Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அனுமதிப் பத்திரம்..!!
+2
Nisha
தினா
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அனுமதிப் பத்திரம்..!!
மன விழுதுகள்!
உன்னை சந்திப்பதை
அதிகம் சிந்தித்ததில்லை...
பிசிராந்தைக்கு மட்டுமல்ல
இந்தத் தனிமரத்தின்
மன விழுதுகளும்
நீயிருக்கும் இடமெங்கிலும்..!!
- தினா.
Last edited by தினா on Tue 23 Sep 2014 - 14:58; edited 2 times in total
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
ஹாஹா!
பிசிராந்தையாரை சுட்டி காதல் கவி இது அல்ல நட்புக்காக கவிதை தான் என அழகாக சொல்லி விட்டீர்களே தினா. நட்புக்கு இவரை விட்டால் இலக்கணம் வேறுண்டோ!
சந்திக்கணும் என சிந்திக்காவிட்டாலும்ஏன் சந்திக்கவே இயலாமல் போனாலும் நட்பின் நினைவு எங்கும் நிறைந்து தான் இருக்கும் என சொன்னது எனக்கு ரெம்ப பிடித்திருக்கின்றது. சூப்பர் தினா.. !
இன்னும் எழுதுங்கள். !

Last edited by Nisha on Sat 20 Sep 2014 - 22:42; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
நன்றி அக்கா. ஆம். இது நட்புக்கான கவிதை தான். எனக்கு மிகவும் பிடித்த உறவு, நட்புதான். ஆகவே, அந்த உறவின் சிறப்புக்காக எழுதுவதில் மகிழ்ச்சியே. :)
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
எனக்கு தான் தெரியுமே! நட்பில் நீங்கள் காட்டும் பிரியமும் புரிதலும் வலிகளும்! இழந்தவைகளை விடவும் இனிமை தரும் நட்பு இனி கிடைக்கும் தினா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
அருமையான கவி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அனுமதிப் பத்திரம்..!!
கனதியான வரிகள் தினா!
Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: அனுமதிப் பத்திரம்..!!
பானுஷபானா wrote:அருமையான கவி
இன்னும் நான்கு வரி சேர்த்து பாராட்டலாம் பானு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
Farsan S Muhammad wrote:கனதியான வரிகள் தினா!
கவிஞராய் கவிஞனுக்கு இது போதாதுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
தினா wrote:உன்னை சந்திப்பதை
அதிகம் சிந்தித்ததில்லை...
பிசிராந்தைக்கு மட்டுமல்ல
இந்தத் தனிமரத்தின்
மன விழுதுகளும்
நீயிருக்கும் இடமெங்கிலும்..!!
- தினா.
தினா அண்ணா அடியேனுக்கு இந்தக் கவிதையினை கொஞ்சம் விளக்க முடியுமா?
மன்னிக்கனும் நான் கொஞ்சம் தெளிவு பெற வேண்டும் அதனால் கேட்டேன்
தவறாக எண்ண வேண்டாம்
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுமதிப் பத்திரம்..!!
பிசிராந்தையார் ஒரு தமிழ்ப் புலவர்.
கோப்பெருஞ்சோழன் எனும் அரசனோடு நேரில் காணாமலே நட்பு பூண்டார். .
பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர்.ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர்.ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப்பெற்றார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார்.சோழனைக் காணவேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தார். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் வெகு தொலைவு உள்ளதால் இவரால் சோழ நாட்டுக்குச் செல்ல இயலவில்லை.
இவரது புகழையும் தமிழையும் கேள்விப்பட்ட சோழனும் இவரைக் காணவேண்டும் என்னும் அவா கொண்டிருந்தான். எனவே இருவரும் உயிர் ஒன்றாகவும் உடல் வேறாகவும் வாழ்ந்து வந்தனர். இருவரும் தாம் ஒருவருக் கொருவர் சந்திக்கும் திருநாளை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். இம்மன்னன் பிசிராந்தையாரை நேரில் காணாமலேயே அவருடன் நட்புக் கொண்டவன்
பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுடன் சேர்ந்து வடக்கிருந்து உயிர் துறந்தார். இவ்விருவரின் நட்பு, நட்புக்கு இலக்கணமாக முன்வைக்கப்படுகிறது

அருமையான விளக்கம் நிஷா அக்கா தனி மடலிலும் நீங்கள் தந்த விளக்கம் மிகவும் தெளிவு
நான் ஏன் தினா அண்ணனிடம் விளக்கம் கேட்டேன் என்றால் மனதில் ஒருவரைக் குறித்து எழுதினாரோ தெரியல அதைப் பற்றி அறிய விரும்பினேன் மற்றும் படி எதுவும் இல்லை
கவிஞருககும் கருத்து விளக்கிய அக்காவுக்கும்
என் உள்ளம் நிறைந்த நன்றிகள் ~/
நான் ஏன் தினா அண்ணனிடம் விளக்கம் கேட்டேன் என்றால் மனதில் ஒருவரைக் குறித்து எழுதினாரோ தெரியல அதைப் பற்றி அறிய விரும்பினேன் மற்றும் படி எதுவும் இல்லை
கவிஞருககும் கருத்து விளக்கிய அக்காவுக்கும்
என் உள்ளம் நிறைந்த நன்றிகள் ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுமதிப் பத்திரம்..!!
ம்ம் கவிதைக்காக விளக்கம் இல்லை !
பிசிராந்தையார் யார் என்பதுக்கான விளக்கம் தான் சொன்னேன். கவிதைக்கான விளக்கம் தினாதான் சொல்லணும்!
கவிதை என்பது தாம் யோசித்து எழுதுவதை விட ஏனையோரை வெவ்வேறு கோணத்தில் யோசிக்க வைத்தால் அது அதை எழுதியவருக்கான வெற்றியே !
இங்கும் என் புரிதல் என்னவெனில்...
உன்னை சந்திகக வேண்டும் என எனக்குள் தோன்றாவிட்டாலும் உன் நட்பு என்னுள் வியாபித்து அனைத்துமே நீயென உணர்த்துகின்றது என்கின்றார் தினா! நீ இல்லாத நொடியில் நானும் இல்லாமல் போயிருக்கலாம் என காதலில் மட்டும் தான் உணர்த்துவரோ நட்பு உணர்த்தாதோ! --
எனக்கென்னவோ காதலை விட நட்பின் வரும் ஏமாற்றம் தான் அதிக வலி தரும் என உணர்ந்ததை எழுதி இருக்கின்றார் என தோன்றுகின்றது.
பிசிராந்தையாரை இடைசெருகாக்கி எம் நட்பும் அப்படித்தான்.. . ...என்கின்றார்.
ஒருவரையொருவர் பாராமல் சும்மா கேள்விப்பட்டே உயிர்ப்பான் நட்பு சாத்தியமா என சேனை வரமுன் யாராச்சும் கேட்டிருந்தால் அடபோங்கப்பா அதெல்லாம் பொய் என்றிருப்பேன்.
சபாஷ் தினா!

Last edited by Nisha on Sat 20 Sep 2014 - 22:44; edited 2 times in total (Reason for editing : எழுத்துப்பிழை)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
Nisha wrote:ம்ம் கவிதைக்காக விளக்கம் இல்லை !
பிசிராந்தையார் யார் என்பதுக்கான விளக்கம் தான் சொன்னேன். கவிதைக்கான விளக்கம் தினாதான் சொல்லணும்!
கவிதை என்பது தாம் யோசித்து எழுதுவதை விட ஏனையோரை வெவ்வேறு கோணத்தில் யோசிக்க வைத்தால் அது அதை எழுதியவருக்கான வெற்றியே !
இங்கும் என் புரிதல் என்னவெனில்...
உன்னை சந்திகக வேண்டும் என எனக்குள் தோன்றாவிட்டாலும் உன் நட்பு என்னுள் வியாபித்து அனைத்துமே நீயென உணர்த்துகின்றது என்கின்றார் தினா! நீ இல்லாத நொடியில் நானும் இல்லாமல் போயிருக்கலாம் என காதலில் மட்டும் தான் உணர்த்துவரோ நட்பு உணர்த்தாதோ! --
எனக்கென்னவோ காதலை விட நட்பின் வரும் ஏமாற்றம் தான் அதிக வலி தரும் என உணர்ந்ததை எழுதி இருக்கின்றார் என தோன்றுகின்றது.
பிசிராந்தையாரை இடைசெருகாக்கி எம் நட்பும் அப்படித்தான்.. . ...என்கின்றார்.
ஒருவரையொருவர் பாராமல் சும்மா கேள்விப்பட்டே உயிர்ப்பான் நட்பு சாத்தியமா என சேனை வரமுன் யாராச்சும் கேட்டிருந்தால் அடபோங்கப்பா அதெல்லாம் பொய் என்றிருப்பேன்.
சபாஷ் தினா!
மன்னிக்கனும் அக்கா கவிதைக்கான உங்கள் பின்னூட்டதில் கவிதையை விளங்க முடிந்தது அத்தோடு பிசிராந்தரைப் பற்றிய விளக்கத்திற்கும் சேர்த்தே ஒரு நேரம் நன்றி சொல்லி விட்டேன்!
அவ்வளவுதான் மிகவும் சிறப்பாக உள்ளது இந்த நட்பு பற்றிய வரிகள்
புரிதலுக்கு நன்றி!
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அனுமதிப் பத்திரம்..!!
அப்படின்னால் சரி!
தினா வந்து வேற மாதிரி விளக்கம் தந்தாலும் தரலாம். எங்கூரில் இதெல்லாம் சகஜம்பூ.
தினா வந்து வேற மாதிரி விளக்கம் தந்தாலும் தரலாம். எங்கூரில் இதெல்லாம் சகஜம்பூ.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
பானுஷபானா wrote:அருமையான கவி
நன்றிங்க. :)
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
Farsan S Muhammad wrote:கனதியான வரிகள் தினா!
நன்றி தம்பி. ( 80 களின் பிற்பகுதியில் பிறந்தவராகக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதால், 70 களில் பிறந்தவன் என்கிற முறையில் தம்பி என அழைத்து விட்டேன். :) )
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
தம்பியே தான்! அக்ரிகல்ச் படித்த பட்டதாரி. எதிர்கால வழி காட்டி!
பழகிட தயக்கம் என்பதால் தள்ளியே நிற்பார்!
பழகிட தயக்கம் என்பதால் தள்ளியே நிற்பார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
இதில் தவறாக எண்ணுவதற்கு ஏதும் இல்லை தம்பி. :)நண்பன் wrote:தினா wrote:உன்னை சந்திப்பதை
அதிகம் சிந்தித்ததில்லை...
பிசிராந்தைக்கு மட்டுமல்ல
இந்தத் தனிமரத்தின்
மன விழுதுகளும்
நீயிருக்கும் இடமெங்கிலும்..!!
- தினா.
தினா அண்ணா அடியேனுக்கு இந்தக் கவிதையினை கொஞ்சம் விளக்க முடியுமா?
மன்னிக்கனும் நான் கொஞ்சம் தெளிவு பெற வேண்டும் அதனால் கேட்டேன்
தவறாக எண்ண வேண்டாம்
நன்றியுடன் நண்பன்.
பொதுவாக, நாம் அன்பு கொண்டிருக்கும் ஒரு நபரை சந்திக்க இயலா நிலை இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதிலும், முதல் முறையாகக் கூட சந்திக்கவில்லை என்றும் கொள்வோம். சந்திப்புக்குப் பல இடர்பாடுகள், அதிலும், அன்பு கொண்ட நபரும் கூட, ஒரு கட்டத்தில் சந்திப்பதை விரும்பவில்லை என்றும் கூட இருக்கலாம். ( அப்படி இருந்தாக வேண்டியதும் இல்லை.. இது பொதுவான கவி.. பல சூழ்நிலைகளுக்குப் பொருந்தக் கூடியது.. )
அப்படி இருக்கும் நிலையில், ஒரு நண்பன் அல்லது தோழி, தன் நட்புக்குரியவருக்கு செய்தி சொல்வதாக எழுதப்பட்ட கவி இது. எங்கு இது நட்பாகப் பிரிகிறது என்றால், பிசிராந்தையைச் சுட்டுவதால் பிரிகிறது. அந்த வார்த்தையை எடுத்து விட்டால், பொதுவாக அன்பு கொண்ட எல்லா உயிர்க்கும் இது பொருந்தும்.
அதாவது, உன்னை சந்திக்க எனக்கு விருப்பமே. ஆனால், சந்திக்க இயலா சூழ்நிலைகளும், சமயத்தில் உன்னுடைய எதிர்ப்பும், சந்திக்க விரும்பும் என் விருப்பத்தைக் கைவிடச் செய்து விட்டது. அதுபற்றி தற்போது அதிகமாக சிந்திப்பதில்லை. அதற்கு அவசியமில்லாத படி, என் நெஞ்சில் உன் எண்ணங்கள் உறைகின்றன. நீ இந்த நேரத்தில் இங்கு இருப்பாய்.. இன்னது செய்து கொண்டிருப்பாய் என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்கிறது மனது. உன் செயல்கள் யாவையும் உனக்கு வெற்றியாய் அமைய பிரார்த்தித்துக் கொண்டும், வாழ்த்திக் கொண்டும் இருக்கிறது. அதனுடைய தாக்கம் உன் செயல்களிலும் நிச்சயமாக இருக்கும். ஆகவே, இங்கிருந்தே நான் உனைக் காண்கிறேன். நீ இவ்விடத்திலும் இருக்கிறாய்.. நான் அவ்விடத்திலும் இருக்கிறேன். ஆகையாலே, வெகு தூரம் பயணம் செய்துதான் நாம் ஒருவரை ஒருவர் காண வேண்டுமென்பதில்லை. நம் உடல்களுக்கு பதிலாக நம் எண்ணங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன, நாம் செல்லும் இடங்களுக்கெல்லாம்.. இதுதான், இக்கவிதை மூலம் உணர்த்த எண்ணிய செய்தி.
இதில், பிசிராந்தையாரைக் குறிப்பிடக் காரணம்.., அவர் நட்புக்கு இலக்கணமாகப் போற்றப்பட்டார். பிசிராந்தையார், பாண்டிய மன்னர் அறிவுடை நம்பியின் அவைப் புலவர். ஆயினும், அவர் தம் மன்னராகக் கருதியது, சோழ மன்னர் கோப்பெருஞ்சோழனையே. கோப்பெருஞ்சோழனுக்குப் பொத்தியார் என்னும் புலவர் நெருங்கிய நண்பர். பிசிராந்தையார் தம் மீது கொண்டிருக்கும் மதிப்பையும், அவர் தம் மீது எழுதிய பாடல்களையும் அறிந்து, அவர் மீது நட்பு கொள்கிறார். கோப்பெருஞ்சோழனின் கொடைத் தன்மையையும், பொத்தியார் என்கிற சோழ மன்னரின் நெருங்கிய நண்பர் புலவராக இருக்கக் கண்டு, புலவருடன் நட்பு பாராட்டும் மன்னன் என்று கோப்பெருஞ்சோழன் மீது பிசிராந்தையார் நட்புணர்வு கொள்கிறார்.
இருவருக்குமே ஒருவரை ஒருவர் காண வேண்டும் என்கிற கரை காணாத ஆவல். கோப்பெருஞ்சோழனுக்கோ, மக்கள் இருவர். அந்த இருவரின் பூசலைத் தீர்க்க வழி தெரியாமல், தன் சந்ததியில், தன் பிள்ளைகள், கீழ்ப்படிதலும், ஒற்றுமையும் இல்லாது, நாட்டிற்குக் கேடு விளைவிக்கின்றனரே என்கிற ஆதங்கத்தில், மன்னன் வடக்கிருந்து உயிர் துறக்க முடிவு செய்கிறார். அப்போது, அரசனுடன், அவரது உயிர் நண்பராகிய பொத்தியாரும் வடக்கிருந்து உயிர் துறக்க விரும்புகிறார். பொத்தியாருக்கு, அப்போது ஆண் மகவு இல்லாத நிலையில், மன்னன், அவரை வடக்கிருக்க சம்மதிக்கவில்லை. வடக்கிருக்க அமர்ந்த பிறகும், தன் உயிர் பிரியும் முன்பு பிசிராந்தையார் தம்மைக் காண வந்து விடுவார் என்று உறுதியாக நம்புகிறார் மன்னர்.
அதே போல, மன்னர் வடக்கிருக்கும் செய்தி கேட்டு, அதுவரை நேரில் கண்டிராத தன் நண்பராகிய மன்னரைக் காண பிசிராந்தையார் விரைந்து வருகிறார். நேரில் இருவரும் சந்திக்கின்றனர். ஒன்றாக வடக்கிருந்து உயிர் துறக்கின்றனர். பொத்தியார், தானும் உயிர் துறக்க முடியவில்லையே என ஆதங்கம் கொள்கிறார்.
மன்னராக இருந்த நிலையிலும், இரு புலவர்களின் தீராத அன்பினைப் பெற்றவர் கோப்பெருஞ்சோழன். அவர்களிடத்து அதே அளவிலான அன்பை செலுத்தியவரும் கூட. ஆக, பிசிராந்தையாரும், சோழ மன்னர் கோப்பெருஞ்சோழனும் நட்பின் இலக்கணமாக அறியப்படுகிறார்கள்; போற்றப்படுகிறார்கள்.
இதில், குறிப்புகளுக்கு பிசிராந்தையாரை பயன்படுத்திக் கொள்வது எதனால் என்றால், ஒரு நண்பர், தன் நண்பரை உயர்வான நிலையில் வைத்து எண்ண விரும்புவார் என்பதால் தான். சோழருக்கு பிசிராந்தையார், பல படிகள் நிலை கீழிருந்தவர். பிசிராந்தையாருக்கோ மன்னர் பல படிகள் உயர்வான நிலையில் இருந்தவர். ஆக, பிசிராந்தையார் அதிகமாகக் குறிக்கப்படக் காரணம், நட்பு எப்போதும் தன்னைத் தாழ் நிலையில் வைத்து, தன் நட்பினை உயர்நிலையில் வைத்துப் பார்க்க விரும்புவதே.
விளக்கம் போதுமானதாக இருக்கிறதா எனத் தம்பி நண்பன் தான் கூற வேண்டும்.
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
Nisha wrote:
இங்கும் என் புரிதல் என்னவெனில்...
உன்னை சந்திகக வேண்டும் என எனக்குள் தோன்றாவிட்டாலும் உன் நட்பு என்னுள் வியாபித்து அனைத்துமே நீயென உணர்த்துகின்றது என்கின்றார் தினா! நீ இல்லாத நொடியில் நானும் இல்லாமல் போயிருக்கலாம் என காதலில் மட்டும் தான் உணர்த்துவரோ நட்பு உணர்த்தாதோ! --
எனக்கென்னவோ காதலை விட நட்பின் வரும் ஏமாற்றம் தான் அதிக வலி தரும் என உணர்ந்ததை எழுதி இருக்கின்றார் என தோன்றுகின்றது.
சபாஷ் தினா!
மிகச் சரியான புரிதல் அக்கா. பாராட்டுக்கு நன்றி. :)
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
Nisha wrote:அப்படின்னால் சரி!
தினா வந்து வேற மாதிரி விளக்கம் தந்தாலும் தரலாம். எங்கூரில் இதெல்லாம் சகஜம்பூ.
:) கொஞ்சம் பொதுவான விளக்கமாக மாற்றிதான் அளித்தேன் அக்கா.
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
வாவ்!
எம்மாம் பெரிய விளக்கம் தினா! நண்பன் இதை படித்து முடிக்கவே ஒரு நாள் எடுப்பார்! அருமையான விளக்கம் தினா!
நட்புக்கு இலக்கணம் மட்டுமல்ல உயர்ந்தவர் தாழ்ந்தவர் எனும் நிலை கூட இவர்களுக்குள் இல்லை என சொன்ன விதம் அருமை தினா!

Last edited by Nisha on Sat 20 Sep 2014 - 22:36; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
அக்கா,மேலே உங்கள் கவிதைக்கான விளக்கப் பதிவிலும் கூட மாற்றம் செய்ய வேண்டுமா பாருங்கள்.
Last edited by தினா on Sat 20 Sep 2014 - 22:42; edited 1 time in total
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
Nisha wrote:தம்பியே தான்! அக்ரிகல்ச் படித்த பட்டதாரி. எதிர்கால வழி காட்டி!
பழகிட தயக்கம் என்பதால் தள்ளியே நிற்பார்!
ஓ!! சரி அக்கா. விவசாயம் குறித்த படிப்பில் பட்டம் பெற்றவர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
தினா wrote:அக்கா,மேலே உங்கள் கவிதைக்கான விளக்கப் பதிவிலும் கூட மாற்றம் செய்ய வேண்டுமா பாருங்கள்.
நாம் இதை குறித்து முதலில் டிஸ்கஸ் செய்யலாம் தினா! இப்போது நான் திருத்தி விட்டேன்.
பிசிரந்தையார் போல் ஔவையார் ஆணா பெண்ணா தினா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு புதிய சட்டம்!
» சவூதி அரேபியாவில் பணிப்பெண் ஒருவர் மரணம்; முகவரின் அனுமதிப் பத்திரம் ரத்து!
» தேசம்"பத்திரம்'!
» இதயம் பத்திரம்! ஒரு வழிகாட்டி
» இணையமெனும் சமுத்திரம் - குழந்தைகள் பத்திரம்...
» சவூதி அரேபியாவில் பணிப்பெண் ஒருவர் மரணம்; முகவரின் அனுமதிப் பத்திரம் ரத்து!
» தேசம்"பத்திரம்'!
» இதயம் பத்திரம்! ஒரு வழிகாட்டி
» இணையமெனும் சமுத்திரம் - குழந்தைகள் பத்திரம்...
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum