சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 4 Khan11

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

Sticky கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Mon 9 Jun 2014 - 20:41

First topic message reminder :

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

★கிழக்கிலங்கையின் இடப்பெயர்கள் பற்றிய ஆய்வுகளைப் பல வருடங்களாக மேற்க்கொண்ட முயற்சியின் பெறுபேறு இவைகள்.

நான் ஓர் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வரலாற்று ஆய்வாளர் அல்ல ; என்பதை தங்களின் மேன்மையான கவனத்துக்கும்- சிந்தனைக்கும் எத்திவைக்கிறேன் உறவுகளே !!!

♥கிழக்கிலங்கையின்  இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

●தேடல் - 01    (2014.06.09 ; மாலை-8.13)

அறிமுகம்:

பழங்குடி மக்கள்....
நதிக்கரை ஓரங்களிலும், காடுகளிலும் அலைந்து திரிந்து வேட்டையாடித் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்ந்த நிலையில் அவர்களுக்கு நிலையான இருப்பிட வசதிகளை அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

காலம் செல்லச் செல்ல நாகரீக வளர்ச்சியும், தேவைகளும், ஒழுங்குகளும் ஏற்பட்ட நிலையில் நிலையாக அவர்கள் ஓரிடத்தில் இருந்து தொழிற்பட வேண்டிய அவசியம் ஏற்படலாயிற்று.

(திரி   இன்னும்   நீழும்......)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Tue 8 Jul 2014 - 18:11

21. கிழககில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 21
(2014.07.08; பிற்பகல் -6.32)

இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது.......

”ஓடை”ஈற்றுப் பெயர் நகர்கிறது...

புவிச்சன்னோடை (மட்டுகிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 4 3183672818

இது புவிச்சன் என்ற தமிழ் பழங்குடி நபரின் முற்சியினால் ஏற்படுத்தப்பட்ட ஓடை என்பதனால் புவிச்சன்னோடை எனப்பட்டது.

(உசார்த் துணையாக தகவல் வழங்கியவர்....அல்-ஹாஜ். வை. எம். எம். ஏ. காதர் -சமாதான நீதிவானும் , ஒய்வு பெற்ற அதிபரும் , ஏறாவூர் மத்தியஸ்தர் சபையின் தலைவராக கடமையாற்றியவர்)
மாவடியோடை (மட்டுகிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 4 3183672818

இது ஏறாவூர் பிரதேசத்தினை அண்டிய பகுதியில் மாமரத்தடியில் ஆரம்பித்த இந்நீரோடை என்பதனால் ”மாவடியோடை” என்றாயியது.

(உசார்த் துணையாக தகவல் வழங்கியவர்....அல்-ஹாஜ். வை. எம். எம். ஏ. காதர் -சமாதான நீதிவானும் , ஒய்வு பெற்ற அதிபரும் , ஏறாவூர் மத்தியஸ்தர் சபையின் தலைவராக கடமையாற்றியவர்)

புலுட்டு மானோடை (மட்டுகிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 4 3183672818ஆய்வுத்திரி தொடரும்......

Last edited by jaleelge on Tue 8 Jul 2014 - 18:26; edited 3 times in total
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Tue 8 Jul 2014 - 18:18

22. கிழககில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 22
(2014.07.08; பிற்பகல் -6.42)

இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது.......

”ஓடை”ஈற்றுப் பெயர் நகர்கிறது...

மாவடியோடை (மட்டுகிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 4 3183672818

இது ஏறாவூர் பிரதேசத்தினை அண்டிய பகுதியில் மாமரத்தடியில் ஆரம்பித்த இந்நீரோடை என்பதனால் ”மாவடியோடை” என்றாயியது.

(உசார்த் துணையாக தகவல் வழங்கியவர்....அல்-ஹாஜ். வை. எம். எம். ஏ. காதர் -சமாதான நீதிவானும் , ஒய்வு பெற்ற அதிபரும் , ஏறாவூர் மத்தியஸ்தர் சபையின் தலைவராக கடமையாற்றியவர்)

புலுட்டு மானோடை (மட்டுகிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 4 3183672818
இது ஏறாவூர் பிரதேசத்திற்குரிய பகுதியாகும். மாமரத்தில் ”பிலாட்டு” இனவகை மரம் உள்ளது அம்மரத்தினருகில் செல்லும் ஓடை என்பதனால் பிலாட்டு மா ஓடை திரிபடைந்து
புலுட்டுமானோடை
என்று வழக்கிலுள்ளது.

(உசார்த் துணையாக தகவல் வழங்கியவர்
அல்-ஹாஜ். வை. எம். எம். ஏ. காதர்
சமாதான நீதிவானும் , ஒய்வு பெற்ற அதிபரும் , ஏறாவூர் மத்தியஸ்தர் சபையின் தலைவராக கடமையாற்றியவர்)உப்போடை (மட்டுகிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 4 3183672818

கடலும் கழிமுகமும் சந்திக்கும் இடத்தில் உப்புநீர் ஏறி உப்பு விளைந்திருப்பதனால் உப்புஓடை என்பது பின் திரிபடைந்து உப்போடை என்றாயிற்று.

இது சின்னஉப்போடை என்ற இன்னுமொரு இடத்திற்கும் இது பொருந்தும்.

(உசார்த் துணையாக நூலாக..:..கலாநிதி க.தா. செல்வராசா கோபால் (ஈழத்துப்பூராட்டனார்) -மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் -2005 நூலில்148ம் பக்கத்தில்

களியோடை (அம்கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. - Page 4 3183672818

இது ஒலுவிலுக்கு அருகாமையில் உள்ளது. கடலுடன் சேர்வதற்காய் இவ்ஓடை நீர் ஊரை விட்டு கழிந்து செல்லும் ஓடை என்பதால் களியோடை எனப்பட்டது.
மேலும் களிமண் வகை அதிகமாக இவ் ஓடையிலுள்ளது என்பதனாலும் களியோடை என்றாயிற்று

(உசார்த் துணையாக நூலாக..:..கலாநிதி க.தா. செல்வராசா கோபால் (ஈழத்துப்பூராட்டனார்) -மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் -2005 நூலில்148ம் பக்கத்தில்

ஆய்வுத்திரி தொடரும்......
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் on Wed 9 Jul 2014 - 10:02

Nisha wrote:கடைசி இரு பதிவையும்  மீள் பார்வை பாருங்கள் ஜலீல் சார்!

எழுத்தின் அளவு செட் ஆகாமல் பல வரிகளுக்கிடையில் தெரிகின்றது.
பார்க்கிறேன் அக்கா கொஞ்சம் கஷ்டம்தான்  )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha on Wed 9 Jul 2014 - 10:13

ஓரளவு செட் செய்திட்டேன். ஒரு பதிவு இருக்கின்றது.
நானே கவனிக்கிறேன்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Wed 9 Jul 2014 - 15:37

Nisha wrote:ஓரளவு செட் செய்திட்டேன். ஒரு பதிவு இருக்கின்றது.
நானே கவனிக்கிறேன்பா!

உங்கள் கண்காணிப்புக்கு ....... )(
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha on Wed 9 Jul 2014 - 18:19

கண்காணிப்புக்கு என்ன குறைச்சல் ஜலீல் சார்! செயலாற்றம் செய்திடத்தான் நேரம் எடுக்கின்றது. உங்கள் கடைசி நான்கு பதிவிலும் எழு்த்து செட்டிங்க, வர்ணமிடல் என ரெம்ப நேரம் செலவு செய்துதான் எல்லாம் திருத்த முடிந்தது.

நீங்களே பதிந்ததும் ஒவ்வொன்றாக செய்திட முடிந்தால் எல்லோருக்கும் இலகுதானே!

மிக அருமையானதொரு பகிர்வை எமக்காக சிரமபட்டு தேடி பகிரும் போது அது படிப்பதற்கு ஏற்ப கவர்வதாக இருக்கவும் வேண்டும் தானே!

ஊர்களும் அதன் பெயர்கள் வந்ததற்கன விரிவான் விளக்கங்களுமாய் திரியில் நிரம்ப விடயம் அறிந்திட்டேன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Sat 12 Jul 2014 - 22:05

23 -கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 23
(2014.07.13;  இரவு 10.46)

இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது.......

”கரை”ஈற்றுப் பெயர் நகர்கிறது

நீர் நிலைகளின் கரையோரங்களை அடுத்துள்ள நிலப்பகுதி அல்லது குடியிருப்புக்கள் ”கரை” என்ற ஈற்றுச்சொல் அமைந்த பெயர்களினால் வழங்கப்பட்டுள்ளவற்றை இங்கு அவதானிப்போம்.

அலவாக்கரை (அம்):
சம்மாந்துறையின் வடக்குப்புற அந்தத்தில் கரைப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பகுதியை ”அலவக்கரை” என்பர்.

(உசார்த் துணையாக தகவல் வழங்கியவர்....அல்-ஹாஜ். அதிபர்மணி. எம் . ஐ. கோஸ்முகம்மது -சமாதான நீதிவானும் , ஒய்வு பெற்ற அதிபரும் , சம்மாந்துறை அரச ஓய்வு பெற்றோர் சபையின் தலைவராக கடமையாற்றியவர்)

வாகரை (மட்டு):
ஆரம்பத்தில் ”உவாகரை” என்று அழைக்கப்பட்டது. ”உவா” எனும் சொல் கடலினையும் ஒரு வகை மரத்தையும் குறித்து நிற்பதால் ”உவா” எனும் மரங்கள் செறிந்தும், கடற்கரையை சுட்டியும் உவாகரை பின் ”வாகரை”யானதாம்.

ன்னுமொரு கருத்தினடிப்படையில் ”வாகை” மரங்கள் செழித்து வளர்ந்து இருந்தாலும் இப்பெயர் சுட்டுவதாகவும், ஒருவரை ”வா கரைக்கு” என்று அழைத்தாலும் ......வாகரை என்றும்,

மேலும் கடல் அலை துள்ளிப்பாய்ந்து கரையைச் சேருவதால் வாவு (பாய்கின்ற) கரை என்பதால் ”வாகரை” என்னும் பெயர் வரலாயினவாம்.

(உசார்த் துணையாக தகவல் நூல் ....வாகரை வாணன் - எழுதிய  “வாகரை” ஒரு வரலாற்றுப் பார்வை -2006 ல்  14ம்  பக்கத்தில் )

எழுவான் கரை (மட்டு):
மட்டக்களப்பு மாவத்தில் கிழக்குப் புரமாக சூரியன் எழுகின்றபோது சூரியஒளியை முதலில் தரிசிக்கும் ஊர்களை உள்ளடக்கிய பகுதி எழுவான்கரை எனப்படும்.

(உசார்த் துணையாக தகவல் வழங்கியவர்....அல்-ஹாஜ். வை. எம். எம். ஏ. காதர் -சமாதான நீதிவானும் , ஒய்வு பெற்ற அதிபரும் , ஏறாவூர் மத்தியஸ்தர் சபையின் தலைவராக கடமையாற்றியவர்

படுவான்கரை (மட்டு):
மட்டக்களப்பு மாவட்டத்தின் குறிப்பாக பட்டிருப்பு பிரதேச செயலாளர் பிரிவின் மட்டு வாவிக்கரையின் மேற்குப்புறமாக உள்ள சூரியன் படும் பகுதியிலுள்ள குளக்கரையோரப் பகுதிகள் யாவும் படுவான்கரைக்கு உரியனவாக அழைக்கப்படுகிறது.

(ஆதார உசார்துணை நூலாக : செல்வி க. தங்கேஸ்வரி  B.A (தொல்லியல் சிறப்புப் பட்டம்) அவர்கள் எழுதிய .)”கிழக்கிலங்கை பூர்வீக வரலாறு” 2001 எனும் வரலாற்று நூலில்

திரி தொடரும்..........
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha on Sat 12 Jul 2014 - 22:07

வாகரை குறித்த பெயர்க்காணம் சுவாரஷ்யம் தான்.

தொடருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Sat 12 Jul 2014 - 22:30

Nisha wrote:வாகரை குறித்த பெயர்க்காணம் சுவாரஷ்யம் தான்.

தொடருங்கள்!

உங்கள் அவதானம் இந்தப் பக்கம் அதீத பழுவுக்கு மத்தியில் வருவது ...

படைப்பாளிகளுக்கு  “சேலைன் பாய்ச்சுவது “ போன்றுள்ளது...

இவைகள் ஒவ்வொன்றாக தேடி ..தொகுத்து பதிவிடல் சற்று சிறமம்தான்...

தொடர்கிறேன் .....நிஷாவின் பின்னூட்டலுக்கு நன்றி. )( 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் on Sun 13 Jul 2014 - 9:48

jaleelge wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஊர்களின் பெயர்கள்  உருவான் விதம்  மட்டுமல்லாது அதற்கான ஆதாரங்களோடு  மிக சிறப்பாக  கட்டுரை தொடர்கின்றது!

தகுந்த ஆதரங்களோடு ஒவ்வொரு விடயங்களையும் சேமித்து அதை தட்டச்சிட்டு ஆவணப்படுத்துவது எத்தனை சிரமமானது  என்பதினை நான் அறிவேன்!

மனமார  பாராட்டுவதுடன் நன்றியும் செலுத்துகின்றேன் சார்!  தொடர்ந்து செல்லுங்கள்!
இதையே நானும் ரிப்பீட் செய்கிறேன் தொடருங்கள் சார்

அனுராகவன் தம்பி...

இந்தப் பதிவினைப் பார்ப்பதில்லையோ ?????

அவர் இப்பக்கத்துக்கு ஒரு தடவையாவது வந்ததே இல்லை...

அவருக்கு....

இந்த விடயம் விருப்பமில்லையோ தெரியாது....
இல்லை இல்லை ஏற்கனவே ராகவன் படித்துள்ளார் பின்னூட்டமிட்டுள்ளார் உங்களைப் பாராட்டியும் உள்ளார் நீங்கள் தொடருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by ராகவா on Sun 13 Jul 2014 - 9:53

jaleelge wrote:
அனுராகவன் wrote:நல்லது சகோ...இனிய பயணம் நாங்களும் சேர்ந்து படகை கரை சேர்ப்போம்...
படங்களும் தந்தால் இன்னும் ஆர்வத்தோடு படிக்க ஏதுவாக இருக்கும்..

இனிய கால சுவடுகள்...பயணம் தொடரட்டும்..

 )(  )(  )(  )(  )(  )(  )(  )(  )( 

பின்னுாட்டலுக்கு  மிக.....மிக..... நன்றி ராகவா  !!!!!!!!
நான் முதல் பக்கத்தில் பார்த்தாலே உங்களோடு நானும் உள்ளேன்..ஏன் சந்தேகம்!
நாங்கள் உங்களின் பாகமே! இனி தொடருங்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் on Sun 13 Jul 2014 - 10:00

அனுராகவன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:நல்லது சகோ...இனிய பயணம் நாங்களும் சேர்ந்து படகை கரை சேர்ப்போம்...
படங்களும் தந்தால் இன்னும் ஆர்வத்தோடு படிக்க ஏதுவாக இருக்கும்..

இனிய கால சுவடுகள்...பயணம் தொடரட்டும்..

 )(  )(  )(  )(  )(  )(  )(  )(  )( 

பின்னுாட்டலுக்கு  மிக.....மிக..... நன்றி ராகவா  !!!!!!!!
நான் முதல் பக்கத்தில் பார்த்தாலே உங்களோடு நானும் உள்ளேன்..ஏன் சந்தேகம்!
நாங்கள் உங்களின் பாகமே! இனி தொடருங்கள்...
மறந்திருப்பார் போல் உங்கள் ஆதரவும் தட்டிக்கொடுப்பும் கண்டிப்பாக தேவை ராகவன் படைப்பாளியின் பலமே நமது பின்னூட்டங்கள்தான் தொடர்வோம்..
புரிதலுக்கு நன்றி ராகவன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by ராகவா on Sun 13 Jul 2014 - 10:04

மனிதன் மகிழ்ச்சியோடு இருக்குபோது உணவு கூட தேவையில்ல...ஆனால் கஸ்டம்,தோல்வியில் ஆதரவும்,அன்பும் ,நிதானமும் மிகவும் அவசியம்... {_  {_ 

கோபம் இருந்தால் ஒரு வார்ததை சொல்லி செல்லமாக திட்டலாம்..ஆனால் அதை அடக்கினால் அவைகள் பொல்லாத
செயலை காட்டும்... i* 

நன்றி அண்ணா..ஜில்லேஜி அவர்கள் அனைவரின் அன்பை தேடுகிறார் போல...
நாமும் வாரி வாரி வள்ளல் போல் கொடுப்போம்..
நன்றி உடன் பின்னோட்டத்திற்கு... ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் on Sun 13 Jul 2014 - 10:27

jaleelge wrote:13. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 13
(2014.06.20; பிற்பகல் -6.45)
........

இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது........இயற்கை நியதிகளுக்கு அடிபணிந்து இயற்கை
வளங்களையே தம் வாழ்க்கைக்கு ஆதாரமாக்கிக்
 கொண்ட பண்டைக்கால மனித இனங்கள்
 இயற்கைவளம் செறிந்த இடங்களையே ......
தமது குடியிருப்புக்களாக ஆக்கிக் கொண்டன.

உலகின்  பழையவையான எகிப்திய, சுமேரிய,
பபிலோனிய, சிந்துவெளி நாகரீகங்கள் அனைத்தும்
ஆற்றங்கரைக் குடியிருப்புக்களாகவே தோன்றி வளர்ச்சி
பெற்றவையாகும்.

 பண்டைக்கால மக்கள் இடங்களுக்குப் பெயர் சுட்டி
 அழைக்கத் தொடங்கிய காலத்திலே.....
 நீர் நிலைப்பெயர்களே முதன் முதலிற்
 பெரிதுந் தோன்றியிருக்க வேண்டும்
 என எதிர்பார்த்தல் இயல்பானதே.

இதற்கு இன்னும் ”நீரகம் பொருந்திய ஊரசத்திரு”
என்பது ஒளவையார் வாக்கு பண்டைக்கால ...
மக்களின் குடியிருப்புக்கள் நீர்நிலை சார்ந்த இடங்களிலேயே அமைந்திருந்தன.

 கிழக்கு மாகாணத்தில் அதிலும் ....
மட்டக்களப்பு, அம்பாறை, திருமலை மாவட்டங்கள்
நீர்வளம் செறிந்த பிரதேசம் என்றும்,...
நீர் நிலைப் பெயர்கள் இங்கு பெரிதுங் காணப்படுதல் சிறப்பியல்பாயிற்று.

இதில் அளை, ஆறு, ஓடை, கரை, களப்பு, குளம், மேணி, கொட்டு, துறை, வில் என்பனவாகும்.

 இத்தகு நீர்நிலைப் பெயர்க் கூறுகளோடு முன்னொட்டு
 (Prefix)   நிலையில் அடைகள் ,  இயற்கைக் கூறுகள்,
ஆட்பெயர்கள் என்பன இணைந்து இடப்பெயர்கள் ஆக்கம்
 பெற்றுள்ளமையினை நன்கு விரிவாக ஆராயப்பட வேண்டியுள்ளது.

 இதில் பெயரின் பின்னால் அடைப்புக்குள் அம் =அம்பாறை, மட் =  மட்டக்களப்பு,
 திரு =  திருகோணமலை என்று மாவட்டங்களை குறிப்பிட்டுள்ளதனை அவதானிக்கத்தக்கது.

(தேடல் சேனைக்காக தொடரும்......)
நீர்

இதில் அளை, ஆறு, ஓடை, கரை, களப்பு, குளம், மேணி, கொட்டு, துறை, வில் என்பனவாகும்.

அறிந்தும் அறியாத சில தகவல்கள் நிறைந்துள்ளது தொடருங்கள் ஜலீல் ஜீ இதில் நீங்கள் இப்படி குறிப்பிடும் போதுதான் எனக்குத் தெரிகிறது இப்படிதான் ஊர் பெயர்வகள் வந்துள்ளது என்று..!
மக்களின் குடியிருப்புக்கள் நீர்நிலை சார்ந்த இடங்களிலேயே அமைந்திருந்தன அளை ஆறு ஓடை இவைகளின் முன்னெழுத்துக்கள் வரும் போது ஊரின் பெயரும் வருகிறது நீங்கள் தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Sun 13 Jul 2014 - 16:43

நண்பன் wrote:
jaleelge wrote:13. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :

●தேடல் - 13
(2014.06.20; பிற்பகல் -6.45)
........

இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது........
 
இதில் அளை, ஆறு, ஓடை, கரை, களப்பு, குளம், மேணி, கொட்டு, துறை, வில் என்பனவாகும்.

அறிந்தும் அறியாத சில தகவல்கள் நிறைந்துள்ளது தொடருங்கள் ஜலீல் ஜீ  இதில் நீங்கள் இப்படி குறிப்பிடும் போதுதான் எனக்குத் தெரிகிறது இப்படிதான் ஊர் பெயர்வகள் வந்துள்ளது என்று..!
மக்களின் குடியிருப்புக்கள் நீர்நிலை சார்ந்த இடங்களிலேயே அமைந்திருந்தன   அளை ஆறு ஓடை இவைகளின் முன்னெழுத்துக்கள் வரும் போது ஊரின் பெயரும் வருகிறது நீங்கள் தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்

பின்னூட்டத்தின் ஆளுமை நண்பனுக்கு தனியழகு.....

நன்றிகள்... எமது திரிக்கும் வருகிறீர்கள்...பாராட்டுக்கள்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by ராகவா on Mon 14 Jul 2014 - 6:26

தொடருங்கள் அண்ணா...நானும் தொடர்ந்து படித்து வருகிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Thu 17 Jul 2014 - 23:12

24 -கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் :
●தேடல் - 24
(2014.07.18;   அதிகாலை : 12..14)

இடப்பெயர் ஆய்வு தொடர்கிறது.......

”கரை” முதனிலைப்  பெயர் நகர்கிறது 

கரைவாகுப்பற்று (அம்):
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, சாய்ந்தமருது, பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கடற்கரையை அண்டிய பிரதேசங்களை உள்ளடக்கிய பகுதியை பற்று என்றும் குறிப்பிட்டதனால் கரைப்பக்கமுள்ளபற்று பின் திரிபடைந்து ”கரைவாகுப்பற்று” என்றழைக்கப்பட்டது.

(உசார்த் துணையாக தகவல் வழங்கியவர்....அல்-ஹாஜ். அதிபர்மணி. எம் . ஐ. கோஸ்முகம்மது -சமாதான நீதிவானும் , ஒய்வு பெற்ற அதிபரும் , சம்மாந்துறை அரச ஓய்வு பெற்றோர் சபையின் தலைவராக கடமையாற்றியவர்) 

”களப்பு” ஈற்றுப் பெயர்கள்......

களப்பு என்பது கடல் நீர் உள்நுழையும் ஆழமில்லாத சதுப்பு நீர் நிலையாகும். கடல் நீரேரி என்ற பொருளின் கடல் நீரும், ஆற்றுநீரும் கலந்து நிற்கும் ஆழமற்ற நீர் நிலை களப்பாகும். இது கிழக்கிலங்கையில் பல இடப்பெயர்களிலே ”களப்பு” ஈறு அமைந்து காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.

கோரைக்களப்பு (மட்டு):
இக்களப்பு பகுதியில் "கோரை" எனும் ஒருவகைப்புல் அதிகமாக வளர்ந்து காணப்பட்டதனால் இவ்விடத்தை ”கோரைக்களப்பு” என்றனர்.

(உசார்த் துணையாக தகவல் வழங்கியவர்....அல்-ஹாஜ். வை. எம். எம். ஏ. காதர் -சமாதான நீதிவானும் , ஒய்வு பெற்ற அதிபரும் , ஏறாவூர் மத்தியஸ்தர் சபையின் தலைவராக கடமையாற்றியவர்)

மட்டக்களப்பு (மட்டு):
காலத்துக்குகாலம் கடல் கொந்தளிப்புகள் நிகழும் போதெல்லாம் கடல் சமதரைக்குள்ளே உட்புகுந்து தாக்கிவிடுகிறது. இத்தகைய நீர்நிலைகள் நாளடைவில் களப்புகளாக மாறிவிருகின்றன. இந்தக்களப்புகளின் நீர் மட்டம் வங்கக்கடல் நீர் மட்டத்துக்கு சமமாக இருப்பதனால் முன்னோர் இப்பகுதிக்கு மட்டமான களப்பு எனும் காரணப்பெயர் திரிபடைந்து மட்டக்களப்பானது.

மேலும் மட்டக்களப்புக்கு - மட்டுக்களப்பு என்பாருமுளர். மட்டு என்பதற்குத் ”தேன்” என்னும் பொருள் தந்து; இந்தப் பகுதியில் ”நறுத்தேன்” கிடைப்பதாலும், தேன் பாயும் நீர் நிலை என இலக்கியச் சுவை ஊட்டுகின்றனர் என்றும், மடகளப்புவ ”மட” என்றால் சிங்களத்தில் ”சேறு”  என்றும் ”களப்புவ” என்றால் சதுப்பு நிலம் சூழ்ந்த வாவி என்பதாக கருத்துப்பட அழைக்கப்பட்டதாகவும் அறியமுடிகிறது.

(உசார்த் துணை நூலாக : மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள் 2005ம் ஆண்டு கலாநிதி. க.தா. செல்வராசா கோபால்( ஈழத்துப்பூராடனார்) எழுதிய நூலில் 45ம் பக்கத்தில் உள்ளது. )

மேலும் உற்றுநோக்கிப் பார்ப்பின் ”மட்டக்களப்பு” எனும் சொல் சுமேரிய மொழியில் இருந்து திரிந்து அரபுமொழிக்குள் சென்ற ஒரு சொல்லாகும். ”மஹ்பார்” எனும் அரபுச் சொல்லே நாளடைவில் திரிபடைந்து  ””மடஆபர்” என்றாகி ”மடகள ஆபர்” என்று வந்து ”மட்டக்களப்பார்” என்றாகி இருக்க வேண்டும். தமிழில் ”ஹ்” என்ற எழுத்து இல்லாதபடியால் ”ட்” என்ற எழுத்தை அல்லது ஒலியை பாவித்திருக்க வேண்டும். ”மஹ்பார்” என்னும் அரபுச் சொல்லின் பொருள் ”தோணித்துறை” என்பதாகும்.

உசார்த் துணை நூலாக( : தென் கிழக்கு முஸ்லிம்களின் பூர்வீக வரலாறு -2001ம் ஆண்டு மணிப்புலவர். மருதூர் -ஆ - மஜீட்  எழுதிய நூலில் 25ம் பக்கத்தில் உள்ளது. ) 

தேடல் திரி தொடர்கிறது........
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum