சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!   - Page 2 Khan11

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!   - Page 2 Empty இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!

Post by Nisha Wed 29 Oct 2014 - 21:26

First topic message reminder :

கொழும்பு: இலங்கையில் மலையகப் பகுதியான பதுளை மாவட்டத்தில் இன்று காலை ஏற்பட்ட மிகப் பயங்கர நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் புதையுண்டனர். 

இதுவரையிலான மீட்புப் பணியில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இலங்கையில் பருவமழை தீவிரமானதால் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மலையகப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.தமிழர்கள் அதிகம் வசிக்கும் மலையகமான ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் கொஸ்லாந்த, மீரியபெத்தையில் இன்று காலை மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் மொத்தம் 70 வீடுகள் அப்படியே மண்ணில் புதையுண்டன. 

இந்த 70 வீடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதைந்தனர். இவர்கள் அனைவரும் மலையகத் தமிழர்கள். அனைவரையும் மீட்பதற்கான பணிகள் காலை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது வரை 20 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் தொடர் மழை பெய்து வந்ததால் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் பல குடும்பங்கள் வெளியேறிவிட்டன. எஞ்சியிருந்தோரே நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். 

மண்ணில் புதையுண்டவர்களை மீட்கும் பணியில் இலங்கை ராணுவமும் விமானப்படையும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் முகாமிட்டிருந்த இலங்கை ராணுவத்தின் கமாண்டோ படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் பதுளைக்கு சென்றுள்ளனர்.

200 ஏக்கர் பரப்பளவில் நிலச்சரிவு? 
மொத்தம் 200 ஏக்கர் பரப்பளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் மீறியபெந்த என்ற தோட்டப் பகுதியையே காணவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. . 

உயிர் தப்பியவர்கள் 
இந்த பயங்கர நிலச்சரிவில் உயிர் தப்பியவர்களில் ஒருவரான மகேந்திரன் என்பவர், இன்று காலை 7 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. நாங்கள் தப்பியோட முயற்சித்தும் பலனில்லை. எப்படியாவது ஓடி தப்பியோடிவிடலாம் என்று நினைத்தோம் முடியாமல் போய்விட்டது. 

சுமார் 500 பேர் இதில் சிக்கியிருக்கலாம். எனது குடும்பத்தைச் சேர்ந்த 9 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை என்றார். இதேபோல் ராதா என்ற பெண் கூறுகையில், காலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த ஒரு சத்தத்தை மட்டுமே எங்களால் கேட்க முடிந்தது. இடுப்பு கீழே முழுவதும் மண் மூடிவிட்டது. சிலர் மண்ணை வெட்டி அகற்றி என்னை உயிரோடு காப்பாற்றினர் என்றார்.


இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!   - Page 2 10614297_739804216057142_2290297043012120126_n



ஒன் இந்தியா செய்திகள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down


இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!   - Page 2 Empty Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!

Post by Nisha Fri 31 Oct 2014 - 16:54

பதுளை ஹல்திமுல்ல கொஸ்லாந்த பகுதியில்120 வீடுகள் அள்ளிச் செல்லப்பட்டிருக்கின்றன. 150 பேர் வரை மண் சரிவில்சிக்கியிருக்கிறார்கள். பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புபணி அடைமழை மோசமான காலநிலையின் மத்தியில் சிரமத்துடன் முன்னெடுக்கப்படுகிறது
800 இற்கு மேற்பட்டோர் பாடசாலைகளில் தங்கவைக்கபட்டிருக்கிறார்கள்
3 கிலோமீற்றர் சுற்றளவுள்ள ஒரு கிராமமே அழிந்து போயிருக்கிறது.
இவ்வாறான பாரிய அனர்த்தத்திற்கான சாத்தியங்கள் பற்றி சூழலியல் விஞ்ஞானிகள்- ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறார்கள்.
பாரிய அணைக்கட்டுத்திட்டங்கள் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
ஆசாதாரணமாக மித மிஞ்சி தேக்கமடையும் நீர் மலைபோன்ற பிரமாண்டங்களையே கரைத்தழித்து விடும்.
என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
அதிகாலையில் தோட்டங்களுக்கும்- வேறு வேலைகளுக்கு சென்றவர்களும் பாடசாலைக்குச் சென்ற மாணவர்களும் தவிர விட்டில் இருந்தவர்களே பெருமளவிற்கு இந்த அனர்த்தத்திற்குப் பலியானார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!   - Page 2 Empty Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!

Post by சுறா Fri 31 Oct 2014 - 16:56

அணைக்கட்டால் ஏற்பட்ட விபத்தா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!   - Page 2 Empty Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!

Post by Nisha Fri 31 Oct 2014 - 16:57

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!   - Page 2 1604685_804895139575653_7451443880748408752_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!   - Page 2 Empty Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!

Post by Nisha Fri 31 Oct 2014 - 17:04

சுறா wrote:அணைக்கட்டால் ஏற்பட்ட விபத்தா?

தெரியவில்லை ஜானி! அதுவும் காரணமாயிருக்கலாம் ! முனாஸ் சார் வந்ததும் கேட்க வேண்டும். ஆனால் ஏற்கனவே அப்பகுதிகளில் மண்சரிவு வாய்ப்பு இருப்பதாக சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்காங்க. 

இருந்தும் ஏழை மக்கள் போக்கிடம் இல்லாததால் எங்கும் இடம் மாற வில்லை. அப்பகுதிமக்களால் பாராளுமன்றம் அனுப்பட்ட அமைச்சர் .. தனக்கு ஒன்றுமே தெரியாது. தான் இப்படி ஒரு அழிவு வரும் என்பதை அறிந்திலேன் என்கின்றார். ஆனால் ஜனாதிபதி மகிந்த அறிந்திருக்கின்றார். 

அப்பகுதி  பாதிக்கப்படும் என அறிவித்த பின் மக்களை வேறிடங்களில் குடியேற்ற முயற்சிக்காதது  யார் தப்பு? 

இந்தியா உட்பட பல நாடுகள் உதவிக்க்ரம் கொடுத்தாலும்  சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கே இன்னும் விடிவு வராத நிலையில்  ஏழைகளுக்கு என  உலக நாடுகள் வாரி இறைக்கபோவது அரசியல் வாதிகளில் வீட்டு கஜானாக்களைத்தானே நிரப்பும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!   - Page 2 Empty Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!

Post by Nisha Fri 31 Oct 2014 - 17:05

Nisha wrote:'புதையுண்ட தோட்டத்தில் மண்சரிவு அபாயம் இருப்பதை நான் அறிந்திருக்கவில்லை'

இலங்கையில் பதுளை மாவட்டத்தில், கொஸ்லந்தை பிரதேசத்தில் புதையுண்ட தேயிலைத் தோட்டக் குடியிருப்பு பகுதியில் மண்சரிவு அபாயம் இருந்ததை தான் அறிந்திருக்கவில்லை என்று மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தொண்டைமான் பேட்டியை கேட்க இங்கே செல்லுங்கள்!
https://audioboom.com/boos/2607009-?utm_campaign=detailpage&utm_content=retweet&utm_medium=social&utm_source=facebook

இதில் வரும் ஆடியோவை கேளுங்கள். ஒரு அமைச்சரின் பதிலா இது?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!   - Page 2 Empty Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!

Post by Nisha Fri 31 Oct 2014 - 17:07

சுறா wrote:நிவாரணப்பணிகள் எப்படி நடைபெறுகிறது. அரசாங்கம் உதவி செய்கிறதா?

எலெக்‌ஷன் நேரம் என்பதால் நிவாரணப்பணிகள் மந்தமாகாமல்  நடக்க வாய்ப்புக்கள் அதிகம் தான். இங்கும் அரசியல்சுய இலாபம் பார்க்கவென ஓடி ஓடி உதவலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!   - Page 2 Empty Re: இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு- 300 இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
» அமெரிக்க “ஸ்பெல்லிங் பீ’ போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு முதலிடம்
» இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கண்டுபிடிப்பு: கொரோனா இறப்பை தடுக்கும் சிகிச்சை
» நவம்பரில் நடக்கும் அமெரிக்க தேர்தலில் சாதனை படைக்க காத்திருக்கும் 3 இந்திய வம்சாவளி பெண்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum