சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Khan11

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
Nisha
கவிப்புயல் இனியவன்
8 posters

Page 13 of 27 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 20 ... 27  Next

Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Mon 26 Oct 2015 - 13:48

First topic message reminder :

நவாப் ராஜமாணிக்கம் அவர்களின் நாடகக் குழுவினர் தஞ்சைப் பகுதியில் ஒருமுறை முகாமிட்டிருந்தனர். ராமாயணம் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நவாப்பின் குமாரர் தேவிபாதன்தான் ராமர். நவாப் வீட்டினர் ஒரு கறுப்பு நாய் வளர்த்து வந்தனர். அது எப்போதும் அவர்களுடன்தான் இருக்கும்.

நாடகத்தில் ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடைபெறும் காட்சி. ராமர் போர்க் கோலத்தில் நின்று கொண்டிருக்கிறார். ராவணன் வரவேண்டிய தருணம். அச்சமயம் நவாப் வீட்டுக் கறுப்பு நாய் தேவிபாதன் அவர்களை நோக்கி வாலை ஆட்டிக்கொண்டே மேடைக்கு வந்துவிட்டது.

நிலைமையை உணர்ந்த ராமர் உடனே நாயைப் பார்த்து,”"அடே ராவணா, நீ நாயுருவில் வந்தாலும் விடப்போவதில்லை. நீ சுய உருவில் வா” எனக் கூற, மேடையில் விளக்கணைப்பவரும் சமயோஜிதமாக விளக்கை அணைத்துவிட்டார். உடனே நாயை உள்ளே அழைத்துக் கொண்டார்கள்.

இதன்பின் ராவணன், ராமனுக்கு எதிரே சென்று நிற்க விளக்குகள் மீண்டும் எரியத் தொடங்கின. ஒரே கரவொலி; அடங்க வெகுநேரம் ஆகியது.

+
சிரிக்காமல் இருக்க முடியாது-படித்ததில் பிடித்தவை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 16:30

கபாலியோட குடும்பத்துக்கு, தலைவர் என்ன குடுக்கிறாரா..?
-
‘உதை’வித் தொகை..!
-
———————————–
-
என்ன, ஆயிரம் ரூபாய் கேட்டு எஸ்.எம்.எஸ்.அனுப்பியிருக்கிறாய்?
-
நான்தான் சொன்னேனே, எனக்கு கடன் கேடகறதே பிடிக்காதுன்னு..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 16:33

வேற்றுக்கிரகத்தில் மனிதர்களை வைத்து எடுக்கப்பட்ட
புதுபடத்துக்கு எதிராகப் புகார் பண்ணியிருக்காங்களாமே..?
-
ஜாதக கட்டத்தில் இல்லாத ஒரு கிரகத்தை இருப்பதாக
சொல்லியிருப்பதை எதிர்த்து ஒரு ஜோசியர்தான் புகார்
பண்ணியிருக்கிறாராம்..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 16:34

ஏம்பா ராப்பிச்சை, கொஞ்ச நாளா ஆளைக் காணோமே..?
-
கும்பமேளாவுக்கு அலகாபாத் போயிருந்தேன் தாயி..!
-
————————————

நன்றி: குமுதம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 16:35

அந்த சாமியார் பத்திரிகை நிருபர் மேல கடும்கோபத்தில்
இருக்காரே..ஏன்?
-
மக்கள் ஆன்மீக உணரவை வளர்த்துக்கொள்ள வேண்டும்னு
அவர் சொன்னதை, ஆண்மை உணர்வை வளர்த்துக்கொள்ள
வேண்டும்னு போட்டுட்டட்டானாம்..!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 16:36

மன்னர் பைபாஸ் சாலையில் மட்டும் புறமுதிகிட்டு வரமாட்டாரா…ஏன்?
-
எல்லா ‘டோல்’கேட்டிலயும், பணம் கட்ட சொல்றாங்களாம்…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 16:37

எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேட்கிறே?
-
எங்க வீட்டுக்குப் பக்கத்திலே இந்திக்காரங்க குடி வந்திருக்காங்க…
அவங்க வீட்டு வம்பை கேட்டு தெரிஞ்சுக்கத்தான்…!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 16:39

ஹலோ! எனக்கு கும்கி படத்தில் இருந்து ‘சொய்ங்..சொய்ங்’
பாட்டு போடுங்க…!
-
பன்னாடை, பரதேசிப்பயலே, இது 108 ஆம்புலன்ஸூடா…!
-
——————————————
நன்றி: குமுதம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 16:40

கைதட்டல் இல்லேன்னா, நம்ம தலைவருக்கு பேச்சே வராது…!
-
அதுக்காக அவரே அப்பப்ப தட்டிக்கிறது நல்லாவா இருக்கு…!
-
>நா.கி.பிரசாத்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 16:42

தலைவர் பேசற இடமெல்லாம் கூட்டமா இருக்காமே, அப்படியா?
-
ஆமா, அவர் தி.நகர்லயும், மெரினா பிச்சுலேயும், மூர்மார்க்கெட்லேயும்
பேசினா கூட்டம் இல்லாம என்ன இருக்கும்…!
-
>தீ.அசோகன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 16:43

தலைவர் பேசற இடமெல்லாம் கூட்டமா இருக்காமே, அப்படியா?
-
ஆமா, அவர் தி.நகர்லயும், மெரினா பிச்சுலேயும், மூர்மார்க்கெட்லேயும்
பேசினா கூட்டம் இல்லாம என்ன இருக்கும்…!
-
>தீ.அசோகன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 16:43

நீங்க ஒண்டியா எல்லா வேலையும் பாரக்குறீங்களே…
ஒரு நர்ஸ் வச்சுக்க கூடாதா?
-
அதுக்கு என் மனைவி ஒத்துக்க மாட்டாங்க…!
-
ஏன் டாக்டர்?
-
ஏற்கனவே இங்கே நர்ஸா இருந்தவங்கதான் அவுங்க…!
-
>வி.ரேவதி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Thu 12 Nov 2015 - 16:44

இந்த போலீஸ் ஸ்டேஷன்லதான் எனக்கு ஆயுள் தண்டனை
கிடைச்சுது…!
-
கோர்ட்டுக்கு போகாமலேயா..?
-
இல்ல..இங்கதான் எனக்கு திருமணம் ஆச்சு…!
-
>ஜெயசந்திரன்
-
---------------------------------------
நன்றி: கல்கி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 12:54

ரயில் நிலையத்தில் ஒரு நாள்…
-------------

பொதுவாகவே, குடிகாரர்களைப் பற்றி நிறைய கதைகளும், ஜோக்குகளும் வந்துள்ளன.

அவற்றில் ஒன்றுதான் இது.

அதாவது ஒரு ரயில் நிலையத்தில் மதிய வேளையில் மூன்று குடிகாரர்கள் வந்து சேர்ந்தனர். ரயில் நிலையத்துக்கு ஒரு ரயில் வந்ததும், அவர்கள் மூவரும் எழுந்து, ரயில் பெட்டியின் நுழைவாயில் அருகே வருவதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிடும்.

இவ்வாறே ஒவ்வொரு ரயிலும் வரும் போது மூவரும் முயற்சித்து முயற்சித்து தோல்வி கண்டனர்.

இதனை ரயில்நிலைய காப்பாளர் கவனித்துக் கொண்டே இருந்தார்.

இரவு  நேரமாகிவிட்டது. அன்றைய கடைசி ரயில், நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. அப்போது, உடனடியாக ஓடிச் சென்ற ரயில் நிலைய காப்பாளர், ஒவ்வொரு நபராக ரயிலில் ஏற்ற முயற்சித்தார். இருவரை ஏற்றிவிட்டு, மூன்றாமவரை ரயிலில் ஏற்ற முயற்சிப்பதற்குள் ரயில் புறப்பட்டுச் சென்றுவிட்டது.

இதைப் பார்த்த மூன்றாமவர் ‘ஓ’ வென கதறி அழுதார். உடனடியாக அவரை சமாதானப்படுத்தும் விதத்தில், மன்னிக்கவும், என்னால் உங்களை ரயிலில் ஏற்ற முடியவில்லை. உங்கள் நண்பர்களை மட்டுமே ஏற்ற முடிந்தது என்று கூறினார் ரயில் நிலைய அதிகாரி.

அதற்கு பதிலளித்த மூன்றாமவர்… அவர்கள் என்னை வழியனுப்ப வந்தவர்கள். நான் தான் ரயிலில் பயணம் செய்ய வந்தேன் என்றாரே பார்க்கலாம்.

ரயில் நிலைய அதிகாரிக்கு தலையை சுற்றியது.


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 12:56

சொர்க்கத்தின் வாயிலிலும்
---------------

கணவன்சொர்கம்மனிதன்
சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த இளைஞன் ஜோசப் அங்கிருந்த இரண்டு வாசல்களைப் பார்த்தான். ஒன்றில் ஆண்கள் என்றும் மற்றொன்றில் பெண்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆண்கள் வாசல் வழியே ஜோசப் சென்றான். அப்போது மீண்டும் இரண்டு வாசல்கள் தென்பட்டன. ஒன்றில் மனைவியால் அடங்கி நடப்பவர்கள் என்றும் மற்றொன்றில் மனைவியை அடக்கி நடப்பவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது.

முதலாவது வாசலில் நீண்ட வரிசையில் ஆட்கள் காத்திருந்தனர். இரண்டாவது வரிசையில் ஒருவன் மட்டுமே நின்றிருந்தான்.

திருமணமே ஆகாத தான் எந்த வாசலில் செல்வதென்று முடிவெடுப்பதற்கு முன்பு, இரண்டாவது வாசலில் நிற்கும் அந்த மனிதனை விசாரித்து வரலாமென்று ஜோசப் நினைத்தான்.

அவனிடம் சென்று “எதற்காக இந்த வாசலில் நிற்கிறாய்?’ என்று கேட்டான்.

அதற்கு அந்த மனிதன் அளித்த பதிலைக் கேட்டு ஆச்சரியமடைந்தான் ஜோசப். அதாவது, “எனக்கொன்றும் தெரியாது. என்னுடைய மனைவிதான் இந்த வாசலில் நிற்கும்படி சொன்னாள்…’ என்றான் அவன்.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 12:57

கலங்காம படியுங்க.. சிரியுங்க
-----------

“அடிக்கடி லைப்ரரியை எட்டி எட்டி பார்த்துட்டுப் போறீயே… ஏண்டா தம்பி?”
“பள்ளிப் படிப்பு மட்டும் போதாது. அனுபவப் படிப்பும் வேணும்னா அடிக்கடி நூலகத்துப் பக்கமும் எட்டிப் பார்க்கணும்னு வாத்தியார்தான் சொன்னாரு!”
•••

“”என் பையன் கணக்கில் ஒரு மார்க்கில் பெயிலாயிட்டான்.”
“”அடடா… எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறான்?”
“”அதான் சொன்னேனே, ஒரு மார்க் தான் வாங்கியிருக்கான்.
•••

“”மன்னா! செல்போனில் மெஸேஜ் படிப்பதை ஏன் நிறுத்தி விட்டீர்கள்?”
“”அமைச்சரே! வருவது எல்லாம் போர்ச் செய்தியா இருக்கு!”
•••

“”தபாலை எடுத்துக் கொண்டு ஏன் போஸ்ட்மேன் இப்படி ஓடுகிறார்?”
“”அது “ஸ்பீட்’ போஸ்ட்டாம்!”
•••

“”ஏண்டா… நீ இப்படி அடிக்கடி கண்ணாடி முன்னால் உன்னை நீயே பார்த்துக்கிறே?”
“டாக்டர்தான்டா அடிக்கடி உடம்பைப் பார்த்துக்கணும்னு சொன்னார்.”
•••

“”கையில் என்னடா புஸ்தகம்?”
“”கற்பிக்கும் கலை புஸ்தகம்.”
“”நீ எதுக்குடா படிக்கிறே?”
“”நீங்க சரியா பாடம் நடத்துறீங்களான்னு தெரிஞ்சிக்கத்தான்.”
•••
+

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 12:58

வலிக்காம கடிப்போம்…
------------

கடிநகைச்சுவை
உனக்கு எந்த ரொட்டி பிடிக்கும்?
சுவரொட்டி…
•••
குளிச்சு முடிச்சதும் தலையை ஏன் துவட்டிக்கிறோம்?
குளிக்கும்போதே துவட்ட முடியாதே..!
•••
வாத்தியார் டேபிள் மேல, சலூன்ல உள்ள மாதிரி தண்ணி பாட்டில் வச்சிருக்காரே ஏன்?
யாராவது தூங்கினா மூஞ்சியிலே ஸ்பிரே பண்ணுவார்…
•••
உழைப்பு பற்றி ஒரு பழமொழி சொல்லு?
உழைத்தால் நீ அம்பானி…. உழைக்காவிட்டால் அம்போ நீ!
•••
என்னோட அகராதியிலே தோல்வி என்கிற வார்த்தையே இருக்காது!
அதுக்குதான் அகராதி வாங்கும்போது பார்த்து வாங்கணும்ங்றது…
•••


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 13:00

சிரிக்கலாம் வாங்க…
------------

“”நம்ம மன்னர் இன்னமும் குழந்தை மாதிரியே செய்றாரே”
“”ஏன் அப்படி சொல்ற?”
“”போர்க்களத்தில் எப்படி மண்ணைக் கவ்வுகிறார் பாரு!”

=============

“”ஹோம் ஒர்க் செஞ்சதுக்கு உன் தங்கை மிஸ்கிட்ட “குட்’ வாங்கினாளாமே. நீ என்ன வாங்கினே?”
“”நான் அதைச் செய்யாததால் “குட்டு’ வாங்கினேன்.”

=============

“”கொஞ்சமா எடுத்ததுக்கு அடிச்சாங்களா… அப்படி என்ன எடுத்தே?”
“”பரீட்சையில் மார்க்குதான்.”

=============

“”ஓட்டப் பந்தயத்துல நீ ஏன் தோத்துட்டே?”
“”பந்தயத்துக்கு வந்திருந்த நூறு பேரைக் கண்டதும் எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை.”

=============

“”நான் அடிச்சா எங்க கிளாஸ்ல யாருமே வருத்தப்படமாட்டாங்க. பதிலா சந்தோஷப் படுவாங்க.”
“”ஏன் அப்படி?”
“”என் பேரு “மணி’ ஆச்சே!”

===========



வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 13:02

நீங்களும் சொல்லலாம் கடி ஜோக்
-----------

பாபு: ஒளரங்கசீப் சட்டம் படிச்சிருப்பாரோ…!
கோபு: ஏன்டா அப்படி கேக்குறே..?
பாபு: அவர் மொக”லாயர்’ வம்சத்தைச் சேர்ந்தவராச்சே..!
——————————————————————
ஆசிரியர்: ஏய், கிட்டு, நேற்று என்ன பாடம் நடத்தினோம்..? சொல்லு..
கிட்டு: போங்க சார், உங்களுக்கே தெரியவில்லை, எனக்கு எப்படி சார் தெரியும்?
————————————————————————-
ஆசிரியர்: சைக்ளோன்னா என்ன சொல்லு..?
ராமு: சைக்கிள் வாங்குவதற்காக தரப்படுகிற லோன் டீச்சர்..!
————————————————————————–
ஒருவர்: என் மகன் ஏ, பி, சி, டி தலைகீழாகச் சொல்லுவான்…
மற்றவர்: அப்படியா என்ன படிச்சிருக்கான்..?
ஒருவர்: பி.ஏ…!
மற்றவர் : பி.ஏ. படிச்சிருந்தும் ஏபிசிடியக் கூட நேரா சொல்லத் தெரியலையா.. அட பாவமே..



வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 13:04

மாதக் கடைசியிலும் சிரிக்கலாம்..
--------------

என்னதான் பெரியவீரனா இருந்தாலும் ,வெயில் அடிச்சா, திருப்பி அடிக்க முடியாது… வெயில்லயே காஞ்சி கருவாடு ஆனோர் சங்கம்

இளநீர்லயும் தண்ணி இருக்கு ,பூமிலயும் தண்ணி இருக்கு , அதுக்காக இளநீர்ல போர் போடவும் முடியாது, பூமில ஸ்ட்ரா போடவும் முடியாது … தண்ணிக்கு லோ லோ என்று அலைவோர் சங்கம்

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல் இருக்கலாம். ஆனா, ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது… ஆயிரம் சிம் கார்டு வைத்து பேலன்ஸ் இல்லாமல் அல்லாடுவோர் சங்கம்

ஓடுற எலி வாலை புடிச்சா நீ ‘கிங்’கு
ஆனா…
தூங்குற புலி வாலை மிதிச்சாலே உனக்கு சங்கு… பயப்படாம பஞ்ச் டயலாக் பேசுவோர் சங்கம்

நிக்குற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம் ஆனா ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாதே… பஸ் புடிக்க ஓடுவோர் சங்கம்

வண்டி இல்லாமல் டயர் ஓடும் . ஆனால் … டயர் இல்லாமல் வண்டி ஓடுமா ?இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிப்போர் சங்கம்

சைக்கிள் ஓட்டுறத சைக்கிளிங்னு சொல்றவங்க ஏன்? ட்ரெய்ன் ஓட்டுறத ட்ரெய்னிங்னோ?இல்ல பிளேன் ஓட்டுறது பிளானிங்னோ சொல்ல மாட்டீரீங்க…
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 13:05

ஸ்மைல் ப்ளீஸ்
----
ஆட்டோக்கு  என்னதான் ஆட்டோ’ன்னு பேர் வச்சாலும், அதனை டிரைவர் மேனுவலாத்தான் ஓட்டணும்…… ஆட்டோ ஓட்டுநர் சங்கம்

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வருது, ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வர மாட்டின்தே… !  பொய் சொல்லி லீவு போடுவோர் சங்கம்

பல் வலி வந்தா பல்லை புடுங்கிடுறாங்க…, ஆனா கண் வலி வந்தால் கண்ண புடுங்க முடியுமா? கண் மருத்துவர் சங்கம்

சன்டே அன்னைக்கு சண்ட போட முடியும், ஆனா மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா ? மாத்தி யோசிப்போர் சங்கம்

பில் கேட்ஸோட பையனாவே இருந்தாலும், கழித்தல் கணக்கு போடும் போது, பக்கத்து நம்பர் கிட்ட கடன்வாங்கித்தானே ஆகனும்.. கடன் வாங்கியே பொழப்பு நடத்துவோர் சங்கம்

பேக் வீல் எவ்வளவு தான் ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாதே.. சோ.. மெதுவாவே போவோர் சங்கம்…


வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 13:07

இப்படியும் இருக்குமோ? யாரு கண்டது
-------------

உயர் பதவியில் இருந்த பலரும் தற்போது தாங்கள் பதவியில் இருந்த போது முக்கிய அமைச்சர்கள் செய்த தவறுகளை வெட்ட வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் வகையில் புத்தகங்களை எழுதி சம்பாதித்து வருகிறார்கள்.

புத்தகம் சம்பாதித்து கொடுத்தா போதும்னு இவங்க எழுதித் தள்ளிக் கொண்டிருக்க.. அது எந்த அளவுக்கு உண்மை, இப்போ இருக்குறவங்களை எப்படிடா நம்புறதுன்னு மக்கள்தான் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சரி இதுல இப்போ என்ன சொல்ல வர்றோம்னு நீங்க கேக்குறது புரியுது

இதே மாதிரி ஒரு மிகப்பெரிய உண்மையை பல ஆண்டுகள் கழித்து புத்தகம் மூலம் வெளியிட்டுள்ளார் ஒரு பெண்.

விஷயத்துக்கு வரலாம்,

1912 இல் டைடானிக் கப்பல், செளத் ஆம்டனிலிருந்து நியூயார்க்கிற்குத் தொடங்கிய தன்னுடைய கன்னிப் பயணத்தின்போதே நடுவில் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியதும், பல நூறு பயணிகள் மாண்டு போனதும், அதைக் கருவாக வைத்து உருவாக்கப்பட்ட டைட்டானிக் திரைப்படம் பல ஆஸ்கார் விருதுகளை அள்ளிச் சென்றதும் நமக்குப் பழகிப் போன தகவல்கள்.

டைடானிக் பற்றிய புத்தம்புது தகவல் இதோ:

”அந்தப் பெருங்கப்பல் நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருப்பது மாதிரி பனிப்பாறையின் மீது மோதியது தானாக ஏற்பட்ட விபத்து இல்லையாம். தூரத்தில் பனிப்பாறைகளைப் பார்த்ததுமே கப்பலைத் திசைதிருப்பிப் பாறையில் மோதாதபடி செலுத்த மாலுமிகளுக்கு நிறைய அவகாசம் இருந்தும், ஒருவித பயத்தில், பாறையில் மோதாதபடி திருப்புவதற்குப் பதில் ஸ்டியரிங்கைக் கையாள்வதில் மாலுமிகள் செய்த தவறுதான் பனிப்பாறையின் மீது மோதல். மோதிய பிறகும் கூட,அந்த மோதலால் கப்பலின் பக்கவாட்டில் ஏற்பட்ட மிகப் பெரிய துளைக்குப் பிறகும்கூட, பயணிகளைக் காப்பாற்றி இருக்க முடியுமாம். பாறை மோதியது. பெரிய துவாரம் விழுந்து அந்தத் துவாரத்தை பாறை அடைத்துக் கொண்டிருந்த அதே நிலையில் கப்பலை நிறுத்தியிருந்தால் இவ்வளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்காது. கப்பலை மேற்கொண்டு முன்னே செலுத்தியதால், அந்தத் துவாரத்தின் வழியாக கடல்நீர் திபுதிபுவென புகுந்தது. எனவே இது மாலுமிகள் செய்த தவறு” இப்படிச் சொல்கிறது ‘குட் ஏஸ் கோல்ட்’ என்ற புதிய புத்தகம்.

இந்தப் புத்தகத்தை எழுதியவர் லேடி பேட்டன் என்பவர். இந்த லேடி பேட்டனின் தாத்தா டைட்டானிக் கப்பலின் ‘செகன்ட் ஆபிஸர்’ என்ற உயர் பதவி வகித்து அன்றைய விபத்தில் பிழைத்தவர். பெயர்: சார்லஸ் லைட்டோலர்.

விபத்து பற்றிய விசாரணைகளில் லைட்டோலர் இந்த உண்மையை வேண்டுமென்றே மறைத்தாராம். காரணம், உண்மையைச் சொன்னால் தன் சக அதிகாரிகள் பலர் வேலையிழந்து தண்டனை பெற்றிருப்பார்கள் என்பதும், கப்பலின் சொந்தக்காரர் திவாலாகிப் போயிருப்பார் என்பதும்தான்.
தாத்தா குறிப்பாக எழுதி வைத்திருந்த தகவல்களின் அடிப்படையில்தான் அவரின் பேத்தி லேடி பேட்டன் இந்த நூலை எழுதியிருக்கிறார். தாத்தா காப்பாற்றிய ரகசியத்தை பேத்தி இப்போது போட்டு உடைத்திருக்கிறார்!



வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 13:08

கடவுள் கிட்ட வரம் கேட்டாலும் கிடைக்காது
------------

ஒரு மானிடன் கடவுளை நினைத்து கடுந்தவம் இருந்தான். மானிடனின் தவத்துக்கு இறங்கி கடவுள் பூவுலகுக்கு வந்தார்.

மானிடா… உன் தவம் கண்டு வியந்தேன், உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன் : கடவுளே.. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ரோடு போட்டுக் கொடுங்கள்.

கடவுள் : மானிடா.. கடலில் சாலை அமைப்பது இயலாது என்பதால் வேறு ஏதேனும் விருப்பம் இருந்தால் கேள்.

மனிதன் : என் மனைவி என் பேச்சைக் கேட்க வேண்டும், எதிர்த்து பேசக் கூடாது என்று வரம் கொடுங்கள்.

கடவுள் : அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிள் போதுமா.. இல்லை டபுளா போடவா..

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 13:11

நாங்க சொல்லியா சிரிக்கணும்…
-----------
என்ன தையல்காரரே அடிக்கடி பரதநாட்டிய நிகழ்ச்சிப் பார்க்கப் போகிறீர்கள்…
அதிலே தான் எங்களை ஊக்குவிக்கிறாங்க..
என்னய்யா சொல்ற.. விளங்க மாட்டின்தே…
அதிலே தாம்பா தை தைன்னு எங்க தொழிலுக்கே ஊக்கம் கொடுக்குறாங்க…

••••

பாட்டுக்கு ஏத்த மாதிரி அழகா தாளம் போடுறீங்களே.. உங்களுக்கு சங்கீதம் தெரியுமா…
யோவ் போய்யா..  கடிக்கிற கொசுவ விரட்டிக்கிட்டு இருக்கேன்…

••••

“”என்ன பால்காரரே, பால் விலையை ஏத்தினப் பிறகு ஒரு லிட்டர் பால் வாங்கினா, அரை லிட்டர் மினரல் வாட்டர் ஃப்ரீன்னு சொன்னீங்க, மினரல் வாட்டர் எங்கே?”
“”ஹி…ஹி…மினரல் வாட்டரை பால்லேயே கலந்து வெச்சிருக்கேம்மா”

••••
+

வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 13:13

காதல் குறித்து நகைச்சுவை பொன்மொழிகள்
------------

காதல் ஒரு மணல் கடிகாரம் போன்றது. நெஞ்சம் காதலால் நிரம்ப நிரம்ப மூளை காலியாகிவிடும்.

காதல் என்பது ஒரு மன நோய்தான். அது திருமணம் செய்தால் சரியாகிவிடும்.

காதலும் கடவுளைப் போலத்தான். சிலர் இருக்கிறது என்கிறார்கள், சிலர் இல்லவே இல்லை என்கிறார்கள்.

உங்கள் காதலி எப்போதுமே உங்களுக்கு தேவதையாக தெரிய வேண்டும் என்றால், அவளை ஒரு போதும் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.

தற்கொலைக்கும், கொலைக்கும் வித்யாசம் கேட்டால், காதலிப்பதற்கும், காதலிக்கப்படுவதற்கும் உள்ள வித்யாசம் என்கிறார்கள்.

காதலுக்கு கண் இல்லை.. ஆனால் திருமணத்துக்குப் பிறகு அந்த கண்களுக்கு தெரிய ஆரம்பித்து விடுகின்றது.

+
வாணிஸ்ரீ சிவகுமார் -
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Nov 2015 - 13:15

சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க..
----------------
எப்.எம்.- ல வேலைக்கு சேர்ந்தது தப்பா போச்சுடா”

“ஏன்டா?”

“சம்பளம் கேட்டா, “கேளுங்க, கேளுங்க, கேட்டுக்கிட்டே இருங்க’ன்னு சொல்றாங்க”

•••••

“பாசஞ்சர் டிரெய்னுக்கு டிக்கெட் வாங்கிட்டு சூப்பர் ஃபாஸ்ட் டிரெய்ன்ல ஏறியிருக்கீங்க?”

“அப்படின்னா நீங்க டிரைவரிடம் டிரெயினை கொஞ்சம் மெதுவா ஓட்டச் சொல்லுங்க!”

•••••

“இன்டர்வியூல என்னை செலக்ட் பண்ணதுக்கு தேங்க்ஸ். எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்க?”

“உன் தகுதிக்கேற்ற சம்பளம் கிடைக்கும்”

“ஸாரி சார், அவ்வளவு குறைந்த சம்பளத்துக்கெல்லாம் என்னால வேலை செய்ய முடியாது”

•••••
+
வாணிஸ்ரீ சிவகுமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை  - Page 13 Empty Re: சிரிக்காமல் இருக்க முடியாது - படித்ததில் பிடித்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 27 Previous  1 ... 8 ... 12, 13, 14 ... 20 ... 27  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum