சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை Khan11

மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை

5 posters

Go down

மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை Empty மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை

Post by *சம்ஸ் Tue 10 Dec 2013 - 11:50

மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை 76f91562-8eb4-4582-a219-d52ce96aa259_S_secvpf


தம்பதிகளின் தாம்பத்ய வாழ்க்கையை அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு- பின்பு என்று இரு பிரிவாகப் பிரிக்கலாம். மாரடைப்புக்கு முன்பு இன்பமும், கிளர்ச்சியும், எதிர்பார்ப்பும் நிறைந்ததாக இருக்கும் செக்ஸ் வாழ்க்கை,தம்பதிகளில் யாராவது ஒருவருக்கு மாரடைப்பு வந்து விட்ட பின்பு நினைத்தாலே பயத்தை உருவாக்கும் திகிலாக மாறிவிடுகிறது. 

அதனால் பயந்துபோய் நிறைவற்ற முறையில் தம்பதிகள் தாம்பத்யம் வைத்துக்கொள்கிறார்கள் அல்லது மாரடைப்புக்கு பிறகு மரணமடையும் வரை தாம்பத்யமே வேண்டாம் என்று அதில் இருந்து ஒதுங்கி வாழ்கிறார்கள். இதில் ஆண்களைவிட பெண்களே அதிகம் பயம் கொள்கிறார்கள் என்கிறது சமீபத்திய ஆய்வுகள். 

மாரடைப்பு பற்றிய சில உண்மைகளை நாம் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். இந்தியாவில் ஒரு சதவீத மக்கள் இதயக்கோளாறு தொடர்புடைய நோய்களால் பாதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது. இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த நாட்டில், ஒரு சதவீத பாதிப்பு என்ற கணக்கை கூட்டினாலே பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிடும் என்பது கவனிக்கத்தக்கது. 

இன்னொரு உண்மை, இதயகோளாறுகளுக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிட்டால் அவர்கள் தங்கள் செக்ஸ் வாழ்க்கையை பயம் நிறைந்ததாக்கிவிடுகிறார்கள். 

அவர்களில் பலர் செக்ஸ் தொடர்புகொள்ளும்போது மரணம் ஏற்பட்டு விடுமோ என்று பீதியடைகிறார்கள்.மனைவிக்கு ஏற்படும் பயம் கணவரையும் தொற்றிக்கொள்கிறது. அதுபோல் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட பின்பு, கணவரோடு சேர்ந்து மனைவியும் பயம் கொள்கிறார். 

அதனால் செக்ஸ் மூலம் கிடைக்கக்கூடிய இன்பமும், மகிழ்ச்சியும், கிளர்ச்சியும் அவர்களுக்கு கிடைக்காமலே போய்விடுகிறது. தற்போதைய சர்வேக்கள் படி, ‘மாரடைப்பு ஏற்பட்ட பெண்களில் 14 சதவீதம் பேர் தான், தாங்கள் தாம்பத்ய வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது?’ என்ற கேள்வியை, டாக்டர்களிடம் கேட்கிறார்கள். 

அது ஆண்களைப் பொறுத்தவரையில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக இருக்கிறது. மாரடைப்புக்கு பிறகு செக்ஸில் கவனம் தேவைதான். ஆனால் பயம் தேவையில்லை. தம்பதிகள் செக்ஸ் தொடர்புகொள்ளும்போது ஆண், பெண் இருவருக்குமே ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இதய செயல்பாட்டு வேகம் அதிகரிக்கிறது. 

ரத்த ஓட்டத்தின் வேகமும், இதய துடிப்பும் அப்போது உயரும். நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது, ஒரு படி ஏறுவதற்கு எவ்வளவு சக்தி தேவைப்படுமோ, அவ்வளவு சக்திதான் உடலுறவுக்கும் தேவை. ஆனால் மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் சற்று அதிக சக்தியை அதற்காக செலவிடவேண்டியதிருக்கிறது. 

மாரடைப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் தாம்பத்ய உச்சகட்டத்தின் போது 10-20 வினாடிகள் இதய செயல்பாடு வேகமாகி பின்புதான் இயல்புக்கு வருகிறது. தாம்பத்ய செயல்பாட்டில் இருக்கும்போது திடீரென்று மாரடைப்பு வந்துவிட்டால் என்ன செய்வது? என்ற பயம் கலந்த சந்தேகம், ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கு ஏற்படத்தான் செய்கிறது. 

ஆனால் அவர்கள் இதில் இருக்கும் இனிப்பான உண்மை ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் இதய கோளாறு எதுவும் இல்லாத தம்பதிகளாக இருந்தால், நீங்கள் அவ்வப்போது செக்ஸ் வைத்துக்கொள்வது உங்கள் இதயத்திற்கு நல்லது. 

நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்பவராக இருந்து, திடீரென்று அதற்கு முழுக்கு போட்டுவிட்டால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுவதுபோல்- அவ்வப்போது உறவு வைத்துக்கொண்டு, திடீரென்று நிறுத்தி, குறிப்பிட்ட காலம் வரை தொடராமலே இருந்தால் இதய செயல்பாடும் ஓரளவு குறையலாம். உறவில் ஈடுபடும் சூழலில் மாரடைப்பு ஏற்பட்டு, இறப்பது என்பது மிக மிக குறைவு. 

இதுபற்றி ‘அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன்’ சர்வே ஒன்று எடுத்தது. அதன்படி செக்ஸ் வைத்துக்கொண்ட நேரத்தில் இறந்தவர்களில் 93 சதவீதம் பேர் ஆண்கள். அவர்களில் 75 சதவீதம் பேர் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்கும்போது பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பெரும்பகுதியினர் தங்களைவிட மிகவும் வயதுகுறைந்த பெண்களோடு உறவில் இருந்தவர்கள். 

அந்த ஆண்களுக்கு அதிக சோர்வோ, அதிக மது போதையோ இருந்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது இறந்தவர்கள் 0.6 முதல் 1.7 சதவீதம்தான் என்று அந்த அமைப்பு குறிப்பிடுகிறது. - ஸ்ட்ரெஸ் டெஸ்ட் செய்யும்போது நெஞ்சு வலியோ, வேறுவிதமான தொந்தரவுகளோ நெஞ்சுப் பகுதிகளில் இல்லாமல் இருந்தால்.. 

- ஆபத்தான மாரடைப்பு சூழல் இல்லாமல் இருந்தால்.. 

- பைபாஸ் சர்ஜரி செய்து அடைப்புகள் சரிசெய்யப்பட்டு, இதய தமனிகள் பாதுகாக்கப்பட்டிருந்தால்.. நீங்கள் இணையோடு உறவில் ஈடுபடும்போது பெரும்பாலும் பாதிப்பு ஏற்படாது. ஆனால்.. 

- ஆஞ்சியோபிளாஸ்டியோ, ஸ்டென்ட்சிங்சோ செய்த பின்பு காயங்கள் ஆறும் வரை தாம்பத்ய தொடர்பை தள்ளிவைக்க வேண்டும்.  

- ஓப்பன் கொரோனரி ஆர்ட்டரி பைபாஸ் செய்தவர்கள் மார்பில் ஆபரேஷன் செய்த பகுதிகள் ஒன்றாகி காயம் ஆறும் வரை தாம்பத்யத்தை தவிர்க்கவேண்டும். இந்த காயம் ஆற ஏழு வாரங்கள் வரை தேவைப்படும். அதன் பின்பும் பல மாதங்கள் நெஞ்சில் அழுத்தம் கொடுக்கும் விதத்தில் உறவில் ஈடுபடக்கூடாது. 

காயங்கள் பெரிய அளவில் இல்லாதவர்கள் விரும்பியபடி உறவை மேற்கொள்ளலாம். உறவில் ஈடுபடும்போது மாரடைப்பு ஏற்படும் சூழ்நிலை மிக குறைவுதான் என்றாலும், ஒவ்வொருவரும் தங்கள் உடல் சக்தியை அதிகரித்து, உடலை ஆரோக்கியப்படுத்தும் விதத்தில் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும். 

உணவு பழக்கம், வாழ்வியல் முறை, உடற்பயிற்சி மூலம் உடலை மேலும் பலப்படுத்தினால், உடல் சக்தி அதிகரித்து, இதயத்தில் பிரச்சினைக்குரிய அம்சங்கள் குறைந்து விடும். மாரடைப்புக்கான சிகிச்சை பெறுகிறவர்கள், உறவை தவிர்க்க வேண்டும் என்பதில்லை. ஆனால் ஆளுக்கு தக்கபடியும், பாதிப்புக்கு தக்கபடியும் இதன் தன்மை மாறுபடும். 

அதனால் மாரடைப்பு பாதிப்பு கொண்டவர்களும், உறவில் ஈடுபடும்போது நெஞ்சு வலி போன்ற அவஸ்தை ஏற்படுகிறவர்களும், டாக்டரிடம் தேவையான ஆலோசனைகளை பெற்று, சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். 

இதய நோயால் பாதிப்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பதால் ஆண்களும், பெண்களும் இளம் வயதிலே வாழ்க்கை முறையை சீரமைத்துக்கொள்ளவேண்டும். அதன் மூலம் இதய நோயை தள்ளிப்போடலாம். இல்லற வாழ்க்கையையும் இனிமையாக அனுபவிக்கலாம். 

கட்டுரை: 

டாக்டர் டி.காமராஜ், 
MMBS.,MD.,Ph.D.,MHS,D.M.R.D.,PG,D.C.G./FCSEPI 
சென்னை. 


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை Empty Re: மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை

Post by பானுஷபானா Tue 10 Dec 2013 - 12:31

பகிர்வுக்கு நன்றி தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை Empty Re: மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை

Post by ராகவா Tue 10 Dec 2013 - 13:42

நன்றி தல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை Empty Re: மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை

Post by Muthumohamed Tue 10 Dec 2013 - 21:06

சூப்பர்  சூப்பர்  சூப்பர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை Empty Re: மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை

Post by ahmad78 Fri 13 Dec 2013 - 10:33

பயனுள்ள தகவல்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை Empty Re: மாரடைப்புக்கு பிந்தைய ‘தாம்பத்ய’ வாழ்க்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum