சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Yesterday at 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

அரசியல் என்பது சாக்கடையா? Khan11

அரசியல் என்பது சாக்கடையா?

5 posters

Go down

அரசியல் என்பது சாக்கடையா? Empty அரசியல் என்பது சாக்கடையா?

Post by ahmad78 Wed 11 Mar 2015 - 14:53

அரசியல் என்பது சாக்கடையா? 10644994_935301209843615_9212654699546303208_n
அரசியல் என்பது சாக்கடையா?
சுமார் 16 வருடங்களுக்கு முன், பாக்யா வார இதழில் கேள்வி-பதில் பகுதியில் வந்தவை இது.பாக்யா இதழில் கேள்வி பதில் பகுதி ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும். ஒவ்வொரு கேள்விகளுக்கும் வரலாற்றிலிருந்து ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டி பதில் சொல்லுவது பாக்யராஜ் அவர்களின் ஸ்டைல்.
கேள்வி: அரசியல் என்பது சாக்கடையா?
பதில்: இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜானதிபதி இருந்தார். அவர் நோய்வாய்ப்பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை. மதியம் வேளை தொழுகைக்காக பள்ளிவாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்தபோது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி,
"எனக்கு ஒரு வியாதி இருக்கிறது.அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?" என அனுமதி கேட்கிறார். மக்கள் அனைவரும் "இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!" என்று சொன்னார்கள் அதற்கு உமர், "இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை" என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.அந்த காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அரசியல் சாக்கடையா? என்ற கேள்வியே உங்கள் மனதில் தோன்றியிருக்காது என்று கூறியிருந்தார் பாக்கியராஜ்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அரசியல் என்பது சாக்கடையா? Empty Re: அரசியல் என்பது சாக்கடையா?

Post by நண்பன் Thu 12 Mar 2015 - 9:14

சிறந்த முன்னுதாரணம் நன்றி தோழா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசியல் என்பது சாக்கடையா? Empty Re: அரசியல் என்பது சாக்கடையா?

Post by *சம்ஸ் Thu 12 Mar 2015 - 17:20

காந்தியடிகள் போற்றிய உமர் (ரலி)

மதினா நகரமே உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த நள்ளிரவு நேரம். எங்குமே பேரமைதி. வானிலே ஆங்காங்கே கண்சிமிட்டும் நட்சத்திரங்கள். இவ்வேளையில் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் வீதியிலே இறங்கி நகர்வலம் வந்தார்.
நகரின் எல்லையைக் கடந்து செல்கையில், தன்னந்தனியே இருந்த சின்னஞ்சிறு கூடாரம் ஒன்றில் சிறு விளக்கொளியைக் கண்டு அதனை நோக்கி நடந்தார். அருகில் சென்று பார்த்தபோது, அங்கே ஒரு மனிதர் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவரை நோக்கி உமர் (ரலி) இரண்டுமுறை ஸலாம் கூறியும் அவர் பதில் ஏதும் கூறாததால், மூன்றாவது முறையும் ஸலாம் சொன்னார். அம்மனிதர் ஆவேசப்பட்டு, பக்கத்தில் கிடந்த வாளை எடுத்துக் கொண்டு, “நீ போக மாட்டாயா? உன்னைப் பார்த்தால் பிச்சைக்காரனாகக் கூடத் தெரியவில்லையே? வழிப்பறி கொள்ளையனாகவல்லவா தோன்றுகிறது?’ எனக் கத்தினார்.

உமரோ அமைதியாக, “நண்பரே! நீர் நினைப்பதுபோல் நான் பிச்சைக்காரனுமல்ல, வழிப்பறி கொள்ளையனுமல்ல. உம்மைப் பார்த்தால் வெளியூர்க்காரர்போல் தோன்றுகிறது. அதனால்தான் உம்மோடு பேச நினைத்தேன்’ என்று சொல்லிக் கொண்டிருக்கையில் கூடாரத்திலிருந்து பெண்ணின் கூக்குரல் கேட்டது. திடுக்கிட்ட உமர் (ரலி) அவர்கள், “அங்கே கூக்குரலிடுவது, யார்?’ என வினவ, “அவள் என் மனைவி’ என அம்மனிதர் கூற, “அவர் ஏன் கூச்சலிட வேண்டும்?” என்று உமர் கேட்டார்.

“பிழைப்பைத் தேடி, இந்நாட்டிற்கு வந்தோம். வந்த இடத்தில் பிரசவ வேதனை தொடங்கிவிட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல் நான் இங்கு கவலையோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று பதிலளித்தார் அந்த மனிதர்.

“மருத்துவச்சியை அழைத்து வருகிறேன்’ என உமர் (ரலி) எழுந்ததும், “வேண்டாம், வேண்டாம்’ எனப் பதறினார் அம்மனிதர். “ஏன் மருத்துவச்சியை வேண்டாம் என்கிறீர்?’ என உமர் வினவியதும், “மருத்துவச்சிக்குக் கொடுக்க என்னிடம் பணமில்லை’ என்றார் சோகமுடன். “நான் அழைத்து வரும் மருத்துவச்சி, பணம் வாங்க மாட்டாள்; கவலைப்படாதீர்கள்’ என்று சொல்லிக் கொண்டே வேகமாக வெளி நடந்தார் உமர்.

வீட்டை அடைந்ததும் தன்னுடைய மனைவியை அழைத்து உடனே புறப்படுமாறு உத்தரவிட்டார். “நீங்கள் சாப்பிடவில்லையா?’ என மனைவி கேட்க, “இல்லை. அந்தச் சாப்பாடு வேறொருவருக்குத் தேவை’ என்றார். “கொஞ்சம் பாலாவது அருந்துங்களேன்’ என்றதும், “வேண்டாம். பிரசவ வேதனையிலிருக்கும் அந்தப் பெண்மணிக்கு அது தேவைப்படலாம். உடனே அவற்றை எடுத்துக் கொண்டு புறப்படு. நான் ஒட்டகத்தை ஓட்டி வருகிறேன்’ என்று புறப்பட்டார் உமர்.

சிறிது நேரத்தில் உமரும், அவருடைய மனைவியும் கூடாரத்தை அணுகியதும், மனைவியை கூடாரத்திற்குள் அனுப்பிவிட்டு உமர் அவர்களும், அம்மனிதரும் வெளியில் இருந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

“இந்நாட்டிற்கு உமர்தானே இப்போது தலைவர்?’

“ஆமாம்.’

“அவர் மிகவும் கடினமானவர் என்கிறார்களே!’

“அது அவரவர் கருத்தைப் பொறுத்தது.’

“நீர் உமரை பார்த்திருக்கிறீரா?’

“பார்த்திருக்கிறேன்.’

“அவரிடம் நிறையப் பணம் இருக்குமே?’

“அவரிடம் ஏது பணம்?’

“என்ன வேடிக்கை, ஒரு அரசாங்கத் தலைவர் பணம் சேர்த்து வைக்காமலா இருப்பார்?’

“அப்படி பணம் சேர்க்கும் யாரையும் நாங்கள் தலைவராகத் தேர்ந்தெடுப்பதில்லை.’

இச்சமயத்தில் கூடாரத்திலிருந்து மருத்துவச்சியின் குரல் ஒலித்தது. “ஜனாதிபதி அவர்களே! உங்கள் நண்பருக்கு வாழ்த்துக் கூறுங்கள். அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.’

“ஜனாதிபதி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் அந்த மனிதர் உடல் நடுங்கி, உமரின் காலில் விழச் சென்றார். அம்மனிதரை அணைத்துக் கொண்டு, “நண்பரே! ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? என்ன நடந்துவிட்டது?’ என அன்போடு கேட்டார் ஜனாதிபதி உமர் அவர்கள்.

“அப்படியானால் மருத்துவம் பார்த்த அந்தப் பெண்மணி யார்?’ என அம்மனிதர் வினவ, “அவர் எனது மனைவி’ என உமர் கூறவும், ஆச்சரியத்தால் திகைத்துப்போன அந்த மனிதர், நன்றி கலந்த குரலில் கேட்டார், “இந்த நாட்டின் தலைவரான தாங்களா இவ்வளவு ஊழியம் எனக்குச் செய்தீர்கள்?’

“இதில் வியப்படைய என்ன இருக்கிறது நண்பரே? ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே! நாளை பள்ளிவாசலுக்கு வாருங்கள். உங்கள் வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்வோம்’ எனக்கூறி புறப்பட்டார் உத்தமர் உமர் (ரலி) அவர்கள்.

இத்தகைய உயர் பண்பு நலன்களுடன் ஆட்சி செய்தவர் உமர் (ரலி) அவர்கள். அதனால்தான், “உமர் போன்று ஆட்சி செய்ய வேண்டும்’ என்றார் அண்ணல் காந்தியடிகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அரசியல் என்பது சாக்கடையா? Empty Re: அரசியல் என்பது சாக்கடையா?

Post by Nisha Thu 12 Mar 2015 - 18:27

ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே! 

இந்த நிஜம் யாருக்காவது புரியுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரசியல் என்பது சாக்கடையா? Empty Re: அரசியல் என்பது சாக்கடையா?

Post by சுறா Fri 13 Mar 2015 - 7:26

Nisha wrote:
ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே! 

இந்த நிஜம் யாருக்காவது புரியுமா?
'
ஒருத்தருக்கும் புரியாது அம்மணி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

அரசியல் என்பது சாக்கடையா? Empty Re: அரசியல் என்பது சாக்கடையா?

Post by Nisha Fri 13 Mar 2015 - 12:20

எனக்கு புரிந்து போச்சே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரசியல் என்பது சாக்கடையா? Empty Re: அரசியல் என்பது சாக்கடையா?

Post by *சம்ஸ் Sat 14 Mar 2015 - 7:54

Nisha wrote:
ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே! 

இந்த நிஜம் யாருக்காவது புரியுமா?

அனைவருக்கும் தெரியும் உண்மையை மறைக்கிறார்கள் மறுக்கிறார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அரசியல் என்பது சாக்கடையா? Empty Re: அரசியல் என்பது சாக்கடையா?

Post by நண்பன் Sat 14 Mar 2015 - 16:14

Nisha wrote:
ஒரு நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன்தானே! 

இந்த நிஜம் யாருக்காவது புரியுமா?

அது என்னமோ தெரியல என் கண் குளமாகி விட்டது
உமர் ரழி அவர்களின் கருணை அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசியல் என்பது சாக்கடையா? Empty Re: அரசியல் என்பது சாக்கடையா?

Post by Nisha Sat 14 Mar 2015 - 16:15

சுவிஸில் தண்ணீருக்கு தட்டுப்பாடு வந்தால் உங்களை ஸ்பான்சர் செய்ய சொல்கின்றேன் தும்பி சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அரசியல் என்பது சாக்கடையா? Empty Re: அரசியல் என்பது சாக்கடையா?

Post by நண்பன் Sat 14 Mar 2015 - 16:20

Nisha wrote:சுவிஸில் தண்ணீருக்கு தட்டுப்பாடு வந்தால் உங்களை ஸ்பான்சர் செய்ய சொல்கின்றேன் தும்பி சார்.

இந்தத்தண்ணீர் உப்புக் கலந்தது அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அரசியல் என்பது சாக்கடையா? Empty Re: அரசியல் என்பது சாக்கடையா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum