேந்தன், வினோதன் ஆகிய இரு புதல்வர்களும் எழிலரசி, ஊர்மிளா, கோசலா ஆகிய மூன்று புதல்விகளும் உள்ளனர். இவரின் சிரேஷ்ட புதல்வன் சி. எழில்வேந்தன் தற்போது சக்தி தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்திப் பணிப்பாளராகக் கடமை புரிகிறார்.

-மு. ச. நவீனன்

—————————————-

06.07.98 முதல் 12.07.98 வரை கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடாத்திய ஈழத்துக் கவிஞர் வாரம் நிகழ்வின் ஆறாம் நாள் செங்கதிரோன் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள்…

#1948இல் எழுதத் தொடங்கிய நீலாவணனை அவர் கே. சி. நீலாவணன் எனும் பெயரில் ‘சுதந்திரன் பத்திரிகையில் எழுதிய ‘பிராயச்சித்தம்’ சிறுகதையே இலக்கிய உலகிற்கு எழுத்தாளனாக அறிமுகப்படுத்திற்று. இவரது முதற்கவிதை 1948ம் ஆண்டிலே தினகரன் பாலர் கழகத்தில் பிரசுரமாகி இருந்தாலும் கூட கே. சி. நீலாவணன் எனும் புனைபெயரில் 1953இல் சுதந்திரனில் வெளிவந்த ‘ஓடி வருவதென்னேரமோ?‘ எனும் கவிதை மூலமே கவிஞராக அறிமுகம் ஆனார். இவரது இறுதிக் கவிதை ‘பொய்மை பொசுங்கிற்று’ என்பதாகும்.

#கே. சி. நீலாவணன், நீலாவண்ணன், நீலா சின்னத்துரை, மானாபரணன், இராமபாணம், எழில்காந்தன், சின்னான் கவிராயர், எறிகுண்டுக் கவிராயர், கொழுவு துறட்டி, அமாச்சி ஆறுமுகம், வேதாந்தன், சங்கு சக்கரன் எனும் புனைபெயர்களில் கவிதை, சிறுகதை, உருவகக் கதை, கவிதை நாடகம், காவியம், கட்டுரை, விருத்தாந்த சித்திரம் ஆகிய வடிவங்களில் ஆக்கங்களைப் படைத்தாரெனினும் கவிதைத் துறையே அவரைப் புகழ்பூக்க வைத்தது என்பதாலும், தனது ஊரான பெரிய நீலாவணை மீது கொண்ட பற்றினால் சூடிக் கொண்ட நீலாவணன் எனும் பெயரே நிலைத்துவிட்டது என்பதாலும் எழுத்துலகில் கவிஞர் நீலாவணன் என்றே தடம்பதித்தார்.

#1960களில் ஈழத்து இலக்கிய முகாமில் முற்போக்கு என்றும் பிற்போக்கு என்றும் சொற்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தனது இலக்கிய கொள்கை நற்போக்கு என்று நாடிய அணி சேராத் தனித்துவக் கவிஞன் நீலாவணன்.

#நீலாவணன் கவிதைகள் ஓசைநயம் துள்ளும் சந்தக் கவிதைகளாகும். செவிக்கு இன்பம் தரும் லயமும், தாளமும் அமைந்த சந்தக் கவிதைகளை அவர் ஆக்கினார். நளவெண்பா பாடிய புலவன் புகளேந்தியின் பெயர் தமிழுலகில் ‘வெண்பாவிற்புகழேந்தி’ என்று நிலைத்துவிட்டது போல் – ஈழத்து இலக்கிய உலகில் ‘வெண்பாவிற் பெரியதம்பி‘ என புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை பேர் பெற்றது போல் ‘ சந்தக்கவிதைக்கு நீலாவணன்‘ என்ற சங்கதியும் எழுத்துலகில் நின்று நிலைக்கும்.

#வேகமும், திவிரமும், முன்கோபமும் இவர் இயல்பான குணங்களெனினும் மனிதநேயப்பண்பும், நகைச்சுவை உணர்வும் நீலாவணனிடம் நிறைந்திருந்தன.
#மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள், பழக்கவழக்கங்களை நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாக பதிவு செய்து கொண்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் இதுவரை செய்யவில்லை. மட்டக்களப்பு வாழ்க்கை முறை, சடங்குகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கக் கூடியவை.

# மட்டக்களப்பின் கவிதைப் பாரம்பரியத்தின் ஊற்றுக் கண்களாகத் திகழ்பவை இம்மண்ணின் நாட்டார் பாடல்களே. இங்கு மட்டக்களப்பு பிரதேசம் எனக் கூறப்படுவது இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காளவிரிகுடாக் கடலையும் மேற்கே ஊவாமலைக் குன்றுகளையும் எல்லைகளாகக் கொண்டு இலங்கிய நிலப்பரப்பாகும். இந்நிலப்பரப்பில் காலங்காலமாக எழுதா இலக்கியமாகத் திகழ்ந்த நாட்டார் பாடல்கள் (கிராமியக் கவிகள்) மட்டக்களப்பின் பேச்சுமொழியில் இம்மண்ணின் மண்வாசனை கமழும் வகையிலேயே புனையப்பட்டவை. இப்பாடல்களெல்லாம் பெரும்பாலும் தனிப்பாடல்களே. எனினும் செந்நெறி இலக்கியங்கள் என வரும் போது விபுலானந்த அடிகளார் மற்றும் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரின் கவிதைப் பாரம்பரியத்தின் அடியொற்றி மட்டக்களப்பு மண் ஆனது பல கவிஞர்களை ஈன்றெடுத்துள்ள போதிலும் இவர்களில் எவருமே -கவிஞர் நீலாவணனைத் தவிர- ஈழத்தமிழ் பிரதேசங்களில் தனித்துவம் வாய்ந்ததான மட்டக்களப்பின் பாரம்பரியங்களையும், சடங்குகளையும் அம்மக்களின் வஞ்சகமில்லாத வாழ்க்கை முறைகளையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடித்துத் தரவில்லை. ஆனால் கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னாரின் ‘வேளாண்மை’க் காவியம்.

#1960களில் கல்முனை எழுத்தாளர் சங்கத்தைச் ஸ்தாபித்து வழி நடாத்தியதின் மூலம் கல்முனைப் பிரதேசத்திலே எழுத்தாளர் பரம்பரையொன்றை நீலாவணன் உருவாக்கினார். மருதூர்க் கொத்தன், மருதூர்க்கனி, அன்பு முகையதீன், மு. சடாட்சரன், கல்முனைப் பூபால், மருதூர்வாணன், பாலமுனை பாறூக், எம். ஏ. நுஃமான், முல்லைவீரக்குட்டி, கனகசூரியம், சத்தியநாதன், நோ. மணிவாசகன், ஆனந்தன் என்று ஓர் இலக்கியப் பட்டாளமே அவரின் அரவணைப்பில் உருவானது. கல்முனையிலே, அவரின் இலக்கியச் சகாக்களாக சண்முகம் சிவலிங்லம், பாண்டியூரன், ஜீவா ஜீவரத்தினம், பஸீல் காரியப்பர், ஈழமேகம் பக்கீர்தம்பி ஆகியோர் விளங்கினர். இலங்கையின் எந்தவொரு தனிப்பிரதேசத்திலும் கல்முனைப் பிரதேசத்தைப் பால் அதிக எண்ணிக்கையான இலக்கியவாதிகள் இருந்ததில்லை. இவ்விலக்கியவாதிகள் அனைவரும் கவிஞர்கள் என்பது இன்னுமொரு சிறப்பு. இதற்குக் காரணம் கவிஞர் நீலாவணனே.

#நீலாவணனுடன் நெருக்கமாயிருந்த ஏனைய சமகால இலக்கிய நண்பர்களாக எஸ். பொன்னுத்துரை, இளம்பிறை எம். ஏ. றஃமான், அண்ணல், இலங்கையர்கோன், ராஜபாரதி, மண்டூர் சோமசுந்தரப்பிள்ளை, வ. அ. இராசரத்தினம், கனக செந்திநாதன், ஏ. ஜே. கனகரத்னா, மஹாகவி ஆகியோர் இருந்துள்ளனர். இவரது இலக்கிய முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுப்போராக கல்முனையிலே டாக்டர் எம். முருகேசபிள்ளை அவர்களும், கே. ஆர். அருளையா B. A. அவர்களும் திகழ்ந்துள்ளனர். இவரது படைப்புகளுக்குக் களம் கொடுத்த பத்திரிகையாளர்களில் சுதந்திரன் எஸ். டி. சிவநாயகம், தினகரன் ஆர். சிவகுருநாதன் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். வித்துவான் எப். எக். ஸி. நடராசா, புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை, புலவர் ஆ. மு. ஷரிபுத்தீன் ஆகியோர் இவரது எழுத்துக்களையிட்டு பெருமிதம் கொண்ட மூத்த தலைமுறை அறிஞர்களாவர்.

#நீலாவணன் உயிர் வாழ்ந்த காலத்தில் அவர் முறையாக வெளிப்படுத்தப் படவில்லை என்ற விடயம் மிகவும் விசனிக்கத்தக்கது. பல்கலைக்கழகப் பின்புலத்தில் பட்டம் என்ற அங்குசத்தை வைத்துக் கொண்டு ஈழத்து இலக்கிய உலகின் விமர்சனத் துறையை ஒரு காலத்தில் ஆக்கிரமித்துக் கொண்ட பேராசிரியர்களும் அவர்களது மாணவ சகாக்களும் தாங்கள் வரித்துக் கொண்ட கலை, இலக்கிய, அரசியல் கோட்பாட்டு முகாம்களுக்குள் முடங்காதவர்களை ஈழத்து இலக்கிய உலகில் இருட்டடிப்புச் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு. அவ்வாறு இருட்டடிப்புச் செய்யப்பட்டவர்களுள் கவிஞர் நீலாவணன்ய்ம் ஒருவர். எனினும் நீலாவணன் மறைவுக்குப் பின் இதில் சிறிது மாற்றம் ஏற்பட்டதையும் இங்கு குறிப்பிடத்தான் வேண்டும். அந்த வகையில் நீலாவணன் மறைவிற்குப் பின் கலாநிதி சி. மௌனகுரு எழுதிய “கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்- நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும்” என்ற நீலாவணன் பற்றிய நூல் முற்குறிப்பிட்ட பேராசிரியர்கள் விட்ட பிழைக்கு பின்னால் வந்த மாணவ சகாக்கள் தேடிய பிரயச்சித்தம் போலும். எனினும் நீலாவணன் உயிர்வாழ்ந்த காலத்திலேயே டொமினிக் ஜீவா அவர்களின் ‘மல்லிகை’ மே 1970 இதழில் நீலாவணனின் உருவப்படத்தை அட்டைப்படமாக வெளியிட்டதை பாராட்டாமல் இருக்க முடியாது. இவரைப் பற்றிய குறிப்பை சி. பி. சத்தியநாதன் எழுதியிருந்தார்.

——————————————————–

நீலாவணன் நூல்கள்

நூல்: வழி


நூல்: வேளாண்மை (குறுங்காவியம்)



நூல்: ஒத்திகை- நீலாவணன் கவிதைகள்


நீலாவணன் பற்றிய நூல்கள்

நூல்: கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்- நீலாவணன் வாழ்வும் இலக்கியப் பணியும்
ஆசிரியர்: கலாநிதி சி. மௌனகுரு

நூல்: நீலாவணன்- எஸ். பொ. நினைவுகள்
ஆசிரியர்: எஸ். பொ.

நன்றி-ஆழியாள் மூத்த எழுத்தாளர் வரதர்
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கவிஞர் நீலாவணனின் Empty Re: கவிஞர் நீலாவணனின்

Post by ansar hayath Sat 27 Apr 2013 - 23:41

:”@: :”@:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

கவிஞர் நீலாவணனின் Empty Re: கவிஞர் நீலாவணனின்

Post by veel Sun 28 Apr 2013 - 0:26

ansar hayath wrote: :”@: :”@:

:]
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கவிஞர் நீலாவணனின் Empty Re: கவிஞர் நீலாவணனின்

Post by rammalar Sun 28 Apr 2013 - 6:48

பயனுள்ள பகிர்வு கவிஞர் நீலாவணனின் 800522
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23940
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவிஞர் நீலாவணனின் Empty Re: கவிஞர் நீலாவணனின்

Post by veel Sun 28 Apr 2013 - 13:07

:]
ansar hayath wrote: :”@: :”@:
:]
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கவிஞர் நீலாவணனின் Empty Re: கவிஞர் நீலாவணனின்

Post by veel Sun 28 Apr 2013 - 13:08

rammalar wrote:பயனுள்ள பகிர்வு கவிஞர் நீலாவணனின் 800522

நன்றி
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

கவிஞர் நீலாவணனின் Empty Re: கவிஞர் நீலாவணனின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum