சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சாணக்கியம் என்ற அரசியல் பதத்தின் அர்த்தம்- மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் Khan11

சாணக்கியம் என்ற அரசியல் பதத்தின் அர்த்தம்- மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப்

2 posters

Go down

சாணக்கியம் என்ற அரசியல் பதத்தின் அர்த்தம்- மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் Empty சாணக்கியம் என்ற அரசியல் பதத்தின் அர்த்தம்- மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப்

Post by jafuras Wed 18 Sep 2013 - 1:20

சாணக்கியம் என்ற அரசியல் பதத்தின் அர்த்தம்- மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் 0124

நன்றிகள் (ஜெஸ்மி எம்.மூஸா அவருக்கு)
-மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரபின் 13 ஆவது நினைவினையொட்டி(16) இக்கட்டுரை பிரசுரமாகிறது

ஓவ்வொரு சமூகங்களிலும் அதன் மீது சவாரி செய்யக்கூடிய அல்லது அதனை வழிநடத்தக்கூடிய தலைவர்கள் உருவாகுவது இயல்பு. ஆனாலும் கட்சி, இன, மத வேறுபாடுகளுக்கப்பால் ஒரு சில தலைமைகள் மட்டுமே மக்களின் உள்ளங்களில் வாழுகின்றன. அவ்வாறு மறைந்தும் மறையாமல் வாழுகின்ற ஒரு மாமனிதரே மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப்.

அன்று ஒரு சில தேவைகளுக்காக அவர் ஒரு சிலரால் விமர்சிக்கப்பட்டாலும் இன்று வரை பலரது அரசியல் மேடைகளில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து தூக்கிப்பிடிக்கின்ற ஒருவராக மாறியிருக்கின்றார். தான் அவரோடு ஒன்றாக இருந்தேன், அவரது பாசறையில் அரசியல் கற்றேன் என்றெல்லாம் கூறுவதோடு மட்டுமல்லாது அஷ்ரபின் முகப்படத்தையும் உரைகளின் ஒலிப்பதிவுகளையும் மீட்டித்தான் முஸ்லிம் அரசியல் நகர்வினைக் கொண்டு செல்லலாம் என்னுமளவிற்கு அவர் மேலோங்கி இருக்கின்றார் என்றால் அதற்குக் காரணம் இன்றுள்ள தலைமைகளிடம் காணப்படாத தூர சிந்தனைமிக்க சாணக்கிய அரசியல் வழிகாட்டியாக அவர் வாழ்ந்து மறைந்தமையே. 

இந்நாட்டை மாறிமாறி ஆண்ட தலைமைகள் ஒவ்வொருவராலும் அதிகம் நேசிக்கப்பட்ட, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தலைவராகவே அவர் இருந்து காட்டினார். தன்னை அழைக்கவில்லை, தான் ஓரங்கட்டப்பட்டேன் என்கின்ற வார்த்தைகளை அல்லாமல் அதுபற்றி நான் சிந்திக்கின்றேன், எனது முடிவை அறிவிப்பேன் என்று கூறுகின்ற தலைமையாக வாழ்ந்து காட்டினார். 

தானே வலிந்து சென்று சமூகத்தின் இருப்பைத் தாரை வார்த்தார். முஸ்லிம் சமூகத்தைக் காட்டி கொடுத்துவிட்டார் என்ற பதங்களைக் கொண்டு பின்னோக்குகின்றவராக அஷ்ரப் தன் நகர்வுகளை முன்னெடுக்கவில்லை. 
முஸ்லிம் சமூகத்திற்கான உரிமை அரசியலை முன்வைத்து சகோதர அரசியல் தலைமைகளையும் அதுபற்றி சிந்திக்க வைத்தார். மாறி மாறி ஆட்சிபீடமேறிய ஆட்சியாளர்களின் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும்ஆட்சித்தீர்மானிப்பாளராகவே தன்னைத் தொடர்ந்தும் வைத்திருந்தார். 

சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் ஆளுமைமிக்க பல்துறை அமைச்சுக்களைத் தன்வசம் வைத்திருந்ததோடு அப்போது நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் பிரதம ஏற்பாட்டளராக இருந்ததுடன் பல்வேறு எதிர்க்கட்சிகளின் ரகளைகளுக்கு மத்தியிலும் 2002 ஆம் ஆண்டின் உத்தேச அரசியல் யாப்பின் நகலை பாராளுமன்றில் மும்மொழிகளிலும் முன்வைத்து தன் ஆளுமையைப் பதிவு செய்ததோடு முஸ்லிம் அரசியல் இருப்புக்கான காத்திரமான செய்தியை அன்றை ஆட்சிக் குழுமத்திற்கு வெளிக்காட்டினார். 


துறைமுகங்கள், புனர்வாழ்வு, புனரமைப்பு அமைச்சைத் தன்னுடன் கோர்த்த போது தமிழ், முஸ்லிம், சிங்கள இன வேற்றுமைகளைத் தாண்டி அனைத்த சமூக இளைஞர் யுவதிகளும் தொழில் வாய்ப்பினைப் பெற்று தம் எதிர்காலத்தை செப்பனிட செய்தார்.அஷ்ரபிற்குப் பின்னர் எந்தத் தலைமைகளும் இவ்வாறானதொரு கைங்கரியத்தைச் செய்யவில்லை என இன்றும் மக்கள் பேசிக் கொள்ளுமளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்த தலைமையாக வாழ்ந்தார் 

முஸ்லிம்களுக்கென்றதொரு அரசியல் கட்சியை உருவாக்கி அதில் முஸ்லிம்களின் இருப்பை உறுதிசெய்ய வேண்டுமென அஷ்ரப் உழைத்தாரே அல்லாமல் அவரிடம் பிரதேச, இன, மத வேறுபாடுகள் இருக்கவில்லை. தமது தலைமை பறிபோய்விடுமென்றோ அவர் நினைக்கவில்லை. ஒவ்வொரு பிரடதேசங்களிலும் மூலைமுடுக்குகளிலும் சென்று திறமையாளர்களையும் தொண்டர்களையும் உள்வாங்கி முஸ்லிம் காங்கிரஸை விருட்சமாக்கினார். 


தமது அரசியல் பயணத்தின் போதாமையினையும் இன ஐக்கிய அரசியலையும் உணர்ந்த அஷ்ரப் 2000 ஆம் ஆண்டளவில் தேசிய ஐக்கிய முன்னணியை (நுஆ) உருவாக்கினார். தமது இனம்தாண்டிய சேவையின் நிமித்தமாகவும், நம்பிக்கையின் பயனாகவும் கட்சியை ஆரம்பித்த காலமுதல் பாராளுமன்ற தேர்தலிலேயே பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை அம்பாறையில் வெல்ல வைத்து தன் முதுகெலும்பு அரசியலை ஆழமாக்கினார். 


சிங்களக் குடியேற்றங்கள் வருகின்றன, மதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என 'வீர வார்த்தை அரசியலை' அஷ்ரப் செய்யவில்லை. தீகவாவியில் ஏற்பட்ட குழப்ப நிலைக்குத் தன் சாணக்கிய அரசியல் மூலம் இரு சமூகங்களும் ஏற்றுக் கொள்ளும் தீர்வினை முன்வைத்தார். பெளத்த மதத்தலைவர் ஒருவர் இஸ்லாமிய எதிர்ப்பக் கருத்துக்களை வெளியிட்டபோது பேசவேண்டிய சமய வாதிகள் மௌனியாய் இருக்க, பகிரங்க தொலைக்காட்சி விவாதம் ஒன்றின் மூலம் பௌத்த தலைவரையே வியர்க்க வைத்தார். மொழியாற்றலையும், மதஅறிவையும் கண்டு முழு நாட்டையே வியக்க வைத்த வெளிப்படைத்தன்மை மிக்கவராகவே அஷ்ரப் பயணித்தார். 


நான் அது செய்யப் போகிறேன், இது செய்யப் போகிறேன், அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளேன் என வீர வார்த்தைகள் பேசுகின்ற 'மக்கள் சூடேற்று அரசியலை'அஷ்ரப் செய்யவில்லை. பெரிதாகப் பேசி எதுவுமே ஆகாமல் விடுவதை விட சிறிதாகத் தொடங்கி பெரிதாக வேண்டுமென்ற கொள்கை அவரிடம் இருந்தது. முஸ்லிம்களுக்கான பல்கலைக் கழகம் ஒன்றை உருவாக்கப் போகிறேன், துறைமுகம் ஒன்றை அமைக்கப் போகிறேன் என அறிக்கை விட்டு மாற்று சக்திகளை சூடேற்றுகின்ற அரசியலைச் செய்யாது நிரந்தரக் கட்டிடங்களுமே இல்லாத தனியார் பிரதேசத்தைத் தெரிந்து அதுவரைக்கும் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் ஒரு பகுதியில் தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளிவிட்டு இன்று பல்லின சமூகங்களையும் அரவணைக்கும் தேசிய பல்கலைக் கழகமாக மாற்றிய சாதனையாளராகவே அஷ;ரப் திகழ்ந்தார். 

இவ்வாண்டு முதல் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்பட்டது மட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வறிய குடும்ப நிலையிலுள்ள மாணவர்கள் பலர் யுத்த மற்றும் குடும்ப நிலை காரணமாக பல்கலைக்கழக நுழைவினை ரத்துச் செய்கின்ற நிலைமையை மாற்றி முஸ்லிம் கல்வியியல் உறுதிப் பாட்டிற்கு வழிசமைத்த துாரரசிந்தனையாளரே அஷ்ரப். 

எமது பிரதேசத்தவர்களின் வளங்களை, தொழில் வாய்ப்பினை, மீன்பிடியை மேம்படுத்த வேண்டுமென்ற ஒலுவில் துறைமுகத்தின் முதற்கட்ட நகர்வு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவால் சென்ற வாரம் திறந்து வைக்கப்பட்டமை அஷ்ரபின் கனவுகள் வடிவம் பெற்று வருவதற்கான நல்லதொரு கருவூலம் எனலாம். 

அஷ்ரப் நல்லதொரு அரசியல் தலைவராக, சமூக அக்கறையாளராக, முற்போக்குள்ள சிந்தனையாளராக எனப் பல தளங்களில் தன்னை அடையாளப்படுத்தியது போல் துணிவுள்ள இலக்கியகாரராகவும் வலம் வந்தார். வேலைப்பழுக்கள் நிறைந்த மனிதரான நிலையிலும் அதிக எண்ணிக்கைணைக் கொண்ட பெரிய நூலாக 'நான் எனும் நீ' கவிதை நூலை வெளியிட்டதன் மூலம் கவிதை நூல் வெளியீட்டாளர் சாதனைப் பட்டியலில் முதலிடம் பதித்தார். அவரது வரிகளுக்கு இசை கொடுக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் கட்சிக் கீதங்கள் இன்றும் கட்சி அரசியலை தூக்கி நிறுத்துகின்ற ஒன்றாக மாறியுள்ளமையை யாரும் மறுக்க முடியாது. 


இவ்வாறு பல்வேறு தளங்களில் நின்று நிறைவான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள அஷ்ரபின் பயணத்திலுள்ள அரசியல் பாடங்களை வெறுமனே நினைவு கூருவதுடன் நின்று விடாமல் அதன் பக்கங்களை மீட்டி செயலாக்கப்படுவது முஸ்லிம் அரசியல் தலைமைகள் என்று கூறுகின்றவர்கள் மீதுள்ள பொறுப்பும் தேவையுமாகும்.
jafuras
jafuras
புதுமுகம்

பதிவுகள்:- : 1115
மதிப்பீடுகள் : 208

http://www.importmirror.com

Back to top Go down

சாணக்கியம் என்ற அரசியல் பதத்தின் அர்த்தம்- மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் Empty Re: சாணக்கியம் என்ற அரசியல் பதத்தின் அர்த்தம்- மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப்

Post by ராகவா Wed 18 Sep 2013 - 4:16

செய்திக்கு :”@: :”@:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum