சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Khan11

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

+7
rinos
கவிதை ரசிகன்
ராகவா
kalainilaa
நண்பன்
rammalar
கவிப்புயல் இனியவன்
11 posters

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Jul 2014 - 11:01

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Xmcjh_204797


பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய 
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில் 
அழகியா ..?

எனக்காகவே இறைவனால் 
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து 
துடிக்குதடி -மனசு 
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.


Last edited by கே.இனியவன் on Thu 30 Oct 2014 - 17:46; edited 1 time in total
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Wed 16 Jul 2014 - 11:28

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Vzmqh_203566


என்னை தாக்கிவிட்டாய்....!!!
------------------------------------------

நான் பார்த்த நொடியில் 
பெண்ணே நீ என்னை 
பார்த்தாயே - செத்து
பிழைத்தேனடி -நான் .....!!!

உன் 
கண் கண்ணாக இருந்தால் 
தப்பி இருப்பேன் - பார்வையோ 
அணுமின் கதிர்போல் திரட்டி 
என்னை தாக்கிவிட்டாய்....!!!

அன்பே உன் கண் என்ன ..?
சேனைப்படையா ...?
அத்தனையும் கொண்டு என்னை 
தாக்கி விட்டாய் .....!!!

குறள் - 1082

தகையணங்குறுத்தல்

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு 
தானைக்கொண் டன்ன துடைத்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Jul 2014 - 10:28

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Uzvni_203714

உன் பார்வை ஒன்றே போதும் ...!!!
--------------------------------------------

உயிரை 
எடுக்க யமன் வருவான் 
பாசகயிராய் எறிவான் 
என்றெல்லாம் கேள்வி 
பட்டிருக்கிறேன் ....!!!

மங்கை உன் கண்னை 
பார்த்தபின் தான் 
உணர்ந்தேன் என்னை 
கொல்ல யமன் 
வரத்தேவையில்லை ...
உன் பார்வை ஒன்றே போதும் ...!!!


குறள் - 1083

தகையணங்குறுத்தல்

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் 
பெண்டகையால் பேரமர்க் கட்டு.


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by rammalar Thu 17 Jul 2014 - 10:36

*_  *_ 
திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Cc3678cf3c9420352e3b724ae912e40d1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Jul 2014 - 11:10

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Xiehn_203725

திருக்குறளும் கவிதையும்
-------------------------------------------
கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!
-------------------------------------------
என்னவே என் உயிரே 
பெண்மையில் தலைவியே ..
பிரபஞ்ச்சத்தில் பேரழகியே ...!!!

உன் பார்வை பட்டால் ...
உயிரையே ஒருகணம் 
உலுப்புகிறது .....
உன் இரக்க குணத்துக்கும் 
அறிவுக்கும் அப்பால் 
கொல்லுகிறதடி உன் பார்வை ...!!!


குறள் - 1084

தகையணங்குறுத்தல்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் 
பேதைக்கு அமர்த்தன கண்.


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Jul 2014 - 11:40

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Wbihu_203734

நீ என்ன எனக்கு யமனா ..?
-------------------------------------
என்னவளே 
நீ பார்த்த நொடியே 
பாசக்கயிறு எறிந்து விட்டான் 
நீ என்ன எனக்கு யமனா ..?

அந்தநொடியில்
என் உடல் முழுதும் படரும்
படர் தாமரைபோல் பரவுவது 
உன் கண்ணா ...?

ராமனை மயக்க வந்த 
மாயமான் போல் -நீ 
மாயபெண்ணா....?
மூன்றையும் கலந்த கலவையா ..?


குறள் - 1085

தகையணங்குறுத்தல்

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் 
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by நண்பன் Thu 17 Jul 2014 - 11:56

கே.இனியவன் wrote:திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Zbpqy_203565


பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய 
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில் 
அழகியா ..?

எனக்காகவே இறைவனால் 
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து 
துடிக்குதடி -மனசு 
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

அடடா என்னமா சிந்திக்கிறீர்
பாராட்டுக்கள் அழகு எல்லாம் அழகு..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Thu 17 Jul 2014 - 12:24

நண்பன் wrote:
கே.இனியவன் wrote:திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Zbpqy_203565


பெண்ணே நீ யார் ....?
-------------------------------

என் கண்ணில் மின்னலாய்...
பட்டவளே - பெண்ணே ....!!!

நீ - பிரம்மன் படைப்பில் ...
தங்க மேனியை தாங்கிய 
நான் கண்ட தெய்வீக தேவதையா ...?

தோகை விரித்தாடும் மயில் 
அழகியா ..?

எனக்காகவே இறைவனால் 
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

கண்ட நொடியில் வெந்து 
துடிக்குதடி -மனசு 
பெண்ணே நீ யார் ....?

குறள் - 1081

தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை 
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு.

எனக்காகவே இறைவனால்
படைக்கப்பட்ட ....
மானிட பெண் தாரகையோ ...?

அடடா என்னமா சிந்திக்கிறீர்
பாராட்டுக்கள் அழகு எல்லாம் அழகு..
மிக்க நன்றி மேலும் தொடரும்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by kalainilaa Fri 18 Jul 2014 - 7:28

அருமை தொடருங்கள்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat 19 Jul 2014 - 17:08

kalainilaa wrote:அருமை தொடருங்கள்
 )((  )((  )((
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Sat 19 Jul 2014 - 17:24

நிச்சயமாக தொடர்வேன் 
அனைத்து தரப்பினரின் கருத்துக்கும் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Jul 2014 - 8:37

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Vqhwk_204221

வில்லால்இதயத்தை குற்றுகிறாள்..............!!!
----------------------------------------------------------------

என் கண் அழகியே ....!!!
கயல் விழியே ....
உன் கண் பார்வை என்னை ..
கொன்றததை விட -உன் 
வில் போன்ற புருவம் தானடி 
என்னை மிரட்டுகிறது ....!!!

விழியே என் உயிரே ...!!!
புருவத்தை வில்லாளாக 
படைத்த இறைவன் தானடி 
எனக்கு வில்லன் ....!!!
இறைவா அவள் புருவத்தை 
நேராக்கிவிடு ..
வில்லால்இதயத்தை 
குற்றுகிறாள்..............!!!

குறள் - 1086

தகையணங்குறுத்தல்

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் 
செய்யல மன்இவள் கண்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 06
மேலும் தொடரும் .....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Jul 2014 - 9:05

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Cngjf_204227

மெல்ல கொல்லுதடி என்னை ...!!!

அடி பெண்ணே ....
கண் அழகில் பித்தனானேன் 
சற்றே எனக்கும் நாணம் வர 
தலைகுனிந்தேன் .....!!!

அதிர்ந்தேன் 
உன் திரண்ட மார்பழகில் 
நிமிர்த்த நேரழகில் மருண்டேன் 
இரு குன்றுகளையும் 
மறைக்கும் மெல்லிய ஆடை 
மெல்ல கொல்லுதடி என்னை ...!!!

குறள் - 1087

தகையணங்குறுத்தல்

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் 
படாஅ முலைமேல் துகில்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Jul 2014 - 9:31

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Ezits_204235

ஏங்க வைத்து விட்டதடி ....!!!

என்னை கண்டு அஞ்சாத 
ஆண்களும் இல்லை ..
அழகை கண்டு மயங்காத 
மங்கையும் இல்லை .....!!!

அத்தனையும் ஒரு நொடியில் 
தூசியாய் பறக்க வைத்துவிட்டாய் 
என் மானிட அழகியே ....!!!
பிறை கொண்ட ஒளி நெற்றியிடம் 
அத்தனையும் நான் இழந்து ...
உன்னிடம் பிச்சை பாத்திரம் 
ஏங்க வைத்து விட்டதடி ....!!!

குறள் - 1088

தகையணங்குறுத்தல்

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் 
நண்ணாரும் உட்குமென் பீடு.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 08
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Jul 2014 - 9:57

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Gold-6

உன் அழகை கெடுக்கிறாய் ................!!!

என்னவளே 
ஏனடி என்னை கண்டவுடன் 
புலியை பார்த்த பெண் மானை 
போல் அச்சப்படுகிறாய் ...
உன் அச்சத்தில் இத்தனை 
பேரழகா ....?

அகத்தே நாணம் என்ற 
பொன் அழகையும் 
கொண்டவளே .எதுக்கடி 
பொன் நகை அணிகலன் 
அணிந்து உன் அழகை 
கெடுக்கிறாய் ................!!!


குறள் - 1089

தகையணங்குறுத்தல்

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு 
அணியெவனோ ஏதில தந்து.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 09
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 21 Jul 2014 - 10:20

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Awnpe_204244

எப்படி புரிய வைப்பேன் ..?

போதையை உண்டவனுக்கும் 
பேதையிடன் மாண்டவனுக்கும் 
தான் தெரியும் இரண்டின் சுகம் ...!!!

பேதையே உன்னிடம் கொண்ட
மோகத்தை காதல் புரியாதவனுக்கு 
காதல் உணர்வு இல்லாதவனுக்கு 
எப்படி புரிய வைப்பேன் ..?
தலையிடியும் காச்சலும் 
தனக்கு வந்தால் தானே தெரியும் ...!!!

குறள் - 1090

தகையணங்குறுத்தல்

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 10
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Jul 2014 - 8:18

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Jbvst_204791

என் ஆதியும் அந்தமும் ....!!!

என்னவளின் பார்வை
நோயும் மருந்தும் 
அவள் கருமை கொண்ட கரு 
விழிப்பார்வை என் உயிரையே 
கொல்லும் பார்வை ...!!!

மறுமுறை பார்வை 
உயிர்த்தெழும் உயிராய் 
உயிர்தெழ வைக்கிறாள் ..
உன் பார்வைதான் 
என் ஆதியும் அந்தமும் ....!!!


குறள் - 1091

குறிப்பு அறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு 
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 11
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Jul 2014 - 8:27

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Hwvja_204793

பார்வையால் ஓராயிரம் இன்பமா ..?

உன்னை பார்க்கும் 
போது என்னை பார்க்காதது 
போல் ஏனடி கபடமாடுகிறாய்...?

நீ கள்ளமாய் என்னை கடைக்கண் 
பார்வையால் என்னை பார்த்தது ....?

இன்ப சுகத்தில் இன்பமடி 
இதற்கு நிகராய் இந்த உலகில் 
இல்லையடி இன்பம் ......
உன் ஓரக்கண் பார்வையால் 
ஓராயிரம் இன்பமா ..?


குறள் - 1092

குறிப்பு அறிதல்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் 
செம்பாகம் அன்று பெரிது.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 12
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Jul 2014 - 8:32

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Oltyk_204795

காதலை வளர்க்கும் பன்னீரும் உண்டு .....!!!

நான் 
பார்க்கும் போது ....
நாணத்தால் என்னை 
பார்க்காமலும் 
நான் 
பார்க்காத போது அவள் 
என்னை பார்ப்பதும் என்ற 
பார்வை போட்டிதானடி ....?

நம் காதல் என்னும் 
பயிருக்கு நீ ஊரறிய 
தண்ணீர் ................!!!
கண்ணில் கண்ணீர் 
மட்டுமல்ல 
காதலை வளர்க்கும் 
பன்னீரும் உண்டு .....!!!


குறிப்பு அறிதல்

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் 
யாப்பினுள் அட்டிய நீர்.

திருக்குறள் : 1093

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 13
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Jul 2014 - 8:35

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Xmcjh_204797

காதலில் கிடைக்கும் மற்றுமொரு சுகமடி .....!!!

என்னவளை பார்க்கும் 
வேளையில்
நிலத்தை நோக்கும் 
நெற் கதிர் போல் 
தலை குனிகிறாள் ....!!!

நான் அவளை பார்க்காத 
நேரம் பார்த்து என்னை 
பார்த்து வெட்கத்தில் 
தனக்குள்ளே தனியே 
சிரிக்கும் அந்த அழகு 
காதலில் கிடைக்கும் 
மற்றுமொரு சுகமடி .....!!!



திருக்குறள் : 1094

குறிப்பு அறிதல்

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 
தான்நோக்கி மெல்ல நகும்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 14
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Fri 25 Jul 2014 - 8:39

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Tocxm_204802

விழியை ஓரமாக்கி பார்க்கும்....!!!

காதலில் 
வெட்கம் ஒரு அழகு ...!!!
நாணம் 
இன்னுமொரு அழகு ...!!!
என்னவள் என்னை ...
வெட்கப்பட்டு வெட்கபட்டு 
பார்க்கும் அழகு அழகோ 
அழகு ......!!!

நேரே பார்க்க முடியாத 
வேளையில் விழியை 
ஓரமாக்கி பார்க்கும் அழகை 
தனக்குள்ளே 
நினைத்து சிரிக்கும் அழகு 
அழகுக்கெல்லாம் சிகரம் ...!!!


திருக்குறள் : 1095

குறிப்பு அறிதல்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் 
சிறக்கணித்தாள் போல நகும்


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 15
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Jul 2014 - 11:39

அகத்தால் எனக்காக‌ நீ துடிக்கிறாய் .....!!!

எனக்கு தெரியும் அன்பே
நீ வெளி சொல்லாகவும் 
வெளி மூச்சாகவும் ‍ நீ
என்னை வெறுக்கிறாய் ...!!!

உன் கண்ணும் உள்ளமும்
என்னையே நினைக்குதடி
புறத்தால் நீ என்னை 
வெறுப்பதுபோல் நடிக்கிறாய் 
அகத்தால் எனக்காக‌ நீ
துடிக்கிறாய் .....!!!



திருக்குறள் : 1096

குறிப்பு அறிதல்

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் 
ஒல்லை உணரப் படும்.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 16
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Jul 2014 - 11:43

இதுவும் ஒரு உத்திதான் அன்பே ....!!!

நீ 
வேண்டுமென்றே திட்டுகிறாய் 
என்னை பிடிக்காதது போல் 
கபடமாடுகிறாய்....!!!
எதிரியை போல் பார்க்கிறாய் 
அத்தனையும் பொய் உயிரே ...

மனம் முழுதும் நான் 
நிறைந்திருக்கிறேன் 
உன் நினைவு முழுதும் 
நானே இருக்கிறேன் 
என்னை 
யாருக்கும் விட்டு கொடுக்க 
விரும்பாத மனமே எதிரிபோல் 
பார்க்கும் காதலில் இதுவும் 
ஒரு உத்திதான் அன்பே ....!!!


திருக்குறள் : 1097

குறிப்பு அறிதல்

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் 
உறா அர்போன்று உற்றார் குறிப்பு 


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 17
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Jul 2014 - 11:46

புரிந்ததடி உன் காதலின் ஆழம் .....!!!

என்னை தெரியாததுபோல் 
பேசுகிறாய் ...
என்னை பார்க்காததுபோல் 
போகிறாய் ....
உன் தோழிகளுடன் என்னை 
பிடிக்காதது போல் 
நடிக்கிறாய் ....!!!

அத்தனையும் பொய்யாச்சு
கண்ணே - நான் உன்னை 
காதல் கொண்ட கருணை 
பார்வையால் - உன் காதல் 
சிரிப்பில் புரிந்ததடி 
உன் காதலின் ஆழம் .....!!!


திருக்குறள் : 1098

குறிப்பு அறிதல்

அசையியற்கு உண்டாண்டோ ர் ஏஎர்யான் நோக்கப் 
பசையினள் பைய நகும்.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 18
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by கவிப்புயல் இனியவன் Mon 28 Jul 2014 - 11:50

காதல் ரகசிய நாடகம் ....!!!

உன்னை எனக்கு தெரியாது 
எனக்கு உன்னை தெரியாது 
என்று ஒருவரை ஒருவர் 
நோக்கும் மாயவித்தை 
காதலில் தவிர எங்குண்டு ...?

இரண்டு வெறுமையில் 
காதல் மலருமோ ...?
முன் அறியாததவர்கள் போல் 
ஏக்கம் கொண்டு பார்ப்பது 
காதலர்கள் இடையே நடக்கும் 
காதல் ரகசிய நாடகம் ....!!!


திருக்குறள் : 1099

குறிப்பு அறிதல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் 
காதலார் கண்ணே உள 

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 19
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

திருக்குறளும்  கவிதையும் - இன்பத்துப்பால்    Empty Re: திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 13 1, 2, 3 ... 11, 12, 13  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum