சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Today at 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

மின்சார முதலுதவி Khan11

மின்சார முதலுதவி

Go down

மின்சார முதலுதவி Empty மின்சார முதலுதவி

Post by ahmad78 Tue 16 Jun 2015 - 14:14

முதல் உதவி
மின்சார முதலுதவி Ht3622
‘மின்சாரம் தாக்கி பலி’ என்பது நாளிதழ்களில் தவறாமல் இடம்பெறுகிற செய்தியாகி விட்டதைப் பார்க்கிறோம். வீடு, தொழிற்சாலை, சாலை எனப் பல இடங்களிலும் எதிர்பாராத நேரத்து மின்சார விபத்து தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மின்சார தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவியாக எவற்றை செய்ய வேண்டும்? எவற்றைத் தவிர்க்க வேண்டும்? விளக்குகிறார் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் சத்யா காளியண்ணன்.

மின் தாக்குதலுக்கு உள்ளானவரை காப்பாற்ற போகிறவர்கள், முதலில் அவரை எந்தக் காரணம் கொண்டும் நேரடியாகத் தொடக்கூடாது.  மெயின் ஸ்வி ட்சை ஆஃப் பண்ணி மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும். வோல்டேஜ் அதிகமாக இருக்கும்போது, பிளக் பாயின்ட், ஸ்விட்ச், எலெக்ட்ரிகல் சர்க்யூட் போன்ற மின்சார உபகரணங்களில் இருந்து அவரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு கண்டிப்பாக மரத்தால் செய்யப்பட்ட பொருட்களைத் தான் பயன்படுத்த வேண்டும். 

தாக்குதலுக்கு ஆளானவரைச் சுற்றி தண்ணீர் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உயர மான இடத்தில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழும்போது, கழுத்துப் பகுதியில் அடிபட நிச்சயம் வாய்ப்பு உள்ளது. எனவே, உயரமான இடங்களில் இருந்து மின்சாரம் தாக்கி கீழே விழுந்தவரின் கழுத்தை அசைக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

அவருக்கு சுயநினைவு உள்ளதா? எந்தவித சிரமமும் இல்லாமல் சுவாசிக்க முடிகிறதா? இதையெல்லாம் பரிசோதனை செய்ய வேண்டும். வீட்டில் உள்ளவர்களின் உடலில் ஈரப்பதம் இருந்தாலும், பாதுகாப்பான காலணிகள் அணியாமல் இருந்தாலும் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் குறைந்த அளவு மின்சாரத்தாலும் ஆபத்து ஏற்படும்.  மின்சாரம் தாக்கி சுயநினைவு இழந்தவர்கள், சுவாசிக்க சிரமப்படுபவர்கள், நெஞ்சுவலி, படபடப்பு, தீக்காயங்களால் அவதிப்படுபவர்கள், மின்சார தாக்குதலுக்கு ஆளான குழந்தைகள், தாய்மை அடைந்த பெண்கள் ஆகியோரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். 

பொது இடங்களில் யாராவது மின்சாரம் தாக்கப்பட்டு கிடந்தால், உடனே ஆம்புலன்ஸை வரவழைத்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.  அவர்களுக்கு மூச்சு சுவாசம் மற்றும் நாடித்துடிப்பு சீராக இல்லையென்றால், முதலுதவி செய்ய தெரிந்தவர்கள் நெஞ்சை அழுத்திவிடுதல் என்ற Cardiopulmonary resuscitation என்ற C.P.R. முதலுதவி சிகிச்சையை செய்வது அவசியம். மயக்கமாக இருப்பவர்களுக்கு வாய் வழியாக சாப்பிட எதுவும் கொடுக்கக்கூடாது.அவ்வாறு கொடுக்கப்படும் உணவுப் பொருளால் சுவாசக் குழாய்க்குள் அடைப்பு ஏற்பட்டு  நிலைமை இன்னும் மோசமாகும். 

மின்சார தாக்குதல் காரணமாக உடலில் ஏற்பட்ட தீக்காயங்களை துணியால் சுற்றக்கூடாது. தீப்புண்கள் மீது ஐஸ்கட்டி வைப்பதோடு, குளிர்ந்த நீரையும் மெதுவாக ஊற்றலாம்.  கரன்ட் ஷாக்கால் உள்ளுறுப்புகள் பாதிப்பு அடைய வாய்ப்புகள் அதிகம். முக்கியமாக, இதயம், மூளை, சதைப் பகுதிகள் பாதிப்பு அடையும். கிட்னியும் பாதிக்கப்படலாம்.மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களின் முகத்தில் தண்ணீர் தெளிக்கக் கூடாது. வலிப்பு மாதிரி அவர்களுக்கு ஏற்பட்டால், இரும்புப் பொருள் எதுவும் கொடுக்கக் கூடாது. 

அவர்களை இடதுபுறமாக படுக்க வைப்பது நல்லது. கரன்ட் ஷாக் காரணமாக கை, கால்களை உதறும்போது எலும்புகள் உடைய வாய்ப்பு உள்ளது. எனவே, கை, கால்கள் இயல்புக்கு மாறான நிலையில் இருந்தால் அவை அசையாமல் இருக்கும்படி நீளமான பொருளுடன் சேர்த்து கட்டி மருத்துவமனைக்கு கொண்டு வருவது நல்லது. முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு கொண்டு வந்த பிறகும் சுவாசம், இதயத்துடிப்பு சீராக இல்லையென்றால், C.P.R. முதலுதவி சிகிச்சையைத் தொடர்ந்து, உரிய சிகிச்சைகள் கொடுக்க வேண்டும். 

மின்சார தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு இதயத்துடிப்பில் (ECG) மாற்றம் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும். அடிப்படையான ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். மின்சார தாக்குதலில் சதை அதிக பாதிப்பு அடைந்து உள்ளதா என்பதை சிறுநீர் பரிசோதனை மூலமாகவே அறிய முடியும். முதலுதவி எனும் பெயரில் தவறாக எதுவும் செய்வதைவிட, நேரத்தை வீணாக்காமல் உடனே மருத்துவமனைக்கு கொண்டு வருவது நல்லது.’’


http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3632


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum