சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை Khan11

பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை

3 posters

Go down

பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை Empty பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை

Post by சே.குமார் Tue 7 Jul 2015 - 17:47

மீபத்தில் பார்த்து ரசித்த மலையாளப்படம் பிரேமம். நிவின் பாலி, சாய் பல்லவி நடித்திருந்த படம். தமிழ்த் திரையுலகில் கேரள வரவுகளைத் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் காலத்தில் கேரளச் சேட்டன்களின் தூக்கத்தைக் கெடுத்து மலர், மலர் என வண்டுகளாக அலைய விட்டிருக்கிறார் தமிழ்ப் பெண்ணான சாய் பல்லவி, சரி பல்லவி அப்புறம் பாடுவோம் முதலில் பிரேமிக்கலாம்.

பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை Premam-Actress-Sai-Pallavi-Photos


பிரேமம் பள்ளிக்காதல்... கல்லூரிக்காதல்... திருமணம் என மூன்று பிரிவுகளாக படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். படத்தின் எடிட்டரும் இவரே. கேரள இயற்கையோடு பயணிக்கும் படம் இரண்டே முக்கால் மணி நேரம் என்றாலும் கொஞ்சம் கூட அலுப்பைக் கொடுக்கவில்லை. அவ்வளவு அழகாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்.

நாயகன் நிவின் பள்ளியில் படிக்கும் பையனாக, மேரி என்ற பெண்ணை காதலிக்கிறேன் என நண்பர்களுடன் விரட்டிக் கொண்டு திரிவதாகட்டும்... கல்லூரியில் மடித்துக் கட்டிய வேஷ்டியுடன் மீசை முறுக்கிக் விட்டுக் கொண்டு ஆசிரியர் தனனைக் காதலிக்கிறாரா என்றெல்லாம் அறிய விரும்பாமல் தான் காதலிப்பதாகட்டும்... படிக்கும் வயதில் போட்ட ஆட்டங்களுக்குப் பிறகு பொறுப்போடு ஒரு கேக் கடை வைத்துக் கொண்டு அனுபவஸ்தனாக வருவதாகட்டும்... மனுசன் ஒவ்வொரு கட்டத்திலும் தனது நடிப்பில் மட்டுமல்லாமல் உடல்மொழியிலும் மாற்றத்தைக் காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவைப் போல மலையாளத்திலும் இயக்குநர் மகன், நடிகர் மகன் என ஒரு பட்டாளம் கிளம்பி யிருக்கும் போது எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் ஜெயித்துக் கொண்டிருக்கிறார் நிவின்.

என்னோட பேர் மலர் என்று அறிமுகமாகும் சாய் பல்லவி, கல்லூரியில் பையன்களின் தாளத்துக்கு தலையாட்டியபடியே படித்துக் கொண்டிருக்கும் போதே எல்லோரையும் கவர்ந்து விடுகிறார். பின்னர் அவர் தமிழ் பேசியபடி வரும் ஒவ்வொரு காட்சியிலும் மலராகவே மாறியிருக்கிறார். நிவின் மற்றும் அவரது நண்பர்களுக்கு கல்லூரி விழாவுக்காக நடனம் சொல்லிக் கொடுக்கும் இடத்தில் இசையைக் கேட்டபடி மெதுவாக நடந்து செல்லும் அவர் போடுவாரே ஒரு ஆட்டம்... ஆஹா ரகம். மாணவனைக் காதலிப்பதை வெளியில் சொல்லாமல் மனசுக்குள் வைத்துக் கொண்டு அவரைப் பிரிந்து செல்லும் போது அந்தப் பார்வையில் காதலை மறைத்துச் செல்கிறார்.

பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை Sai-Pallavi-in-Premam


பள்ளியில் படிக்கும் கிறிஸ்தவப் பெண்ணாக, முடியை ஒரு பக்கமாக விரித்துப் போட்டு வரும் அனுபமா பரமேஸ்வரனாகட்டும், நாயகனுக்கு தெரிந்த பெண்ணாக, கடைசியில் அவனைக் கரம் பிடிக்கும் பெண்ணாக வரும் மாடோனா செபஸ்டினாகட்டும் தங்கள் பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

மலரை ஒரு தலையாக காதலிக்கும் ஆசிரியராக வினய் போர்ட் மற்றொரு ஆசிரியருடன் சேர்ந்து அடிக்கும் லூட்டியில் கொஞ்ச நேரம் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். நிவின் நண்பர்களாக வரும் கிருஷ்ண சங்கரும் மற்றவர்களும் பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார்கள்.

படத்துக்கு இசை மிகப்பெரிய பலம். கல்லூரிக்குள் நாயகன் நண்பர்களுடன் நுழையும் முதல் நாளில் வகுப்பறையில் இருந்து வரும் தாளம்... பார்ப்பவர்களையும் தாளம்போட வைக்கிறது. பின்னணியிலும் மனுசன் கலக்கியிருக்கிறார். ராஜேஷ் முருகேசன் படத்தின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை Nivin-Pauly-Anupama-in-Premam-Premam-lots-of-reasons-to-hope-for-Premam-Movie-Stills-Images-Photos-Malayalam-Movie-2015-Onlookers-Mediaஇந்தப் படம் ஆட்டோகிராப் மாதிரி இருக்கு என்று சிலர் சொன்னார்கள். ஆட்டோகிராப் போல் மூன்று விதமான காதலில் கதை நகர்ந்தாலும் ஆட்டோகிராப்புக்கும் இதற்கும் துளியும் ஒத்துப் போகவில்லை. படத்தின் கிளைமேக்ஸ்தான் படத்தின் முக்கியத் திருப்பம். பிரேமம் மலையாளத் திரையுலகம் கொடுத்திருக்கும் ஒரு அருமையான படம்.

சாய் பல்லவி... இன்றைய தேதியில் முகநூலில் இவர் இடும் போட்டோக்களுக்கு எல்லாம் 'டா மலரே...' என மலையாளிகள் லைக் அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். சாய்... இனி ஒரு ரவுண்ட் வருவார்... அப்படியே தமிழிலும் இவரைக் கொண்டுவர நம்ம ஆளுங்க போட்டா போட்டி போடுவார்கள்.

பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை Premam-Actresses-Stills-Anupama-Parameswaran-Sai-Pallavi-Madonna-Sebastine-Mary-Malar-Celine-Onlookers-Media



தமிழில் இது போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வருவது அரிது. இங்கே கதாநாயகனை அறிமுகம் செய்யும் போது ஒரு பாடல், குத்துப்பாடல், நாயகன் நாயகிக்கு பாடல் எனவும் கதாநாயகனுக்கு பில்டப் கொடுக்கும் வசனங்களும்தான் படங்களாகி வருகின்றன... இதையும் நாம் பாலாபிஷேகம், காவடி என எடுத்துக் கொண்டாடுகிறோம். ஆனால் நமக்கு அருகே மலையாளக் கரையில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இல்லை... கதாநாயகனுக்கு பில்டப்பெல்லாம் இல்லை.. ஆனால் நல்ல கதைகளோடு பயணிக்கிறார்கள்... ஜெயிக்கிறார்கள்.

நேற்று அமலாபால், நிவின் பாலி நடித்த மிலி பார்த்தேன். இது ஒரு வித்தியாசமான கதைக்களம். அருமையான படம்... இது குறித்து மற்றொரு பகிர்வில் பேசுவோம். 
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை Empty Re: பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை

Post by Nisha Wed 8 Jul 2015 - 23:29

மலையாள ப்படம் பிரேமம் குறித்த விமர்சனத்துக்கு நன்றி குமார்!

சினிமாப்படம் பார்ப்பதில் அதிக ஆர்வமில்லாததால் படமே பார்ப்பதில்லைப்பா! இருந்தாலும் உங்கள் விமர்சனம் ரசிக்க வைக்கின்றது. நன்று குமார்.


Last edited by Nisha on Tue 14 Jul 2015 - 11:40; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை Empty Re: பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை

Post by நண்பன் Tue 14 Jul 2015 - 11:10

இந்தப் படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது நன்றி குமார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை Empty Re: பிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum