சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Yesterday at 15:18

» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Yesterday at 13:48

» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Yesterday at 13:44

» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Yesterday at 13:43

» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Yesterday at 13:42

» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Yesterday at 13:41

» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Yesterday at 13:38

» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Yesterday at 13:37

» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Yesterday at 13:36

» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30

» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29

» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28

» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26

» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25

» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24

» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34

» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Khan11

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

+10
சுறா
Rj Nousath Mohamed
rinos
ahmad78
Nisha
rammalar
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
நண்பன்
ந.க.துறைவன்
14 posters

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Tue 8 Jul 2014 - 7:45

First topic message reminder :

*
பூமியே அழகு தானே….
*
பெருக்கி பெருக்கி சுத்தப் படுத்தினாலும்
பூக்களை உதிர்க்கிறது பவழமல்லி மரங்கள்.
*
சருகு இலையைக் கொண்டு வந்து
சேர்த்து விட்டுப் போகிறது காற்று.
*
பாதையில் போகும் மனிதர்கள்
மனம் நிறையக் குப்பைகள்.
-
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down


ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Mon 21 Dec 2015 - 15:36

வெளிமனம்…!!
*
மனமது செம்மையானால்
மருந்துகள் எதுவும் வேண்டாம்.
*
மகிழ்ச்சியாயிருக்க விரும்புகிறான்
இருக்க விடுவதில்லை வெளிமனம்.
*
குற்றம் பார்க்கின் சுற்றமில்லை
சுற்றம் பார்க்கின் குற்றமில்லை.
*  
பகை பங்காளிகளாய் பிரிக்கிறது
வெறுப்பு வெறுப்பவரை அழிக்கிறது.
*
அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா                 
சித்திக்கு அதிகாரம் கிடைத்தால் எஜமானி.


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by நண்பன் Wed 23 Dec 2015 - 15:36

ந.க.துறைவன் wrote:முள்கள்…!!
*
சந்தோஷம் முகத்தில் மலரும் பூக்கள்
சந்தேகம் மனதைக் குத்தும் முள்கள்
*
உயர்ந்த கோபுரத்திலும் வாழ்கின்றன
கூண்டிலும் வாழ்கின்றன புறாக்கள்.
*
இன்று உங்களை இகழ்பவர்கள்
நேற்று உங்களைப் பாராட்டியவர்கள்.
*
செயலைத் தொடங்குவது எளிது
செய்து முடிப்பதுதான் கடினம்.

*

சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 Jan 2016 - 12:47

நல்ல அர்த்தமுள்ள கவிதை 
அருமையாக உளள்து ஐயா பாராட்டுக்கள்..


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Fri 15 Jan 2016 - 8:51

வசீகரம்…!!
*
எல்லோரிடமும் உண்டு தனித்துவம்
அதுவே அவரவர் மனத்துவம்
*
பிடிவாதம் என்பது அகம்பாவம்
விட்டுக் கொடுப்பது தனிசுபாவம்
*
வெளிமனம் வசீகரம்
உள்மனம் வக்கிரம்.
*
வாக்கு கொடுப்பது எளிது
வாக்கு காப்பாற்றுவது கடினம்.
*
எதிர்ப்பிலேயே வாழ்பவனுக்கு
எதிரிகளின் செயல்கள் தூசு.                        

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Fri 25 Mar 2016 - 3:44

சுயம்…!!
*
சுய அறிவு  சுகமளிக்கும்
நகல் அறிவு நஞ்சை வளர்க்கும்
*
செயல்பாட்டில் எங்குமில்லை
சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம்.
*
தவறு நடப்பது இயல்பு
தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு.
*
வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது
மரணத்தை நோக்கி நகர்வது.
*
சந்திக்க வந்தவர் பேசவில்லை
துணைக்கு வந்தவர் பேசினார்.
*
செத்தவர் மீதிருந்தது சொத்து
உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து.  
**.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sat 2 Apr 2016 - 3:46

பறித்தல்…!!
*
வெட்டவெட்ட வாழைமரம் துளிர்க்கும்
பறிக்கப் பறிக்க உலகில் காதல் மலர் பூக்கும்
*
இங்கு நடப்பது எதுவும் விடியலுக்கு தெரியாது்
விடிவது மட்டுமே அதற்கு தெரிந்தது.
*                                             
வெட்கப்பட்டவன் துக்கப்படுகிறான்
ஆசைப்பட்டவன் தோல்வியடைகிறான்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sun 10 Apr 2016 - 3:43

விருப்பம்….!!
*
அவள் சாக விரும்பவில்லை
சாவும் அவளை நெருங்கவில்லை.
*.
அவனுக்கு நாக்கிலே சனி
அடுத்தவனுக்கு  மூக்கிலே முனி
*
ஆறாதது ரணம்
ஆறுவது சினம்.
*
ஆள் காட்டி விரலில் மை. 
வாக்காளர் உரிமை
*
சிக்கலைத் தீர்த்து வைத்தவன்
சிக்கலின் மாட்டிக் கொண்டான்.
*
காற்றே வரவில்லை என்றான்
பொய் சொல்லாதே என்றது காற்று.
*
எது பிடிக்குமென்று கேட்டான்?
உன்னைப் பிடிக்குமென்றாள்.


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Thu 28 Apr 2016 - 3:49

உச்சம்.
*
வெளிவராத ரகசியம்
வெளியில் வந்து சந்தி சிரித்தது.
*
மாப்பிள்ளையின் மீதே வைத்தாள் கண்
கல்யாணத்திற்கு வந்த மணமாகாதப் பெண்
*
தேடி வந்து சேர்கின்றது
வாக்காளர்களின் கைகளில் பணம்
*
இலவசமாகவே கொடுத்தார்கள்
தேர்தல் அறிக்கை.
*
தங்கம் விலை உச்சம்
வாங்குவோர்க்கு அச்சம்.
*
படிப் படியாகக் குடிப்பழகு
படிப் படியாக மதுவிலக்கு.


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Thu 19 May 2016 - 4:27

பயணமே சுகம்…!!
 
சிரித்த முகத்தோடு இருந்தார்
கடுகடுப்பாக இருக்கும் கண்டக்டர்.
*
சில்லறை வாங்காமல் .இறங்கினாள்
செல் பேச்சில் மெய் மறந்து..!!
*
பக்கத்தில் நின்றவள் கூச்சப்பட்டாள்
அருகில் நின்றவன் ஒதுங்கி நின்றான்.
*
அவள் பெயரைக் காட்டியது
கழுத்தில் அணிந்த அடையாள அட்டை
*
காலியான இடத்தில்  வாடியிருந்தது பூ
எடுத்து விட்டு உட்கார்ந்தாள் வந்தவள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Fri 3 Jun 2016 - 3:44

மனம்…!!
 
பூப் போல மனசு என்கிறார்கள்
கசக்கி எரிபவர்கள்
*
மனசுக்குள்ளிருக்கிறது சொல்வதற்கு
வெளிவரவில்லை வார்த்தைகள்.
*
மனம் லேசாகத் தானிருக்கிறது
இறுக்கம் இல்லாத வரை.
*                                       
பிடிக்கும் என்று சொல்கிற மனசு
பிடிக்காது என்றும் சொல்கிறது.
*
ஒரு மனசுக்கு
இரண்டு வாசல்கள்                          
*
மனசு சொல்வதைச் செய்கிறார்கள்
சொல்லாததையும் செய்கிறார்கள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Mon 20 Jun 2016 - 6:39

நினைப்பதில்லை…!!
*
மனசு சொத்துப் பற்றி நினைப்பதில்லை
மரணத்தைப் பற்றியும் நினைப்பதில்லை.
*
சந்தோஷம் வந்தால் ஊஞ்சலாடுகிறது
பேராசையால் ஊழலில் திளைக்கிறது மனசு.
*
அன்பு நிறைஞ்சியிருக்கிற மனசிலே தான்
வன்மமும் மறைஞ்சியிருக்கிறது.  
*
உண்மையை உள்ளுக்குள் மறைச்சி வச்சி
பொய்யை உண்மைப் போல பேசும் மனசு.
*
தவறு செய்தவனையும் புரிஞ்சிக்கும்
தவறு செய்யாதவனையும் புரிஞ்சிக்கும் மனசு.
*
மரத்திற்கு நல்ல மனசு1
மனிதனுக்கு குரங்கு மனசு.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Fri 8 Jul 2016 - 3:29

கூத்தாடிகள்.
*
நெடுநாள் வாழ்ந்ததின் அர்த்தம் சூன்யம்
நொடியில் உணர்த்தி விடுகிறது மரணம்
*
கழைக்கூத்தை வேடிக்கைப் பார்க்கிறார்கள்
மன வக்கிரக் கூத்தாடிகள்.
 *
வெண்டைப்பூ கொண்டை ஏறாது    
சண்டைகோழி சமாதானம் ஆகாது.
*
அலட்சியம் வாழ்வை வீழ்த்தும்.
இலட்சியம் வாழ்வை உயர்த்தும்
*
கருணை மனம் தேட வேண்டியிருக்கிறது
மனிதம் பொறுமை  இழந்து வருகிறது

^
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Tue 26 Jul 2016 - 3:39

துவக்கம்…!!
 
விலகி விலகி நடக்கிறார்கள்
நெருங்குகிறது காதல்.
*
சிலையின் அருகில் நின்று
எடுத்து கொண்டார்கள் செல்பி.
*
சாமி கும்பிட்டாள்
கையில் கிடைத்தது பூ,குங்குமம்.
*                                      
வெயிலில் அலைந்தாள்
வாடிவிட்டது கூந்தலில் பூ.
*
அவள் வேலையில் இருந்தாள்
அவன் வேலை தேடினான்.
ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Fri 5 Aug 2016 - 3:55

தரிசனம்…!!
 
பணம் கொடுத்தால் பகட்டான தரிசனம்
இலவசம் என்றால் இன்னல் தரிசனம்.
*
விக்கல் எடுத்தால் யாரோ திட்டுகிறார்களாம்.
புரையேறினால் யாரோ நினைக்கிறார்களாம்.
*
தன் குறையை தானே அறியாதவன்.
அடுத்தவன் குறையைச் சுட்டுகிறான்.
*
ஒருவர் இல்லாதபோது அவரைப்பற்றி பேசுகிறார்கள்.
ஒருவர் இருக்கும்போது ஏதுவும் பேசுவதில்லை.
*
தேனீர் உதட்டில் வைத்து குடிக்கிறார்கள்.
குளிர்பானம் குழாய் வைத்து குடிக்கிறார்கள்.
*
நேரம் தமிழில் கேட்டான்
ஆங்கிலத்தில் பதில் சொன்னான்.
(

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Wed 7 Sep 2016 - 3:59

ஊஞ்சல்….!!
 
1.
உயிர் தருவேன் என்றாய்
உயிரைப் பறித்து கொண்டாய்.
2.
வாழும்போது ஊஞ்சல் ஆடுகிறார்கள்.
சாகும்போது ஊசலாடுகிறார்கள்.
3.
எல்லாமே இயங்குகின்றது
யாருமே இல்லாத சூன்யத்திற்குள்.
4.
அகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
முகநூல் நட்பே நட்பு.
5.
பாதையில மேடு பள்ளம்
நிரம்பி வழிகிறது மழைவெள்ளம்.
ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Fri 4 Nov 2016 - 7:32

சுகம்…!!
 
சுயத்தை இழக்கவில்லை
சுகத்தை இழந்து விட்டாள்.
*
குறை இருப்பவன்தான்
மற்றவர்களைக் குறை கூறுவான்.
*
உதவ வில்லை என்றால்
உதறி விடுவார்கள்.
*
நினைத்ததும் நடக்கும்
நினைக்காததும் நடக்கும்
*
வளம் தருகின்றது விவசாயிக்கு
அளவோடு பெய்யும் மழை.

ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sun 6 Nov 2016 - 4:46

மன்மதக் குளிர்….!!
 
 
மழைக்கு குடையானது கையிலிருந்த நோட்புக்.
*
மழைக்கு ஒதுங்கியவள் அருகில் சூடான மனிதர்கள்.
 
மழையில் மரத்தில் அமர்ந்திருக்கும் கிளிக்கு மன்மதக் குளிர்.
*
மழைத்துளிகளோடு சேர்ந்து உதிர்ந்தது பவளமல்லிப்பூக்கள்.
*
மழை நின்றபின் மலர்களிடம் குளிரைப் பற்றி விசாரித்தது பட்டாம்பூச்சி.
ந.க. துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sat 19 Nov 2016 - 3:50

உடந்தை…!!
 
 
தாயைத் தத்தளிக்க விட்டான்
தத்தெடுத்த ( சொந்த ) மகன்.
*
கடத்தலுக்கு உடந்தையாக இருக்கிறது
மணல் லாரிகள்.
*
குத்திய முள்ளுக்கு பொறாமையில்லை
குத்துப்பட்டவன் நெஞ்சலொம் வஞ்சம்.
*
ஒட்டாத உறவுகள் விரட்டுகின்றது
ஒட்டிய உறவுகள் பிரிகின்றது.
*
மனைவி புரிந்துக் கொண்டால் ரகசியம்
புரிந்துக் கொள்ளவில்லை கணவன்.

ந.க.துறைவன். 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Mon 28 Nov 2016 - 3:55

நாய்
 
மகனுடன் ஆங்கிலத்தில் பேசாதவர்
நாயுடன் ஆங்கிலத்தில் பேசுகிறார்.
*
சொந்த மகனையே கடித்து விட்டது
சோறுபோட்டு வளர்த்த செல்ல நாய்.
*
அபசகுனமாய் நேரங்கெட்ட வேளையில்
தெருவில் அழுகின்றது நாய்.
*
போன வருஷம் நவம்பர் டிசம்பர்லே வெள்ளப்பெருக்கு
இந்ந வருஷம் நவம்பர் டிசம்பர்லே கள்ளப்பெருக்கு.
*
முதலைகளை விட்டு விட்டு
மீன்களை வேட்டையாடுகிறார்கள்.
*
கோடீஸ்வரர்கள் பாராட்டுகிறார்கள்
தொழிலாளிகள் சபிக்கிறார்கள்.
 

ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Thu 15 Dec 2016 - 4:21

அடைக்கலம்…!!
 
*
ஆறுதலாய் முகடுகள் இரண்டும்
இறுக்கி அணைத்தது என்முகம்.
*
என் கண்ணீரோ  உப்பு
உன் கண்ணீரோ இனிப்பு
*
உடல் சூட்டின் வெப்பத்தில்
அடங்கியது கார்த்திகை குளிர்.
*
சிந்தியது தேன்
பூவை ருசித்த வண்ணத்துப்பூச்சி
*
குளிரில் நடுங்கிய பூனைக்கு
அடைக்கலம் தந்தது படுக்கையறை.
*
நனைந்தப் பூவிற்கு                      
முக்காடு எதற்கு…?
ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Mon 2 Jan 2017 - 4:00

புது வழி…!!
 
1.
மார்கழியில் எல்லாம் கழி
தையில் வரும் புதுவழி.
2.
வாழ்க்கைக்கு பணப் பரிமாற்றம்
காதலுக்கு மனப் பரிமாற்றம்.
3.
சாப்பிடும்போது பொறை ஏறியது
நினைத்தவள் யாராகயிருக்கும்?
4.
ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை
கொழுக்கட்டையின்  விரல்ரேகை
5.
பணமற்ற இந்தியா
அட்டைக்குள் முடங்கப் போகிறது
 
6.
சில்லறை இல்லை என்றுதான் சொல்கிறார்கள்
இருக்கிறதென்று யாரும் சொல்வதில்லை.
*
இருப்பவனுக்கு நெருக்கடி இல்லை
இல்லாதவனுக்குத் தான் நெரு்க்கடி.                

ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Sun 16 Apr 2017 - 7:11

செயல்பாடுகள்.
1.
அத்தனைக்கும் ஆசைபடு
அதிகமானால் வேதனைபடு.
2.                       
உளறுபவன் என்று பெயரெடுத்தவனிடம்
உண்மை அறிய முடியாது.
3.
என்றேனும் ஒருநாள் நடந்து விடுகிறது
தள்ளிப் போன முக்கிய காரியங்கள்.
4.
செயல்படாதவர்கள் என்று எவருமில்லை
எல்லோரும் திறனோடு செயல்படுபவர்களே!
5.
எழுதுவதெல்லாம் விமர்சனத்திற்குட்பட்டது
எழுதாதெல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது.
6.
முற்றுப் பெறுவதில்லை
முரண்படாத வாழ்க்கை
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Thu 27 Apr 2017 - 7:31

தலைக்கு வந்தது…!!
 
1.
குடியை எதிர்க்கிறார்கள் மக்கள்
குடியை ஆதரிக்கிறது மக்கள் அரசு.  
2.
உதிர்ந்த இலைகள்
ஒன்று சேருமா?
3.
தலைக்கு வந்த தொப்பி
தலைக்குள் மாட்டிகிட்டது.
4.
பல ஆண்டு காலமாக வேலியே
பயிர்களை மேய்ந்து வருகின்றன.
5.
எல்லா துறையும் தூய துறையல்ல
வல்லமை பெற்ற ஊழல் துறையே!
ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by ந.க.துறைவன் Tue 4 Jul 2017 - 7:23

GST – வரி...!!
 
*
ஓரே நாடு ஓரே மொழி ஓரே வரி
ஓரே ஊரு ஓரே மக்கள் ரெண்டு சுடுகாடு.
*
என்றேனும் ஒருநாள் குப்புறத்தள்ளும்
கண் தெரியாமல் வரிக்குதிரை.
*
வீட்டில் சாப்பிட்டால் வரியில்லை
பேசி நாக்குக்கு அடக்கமில்லை.
*
எந்த ஒன்றுக்கு வரிவிதிக்கவில்லை
எல்லாமே வரியின் கீழ் உள்ளடக்கம்.
*
வரியை ஏற்றுவார்கள் மக்கள் எதிர்த்தால்
குறைப்பதாய் சொல்லி ஏமாற்றுவார்கள்.
*
வரியோடு வாழ்வு
வரியோடு சாவு.
 
ந.க. துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ஈச்சங்குலை...!!. {கவிதைகள் } - Page 6 Empty Re: ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum