சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Khan11

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

+6
நண்பன்
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
சுறா
ந.க.துறைவன்
10 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 24 Nov 2014 - 6:38

First topic message reminder :

பசலை நோய்…!!
*
உன்னை மனநோயாளி என்று
முத்திரைக் குத்தி
மனசாட்சியில்லாமல்
உறவுகள் இம்சை செய்வதைப்
பார்க்க மனம்
வேதனைப்படுகின்றது.
உன் காதலைப் பிரிக்க
எதையோ சொல்லி
நம்ப வைக்க
முயற்சிப்பவர்களின்
கட்டுக்கதை தானே இது.
உன்னை எப்படி
நம்ப வைப்பதென்று
காதலன் துடிக்கிறான்.
உன்னைச் சேர்த்து விடாமல்
தடுக்க ஊர் துடிக்கிறது.
யார் அறிகிறார்களோ? இல்லையோ?
உன் காதலன் மட்டுமே அறிவான்.
உன் பசலை நோய்க்கு மருந்து.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down


ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Thu 3 Mar 2016 - 4:48

அச்சமே ஆபத்து….!!
*
அன்றைய காதலர்களின்
காதல் கடிதங்கள்
பாதுகாக்கப்பட்டன.
வரலாற்றில் பதியப்பட்டன.
இன்றைய காதலர்கள்
கடிதம் எழுதுவதை மறந்து
எஸ்எம்எஸ்
குறுஞ்செய்திகளில்
பரிமாறிக் கொண்டு
அடுத்த நொடியே
அழகியல் கற்பனை வரிகளை
அழித்துவிட்டு   
ஆசுவாசப்படுத்திக் கொண்டு            
பாதுகாப்பு தேடிக்கொள்கிறார்கள்.    
சமுகச் சங்கிலியில் சிக்குண்டு
அச்சத்தில் வாழ்வது சாதல்
அச்சமின்றி வாழ்வது காதல்.


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Wed 6 Apr 2016 - 3:58

பூனைக் குறும்பு..!!
*
அறையெங்கும் பூனையின் தொல்லை
அன்றாடம் வழக்கமாகிப் போன
அலுப்பூட்டும் செயலாகி விட்டது.
வீட்டில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்து
திட்டு வாங்குவதும் அதற்குப்
பழக்கமாகி விட்டதில் ஒன்றும்
அதிசயமில்லை எப்பொழுதேனும்
அப்பூனைக் கண்ணில் தென்படவில்லை
எனில் எங்கே தொலைந்தது என்றுக் கேட்டுத்
தேடுவார்கள் அனைவரும். அக்குறும்புப்
பூனையோ? யாருக்கும் தெரியாமல்
படுக்கையறைக் கட்டிலின் கீழ்
பவ்வியமாக ஒளிந்துத்  திருட்டுத்
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து
வெளியில் ஓடிவரும் யாரோ
உள்ளே நுழையும் காலடிச் கத்தம் கேட்டு..!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Tue 12 Apr 2016 - 7:10

பிம்பங்களின் மர்மம்…!! 
*
அவள் சொன்னதைச் செய்வாள்
செய்ததைச் சொல்வாள்
அவள் சொல்லாமல் விட்டதை
என்னிடம் சொல்லியும் காட்டுவாள்.
நான் சொல்லாமல் இருப்பதை
எப்படியும் சொல்லக் கேட்பாள்
அவள் என்னிடம் எதை மறைத்தாளோ
எனக்குத் தெரியாது?
நான் மறைத்ததும்
அவளுக்குத் தெரியாது?
மறைத்தல் என்பது மனதின் மர்மம்
வெளிப்படுகிறது அவரவர் பிம்பம்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Sat 16 Apr 2016 - 3:58

தேவி சிரித்தாள்…!!
*
விடு
பார்வதி தேவி விடு.
லிங்கத்தை
ஆலிங்கனம் செய்தது போதும்,
சிவன்
மூச்சுத் திணறுகிறானே
உனக்குத் தெரியவில்லையா?
விடு தேவி விட்டு விடு
உன் அரவணைப்பில் மெய்
மறந்து செயலற்றவனாய்…
விடு
பார்வதி தேவி
சிவனை விட்டு விடு.
பார்வதி தேவி
சிவனை விடுத்தாள்
அப்பாடா, என்று பெருச்சு விட்டான்
சிவன்
அசைந்தது அகிலம்
இன்றைய விளைளாட்டு போதுமென்று
தேவி சிரித்தாள் பரமன் சிரித்தான்
தரிசித்தார்கள் பக்தர்கள் பரவசமாய்…!!

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Wed 27 Apr 2016 - 3:45

சிக்னல்…!!
*
நீ காட்டிய சிக்னல் பார்த்து விட்டு
எவனோ ஒருத்தன் சிரிக்கிறான்.
அக்கம் பக்கம் பார்த்து சிக்னல் காட்டு.
அப்பொழுது தான்
அடுத்தவனுக்குப் புரியாது.
அதில் எந்த சிக்கலும் இருக்காது?
பாதுகாப்பானதாக இருக்கவேண்டும்
ஆபத்தானதாக இருக்கக் கூடாது
காதல் சிக்னல்!!.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Tue 3 May 2016 - 3:36

யாருக்குப் பிடிக்கணும்?
*                                        
உன்னை
என் பெற்றோர்களுக்குப் பிடித்திருந்தது
பார்த்து சம்மதம் சொல்ல அழைத்து வந்தார்கள்.
நான் உன்னைப் பார்த்தேன்
நீ என்னைப் பார்த்தாய்.
மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதா? என்று
உன்னிடம்
உன் அம்மாவும் என் அம்மாவும்
இரகசியமாய் கேட்டார்கள்.
என் சம்மதம் கேட்காமலேயே
எப்படி நீ ஒற்றை வார்த்தையில்
பிடித்திருக்கிறது என்று சொன்னாய்?
அம்மாக்களுக்குப் பிடிப்பதைப்
பிள்ளைகள் தலையில் கட்டுகிறார்கள்
பிள்ளைகளுக்குப் பிடிப்பதை
அம்மாக்கள் மறுக்கிறார்கள்.


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Sun 8 May 2016 - 3:58

கருணைக் கொலை…!!
*
நான்
உன்னைக் காதலித்தாலும்
நீ என்னைக் காதலித்தாலும்
உயிருக்கு
உத்தரவாதமில்லை.
இப்பொழுது
இளம்பருவத்தினர்
இளமையுணர்வுகள்
இரக்கமற்றவர்களால்
கருணைக் கொலையாகும்
பரிதாப ஆடுகள்
போலாகி விட்டது
காதல்.


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Sun 15 May 2016 - 3:52

சிவப்பு தக்காளி…!!
*.
கோடைக் கால வெப்ப நிலை கொதிப்பு ஏறுது
தக்காளி போல் சிவந்த மேனி  தத்தளிக்குது!
 
மல்லிகைப்பூ கூந்தலிலே அழகு காட்டுது
சுட்டெரிக்கும் வெயிலிலே சிரிக்க மறுக்குது!
 
நெற்றிக் கன்னம் கண்களிலே சோர்வுத் தெரியுது.
முலாம்பழம் முகத்தினிலே வியர்வை  வழியுது
 
வெள்ளரிப் பிஞ்சாய் தளிர்கரங்கள் துவண்டிருக்குது
வெள்ளமாக அரும்பி வியர்வை வழிந்து ஓடுது.
.
அவசரமாய் பஸ் பிடிச்சி போகப் பார்க்குறே
ஜன நெரிசல் புழுக்கத்திலே மூச்சுத் திணறுது. 
.
,இறங்கி நடந்து போகையிலே அசதி தெரியுது
ஆண்கள் பார்க்கும் பார்வையிலே அனல் வீசுது.
.
ஆபிஸு கேட்டிக்குள்ளே நுழைஞ்சி போகிறே
அழுது வடிஞ்சி நிற்கிற முகங்கள் பார்க்குறே!
.
அப்பாடா என்ன வெயில் என்று புலம்புறே?
ஆயாசம் தீரும் மட்டும் தண்ணிக் குடிக்கிறே!!.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Tue 24 May 2016 - 3:47

நெற்றிவடு…!!
*
திங்கட்கிழமை விநாயகருக்கு
வாழைப்பழத்தில் விளக்கேற்றினாள்.
செவ்வாய்கிழமை துர்க்கைக்கு
எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றினாள்.
புதன்கிழமை விஷ்ணுசகஸ்ரநாமம் படிச்சி
துளசிமாடத்தில் விளக்கேற்றினாள்.
வியாழக்கிழமை குருபகவானுக்கு
தேங்காயில் விளக்கேற்றினாள்
வெள்ளிக்கிழமை காமாட்சிக்கு
பொங்கல் வச்சி மாவிளக்கேற்றினாள்.
சனிக்கிழமை கிரகத் தோஷம் நீங்கிட
சனிபகவானுக்கு எள் விளக்கேற்றினாள்.
ஞாயிற்றுக்கிழமை காலபைரவருக்கு
உச்சிவேளைப் பூசையில் விளக்கேற்றினாள்.
எல்லா நாளும் பக்தியோடு வழிப்பட்டவளுக்கு
நல்ல வரன்  அமையவில்லை.
புகுந்த வீட்டிற்குப் போய் விளக்கேற்றும்
பாக்கியம் இன்னும் கிட்டவில்லை - இன்னும்
பகவான்கள் யாரும் கண் திறக்கவில்லை்.
நெற்றிவடு வலப்புறமாய் கருமுடிகள் ஒன்றிரண்டு
வெள்ளி கம்பியாய் தகதகத்து மின்னுகிறது.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Fri 10 Jun 2016 - 4:03

அழகின் தரிசனம்…!!
 
அவள் எப்பொழுதும் ஏதேனும்
ஒரு வழியில் வீடு திரும்புகிறாள்
எந்த குறுக்குப் பாதையென்று
அறிவது அறிதாகவேயிருக்கிறது
அவ்வழியை அடையாளம் கண்டு
வழிக்காட்ட மரமோ கோயிலோ
அங்கே இருப்பதாய் தெரியவில்லை.
பறவையின் இருப்பிடம் அறிந்திடலாம்
அவள் இருப்பிடம் அறிவது
அத்தனை புதிராக இருக்கிறது
தேவதையாய் மறைந்து போகிறவள்
பேரழகின் தரிசனம் காண்பதற்கு
காத்திருக்கிறது கண்கள்
தெய்வ தரிசனம் எளிது
அழகின் தரிசனம் கடினம்


*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by பானுஷபானா Fri 10 Jun 2016 - 11:51

ந.க.துறைவன் wrote:அழகின் தரிசனம்…!!
 
அவள் எப்பொழுதும் ஏதேனும்
ஒரு வழியில் வீடு திரும்புகிறாள்
எந்த குறுக்குப் பாதையென்று
அறிவது அறிதாகவேயிருக்கிறது
அவ்வழியை அடையாளம் கண்டு
வழிக்காட்ட மரமோ கோயிலோ
அங்கே இருப்பதாய் தெரியவில்லை.
பறவையின் இருப்பிடம் அறிந்திடலாம்
அவள் இருப்பிடம் அறிவது
அத்தனை புதிராக இருக்கிறது
தேவதையாய் மறைந்து போகிறவள்
பேரழகின் தரிசனம் காண்பதற்கு
காத்திருக்கிறது கண்கள்
தெய்வ தரிசனம் எளிது
அழகின் தரிசனம் கடினம்


*

அருமை ஐயா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by பானுஷபானா Fri 10 Jun 2016 - 13:52

ந.க.துறைவன் wrote:பூனைக் குறும்பு..!!
*
அறையெங்கும் பூனையின் தொல்லை
அன்றாடம் வழக்கமாகிப் போன
அலுப்பூட்டும் செயலாகி விட்டது.
வீட்டில் குறுக்கும் நெடுக்குமாகத் திரிந்து
திட்டு வாங்குவதும் அதற்குப்
பழக்கமாகி விட்டதில் ஒன்றும்
அதிசயமில்லை எப்பொழுதேனும்
அப்பூனைக் கண்ணில் தென்படவில்லை
எனில் எங்கே தொலைந்தது என்றுக் கேட்டுத்
தேடுவார்கள் அனைவரும். அக்குறும்புப்
பூனையோ? யாருக்கும் தெரியாமல்
படுக்கையறைக் கட்டிலின் கீழ்
பவ்வியமாக ஒளிந்துத்  திருட்டுத்
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து
வெளியில் ஓடிவரும் யாரோ
உள்ளே நுழையும் காலடிச் கத்தம் கேட்டு..!
*

அருமை ஐயா

இப்படித் தான் எங்க வீட்டில் ஒரு பூனை இருந்தது இப்போது காணாமல் போய்விட்டது . எப்படி போனது என தெரியவில்லை.

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Av0oba
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Fri 10 Jun 2016 - 15:08

மிக்க நன்றி பானுஷா நலமா?
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by பானுஷபானா Sat 11 Jun 2016 - 13:32

ந.க.துறைவன் wrote:மிக்க நன்றி பானுஷா நலமா?

நலம் ஐயா நீங்க நலமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 13 Jun 2016 - 4:09

நன்றி பானு...வாழ்க வளமுடன்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Tue 12 Jul 2016 - 3:43

காதல் தெம்மாங்கு பாடு…!!
 
தென்றல் காற்றே தென்றல் காற்றே
தெம்மாங்கு பாடு.
தாவணி போட்டக் கன்னி வருகிறாள்
தெம்மாங்கு பாடு.
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி
தெம்மாங்கு பாடு
செவத்த பொண்ணு பாதையில் வருகிறாள்
வரவேற்று பாடு.
மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே
தெம்மாங்கு பாடு
அவள் கருத்த கூந்தலைச் சூடிய அழகை
தெம்மாங்ஞ பாடு
கோவைப் பழமே கோவைப் பழமே
தெம்மாங்கு பாடு
சிவந்த உதடுகள் துடிக்குது பாரு
தெம்மாங்கு பாடு
உள்ளம் உருக உணர்வுகள் பெருக
தெம்மாங்கு பாடு
காதல் தெம்மாங்கு பாடு
காதல் தெம்மாங்கு பாடு!!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 18 Jul 2016 - 12:41

நன்றி குமார்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 18 Jul 2016 - 12:42

நன்றி குமார்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 18 Jul 2016 - 12:42

நன்றி குமார்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Thu 21 Jul 2016 - 3:54

செல்பி…!!
*
செல்போனில் பேசுகிறாள்
சிரித்து சிரித்து மகிழ்கிறாள்
சத்தமில்லாமல் பேசுகிறாள்
சந்தேகம் வாராமல் பேசுிறாள்.
 
குறுஞ்செய்திகள் அனுப்புகிறாள்
குறும்பு வரிகள் படிக்கிறாள்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள்
குனிந்து வெட்கப்பட்டு வியர்க்கிறாள்
 
செல்பி எடுத்து பார்க்கிறாள்
அழகை ரசித்து சிரிக்கிறாள்
நண்பர்களுக்கு அனுப்புகிறாள்
நிறைய லைக் வாங்குகிறாள்
 
மனம் கலங்கி நிற்கிறாள்
மலங்க மலங்க முழிக்கிறாள்
சிக்கில் போக்கத் தெரியாமல்
சிக்கிக் கிட்டு தவிக்கிறாள்.
ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by பானுஷபானா Fri 22 Jul 2016 - 14:00

ந.க.துறைவன் wrote:செல்பி…!!
*
செல்போனில் பேசுகிறாள்
சிரித்து சிரித்து மகிழ்கிறாள்
சத்தமில்லாமல் பேசுகிறாள்
சந்தேகம் வாராமல் பேசுிறாள்.
 
குறுஞ்செய்திகள் அனுப்புகிறாள்
குறும்பு வரிகள் படிக்கிறாள்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறாள்
குனிந்து வெட்கப்பட்டு வியர்க்கிறாள்
 
செல்பி எடுத்து பார்க்கிறாள்
அழகை ரசித்து சிரிக்கிறாள்
நண்பர்களுக்கு அனுப்புகிறாள்
நிறைய லைக் வாங்குகிறாள்
 
மனம் கலங்கி நிற்கிறாள்
மலங்க மலங்க முழிக்கிறாள்
சிக்கில் போக்கத் தெரியாமல்
சிக்கிக் கிட்டு தவிக்கிறாள்.
ந.க.துறைவன்.

*

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 6 Mar 2017 - 7:55

பித்தப்பூக்கள்….!!
*
1.
நான் யார்?
*
நான் யார் தெரிகிறதா?
என்றான்
நான் யார்? என்று
எனக்கே தெரியவில்லை
உன்னை எப்படி?
எனக்கு தெரியும்?
2.
வலி…!!
*
மலரைப் பறித்தவளுக்கு
அதன் வலி தெரியவில்லை
இப்பொழுது தான்
அவளுக்குப் புரிந்தது
மனதைப் பறித்தவன்
கொடுத்த வலி.

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Mon 13 Mar 2017 - 6:55

வேறு யார்….!!
*
உன்னை எங்கெல்லாம்
தேடுவது இங்கேயா இருக்கிறாய்?
இங்கே இருக்கிறாய் என்று
தெரிந்திருந்தால் நேற்றே வந்து
பார்த்திருப்பேனே?
நேற்று இங்கே இருந்தேன்
இன்று தான் இங்கில்லலை.
இப்பொழுது எங்குதானிருக்கிறாய்?
உன்னிலே தேடிப்பார் அங்கே
இருக்கிறேனா?  என்று
நீ தேடுவது நானல்லவா!
வேறு யார்? அந்த நான்!
 
ந.க.துறைவன்.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Sat 18 Mar 2017 - 7:14

உச்சம் எதுவெனில்…!!
 
1.
உச்சக் கட்ட அதிர்வின்
இன்வலி முயங்கல்கள்
உள்வாங்கி திணர்கின்றன
அமைதியாய் இரவு.
2.
வலிகள் தான் இன்பம்
வலிகள் தான் துன்பம்
வலிகள் தான்
நீ, நான், நாம்
வலியில் தான் பிறந்தோம்
வலியில் தான் இறக்கிறோம்.
3.
உன் அனல்
என் வேட்கை
பனிக்குளிர்.
4.
கனன்று சிவந்திருக்கிறது
சாந்தம் இல்லாத அவள்
காந்தப் பார்வை.
5. 
மோகம் முள்
ரணம் உள்
ந.க.துறைவன்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by பானுஷபானா Sat 18 Mar 2017 - 12:59

அருமை ஐயா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!. - Page 4 Empty Re: ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum