சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Khan11

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 28 Aug 2014 - 9:03

First topic message reminder :

இக்கவிதையினை எமது தளத்தில் அவளாகிய அவள் பாகம் 1 தொடக்கம் 9 வரை
 மாத்திரம் பதிய நேர்ந்திருக்கிறது அதனால் ஒரே பதிவில் அத்தனை பகுதியையும் இணைத்திருக்கிறேன் பார்த்துக் கருத்திடுங்கள் 

பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கு அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை

வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை

படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை

என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Images?q=tbn:ANd9GcTOR1rfg6MJjPhERudC7GdQxA1ydu9r_EAKIGDbbmJlUUFIJ-1Y
எனக்கிருந்த தமிழார்வத்தில்
 “ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய் 
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை

                                              இவள் இன்னும் தொடர்வாள்......................
அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Images?q=tbn:ANd9GcT3eAWUMssDM-sYpmUg5YubFpf_jJOFWyMn1RAPcsgAiVqXMI8

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:18

நேசமுடன் ஹாசிம் wrote:மிக்க மகிழ்ச்சி நண்பன் மற்றும் அக்கா நண்பனைப்பற்றி நான் குறிப்பிடுவதென்றால் என்னை இத்தனை தூரம் அக்கிவைத்து ஆறவைத்து பகிர்ந்தளித்து பரிமாறி மகிழ்கிறால் என்றால் மிகையாகாது உண்மையில் எனக்குள் இருந்த ஆற்றலை உலகறிய மற்றவர்கள் பாராட்டுமளவு பகிர்ந்திட வழிசெய்து எனக்கு வழிகாட்டியவர் என் உயர்த்தோழன் நண்பன்தான் நான் ஆக்கியிருந்த கவிதைகளை வேடில் சேமித்து வைத்துவிட்டு லங்காசிறிக்கு அனுப்பி வந்திருந்தேன் அதனைப்படித்திருந்த நண்பன் என்னை ஈகரையில் அறிமுகம் செய்து எனது கவிதைகளை பகிர்ந்திடச்செய்தார் அதன் மூலம் எனது கவிதைகளுக்கான நேரடி பாராட்டுகளும் அதன் திருத்தங்களும் மெருகேற்றலும் என்னை வளப்படுத்த வாய்ப்பாக இருந்தது அதற்காக எனக்கு பல வழிகளிலும் உறுதுணையா இருந்தவர் நண்பன் சம்ஸ் மற்றும் யாதுமானவள் அக்கா மஞ்சுபாஷினி அக்கா ஆதிரா அக்கா மற்றும் பலர் இப்போது நிஷா அக்கா இவ்வாறு எனது வாழ்வில் எனது இத்துறைக்கு பலரும் பலவகையில் உதவி செய்திருக்கிறீர்கள் 

இந்த கவிதையைப்பொறுத்த வரை மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்திருந்தாலும் அதே பொலிவுடன்தான் முடித்துமிருக்கிறேன் உங்களிருவரின் கருத்துகளும் இன்னும் என்னை ஊக்கப்படுத்தி யிருக்கிறது என்பது மாத்திரம் வெளிப்படையான உண்மை உங்களனைவருக்கும் நான் வாழ்நாளுள்ளவரை கடமைப்பட்டிருக்கிறேன் 

இதில் விடுபட்டிருக்கின்ற அத்தனை உறவுகளுக்கும் ஈகரை நாண்பர்கள் தொடக்கம் சேனையின் அத்தனை உறவுகளும் என்னை ஒரு வரியிலேனும் பாராட்டி மகிழ்வித்திருக்கிறார்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் காலமுள்ளவரை தொடர்வோம் இதே நட்புடனும் பாசத்துடனும்

மிக்க சந்தோசம் நண்பா இந்த அவளாகிய அவளுக்கு யாதுமானவள் அப்துல்லாஹ் மனாப் முனாஸ் பிரதர் கலை நிலா பர்வீன் சம்ஸ் ஹனி அட்சயா ஜிப்ரியா மீனு நிலா பாயிஸ் ஜாஸ்மின் இப்படி ஒரு பட்டாளமே கருத்துச் சொன்னார்கள் இன்று அவைகள் அனைத்தையும் படித்தேன் ரசித்தேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Sat 30 Aug 2014 - 20:20

அந்த ஒரிஜினல் லிங்கை இங்கே முதல் பதிவில் இணைத்து விடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:22

Nisha wrote:அந்த ஒரிஜினல் லிங்கை இங்கே முதல் பதிவில் இணைத்து விடுங்கள்.
அது ஒரு திரியில் இல்லை ஒன்பது திரி தனித்தனியாகப் பகிரப்பட்டுள்ளது அதனால்தான் நான் இணைக்க வில்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Sat 30 Aug 2014 - 20:26

ஒன்பது  திரியின் லிங்கும்  பாகம்  ஒன்று  இரண்டு என தலைப்பிட்டு  முதல் பதிவில் இணைக்கலாம் நண்பன் சார். 

அவளாகிய அவள் பாகம் 1  இப்படி  இணைக்கலாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:28

Nisha wrote:ஒன்பது  திரியின் லிங்கும்  பாகம்  ஒன்று  இரண்டு என தலைப்பிட்டு  முதல் பதிவில் இணைக்கலாம் நண்பன் சார். 

அவளாகிய அவள் பாகம் 1  இப்படி  இணைக்கலாம்.

இங்கு மொத்தமாக 15 ம் பதியப்பட்டுள்ளது அக்கா அதனால்தான் விட்டு விட்டேன் சரி அக்கா பிறகு இணைத்து விடுகிறேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 20:29

அதனால்தான் அத்தனை பகுதியையும் இந்த திரியில் பதிந்திருந்தேன் லிங்கொடுக்கவில்லை எனது வலைப்பூவில் ஒரே பதிவாக பதிந்திருந்தேன்

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Sat 30 Aug 2014 - 20:32

இங்கு பதியபெற்றது  இனி வருவோருக்கு படிக்க.. 

லிங்க் இணைப்பது ஏற்கனவே கருத்திட்டோரை நினைவில் கூர!.. 

விரும்பினால் இப்படியும் செய்யலாம்.. ஒரே தலைப்பில் திரியாயிருந்தால்  அந்த திரிகளை ஒரே திரி ஆக்கி விட்டு அதன் லிங்கை இங்கே இணைக்கலாம். 

இந்த திரி தொடரும் போது அந்தபகுதியும்  மேலே எழுப்பபடும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:34

Nisha wrote:இங்கு பதியபெற்றது  இனி வருவோருக்கு படிக்க.. 

லிங்க் இணைப்பது ஏற்கனவே கருத்திட்டோரை நினைவில் கூர!.. 

விரும்பினால் இப்படியும் செய்யலாம்.. ஒரே தலைப்பில் திரியாயிருந்தால்  அந்த திரிகளை ஒரே திரி ஆக்கி விட்டு அதன் லிங்கை இங்கே இணைக்கலாம். 

இந்த திரி தொடரும் போது அந்தபகுதியும்  மேலே எழுப்பபடும்.
நானும் அப்படித்தான் நினைத்தேன் அக்கா !_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 20:45

உண்மையில் இது சிறப்பாய் அமையும் நண்பன் சார் பொறுப்பெடுங்க பிளீஷ்

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Sat 30 Aug 2014 - 20:49

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் இது சிறப்பாய் அமையும் நண்பன் சார் பொறுப்பெடுங்க பிளீஷ்

எது சிறப்பாய் அமையும்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 30 Aug 2014 - 20:51

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் இது சிறப்பாய் அமையும் நண்பன் சார் பொறுப்பெடுங்க பிளீஷ்

எது சிறப்பாய் அமையும்?
பின்னூட்டமுடைய கவிதைகளின் அங்கங்கள் இங்கு இணைத்துவிடலைச்சொன்னேன்

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நண்பன் Sat 30 Aug 2014 - 20:57

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் இது சிறப்பாய் அமையும் நண்பன் சார் பொறுப்பெடுங்க பிளீஷ்
நான் அப்படியே நிஷா அக்காவிடம் பாரம் கொடுக்கிறேன்
*#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Sun 31 Aug 2014 - 0:20

ஒன்றுமுதல் ஒன்பது வரையான பகுதிகளை இணைத்து  முதல் பதிவில்  லிங்க் சேர்ந்து விட்டேன் ஹாசிம்! 

சரியா என சொல்லுங்கள். 

 நான் இன்னும் அந்த  திரிகளை படிக்கவில்லை. 

படித்தால் அங்கே பின்னூட்டமிட்டிருப்பவர்களின் கருத்துக்கள்  எனக்கு குழப்பம் தரலாம் என்பதால் முதலில் இதை  படித்து கருத்திடுகின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Sun 31 Aug 2014 - 0:30

நேசமுடன் ஹாசிம் wrote:சந்திசிரித்தாற்போல்
தெரிந்துகொண்ட காதலுக்காய்
வாழ்த்தொலிகளோடு புத்திமதிகளும்
காதினில் ஒதிட்ட தோழியருக்கு
ஜாடயில் ஒப்புதலும்
பார்வையில் காதலையும்
சமர்ப்பித்ததை மறக்கவில்லை

இத்தனை இலகுவாய்
காதலில் வீழ்ந்தேனென்று
உள்ளம் உறுத்தினாலும்
காதலின் சுகத்திற்காய்
ஏங்கிடச்செய்ததை மறக்கவில்லை

ஒலித்த கைபேசியில்
மறுமுனையில் இசைத்த குரலின்
இன்பக்காதல் மொழியில்
இறுக்கமான மனதினை
வசியம்செய்த வஞ்சகனின்
அழைப்பாணை மறக்கவில்லை

அந்திமாலை கடற்கரைச்சாலை
அரவங்களற்ற ஒதுக்குப்புறத்தில்
அமர்ந்திருந்த மன்னவனோ
மலர்ந்த முகத்துடன் உச்சிமோர்ந்த
முத்தத்தோடு வரவேற்றதை மறக்கவில்லை

வானத்து நிலவும் கடலலையின் ஒலியும்
அங்காங்கே அணைத்துக்கிடந்த காதலர்களும்
சில்லென்ற தென்றலுமாய்
என் உணர்வுகளுக்குத் தீயிட்டு
காதலுணர்வில் சங்கமித்திட
துணையானதை மறக்கவில்லை

பாசமொழியும் பக்குவமான அன்பும்
கடந்தகாலத்தில் இழந்தவைகளை
மீட்டித்தந்ததாய் உணரச்செய்தது
மகிழ்வோடு (அவனை)அவதானிக்கலானேன்
என்மனம் முழுதும் அவனுக்காய்
அலைந்ததையும் மறக்கவில்லை

தொடர்வாள்...........

எவர் என்ன சொன்னாலும் காதல் கொண்ட மனது தன் சிந்திக்கும்  கண்களை இறுகத்தான் முடிக்கொள்ளுமென்பதை மிக அருமையாக எடுத்துரைத்தீர்! 

காதல் ! ஒரு மனிதனை எத்தனை  மாறுதல்களை செய்ய வைக்கின்றது.  காதலில்  தொடுகை  எடுத்தவுடன் வந்ததனால் தான்  காதலை  தேடி மனம் ஓடியதா? காதல் கொண்டதனால்  தொடுகை  அவசியமானதா? என புரிந்திட முடியாத படி   இருக்கும் ஒரு உணர்வை

வானத்து நிலவும் கடலலையின் ஒலியும்
அங்காங்கே அணைத்துக்கிடந்த காதலர்களும்
சில்லென்ற தென்றலுமாய்
என் உணர்வுகளுக்குத் தீயிட்டு
காதலுணர்வில் சங்கமித்திட
துணையானதை மறக்கவில்லை

மிக அழகாக சொல்லி வீட்டீர்கள்!
 
பாசமொழியும் பக்குவமான அன்பும்
கடந்தகாலத்தில் இழந்தவைகளை
மீட்டித்தந்ததாய் உணரச்செய்தது
மகிழ்வோடு (அவனை)அவதானிக்கலானேன்
என்மனம் முழுதும் அவனுக்காய்
அலைந்ததையும் மறக்கவில்லை

கடந்த கால ஏக்கங்களும்,  அவள் தேடிய பாசமாக வார்த்தைகளும், அன்பும் கூட அவளை வசப்படுத்தி அவனுக்காய் அலைபாய்ந்திட வைக்கின்றது!

அனாதையான உணர்ந்த ஒரு பெண்ணுக்கு தன்னை நேசித்து பாசம் காட்டவும் ஒருவன் உண்டெனும் உணர்வு தரும் சந்தோஷம் எத்தகையது என நானும் உணர்ந்தேன் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Sun 31 Aug 2014 - 0:38

நேசமுடன் ஹாசிம் wrote:தொட்டுப்பார்த்தான் கட்டியணைத்தான்
என்விரல்களின் இடையே விரல்கோர்த்து
இசைமீட்டும் வீணையாய் என்னை
மயங்கிடச்செய்த காதலை அவனிடம்
ரசித்து ருசித்ததை மறக்கவில்லை

உலகம் மறந்து காதலை நினைத்து
அவன் மடியில் தலைவைத்து
இன்பலோகம் இதுதானோவென்று
என் கன்னிப்பருவம் இசைபோட்டபோது
எதிர்காலம் நோக்கிய சிந்தனையில்
சுதாகரித்து விலகியதை மறக்கவில்லை

இளமைக்குத்தீனியாய் என் இதயம்
படபடத்தாலும் என் அந்தரத்து வாழ்வை
அகத்தினுள்ளே அலசியாய்ந்து
காதலின் அடுத்தபடியை கருதிடவும்
காமத்தினுள் கட்டுண்ட கைசேதத்தை
நாடாததையும் மறக்கவில்லை

அனாதையாய் அலங்கோலமாய்
ஆரம்பித்த என்வாழ்வின் அடைவாய்
உன்னதமானதொரு வாழ்க்கையில்
இணையப்போகிறேனென்ற கற்பனையில்
இளமையின் துடிப்புக்கு இசைந்த
நிமிடங்களை மறக்கவில்லை

என்னவனாய் ஏற்றமனதுக்கு
என்னை அவன் கொய்திடுவானோ
என்ற ஏக்கம் என்னுள் எழுந்து
அவனின் வரம்பு மீறல்களை
அவதானித்து மறுத்ததை மறக்கவில்லை

ஆச்சரியம் அவனுள்ளே
ஆசுவாசம் என்னுள்ளே
காதலின் ரசனையில்
இத்தனை போராட்டமென்று
அச்சங்கொண்டகம் அழுதது - ஏனோ அவனை
இழக்க முடியாததை மறக்கவில்லை

விடைபெறமறுத்த மனமும்
இடம்தரமறுத்த நிலையும்
இருமனங்களின் இணைவாம்
திருமணம் பற்றி அசைபோடத்துடித்தது
ஏற்பானா இல்லை மறுப்பானா - என்று
தூக்கமின்றி துவண்டதை மறக்கவில்லை

தொடர்வாள்........

திருமணத்தில் இணைய துடிக்கும் காரிகையவள் ஏக்கம் 
காதலன் நானென  தானாய் நாடி வந்தவனுக்கு புரியுமோ 
தேன் குடிக்கும் வண்டா, தேனாய் இனிக்கும்  பூச்செண்டா 
காரிகையவள்  உள்ளமது கேள்விகளை கொட்டினாலும் 
தொடுகையும்  தடவலும் தான் அங்கே ஜெயிக்கின்றதோ?

தொடுகையில்லா காதல் இக்காலத்தில் சாத்தியமே இல்லையோ? 
காரிகையே என் தூரிகை நீ என தேடி வந்தவன் வாரி வழங்கியதென்னவென த்தான் அறியணுமே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Sun 31 Aug 2014 - 0:51

நேசமுடன் ஹாசிம் wrote:வார்டன்முதல் தோழியர்வரை
அறிந்திருந்த என்காதலுக்கு
அறிவுரைகள் அதிகரித்தபோது
அடுத்தகணமே நிலையான
காதெலெம் காதலென்று கூற
முனைந்ததை மறக்கவில்லை

மலரின் மகரந்தத்தில் மயங்கிய வண்டாய்
என் மடிதவள்ந்த மன்னவனிடம்
“காதலிப்போம் காதலுள்ளவரை
கரம்பற்றியும் காதலிப்போம் மரணம்வரை”
என்றதில் அதிர்ந்தவன் நிமிர்ந்து
என்முகத்தினையேந்திய கரத்துடன்
கண்மணி நாளையே எம் திருமணமென்றதில்
வழிந்த ஆனந்தகண்ணீரை மறக்கவில்லை

அனாதைகளான இருவருக்கும்
ஆதரவான உறவுகளென்ற சிலருடன்
அன்னதானம் மாத்திரமளித்து
அமைதியாய் நடந்தேறியது திருணம்
பெரியவர்களின் ஆசியுடன்
மாலைசூடிய நாளதை மறக்கவில்லை

ஜாதகமும் பார்த்தில்லை
நாட்களேதும் குறித்ததில்லை
இருமனமும் ஏற்றபோது
நடந்தவைகள் நன்றாகவே நடந்தது
அவர்குறி்த்த தினமொன்றில்
தேனிலவாம் முதலிரவை நினைத்து
என்மனம் அஞ்சியதை மறக்கவில்லை

காத்துவைத்த கற்பும்
பொத்திவைத்த மொட்டும்
சொந்தக்காரனிடம் சொந்தமாய்
ஒப்படைக்கப்போகிறேனென்ற
பெருமிதத்துடன் மனமும் உடலும்
தயாரானதை மறக்கவில்லை

காதலர்களின் தனியிரவு
கதைகளுக்கெங்கே சந்தர்ப்பம்
காத்திருந்த கண்ணனவன்
சிறுஎறும்புச் சிறுவனாகி
ஊருமிடமெல்லாம் ஊர்ந்தபோது
வெம்பித் ததும்பிய கதகதப்பில்
விக்கித்துடித்ததை மறக்கவில்லை

விடிந்த இரவு விழித்த முழுமனுசியாய்
இல்லத்தரசி இனியவாழ்கையென
மகிழ்ந்த மனதுக்கு நிகழவிருப்பதை
அறிந்திடாது விண்ணில் பறந்த
பட்டாம்பூச்சியாய் சுதந்திரவானில்
சிறகடித்துப் பறந்ததை மறக்கவில்லை

 என்னதான் நடந்தது அவள் வாழ்வில்...................

சின்ன திருத்தம் வேண்டலாமோ ஹாசிம்! வார்டன் முதல்.. என்பதில் வார்டன் என்பவர் யார்! அவளிருந்த அனாதை விடுதி காப்பாளரா.. தாயம்மாள் இறந்த பின் அவள் இருக்குமிடம் எங்கே! ஹாஸ்டலுக்கு  தான் வார்டன்.. 

வார்டனை விட... தாதியாய் பணி புரிபவள் தாயும் ஆவாள் என கொள்ளலாம் அல்லவா.. 

தாதி முதல் தோழிவரை 
புரிந்துணர்ந்த என் காதலுக்கு

என முதலிரு அடிகளை மட்டும் நோக்கிப்பாருங்கள். 

இருமனம்  இணைந்து ஒருமனமாய் 
முடிவெடுத்து திருமணமெனும் 
மலர்வனத்தில்  அடியெடுக்க 
ஜாதியும் ஜாதகமும் எதற்கென 
முடிவெடுத்திருந்தாலும்  இன்னும் அவள் வாழ்வில் விடியவில்லை என்பதை கடைசி மூன்று வரிகளில்  சொல்லி ஏன் பயமுறுத்தணும். 

பாவம்தானே அவள்! நன்றாக இரு என வாழ்த்திடுவோமா?

Post by நேசமுடன் ஹாசிம் Sun 31 Aug 2014 - 11:26

Nisha wrote:ஒன்றுமுதல் ஒன்பது வரையான பகுதிகளை இணைத்து  முதல் பதிவில்  லிங்க் சேர்ந்து விட்டேன் ஹாசிம்! 

சரியா என சொல்லுங்கள். 

 நான் இன்னும் அந்த  திரிகளை படிக்கவில்லை. 

படித்தால் அங்கே பின்னூட்டமிட்டிருப்பவர்களின் கருத்துக்கள்  எனக்கு குழப்பம் தரலாம் என்பதால் முதலில் இதை  படித்து கருத்திடுகின்றேன்!
மிக்க மகிழ்ச்சி அக்கா அவைகளை ஒரே பதிவில் பார்த்து மகிழ முடிகிறது மிக்க நன்றிகள் அனைவரது பின்னூட்டங்கள் மனதிற்கு அனந்தத்தை கொடுக்கிறது

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Sun 31 Aug 2014 - 11:40

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வார்டன்முதல் தோழியர்வரை
அறிந்திருந்த என்காதலுக்கு
அறிவுரைகள் அதிகரித்தபோது
அடுத்தகணமே நிலையான
காதெலெம் காதலென்று கூற
முனைந்ததை மறக்கவில்லை

மலரின் மகரந்தத்தில் மயங்கிய வண்டாய்
என் மடிதவள்ந்த மன்னவனிடம்
“காதலிப்போம் காதலுள்ளவரை
கரம்பற்றியும் காதலிப்போம் மரணம்வரை”
என்றதில் அதிர்ந்தவன் நிமிர்ந்து
என்முகத்தினையேந்திய கரத்துடன்
கண்மணி நாளையே எம் திருமணமென்றதில்
வழிந்த ஆனந்தகண்ணீரை மறக்கவில்லை

அனாதைகளான இருவருக்கும்
ஆதரவான உறவுகளென்ற சிலருடன்
அன்னதானம் மாத்திரமளித்து
அமைதியாய் நடந்தேறியது திருணம்
பெரியவர்களின் ஆசியுடன்
மாலைசூடிய நாளதை மறக்கவில்லை

ஜாதகமும் பார்த்தில்லை
நாட்களேதும் குறித்ததில்லை
இருமனமும் ஏற்றபோது
நடந்தவைகள் நன்றாகவே நடந்தது
அவர்குறி்த்த தினமொன்றில்
தேனிலவாம் முதலிரவை நினைத்து
என்மனம் அஞ்சியதை மறக்கவில்லை

காத்துவைத்த கற்பும்
பொத்திவைத்த மொட்டும்
சொந்தக்காரனிடம் சொந்தமாய்
ஒப்படைக்கப்போகிறேனென்ற
பெருமிதத்துடன் மனமும் உடலும்
தயாரானதை மறக்கவில்லை

காதலர்களின் தனியிரவு
கதைகளுக்கெங்கே சந்தர்ப்பம்
காத்திருந்த கண்ணனவன்
சிறுஎறும்புச் சிறுவனாகி
ஊருமிடமெல்லாம் ஊர்ந்தபோது
வெம்பித் ததும்பிய கதகதப்பில்
விக்கித்துடித்ததை மறக்கவில்லை

விடிந்த இரவு விழித்த முழுமனுசியாய்
இல்லத்தரசி இனியவாழ்கையென
மகிழ்ந்த மனதுக்கு நிகழவிருப்பதை
அறிந்திடாது விண்ணில் பறந்த
பட்டாம்பூச்சியாய் சுதந்திரவானில்
சிறகடித்துப் பறந்ததை மறக்கவில்லை

 என்னதான் நடந்தது அவள் வாழ்வில்...................

சின்ன திருத்தம் வேண்டலாமோ ஹாசிம்! வார்டன் முதல்.. என்பதில் வார்டன் என்பவர் யார்! அவளிருந்த அனாதை விடுதி காப்பாளரா.. தாயம்மாள் இறந்த பின் அவள் இருக்குமிடம் எங்கே! ஹாஸ்டலுக்கு  தான் வார்டன்.. 

வார்டனை விட... தாதியாய் பணி புரிபவள் தாயும் ஆவாள் என கொள்ளலாம் அல்லவா.. 

தாதி முதல் தோழிவரை 
புரிந்துணர்ந்த என் காதலுக்கு

என முதலிரு அடிகளை மட்டும் நோக்கிப்பாருங்கள். 

இருமனம்  இணைந்து ஒருமனமாய் 
முடிவெடுத்து திருமணமெனும் 
மலர்வனத்தில்  அடியெடுக்க 
ஜாதியும் ஜாதகமும் எதற்கென 
முடிவெடுத்திருந்தாலும்  இன்னும் அவள் வாழ்வில் விடியவில்லை என்பதை கடைசி மூன்று வரிகளில்  சொல்லி ஏன் பயமுறுத்தணும். 

பாவம்தானே அவள்! நன்றாக இரு என வாழ்த்திடுவோமா?
மிக்க நன்றி நீங்கள் சொன்ன போதுதான் பார்த்தேன் உண்மையில் அவ்வாறு தாதியர் என்று வந்திருக்க வேண்டும் வார்டன் என்பது தமிழ் சொல்லும் இல்லை ஆனாதை இல்ல காப்பாளர்களுக்கு பாவிப்பதுமில்லை மிக்க நன்றி திருத்தியமைக்கு நானும் திருத்திவிடுகிறேன் 
இது போன்ற திருத்தங்களைத்தான் வெகுவாக வரவேற்கிறேன் பாராட்டுகளுடன் மாத்திரம் சென்றால் எனது பிழைகள் திருத்தப்படாமலே சென்றுவிடும் கடந்த காலத்தில் பலர் என்னை பல விதத்தில் திருத்தியிருக்கிறார்கள் அவற்றை பொசிட்டிவாகத்தான் எடுத்திருக்கிறேன் அதனால்தான் ஓரளவு சிறப்பாக கையாள முடிகிறது மிக்க நன்றி தொடருங்கள்

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Sun 31 Aug 2014 - 15:55

நேசமுடன் ஹாசிம் wrote:தன்மானத்தின் தலைவனாய்
தலைநிமிர்ந்த கணவனாய் - என்
இன்னல்களுக்கு விடைகொடுத்து
சொந்தமாய்த் தொழிலும் சிறியதாய் மனையுமென
வாழ்வில் ஐக்கியமாகி சுவனத்தை
அனுபவித்து மகிழ்ந்ததை மறக்கவில்லை

இரவுபகல் பாகுபாடுமறந்து
இன்பலோகம் இணைந்தேயடைந்து
கழிந்த நாட்கள் 90உம் விடைபெற
பெண்மைக்கு பெருமைசேர்த்து
புகழ்மிகு கருவும் எனைச்சேர்ந்து
தாய்மையானதை மறக்கவில்லை

உலகமே கணவனென்றானது
இன்பமொன்று இருக்கிறதென்று
உறவானவனைக்கண்டேன்.
என்தாயாய் அவர்மாறி எடுத்த வாந்தியை
கையிலேந்தி தலைகோதிச் சீராட்டி
அவர்மகிழ்ந்தபோது வயிற்றுக்குழந்தையும்
தானாய் வளர்ந்ததை மறக்கவில்லை

என்னவனுக்காய் காத்திருந்தமாலை
எதிர்பார்த்திராத செய்திவந்தது
சாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில்
சாவின் எல்லைவரை சென்றுவிட்டாரென்றனர்
இருண்டது உலகம் சுற்றியது தலை
நிதானித்துத் தடுமாறி வைத்தியசாலையடைந்தேன்
அவர்நிலைகண்டு மூச்சயானதை மறக்கவில்லை

கண்விழித்துக் கதறியழுதேன்
விதியின் விளையாட்டையும்
என்நிலையின் அவஸ்த்தையும் எண்ணி
நெஞ்சம் படபடத்து கதறல் அதிகரித்தபோது
சேர்ந்த நண்பர்ளும் சூழ்ந்த நபர்களுமாய் - ஆறுதலாய்
ஏதேதோ சொல்லக் கேட்டதை மறக்கவில்லை

பிரியாத உயிருடன் பிரிந்த கால்களும்
சிதைந்த உடல்களோடு சிதறிய சிந்தையுடன்
மூர்ச்சையற்று முனகல்களுடன்
முழுமனிதனவர் அரைமனிதனாயுள்ளாரென
வைத்தியரின் வார்த்தையில் பைத்தியமானபோது
என்னையே இழக்கத்துணிந்ததை மறக்கவில்லை

தொடர்வாள் அவள் சோகங்களுடன்

கடவுளே! ஹாசிம் இது கற்பனையா? அல்லது நிஜ சம்பவத்தினை எழுதுகின்றீர்களா? இத்தனை அழகாய் கோர்த்தெழுதும் நீங்கள் ஏன் கதை எழுத முயற்சிகக கூடாது?

பிரியாத உடலுடன் பிரிந்த காலகள்... முழுமனிதனாயில்லாமல் அரை மனிதன் தான் அவனெனும் நிலை  உணர்ந்த  நிலை....  மறக்கத்தான் முடியவில்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 1 Sep 2014 - 15:10

மிக்க நன்றி அக்கா கதையிலும் ஆரவமிருக்கிறது முன்பு எழுதிய அனுபவமும் இருக்கிறது அனால் பிரசுரித்ததில்லை முயற்சிக்கிறேன் நன்றிகள் நன்றிகள்

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Mon 1 Sep 2014 - 20:06

அப்படியா? எழுதியதை  முதலில் இங்கே பகிருங்கள். 

நாங்கள் படிக்கின்றோம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Mon 1 Sep 2014 - 20:21

முழுமையாய் படித்த பின்னே இத்தனையும் சத்தியமா.. சாத்தியமா எனும் கேள்வி என்னுள் எழுகின்றது! ம்லைத்து தான் போனேன்பா!

படிக்கும் போதே ஐயோ  இது நிஜமா... இப்படி சாத்தியமா எனும் கேள்வியிடனான திடுக்கிடலும் வலியும்  அந்த நிகழ்வை உண்மை என உணரசெய்யும்  எழுத்தும்  எழுத்துடனே ஒன்றிவிடும்  படியான  வார்த்தைகளுமாய்  எப்படி பாராட்டுவது என தோன்ற வியலாத படி இயல்பான எழுத்து நடையில் அனைவருக்கும் புரியும் விதமாய்  எழுதி இருக்கின்றீர்கள் ஹாசிம்! 

பாராட்டுக்கள்  ஹாசிம்! 

ஒரு பெண்ணுக்கு வறுமையே பெரும் கொடுமை எனில் அவள் அனாதையென்பது அதை விட பெரும் கொடுமை. 

அனாதையானாலும் அவளை அவளுக்காக விரும்பி நேசித்து மாலையிட்ட மணாளன்  இறுதி வரை துணை இருப்பான் என நம்பி இருக்க இடை நடுவே  பாரமாயும்  பாவமாயும் ஆகியதோடு... கருவறையும்  இருட்டறையான  நிலையை  ஒரே நேரம்  உணரும் நிலை..  என்ன சொல்வது.. எழுத்தில் அதை அப்படியே  எங்கள் முன் கொண்டு வந்து ஜெயித்து விட்டீர்கள். 

மாலையிட்டவன்  மாலையிடும் படி ஆனபின்னும் அவளுக்கென துணையாய்  எங்கிருந்தோ வந்த மழலையையும் கொடுத்து  மழலையோடு மனதினையும் நேசிக்கும் மணாளனையும் தேடிகொடுத்து  .. நிஜத்தில் இப்படி நடந்தால் எத்துணை நலமாயிருக்கும் என ஏங்க வைத்த ஹாசிமே...... ! 

ஜெயித்து தான் விட்டீர்கள்..  கவலைகள்  கஷ்டங்கள், நேரமின்மை எனும் சாக்குபோக்குகளை விட்டு விட்டு இன்னும் இன்னும் எழுடுங்கள்.. எழுதணும். அனைத்தினையும் ஒன்றினைப்போம்,.. ):

எங்கள் ஹாசிம் நினைத்தால் முடியாததா? ~/ ~/  

சீக்கிரமாய் அனைத்தினையும்  புத்தகமாய் வெளிவரச்செய்வோம்.  பால முனை மண்ணிலிருந்து இன்னொரு   பார் போற்றும் கவிஞரை பார் புரிந்திட செய்வோம். )(( )((  

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Nisha Mon 1 Sep 2014 - 20:29

காத்திராத காலம் கரைந்தோடியது
கணவனின் பிணியும் பழகிப்போனது
வறுமையின் பிடியும் இறுகலானது
எதிர்காலக் கேள்விகள் சுமைகளானது
நகராமல் நகரத்துடித்த நாட்களை
நகர்த்தினேனதை மறக்கவில்லை
காத்திராத காலம்!.. காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை தான். அழகான சொற்பிரயோகம். எல்லாமே அவளுக்குள் பழகி இயல்பாயானதை அழகாய் சொல்லியாகி விட்டது. 
விதியின் சதுரங்கமிதுவாவென்று
வானம் பார்த்து மல்லாந்திருந்த என்மனம்
அனாதையும் நான் அவஷ்த்தையும் நான்
விதவையும் நான் பாவமும் நான் என்று
விதியின் சதுரங்கம். 
ஒரு வகையில் நாம் எல்லோரும்  விதியின் கைகளில் இருக்கும் சதுரங்கம் தான் அல்லவா.. இந்த வரிகள் என்னை கவர்ந்தது. 

பாட்டும் நானே பாவமும் நானே..பாடும் உனை நான் பாட வைப்பேனே
கண்ணதாசனின் வரிகள் நினைவில் வந்து போகின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 1 Sep 2014 - 20:34

Nisha wrote:முழுமையாய் படித்த பின்னே இத்தனையும் சத்தியமா.. சாத்தியமா எனும் கேள்வி என்னுள் எழுகின்றது! ம்லைத்து தான் போனேன்பா!

படிக்கும் போதே ஐயோ  இது நிஜமா... இப்படி சாத்தியமா எனும் கேள்வியிடனான திடுக்கிடலும் வலியும்  அந்த நிகழ்வை உண்மை என உணரசெய்யும்  எழுத்தும்  எழுத்துடனே ஒன்றிவிடும்  படியான  வார்த்தைகளுமாய்  எப்படி பாராட்டுவது என தோன்ற வியலாத படி இயல்பான எழுத்து நடையில் அனைவருக்கும் புரியும் விதமாய்  எழுதி இருக்கின்றீர்கள் ஹாசிம்! 

பாராட்டுக்கள்  ஹாசிம்! 

ஒரு பெண்ணுக்கு வறுமையே பெரும் கொடுமை எனில் அவள் அனாதையென்பது அதை விட பெரும் கொடுமை. 

அனாதையானாலும் அவளை அவளுக்காக விரும்பி நேசித்து மாலையிட்ட மணாளன்  இறுதி வரை துணை இருப்பான் என நம்பி இருக்க இடை நடுவே  பாரமாயும்  பாவமாயும் ஆகியதோடு... கருவறையும்  இருட்டறையான  நிலையை  ஒரே நேரம்  உணரும் நிலை..  என்ன சொல்வது.. எழுத்தில் அதை அப்படியே  எங்கள் முன் கொண்டு வந்து ஜெயித்து விட்டீர்கள். 

மாலையிட்டவன்  மாலையிடும் படி ஆனபின்னும் அவளுக்கென துணையாய்  எங்கிருந்தோ வந்த மழலையையும் கொடுத்து  மழலையோடு மனதினையும் நேசிக்கும் மணாளனையும் தேடிகொடுத்து  .. நிஜத்தில் இப்படி நடந்தால் எத்துணை நலமாயிருக்கும் என ஏங்க வைத்த ஹாசிமே...... ! 

ஜெயித்து தான் விட்டீர்கள்..  கவலைகள்  கஷ்டங்கள், நேரமின்மை எனும் சாக்குபோக்குகளை விட்டு விட்டு இன்னும் இன்னும் எழுடுங்கள்.. எழுதணும். அனைத்தினையும் ஒன்றினைப்போம்,.. ):

எங்கள் ஹாசிம் நினைத்தால் முடியாததா? ~/ ~/  

சீக்கிரமாய் அனைத்தினையும்  புத்தகமாய் வெளிவரச்செய்வோம்.  பால முனை மண்ணிலிருந்து இன்னொரு   பார் போற்றும் கவிஞரை பார் புரிந்திட செய்வோம். )(( )((  
நான் எழுதும் போது அடைந்திடாத ஆனந்தம் இந்த வார்த்தைகளை கேட்டவுடன் எனக்குள் ஏற்படுகின்றது அக்கா உண்மையில் இவ்வாறான வார்த்தைகள் தான் படைப்பாளிகளுக்கு ஊட்டச்சத்து என்பதை நீங்களும் அறிவீர்கள் மிக்க மகிழ்ச்சி 
எனது புத்தக வெளியீடு எனது வெளிநாட்டு வாழ்வும் நேரமின்மையும் மாத்திரமே பின்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது எமது முனாஸ் சேர் அவர்களிடமும் இது பற்றி சொல்லியிருந்தேன் அவரும் பெருமளவில் செய்திடலாம் என்றே சொல்லியிருந்தார் இன்ஷா அல்லாஹ் விரைவில் அதனை நிறைவு செய்ய வேண்டும் அத்தனையும் தயார் செய்து விட்டு லீவில் சென்று வெளியிடுவதற்கு தயார் செய்ய வேண்டும் பார்க்கலாம்

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது) - Page 2 Empty Re: அவளாகிய அவள்.....(தொடர்கவிதை பாகம் 15 - முடிந்தது)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum