Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சுby rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59
» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57
» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56
» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54
வியாபாரம் மானேஜ்மெண்ட்
Page 1 of 1
வியாபாரம் மானேஜ்மெண்ட்
வியாபாரம் மானேஜ்மெண்ட்
வியாபாரம் என்பது சமூகசேவையாகச் செய்யவேண்டிய ஒருகாரியம். கொடுப்பவருக்கும் சந்தோஷம் | வாங்குபவருக்கும் சந்தோஷம் என்பதாகவியாபாரம் அமையவேண்டும்.
எல்லாத்தரப்பு மக்களுக்கும் சேவைசெய்யும் வாய்ப்பு, வியாபாரப் பெருமக்களுக்கு மாத்திரம்தான் உண்டு. மற்றவர்களிடமெல்லாம் பிரிந்து பிரிந்து இருக்கும். எப்படி ஒரு வழக்கறிஞர் இருக்கிறாரோ, ஒரு மருத்துவர் இருக்கிறாரோ, ஒருநிர்வாகி இருக்கிறாரோ... அதேபோல்தான் வியாபாரிகள். அவர்களுக்கென்று ஒருதர்மம்உண்டு. அறம் சார்ந்து இருக்க வேண்டியவர்கள் வியாபாரிகள்.
எப்படிவந்தது?
உலகின் முதல் வியாபாரம் வேதத்தில் வருகிறது. ஒரு யாகம் செய்தார்கள். அதற்கு ‘சோமலதே’ என்றபொருள் தேவைப்பட்டது. அது ஒரு கொடி. அதைப்பிழிந்து சாறுஎடுத்து ஹோமத்தில் விடவேண்டும். இந்தசோமல தேயைக் காசுகொடுத்து வாங்கமுடியாது. அப்போது தான் காசெல்லாம் கிடையாதே... அதற்காக ஒரு வயது நிரம்பிய சிவந்த நிறமும் மஞ்சள் கண்களும் உடைய ஒரு பசுங்கன்றைக் கொடுத்து சோமலதேயை வாங்கச் சொன்னார்கள். யாகத்துக்குப் பயன்படும் சோமலதேயை அவன் கொடுக்கிறான். அதற்கு பதிலாக அவனுக்குப் பயன்படும் பசுங்கன்றை இவர்கள் கொடுக்கிறார்கள் என்பதுதான் இதன் தாத்பர்யம். இரண்டு தரப்பினரும் சந்தோஷப்படுகிறார்கள்.
இதில் வியாபாரம் என்பது எப்படி இருக்கவேண்டும் என்கிறதத்துவம் இருக்கிறது. ‘நான் கொடுத்தபொருள் அவனுக்கு முழுதாகப்பயன் படவேண்டும். அவன் கொடுத்த பொருள் எனக்கு முழுமையாகப் பயன்படவேண்டும். இரண்டில் ஒன்று குறைந்தாலும் அது வியாபாரமாகாது.
பொருளுக்குப் பொருள்
முன்காலத்தில் பண்டமாற்று என்றமுறை நடைமுறையில் இருந்தது. ஒரு பொருளுக்கு பதிலாக இன்னொரு பொருளைக் கொடுத்தார்கள். அந்தப்பொருள் இவன் உண்டாக்கியதில்லை. இயற்கையாக உருவானது. அதில்கெடுதல்இல்லை. எல்லோரும் அனுபவிக்கலாம்.

anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Re: வியாபாரம் மானேஜ்மெண்ட்
ரூபாய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கூடக் கிராமப்புறங்களில் பண்டமாற்று தொடர்ந்தது. அறுவடை செய்பவருக்கு நெல்லே கூலி. பணம் கொடுப்பதில்லை. தேங்காய் பறிப்பவருக்குத் தேங்காயே கூலி.
கிராமத்தில் ஒருவீட்டில் ஒரு பொருள் இருந்தால், அதைக் கொடுத்து, தன்னிடம் இல்லாத பொருளைப் பெற்றுக் கொள்வார்கள். தெருவில் எதையாவது விற்று வருபவரிடமும் வீட்டிலுள்ள தானியத்தைக் கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். வியாபாரம் என்று தனியாக வந்த பிறகு, இதை இதற்கு உண்டான அறத்தோடு செய்ய ஒரு குறிப்பிட்ட சாராரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்கள்.
அந்தப் பிரிவினரை வைசியர்கள் என்று பெயர் சொல்வது வழக்கம். அவர்கள் படித்திருக்கவேண்டும். எல்லா ஜனங்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்ற சேவை நோக்கம் அவர்களுக்கு இருக்கவேண்டும். தன்னலம் குறைவாக இருக்கவேண்டும்.
ஒரு நாள் சாய்ந்தது, ஒரு நாள் உயர்ந்தது என்றதத் தளிப்பில்லாமல் இருக்க வேண்டுமானால், தர்மத்தோடு வியாபாரம் செய்யவேண்டும். ஆகாயத்தைப் போல பரந்து விரிந்திருக்கிறது
வியாபாரம்.
ஓரளவுபொய் இருக்கலாம்!
ஆன்மிக நோக்கம் இல்லாமல் வெறும் பணம் மட்டுமே நோக்கமாக இருக்கும் போது என்ன குறைவருகிறது என்றால், ஒருவனுடைய தேவை ஒருவனின் ஆசை இவற்றை மட்டுமே மூலமாக வைத்து, ஒருவனுக் குமட்டுமே அதிக லாபத்தையும் சந்தோஷத்தையும் தருகிறமாதிரி ஆகிவிட்டது இன்றைய வியாபாரம். ஒருவருடைய பலவீனத்தைப் பயன் படுத்துவதால் இரண்டு தரப்பாரும் லாபம் அடைதல் என்பது இல்லாமல் போகிறது.

சென்னையில் மழை பெய்தால் ஆட்டோ கட்டணம் அதிகமாகும். வேலை நிறுத்தம் வந்தால் காய்கறி விலைகூடும். வேலை நிறுத்தம் வாபஸ் ஆனால், காய்கறி விலை அதைவிட அதிகமாகும். அதே ஆட்டோதான், அதே ஆள் தான், அதே தூரம் தான். ஆனால், கட்டணம் மட்டும் கூடுதல். இதில் ஒரு தரப்புக்குத்தான் சௌகரியம். இன்னொரு தரப்புக்கு நஷ்டம். இந்தத் தவறு பழைய வியாபாரத்தில் கிடையாது.
ஒரு பொருளைக் கொடுக்கிறார்கள். வாங்கியதும் கெட்டுப் போய்விடுகிறது. ‘ஒரு முறை விற்ற பொருள் வாபஸ் வாங்கப்பட மாட்டாது’ என்று ரசீதிலேயே எழுதிக் கொடுத்து விடுகிறார்கள். இது வியாபாரமாகாது.
வெறும் பார்வைக்குத் திருப்திதருவதை மட்டுமே இன்றைக்கு முக்கியமாக நினைக்கிறார்கள். தக்காளிப்பழத்தின் மேல் எண்ணெய் தடவி வைத்து, புதிது போலக் காட்டுகிறார்கள். வீட்டுக்கு வந்து பார்த்தால் அழுகல் சமாசாரமாக இருக்கிறது. இதில் பொய் என்கிற தவறும் சேர்ந்து கொள்கிறது. பழைய வியாபாரத்தில் இந்த அளவு பொய் இருக்காது. வியாபாரம் என்றால், ஓரளவு பொய் இருக்கலாம் என்பதை (ஸத்யாந்ருதேசவாணிஜ்யம்)என்றதொடர்குறிக்கிறது.
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Re: வியாபாரம் மானேஜ்மெண்ட்
பழைய வியாபாரத்தில் கடனே கிடையாது. இப்போது எல்லாமே கடனில் ஓடுகிறது. வியாபாரத்தில் துக்கமே வரக்கூடாது என்று நினைத்தவர்கள் கடனே இல்லாமல் செய்தார்கள்.
‘எந்தப் பொருள் வாங்குபவனுக்கு நிலையான உபயோகத்தைத் தருகிறதோ, அதை மட்டும்தான் அவனுக்கு விலைக்குக் கொடுக்கலாம்’ என்கிறார் சாணக்யர். ‘நீ சும்மா கொடுத்தால் கூட அந்தப் பொருள் அவன் பயன் படுத்துவது மாதிரி இருக்கவேண்டும்’ என்கிறது தர்மசாஸ்திரம்.
கொடை என்பது கூட ஒரு வியாபாரம் தான். கொடை வழங்குவதால் நாம் விரும்பியோ விரும்பாமலோ நமக்கு ஒரு புகழ் கிடைக்கிறது. நமக்குப் புகழைத் தரக்கூடிய கொடையில், வாங்குபவனுக்கு பயனில்லை என்றால் அவன் துக்கப்படுவான். எனவே, பயனுள்ளதைத்தான் தரவேண்டும். மாடு கொடுத்தால் நாளை சாகப்போகிற மாட்டைக் கொடுக்கக்கூடாது. அரிசி கொடுத்தால் ரேஷன் அரிசி கொடுக்கக் கூடாது. வேஷ்டி கொடுத்தால் தேர்தல் நேரத்தில் தரும் வேஷ்டியைக் கொடுக்கக் கூடாது. இப்படி ஒருசட்ட திட்டத்தை தர்மசாஸ்திரம் வகுத்திருக்கிறது.
‘எந்தப் பொருள் வாங்குபவனுக்கு நிலையான உபயோகத்தைத் தருகிறதோ, அதை மட்டும்தான் அவனுக்கு விலைக்குக் கொடுக்கலாம்’ என்கிறார் சாணக்யர். ‘நீ சும்மா கொடுத்தால் கூட அந்தப் பொருள் அவன் பயன் படுத்துவது மாதிரி இருக்கவேண்டும்’ என்கிறது தர்மசாஸ்திரம்.
கொடை என்பது கூட ஒரு வியாபாரம் தான். கொடை வழங்குவதால் நாம் விரும்பியோ விரும்பாமலோ நமக்கு ஒரு புகழ் கிடைக்கிறது. நமக்குப் புகழைத் தரக்கூடிய கொடையில், வாங்குபவனுக்கு பயனில்லை என்றால் அவன் துக்கப்படுவான். எனவே, பயனுள்ளதைத்தான் தரவேண்டும். மாடு கொடுத்தால் நாளை சாகப்போகிற மாட்டைக் கொடுக்கக்கூடாது. அரிசி கொடுத்தால் ரேஷன் அரிசி கொடுக்கக் கூடாது. வேஷ்டி கொடுத்தால் தேர்தல் நேரத்தில் தரும் வேஷ்டியைக் கொடுக்கக் கூடாது. இப்படி ஒருசட்ட திட்டத்தை தர்மசாஸ்திரம் வகுத்திருக்கிறது.
anuradha- புதுமுகம்
- பதிவுகள்:- : 244
மதிப்பீடுகள் : 10
Re: வியாபாரம் மானேஜ்மெண்ட்
எண்ணம் முக்கியம்!
வியாபாரம் செய்பவர்களுக்கு மூன்று முக்கியமான குறிக்கோள்கள் இருக்கவேண்டும். அவை உழைப்பு, நேர்மை, திறமை. இம்மூன்றையும் மூலதனமாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறியவர்கள் பலர்!
நீங்கள் விரும்பும் பொருளை அல்லது சாதனையைத் தெள்ளத் தெளிவாக மனதில் ஒரு படமாக வரைந்து கொண்டு அதைச் செயலாக்க உங்கள் முழுச் சக்தியையும் பயன்படுத்துவீர்களேயானால செயற்கரிய செயலை செம்மையாகச் செய்துவிடலாம் என்கிறார் சார்லஸ் ஆலன் என்பவர். எண்ணத்தின் வேகம், கைகளில் தவழ்ந்ததால்தான் தஞ்சை பெரிய கோயிலை ராஜ ராஜ சோழனால் வியக்கத் தகுந்த வகையில் உருவாக்க முடிந்தது. ராஜராஜசோழனின் புகழும், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலின் பிரமாண்டமும் இன்று உலகில் பலராலும் போற்றப்படுவதற்குக் காரணம் அவனின் செயல் திட்டம் தான்.
தொழில் வெற்றிக்கு முன்னேற்றத்துக்கு வளர்ச்சிக்கு மிகமுக்கியமானது எண்ணம். இதற்கு காந்த சக்தி உண்டு. நம்முடைய எண்ணமானது நமக்கு உகந்த மனிதர்கள், பொருள்கள், சூழ்நிலை ஆகியவற்றைத் தன்னிடம் இழுத்துக் கொள்ளும் சக்தியுடையது. ஒருவரது மனத்தில் தோன்றும் எண்ணங்கள் அதே இனத்தைச் சேர்ந்த மனிதர், நண்பர் இவர்களின் எண்ணத்தைத் தேடிச் செல்கின்றன. கெட்ட எண்ணம் நல்ல எண்ணத்துடனும், நல்ல எண்ணம் கெட்ட எண்ணத்துடனும் சேராது. ஒரு மனிதனின் உள்ளத்திலிருந்து வெளிப்படும் எண்ண அலைகள், உலகின் நாலா பக்கங்களிலும் பரவி தனக்கு ஏற்ற எண்ணங்களை எண்ணிக் கொண்டிருப்பவர்களைச் சென்று சேர்கின்றன. நாம் எண்ணுவது போன்று எண்ணுபவர்களின் எண்ணங்கள் நம்மைவந்து அடைகின்றன

ரோல்ஸ் ராய்ஸ்
ரோல்ஸ், ராய்ஸ்என்பவர்களின் வாழ்க்கை இதற்கு சரியான உதாரணமாக அமையும். ரோல்ஸ்என்பவர் கார்வியாபாரி. ராய்ஸ்என்பவர் இரும்பு வியாபாரி. இருவரது இருப்பிடமும் ஒன்றுக்கொன்று பல கிலோ மீட்டர் தூரம். உயர்தரமான காரை உருவாக்கவேண்டும்! என்று நீண்ட நாட்களாகவே ரோல்ஸ் எண்ணிக் கொண்டிருந்தார். ஆடம்பரமான சொகுசான கார் ஒன்றைத் தயாரிக்கவேண்டும் என்று ராய்ஸ் எண்ணினார். இதன் காரணமாக பலவிதமான முயற்சிகள் செய்து இருவரும் தனித்தனியே பல இடங்களுக்கும் சென்று வந்தார்கள். ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் இருவரும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ரோல்ஸிடம் தன் கருத்தை வெளியிட்டார் ராய்ஸ். இதைக் கேட்டதும் ரோல்ஸ§க்கு அளவு கடந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இதைத்தானே அவர் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார்!
நாம் தயாரிக்கும் கார், உலகத்திலேயே மிகுந்தசொகுசானதாக இருக்க வேண்டும். அதில் பயணம் செய்தால் களைப்பு ஏற்படக்கூடாது. அது இன்பமான அனுபவமாக இருக்கவேண்டும் என்று ராய்ஸ் விளக்கினார். செலவைப் பற்றிக் கவலை இல்லை. உலகிலேயே முதன்மையான கார் நம்முடையது தான் என்று பெயர் வாங்கவேண்டும்! என்றார் ரோல்ஸ்.
நம் இருவருடைய எண்ணமும் ஒன்றாக இருப்பது போலவே நாம் உருவாக்கும் காருக்கு நம்முடைய இருவரின் பெயரையும் வைத்து விடவேண்டியது தான் என்றார் ராய்ஸ். இருவரும் தீவிரமாகக்காரியத்தில் இறங்கி உழைத்து விலை அதிகமான, உயர்தரமான, சொகுசான காரைத் தயாரித்தார்கள். அதுதான் உலகப்புகழ் பெற்ற ரோல்ஸ்ராய்ஸ் கார். எனவே, வெற்றிக்குக் காரணம் அவர்களது உயர்ந்த எண்ணமும், உழைப்பும், முயற்சியுமே!

செல்வம் குவிய...
வியாபாரம் செழித்தால் தான் செல்வம் குவியும். செல்வம் குவிந்தால் தான் எண்ணியவற்றைச் செய்ய இயலும். செல்வம் என்ற வார்த்தைக்கு பல பொருள்கள் உண்டு. ஆனால், பணம் என்கிற பொருளில் பயன் படுத்தப்படும் செல்வத்துக்குத் தலைவன் குபேரன்.
லட்சுமி, குபேரன் ஆகிய இருவருமே செல்வத்துக்குரிய தெய்வ உருவங்களாகக் கருதப்படுகிறார்கள். எனினும் ரிக்வேதத்தில் குபேரன் மட்டுமே இப்படிக் கருதப்படுகிறார். சங்கநிதி, பதுமநிதி ஆகிய இரு தேவியருடன் குபேரன் அமர்ந்திருக்கும் உருவத்தைச் சில கோயில்களில் பார்த்திருப்போம்.

முனைப்பு முக்கியம்!
வியாபாரத்தில் ஈடுபடத் தீர்மானித்த பிறகு ‘அதில் ஆபத்துகள் இருக்குமோ? முதலீட்டையே இழந்து விடுவோமோ?’ என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. ‘துணிந்த பின் எண்ணுவதென்பது இழுக்கு’ என்கிறார் வள்ளுவர்.
‘கங்கையிலே குளிக்கையில் காவிரியில் மனது வைத்தால் அந்த சுகம் இது தருமோ? இந்த சுகம் அது பெறுமோ?’ என்கிறார் திரைப்பாடலொன்றில் கவிஞர்ஒருவர்.
இந்த இடத்தில் விவேகானந்தர்கூறிய சிலவாசகங்கள் நினைவுகூரத்தக்கவை. அது வியாபாரத்துக்கும் பொருந்தும்.
‘உன் லட்சியத்தில் பெரும் ஈடுபாடு உனக்கு க்கட்டாயம் வேண்டும். அமைதியான விடாமுயற்சியுடன் கூடிய நிலையான ஈடுபாடாக அது இருக்க வேண்டும். ஒரு சாதகப்பறவை இடி&மின்னல்களுக்கு இடையேயும் ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டேஇருக்கும். மேகத்திலிருந்து வரும் நீரைத் தவிர வேறு எதையும் அது குடிக்காது. அத்தகையஈடுபாடு உனக்குவேண்டும்.’
மேலே சொன்னது போன்ற ஒரு முனைப்புதான் வியாபாரத்தில் இருக்க வேண்டும்.

நாணய மானவரா?
தேர்ந்த மளிகைக் கடைக்காரர்களைப் பாருங்கள். அந்தக் கடைகளில் பணிபுரியும் சிறுவர்களைத் தொலைவில் இருக்கும் தங்கள் ஊரிலிருந்து அழைத்து வந்திருப்பார்கள். அப்போதுதான் அவர்கள் பொருந்திவேலை செய்வார்கள். அடிக்கடி விடுப்பு எடுத்துக் கொள்ளமாட்டார்கள்’ என்கிறநம்பிக்கை. அவர்கள் தங்குவதற்குக்கூடத் தங்கள்வீட்டின் ஒருபகுதியைக் கொடுத்துவிடுவார்கள். கருணை நோக்குடன் கலந்தவியாபாரநோக்கு!
அதேபோல் ஊழியர்களிடம் முதலில் பத்துரூபாயைக்கொடுத்து ஏதாவது வாங்கிவரச்சொல்வார்கள். அதைச் சரிவரச்செய்தால், பாக்கிகொடுக்கவேண்டிய ஐம்பதுரூபாயை வாடிக்கையாளர்வீட்டில் கொடுத்துவரச்சொல்வார்கள். இப்படியே போய்க்கடைசியில் பத்தாயிரம்ரூபாயைக் கொடுத்து வங்கியில்கட்டிவிட்டு வரச்சொல்வார்கள். சம்பந்தப்பட்ட ஊழியர்நாணயமானவர் இல்லையென்றால், ஆரம்பகட்டத்திலேயே பணத்தோடு மறைந்துவிடுவார். குறைந்தநஷ்டத்தோடு போய்விடும். இதுபோன்ற சாமர்த்தியங்கள் வியாபாரத்தில்தேவை.
பெரிய வியாபார நிறுவனங்களில், தங்களிடம் முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள்பற்றிய உண்மைநிலை அறியஇப்போதெல்லாம் துப்பறியும் நிறுவனங்களை அணுகுகிறார்கள். இதனால் ஊழியர்கள்குறித்த உண்மைகள் தெரிவதால், நாளடைவில் அவர்களில் சிலதுரோகிகளால் நிறுவனத்துக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நஷ்டம் தவிர்க்கப்படுகிறது. உண்மையாக வேநிறுவனத்துக்கு விசுவாசம் கொண்டவர்கள் என்று அறிக்கைகிடைத்தால் அவர்களுக்குப் பதவிஉயர்வும் அதிகஊதியமும் கொடுத்துத் தக்கவைத்துக் கொள்ளமுடியும்.

போட்டிகள் உஷார்!
தன் வலிமை, மாற்றான் வலிமை இரண்டையும் எடைபோட்டுப்பார்த்துவிட்டே காரியத்தில் இறங்கவேண்டும்’ என்கிறது திருக்குறள்.
மகாபாரதப்போரில் கண்ணன் தன் பக்கம் இருக்கவேண்டும் என்பதற்காக துரியோதனன், அர்ஜுனன் இருவரும் அவர்வீட்டுக்குச் செல்கிறார்கள். அப்போதுகண்ணன் உறங்கிக்கொண்டிருக்கிறார் (மாயத்துயில்!). தன்னை உயர்வாகக்கருதிக்கொள்ளும் துரியோதனன், கண்ணனின் தலைப்பக்கம் நின்று கொண்டான். அர்ஜுனன் கண்ணனின் கால்புறமாக நின்றுகொள்கிறான். அர்ஜுனனின் பணிவை மட்டுமல்ல, அவன் சாமர்த்தியத்தையும் காட்டுகிறது இந்தச்செயல். ஒருவர் கண்விழித்ததும் தன்தலைக்கு மேற்புறமாக நிற்பவரைப் பார்க்க மாட்டார். கால் பக்கமாக நிற்பவரின் மீது தான் விழித்தவரின் பார்வைபடும்.
போட்டியாளனை எடைபோடத் தவறியதுதான் துரியோதனன் செய்தமுட்டாள்தனம். ‘என்னுடைய படைவேண்டுமா அல்லது நான்வேண்டுமா?’ என்று கண்ணன் கேட்டபோது அர்ஜுனன் அவசரமாக ‘நீமட்டும்போதும் கண்ணா!’ என்கிறான். அர்ஜுனன் முட்டாள் தனமாகத் தேர்வு செய்கிறான்என்று எண்ணினான் துரியோதனன். மாற்றான் வலிமையைக் குறைத்துமதிப்பிட்டதால் துரியோதனன் சறுக்கினான்.

கூட்டணியில் எச்சரிக்கை!
வியாபாரத்தில் வேறு நபர்களைக் கூட்டாளிகளாகச்சேர்த்துக் கொள்ளும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
ஒருநரி, காக்கையிடம் சென்று, நாம் இருவரும் சேர்ந்து விவசாயம்செய்யலாமா? என்றுகேட்டது.
காகம் ஒப்புக்கொள்ள... தந்திரக்கார நரி, ‘பூமிக்கு மேலே விளைவதுஎனக்கு.
பூமிக்குக்கீழேவிளைவது உனக்கு’ என்றது. காகமும் ஒப்புக்கொண்டது.
நிலத்தில் சோளத்தைப்பயிரிட்டது நரி. இரண்டும் சேர்ந்து விவசாயம்செய்ய, சோளம்நன்குசெழித்துவிளைந்தது. ஒப்பந்தப்படி சோளக்கதிர்களையெல்லாம் எடுத்துக்கொண்டது நரி. பூமிக்குக் கீழேயிருந்ததேவையில்லாத பகுதிகள்தான் காகத்துக்குக் கிடைத்தன. சிலமாதங்கள்கடந்தன. மீண்டும் காக்கையிடம் வந்த நரி, என்னகாக்கையாரே... இருவரும் சேர்ந்து அடுத்த ரவுண்டு விவசாயம்செய்யலாமா?’ என்றது.
போன முறை நரி செய்தஏமாற்றுவேலையை உணர்ந்து கொண்டகாக்கை இந்தமுறை மிகவும் எச்சரிக்கையுடன் ‘சேர்ந்து செய்யலாம்தான். ஆனால், பூமிக்கு அடியில் விளைவது தான் உனக்கு. மேலேவிளைவது எனக்குதான்’’ என்றது.
நரியும் இதற்கு ஒப்புக்கொண்டது. ‘போன முறை என்னைஏமாற்றியதற்காக வருந்தித்தான்நரியார் இந்தமுறைஎனக்குவிட்டுக் கொடுக்க முன்வந்திருக்கிறார்’ என்றுஎண்ணி மகிழ்ந்தது காக்கை!
ஆனால், நரியின் திட்டமோவேறுரகம்! வேர்க்கடலையைப் பயிரிட்டது. சிலமாதங்களுக்குப்பிறகு வேர்க்கடலை அறுவடைக்குத் தயாரானது. பூமிக்குக்கீழேவிளைந்திருந்த வேர்க்கடலைகளையெல்லாம் நரிதோண்டியெடுத்துக்கொண்டது. இந்த முறையும்காக்கைக்கு (பூமிக்குமேலிருந்த) வேண்டாதபகுதிகள்தான் கிடைத்தன.
திறமைசாலி என்பதற்காக மட்டும்வியாபாரத்தில் யாருடனும் கூட்டுச்சேரக்கூடாது. நாணயமானவராக இருக்கிறாரா என்பதையும் விசாரித்து உறுதிசெய்து கொள்வது அவசியம்.

திருப்திப் படுத்துங்கள்!
இப்போது ஒருவர் பழவியாபாரம் செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். நூறுபழம் வைத்திருக்கிறார் என்றால் எழுபது விற்றாலே நூறுபழங்களுக்கான தொகை வந்துவிடும்படி விலை நாம் எப்படி வேண்டுமானாலும் பழத்தைப்பரிசோதித்து வாங்கிக்கலாம். மீதமிருக்கும் பழங்களை வந்தவிலைக்கு விற்று விடுவார். இதனால் அவருக்கும் சந்தோஷம் நல்லபொருளை வாங்கியவருக்கும் சந்தோஷம் சுமாரான பழங்களைக் குறைந்த விலையில் வாங்கியவருக்கும் சந்தோஷம். இப்படி அனைவரையும் அரவணைத்து வியாபாரம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
குறைந்த லாபமாக இருந்தாலும் நிலையான வியாபாரமாக இருக்க ஒரு வழியைக் கடைப்பிடிப்பார்கள். ஒரு ரூபாய் லாபம் என்றால் 20 காசு தர்மம் செய்யவேண்டும் என்பதே அது. தர்மசிந்தனை உள்ள வியாபாரம் வளரும்.

பலன் தரும் பசுவின் வரம்!
வ்ருத்ரன் என்று ஓர் அசுரன் இருந்தான். ஆகாயத்துக்கும் பூமிக்குமாக வளர்ந்து நிற்கும் அவன் அக்னியையும் சந்திரனையும் தன் பல்லிடுக்கில் செருகிக்கொண்டான். அசுரன் தன்வாயை மூடிக்கொண்டபோது அவனை வதம் செய்ய தேவேந்திரன் வந்தான். அப்போது அசுரன் வாய்க்குள்ளிருந்த அக்னியும் சந்திரனும் இந்திரா நாங்கள் உள்ளே சிக்கிக் கொண்டிருக்கிறோம். நீ இவனை அழித்தால் நாங்களும் அழிந்துபோவோம் என கத்தினார்கள். என்ன செய்வது என்று குழம்பிய இந்திரன் கடைசியாக அசுரன் மேல் குளிர்ஜுரத்தை ஏவிவிட்டான். குளிர்ஜுரத்துக்கு ஒரு குணம் உண்டு. கொட்டாவி வரும். அவன் வாயைத் திறந்து நீளமான கொட்டாவி ஒன்றை வெளியிட்டபோது அக்னியும் சந்திரனும் வெளியே குதித்து விட்டார்கள். ஆனால் அவர்களது அம்சம் அசுரனின் வாய்க்குள்ளேயே தங்கிவிட்டது. தங்களுக்கே உரித்தான திறமை இல்லாத பலவீனர்களாக இருந்தார்கள் இருவரும்.சிக்கிக் கொண்டிருக்கும் அம்சங்களை மீட்டுக் கொண்டு வரவேண்டுமானால் எல்லாருக்கும் நண்பனான ஒரு நபர் வேண்டும். அப்படி எல்லாருக்கும் நண்பனாக இருப்பது பசு ஒன்றுதான். உடனே பசுவை அழைத்து விஷயத்தைச் சொன்னார்கள். இதைச் செய்தால் எனக்கு கிடைக்கும் என்றது பசு.எது வேண்டுமோ கேள் என்றான் இந்திரன்.
ஏதத்வா அக்னேஸ்தேஜோயக்ருதம் ஸோமஸ்யயத்பய: நான் கொண்டு வந்தால் அக்னி சந்திரன் இருவரும் என் உடலில் நிரந்தரமாக வாசம் செய்யவேண்டும் என்று கேட்டது பசு. கேட்டவரம் கிடைத்தது. பசுவின் பாலில் சந்திரனும் (தேஜஸ்) நெய்யில் அக்னியும் (திறமை) வந்த இதுதான்.
இப்படி ஒரு காரியம் செய்து கொடுக்க பசு கேட்ட வரம் இன்று பாலையும் நெய்யையும் உண்ணும் சகல ஜனங்களுக்கும் பலனளிக்கிறதே! லோகம் க்ஷமமாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிற கண்ணோட்டம் வியாபாரத்துக்கு மிகவும் முக்கியம்.

வசதிகள் தாருங்கள்!
வியாபார அலுவலில் நம்மிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிப்படைவசதிகளைச்சற்று அதிகமாகவே செய்து தருவது நல்லது. முக்கியமாக அளித்துக் கொண்டிருக்கும் வசதிகளைப்பறிப்பது தவறு. மனைவியை இழந்த கலெக்டர் ஒருவர் வீட்டில் ஒரு சமையல்காரரைப் பணிக்கு அமர்த்தி இருந்தார். பல வருடங்கள் கடந்தன. கலெக்டர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார்.இனிமேல் நமக்குவேலை கிடையாது. வழக்கமான சம்பளம் வராது. எனவே சாப்பாட்டுப்பதார்த்தங்களைக் குறைத்துக் கொள்வோம் இப்படியோசித்த கலெக்டர் அதை சமையல்காரரிடம் கூறினார்.
தினமும் ரசமும் சுட்ட அப்பளமும் போதுமானவை. காய்கறிக்கூட்டு பச்சடி அப்பளமெல்லாம் இனிவேண்டாம் என்றார். சமையல்காரரும் ஒப்புக்கொண்டார். எளிமையான சமையலைச் சிலவாரங்கள்சாப்பிட்டுப் பழகினார் ஓய்வுபெற்ற கலெக்டர்.
ஒரு நாள் சமையல்காரர் சமையலறையிலேயே சாப்பிடத் தொடங்கியிருந்தார். அப்போது தண்ணீர் குடிப்பதற்காக உள்ளே சென்ற கலெக்டருக்குப் பெரும் அதிர்ச்சி! பொரியல் கூட்டு பச்சடி அப்பளம் என்று பலவித பதார்த்தங்களுடன் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் சமையல்காரர்.
என்னையா இது நானே ரசமும் சுட்ட அப்பளமும் போதுமென்று சாப்பிடுகிறேன். உமக்கெதற்கு இவ்வளவு வகைகள் அதற்கு அந்த சமையல்காரர் கொஞ்சமும் அசராமல் நீங்கள் ஓய்வு பெற்றுவிட்டீர்கள். எனவே ரசமும்சுட்ட அப்பளமும் போதும். ஆனால் நான் இன்னும் வேலையில் இருக்கிறேனே! என்றார்.வியாபாரத்தில் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஊழியரின் சிறு சிறு வசதிகளை நிறுத்தி விடக்கூடாது. உங்களுக்கு மிகவும் சாதாரணமாக நிறுத்திவிடலாம் என்று தோன்றுகிற வசதி ஊழியர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கலாம். இதை எப்போதும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நல்ல வியாபாரி என்பவர்..
திருப்புல்வயல் (குமரமலை) முருகன் மீது குரு பாததாசன் என்னும் முத்து மீனாட்சிக்கவிராயர் என்பவர் குமரேசசதகம் என்ற நூலை நூறுபாடல்களில் இயற்றினார். அதில் வரும்பாடல் ஒன்றில்வியாபாரம் செய்பவர்களின் நெறிமுறைகளைச் சொல்கிறார்.
கொள்முதல் விலையைக கூறி அதில் சிறிது லாபம் சேர்த்து வரும் வகையில் நயமாக வியாபாரம் செய்வார் தாங்கள் போட்டுள்ள முதலுக்கு மோசம் வராமல் செலவு செய்வார் பொய் ஏமாற்றுதல் முதலான குணம் உள்ளவர்கள் பொன் நகையை ஈடாக வைத்து அடகுச்சீட்டு எழுதிக்கொடுத்தாலும் கடன் கொடுக்கமாட்டார். ஆனால் நாணயம் உள்ளவர்கள் சொல்லிவிட்டால் அதற்கு மதிப்புதந்து எல்லாவற்றையும் கொடுப்பார். பார்த்து எழுதுகிறபற்று வரவு கணக்கிலும் அணு அளவில் கூட தவறு செய்யமாட்டார். வீணான வழிகளில் காசைச்செலவு செய்யமாட்டார். பணத்தை நல்ல வழியில் செலவிடுவார். நாட்டிலே பெருவணிகம் செய்யும் வணிகருக்கு இவை முக்கிய நெறிகளாம்.

ஒரே ரூபாய் தான்!
சபாபதி ஒருவர்த்தகன். அவனுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவன் பெயர் சந்திரன். இன்னொருவன் பெயர் இந்திரன். சபாபதிக்கு, தனக்குப் பிறகு வியாபாரத்தைநடத்தும் பொறுப்பை எந்தமகனிடம்கொடுப்பதுஎன்பது பற்றி ஒரே கவலை. ஒருநாள் தன் இருமகன்களையும் அழைத்து ஒவ்வொருவரிடமும் ஒருரூபாய் கொடுத்து இந்த வீடு முழுவதும் நிரம்பும்படி ஏதாவது ஒரு பொருளை வாங்கிக்கொண்டு வருமாறு சொன்னார்.
மூத்தமகன் சந்திரன் உடனே உற்சாகத்துடன் கடைத்தெருவுக்கு ஓடினான். அங்கு எது மலிவாகவும் ஏராளமாகவும் கிடைக்கும் என்று பார்த்தான். வைக்கோல்தான் கிடைத்தது. வாங்கிக்கொண்டுவந்தான். ஆனால், அதுவோ வீட்டின் ஒருபகுதியைக்கூட நிரப்பவில்லை.
இளையவன் இந்திரன் அவன் அண்ணனைப்போல் உடனேகடைக்குஓடவில்லை. யோசித்தான். தந்தையின் செயலில் ஏதோ உட்கருத்து இருப்பதாகத் தெரிந்தது.
இதை மிக புத்திசாலித்தனமாகத்தான் நிறைவேற்றவேண்டுமென்று தீர்மானித்தான். கடைக்குச் சென்று சிலமெழுகுவத்திகளை வாங்கிவந்தான். இரவுவந்தது. ஒவ்வொரு அறையிலும் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்தான். வீடு முழுவதும் வெளிச்சம்பரவியது.
தந்தைக்கு ஒரே மகிழ்ச்சி. உனக்குத்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது. எனது வியாபாரத்தைத் தொடர்ந்துநடத்த உனக்குத்தான் தகுதி உள்ளது! என்றார்.
தேவையை உணர்ந்து செயல்படுவதே வாணிபலட்சணம் என்பதே இதன்பொருள்.

சிறந்த வியாபாரத்துக்கு...
மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரான ஜம்னாலால் பஜாஜ் சிறந்த வியாபாரத்துக்குக் கூறும்யோசனைகள்:
1. வெற்றியைப்பற்றியே சிந்தியுங்கள்; வெற்றியைப்பற்றியே பேசுங்கள்; வெற்றிபெறுவீர்கள்.
2. அதிக லாபம் பெறலாம் என்று ஆராயாமல் எதிலும் பணமுதலீடு செய்யாதீர்கள்.
3. படிக்காமல் எந்த பேப்பரிலும் கையெழுத்திடாதீர்கள்.
4. வெளிப்படையாகப் பேசுவதற்கு வெட்கப்படவேண்டாம்.
5. வெற்றியை விரும்புபவர்கள், தான் சொல்வது உண்மை என்று மற்றவர்களை நம்பச்செய்யும் திறமைஉடையவர்களாக இருக்கவேண்டும்.
6. உங்கள் வியாபாரத்தில் உண்மையாக இருங்கள். உங்கள் தொழில் நடவடிக்கைகளை எவ்விதக்களங்கமுமில்லாமல் தூய்மையாக வைத்திருங்கள்.
7. ஒவ்வொரு பைசாவுக்கும் _ அது வரவோ செலவோ _ சரியானகணக்கு வைத்திருங்கள்.
8. எதையும் நேரம் தவறாமல் செய்யுங்கள். வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.
9. எப்போதும் உண்மையாக இருங்கள்.
10. எதைச் செய்யவிரும்பினாலும் அதை உடனே செய்யுங்கள்.
11. உங்கள் உடல்வலிமையிலும் ஆன்மபலத்திலும் நம்பிக்கை வையுங்கள்.
12. கடும் உழைப்புக்கு அஞ்சவே அஞ்சாதீர்கள்.

அன்றைய வங்கிகள்!
அந்தக் காலத்தில் சந்யாசம் என்று ஒன்று உண்டு. ‘நான் காசிக்குப் போகிறேன். இந்த லட்சரூபாயை வைத்திரு’ என்று பிறரிடம் ஒப்படைத்துவிட்டுப் போவார். அவர் போயிருக்கிற காலத்தில் பணத்தை வாங்கியவர், அந்தப் பணத்தை உபயோகிக்கவோ பெருக்கவோ கூடாது என்பது நியதி. அப்படித்திரும்ப வந்துபணத்தைப் பெற்றுக்கொள்பவர், இவ்வளவு நாள் பணத்தைக் காப்பாற்றிவைத்திருந்தவருக்கு வெகுமதியாக ஒரு தொகையைக்கொடுப்பார். இவ்வளவுதான் கொடுக்கவேண்டும் என்கிறவரையறையெல்லாம் கிடையாது.
ஏறக்குறைய, இந்த சந்யாசத்தைத்தான் இன்றைய வங்கிகள் செய்கின்றன. ஆனால், சிலவித்தியாசங்கள்உண்டு. நாம் சந்யாசமாகத்தரும் பணத்தை வங்கிகள் பயன்படுத்துகின்றன. அவற்றை வெளியில் வட்டிக்குக் கொடுத்து பணத்தைப் பெருக்குகின்றன. நாம்கேட்கிற அவசரத்தில் ஒரு வேளை பணம் திரும்பக்கிடைக்காமலும் போகலாம். காரணம் அவர்களுக்கு வசதியான நாளிலும் நேரத்திலும் தான் தருவோம் என்று சொல்லும் வங்கிகளும் இருக்கின்றன.

Similar topics
» வியாபாரம்.
» வியாபாரம் – கவிதை
» பலூன் வியாபாரம்
» கபாலி பட வியாபாரம் சூடுபிடித்தது!
» புரட்டாசிக்கு சனிக்கு ஒரு வியாபாரம்
» வியாபாரம் – கவிதை
» பலூன் வியாபாரம்
» கபாலி பட வியாபாரம் சூடுபிடித்தது!
» புரட்டாசிக்கு சனிக்கு ஒரு வியாபாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|