சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Khan11

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:03

இக்கவிதையினை எமது தளத்தில் அவளாகிய அவள் பாகம் 1 தொடக்கம் 9 வரை
 மாத்திரம் பதிய நேர்ந்திருக்கிறது அதனால் ஒரே பதிவில் அத்தனை பகுதியையும் இணைத்திருக்கிறேன் பார்த்துக் கருத்திடுங்கள் 

பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கு அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை

வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை

படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை

என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Images?q=tbn:ANd9GcTOR1rfg6MJjPhERudC7GdQxA1ydu9r_EAKIGDbbmJlUUFIJ-1Y
எனக்கிருந்த தமிழார்வத்தில்
 “ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய் 
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை

                                              இவள் இன்னும் தொடர்வாள்......................
அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Images?q=tbn:ANd9GcT3eAWUMssDM-sYpmUg5YubFpf_jJOFWyMn1RAPcsgAiVqXMI8

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:04

நான் அறிந்திருந்திடாத
பருவம் எனை அடைந்தபோது
தாயம்மாளின் அரவணைப்பில்
தாய்ப்பாசம் உணர்ந்த
நொடிகளின்னும் மறக்கவில்லை

தோழமையின் ஆரவாரத்துடன்
அகமகிழ்ந்த பூப்பெய்துவிழவில்
வெட்கித்தலை குனிந்து
வேதனைகள் மறந்தநிலை
என் வாழ்நாளில் மறக்கவில்லை

என் ஏக்கம் தொலைத்த
என் உயிரிலும் மேலான
தாயம்மாளின் மரணம்
தரணியை இழந்ததாக
உணர்த்தியதை மறக்கவில்லை 
அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Images?q=tbn:ANd9GcSLDkVFDrYPrQEQ6ZMG0dqZSxlYXzZpBDjKH-lTjZOA8GAeTOJ35w

நடு நிசி ஓரிரவில் 
காவல்காரனின் சில்மிசத்தை
எதிர்க்கத்துணிந்த போராட்டத்தில்
அவன் மண்டையுடைத்து
பொலிஸ் நிலயம்
சென்ற நாளை மறக்கவில்லை

அபயமளித்த இல்லத்திலும்
அவலநிலையென்று
அழுதழுது வற்றிப்போன
கண்ணீருக்காய்
காத்திருந்த நாட்களை
மனமேனோ மறக்கவில்லை

என் வாழ்வின் சூரியன்
எப்போது உதயமாவானென
விடியலைத்தேடிய போது
ஒளியொன்று புலர்ந்த
நொடியினை மறக்கவில்லை

எதிர்பார்ப்பு நிறைவுற்றதா?? இவள் தொடர்வாள்.................

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:05

எதிர்பார்ப்புகளே அற்று
கடத்தியிருந்த தினங்களுக்குள்
என்பெயரிட்டொரு மடல்
எங்கிருந்தோ வந்ததென
என்கரம் கிட்டியதை மறக்கவில்லை

யாருமற்ற எனக்கு யாரெழுதியமடலோ - என்ற
ஆவலும் ஆச்சரியமும் எனையாள
அமைதியாகப்பிரித்த மடலில்
அன்பே...
உனைக்கண்டு எனைமறந்தேன்-என்
உணர்வுகளுக்குள் நீ ஊர்ந்தாய்
உனையடய வேண்டுமென
என்னுள்ளம் துடிக்குதடி - என்று மட்டும்
இருந்த வரிகளை நம்பாத என்கண்கள்
யாரென்று தேடியதை மறக்கவில்லை

விபரங்களற்று வெற்றுக் காகிதமாயிருந்த
பகுதிகளுக்குள் என்கண்களுர்ந்தும்
ஏமாற்றம் எனைக்கொல்ல
ஏக்கம் எனையாண்ட
அந்த நிமிடங்களை மறக்கவில்லை

மொட்டைக் காகிதமா - அல்லது
மூடனின் காகிதமாவென
தூக்கமும் வரமறுத்து
என்னுள் ஏனிந்த மாற்றமோ
எனவியந்து நாட்களோடு நானும்
காத்திருந்ததை மறக்கவில்லை

என்நிலை கண்ட தோழி
உன்க்குள்ளும் காதலோ..
உரியவன் யாரெடி
கனவென்ன கண்டாயடி - என்று
கிண்டல்செய்தபோதே அழைக்கப்பட்டு
நான் ஓடிய வேகம் மறக்கவில்லை

எதற்காக ஓடினாள்........????

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:06

கண்ணடைத்து இருண்டிருக்க
கட்டிலில் கிடந்த உணர்வு
முடியாமல் கண் திற்நத போது
வதனம் நோக்கிய ஒர் வட்டம் கண்டு
அதிர்ந்ததை மறக்கவில்லை

என் பார்வையில் கேள்வியறிந்த தோழி
சாந்தி பெறு சரியாகிடுமென்ற சைகையில்
என்காலின் வலியுணர்ந்து
கண்ணீர்விட்ட அந்த நாளை மறக்கவில்லை

எதிர்பார்த்திருந்த காகிதம்
காத்திருக்கிறதென்றறிந்து
கால்கள் விரைந்தபோது
நிஜங்களும் நிழலாகியதென்றறிந்து
எனைத் தேற்றியதை மறக்கவில்லை

காலமும் வைத்தியமும்
எனக்களித்த ஆறுதலோடு
எட்டுவைத்து நடக்க
எழுந்துநின்ற மாலைப்பொழுதில்
வந்துநின்ற ஆடவனைக்கண்டு
அதிர்ந்த நிமிடம் மறக்கவில்லை

மலர்ச்சென்டு கையிலேந்தி
மலர்ந்த முகத்துடன்
என்வினவல்களுக்கு விடையாய்
அவனின் மொழிச்சல்கள்
என் காதுகளுக்கு கவிதையாய்
ஒலித்ததை மறக்கவில்லை
கவிதையோடு வருவாள்........

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:06

அன்பிற்காய் கையேந்தி
அலைந்த பொழுதுகளில்
அடைந்தேன் உனையோர் திருவிழாவில்
தொடர்ந்தேன் உனையடைய
வியந்தேன் உன் சரிதையில்

அடைவது உனையென்று
உள்ளம் எனக்கிட்ட கட்டளையில்
உனக்காக ஏங்கினேன் கண்ணே
இன்ப அதிர்வுக்காய்
செய்தனன் நாடகம் - அதில்
வீழ்ந்தது நாநானேன்

எனக்காகப் பிறந்தவளே
உன் விழிகளில் ஈரமெதற்கு
பிறப்பில் அனாதையாய் நானும்
வளர்ப்பில் உயர்ந்து நிற்கிறேன்

உனக்குப்பிணி தந்து
உயிரில் கலந்திட்ட காதலுடன்
உனையேந்தினேன் அழகே
உன்னோடு மரணம்வரை
தொடர்வது திண்ணம்

வரிகளின் இனிமையிலும்
வார்த்தைகளின் உறுதியிலும்
சொக்கித் தவித்து
சொப்பனத்திற்காய் அவன்மார்பில்
சாய்ந்த நிமிடம் மறக்கவில்லை

தழுவலில் எமை மறந்து
சூழல்நிலையும் மறந்து
சுவர்க்கம் நேரில் கண்டதாய்
சுகம் கண்டபொழுது
எழுந்த சிரிப்பொலியில்
அதிர்ந்ததை மறக்கவில்லை

இன்னும் தொடர்வாள்...........
அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Images?q=tbn:ANd9GcTiexr6gsCv6uvQdO677owGGvpQnxOvz5QHOEdS9OcYvGOIvccv

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:07

சந்திசிரித்தாற்போல்
தெரிந்துகொண்ட காதலுக்காய்
வாழ்த்தொலிகளோடு புத்திமதிகளும்
காதினில் ஒதிட்ட தோழியருக்கு
ஜாடயில் ஒப்புதலும்
பார்வையில் காதலையும்
சமர்ப்பித்ததை மறக்கவில்லை

இத்தனை இலகுவாய்
காதலில் வீழ்ந்தேனென்று
உள்ளம் உறுத்தினாலும்
காதலின் சுகத்திற்காய்
ஏங்கிடச்செய்ததை மறக்கவில்லை

ஒலித்த கைபேசியில்
மறுமுனையில் இசைத்த குரலின்
இன்பக்காதல் மொழியில்
இறுக்கமான மனதினை
வசியம்செய்த வஞ்சகனின்
அழைப்பாணை மறக்கவில்லை

அந்திமாலை கடற்கரைச்சாலை
அரவங்களற்ற ஒதுக்குப்புறத்தில்
அமர்ந்திருந்த மன்னவனோ
மலர்ந்த முகத்துடன் உச்சிமோர்ந்த
முத்தத்தோடு வரவேற்றதை மறக்கவில்லை

வானத்து நிலவும் கடலலையின் ஒலியும்
அங்காங்கே அணைத்துக்கிடந்த காதலர்களும்
சில்லென்ற தென்றலுமாய்
என் உணர்வுகளுக்குத் தீயிட்டு
காதலுணர்வில் சங்கமித்திட
துணையானதை மறக்கவில்லை

பாசமொழியும் பக்குவமான அன்பும்
கடந்தகாலத்தில் இழந்தவைகளை
மீட்டித்தந்ததாய் உணரச்செய்தது
மகிழ்வோடு (அவனை)அவதானிக்கலானேன்
என்மனம் முழுதும் அவனுக்காய்
அலைந்ததையும் மறக்கவில்லை
தொடர்வாள்...........

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:07

தொட்டுப்பார்த்தான் கட்டியணைத்தான்
என்விரல்களின் இடையே விரல்கோர்த்து
இசைமீட்டும் வீணையாய் என்னை
மயங்கிடச்செய்த காதலை அவனிடம்
ரசித்து ருசித்ததை மறக்கவில்லை

உலகம் மறந்து காதலை நினைத்து
அவன் மடியில் தலைவைத்து
இன்பலோகம் இதுதானோவென்று
என் கன்னிப்பருவம் இசைபோட்டபோது
எதிர்காலம் நோக்கிய சிந்தனையில்
சுதாகரித்து விலகியதை மறக்கவில்லை

இளமைக்குத்தீனியாய் என் இதயம்
படபடத்தாலும் என் அந்தரத்து வாழ்வை
அகத்தினுள்ளே அலசியாய்ந்து
காதலின் அடுத்தபடியை கருதிடவும்
காமத்தினுள் கட்டுண்ட கைசேதத்தை
நாடாததையும் மறக்கவில்லை

அனாதையாய் அலங்கோலமாய்
ஆரம்பித்த என்வாழ்வின் அடைவாய்
உன்னதமானதொரு வாழ்க்கையில்
இணையப்போகிறேனென்ற கற்பனையில்
இளமையின் துடிப்புக்கு இசைந்த
நிமிடங்களை மறக்கவில்லை

என்னவனாய் ஏற்றமனதுக்கு
என்னை அவன் கொய்திடுவானோ
என்ற ஏக்கம் என்னுள் எழுந்து
அவனின் வரம்பு மீறல்களை
அவதானித்து மறுத்ததை மறக்கவில்லை

ஆச்சரியம் அவனுள்ளே
ஆசுவாசம் என்னுள்ளே
காதலின் ரசனையில்
இத்தனை போராட்டமென்று
அச்சங்கொண்டகம் அழுதது - ஏனோ அவனை
இழக்க முடியாததை மறக்கவில்லை

விடைபெறமறுத்த மனமும்
இடம்தரமறுத்த நிலையும்
இருமனங்களின் இணைவாம்
திருமணம் பற்றி அசைபோடத்துடித்தது
ஏற்பானா இல்லை மறுப்பானா - என்று
தூக்கமின்றி துவண்டதை மறக்கவில்லை

தொடர்வாள்........

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:08

வாடன்முதல் தோழியர்வரை
அறிந்திருந்த என்காதலுக்கு
அறிவுரைகள் அதிகரித்தபோது
அடுத்தகணமே நிலையான
காதெலெம் காதலென்று கூற
முனைந்ததை மறக்கவில்லை

மலரின் மகரந்தத்தில் மயங்கிய வண்டாய்
என் மடிதவள்ந்த மன்னவனிடம்
“காதலிப்போம் காதலுள்ளவரை
கரம்பற்றியும் காதலிப்போம் மரணம்வரை”
என்றதில் அதிர்ந்தவன் நிமிர்ந்து
என்முகத்தினையேந்திய கரத்துடன்
கண்மணி நாளையே எம் திருமணமென்றதில்
வழிந்த ஆனந்தகண்ணீரை மறக்கவில்லை

அனாதைகளான இருவருக்கும்
ஆதரவான உறவுகளென்ற சிலருடன்
அன்னதானம் மாத்திரமளித்து
அமைதியாய் நடந்தேறியது திருணம்
பெரியவர்களின் ஆசியுடன்
மாலைசூடிய நாளதை மறக்கவில்லை

ஜாதகமும் பார்த்தில்லை
நாட்களேதும் குறித்ததில்லை
இருமனமும் ஏற்றபோது
நடந்தவைகள் நன்றாகவே நடந்தது
அவர்குறி்த்த தினமொன்றில்
தேனிலவாம் முதலிரவை நினைத்து
என்மனம் அஞ்சியதை மறக்கவில்லை

காத்துவைத்த கற்பும்
பொத்திவைத்த மொட்டும்
சொந்தக்காரனிடம் சொந்தமாய்
ஒப்படைக்கப்போகிறேனென்ற
பெருமிதத்துடன் மனமும் உடலும்
தயாரானதை மறக்கவில்லை

காதலர்களின் தனியிரவு
கதைகளுக்கெங்கே சந்தர்ப்பம்
காத்திருந்த கண்ணனவன்
சிறுஎறும்புச் சிறுவனாகி
ஊருமிடமெல்லாம் ஊர்ந்தபோது
வெம்பித் ததும்பிய கதகதப்பில்
விக்கித்துடித்ததை மறக்கவில்லை

விடிந்த இரவு விழித்த முழுமனிசியாய்
இல்லத்தரசி இனியவாழ்கையென
மகிழ்ந்த மனதுக்கு நிகழவிருப்பதை
அறிந்திடாது விண்ணில் பறந்த
பட்டாம்பூச்சியாய் சுதந்திரவானில்
சிறகடித்துப் பறந்ததை மறக்கவில்லை

 என்னதான் நடந்தது அவள் வாழ்வில்...................

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:09

தன்மானத்தின் தலைவனாய்
தலைநிமிர்ந்த கணவனாய் - என்
இன்னல்களுக்கு விடைகொடுத்து
சொந்தமாய்த் தொழிலும் சிறியதாய் மனையுமென
வாழ்வில் ஐக்கியமாகி சுவனத்தை
அனுபவித்து மகிழ்ந்ததை மறக்கவில்லை

இரவுபகல் பாகுபாடுமறந்து
இன்பலோகம் இணைந்தேயடைந்து
கழிந்த நாட்கள் 90உம் விடைபெற
பெண்மைக்கு பெருமைசேர்த்து
புகள்மிகு கருவும் எனைச்சேர்ந்து
தாய்மையானதை மறக்கவில்லை

உலகமே கணவனென்றானது
இன்பமொன்று இருக்கிறதென்று
உறவானவனைக்கண்டேன்.
என்தாயாய் அவர்மாறி எடுத்த வாந்தியை
கையிலேந்தி தலைகோதிச் சீராட்டி
அவர்மகிழ்ந்தபோது வயிற்றுக்குழந்தையும்
தனாய் வளர்ந்ததை மறக்கவில்லை

என்னவனுக்காய் காத்திருந்தமாலை
எதிர்பார்த்திராத செய்திவந்தது
சாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில்
சாவின் எல்லைவரை சென்றுவிட்டாரென்றனர்
இருண்டது உலகம் சுற்றியது தலை
நிதானித்துத் தடுமாறி வைத்தியசாலையடைந்தேன்
அவர்நிலைகண்டு மூச்சயானதை மறக்கவில்லை

கண்விழித்துக் கதறியழுதேன்
விதியின் விளையாட்டையும்
என்நிலையின் அவஸ்த்தையும் எண்ணி
நெஞ்சம் படபடத்து கதறல் அதிகரித்தபோது
சேர்ந்த நண்பர்ளும் சூழ்ந்த நபர்களுமாய் - ஆறுதலாய்
ஏதேதோ சொல்லக் கேட்டதை மறக்கவில்லை

பிரியாத உயிருடன் பிரிந்த கால்களும்
சிதைந்த உடல்களோடு சிதறிய சிந்தையுடன்
மூர்ச்சையற்று முனகல்களுடன்
முழுமனிதனவர் அரைமனிதனாயுள்ளாரென
வைத்தியரின் வார்த்தையில் பைத்தியமானபோது
என்னையே இழக்கத்துணிந்ததை மறக்கவில்லை

தொடர்வாள் அவள் சோகங்களுடன்

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:09

வயிற்றுச்சுமை தீருமுன்னே
மனச்சுமை அதிகரித்து
வற்றிப்போன கண்ணீரும்
வரண்டுபோன நாவுமாய்
வெறுக்கத்துணிந்த வாழ்வை
வளரும் குழந்தைக்காய்
நிர்ப்பந்த வாழ்வேந்தி நிலமகள் மடியில்
நானொரு நடைப்பிணமானதை மறக்கவில்லை

அன்னையாயிருந்த ஆருயிரை
அங்கவீனராயளித்த இறைவனை நொந்து
மீண்டும் அனாதயாய் இருண்டவாழ்வின்
வெளிச்சந்தேடி விண்ணையடைந்தும்
வெறுமையானதை மறக்கவில்லை

ஐந்துமாதம் அயராதடைந்த இன்னல்களும்
ஐயங்களும் அனலாய் எரிந்தது
கணவனை மார்பிலும்
குழந்தையை வயிற்றிலும் சுமந்து
சிசுவைமறந்து கணவனைக் காத்ததில்
பிரிந்த குழந்தையை மறக்கவில்லை

தாயின் பரிதவிப்புடன் சேயும் துடித்தது - என்
தங்கத்தின் உழைச்சலை சாதாரணமாய் கொண்டு
அன்பைக்காத்திட பாசத்தை மறந்து
உண்ணமறுத்த உணவு
விசமாய் வீழ்த்தியதென்குழந்தையை
அறிந்தபோதுதான் அழுதேனதை மறக்கவில்லை

எனக்கெனத்துணைவர என்பிள்ளை
பிறப்பானென்ற கனவும்
காலம் முழுதும் துணைவர
கணவனிருக்கிறானென்ற ஆசையும்
நிராசையாகிக் கலைந்து
தனிமையானதை மறக்கவில்லை

எத்தனைநாளழுவது எதற்காக
அழுவதென்ற வீராப்புடன்
பிரிந்தவைகளை நினைத்து
வருந்தியென்ன லாபமென்று
வருந்தினேனெனை விரைந்து
போராடத்துணிந்ததை மறக்கவில்லை

இவளது போராட்டம் தொடரும்

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:10

நிதர்சனமான நிலையினையாள
தடுமாறிய வாழ்வின் துடுப்பினைத் தேடி
வாழ்வின் ஆழம் வரை அலையநேர்ந்தது
இறந்தது குழந்தை இருப்பதும் (கணவன்)
குழந்தையாகவே உணர்நதேனதை மறக்கவில்லை

இருந்தவைகளை இழந்திருந்து
வைத்திய சேவைக்கே யாசகம் தேடும் நிலையில்
மீண்டும் துயர் மீளாத்துயராகி
வயிற்றைக்கழுவ வேலையும் தேடி
அலைந்த போது தருபவர்களும்(உடலை) கேட்டபோது
கொடுத்துப்பெற மறுத்ததென் மனம் - இருந்தும்
என்னை இழக்காததை மறக்கவில்லை

அழகையும் அறிவையும் படைத்த இறைவன்
எனோடு துயர்களையும் பிறக்கச்செய்தானேன்
என்ற கேள்விகளை எனக்குள் நான் கேட்கலானேன்
என்னைத் தாங்க முடியாமல் அழுத கணவனின்
கண்ணீரில் தினமும் நனைந்ததை
என்நெஞ்சமின்னும் மறக்கவில்லை

இளமை உனக்குண்டு கண்ணே
இனிய வாழ்வும் உனக்கு வேண்டுமடி
இன்பம் என்னால் இல்லையென்றானதால்
மறுமணத்தில் நாட்டம் கொள்ளடியென்று
பலதடவை தன்னை மாய்க்கத்துணிந்த
உத்தமனை எப்போதுமே மறக்கவில்லை

கட்டுடல் உனதெடி கசங்கிடா மலர் நீயெடி
கட்டில் சுகம் தருகிறேன் காலம் முழுதும்
என்னோடு தொடரெடி என்றெல்லாம்
கயவர் கூட்டத்தின் நச்சரிப்புகளை
என்றும் என்வழியில் எற்றபோது
இறந்திட மனம் துடித்ததை மறக்கவில்லை

உண்மைக்காதலை மனதிலும்
வைராக்கியம் கொண்ட போராட்டமுமாய்
பொழுதுகளை வழியனுப்பினாலும்
விழுமியங்கள் நழுவிடாத நிலையுடன்
என்னை நான் நிரூபித்திருப்பதை
மறதியிலும் நான் மறக்கவில்லை

தொடர்வாள் .........பல தொடர்களில்

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:13

காத்திராத காலம் கரைந்தோடியது
கணவனின் பிணியும் பழகிப்போனது
வறுமையின் பிடியும் இறுகலானது
எதிர்காலக் கேள்விகள் சுமைகளானது
நகராமல் நகரத்துடித்த நாட்களை
நகர்த்தினேனதை மறக்கவில்லை

கிடைத்த வேலைகளோடு பசியாறி
மிகுதியான நேரங்களில் தாதியாகி
கடந்த நாட்ளில் ஓர் நாளில் பேரதிர்வு
நாற்காலியில் இருந்த கணவன்
இருந்தவாறே இறந்திருந்தார்
அந்த கறுப்புநாளை மறக்கவில்லை

அயலவர் கூடிவர இறுதிவலம்
அமைதியாக நடந்தேறியது
எனக்கென இருந்த பந்தம் இறுதியானது
அவர் இருப்பதைவிட இறந்தது மேலென
என் கதுகளுக்கே கேட்குமளவு
உரைத்தார்களதை மறக்கவில்லை

விதியின் சதுரங்கமிதுவாவென்று
வானம் பார்த்து மல்லாந்திருந்த என்மனம்
அனாதையும் நான் அவஷ்த்தையும் நான்
விதவையும் நான் பாவமும் நான் என்று
கடந்தவைகளை அசைபோட்தை மறக்கவில்லை

என்துரதிஷ்டமா என்னைத்துரத்துகிறதென்று
வீட்டினுள் முடங்கிக்கிடக்கலானேன்
வீதியில் நடக்கும்போது உலகமே எனைப்பார்த்து
ஒதுங்கிப்போ... இப்பேதையை வி்ட்டு - என
நகர்வதாய் உணர்ந்தேனதை மறக்கவில்லை

கிடைத்தவற்றைக் கையிலெடுத்து
வீட்டைவிட்டு கால்போன போக்கெல்லாம்
நடக்கலானேன் என்னை மறந்து
அம்மாவென்ற அலறல் குரல்கேட்டு
திரும்பினேன் திடுக்கிடுகிறேன்
தனிமையில் தத்தளிக்கிறதோர் அனாதை
வாரியணைத்த போது தாய்மையுணர்ந்தேன்
அதை இதுநாள்வரை மறக்கவில்லை

தொடர்வாள் ................

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:13

அனாதையுடன் அனாதையொன்று சேர
ஆரத்தழுவி அணைத்தபடி அங்குமிங்கும்
அரவம் தேடினேன் யாருமில்லை
யாரது சேயோ எனக்களித்தவர் யாரோ
விடைகளற்ற கேள்விகளோடு
வீதியில் இறங்கி நடந்ததை மறக்கவில்லை

என்னைப்போல் நீயுமா வென
நோக்கினேன் மழலையை
அவளது புன்சிரிப்பில் புதையுண்டேன்
புலரும் பொழுதுகளெல்லாம்
அனாதைகளைச் சுமக்கிறதே
காலத்தின் கொடுமையிதுவா வென
வெறுத்ததென்மனம அதை மறக்கவில்லை

முடித்திட நினைத்த வாழ்வுக்கு
முகவரி தந்த குழந்தையை முத்தமிட்டு
முழுத்தாயாய் நான் மாறி
அவளையும் பார்போற்றச் செய்து
அனாதைகளற்ற உலகம் நாட
உணர்ந்தேனதை மறக்கவில்லை

ஓய்வின்றி ஓடிய கடிகார முட்கள்
பல நாட்களையும் கடத்திவிட்டன
என் குழந்தை வளர்ந்தாள் - தன்னை
தானாக வளர்த்துக்கொண்டாள்
நடந்த பாதைகளெல்லாம் வெற்றகளோடும்
வீடுதிரும்பலானாள் வியந்தேன்
உரமேற்றினேனதை மறக்கவில்லை

பட்டமரமாய் பாழடைந்த வீடாய்
ஆனதென் வாழ்க்கைக்கு ஆண்டவன்
சேர்த்த துணை மகளென்றே இருந்துவிட்டேன்
மறுவாழ்வு பற்றி நினைக்காத என்னை
மனைவியாய் ஏற்கத் துடித்தனர் பலர்
ஏமாற்றங்களைப் பயந்து
எட்டியோடியதை மறக்கவில்லை

மனிதப்பிறவியான என் மனதுக்கும்
கடிவாளமிடத்துணிந்தானொருவன்
என்தவத்தினையும் கலைக்க நாடினான்
காய்ந்து கிடந்த கரிசல்காட்டினுள்
தீயிட்ட பாவியாய் தொடர்ந்தானொருவன்
துடித்தது தேகமெல்லாம் தொடரவும்
மறுத்தது என்மனம் அதை மறக்கவில்லை

வருவாள் புது மகளாய்

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:14

திருமணவாழ்வுடன் தொடர்ந்து
இருமன மகிழ்வுடன் கலந்து
பல மனங்களின் சங்கமத்தில்
அங்கங்கள் கொள்ளும் சங்கமமே
வாழ்வின் வெற்றி என்று என்மனம்
சில தினங்களில் ஏங்கியதை மறக்கவில்லை

வாலிபத்தின் முதிர்வும்
தனிமைகளின் வெறுப்பும்
ஈர்ப்புகளை ஏந்திக்கொள்ள
வழிசெய்து வகைசெய்ததை
வார்த்தைகளில் மாத்திரம்
மறுத்திருந்ததை மறக்கவில்லை

என்நிலை உணர்நது என் கரம் பற்றிட
வந்தவர்களுள் மேன்மையானவரென
போராடிய என் மனதிற்கு ஆறுதலாய்
தொடர்ந்தவனின் தொடர்புகள்
அவனைத் திரும்பிடச்செய்ததை
காதலென்று உணர்ந்ததை மறக்கவில்லை

மறுவாழ்வும் கிடைக்கிறது - என்
திருமகளுக்கும் தந்தைவாழ்வு
உறுதியாகிறதென்ற மங்கல நிகழ்வுகள்
மகிழும் தினங்களாக எங்களின்
வாழ்க்கைக்கு வழிசெய்ததை
ஏற்றிருந்தேனதை மறக்கவில்லை

அமைதியாய் அலங்காரமின்றி
நடந்தேறிய மறுமண தினத்தில்
அனாதைகளுக்கு அன்னதானமளித்து
அவர்களின் முகத்தின் மகிழ்வுகளோடு
புதுவாழ்வை புதுப்பித்த தினமதை
புத்துணர்வாய் மகிழ்ந்தேனதை மறக்கவில்லை

நான் வெறுத்திருந்த வேதனைகள்
வேரோடு அகல்கின்றதாய்
ஆறுதல் கரங்களின் அரவணைப்பில்
ஆட்பட்டு ஆசுவாசப்படுகிறேன்
என் வாழ்விலும் மகிழ்கிறேனென
 களிப்பில் மகிழ்ந்ததை மறக்கவி்ல்லை

எத்தனை துன்பங்கள் என்னையும் தொடர
உறுதியான போராட்டங்களுடன்
தடம் புரளாத என் உயரிய நடத்தையின்
வெகுமானமாய் தாமதித்தேனும்
தரமான வாழ்வை அடைந்ததாக
உணர்ந்தேனதை மறக்கவில்லை

தேகத்தை இரைகளாக்கி இழப்புகளுக்கு
ஈடுகொடுத்திடத் துணிவோருக்கு
சாட்டையடியாய் வாழ்ந்து காட்டினேன்
துணிவின் துணைகொண்டு
வாழ்க்கையின் இமயம் தொட்டிருக்கிறேன்
என்றெல்லாம் இறுமாப்போடு
கடந்த நாட்களை இன்னும்தான் மறக்கவில்லை

தொடர்வாள்...........

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:14

அவளாகிய அவள்....................... பாகம் 15

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) 34152145ea3
புத்துயிர் பெற்ற 
புதுமைப்பெண்ணாய் 
புது வாழ்வின் புகழ்ச்சியோடு 
காலம் எனைவிட்டகன்று 
சென்றதை மற்க்கவில்லை 

திடமான உறுதியுடனும் 
அவசியமான தைரியத்துடனும் 
என்மகளையும் வேங்கையாய் 
வடித்தெடுத்து அழகு பார்த்தேனதை 
மறக்கவில்லை

கணவனுக்குத் துணையாய் நடந்து 
காதலின் உச்சத்திலாழ்ந்து 
மறுவாழ்வில் வெற்றியும் கண்டு 
அவலங்களேயற்ற 
அரியவாழ்வடைந்தேனதை மறக்கவில்லை 

எப்படி இருந்தாளிவள் 
எப்படி வாழந்தாளிவள் 
பெண்ணாய்ப்பிறந்து 
பெண்மையை உணர்ந்து 
வாழ்வை வாழ்ந்து காட்டிய 
சாதனைப்பெண்ணிவள் 

கூடியிருந்தோர் பேசுகிறார்கள்
என் காதுகளினூடே 
என் இதயம் தொடுகிறது வார்த்தைகள்  
என் நாடியும் தளர்கிறது 
உலகுக்கு விடைகொடென்று 
எமன் என்னை அழைக்கிறார் 

முற்றும்  
அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) C39E81ED20FBA49F68509A83F1D9FC65
மரணப்படுக்கையில் இருந்த ஒரு பெண் தனது வாழ்வை மீட்டிப்பார்த்ததாய் கருவை அமைத்து கவிதையாக்கியிருந்தேன் கருத்துகள் எதுவாகினும் வரவேற்கிறேன் அனைவருக்கும் நன்றிகள் 

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Thu 28 Aug 2014 - 16:07

நேசமுடன் ஹாசிம் wrote: இக்கவிதையினை எமது தளத்தில் சில பகுதிகள் மாத்திரம் பதிய நேர்ந்திருக்கிறது அதனால் ஒரே பதிவில் அத்தனை பகுதியையும் இணைத்திருக்கிறேன் பார்த்துக் கருத்திடுங்கள் 

பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கு அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை

வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை

படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை

என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Images?q=tbn:ANd9GcTOR1rfg6MJjPhERudC7GdQxA1ydu9r_EAKIGDbbmJlUUFIJ-1Y
எனக்கிருந்த தமிழார்வத்தில்
 “ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய் 
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை

                                              இவள் இன்னும் தொடர்வாள்......................
அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Images?q=tbn:ANd9GcT3eAWUMssDM-sYpmUg5YubFpf_jJOFWyMn1RAPcsgAiVqXMI8

அவளாகிய அவள்!

வித்தியாசமான தலைப்புக்கு முதலில் வாழ்த்துகள்!

அவளாகிய அவள் என எவளோ ஒருத்திக்காக எழுதப்பட்ட கவிதை இது என முதல் பகுதியில் உகிக்க முடிகின்றது! கடந்த கால கசப்புடன் கடந்த கடப்புக்களை மறக்காத மாண்பு மிக்கவளாய் முதல் பராவில் காட்டுவது சிறப்பு.

பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கு அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை

அவள் பிறப்பே அனாதை யானது எத்தனை துயரெனெ உணர்ந்தோமோ இல்லையோ பெண்ணாய் அவளுண்ர்ந்த மாற்றங்களை பகிர்ந்திடவும் யாருமில்லை எனும்போது எத்துணை துயராய் சூழல் இது என மனம் வலிக்கத்தான் செய்கின்றது.

என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை

இவ்வார்த்தைகளுக்காக சல்யூட் ~/ .. ஒவ்வொன்றாய் தொடரட்டுமா?

மொத்தமாய் இட்டதனால் மொத்தமாய் படித்திடத்த்தான் இயலவில்லை! ஸாரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Thu 28 Aug 2014 - 16:15

நேசமுடன் ஹாசிம் wrote:நான் அறிந்திருந்திடாத
பருவம் எனை அடைந்தபோது
தாயம்மாளின் அரவணைப்பில்
தாய்ப்பாசம் உணர்ந்த
நொடிகளின்னும் மறக்கவில்லை

தோழமையின் ஆரவாரத்துடன்
அகமகிழ்ந்த பூப்பெய்துவிழவில்
வெட்கித்தலை குனிந்து
வேதனைகள் மறந்தநிலை
என் வாழ்நாளில் மறக்கவில்லை

என் ஏக்கம் தொலைத்த
என் உயிரிலும் மேலான
தாயம்மாளின் மரணம்
தரணியை இழந்ததாக
உணர்த்தியதை மறக்கவில்லை 
அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Images?q=tbn:ANd9GcSLDkVFDrYPrQEQ6ZMG0dqZSxlYXzZpBDjKH-lTjZOA8GAeTOJ35w
நடு நிசி ஓரிரவில் 
காவல்காரனின் சில்மிசத்தை
எதிர்க்கத்துணிந்த போராட்டத்தில்
அவன் மண்டையுடைத்து
பொலிஸ் நிலயம்
சென்ற நாளை மறக்கவில்லை

அபயமளித்த இல்லத்திலும்
அவலநிலையென்று
அழுதழுது வற்றிப்போன
கண்ணீருக்காய்
காத்திருந்த நாட்களை
மனமேனோ மறக்கவில்லை

என் வாழ்வின் சூரியன்
எப்போது உதயமாவானென
விடியலைத்தேடிய போது
ஒளியொன்று புலர்ந்த
நொடியினை மறக்கவில்லை

எதிர்பார்ப்பு நிறைவுற்றதா?? இவள் தொடர்வாள்.................

தொடர்கவிதையாய்  ஒரு அபலைப்பெண் ஒருத்தியின் கதை!  இதை  படிக்கும் போது எனக்கு வைர முத்துவின் சில படைப்புகளை ஆனந்த விகடனில் தொடராய் படித்த  நினைவு வருகின்றது!

தாயம்மாளின் அரவணைப்பு நீக்கியபின் பாதுகாப்பறற அவள் சூழல் குறித்த  வரிகள் இதோ இந்த சம்பவம் இன்று தான் நடந்திருக்குமோ என படிக்கும் நொடியில் தோன்ற வைக்கின்றது!

இருளான அவள் வாழ்வில் வந்த ஒளி நிலைத்ததா என  அறிந்திடத்தான் ஆவல் அதிகமாகின்றது!

Last edited by Nisha on Fri 29 Aug 2014 - 11:45; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Fri 29 Aug 2014 - 1:20

மிக்க மகிழ்ச்சி முடிந்தவரை முழுவதுமாக படித்து உங்களின் கருத்திடுங்கள் இது பல காலம் எழுதியது இப்போதுதான் கவிதையினை முடிவுக்கு கொண்டு வந்தேன் பிறிதொரி தொடரை ஆரம்பிக்க உங்களது கருத்துகள் ஏதுவாக அமையும் மிக்க நன்றி

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Sat 30 Aug 2014 - 2:48

நேசமுடன் ஹாசிம் wrote:எதிர்பார்ப்புகளே அற்று
கடத்தியிருந்த தினங்களுக்குள்
என்பெயரிட்டொரு மடல்
எங்கிருந்தோ வந்ததென
என்கரம் கிட்டியதை மறக்கவில்லை

யாருமற்ற எனக்கு யாரெழுதியமடலோ - என்ற
ஆவலும் ஆச்சரியமும் எனையாள
அமைதியாகப்பிரித்த மடலில்
அன்பே...
உனைக்கண்டு எனைமறந்தேன்-என்
உணர்வுகளுக்குள் நீ ஊர்ந்தாய்
உனையடய வேண்டுமென
என்னுள்ளம் துடிக்குதடி - என்று மட்டும்
இருந்த வரிகளை நம்பாத என்கண்கள்
யாரென்று தேடியதை மறக்கவில்லை

விபரங்களற்று வெற்றுக் காகிதமாயிருந்த
பகுதிகளுக்குள் என்கண்களுர்ந்தும்
ஏமாற்றம் எனைக்கொல்ல
ஏக்கம் எனையாண்ட
அந்த நிமிடங்களை மறக்கவில்லை

மொட்டைக் காகிதமா - அல்லது
மூடனின் காகிதமாவென
தூக்கமும் வரமறுத்து
என்னுள் ஏனிந்த மாற்றமோ
எனவியந்து நாட்களோடு நானும்
காத்திருந்ததை மறக்கவில்லை

என்நிலை கண்ட தோழி
உன்க்குள்ளும் காதலோ..
உரியவன் யாரெடி
கனவென்ன கண்டாயடி - என்று
கிண்டல்செய்தபோதே அழைக்கப்பட்டு
நான் ஓடிய வேகம் மறக்கவில்லை

எதற்காக ஓடினாள்........????

அனாதையாயிருந்தாலென்ன  அவளுக்குள்ளும் தற்காப்பு  உணர்வுடன் கூடிய காதல் உணர்வுகள் உண்டென்பதையும்   தன்னையும் நேசிக்க  ஒருவர் உண்டென மகிழ்ந்தாலும் சந்தேகமும் கொண்டாள் என  சொன்ன விதம் அருமை!! 

உனைக்கண்டு என மறந்தேன் எனும் வரிகளுக்கு அவள் மயங்கவில்லையாமே! அசத்தல் தான்.  

உனையடைய வேண்டுமென என்னுள்ளம் துடிக்குதடி எனும் வரிகளை நம்பாது  யாரென தேடிய மனதென  எழுதியதன் மூலம் பெண்மைக்கே இயப்பான  நற்குணத்திலொன்றை   மிக அழகாக வெளிப்படுத்திய விதம் பிடித்திருக்கின்றது!

 ஏன் அவள் சந்தேகம் கொண்டாள்! ஊரும் பேருமில்லாமல் இருந்ததனால்  அவளுக்கே நம்பிக்கை வரவில்லை எனும் போது அவள் தோழி எப்படி நம்புவாள்!
அன்பே...
உனைக்கண்டு எனைமறந்தேன்-என்
உணர்வுகளுக்குள் நீ ஊர்ந்தாய்
உனையடய வேண்டுமென
என்னுள்ளம் துடிக்குதடி - என்று மட்டும்
இருந்த வரிகளை நம்பாத என்கண்கள்
யாரென்று தேடியதை மறக்கவில்லை

அவள் தோழிக்கே அவளுக்கு காதல் மடல் வந்ததெனும் நம்பிக்கை வரவில்லையே! அவளுக்கு கூட இவள் நிலை கன்வு கண்டாயோ தோழி என சொல்லி  கேலி செய்யும் படி இவள் நிலையானதோ?  

அவளாகிய அவளின் காதலன் யாராயிருப்பான்? அவன் உண்மையாய் அவளை காதலித்தானா? இல்லை அனாதை தானே  யார் கேட்பார்கள், காதலித்து கைகழுவி விடுவோம்  என  கடிதம் கொடுத்தானா?  இனி வரும் வரிகள் பதில் சொல்லும் தானே? 

அதென்னமோ ஹாசிம்  இந்த பதின்ம வயதுக்காதலுக்கும் கடிதத்துக்கும் யாரும் தப்புவதில்லை என்பதை  யாரோ ஒரு அனாதை வாழ்வை கொண்டும் மெய்ப்பிக்கின்றீர்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Sat 30 Aug 2014 - 3:04

நேசமுடன் ஹாசிம் wrote:அன்பிற்காய் கையேந்தி
அலைந்த பொழுதுகளில்
அடைந்தேன் உனையோர் திருவிழாவில்
தொடர்ந்தேன் உனையடைய
வியந்தேன் உன் சரிதையில்

அடைவது உனையென்று
உள்ளம் எனக்கிட்ட கட்டளையில்
உனக்காக ஏங்கினேன் கண்ணே
இன்ப அதிர்வுக்காய்
செய்தனன் நாடகம் - அதில்
வீழ்ந்தது நாநானேன்

எனக்காகப் பிறந்தவளே
உன் விழிகளில் ஈரமெதற்கு
பிறப்பில் அனாதையாய் நானும்
வளர்ப்பில் உயர்ந்து நிற்கிறேன்

உனக்குப்பிணி தந்து
உயிரில் கலந்திட்ட காதலுடன்
உனையேந்தினேன் அழகே
உன்னோடு மரணம்வரை
தொடர்வது திண்ணம்

வரிகளின் இனிமையிலும்
வார்த்தைகளின் உறுதியிலும்
சொக்கித் தவித்து
சொப்பனத்திற்காய் அவன்மார்பில்
சாய்ந்த நிமிடம் மறக்கவில்லை

தழுவலில் எமை மறந்து
சூழல்நிலையும் மறந்து
சுவர்க்கம் நேரில் கண்டதாய்
சுகம் கண்டபொழுது
எழுந்த சிரிப்பொலியில்
அதிர்ந்ததை மறக்கவில்லை

இன்னும் தொடர்வாள்...........
அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Images?q=tbn:ANd9GcTiexr6gsCv6uvQdO677owGGvpQnxOvz5QHOEdS9OcYvGOIvccv

இன்றைய தினம் பாரதியாய் கவிதைகளை தேடிப்படித்து பாருங்கள். படியாத பாமரரும் எழுத்துகூட்டி படிக்கும் விதமாய் இலகு தமிழில்  தான் கவிதை எழுதி இருப்பார்.!  அவர் வாழ்ந்த காலத்தில் அவரை எவரும்  கண்டு கொண்டதே இல்லையாம்! 

உங்கள் வரிகளில்  எழுத்துக்களை இயல்பாய்   இணைத்த விதம் பாராட்டுக்குரியது! எதார்த்தமான வரிகள்! அந்த நேரத்து உணர்வுகளை  இந்த நிமிடம் தான் நடந்ததோ எனஉணரசெய்யும் எழுத்துக்கள்! பிறப்பால் அனாதையானாலும் வளர்ப்பால்  உயர்ந்தவன் தானென நாயகனின் அறிமுகப்படல்ம் கூட  தேடி தேடி எவருக்கும் புரியா வார்த்தைகளை கொண்டு அலைபாய்வதாய் இருக்காது அனைவருக்க்கும் புரியும் விதமாய்  இயல்பாய் எழுதிய விதத்துக்கான நான் உங்களை பாராட்டுகின்றேன்! 

வரிகளின் இனிமை,  உணர்வுகளை மரக்க வைத்து அந்த நொடி அவன் எவரென அறியா விட்டாலும் அவள் மார்பில் சாய்ந்ததன் மூலம் அவளும் சாதாரண உணர்ச்சி மிக்க பெண் தான் 
புரிந்திட்டோம்!

காதலன் நல்லவனாயிருந்தாலும்  நீ கவனமாயிரு எனும் அவள்  தோழிகளின் எச்சரிகையும் தொடரும் அல்லவா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 8:23

ஒவ்வொன்றாய் உங்களின் கருத்தை அவதானமாக கூர்ந்து படிக்கிறேன் ஒவ்வொன்றாய் பதில் எழுதினால் இன்னும் அவசியமற்ற நீளம் அதிகமாக தொடர்பு அறுந்துவிடுமென்று ஒரே பதிவில் உங்களுக்கான என் மனமாரந்த நன்றிகளையும் எனது மனதின் ஓட்டத்தினையும் வெளிப்படுத்துகிறேன் உங்களின் வரிகளில் இன்னும் என்னை தேடச்செய்கிறீர்கள் எனது உண்மையில் இந்த கவிதை சாதாரணமாய் ஒரு தலைப்பிட்டு எந்தவித தொடர்பும் குறிப்பு வைக்காது அந்த கவிதையின் தொடரை மனதில் கொண்டு எழுதி முடித்திருந்தேன் உங்களின் பின்னூட்டம் தான் இக்கவிதைக்கு கிடைத்த வெகுமானம் மிக்க நன்றி

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 16:46

அவளாகிய அவள் மூன்று வருடங்களுக்கு முன் எங்கள் முன் வந்தாள் அவள் கதையில் முக்கால் வாசியைச் சொன்னால் ஆர்வமாக பக்கம் பக்கமாக ஒன்பது பக்கங்களைப் படித்து முடித்தோம் கருத்தும் பகிர்ந்தோம் அடுத்து என்ன அடுத்து என்ன என ஏங்க வைத்த அவளாகி அவள் மீண்டும் மூன்று ஆண்டுகள் களித்து புதுப்பொலிவுடன் எங்கள் முன் தோண்றியுள்ளாள்.

தனிமையாய் அநாதையாய் தத்தளித்து தடுமாறி இன்னல்கள் பல கண்டு எந்த சூழலையும் ஏற்று எங்கும் தாளாது எதையும் எதிர்த்து பட்ட துன்பங்கள் துயரங்கள் அனைத்தையும் பாடங்காள ஏற்று வாழ்வில் வந்த தடைக்கற்கள் யாவையும் படிக்கற்களாக மாற்றி வாழ்க்கையோடும் காலத்தோடும் போராடி வாழ்ந்து வந்த அவளாகிய அவள்

காதல் காதலன் திருமணம் கர்ப்பம் மகிழ்ச்சி என் வாழ ஆரம்பித்த வாழ்வில் விபத்து வைத்திய சாலை கணவனின் உடல் ஊனம் தன் கர்ப்பச் சிதைவு மீண்டும் கணவனைக் குழைந்தையாக ஏற்று கணவனுக்காக தன்னை எற்று தனக்காக வாழ்வு தந்த அந்த வள்ளலுக்காக மீண்டும் வாழ ஆரம்பித்த அவளுக்கு கணவனின் மறைவு வாழ்வில் சொல்ல முடியாத துன்பம்

எவ்வளவு வேதனை எத்தனை சோதனை எத்தனை வேதனை இவைகள் அனைத்தையும் தாண்டி மரணத்தைத் தேடிய அவளுக்கு கிடைத்த இன்னொரு ஆறுதல்  

அநாதைக்கு அநாதை துணையென மீண்டும் அவள் வாழ்வில் துளிர் விட்ட தருணங்கள்  மிக மிக வரவேற்கத் தக்கது
புத்துயிர் பெற்ற புதுமைப்பெண்ணாய் புது வாழ்வின் புகழ்ச்சியோடு
காலம் எனைவிட்டகன்று சென்றதை மற்க்கவில்லை  என்று.

கவிஞரின் ஒவ்வொரு நகர்வுகளையும் மிகவும் பிரமாதமாக நகர்த்தியுள்ளார்  நிச்சியமாக ஆர்வத்தோடு அடுத்த கட்டைத்தை எதிர் பார்க்க வைத்துள்ளார் இதுதான் கலைஞனின் சிறப்பு அருமையான அவளாகிய அவள் ஒரு சினிமாப்படம் அதுவும் வெற்றிகரமான பிரமாண்டமான ஒரு படம் பார்த்தது போன்றுள்ளது  

அது மட்டுமில்லை இதை அப்படியே சேகரித்து ஒரு மேடை நாடகமாவும் அபிநயிக்கச்செய்தால் நிச்சியம் பலருடய பாராட்டும் ஒரு அவாடும் கிடைக்கும் என்பது உறுதி முயற்சிப்போம் பாடைப்பாளரே மிக மிக சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் மன நிறைவாக உள்ளது வாழ்த்துக்கள்.

என்ன ஒரு குறை முடிவுக்காக மூன்று ஆண்டுகள் காத்திருக்கச் செய்து விட்டீர்கள் மருதநாயகம் படம் வெளி வந்தது போன்ற ஒரு உணர்வு
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Sat 30 Aug 2014 - 17:50

நண்பன் wrote:அவளாகிய அவள் மூன்று வருடங்களுக்கு முன் எங்கள் முன் வந்தாள் அவள் கதையில் முக்கால் வாசியைச் சொன்னால் ஆர்வமாக பக்கம் பக்கமாக ஒன்பது பக்கங்களைப் படித்து முடித்தோம் கருத்தும் பகிர்ந்தோம் அடுத்து என்ன அடுத்து என்ன என ஏங்க வைத்த அவளாகி அவள் மீண்டும் மூன்று ஆண்டுகள் களித்து புதுப்பொலிவுடன் எங்கள் முன் தோண்றியுள்ளாள்.

அடேங்கப்பா! விமர்சனம் என்றால் இதுதான் விமர்சனம்!  ஹாசிம் உங்கள் கவிதைக்கு இதை விட வேறெப்படி விமர்சித்தால் மகிழ்வீர்கள்?  இது தான்  நிறைவான முழுமையான விமர்சனம் ஹாசிம்! 

மூன்று வருடம் முன்னால் இருந்ததை விட இன்னும் மெருகேறலோடு உங்கள் கவிதை  எழுத்துக்கள் விமர்சிக்க பட்டிருக்கின்றது. இனியும்  சாக்குப்போக்குகள், சொல்லி எழுதுவதையும் சேனையையும் விட்டு போவீர்களோ ஹாசிம்?

ஒரு படைப்பாளியை இதை விட என்ன சொல்லி ஊக்குவிக்க இயலும். பொன்னை விட பொருளை விட இம்மாதிரி விமர்சனங்கள் தானே அவனை வானத்தின் உச்சியில் கொண்டு நிறுத்தும். 

என் மன்மார்ந்த பாராட்டுகள் முஸம்மில்!  விளையாட்டு பிள்ளையாய் கலாட்டாவும் கிண்டலுமாய் இருக்கும் என் அன்பு தம்பிக்குள் இருக்கும் திறமையை இந்த  விமர்சனத்தில் மூலம் நான் உணர்ந்தேன். படைப்பது கூட ஒரு பொழுதினில் இலகுதான். அப்படைப்பை விமர்சிப்பது எத்தனை சிரமம் என்பதினை நான்  உண்ர்வேன்! ஒவ்வொரு எழுத்தையும் வரியையும் ஆழ்ந்து படித்து  பதினைந்து அத்தியாயத்தையும் ஒரே பதிவில் விமர்சித்திட்ட உங்கள் திறமைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். 

இருவருமே தொடருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 18:10

Nisha wrote:

என் மரியாதை மதிப்புமிகு அக்கா மூன்று நாளாக திறக்க படிக்க கருத்திட முடியாமல் இருந்தேன் கிடைக்கும் நேரத்தில் ஒரு சில சின்னப் பதிவுகள் இட்டேன் ஆனால் இன்றும் நான் படிக்க வில்லை என்றால் எப்படி நியாயம் கடையில் கஷ்டமர் இல்லாத நேரம் பார்த்து படித்து பகிர முடிந்ததில் ஆனந்தம் எனது கருத்து உங்களுக்குப் பிடித்திருக்கிறதெனில் நிச்சியமாக ஹாசிமுக்கும் பிடிச்சிரும் என்பது உறுதி மிக்க மகிழ்ச்சி அக்கா நன்றி கலந்த மலர் )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 18:55

மிக்க மகிழ்ச்சி நண்பன் மற்றும் அக்கா நண்பனைப்பற்றி நான் குறிப்பிடுவதென்றால் என்னை இத்தனை தூரம் அக்கிவைத்து ஆறவைத்து பகிர்ந்தளித்து பரிமாறி மகிழ்கிறால் என்றால் மிகையாகாது உண்மையில் எனக்குள் இருந்த ஆற்றலை உலகறிய மற்றவர்கள் பாராட்டுமளவு பகிர்ந்திட வழிசெய்து எனக்கு வழிகாட்டியவர் என் உயர்த்தோழன் நண்பன்தான் நான் ஆக்கியிருந்த கவிதைகளை வேடில் சேமித்து வைத்துவிட்டு லங்காசிறிக்கு அனுப்பி வந்திருந்தேன் அதனைப்படித்திருந்த நண்பன் என்னை ஈகரையில் அறிமுகம் செய்து எனது கவிதைகளை பகிர்ந்திடச்செய்தார் அதன் மூலம் எனது கவிதைகளுக்கான நேரடி பாராட்டுகளும் அதன் திருத்தங்களும் மெருகேற்றலும் என்னை வளப்படுத்த வாய்ப்பாக இருந்தது அதற்காக எனக்கு பல வழிகளிலும் உறுதுணையா இருந்தவர் நண்பன் சம்ஸ் மற்றும் யாதுமானவள் அக்கா மஞ்சுபாஷினி அக்கா ஆதிரா அக்கா மற்றும் பலர் இப்போது நிஷா அக்கா இவ்வாறு எனது வாழ்வில் எனது இத்துறைக்கு பலரும் பலவகையில் உதவி செய்திருக்கிறீர்கள் 

இந்த கவிதையைப்பொறுத்த வரை மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தாலும் அதே பொலிவுடன்தான் முடித்துமிருக்கிறேன் உங்களிருவரின் கருத்துகளும் இன்னும் என்னை ஊக்கப்படுத்தி யிருக்கிறது என்பது மாத்திரம் வெளிப்படையான உண்மை உங்களனைவருக்கும் நான் வாழ்நாளுள்ளவரை கடமைப்பட்டிருக்கிறேன் 

இதில் விடுபட்டிருக்கின்ற அத்தனை உறவுகளுக்கும் ஈகரை நாண்பர்கள் தொடக்கம் சேனையின் அத்தனை உறவுகளும் என்னை ஒரு வரியிலேனும் பாராட்டி மகிழ்வித்திருக்கிறார்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் காலமுள்ளவரை தொடர்வோம் இதே நட்புடனும் பாசத்துடனும்

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum