சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Khan11

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

+5
jaleelge
SAFNEE AHAMED
ahmad78
ராகவா
முனாஸ் சுலைமான்
9 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Mon 9 Jun 2014 - 20:41

First topic message reminder :

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

★கிழக்கிலங்கையின் இடப்பெயர்கள் பற்றிய ஆய்வுகளைப் பல வருடங்களாக மேற்க்கொண்ட முயற்சியின் பெறுபேறு இவைகள்.

நான் ஓர் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வரலாற்று ஆய்வாளர் அல்ல ; என்பதை தங்களின் மேன்மையான கவனத்துக்கும்- சிந்தனைக்கும் எத்திவைக்கிறேன் உறவுகளே !!!

♥கிழக்கிலங்கையின்  இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

●தேடல் - 01    (2014.06.09 ; மாலை-8.13)

அறிமுகம்:

பழங்குடி மக்கள்....
நதிக்கரை ஓரங்களிலும், காடுகளிலும் அலைந்து திரிந்து வேட்டையாடித் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்ந்த நிலையில் அவர்களுக்கு நிலையான இருப்பிட வசதிகளை அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

காலம் செல்லச் செல்ல நாகரீக வளர்ச்சியும், தேவைகளும், ஒழுங்குகளும் ஏற்பட்ட நிலையில் நிலையாக அவர்கள் ஓரிடத்தில் இருந்து தொழிற்பட வேண்டிய அவசியம் ஏற்படலாயிற்று.

(திரி   இன்னும்   நீழும்......)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha Sun 15 Jun 2014 - 16:08

இங்கே அவர் வேகம் ஆமைவேகமாய் இருப்பது பதிவு விவேகமாய் வரும் என்பதற்கு அத்தாட்சியாம் சார்!

நீங்கள் அரட்டையே அடியுங்கள் ஜலீல் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் Sun 15 Jun 2014 - 16:41

Nisha wrote:இங்கே அவர் வேகம் ஆமைவேகமாய் இருப்பது பதிவு விவேகமாய்  வரும் என்பதற்கு அத்தாட்சியாம் சார்!

நீங்கள் அரட்டையே அடியுங்கள் ஜலீல் சார்!
ஆஹா ஆஹா இப்படியுமா உசுப்பேத்துவாங்க :joker: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Sun 15 Jun 2014 - 17:03

நண்பன் wrote:
Nisha wrote:இங்கே அவர் வேகம் ஆமைவேகமாய் இருப்பது பதிவு விவேகமாய்  வரும் என்பதற்கு அத்தாட்சியாம் சார்!

நீங்கள் அரட்டையே அடியுங்கள் ஜலீல் சார்!
ஆஹா ஆஹா இப்படியுமா உசுப்பேத்துவாங்க :joker: 

நத்திங்...நத்திங்....

உசுப்பேத்தவில்லை....

உறுதியேற்றுறாங்க...

நன்றி..... நிஷா...நண்பா... அனைவருக்கும்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Sun 15 Jun 2014 - 19:59

09. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

கிழக்கிலங்கை எனும் போது ...
அதனுள் இலங்கையின் நிர்வாக மாவட்டங்களான :.. அம்பாறை மாவட்டம் (அம்) , மட்டக்களப்பு மாவட்டம் (மட்டு) , திருகோணமலை மாவட்டம் (திரு) ஆகியன உள்ளடங்கும்.

●தேடல் - 09
(2014.06.15; மாலை -8.36)
........

இடப்பெயர் ஆய்வு :

இடப்பெயர் ஆய்வு செய்வதனால் ஏற்படும் பயன் ( Out put )
 
                      ஒரு நாட்டினுடைய அல்லது ஒரு பகுதியினுடைய, ஊரினுடைய விடுபட்டுப்போன அல்லது மருவிச் சென்ற வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ளத்தக்க சான்றுகளைத் தருவது நாட்டார் வழங்கியலாகும்.

                   இடப்பெயர் ஆய்வும் நாட்டார் வழக்கியலில் ஒரு கூறாகும். பொதுவாக ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் வரலாற்று நிகழ்ச்சிகளையும், பண்பாட்டுச் செய்திகளையும், கல்வெட்டுக்கள் மற்றும் புதைபொருட் சான்றுகள், கட்டிட, சிற்ப, ஓவியங்கள், இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.

                    இவ்விடயங்களைத் தக்கவாறு அறிந்து கொள்வதற்குத் துணையாக இடப்பெயர் ஆய்வும் அமைகிறது. அன்றியும் மொழிமாற்றம், மொழியில் பிற நாட்டார் தாக்கம் என்பன பற்றியும் அறியக்கூடிய வாய்ப்பினை இடப்பெயராய்வு தருகின்றது.

                    மேலும் இடப்பெயராய்வின் மூலம் இடங்களின் புவியியல் அமைப்பு, சேவகங்கள், குல தெய்வங்களின் தொல்லியல் ஆதாரங்கள், முதலான பல வேறு விடயங்களினையும் அறிந்து கொள்ளத்தக்க வாய்ப்பும் ஏற்படுகின்றது.

                    மேலும், இடப்பெயர் ஆய்வின்மூலம் சமய நம்பிக்கைகள், சடங்குகள், சமயவரலாற்று நிகழ்வுகள் என்பன பற்றியும் அறியக்கூடியதாகவுள்ளதுடன் , நாட்டுத் தலைவர்களின் வீரதீரச் செயல்களினைத் தக்கவாறு அறிந்துகொள்ளவும், சமூகக் கட்டமைப்புக்கள், நிறுவனங்கள் என்பன பற்றிய தரவுகளைப் பெறவும் இவ்வாய்வு துணை புரிகின்றது.

கிழக்கிலங்கை இடப்பெயர் ஆய்வு வகைப்படுத்தல் நெறி :

                     இலங்கையிலே தமிழ் இடப்பெயர் ஆய்வுகள் விஞ்ஞான பூர்வமாக முழுமையாக (Systemetic and Scientific Research) இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

                      ஆயினும்- சைமன் காசிச் செட்டி, சுவாமி ஞானப்பிரகாசர், எஸ்.டபள்யு. குமாரசுவாமி, ஹோர்ஸ்பரோ, எஸ். சபாரத்தின முதலியார், ஜே.பி.லூயில்,
கலாநிதி. இ. பாலசுந்தரம், வீ.சி. கந்தையா, கதிர் தனிகாசலம்,
திருமதி. ஜி. தளபாக்கியம், கரு. நாகராசன், சைவப்புலவர் இ. வடிவேல்,
செல்வி. க. தங்கேஸ்வரி ஆகியோர் இத்துறையில் ஈடுபட்டு இளம் ஆய்வாளர்களுக்கு அறிய பல தகவல்களினை வெளிக் கொணர்ந்துள்ளனர்.

                      இந்த வகையில் இடப்பெயர் ஆய்வு நெறி முறைகள் பற்றிய வழிகாட்டி நூல்கள் வெளிவந்துள்ளன.

இடப்பெயர் ஆய்வுகளை அளவு கருதி
முழுநிலை அளவாய்வு (Compre Hensive Sur)
சிறிய நிலை அளவாய்வு (Small Scale Survey)எனப்பகுத்துக் கொள்ளலாம்.

 இவற்றைப் பின்வரும் முறையில் செயற்படுத்தலாம்.

01. இடப்பெயர்களைத் திரட்டல்.

02. சான்றுச் செய்திகளைத் திரட்டல்.

03. அடையாளம் காணுதல்.

04. விளக்கம் கொடுத்தல்.

                 என்ற அடிப்படையில் கிழக்கிலங்கை இடப்பெயர்களின் ஆய்வினைத் தொடலாம். கிழக்கிலங்கையிலுள்ள பெரும்பான்மையான இடங்களின் பெயர்களினை திரட்டியுள்ளேன்.

                 இவற்றை மொழியியல் நோக்கில் இப்பெயர்களைத் தனிச்சொல், தொகைச் சொல் என்ற அடிப்படையிலும் அவற்றின் பொதுக்கூறு, சிறப்புக்கூறு என்ற அடிப்படையிலும் பிரித்து நோக்கலாம்.

                 பொதுக்கூறு என்பது இடப்பெயரின் பின்னொட்டு நிலையில் (Post Fix) அமைவதாகும். ஊர், புரம் என்பன பொதுக்கூறுகளாகும். இக்கூறுகள்தான் ஓர் ஊருக்குப் பெயராக முதலில் அமையப்பெறுகின்றன.

                 நாளடைவில் ஒரே பொதுக்கூறுள்ள பல ஊர்கள் தோன்றும் பொழுது அவைகளை வேறுபடுத்திக்காட்டும் பொருட்டு சேர்க்கப்படும் அடைகளே சிறப்புக் கூறுகள் (Specifics) ஆகும்.

                கிழக்கிலங்கைப் பகுதிகளிலுள்ள இடப்பெயர்களில் அமைந்து காணப்படும் பொதுக்கூறுகளினை இயற்கை நிலை என்றும் செயற்கை நிலை என்றும் இரு வேறுபட்ட அடிப்படையில் தொடரும் திரியில் ஆய்வு செய்ய முற்படுகிறேன்.

(ஆய்வுத் திரி இன்னும் நீள்கிறது....)

Last edited by jaleelge on Sun 15 Jun 2014 - 21:07; edited 1 time in total
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha Sun 15 Jun 2014 - 20:03

அனை, ஆரை, ஆறு, ஊர், ஓடை, கண்டி, கரை, கல், களப்பு, காமம்..

இந்த வழக்கில் தான் ஊர்களில் பெயர்கள் மருவியதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Sun 15 Jun 2014 - 21:10

Nisha wrote:அனை, ஆரை, ஆறு, ஊர், ஓடை, கண்டி, கரை, கல், களப்பு, காமம்..

இந்த   வழக்கில் தான் ஊர்களில் பெயர்கள் மருவியதா?

ஆமாம்...உங்கள் கேள்விக்கு தொடரும் திரியின் மூலம்.... 

முழுமையான விளக்கத்தினை வளங்குவேன் என நம்புகிறேன்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Tue 17 Jun 2014 - 18:15

அனைவருக்கும்  வணக்கம்..... சலாம்....

இலங்கை நாட்டில் ஏற்பட்ட இன முறன்பாடும்.....

சமூக அழிப்பும் காரணமாக...

நான் மனதளவில் வேதணையும்...

சோகமும் உற்றிருந்தேன்..

ஆதலினால் பதிவிடாமைக்கு  வருந்துகிறேன்..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Tue 17 Jun 2014 - 19:14

10. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

கிழக்கிலங்கை எனும் போது ...
அதனுள் இலங்கையின் நிர்வாக மாவட்டங்களான :.. அம்பாறை மாவட்டம் (அம்) , மட்டக்களப்பு மாவட்டம் (மட்டு) , திருகோணமலை மாவட்டம் (திரு) ஆகியன உள்ளடங்கும்.

●தேடல் - 10
(2014.06.17; மாலை -7.16)
........

இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது :

பொதுக் கூறுகள் ........
 
        இயற்கை நிலை:
 
              அனை, ஆரை, ஆறு, ஊர், ஓடை, கண்டி, கரை, கல், களப்பு, காமம், குளம், காடு, கேணி, திடல், துறை, தோட்டம், தோப்பு, குடா, பிட்டி, மடு மணல், மரம், முனை மூலை, தீவு, வட்டை, வத்தை, வயல், வாய், வில், வெளி, சோலை, மோட்டை, மலை என்பன அடங்கும்.

பொதுக்கூறுகள்:
 
           செயற்கை நிலை
 
            ஆலை, கட்டு, கடவை, குடியிருப்பு, குறிச்சி, கோட்டை, கோவில், சேரி, நகர், புரம், சேனை, மடம், வேலி, வெட்டி மேற்குறிப்பிட்ட பொதுக்கூறுகள் அமைந்த பெயர்கள் தொடக்க காலத்தில் தோன்றியவை எனலாம்.

         பொதுவான அடிப்படையில் தோன்றும் பெயர்கள் அவை. ஆனால்; சிறப்புக் கூறுகள் அவ்வப்போது புதிதுபுதிதாகத் தோன்றுபவை.
 
           பொதுக்கூறுகள் : ஆறு, குளம் என்பன போன்று இயற்கையோடு ஒட்டிய பெயர்களாகவே அமைந்திருக்கும். அவை பொதுவாக இடுகுறிப்பெயர்களாக அமைவதும் உண்டு.

           ஆனால் சிறப்புக் கூறுகள் காலத்துக்குக் காலம் காணரங்களுக்கேற்ப மாறியமைத்து கொண்டே செல்லும், இவையனைத்தும் காரணப் பெயர்களாகவே காணப்படுகின்றது.

          இயற்கை வளத்தை அறியப்படுத்தும் தன்மையுடையதாக அமைந்துள்ளன. ஆனால் சிறப்புக் கூறாய் அமைந்த இடப்பெயர்களின் மூலம் அங்கு வாழ் மக்களின் வாழ்க்கைமுறை, தொழில், சாதியமைப்பு, உற்பத்திகள், அரசியல் முதலிய பற்பல விடயங்களினை அறியக்கூடியதாகவிருக்கிறது.

பூர்வீக இடப் பெயர் 

                        இடப்பெயர் ஆய்வின் பயனாக வரலாற்றில் அறியப்படாத அல்லது தெளிவற்ற பலவிடயங்கள் விளக்கம் பெறுதற்குரிய வாய்ப்புக்கள் உண்டென்ற நிலையில் இடப்பெயர்கள் வரலாற்று மூலங்களில் ஒன்று என்பதில் ஐயமில்லை. புராண வரலாற்று சம்பவச் செய்திகளுடன் தொடர்புடைய இடப்பெயர்கள்:
 
              தலபுராணங்களையுடைய பதிகளின் பெயர்கள் , புராண ரீதியான பெயர்க் காரணங்களைக் கொண்டுள்ளன.

இதிகாசங்களும், காவியங்களும் சில இடப்பெயர்களினைத் தோற்றுவித்துள்ளன.

               இன்னுஞ்சில இடப்பெயர்களுக்கு வரலாற்றுச் சாயல் சார்ந்த கட்டுக் கதைகளின் அடிப்படையில் விளக்கம் கொடுக்கப்படுகின்றன.

               இந்நிலையில் மட்டுமன்றி ஒவ்வொரு நாட்டினதும் அரசியல், சமய, சமூக பொருளாதார, வரலாற்றுச் செய்திகளும் அவ்வந்நாட்டின் இடப்பெயர்களைத் தோற்றுவித்துள்ளமையை இடப்பெயர் ஆய்வின் மூலம் அறியலாம்.

              அனைத்து உலக நாடுகளினதும் ஊர்ப் பெயர்கள் வரலாற்றின் புராணக் கதைகளும், வரலாற்றுச் செய்திகளும் இணைந்தே காணப்படுகின்றன.

               அவை அவ்வவ்வூர்களுக்குப் பழமையையும், பெருமையையும் கற்பிக்கும் நோக்குடன் வழங்கப்பட்டு வந்துள்ளன.

                இவ்வகையில் கிழக்கு மாகாணத்தில் திருக்கோணமலை(திரு என்றும்), மட்டக்களப்பு (மட்டு என்றும்), அம்பாறை (அம் என்றும்) மாவட்டத்திலும் புராணக் கதைகளுடன் தொடர்புடையதாய் பண்டைநாள் முதலாகப் பல இடப்பெயர்கள் வழங்கி வந்துள்ளன.
இவைகள்பற்றி சற்றுநோக்கின்

இராணவணன் வெட்டு (திரு):

இராவணன் தனது தாயார் வழிபடுவதற்காக லிங்கத்தைப்பெற்றுச் செல்வதற்கு, கோனேசப் பெருமாளை தவம் செய்து திருக்காட்சி கொடுக்காததனால் சினம் கொண்டுகோணாமலையை வாளால் வெட்டி எடுத்துச் செல்ல முயற்சித்தான் இதனால் இராவணன் வெட்டு என பெயரிடப்பட்டது.

(ஆதாரம் : திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் (இரண்டாம் பதிப்பு)-1997 ,எழுதியது - இ.வடிவேல்....214ம் பக்கத்தில் உள்ளது.)

திரியாய் (திரு):

குளக்கோட்டு மன்னனால் கோயிலில் ஆயிரம் விளக்குகள் ஏற்றப்பட அவைகளுக்கு தாமரைத் திரியும், நெய்யும் கொடுக்கும் திருத்தொண்டை செய்தவர்கள், ”தாமரைத்திரி”  திரித்தவர்கள் இருந்ததனால்-திரியாய் என வழங்கலாயிற்று.

(ஆதாரம் : திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் (இரண்டாம் பதிப்பு)-1997 ,எழுதியது - இ.வடிவேல்....224ம் பக்கத்தில் உள்ளது.)

பட்டித்திடல் (திரு):

கோணேஸ்வரத்துக்குப் பால், தயிர், நெய் என்பவற்றை வழங்குவதற்காக பசுக்களை பட்டி பட்டியாக கட்டி வளர்த்த இடம்....
திடல் பூமியாக இருந்த படியினால் பட்டி நிறுத்தப்பட்டதிடல்.....
பட்டித்திடல் என அழைக்கப்பட்டது.  

 (ஆதாரம் : திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் (இரண்டாம் பதிப்பு)-1997 ,எழுதியது - இ.வடிவேல்....217ம் பக்கத்தில் உள்ளது.)

(ஆய்வுத் திரி இன்னும் நீள்கிறது....)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 22:55

jaleelge wrote:அனைவருக்கும்  வணக்கம்..... சலாம்....

இலங்கை நாட்டில் ஏற்பட்ட இன முறன்பாடும்.....

சமூக அழிப்பும் காரணமாக...

நான் மனதளவில் வேதணையும்...

சோகமும் உற்றிருந்தேன்..

ஆதலினால் பதிவிடாமைக்கு  வருந்துகிறேன்..

நிச்சியமாக நல்ல உள்ளங்களை பதற வைத்த சம்பவம் அது காலம் பதில் சொல்லும் காத்திருப்போம் உங்கள் மனது பளய நிலைக்கு திரும்ப வேண்டும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் வளமையான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் அனைத்திற்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் உங்களுக்காகவும் அனைவருக்காகவும் பிராத்திக்கிறேன்
என்றும் நன்றியுள்ள நண்பன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Tue 17 Jun 2014 - 23:09

உங்கள் ஆறுதல்களுக்கு மிக்க மிக்க மகிழ்சி அடைகிறேன்.

என் மனநிலைகள் பழைமை நிலையை அடைய ...

ஆறுதல் கொள்ளுகிறேன்.

நாளை லண்டன் பிரதமரின் வாசஸ்தலத்துக்கு எதிரில்.....

இலங்கை அரசுக்கும்...பொது பல சேனா அமைப்புக்கும்...

எதிராக கண்டணப் பேரணியும்,எதிர்ப்புப் போராட்டமும் ...

நடாத்தத் திட்டமிட்டுள்ளனர்....

அது வெற்றி அடைய இறைஞ்சுகின்றேன் நண்பா !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 23:10

jaleelge wrote:09. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

கிழக்கிலங்கை எனும் போது ...
அதனுள் இலங்கையின் நிர்வாக மாவட்டங்களான :.. அம்பாறை மாவட்டம் (அம்) , மட்டக்களப்பு மாவட்டம் (மட்டு) , திருகோணமலை மாவட்டம் (திரு) ஆகியன உள்ளடங்கும்.

●தேடல் - 09
(2014.06.15; மாலை -8.36)
........

இடப்பெயர் ஆய்வு :

இடப்பெயர் ஆய்வு செய்வதனால் ஏற்படும் பயன் ( Out put )
 
                      ஒரு நாட்டினுடைய அல்லது ஒரு பகுதியினுடைய, ஊரினுடைய விடுபட்டுப்போன அல்லது மருவிச் சென்ற வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ளத்தக்க சான்றுகளைத் தருவது நாட்டார் வழங்கியலாகும்.

                   இடப்பெயர் ஆய்வும் நாட்டார் வழக்கியலில் ஒரு கூறாகும். பொதுவாக ஒரு நாட்டின் அல்லது பிரதேசத்தின் வரலாற்று நிகழ்ச்சிகளையும், பண்பாட்டுச் செய்திகளையும், கல்வெட்டுக்கள் மற்றும் புதைபொருட் சான்றுகள், கட்டிட, சிற்ப, ஓவியங்கள், இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன.

                    இவ்விடயங்களைத் தக்கவாறு அறிந்து கொள்வதற்குத் துணையாக இடப்பெயர் ஆய்வும் அமைகிறது. அன்றியும் மொழிமாற்றம், மொழியில் பிற நாட்டார் தாக்கம் என்பன பற்றியும் அறியக்கூடிய வாய்ப்பினை இடப்பெயராய்வு தருகின்றது.

                    மேலும் இடப்பெயராய்வின் மூலம் இடங்களின் புவியியல் அமைப்பு, சேவகங்கள், குல தெய்வங்களின் தொல்லியல் ஆதாரங்கள், முதலான பல வேறு விடயங்களினையும் அறிந்து கொள்ளத்தக்க வாய்ப்பும் ஏற்படுகின்றது.

                    மேலும், இடப்பெயர் ஆய்வின்மூலம் சமய நம்பிக்கைகள், சடங்குகள், சமயவரலாற்று நிகழ்வுகள் என்பன பற்றியும் அறியக்கூடியதாகவுள்ளதுடன் , நாட்டுத் தலைவர்களின் வீரதீரச் செயல்களினைத் தக்கவாறு அறிந்துகொள்ளவும், சமூகக் கட்டமைப்புக்கள், நிறுவனங்கள் என்பன பற்றிய தரவுகளைப் பெறவும் இவ்வாய்வு துணை புரிகின்றது.

கிழக்கிலங்கை இடப்பெயர் ஆய்வு வகைப்படுத்தல் நெறி :

                     இலங்கையிலே தமிழ் இடப்பெயர் ஆய்வுகள் விஞ்ஞான பூர்வமாக முழுமையாக (Systemetic and Scientific Research) இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

                      ஆயினும்- சைமன் காசிச் செட்டி, சுவாமி ஞானப்பிரகாசர், எஸ்.டபள்யு. குமாரசுவாமி, ஹோர்ஸ்பரோ, எஸ். சபாரத்தின முதலியார், ஜே.பி.லூயில்,
கலாநிதி. இ. பாலசுந்தரம், வீ.சி. கந்தையா, கதிர் தனிகாசலம்,
திருமதி. ஜி. தளபாக்கியம், கரு. நாகராசன், சைவப்புலவர் இ. வடிவேல்,
செல்வி. க. தங்கேஸ்வரி ஆகியோர் இத்துறையில் ஈடுபட்டு இளம் ஆய்வாளர்களுக்கு அறிய பல தகவல்களினை வெளிக் கொணர்ந்துள்ளனர்.

                      இந்த வகையில் இடப்பெயர் ஆய்வு நெறி முறைகள் பற்றிய வழிகாட்டி நூல்கள் வெளிவந்துள்ளன.

இடப்பெயர் ஆய்வுகளை அளவு கருதி
முழுநிலை அளவாய்வு (Compre Hensive Sur)
சிறிய நிலை அளவாய்வு (Small Scale Survey)எனப்பகுத்துக் கொள்ளலாம்.

 இவற்றைப் பின்வரும் முறையில் செயற்படுத்தலாம்.

01. இடப்பெயர்களைத் திரட்டல்.

02. சான்றுச் செய்திகளைத் திரட்டல்.

03. அடையாளம் காணுதல்.

04. விளக்கம் கொடுத்தல்.

                 என்ற அடிப்படையில் கிழக்கிலங்கை இடப்பெயர்களின் ஆய்வினைத் தொடலாம். கிழக்கிலங்கையிலுள்ள பெரும்பான்மையான இடங்களின் பெயர்களினை திரட்டியுள்ளேன்.

                 இவற்றை மொழியியல் நோக்கில் இப்பெயர்களைத் தனிச்சொல், தொகைச் சொல் என்ற அடிப்படையிலும் அவற்றின் பொதுக்கூறு, சிறப்புக்கூறு என்ற அடிப்படையிலும் பிரித்து நோக்கலாம்.

                 பொதுக்கூறு என்பது இடப்பெயரின் பின்னொட்டு நிலையில் (Post Fix) அமைவதாகும். ஊர், புரம் என்பன பொதுக்கூறுகளாகும். இக்கூறுகள்தான் ஓர் ஊருக்குப் பெயராக முதலில் அமையப்பெறுகின்றன.

                 நாளடைவில் ஒரே பொதுக்கூறுள்ள பல ஊர்கள் தோன்றும் பொழுது அவைகளை வேறுபடுத்திக்காட்டும் பொருட்டு சேர்க்கப்படும் அடைகளே சிறப்புக் கூறுகள் (Specifics) ஆகும்.

                கிழக்கிலங்கைப் பகுதிகளிலுள்ள இடப்பெயர்களில் அமைந்து காணப்படும் பொதுக்கூறுகளினை இயற்கை நிலை என்றும் செயற்கை நிலை என்றும் இரு வேறுபட்ட அடிப்படையில் தொடரும் திரியில் ஆய்வு செய்ய முற்படுகிறேன்.

(ஆய்வுத் திரி இன்னும் நீள்கிறது....)
இன்னும் அடுத்தடுத்த பெயர்களைப் படிப்பதற்கும் அறிவதற்கும் ஆவலாய் உள்ளது ஜலீல் ஜீ இலகுவாக படிக்க முடிகிறது அமைதியாப்படித்தேன் ஆர்வமாகப்படித்தேன் இன்னும் உங்கள் நேரத்தை இதுக்காக ஒதுக்கி எழுதுங்கள் உங்கள் பயணம் தொடர உள்ளம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
என்றும் நன்றியுடன்
நண்பன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 23:12

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:அனைவருக்கும்  வணக்கம்..... சலாம்....

இலங்கை நாட்டில் ஏற்பட்ட இன முறன்பாடும்.....

சமூக அழிப்பும் காரணமாக...

நான் மனதளவில் வேதணையும்...

சோகமும் உற்றிருந்தேன்..

ஆதலினால் பதிவிடாமைக்கு  வருந்துகிறேன்..

நிச்சியமாக நல்ல உள்ளங்களை பதற வைத்த சம்பவம் அது காலம் பதில் சொல்லும் காத்திருப்போம் உங்கள் மனது பளய நிலைக்கு திரும்ப வேண்டும் இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்கள் வளமையான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் அனைத்திற்கும் இறைவன் அருள் புரிய வேண்டும் உங்களுக்காகவும் அனைவருக்காகவும் பிராத்திக்கிறேன்
என்றும் நன்றியுள்ள நண்பன்...

உங்கள் ஆறுதல்களுக்கு மிக்க மிக்க மகிழ்சி அடைகிறேன்.

என் மனநிலைகள் பழைமை நிலையை அடைய ...

ஆறுதல் கொள்ளுகிறேன்.

நாளை லண்டன் பிரதமரின் வாசஸ்தலத்துக்கு எதிரில்.....

இலங்கை அரசுக்கும்...பொது பல சேனா அமைப்புக்கும்...

எதிராக கண்டணப் பேரணியும்,எதிர்ப்புப் போராட்டமும் ...

நடாத்தத் திட்டமிட்டுள்ளனர்....

அது வெற்றி அடைய இறைஞ்சுகின்றேன் நண்பா !!!!
இறைவன் நாட்டப்படி நடக்கிறது அவனே போதுமானவன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Tue 17 Jun 2014 - 23:22

நண்பனே.....

வரலாறுகளையும்..ஆய்வுகளையும்...

ஒட்டு மொத்தமாக பதிவிட்டால்....

அதனை வாசிப்போருக்கும்...

சிறிய ..சிறிய விடய முற்றுக்களுடன் ...

பதிவிடும் போது அழுப்பில்லாமல் ...

பார்ப்போர் வாசிக்க நாடுவர் என்பதுதான்...

நான் புரிந்த சாயல்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 23:38

jaleelge wrote:நண்பனே.....

வரலாறுகளையும்..ஆய்வுகளையும்...

ஒட்டு மொத்தமாக பதிவிட்டால்....

அதனை வாசிப்போருக்கும்...

சிறிய ..சிறிய விடய முற்றுக்களுடன் ...

பதிவிடும் போது அழுப்பில்லாமல் ...

பார்ப்போர் வாசிக்க நாடுவர் என்பதுதான்...

நான் புரிந்த சாயல்....
உங்கள் எண்ணப்படியே சிறக்கட்டும்  ~/ ~/ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Wed 18 Jun 2014 - 23:03

11. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 11
(2014.06.18; இரவு -11.36)
........

இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது:

குச்சவெளி (திரு):

குளக்கோட்டு மன்னனின் கோயில் கட்டிட திருப்பணியின் போது தார்ப்பைப் புல்லில் ”கூர்ச்சம்” செய்து அனுப்புவது இப்பகுதி வெளியாகி இருந்து வாழ்ந்தவர்களின் திருப்பணியாக மேற்கொண்டனர்.

கூர்ச்சம் செய்து அனுப்பும் இடம் கூர்ச்சவெளி திரிபடைந்து குச்சவெளி என மாறியது .

(ஆதாரம் : திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் (இரண்டாம் பதிப்பு)-1997 ,எழுதியது - இ.வடிவேல்....219ம் பக்கத்தில் உள்ளது.)

மல்லிகைத்தீவு (திரு):

கேணேசர் கோயிலுக்கு இத்தீவுப்பகுதியிலிருந்து பூசைக்கு ”மல்லிகைப்பூ” அனுப்பும் திருத்தொண்டு புரிந்தபடியால் இக்கிராமம் தீவுப்பகுதியாக இருந்தமையாலும் மல்லிகைத்தீவு எனப்பட்டது.  

(ஆதாரம் : திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் (இரண்டாம் பதிப்பு)-1997 ,எழுதியது - இ.வடிவேல்....57ம் பக்கத்தில் உள்ளது.)

திமிலைத்தீவு (மட்டு):

தென்னிந்திய குடிகளான மீனவக் குலத்துத் திமிலர்கள் இலங்கை நோக்கி வந்து மட்டக்களப்பில் குடியேறி தரித்த தீவூப்பகுதியானது திமிலர்தீவு திரிபடைந்து திமிலத்தீவானது.

(ஆதாரம் : மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் 2005ம் ஆண்டு கலாநிதி. க.தா. செல்வராசா கோபால்( ஈழத்துப்பூராடனார்) எழுதிய நூலில் 224ம் பக்கத்தில் உள்ளது. )

வலையிறவு (மட்டு):

திமிலர்கள் மீனவக் குலத்தவர்களான படியினால் இவர்கள் இரவு வேலைகளில் வலைகட்டி மீன் பிடித்தமையினை அடிப்படையாகக் கொண்டு வலையிரவு எனவும் அழைக்கப்பட்டது.

(ஆதாரம் : மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் 2005ம் ஆண்டு கலாநிதி. க.தா. செல்வராசா கோபால்( ஈழத்துப்பூராடனார்) எழுதிய நூலில் 224ம் பக்கத்தில் உள்ளது. )

பத்தியைத் தூக்கிய பாலை (மட்டு):

திமிலர்களின் துன்பத்தை தாங்காமல் முக்குவ குலத்தவர்கள் வியாபாரிகளாக வந்த பட்டாளிகளின் உதவிகளுடன்.......
வெருகல் வரை துரத்தி.....
வாகரையில் எல்லைக்கல் நட்டு...
புலம்பெயர்ந்து செல்லும் போது.....
அகப்பட்ட திமில குலப் பத்தி என்னும்...
கர்ப்பவதிப் பெண்ணைப் பாலை மரத்தில் தூக்கிட்டுக் கொண்றனர்.அந்த இடம் ”பத்தியைத்தூக்கிய பாலை மரத்தடி” என அழைக்கப்படுகிறது.

(ஆதாரம் : மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் 2005ம் ஆண்டு கலாநிதி. க.தா. செல்வராசா கோபால்( ஈழத்துப்பூராடனார்) எழுதிய நூலில் 224ம் பக்கத்தில் உள்ளது. )

சந்தி வெளி (மட்டு):

திமிலர்களை துரத்திச் சென்றபோது சிதறிய முக்குவர்கள் அனைவரும் ...
சந்தித்த இடம் ”சந்தி வெளி” என்றாயிற்று.

(ஆதாரம் : மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் 2005ம் ஆண்டு கலாநிதி. க.தா. செல்வராசா கோபால்( ஈழத்துப்பூராடனார்) எழுதிய நூலில் 224ம் பக்கத்தில் உள்ளது. )

வந்தாறுமூலை (மட்டு):

முக்குவர்கள் துரத்தி சென்றுவிட்டு மீண்டும் வருகையில்...
வந்து ஆறி இருந்த மூலைப் பாங்கான....
இடத்தை இன்று ”வந்தாறுமூலை” என அழைக்கின்றனர்.

(ஆதாரம் : மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் 2005ம் ஆண்டு கலாநிதி. க.தா. செல்வராசா கோபால்( ஈழத்துப்பூராடனார்) எழுதிய நூலில் 224ம் பக்கத்தில் உள்ளது. )

(ஆய்வுத் திரி இன்னும் நீள்கிறது....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha Thu 19 Jun 2014 - 0:28

ஊர்களின் பெயர்கள் உருவான் விதம் மட்டுமல்லாது அதற்கான ஆதாரங்களோடு மிக சிறப்பாக கட்டுரை தொடர்கின்றது!

தகுந்த ஆதரங்களோடு ஒவ்வொரு விடயங்களையும் சேமித்து அதை தட்டச்சிட்டு ஆவணப்படுத்துவது எத்தனை சிரமமானது என்பதினை நான் அறிவேன்!

மனமார பாராட்டுவதுடன் நன்றியும் செலுத்துகின்றேன் சார்! தொடர்ந்து செல்லுங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Thu 19 Jun 2014 - 0:45

Nisha wrote:ஊர்களின் பெயர்கள்  உருவான் விதம்  மட்டுமல்லாது அதற்கான ஆதாரங்களோடு  மிக சிறப்பாக  கட்டுரை தொடர்கின்றது!

தகுந்த ஆதரங்களோடு ஒவ்வொரு விடயங்களையும் சேமித்து அதை தட்டச்சிட்டு ஆவணப்படுத்துவது எத்தனை சிரமமானது  என்பதினை நான் அறிவேன்!

மனமார  பாராட்டுவதுடன் நன்றியும் செலுத்துகின்றேன் சார்!  தொடர்ந்து செல்லுங்கள்!

உயர்ந்த உள்ளம் கொண்டவரே...

ஆய்வின் பாரதூரத்தையும் , சிரமத்தையும் நன்கு உணர்ந்தவராக...

பின்னூட்டம் வழங்கியமை என் மனதை விட்டகலாது மேடம்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Thu 19 Jun 2014 - 11:32

12. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 12
(2014.06.19; நண்பகல் -12.36)
........

இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது........

                சந்துருக்கொண்டான் (மட்டு):

முக்குவர்களினை தாக்குவதற்காக பதுங்கி இருந்த சத்துருக்கனை (திமிலர்) அழித்து....

கொண்டுகுவித்த இடம் ”சத்துருக்கொண்டான்” என்று அழைக்கப்பட்டது.

(ஆதார உசார்துணை நூலாக : கலாநிதி க.தா. செல்வராசா (ஈழத்துப்பூராடனார்) 2005ம் ஆண்டு எழுதிய மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடிகள் எனும் நூலின் 225ம் பக்கத்தில் காணப்படுகிறது.)

                ஏறாவூர் (மட்டு):

திமிலர்கள் உட்பட ஏனைய எதிரிகளினை ஏறவிடாத ஊர்......

உதவிக்கு பட்டாணியர்களினை (இந்திய முஸ்லிம் வர்த்தகர்கள்) உதவிக்கு குடியமர்த்திய ஊர்.
எறகுலப்பற்று பின்னர் திரிபடைந்து ஏறாவூர் என வழங்கலாயிற்று.

(ஆதார உசார்துணை நூலாக : கலாநிதி க.தா. செல்வராசா (ஈழத்துப்பூராடனார்) 2005ம் ஆண்டு எழுதிய மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடிகள் எனும் நூலின் 225ம் பக்கத்தில் காணப்படுகிறது.)

          மாமாங்கம் (மட்டு):

இந்தியா காசியில் இருந்து வந்த ஒரு முனிவர் தம் கமண்டலத்திற்கு வந்த யமுனை, கங்கை, சரஸ்வதி, கோதாவரி, துங்கபத்திரை, பவாணி, காவேரி, தாமிரபரணி, சேது முதலான...

ஒன்பது மங்கைகளின் பெயரிலமைந்த தீர்த்தங்களை இக்குளத்தில் கலந்து நீராடி பெரும் பயன்பெற்றதாக ஐதீக செய்தி நம்பிக்கையுண்டு.

அதனால் ”மா” என்றால் அதிக, மங்கைகளின் தீர்த்தம் - மாமாங்கைத் தீர்த்தம் உள்ள புனிதபதி என்பதனால் மாமாங்கம் என அழைக்கப்படுகிறது.
 
(ஆதார உசார்துணை நூலாக : வித்துவான் பண்டிதர் வீ.சி.கந்தையா 1997ம் ஆண்டு எழுதிய மட்டக்களப்பு  சைவக் கோயில்கள் (இரண்டு பாகங்கள்) எனும் நூலின்  11ம் பக்கத்தில் காணப்படுகிறது.)

          திருக்கோயில் (அம்):

இங்கு திருப்படை கோயிலை ஒட்டியதாக பெயர் வந்தது. ஆரம்பத்தில் கி.மு. 103ல் இங்கு தமிழரின் இரண்டாம் படை எழுச்சி பெற்றது.

வாலகம்பாகு மன்னனின் காலம் என ஊகிக்க முடிகிறது. பூர்வீகத்தில் வேடவர்களால் இலைகுளைகளைக் கொண்டு முருகனுக்கு பந்தல் கட்டப்பட்டது.

தமிழரின் படை எழுச்சியின் போது கல்லினால் கட்டப்பட்ட கோயிலில்....
வேடவரது பந்தலுக்குள் ”வடக்கு” முகமாக....

வீற்றிருந்த வேலானது புதிய கற்கோயிலிலும் ”கிழக்கு” முகமாகத் திரும்பி விட்டதன் காரணமாக.....

திரும்பிய கோயில் திரிபடைந்து திருக்கோயில் என அழைக்கப்படுகிறது.

(ஆதார உசார்துணை நூலாக : வித்துவான் பண்டிதர் வீ.சி.கந்தையா 1997ம் ஆண்டு எழுதிய மட்டக்களப்பு சைவக் கோயில்கள் (இரண்டு பாகங்கள்) எனும் நூலின்  50 ,51ம் பக்கத்தில் காணப்படுகிறது.)

            உகந்தை (அம்):

முருகனே தனது படைவீடுகளில் ஒன்றாக கொண்டு; போர் முடிந்த பின்னர் மீண்டு வந்து களைப்பாறிச் சிலகாலம் இங்கே இருந்ததாகவும்,.....

அப்படி போருக்கு முன்னரும், பின்னரும் முருகன் உவந்து இருந்தபடியால் இந்த இடம் ”உகந்தை” என அழைக்கப்படுகிறது.

இது இற்றைக்கு முன் இரண்டாயிரம் வருடம் பழமைவாய்ந்த இடமாகும்.

(ஆதார உசார்துணை நூலாக : வித்துவான் பண்டிதர் வீ.சி.கந்தையா 1997ம் ஆண்டு எழுதிய மட்டக்களப்பு சைவக் கோயில்கள் (இரண்டு பாகங்கள்) எனும் நூலின்  30ம் பக்கத்தில் காணப்படுகிறது.)

         மாவடிப்பள்ளி (அம்):

இங்கு ஏறத்தாள 300 வருடங்களுக்கு முன் சரித்திர சான்றுடைய ஓர் பள்ளிவாசலுண்டு.

இவ்விடம் ஹயாதுநபி அல்லது ஹிலுத் நபி அவர்களின் பேரிலான புனித ஸ்தலமாகக் கணிக்கப்பட்டு வருகிறது.

இப்பள்ளிவாசல் மாமரத்தடியில் இருந்தமையினால் இதனை மாவடிப்பள்ளி என்று அழைக்கின்றனர்.

(ஆதார உசார்துணை நூலாக : கலாநிதி எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களினால்  1997 ஆண்டு தொகுக்கப்பட்ட   அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் எனும் தொகுப்பில் கலாபூஷணம் . யூ.எல். அலியார்  எழுதிய (கட்டுரை)  145ம் பக்கத்தில் காணப்படுகிறது.)

               ஆய்வுத் திரி தொடர்கிறது.......
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் Thu 19 Jun 2014 - 21:29

Nisha wrote:ஊர்களின் பெயர்கள்  உருவான் விதம்  மட்டுமல்லாது அதற்கான ஆதாரங்களோடு  மிக சிறப்பாக  கட்டுரை தொடர்கின்றது!

தகுந்த ஆதரங்களோடு ஒவ்வொரு விடயங்களையும் சேமித்து அதை தட்டச்சிட்டு ஆவணப்படுத்துவது எத்தனை சிரமமானது  என்பதினை நான் அறிவேன்!

மனமார  பாராட்டுவதுடன் நன்றியும் செலுத்துகின்றேன் சார்!  தொடர்ந்து செல்லுங்கள்!
இதையே நானும் ரிப்பீட் செய்கிறேன் தொடருங்கள் சார்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Thu 19 Jun 2014 - 22:22

நண்பன் wrote:
Nisha wrote:ஊர்களின் பெயர்கள்  உருவான் விதம்  மட்டுமல்லாது அதற்கான ஆதாரங்களோடு  மிக சிறப்பாக  கட்டுரை தொடர்கின்றது!

தகுந்த ஆதரங்களோடு ஒவ்வொரு விடயங்களையும் சேமித்து அதை தட்டச்சிட்டு ஆவணப்படுத்துவது எத்தனை சிரமமானது  என்பதினை நான் அறிவேன்!

மனமார  பாராட்டுவதுடன் நன்றியும் செலுத்துகின்றேன் சார்!  தொடர்ந்து செல்லுங்கள்!
இதையே நானும் ரிப்பீட் செய்கிறேன் தொடருங்கள் சார்

அனுராகவன் தம்பி...

இந்தப் பதிவினைப் பார்ப்பதில்லையோ ?????

அவர் இப்பக்கத்துக்கு ஒரு தடவையாவது வந்ததே இல்லை...

அவருக்கு....

இந்த விடயம் விருப்பமில்லையோ தெரியாது....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha Thu 19 Jun 2014 - 23:14

இலங்கை குறித்த பகிர்வு அவர்களுக்கு புரியாது என்பதால் தவிர்க்கலாம் என நினைக்கின்றேன்!

நாம் இந்தியச்செய்திகளை அறிந்திட ஆர்வம் காட்டுவது போல் இலங்கைசெய்திகள் குறித்து அறிய ஆர்வம் காட்டுவது இல்லை!

யாரும் பின்னூட்டம் இடாவிட்டாலும் நீங்கள் உங்கள் பதிவை தொடருங்கள் ஜலீல் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Thu 19 Jun 2014 - 23:22

Nisha wrote:இலங்கை குறித்த பகிர்வு அவர்களுக்கு புரியாது என்பதால்  தவிர்க்கலாம் என நினைக்கின்றேன்!

நாம் இந்தியச்செய்திகளை அறிந்திட ஆர்வம் காட்டுவது போல் இலங்கைசெய்திகள் குறித்து அறிய ஆர்வம் காட்டுவது இல்லை!

யாரும் பின்னூட்டம் இடாவிட்டாலும் நீங்கள் உங்கள் பதிவை தொடருங்கள் ஜலீல் சார்!

ம்...சரி....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha Thu 19 Jun 2014 - 23:25

என்னது ம்.. சரி! என டல்லாக சொல்கின்றீர்கள்!

பின்னூட்டம் வராவிட்டால் என்ன ! பத்து பேருக்கான் பின்னூட்டம் நானும் நண்பனும் தரோம் .! நீங்க தொடருங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Sat 21 Jun 2014 - 18:54

13. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 13
(2014.06.20; பிற்பகல் -6.45)
........

இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது........

இயற்கை நியதிகளுக்கு அடிபணிந்து இயற்கை
வளங்களையே தம் வாழ்க்கைக்கு ஆதாரமாக்கிக்
 கொண்ட பண்டைக்கால மனித இனங்கள்
 இயற்கைவளம் செறிந்த இடங்களையே ......
தமது குடியிருப்புக்களாக ஆக்கிக் கொண்டன.

உலகின்  பழையவையான எகிப்திய, சுமேரிய,
பபிலோனிய, சிந்துவெளி நாகரீகங்கள் அனைத்தும்
ஆற்றங்கரைக் குடியிருப்புக்களாகவே தோன்றி வளர்ச்சி
பெற்றவையாகும்.

 பண்டைக்கால மக்கள் இடங்களுக்குப் பெயர் சுட்டி
 அழைக்கத் தொடங்கிய காலத்திலே.....
 நீர் நிலைப்பெயர்களே முதன் முதலிற்
 பெரிதுந் தோன்றியிருக்க வேண்டும்
 என எதிர்பார்த்தல் இயல்பானதே.

இதற்கு இன்னும் ”நீரகம் பொருந்திய ஊரசத்திரு”
என்பது ஒளவையார் வாக்கு பண்டைக்கால ...
மக்களின் குடியிருப்புக்கள் நீர்நிலை சார்ந்த இடங்களிலேயே அமைந்திருந்தன.

 கிழக்கு மாகாணத்தில் அதிலும் ....
மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை மாவட்டங்கள்
நீர்வளம் செறிந்த பிரதேசம் என்றும்,...
நீர் நிலைப் பெயர்கள் இங்கு பெரிதுங் காணப்படுதல் சிறப்பியல்பாயிற்று.

இதில் அளை, ஆறு, ஓடை, கரை, களப்பு, குளம், மேணி, கொட்டு, துறை, வில் என்பனவாகும்.

 இத்தகு நீர்நிலைப் பெயர்க் கூறுகளோடு முன்னொட்டு
 (Prefix)   நிலையில் அடைகள் ,  இயற்கைக் கூறுகள்,
ஆட்பெயர்கள் என்பன இணைந்து இடப்பெயர்கள் ஆக்கம்
 பெற்றுள்ளமையினை நன்கு விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது.

 இதில் பெயரின் பின்னால் அடைப்புக்குள் அம் =அம்பாறை, மட் =  மட்டக்களப்பு,
 திரு =  திருகோணமலை என்று மாவட்டங்களை குறிப்பிட்டுள்ளதனை அவதானிக்கத்தக்கது.

(தேடல் சேனைக்காக தொடரும்......)
நீர்
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge Mon 23 Jun 2014 - 20:41

14. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 14
(2014.06.23; இரவு -7.35)
........

இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது........

    ”ஆரை” ஈற்றுப் பெயர்:

ஆரை என்பது - மழை பெய்து நீர் வடிந்து ஓடும் இடம் ”ஆரை” அல்லது ”ஆரைப்பற்றை” எனப்படும்.

அதனை மட்டக்களப்புக்கு தெற்கே நான்கு மைல் தொலைவில் ஆரைப்பற்றை என்ற கிராமம் உள்ளது.

       ஆரையம்பதி (மட்டு):

ஆரையம்பதி எனும் நீரோடைகள் ஊரை வளைத்து, வளைத்து சென்று வாவியுனூடாக கடலுடன் கலப்பதனாலும் இவ்வூருக்கு ஆறைப்பற்றை என்றும்.....

 இவ்வோடைகளில் ஆரல்மீன்கள் நிறைய வாழ்ந்த காரணத்தால் மேலும் ஆரல் எனப்படும் ”வல்லாரை” என்கின்ற கீரை வகை நிறைய இந்நீரோடை ஓரங்களில் முளைந்திருந்தாலும் ஆரைப்பற்றை எனப்பட்டது.

இப்பெயர் 1872ம் ஆண்டு வர்த்தகமாணியில் திருத்தப்பட்டு ”ஆரையம்பதி” என்று அழைக்கப்படுகிறது.

(ஆதார உசார்துணை நூலாக : வித்துவான் பண்டிதர் வீ.சி.கந்தையா 1997ம் ஆண்டு எழுதிய மட்டக்களப்பு சைவக் கோயில்கள் (இரண்டு பாகங்கள்) எனும் நூலின்  303ம் பக்கத்தில் காணப்படுகிறது.)

       ”ஆறு” ஈற்றுப்பெயர்:

 நதிக்கரைகளே மனித நாகரிகத்தின் ஊற்றிடங்களாகும்.....
தண் பொருணையாறு என்ற அழகு தமிழ்ப் பெயர் கண்ட தமிழர்.

தாம் வாழ்ந்த ஆற்றுப்படுக்கைகளுக்கு அவ்வாற்றுப் பெயர்களை இட்டழைக்க, காலப்போக்கில் அதன் சூழலில் அமைந்த குடியிருப்பும் அப்பெயர் பெறுவதாயிற்று.

திராவிட ஆரிய நாகரீகங்களிலும் ”ஆறு” தெய்வமாகப் போற்றப்படும் நிலை உள்ளது.

அதனோடு இணைந்து விழாக்களும், கதைகளும் தோற்றுவிக்கப்பட்டன.

இந்நிலையில் ஆறுகள் மக்கள் வாழ்வில் முதன்மை பெற்றன. அதனால் ”அறில்லா ஊருக்கு அழகு பாழ்” என்ற பழமொழியும் வழங்குவதாயிற்று.

(தேடல் திரி இன்னும் நகர்கிறது.....) 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 2 Empty Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum