Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகிby rammalar Today at 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Today at 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Today at 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Today at 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51
» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17
» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16
» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07
» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22
» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01
» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11
» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10
» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08
» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07
» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06
» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04
» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03
» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02
நாகை வழியாக படகில் இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயற்சி?
Page 1 of 1
நாகை வழியாக படகில் இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயற்சி?
நாகப்பட்டினம், ஜுன்.22-
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் தோகை மலைநல்லூர் கிராமம், வேலூர் மாவட்டம் வாலஜாப்பேட்டை, குடியாத்தம், காஞ்சிபுரம் மாவட்டம் கும்மிடிப் பூண்டி போன்ற பல்வேறு இடங்களில் அகதிகளுக்கு அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் இலங்கை தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகிறார்கள்.
இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழர்கள் பலர் அந்நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறி தமிழக முகாம்களில் குடியேறி உள்ளனர். இந்த முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் அடிக்கடி வெளிநாடுகளில் தஞ்சம் புகும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. முகாம்களில் இருந்து தப்பிச்சென்று விசைப்படகுகள் மூலமாக கடலிலேயே பயணம் செய்து ஆஸ்திரேலியா நாட்டில் தஞ்சம் அடைகின்றனர்.
முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்செல்ல முயற்சிக்கும் இலங்கை அகதிகளுக்கு உதவ பல ஏஜெண்டுகள் உள்ளனர். ஏஜெண்டுகளிடம் இலங்கை அகதிகள் பல லட்சம் பணம் கொடுத்து ஆஸ்திரேலியா நாட்டுக்கு செல்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 6ந் தேதி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரே விசைப்படகில் தப்பிச்செல்ல முயன்ற 120 பேரை கடற்படையினர் பிடித்தனர். அவர்கள் கோர்ட்டு நடவடிக்கைகளுக்குப் பின் மீண்டும் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழக முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் 60 பேர் விசைப்படகு மூலம் நாகை கடல் பரப்பு வழியாக ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்ல இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் கியூ பிரிவு போலீசார் நாகை மாவட்ட கடற்கரை பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது நாகை கீச்சாங்குப்பம் பகுதியில் மீன்பிடி விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் புதிதாக இருந்த மர்ம படகு ஒன்றை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த படகில் தான் அகதிகள் ஆஸ்திரேலியா நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால், படகு உரிமையாளர் குறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தமிழக முகாம்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 60 பேர் நாகை கடல் பரப்பு வழியாக ஆஸ்திரேலியா தப்பிச் செல்ல முயல்வதாக ரகசிய தகவல் கிடைத்து. இதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் நாகையில் ஒரு விசைப்படகு சிக்கி உள்ளது.
அந்த படகு செருதூர் மீனவகிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் படகு என்பது தெரியவருகிறது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா செல்வதற்கு தரகராக வேலை பார்த்த சென்னை, மதுரை ஆகிய இடங்களைச் சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஆபரேசன் ஆம்லா ஒத்திகை நடைபெற்றது. இதில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த கண்காணிப்பு பணியின்போது தான் தமிழக முகாம்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியா தப்பிச்செல்ல முயன்ற தகவல் கிடைத்ததாக போலீசார் கூறினர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» காரைக்குடி அருகே வங்கியில் கொள்ளை முயற்சி: அலாரம் ஒலித்ததால் தப்பி ஓட்டம்
» தென்னிந்தியாவிலிருந்து 4 ஆயிரம் இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்
» போர்க்குற்றம் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா கோர்ட்டில் வழக்கு
» 47 இலங்கை அகதிகள் நேற்று கப்பல் மூலம் வருகை
» இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு
» தென்னிந்தியாவிலிருந்து 4 ஆயிரம் இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்
» போர்க்குற்றம் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது ஆஸ்திரேலியா கோர்ட்டில் வழக்கு
» 47 இலங்கை அகதிகள் நேற்று கப்பல் மூலம் வருகை
» இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum