Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புதிய கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள்
Page 1 of 1
புதிய கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள்
புதிய கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு சரியான சந்தர்ப்பத்தை பயன்படுத்துங்கள்
நாட்டை ஜனநாயக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முன்கொண்டு செல்வதற்கு ஏற்பட்டிருக்கும் அரிய சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும். மோசமான எதிர்காலத்தை துடைத்தெறிந்துவிட்டு புதிய கலாசாரத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்திருக்கும் சூழ்நிலையில் நாட்டில் இனவாதத்தை இல்லாமல் செய்து, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஏற்பட்டிருக்கும் சந்தர்ப்பம் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நேற்று முன்தினம் சுயாதீன தொலைக்காட்சியில் உப்புல் சன்னஸ்கலவுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செவ்வியின் விபரம் வருமாறு,
கேள்வி : ஜே.ஆர். ஜயவர்த்தன ஆட்சிக்காலத்தில் இந்தியா இலங்கை வான்பரப்பை மீறி உள்நுழைந்து பருப்பு பொட்டலங்களைப் போட்டி ருந்தது. இந்த நிலையில் இலங்கை கடல் எல்லையை இந்தியாவோ எந்தவொரு நாடோ மீறினால் துப் பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும் எனக் கூறியுள்Zர்கள். இது பற்றிக் கூறுங்கள்?
பதில் : இந்திய விமானங்கள் இலங்கை வான்பரப்புக்குள் நுழைந் தமைக்கு நாம் எதிர்ப்புத் தெரிவித்த துடன், அத்துமீறல் எனக் கூறியிருந் தோம். அப்போதிருந்த வளங்களின் அடிப்படையில் அவற்றைத் தடுக்க முடி யாதிருந்தது.
இது தொடர்பில் பின்னர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று பிரச்சினை தீர்க்கப்பட்டது. அதே போலவே வான் எல்லையாக இருக் கலாம் கடல் எல்லையாக இருக்கலாம் அதனை மீறி உள்நுழைவது ஏற்றுக் கொள்ள முடியாதது. கடல் எல்லையை மீறிவரும் சிறிய படகுகளைத் தடுப் பதற்கு போதியளவு வளம் கடற்படை யிடம் உள்ளது. அத்துமீறும் சந்தர்ப் பங்களில் இலங்கையின் சட்டத்துக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி : பாராளுமன்றம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக் கப்படுகின்றன. உண்மையில் பாரா ளுமன்றத்தின் தரம் உயர்ந்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா?
பதில் : பாராளுமன்றத்தின் தரம் வீழ்ச்சி கண்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாராளுமன்றத்தின் அதிகாரம் இல்லாமல்போய் அவை அனைத்தும் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் சென்றுவிட்டன. பாராளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கும் வகையிலேயே ஜே.ஆர் ஜயவர்த்தன செயற்பட்டிருந் தார். 17வது திருத்தச்சட்டமூலத்தி லிருந்த சகல சுயாதீனக் குழுக்களும் நீக்கப்பட்டன. ஜனாதிபதியையும் அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கும் அதிகாரம் செல்லும்போது சாதாரண அமைச்சர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதுவும் செய்ய முடியாது போனது.
அதிகாரம் இல்லாத பாராளுமன்றமாக மாற்றப்பட்டது. பாராளுமன்றத்துக்குள் உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது. கீழ் மட்டமானவர்கள் நடந்துகொள்வதைப் போன்று நடந்துகொள்கின்றனர். இதற்கு முன்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள பாராளுமன்றம் இருந்துள்ளது. ஆனால் இந்தளவு மோசமான நிலைக்கு பாராளுமன்றம் சென்றிருக்கவில்லை.
அண்மையில் சபையில் நடந்த ஆர்ப்பாட்டத்தைப் பார்க்கும் போது பாராளுமன்றத்தின் சிங்க ஆசனத்தின் கீழ் உள்ள கால்துடைப்பத்தில் தூங்குமளவுக்குச் சென்றுவிட்டனர் என்பதைத் காண்பிக்கிறது.
கேள்வி : 1971ஆம் ஆண்டுக்கு முன்னர் ரோஹன விஜயவீர கலந்துகொண்ட கூட்டமொன்றுக்கு நீங்கள் சென்றதாக புத்தகமொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜே.வி.பியின் அரசியல் நிலைப்பாடு குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில் : ஜே.வி.பியின் தலைவராக விருந்த ரோஹன விஜயவீர நடத்திய ஒரு சில கூட்டங்களுக்கு அவருடைய உரையைக் கேட்பதற்காக நான் சென் றிருந்தேன். மாக்சிசக் கொள்கையை முன்நிறுத்திய சோசலிச நிலைப் பாட்டை அவர் கொண்டு சென்றிருந் தார். அதில் நான் இணங்கியிருக்க வில்லை. இன்றுள்ள நிலையில் ஜனநாயகம் மற்றும் சோசலிசம் ஆகிய வற்றுக்கு இடையில் இடதுசாரிக் கட்சி என்ற ரீதியில் எவ்வாறு செயற் படுவது என்பதை ஜே.வி.பி தீர் மானிக்கவேண்டும்.
இது தொடர்பில் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துக்கள் இருப்பதாகத் தோன்றுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் பின்னர் எவ்வாறு தமது வாக்குகளை அதிகரிப்பது என்பதிலேயே அவர்கள் மும்முரமாக இருக்கின்றனர். அவர்கள் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே அது வெற்றியளிக்குமா இல்லையா என்பதைக் கூறமுடியும்.
கேள்வி : உரிமைகளுக்கு எதிராக போராட்டம் நடத்துவதைவிடுத்து ஊழல், மோசடி விசாரணை செய்ய வேண்டாம் என வலியுறுத்தி ஆர்ப் பாட்டங்கள் நடைபெறுவது அண் மையகாலத்தில் வழக்கமாகியுள்ளது. இது பற்றி உங்கள் நிலைப்பாடு?
பதில் : இன்று சில அரசியல் வாதிகளின் செயற்பாடுகளைப் பார்த் தால் துட்டகைமுனு அரசனை இலஞ்ச மோசடி விசாரணை ஆணைக் குழுவுக்குக் கொண்டு சென்றிருப் பதைப் போலவுள்ளது.
இன்று நாட்டை சட்டம் ஆழ்கின்றது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. சட்ட ஆட்சி நடைபெறும்போது நடைபெறும் செயற்பாடுகள் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. தனிநபர்களை மையப் படுத்தி அவர்களை பெரிதுபடுத்தும் செயற்பாடே கடந்த 10 வருடங்களாக நாட்டில் முன்னெடுக்கப்பட்டது. இவ் வாறான சில நபர்களை பூதாகரமாகக் காண்பிக்கும் வகையிலேயே சில ருடைய நடவடிக்கைகள் அமைந் துள்ளன.
ஒரு சில தனிநபர்களை தூக்கிப் பிடித்து செயற்படுபவர்கள் ஒரு விடயத் தைப் புரிந்துகொள்ளவேண்டும், தாம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிழலின்கீழேயே நிற்கின் றோம் என்பதாகும். தேர்தல் வெற்றியின் பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து சகலரையும் வீட்டுக்கு அனுப்பியிருக்க ஜனாதிபதியால் முடியும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
அவ்வாறா னவர்கள் தற்பொழுது பாராளுமன்றத் தில் தமது தலைவர் யார் என்பது கூடத் தெரியாமல் இருக்கின்றனர். பாரா ளுமன்றத்தில் கூச்சல் இடுபவர்கள் தமது தலைவர் பற்றிக் கதைப்ப தில்லையே. ஒரு தனிநபரை அந்தளவுக் குப் பெரிது படுத்தியுள்ளனர். அதனால் நாட்டுக்குப் புதிய தலைவர் ஒருவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது கூட அவர்களுக்கு விளங்க வில்லை.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அல்லது வேறு எவரி டமாவது இலஞ்ச ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழு வாக்குமூலம் பதிவுசெய்ய வேண்டுமாயின் அவ்வாறு பதிவுசெய்வதில் என்ன பிரச்சினை உள்ளது. ஜனாதிபதியிடம் வாக்குமூலம் எடுப்பதாயின் அவர் அதனை வழங்க வேண்டும். ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடி யாவிட்டாலும், வேறொருவர் தொடர் பில் வாக்குமூலம் வழங்கவேண்டு மாயின் அதனை வழங்க வேண்டும். தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும்போது வேறு சட்டம் நடை முறையில் கொண்டுவரப்பட வேண் டும் என்பதையே சொல்லாமல் சொல்கின்றனர்.
கேள்வி : 28 தடவைகள் தேர்தல் களில் நீங்கள் தோல்வியடைந்துள்ள போதும் கட்சி பிளவுபடாமல் தொடர்ந் தும் கட்சித் தலைவராக இருக்கின் aர்கள். இதன் இரகசியம் என்ன?
பதில் : இதில் இரகசியம் இல்லை. எமது கட்சி 17 வருடங்கள் ஆட்சி செய்துவிட்டு தோல்வியடைந்தால் மீண்டும் எழுச்சிபெற காலம் எடுக்கும். இந்தக் காலப்பகுதியில் கட்சிக்குத் தலைமைத்துவம் வழங்கி கட்சியை கட்டியெழுப்பி வெற்றியை நோக்கி கொண்டுசெல்வதற்கு பலம் வேண்டும். வெற்றியின்போது கட்சியை கொண்டு நடத்துவது கஷ்டமான காரியமல்ல. தோல்வியான காலங்களில் கட்சியை நடத்திச் செல்வதே கஷ்டமான விடயமாகும். ஐக்கிய தேசியக் கட்சி எனது சொத்து அல்ல. என்னுடன் இருப்பவர்கள் கட்சி தொடர்பில் நன்கு உணர்ந்தவர்கள். கட்சி பிளவு படுவதை விரும்பாதவர்கள் பலர் எம்முடன் இருந்தனர்.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கான ஆதரவு சரியத் தொடங்கியது. இதனாலேயே ஐந்து வருடங்களுக்குள் அவருடைய ஆட்சியைக் கவிழ்க்க முடிந்தது. கட்சிக்குள் கொள்கையிருப் பதால் கட்சி உறுப்பினர்கள் அனை வரையும் ஒன்றிணைத்து கட்சியை முன்கொண்டுசெல்ல எனக்கு முடியுமாக இருந்தது.
கேள்வி : எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிட வுள்Zர்கள்?
பதில் : எப்படி போட்டியிடுவது என்பது கட்சி கூடி தீர்மானிக்கும். ஏற்கனவே இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளன. கட்சி தீர்மானத்துக்கு அமைய பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். சகலரையும் ஒரே நிலைப்பாட்டுக்குள் கொண்டுவருவதே எனது பொறுப்பாகும். அனைவரையும் ஒன்று திரட்டியதும் கட்சி கூடி தீர்மானம் எடுக்கும்.
கேள்வி : தேர்தல் காலத்தில் சகல மேடைகளிலும் ஏறி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு நீங் கள் கூறியிருந்தீர்கள். நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைப் போன்று அவரும் உங்கள் மீது நம் பிக்கை வைத்துள்ளாரா?
பதில் : நாம் ஒன்றிணைந்து செயற்படுகின்றோம். நாம் இருவர் மாத் திரமன்றி கட்சிகள் பல ஒன்றிணைந்து செயற்படுகின்றன. சில சமயங்களில் கட்சிகளுக்கிடையில் வேறுபட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும் கலந்து ரையாடல்களை நடத்தி பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்த முயற் சிக்கின்றோம். சகலரையும் ஒரே நிலைப்பாட்டுக்குக் கொண்டுவருவது என்பது இலகுவான காரியமல்ல.
முதற்தடவையாக ஒன்றிணைந் திருக்கும் கட்சிகளைப் பாருங்கள். ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள். மலையக தமிழ் கட்சிகள் மறு பக்கத்தில் ஜே.வி.பி, ஹெல உறுமய, ஐ.தே.க, சுதந்திரக் கட்சி என பல கட்சிகள் இணைந் துள்ளன. இந்தக் குழுக்களை நிர்வகிப்பது என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த விடயம். சுதந்திரத்தின் பின்னர் பெரும் எண்ணிக்கையான கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது இதுவே முதற்தடவையாகும்.
கடந்த காலத்தில் இதனைப் போன்று இடதுசாரி, வலதுசாரி உள்ளிட்ட சகல கட்சிகளும் ஒன் றிணைந்திருக்கவில்லை.
எமது தேவை என்னவெனில் புதிய அரசியல் கலாசாரத்தைக் கொண்ட புதிய பாராளு மன்றமொன்றை உருவாக்க வேண்டும் என்பதேயாகும்.
கேள்வி : நூறுநாள் வேலைத்திட் டம் வெற்றியளித்துள்ளதா அல்லது தோல்விகண்டுள்ளதா?
பதில் : நாம் உறுதிமொழி வழங் கிவற்றில் 44 செயற்றிட்டங்கள் அமுல் படுத்தப்பட்டுவிட்டன. 52 செயற்றிட் டங்கள் முடிவடையும் தறுவாயில் உள்ளன. 7 செயற்றிட்டங்கள் நீண்ட கால நோக்கமுடையவை. அவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமை யவே எமது செயற்பாடுகள் அமைந் துள்ளன. இதற்கு முன்னர் எந்த வொரு அரசாங்கமும் 100 நாட்களுக் குள் பாரிய வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருக்கவில்லை. இதுவே நாம் பெற்றிருக்கும் வெற்றியாகும். உலக நாடுகளிலேயே நூறுநாட்களுக் குள் இவ்வளவு செயற்றிட்டங்களை நிறைவேற்றியது இலங்கையாகும்.
கேள்வி : நூறுநாள் வேலைத்திட்டத் தில் நிறைவேற்று அதிகார ஜனா திபதிமுறையை ஒழிக்கும் 19வது திருத்தச்சட்டமூலத்தைக் கொண்டு வருவதாகவும், விருப்புவாக்கு முறை யைக் கொண்ட தேர்தல் முறையை மாற்றியமைப்பதாகவும் உறதிமொழி வழங்கப்பட்டுள்ளது. நல்லாட்சி அர சாங்கம் வழங்கிய இந்த உறுதி மொழிகளுக்கும் அப்பால் சென்று இரண்டையும் ஒன்றாக இணைக்கு மாறு அழுத்தங்கொடுக்க மற்றவர்க ளால் முடியுமா?
பதில் : 19வது திருத்தச்சட்டமூலத் தையும் 20வது சட்டமூலத்தையும் ஒன்றாக நிறைவேற்றுவதாக ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இருந்தபோதும் இரண்டையும் நிறை வேற்றுவதற்கு கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக இன்றும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சிலர் கோரிக்கை விடுக்கின்றார்கள் என்பதற்காக 19வது திருத்தச்சட்டமூலத்தில் சகல தையும் ஒன்றிணைக்க முடியாது.
தேர்தல் முறைமாற்றம் தொடர்பில் 19வது திருத்தச்சட்டமூலத்தில் குறிப்பிடப்படவில்லை. தேர்தல்முறை மாற்றம் என்பது தொடர்பில் பிறிதொரு அரசியலமைப்புத் திருத்தச்சட்ட மூலமே கொண்டுவரப்பட வேண்டும். கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு ஏற்படும் பட்சத்திலேயே 20வது திருத் தச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும். இது தொடர்பில் பேச்சுக்கள் நடைபெறுகிறது.
கேள்வி : நூறுநாளில் எத்தனை திருடர்களைப் பிடித்துள்Zர்கள்?
பதில் : மோசடியில் ஈடுபட்டர்வ களுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிலர் நீதி மன்றத்தில் நிறுத்தப்பட்டு வழக்குத் தாக் கல் செய்யப்பட்டு பிணையில் வெளி யேறியுள்ளனர். திருடர்களைப் பிடிக் கின்றோம் எனக் கூறிக்கொண்டு 100 நாட்களுக்குள் அனைவரையும் சிறைப் பிடிக்க முடியாது. சிலருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேள்வி : ரணில் விக்ரமசிங்க இருப்பதால் திருடர்களைப் பிடிக்க முடியாதுள்ளது என உங்கள் அமைச் சரவையில் உள்ள சிலர் அண்மை யில் கூறியிருந்தனர். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : நான் பொலிஸ் அதிகாரியல்ல. யார் மோசடியில் ஈடுபட்டார்கள் என ஆராய்ந்து சட்டரீதியாகவே நட வடிக்கை எடுக்க முடியும். சட்டத்துக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப் படுகிறது. வழக்குத் தாக்கல் செய்த வர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பதை நீதிமன்றமே முடிவுசெய்ய வேண்டும். வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளது. சில புதிய நடைமுறைக்கு அமைய பணம் வழங் கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டவர்களின் அனுபவம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக நிலவிவந்த திருடர் களைப் பிடிக்கவேண்டாம் என்ற கலாசாரத்தை மாற்றி திருடர்களைப் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத் துள்ளோம்.
கேள்வி : இராணுவத்திடமுள்ள நிலங்கள் வழங்கப்படுகின்றன, பாது காப்பு குறைக்கப்படுகிறது, நாட்டைப் பிரிப்பதற்கு முயற்சிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படு கின்றது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : உயர்பாதுகாப்பு வலயங்கள் பற்றி நான் கூறவேண்டும். எமது 100 நாள் திட்டத்தில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு மீண்டும் சொந்த இடத்தைப் பெற்றுக்கொடுக் கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு தெற்கில் இது நடைபெற்றுள்ளது. வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்திற்காக பிடிக்கப்பட்டிருந்த இடங்களில் சில பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்ட போதும் சில பகுதி பாதுகாப்பு செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப் படவில்லை.
நாம் ஆட்சிக்கு வந்த பின் னர் யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தை நீக்குவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்கு அமைய, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் ஒருதொகுதி நிலத்தை விடுவிப்பதற்கு நீதிமன்றத்தின் ஊடாக இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்ததாக, இதற்கமையவே காணிகள் விடுவிக்கப் பட்டன.
சம்பூரில் பிடிக்கப்பட்டுள்ள இடத்தை மீள வழங்குமாறு 2014ஆம் ஆண்டு மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார். கடற்படை முகாம் அமைந்துள்ள இடத்தை வழங்குமாறு அவர் அறிவித் திருந்தார். இதற்கமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாத நிலையில் உயர் பாதுகாப்பு வலயங்கள் விடுவிக்கப்படு கின்றன.
கேள்வி : கூட்டங்களுக்குச் செல்லும் போது பிள்ளைகளைத் தூக்குவது, ஆதரவாளர்களை கட்டிப்பிடிப்பது, தோழில் தட்டுவது போன்றவற்றை மேற்கொள்ளாமல் இலங்கையின் அரசியல்வாதியாக இருக்க முடியும் என நம்புகின்aர்களா?
பதில் : அவ்வாறிருந்த அரசியல்வாதி கள் இவருடைய பெயர்களை கூறுங் கள் பார்க்கலாம். ஒருவர்மாத்திரமே இருக்கின்றார். தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றினால் மக்கள் வாக்களிப் பார்கள். அவ்வாறு செய்ய முடியாத தாலேயே இவ்வாறு செயற்பட வேண்டியுள்ளது.
கேள்வி : மத்திய வங்கியின் திறை சேரி முறி விநியோகம் தொடர்பில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் விசாரிப்பதற்கு குழு வொன்றை நியமித்திருந்தீர்கள். நீங்கள் நியமித்த ஒருவருக்கு எதிராக நீங்களே விசாரணைக்குழுவொன்றை நியமித் துள்Zர்கள். இதுபற்றி உங்கள் கருத்து?
பதில் : சுயாதீனமானவர்களேயே நான் விசாரணைக்கு நியமித்திருந்தேன். அவர்களின் அறிக்கைக்கு அமைய மத்திய வங்கியின் ஆளுநருக்கும் குறித்த திறைசேரிமுறி விநியோகத்துக் கும் இடையில் நேரடித்தொடர்புகள் எதுவும் இல்லையென அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எவ்வாறு குறித்த நிறுவனத்துக்கு மாத்திரம் பெருமளவு பங்கு வழங்கப் பட்டது என்பது தொடர்பில் ஆராயுமாறு அக்குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். கடந்த ஆட்சிக் காலத்தில் திறைசேரி முறி விநியோகத்தின்போது சிறிய பகுதி மாத்திரம் பகிரங்க ஏலத்திலும், பெரும்பகுதி தனிப் பட்ட ரீதியாகவும் வழங்கப் பட்டுள்ளன.
இதுவே இந்த நிலைமைக்குக் காரண மாக அமைந்துள்ளன.
கேள்வி : கொழும்பு நகரை அலங் காரப்படுத்துவதில் முன்னாள் பாது காப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுகிறது. இது பற்றி
பதில் : கொழும்பு நகரை அழகு படுத்துவது என்பது ஐக்கிய தேசியக் கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டம். ஜயவர்தனபுர கோட்டையை தலைநகராக்கியது யார்? ஜே.ஆர்.ஜய வர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது கொழும்பு நகரில் வீடுகளை அமைத்து நகரை அழகுபடுத்துமாறு அப்போதைய பிரதமராக இருந்த பிரேமதாசவுக்குப் பணிப்புரை வழங்கியிருந்தார்.
இவ்வாறான நிலையில் நகர அபிவிருத்தி சபையின் ஊடாக கோட்டாபய ராஜ பக்ஷவும் கொழும்பு நகரை அழகு படுத்தும் வேலைத்திட்டத்தை தொடர்ந் தும் முன்னெடுத்திருந்தார்.
கேள்வி : கடந்த காலங்களில் குறிப் பிட்ட கால இடைவெளியில் பெரும் எண்ணிக்கையான இளைஞர், யுவதி கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொல்லப்பட்டனர். இவ்வாறான சம் பவங்கள் எதிர்காலத்தில் இடம் பெறாதவாறு தடுப்பதற்கான வேலைத் திட்டங்கள் உங்களிடம் இருக் கின்றதா?
பதில் : வேலையின்மையாலேயே இளைஞர் எழுச்சிகள் ஏற்பட்டன. வடக்கிலும் சரி தெற்கிலும் சரி இளை ஞர்கள் பிழையாக வழிநடத்தப்பட்டனர். முதலில் இந்த நாட்டில் இனவாதம் இல்லாமல் செய்யப்பட வேண்டும். இதற்கான ஆரம்பத்தை நாம் தொடங் கியுள்ளோம். சகல இன சமூகத்தையும் ஒன்றிணைத்து எதிர்காலத்தில் முன்செல்வது எனப் பார்க்கவேண்டும்.
அண்மைக் காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் தமிழ் மக்க ளுக்கு எதிராகவும் சில குழுக்களை முன்னிறுத்தி செயற்பாடுகள் முன் னெடுக்கப்பட்டுள்ளன. இனங்களுக் கிடையில் வேறுபாடு ஏற்படுத்துவதை நிறுத்தவேண்டும். அனைவரும் இலங் கையர் என உணர வேண்டும். பொருளா தார ரீதியிலும் சமூக ரீதியிலும் நாட் டைப் பலப்படுத்த வேண்டும்.
எதிர்வரும் 5 வருடத்துக்குள் 10 இலட்சம் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி தனிப்பட்ட வருமானத்தை இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை நாம் வகுத்துள்ளோம்.
தமிழில்:
மகேஸ்வரன் பிரசாத்
நன்றி தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum