சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. Khan11

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

Sticky கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Mon 9 Jun 2014 - 20:41

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

★கிழக்கிலங்கையின் இடப்பெயர்கள் பற்றிய ஆய்வுகளைப் பல வருடங்களாக மேற்க்கொண்ட முயற்சியின் பெறுபேறு இவைகள்.

நான் ஓர் சிறப்புத் தேர்ச்சி பெற்ற வரலாற்று ஆய்வாளர் அல்ல ; என்பதை தங்களின் மேன்மையான கவனத்துக்கும்- சிந்தனைக்கும் எத்திவைக்கிறேன் உறவுகளே !!!

♥கிழக்கிலங்கையின்  இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

●தேடல் - 01    (2014.06.09 ; மாலை-8.13)

அறிமுகம்:

பழங்குடி மக்கள்....
நதிக்கரை ஓரங்களிலும், காடுகளிலும் அலைந்து திரிந்து வேட்டையாடித் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்ந்த நிலையில் அவர்களுக்கு நிலையான இருப்பிட வசதிகளை அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

காலம் செல்லச் செல்ல நாகரீக வளர்ச்சியும், தேவைகளும், ஒழுங்குகளும் ஏற்பட்ட நிலையில் நிலையாக அவர்கள் ஓரிடத்தில் இருந்து தொழிற்பட வேண்டிய அவசியம் ஏற்படலாயிற்று.

(திரி   இன்னும்   நீழும்......)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் on Mon 9 Jun 2014 - 20:49

பயனுள்ள தகவல்கள் காலச்சுவடுகள் என சிறப்பானதொரு ஆரம்பம் ஜலீல் ஜீ உங்கள் பயணம் தொடர என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha on Mon 9 Jun 2014 - 21:10

நல்லதொரு ஆரம்பம் ஜலீல்ஜி!

இயன்ற வரை தினம் ஒரு பதிவு எனும் நோக்கில் கிழக்கிலங்கை குறித்து பதிந்திட முயற்சி செய்யுங்கள்.

அதை விட கிழக்கிலங்கை எனில் இலங்கையில் எந்த பகுதியை குறிக்கின்றது.. இந்த வார்த்தைக்குள் அடங்கும் மாவட்டங்கள், பிரதேசங்கள் எவை எனும் சிறு ஆரம்ப அறிமுகத்தோடு தொடர்ந்தால் இலங்கை குறித்து அறியாத உறவுகளும் புரிந்து படிந்திட உதவியாயிருக்கும்.

இயலுமாயில் படங்களுடன் விளக்கமும் தரலாம். இப்பதிவு சம்பந்தமாய் படங்கள் பதிவதில் உதவிகள் தேவையெனில் எம்மால் இயன்றதை நாமும் செய்ய முயற்சி செய்கின்றோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by முனாஸ் சுலைமான் on Mon 9 Jun 2014 - 23:08

பயனுள்ள தகவல்கள் காலச்சுவடுகள் என சிறப்பானதொரு ஆரம்பம் ஜலீல் ஜீ உங்கள் பயணம் தொடர என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்..
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Tue 10 Jun 2014 - 13:42

02. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின்  இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

கிழக்கிலங்கை எனும் போது ...

அதனுள் இலங்கையின் நிர்வாக மாவட்டங்களான :.. அம்பாறை மாவட்டம் (அம்) , மட்டக்களப்பு மாவட்டம் (மட்டு) , திருகோணமலை மாவட்டம் (திரு) ஆகியன உள்ளடங்கும்.

●தேடல் - 02.

   (2014.06.10 ; காலை-10.13)

தொடர்கிறது அறிமுகம்..:

நிலையாக அவர்கள் ஓரிடத்தில் இருந்து தொழிற்பட வேண்டிய அவசியம் ஏற்படலாயிற்று.

அத்தகைய ஒரு சூழ் நிலையே இடப்பெயர்களின் தோற்றத்திற்குக் காரணமாயிற்று.

நிலையாகக் குறிப்பிட்ட இடங்களில் வாழத்தொடங்கிய பழங்குடிவாசிகள் அவற்கையே சூழலாக ஆக்கிக் கொண்டு தமது தொழில்களையும், அச்சூழலோடு அமைத்துக் கொண்டனர்.

அவ்விடயங்களை மற்றவர்களுக்குச் சுட்டிக் காட்டவும், ஏனைய இடங்களில் இருந்து ஒன்றைப் பிரித்துக் காட்டவும் பெயர்களைச் சூட்டலானார்கள் .

அன்றைய நிலையில் அவர்களுக்கு இயற்கைகளே பெயர்களின் கருவூலங்களாக அமைந்திருந்தன.

இவற்றின்படி நோக்குவோமானால் ....

அதில் மரப்பெயர்கள், ஆற்றுப் பெயர்கள், நிலவியல்புப் பெயர்கள், விலங்குகள், பறவைகளின் பெயர்கள் முதலிய இடப்பெயர்களினைக் குறிக்கப் பயன்படலாயின.

அக்கால சூழலில் தோன்றிய பெயர் சூட்டும் பண்பாடு அதே சூழலிலே தொடர்ந்தும் பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்தும், பின்பற்றப்பட்டும் வந்தமை புதுமையாகவே அமைகிறது.

காலப்போக்கில் அவற்றில் சில புதிய மரபுகளும் தவிர்க்க முடியாதவாறு இணைந்துள்ளன.

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு அமைய அரசர், தலைவர், அதிகாரிகள் என்போரின் பெயர்களும், மற்றும் தொழில் அடிப்படையிலான புதுப்பெயர்களும், புராண இதிகாச இலக்கியப் பெயர்களும் சேர்ந்து கொண்டன.

(திரி   இன்னும்   நீழும்......)

Last edited by jaleelge on Tue 10 Jun 2014 - 13:58; edited 4 times in total
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by ராகவா on Tue 10 Jun 2014 - 13:46

நல்லது சகோ...இனிய பயணம் நாங்களும் சேர்ந்து படகை கரை சேர்ப்போம்...
படங்களும் தந்தால் இன்னும் ஆர்வத்தோடு படிக்க ஏதுவாக இருக்கும்..

இனிய கால சுவடுகள்...பயணம் தொடரட்டும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Tue 10 Jun 2014 - 14:09

அனுராகவன் wrote:நல்லது சகோ...இனிய பயணம் நாங்களும் சேர்ந்து படகை கரை சேர்ப்போம்...
படங்களும் தந்தால் இன்னும் ஆர்வத்தோடு படிக்க ஏதுவாக இருக்கும்..

இனிய கால சுவடுகள்...பயணம் தொடரட்டும்..

 )(  )(  )(  )(  )(  )(  )(  )(  )( 

பின்னுாட்டலுக்கு  மிக.....மிக..... நன்றி ராகவா  !!!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha on Tue 10 Jun 2014 - 15:53

தொடருங்கள் ஜலீல் சார்!

கிழக்கிலங்கை மக்கள் பழங்குடி மக்களில் வழி வந்தோரெனில் அவர்களில் ஆதி மொழி என்ன வென அறிய ஆர்வம் அதிகரிக்கின்றது.!

தயவு செய்து எழுத்தில் அளவை 16, 13 எனும் அளவுக்குள் வையுங்கள். பெரிய எழுத்துக்கள் கட்டுரையில் அழகை கெடுத்து விடுகின்றது. தலைப்புக்களை பெரிய எழுத்துக்களில் இடலாம். மொத்த பதிவுமே பெரிய எழுத்தில் வருதல் பக்கத்தின் அழகையும் கெடுக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by ahmad78 on Tue 10 Jun 2014 - 16:10

தொடருங்கள் அறிய காத்திருக்கிறோம்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by SAFNEE AHAMED on Tue 10 Jun 2014 - 17:21

கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.  எனது வாழ்த்துக்கல்... நீங்கள் இன்னும் சில முக்கியமான தகவல்ளையும் ஆய்வு செய்ய வேண்டும் என இறைவனிடம் பிராத்திப்போம் ...

 !_  :dance:
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Tue 10 Jun 2014 - 19:48

03. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

♥கிழக்கிலங்கையின்  இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

கிழக்கிலங்கை எனும் போது ...
அதனுள் இலங்கையின் நிர்வாக மாவட்டங்களான :.. அம்பாறை மாவட்டம் (அம்) , மட்டக்களப்பு மாவட்டம் (மட்டு) , திருகோணமலை மாவட்டம் (திரு) ஆகியன உள்ளடங்கும்.

தேடல் - 03.
    (2014.06.10 ;மாலை-19.43)

தொடர்கிறது அறிமுகம்..:

             புதுப்பெயர்களும்,   புராண இதிகாச இலக்கியப் பெயர்களும் சேர்ந்து கொண்டதும் ,  ம‌னிதன் தனது  வாழ்வியலில் முன்னேறிச் சென்றானோ அதே போன்று தனது வாழ்விடத்திற்கு பெயர்களினை இடுவதிலும் முன்னேறிச் சென்றான்.            இம்முன்னேற்றத்தில் மொழி, இலக்கியம், வரலாறு, கலை, கலாசாரம், அரசியல் என்பதையும் பாரிய இடத்தினைக் கௌவிக் கொண்டது.

           இது மாத்திரமன்றி ஒரு பழம்பதியிலிருந்து பேரழிவுகளிலாலோ, பஞ்சத்தினாலோ, போர் கால சூழலினாலோ, வர்த்தக வாணிக அபிவிருத்தி நோக்கியோ வேறு ஓரிடத்துக்குச் சென்று அங்கு காடாய் கிடந்த இடத்தை குடியிருப்பாய் மாற்றி வாழுமிடத்து  - அவர்கள் “தமது பழைய பதியை” நினைவு கூறுமிடத்தாய் அப்பெயரை இங்கும் சூட்டிக் கொண்டுள்ளார்கள்.

           மேலும் தம் பழைய ஊரிலுள்ள ஓரிடத்தைப் புதிய ஊரில் உள்ள  ஓரிடம் எவ்வாறாயினும் ஒத்திருத்தல் உண்டாயின் அதன் பெயராலே இதனை வழங்குதலுமுண்டு.            பண்டைய‌த் தமிழரின் பண்பாடு ஐந்தினை நிலத்தைக் களமாகக் கொண்டு அப்பின்னணியிலேயே வளர்ந்து வந்துள்ளது.            அவர்களது வாழ்வும், தொழிலும், கலையும் அந்நிலப்பாகுபாடு, அவற்றின் கருப்பொருட்கள் என்பவற்றுக்கு ஏற்பவே அமையலாயின.

 (தேடல் திரி இன்னும் நீழ்கிறது....)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Tue 10 Jun 2014 - 20:01

04. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

♥கிழக்கிலங்கையின்  இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

கிழக்கிலங்கை எனும் போது ...
அதனுள் இலங்கையின் நிர்வாக மாவட்டங்களான :.. அம்பாறை மாவட்டம் (அம்) , மட்டக்களப்பு மாவட்டம் (மட்டு) , திருகோணமலை மாவட்டம் (திரு) ஆகியன உள்ளடங்கும்.

●தேடல் - 04.
    (2014.06.10 ; இரவு-20.13)

தொடர்கிறது அறிமுகம்..:
 
அம்முறையில் அவர்கள் தாம் வாழிடங்களுக்கும், இயற்கையோடு ஒட்டிய கருப்பொருட்களாகிய தாவரங்கள், விலங்குகள், பறவைகள், தானிய வகைகள், நீர்நிலை, நில இயற்கை, திணை மாந்தர், தெய்வம் என்ற அடிப்படையில் இடங்களுக்கு பெயர்களினை இட்டுள்ளமையினை ஆய்வின் மூலமாக அறிய முடிகிறது.

 ஈழத்தமிழ் இடப்பெயர்களும் இந்நாட்டு மக்களது பண்பாட்டு பாரம்பரியம், வரலாற்று நிகழ்வுகள், பிறநாட்டு அரசியல் தொடர்புகள், போர்கள், பிறநாட்டுக் குடியேற்றங்கள், சமய நடவடிக்கைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றைப் பதிவு செய்து விளக்கம் தருவனவாகக் காணப்படுகின்றன.

சமூகத்தில் மதிக்பபட்ட பெரியார்கள், சாதி அமைப்புக்கள், தொழில் நடவடிக்கைகள் என்பவற்றின் அடிப்படையிலும் இடம்பெயர்கள் தோற்றம் பெற்றுள்ளதனையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.

 (தேடல் திரி இன்னும் நீழ்கிறது....)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha on Tue 10 Jun 2014 - 21:46

தொடர்கின்றோம்.. தொடருங்கள் ஜலீல் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Wed 11 Jun 2014 - 13:01

05. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் -
ஜலீல் ஜீ.கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

கிழக்கிலங்கை எனும் போது ...
அதனுள் இலங்கையின் நிர்வாக மாவட்டங்களான :.. அம்பாறை மாவட்டம் (அம்) , மட்டக்களப்பு மாவட்டம் (மட்டு) , திருகோணமலை மாவட்டம் (திரு) ஆகியன உள்ளடங்கும்.

●தேடல் - 05.
(2014.06.11 ; நண்பகல்-13.13)

தொடர்கிறது அறிமுகம்..:

தனிமனிதன் அல்லது மக்கள் கூட்டம் என்ற நிலையில் பெயர்கள் தோன்றிய நிலைக்கு அடுத்த  பகுதியாக அம்மக்கள் கூட்டத்தினரின் தலைவன் அல்லது அரசன் என்ற நிலையிலும் இடம்பெயர்கள் தோன்றலாயின.

                     ஒரு குறிப்பிட்ட இடம் ஒரு மன்னனின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவரப்படுமிடத்த அவ்விடம் “அம்மன்னனின் பெயர் பெறுதல்” வரலாற்றுச் செய்திகளாக உள்ளன.

                         அதன் பின்னர் அரசியல், மொழி, கலாசார வளர்ச்சியின் பின்னணியில் அவ்வவ்விடங்களில் வாழ்ந்த அரசியல்வாதிகள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் முதலிய இன்னோரென்னோரின் பெயர்களினால் இடப்பெயர்கள் அமைத்த வரலாறுகளினையும் அறியக் கூடியதாகவிருக்கிறது.

                         இச்சூழ்நிலையில் இடப்பெயர்கள் மாற்றம் அடைந்தமைக்கான காரணங்களினை  அடுத்த  தேடலில் நோக்குவோம் மேன்மையாளர்களே !!!!!!!

(தேடல் திரி இன்னும் நீள்கிறது....)
கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. 2446-4
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Wed 11 Jun 2014 - 14:40

06. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் -
ஜலீல் ஜீ.கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

கிழக்கிலங்கை எனும் போது ...
அதனுள் இலங்கையின் நிர்வாக மாவட்டங்களான :.. அம்பாறை மாவட்டம் (அம்) , மட்டக்களப்பு மாவட்டம் (மட்டு) , திருகோணமலை மாவட்டம் (திரு) ஆகியன உள்ளடங்கும்.

●தேடல் - 06.
(2014.06.11 ; பிற்பகல்-14.33)

அறிமுகம் தொடர்கிறது........ 

              இச்சூழ்நிலையில் இடப்பெயர்கள் மாற்றம் அடைந்தமைக்கான காரணங்களினை  இந்த தேடலில் நோக்குவோமேயானால்........
 
                     ¨அரசர்கள், கோயில்களுக்கும் பிராமணர் முதியோருக்கும் தானமாக அளிக்கும் "    நிலங்களுக்குத் தங்கள் பெயர்களைச் சூட்டுதல் மிக அதிகமான ஊர்களின் பெயர்  மாற்றமடைய இதுவே பிரதான காரணமாயிற்று.

                       அத்தோடு ; அரசர்கள் தங்கள் வெற்றியின் நினைவாகவும், தாங்கள் வெற்றிகொண்ட ஊர்களில் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும்", வெற்றி கொண்ட ஊர்களின் பெயர்களினை மாற்றம் செய்துள்ளார்கள்.

                   ¨ இவற்றுக்கு அப்பால் அரசர்கள் தங்களது உறவினர்கள் பெயராலும், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களது பெயராலும் ; இடங்களின் பெயரினை மாற்றம் செய்துள்ளனர்.

                     இத்தகைய மாற்றங்களினைப் பற்றிய செய்திகளின் மூலம் அக்கால அரசியல், சமூக நிகழ்ச்சிகள், பெயர்மாற்றம் செய்தோரின் வாழ்க்கைப் பின்னணி என்பவற்றை அறிந்து  கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது

(தேடல் திரி இன்னும் நீள்கிறது....)

[/size]
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by SAFNEE AHAMED on Wed 11 Jun 2014 - 14:49

எப்படி சேர் உங்களால் மாத்திரம் இப்படி ஆஹ் வாழ்த்துக்கள்............
கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ. AnimatedImage_sobetseolW6847
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Thu 12 Jun 2014 - 12:14

07 கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் -
ஜலீல் ஜீ.
கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

கிழக்கிலங்கை எனும் போது ...
அதனுள் இலங்கையின் நிர்வாக மாவட்டங்களான :.. அம்பாறை மாவட்டம் (அம்) , மட்டக்களப்பு மாவட்டம் (மட்டு) , திருகோணமலை மாவட்டம் (திரு) ஆகியன உள்ளடங்கும்.

●தேடல் - 07
(2014.06.12; நண்பகல்-11.50)

........

இச்சூழ்நிலையில் இடப்பெயர் ஆய்வு :
 
          இடப்பெயர்கள் மொழியில் ஏற்படும் பொது மாற்றங்களுக்கு உட்பட்டும், உட்படாமலும் நிற்கும் வல்லமை உடையன.

மொழியி ல் உள்ள மாற்றச் சொற்களை விட நிலை பேறுடையவே இடப்பெயர்கள்.
 
இவை வரலாற்றோடு நேரடித் தொடர்புகெண்டு பழமையின் எச்சங்கங்களாக நின்று மனித வரலாற்றையும், பண்பாட்டையும் விளக்கும் ஆற்றல் பெற்றவை.
 
மனிதக் கற்பனைக்கு இடம்தந்து கொண்டே இருந்த புராண இதிகாசய, நாட்டார் கதைகள் ஆகியனவும் இடப்பெயர் குறித்தும் தோற்றம் பெறலாயின.

மொழியியல், பண்பாட்டியல், நாட்டாரிலக்கியம், வரலாறு முதலிய பல துறைகளோடு தொடர்புடைய இடப்பெயர்கள் மொழியியலில் உள்ளடங்கும் இயல்பினவாக இருந்தும் ; சிறப்பு இயல்புகளால் “ இடப்பெ யர்வு” என்ற தனித்துறையாக வளர்ந்து இருக்கின்றது.
 
ஆங்கிலத்தில் Place  Name 0f Studies  என்றும்  ,Toponomy என்றும் கூறப்படுவதைத் தமிழில் “ இடப்பெயர்வு”     என அழைப்பர்.(தேடல் திரி இன்னும் நீள்கிறது....)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் on Thu 12 Jun 2014 - 18:30

தொடருங்கள் ஜலீல் ஜீ உங்கள் வேலைப்பழுவுக்கு மத்தியில் கொஞ்சம் கஸ்டம்தான் இன்னும் கொஞ்சம் அதிகமாக வேகமாக தட்டச்சு செய்ய முயற்சியுங்கள் ஜீ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Thu 12 Jun 2014 - 22:42

நண்பன் wrote:தொடருங்கள் ஜலீல் ஜீ உங்கள் வேலைப்பழுவுக்கு மத்தியில் கொஞ்சம் கஸ்டம்தான் இன்னும் கொஞ்சம் அதிகமாக வேகமாக தட்டச்சு செய்ய முயற்சியுங்கள் ஜீ

ஆமாம்  சேர்.....  நீங்கள் கூறுவது போன்று வேலைப் பழு...... 

ஆரோக்கிய முயற்ச்சி......  ஆரம்ப முயற்ச்சியும் கூட....

அதிகமாய் எழுதினால் வாசிப்பவர்களுக்கு ??/?/  தட்டாதா சேர் ?
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 2:25

08. கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

கிழக்கிலங்கையின் இடப்பெயர்களின் தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் .....

கிழக்கிலங்கை எனும் போது ...
அதனுள் இலங்கையின் நிர்வாக மாவட்டங்களான :.. அம்பாறை மாவட்டம் (அம்) , மட்டக்களப்பு மாவட்டம் (மட்டு) , திருகோணமலை மாவட்டம் (திரு) ஆகியன உள்ளடங்கும்.

●தேடல் - 08
(2014.06.15; அதிகாலை -1.56)
........

  இடப்பெயர் ஆய்வு :
 
        மேற்குலக நாடுகளில் 1981 இலிருந்து முறையான இடப்பெயர்வு ஆய்வுக் காலகட்டம் தொடங்குகிறது.

         தனிப்பட்ட அறிஞர்களாலும், அரசுகளாலும் இடப்பெயர்களை ஆராயத் தனிப்பட்ட அமைப்புகள் நிறுவப்பட்டன.

      அதன்மூலம் வருடாந்த அனைத்துலகப் பெயராய்வு மாநாடுகளும், கருத்தரங்குகளும் நடத்தப்படலாயின.

      இடப்பெயர்களில் மேற்பட்டப்படிப்பு - ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

      இவற்றுக்கும் மேலாக அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இடம்பெயர்க் கழகங்கள் இயங்கி வருகின்றன.
 
       1949ம் ஆண்டளவில் ஐரோப்பிய அறிஞர்களின் முயற்சியினால் யுனெஸ்கோ (Unesco) சார்பில் அனைத்துலகப் பெயராய்வுக் குழு (International Committee of Onomastics Sciences) அமைக்கப்பட்டு இக்குழு பெல்ஜியத்திலுள்ள "லூ வெய்ன்" நகரில் இயங்கி வருகிறது.
 
       ஜேர்மனி ஆஸ்ட்டிரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளில் மிக விரிவான முறையில் இடப்பெயராய்வுகள் நடைபெற்று வருகின்றன.

        இந்த வகையில் எமது நாட்டின் அயல்  நாடான இந்தியா 1979ம்  ஆண்டளவில் இந்திய இடப்பெயராய்வு கழகத்தினை  தொடங்கியதுடன்  ,
இந்திய மொழிகளில் நடைபெறும் ஓர் முக்கிய ஆய்வு மையமாக வளர்ந்து வருகின்றது.

         அது மாத்திரமல்லாது  பல்வேறு மாணிலங்களின் பல்கலைக் கழகங்களில்
இடப்பெயர் ஆய்வுகள் நடைபெற்று வருவதுடன் -
"Studies in Indian Place Name"  என்ற பெயரில்
ஓர் ஆய்விதழினையும் வெளியாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(தேடல் திரி இன்னும் நீள்கிறது....)
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha on Sun 15 Jun 2014 - 10:09

jaleelge wrote:
நண்பன் wrote:தொடருங்கள் ஜலீல் ஜீ உங்கள் வேலைப்பழுவுக்கு மத்தியில் கொஞ்சம் கஸ்டம்தான் இன்னும் கொஞ்சம் அதிகமாக வேகமாக தட்டச்சு செய்ய முயற்சியுங்கள் ஜீ

ஆமாம்  சேர்.....  நீங்கள் கூறுவது போன்று வேலைப் பழு...... 

ஆரோக்கிய முயற்ச்சி......  ஆரம்ப முயற்ச்சியும் கூட....

அதிகமாய் எழுதினால் வாசிப்பவர்களுக்கு ??/?/  தட்டாதா சேர் ?

முயற்சி என்பதே சரியாம் சார்!

ற் வந்தால் அதன் பக்கம் எப்போதுமே ச் வராது.

நீங்களும் முயலுங்களேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 14:27

Nisha wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:தொடருங்கள் ஜலீல் ஜீ உங்கள் வேலைப்பழுவுக்கு மத்தியில் கொஞ்சம் கஸ்டம்தான் இன்னும் கொஞ்சம் அதிகமாக வேகமாக தட்டச்சு செய்ய முயற்சியுங்கள் ஜீ

ஆமாம்  சேர்.....  நீங்கள் கூறுவது போன்று வேலைப் பழு...... 

ஆரோக்கிய முயற்ச்சி......  ஆரம்ப முயற்ச்சியும் கூட....

அதிகமாய் எழுதினால் வாசிப்பவர்களுக்கு ??/?/  தட்டாதா சேர் ?

முயற்சி  என்பதே சரியாம் சார்!

ற் வந்தால்  அதன் பக்கம்  எப்போதுமே ச் வராது.  

நீங்களும் முயலுங்களேன்!

உங்கள் திருத்தங்கள்... முன்னர் கூறுவதக்கு முன்பாகவே பதிவிட்டவை...

முன்னரான பதிவினை எவ்வாறு திருத்துவது பற்றி சிந்திக்கிறேன்...முயற்சிக்கிறேன்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Nisha on Sun 15 Jun 2014 - 15:02

ஜலீல் சார்!

உங்கள் பதிவை உங்களால் திருத்த முடியும் சார்!

மேற்கோளிடு என்பதற்கு அருகில் திருத்து அலல்து எடிட் செய் என உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் மேல் வலது பக்கம் வரும் சார்!

கவனித்து சொல்லுங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by jaleelge on Sun 15 Jun 2014 - 15:57

Nisha wrote:ஜலீல் சார்!

உங்கள் பதிவை உங்களால் திருத்த முடியும் சார்!

மேற்கோளிடு  என்பதற்கு அருகில் திருத்து  அலல்து எடிட் செய்  என  உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் மேல் வலது பக்கம் வரும்  சார்!  

கவனித்து  சொல்லுங்கள்!

நன்றி...

திருத்தலுக்கு வழி காட்டியமைக்கு....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by நண்பன் on Sun 15 Jun 2014 - 16:04

ஜெலீல் ஜீயை அரட்டையில் இழுத்து விட்டார்கள் இல்லையென்றால் இந்தத்திரி பத்துப்பேஜக்கு மேல் நீண்டிருக்கும் சரிதானே...!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: கிழக்கில‌ங்கை தொல்லியல் வரலாற்று ஆய்வுகள் - ஜலீல் ஜீ.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum