சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அவமானச் சின்னமா ???? குழந்தை  Khan11

அவமானச் சின்னமா ???? குழந்தை

4 posters

Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Feb 2016 - 10:23

அவமானச் சின்னமா ???? குழந்தை  Proxy?url=http%3A%2F%2Ftamil.thehindu.com%2Fmultimedia%2Fdynamic%2F02393%2Fuzhavan_2393681f

மறுக்கப்பட்ட அன்பைத்தேடி 

வெறுக்கப்பட்ட அருகாமை தேடி 
ஏமாற்று வலைகளுக்குள் சிக்குண்டு 
உள்ளத்தின் ஏக்கங்களின் வழியில் 
அவமானச் சின்னங்களாய் குழந்தைகள்

பணமே வாழ்வென்றலைந்து 

பிணங்களாய் வாழ்ந்தென்ன லாபம் 
அடக்கியே வளர்க்கிறோமென்று 
அசிங்கங்களை அறிந்திடச்செய்யவில்லை 
அருவருப்பாய் உருவெடுத்திருக்கிறது 

குழந்தையின் தேடலென்ன 

குமரியாய் ஆகிவிட்டாளா??
மார்க்கத்தின் போதனைகளென்ன 
அதன் வழிகளை பின்பற்றுகிறாளா??
என்றெதையும் நோக்கவில்லை 
அறிவிலியாய் வளர்ந்திருக்கிறது 

அன்னியனொருவனின் அரவணைப்பிற்குள் 

சென்றுவிடத் தூண்டியிருப்பதென்ன 
கொன்றுவிடுமளவு பாதகமாய் 
அமைந்துவிட்டிருப்பது எதனால் 
ஆராய்ந்தெவரும் பார்க்கவில்லை 
அசிங்கமென்று அழுகிறோம் 

தவறொன்று நடக்கின்ற போதுதான் 

தவறிவி்ட்டோம் அனைத்திலுமென 
தடுமாறித் தத்தழிக்கிறோமே 
வருமுன் காத்திடத்தான் 
என்ன வகை செய்திருக்கிறோம்!!

வயதிற்கேற்ற வரயறைகளை

வகுத்தறிவித்து வளர்த்து 
அன்பு கலந்த நட்போடு 
அன்னியோன்யமாய்க் கலந்து 
அரிய செல்வமாய் நோக்கிடுங்கள் - நாளை 
விலை மதிப்பற்ற வைரங்காளய் மிளிரும் 
அவமானச் சின்னமா ???? குழந்தை  Proxy?url=http%3A%2F%2Fsignatures.mylivesignature.com%2F54488%2F283%2FC39E81ED20FBA49F68509A83F1D9FC65

குறிப்பு: அண்மையில் இடம்பெற்ற சம்பவமொன்றின் சாடல் கருவானது அன்னிய ஆடவனின் பசப்பு வார்த்தைகளை நம்பி அவன் மாற்று மதத்தவன் என்றும் பாராது அவன் பின்னே சென்று குடும்பத்திற்கும் சமுகத்திற்கும் களங்கத்தினை ஏற்படுத்தி அனைவரையும் தலைகுனிவுக்குள்ளாக்கியிருக்கின்ற அந்த குற்றவாளிகளை யாராலும் மன்னித்துவிட முடியாது இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடந்திடாமல் அனைவரும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது பணிவான வேண்டுகோள் வைக்கிறேன்  ( அந்த குற்றவாளி தற்போது விளக்க மறியலுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருபதாக செய்திகள் இவன் இன்னும் பல சம்பவங்களோடு தொடர்பு பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது எது எவ்வாறாகினும் இவர்களை அடையாளங் கண்டு கொள்ளாத எம்மவர்கள் மீதுதான் குற்றமே) 

அவமானச் சின்னமா ???? குழந்தை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by Nisha Wed 3 Feb 2016 - 15:08

புரியவில்லையப்பா! அன்னிய மதத்தவரை காதலிப்பது தவறா?  
காதலுக்கு ஜாதி, மதம் தடையாய் இருப்பதில்லையே!மதம் மாறி காதலிப்பதால் குற்றவாளிகளாக்கப்படுவார்களா? எனக்கு புரியவில்லை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by Nisha Wed 3 Feb 2016 - 15:10

குழந்தையின் தேடலென்ன 
குமரியாய் ஆகிவிட்டாளா??

இவ்வரிகளும் புரியவில்லை. அவமான சின்னமென எதை சொல்ல வருகிறீர்கள்? காதலையா? 

அல்லது நல்லவனென நம்பியவன் நம்பிக்கை துரோகம் செய்ததனால் வந்த வரிகளோ அவைகள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Feb 2016 - 15:13

Nisha wrote:புரியவில்லையப்பா! அன்னிய மதத்தவரை காதலிப்பது தவறா?  
காதலுக்கு ஜாதி, மதம் தடையாய் இருப்பதில்லையே!மதம் மாறி காதலிப்பதால் குற்றவாளிகளாக்கப்படுவார்களா? எனக்கு புரியவில்லை!
இஸ்லாத்தினைப் பொறுத்தவரை இஸ்லாமியரல்லாது மாற்று மதத்தவரை காதலிப்பதோ திருமணம் செய்வதோ தலைவெட்டும் அளவு குற்றச் செயல் அதைத்தாண்டி காதலும் வந்து திருமணம் செய்யும் நிலைக்கு வந்தால் மாற்று மதத்தவர் இஸ்லாத்தினை தழுவ வேண்டும் இல்லை யென்றால் எங்களது மார்க்கத்தில் இருந்து மதம் மாறுகின்றவரை கழுத்து வெட்டி கொலை செய்ய வேண்டும் என்பது மார்க்கச் சட்டம் இறைவன் வகுத்தது அதை பின்பற்றித்தான் ஆகவேண்டும்

அவமானச் சின்னமா ???? குழந்தை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Feb 2016 - 15:16

Nisha wrote:
குழந்தையின் தேடலென்ன 
குமரியாய் ஆகிவிட்டாளா??

இவ்வரிகளும் புரியவில்லை. அவமான சின்னமென எதை சொல்ல வருகிறீர்கள்? காதலையா? 

அல்லது நல்லவனென நம்பியவன் நம்பிக்கை துரோகம் செய்ததனால் வந்த வரிகளோ அவைகள்!
குழந்தையாய் நாம் நினைத்திருப்போம் ஆனால் மனதளவில் குமரியாகிவிட்டாளா அவளின் தேவை திருமணமா என்பதையெல்லாம் கவனிக்கத் தவறும் போது இவ்வாறான இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறோம் 

காதல் தவறில்லை அதனால் வருகின்ற திருமணமும் தவறில்லை ஆனால் காதல் என்று நம்பி 16வயதில் மாற்றுமதமென்று தெரிந்தும் ஏமாந்து நிற்கின்ற அந்த பெண் அவமானச் சின்னந்தானே

அவமானச் சின்னமா ???? குழந்தை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by Nisha Wed 3 Feb 2016 - 15:34

காதல் தவறில்லை அதனால் வருகின்ற திருமணமும் தவறில்லை ஆனால் காதல் என்று நம்பி 16வயதில் மாற்றுமதமென்று தெரிந்தும் ஏமாந்து நிற்கின்ற அந்த பெண் அவமானச் சின்னந்தானே

16 வயதில் காதல் தவறு தான்? ஆனால் மாற்று மதம் என்பதால் அதை ஏமாற்றம் என எப்படி கொள்ளலாம் ஹாசிம், எல்லா மதமும் தம் மதம் தாண்டிய திருமண உறவை கடுமையாக கண்டிக்கின்றது. தலை வெட்டி கொலை செய்யுமளவு பாரிய குற்றமென மற்ற மதங்கள் எடுக்கா விட்டாலும் பலவித காரணங்களால் அன்னிய மதத்தினருக்கிடையிலான திரும்ணங்கள்  தவிர்க்கப்படத்தான் வேண்டும். 

ஆனால் அது மட்டும் அவமானசின்னம் ஆகாதே? இத்தனை தாண்டியும்  ஜெயித்த காதல்கள் உண்டல்லவா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by Nisha Wed 3 Feb 2016 - 15:37

காதலித்து விட்டு ஏமாற்றி விட்டு சென்று விட்டானா? குழந்தை உருவாக விட்டு  கை விட்டானா? குற்றவாளியாக்கப்படும் படி அவன் செய்த தவறு கவிதை வரிகளில் வெளிப்படவில்லை ஹாசிம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Feb 2016 - 15:53

Nisha wrote:
காதல் தவறில்லை அதனால் வருகின்ற திருமணமும் தவறில்லை ஆனால் காதல் என்று நம்பி 16வயதில் மாற்றுமதமென்று தெரிந்தும் ஏமாந்து நிற்கின்ற அந்த பெண் அவமானச் சின்னந்தானே

16 வயதில் காதல் தவறு தான்? ஆனால் மாற்று மதம் என்பதால் அதை ஏமாற்றம் என எப்படி கொள்ளலாம் ஹாசிம், எல்லா மதமும் தம் மதம் தாண்டிய திருமண உறவை கடுமையாக கண்டிக்கின்றது. தலை வெட்டி கொலை செய்யுமளவு பாரிய குற்றமென மற்ற மதங்கள் எடுக்கா விட்டாலும் பலவித காரணங்களால் அன்னிய மதத்தினருக்கிடையிலான திரும்ணங்கள்  தவிர்க்கப்படத்தான் வேண்டும். 

ஆனால் அது மட்டும் அவமானசின்னம் ஆகாதே? இத்தனை தாண்டியும்  ஜெயித்த காதல்கள் உண்டல்லவா?
அக்கா இதே நிகழ்வு இஸ்லாமிய மார்க்கத்திற்குள் இடம்பெற்றிருந்தால் அதற்கென வேறு சட்டங்கள் இதை வெறும் காதல் என்று மாத்திரம் கொள்ள முடியாது ஏன்னா காதலுக்காக எதையும் விடலாம் ஆனால் தான் பிறந்து வாழ்கின்ற மதத்தினை விடமுடியாது இலங்கை மாத்திரமல்ல இந்தியாவிலும் அதிகமாக இது நடந்தேறுகிறேது மாற்று மதங்களைச்சேர்ந்தவர்களோடு திருமணம் செய்யாமலே இஸ்லாத்தில் இருந்து கொண்டு சேர்ந்து வாழ்கிறார்கள் இது இஸ்லாத்தில் மிகப்பெரிய குற்றம் என்பது சட்டம் அதை இஸ்லாமியனென்றால் ஏற்றுத்தான் ஆகவேண்டும் 

ஒரு தாய் தந்தையின் நிலையில் அக்குழந்தை அவமானச் சின்னமில்லையா எதிர்பார்ப்புகளை மீறி தன் சமுகம் சார்ந்தவனல்லாது மாற்றுச் சமுகத்து நபருடன் சென்றிருப்பது அத்தாய் தந்தைக்கு சமுக மட்டத்திலும் மார்க்கத்திலும் ஈடுசெய்ய முடியாத அவமானமே இவ்வாறான சில சந்தர்ப்பங்களில் உயிர்விட்ட தாய் தந்தையும் உண்டு எதனால் விளைந்தது இந்த அவமானம் அக்குழந்தையால்தானே அதனால்தான் அதை அவமானச் சின்னமென்கிறேன்

அவமானச் சின்னமா ???? குழந்தை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நண்பன் Wed 3 Feb 2016 - 15:53

இன்றைய காலத்தில் பாவம் பெண்கள்!ஆண்களின் வார்த்தைகளில் மயங்கி ஏமாந்து விடுகிறார்கள் அவன் நல்லவனா கெட்டவனா குடிகாரனா கொலைகாரனா எவனாக இருந்தாலும் பெரியவர்கள் வார்த்தைக்கு மதிப்பளிக்காது  இது போன்ற குற்றங்கள் செய்கிறார்கள் கண் முன்னே காணும் பல நூறு செய்திகள் இவ்வாறே உள்ளது 

இரண்டு நாட்களுக்கு முன்தான் எனக்குத் தெரிந்த இரண்டு பேருக்கு நல்லுபதேசம் செய்தேன். ஆண்களின் அன்பான வார்த்தைக்கு ஏமாந்து நடுத்தெருவில் பெண்கள் நிற்கிறார்கள். கண் கூடாக கண்டது.  அத்தோடு இதே வேலையாக சில ஆண்கள் திரிகிறார்கள். இவர்களை என்ன செய்வது இனம் கண்டு வெட்டிக்கொல்ல வேண்டும். 

பாவம் அப்பாவிப்பெண்கள்! பெற்றோரின் பராமரிப்பில் நல்ல பிள்ளைகளாகத்தான் வளர்க்கப்படுகிறார்கள். அன்னிய ஆடவனின் கண்ணில் படும் வரை அவர்களும் நல்ல ஒழுக்கமுள்ள பெண்களே பாவம் அவர்கள் ஏமாந்து நடுத்தெருவில். 

சில தவறைக்கண்டு நாம் தடுப்போமேயானால் நம்மோடும் சண்டை இடும் அளவுக்கு மாறி விட்டார்கள். உங்களுக்கென்ன தெரியும்?அவன் நல்லவன்   உங்கள் பார்வைக்கு அவன் கெட்டன் என் பார்வைக்கு அவன் நல்லவன்.   நான் அவனோடு பேசுவேன்  தடுத்தால் சாகுவேன் என்று சொல்லும் அளவுக்கு வந்து விட்டார்கள்.  இப்படி சொல்லியும் கேளாமல் சீரழியும் பெண்களை இன்னும் என் கண் முன் காண்கிறேன் கண்டு கொண்டிருக்கிறேன் 

நல்ல விழிப்புணர்வு வேண்டும் பெண்கள் மத்தியில் 
ஆதங்கமான உங்கள் கவிதை வரிகளுக்கு நன்றி!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Feb 2016 - 16:07

Nisha wrote:காதலித்து விட்டு ஏமாற்றி விட்டு சென்று விட்டானா? குழந்தை உருவாக விட்டு  கை விட்டானா? குற்றவாளியாக்கப்படும் படி அவன் செய்த தவறு கவிதை வரிகளில் வெளிப்படவில்லை ஹாசிம்.
மேசன் வேலைக்குச் சென்ற இடத்தில் இருந்த பிள்ளையிடம் காதலென்று மயக்கி பருவமில்லாக் குழந்தையை அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிவிட்டு விட்டுச் சென்றது குற்றமில்லையா இதை புரியாத அந்த பைத்தியம் அவன் பின்னே சென்று இவ்வாறு ஏமாந்து நிற்பது குற்றமில்லையா 

என் கவிதையின் நோக்கம் இந்த குற்றத்திற்கு அவ் இருவரும் மாத்திரம் தவறல்ல வளர்த்த பெற்றோரும் சூழலும் காரணம் இவ்வாறான நிகள்வு எதிர்காலத்தில் இன்னு மொன்று ஏற்றபடக் கூடாது இனிமேல் வேலைக்கு வருபவர்களை வேலைக்காரர்களாகவே நடத்தணும் உன்னிப்பாயிருக்கணும் என்று சொல்கிறேன்

அவமானச் சின்னமா ???? குழந்தை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நண்பன் Wed 3 Feb 2016 - 16:13

நானும் சில நாட்களாக  இந்த விடம் முகநூலில் பரபரப்பாக அறிய முடிந்தது  சுட்டுத்தள்ளு.!! சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by Nisha Wed 3 Feb 2016 - 16:17

இதைத்தான் கேட்டேன், அதாவது கவிதை வரிகள், அவன் குற்றவாளியாக்கப்பட்டு விசாரனையில் எனும் முதல் பதிவின் முலமும் புரிந்து கொண்டேன், ஆனால் அந்த குற்றத்துக்கான சரியான காரணம் புரிபடவில்லை. 

இவ்விடயத்தில் மதம் சாராமல் அனைவருக்கும் ஒரே கருத்து தான்.  அன்னிய மதத்தவன் மட்டும் தான் காதல் சொல்லி ஏமாற்றுகின்றானோ? காதலித்து கல்யாணம்  என செய்து விட்டு பிள்ளையும் பிறந்த பின் கை விட்டு செல்லும் எத்தனை அயோக்கியர்கள் உண்டு இவ்வுலகில்! அதனால் அன்னியருடனான காதல் என்பதை விட   உடல் கவர்ச்சியை காதல் என நம்புவது எவராயிருந்தாலும் தவறே! 

அத்தோடு பெற்றோர்களை மட்டும் எல்லா விடயங்களிலும்தவறு சொல்ல முடியாது.

நீங்கள் கடந்து வந்த பாதைகளை, ஏன் நானும் கூட  கடந்து வந்ததை  நாம் யோசித்தோமானால் அதே தவறுகள் நம் இளவயதிலும் நம்மால் நடத்தப்பட்டிருக்கின்றது. அந்தந்த வயதில் வரும் குழப்பங்களை சரியாக இனம் கண்டு தெளிவை கொடுத்து விட வேண்டும் என்பது தான் சரி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by Nisha Wed 3 Feb 2016 - 16:21

நணபனின் நீண்ட கருத்தும் சரியே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Feb 2016 - 16:25

நிச்சயமாக இந்த வயதுக் குழந்தைகள் தவறிழைத்தால் பெற்றோர்கள்தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் காரணம் விடலைப்பருவத்து கோளாறுகளை எதிர்கொள்ளும் விதமாக குழந்தைகளை வளப்படுத்தி வளர்க்க தவறும் போதுதான் இவ்வாறான சம்பவங்கள் நடந்தேறுகிறது  அதைத்தாண்டிய பருவத்தில் தவறிழைத்தால் அது பிள்ளைகளைச் சாரும் பக்குவம் வந்த பின்னர் தவறிழைத்தால் அவர்களே பொறுப்பாளிகள் 

குறிப்பில்தான் சம்பவத்தினை குறிப்பிட்டேனே தவிர கவிதையினை பொதுவாக எழுதினேன் இவை இவைகள்தான் எம்மை இவ்வாறான சந்தர்ப்பங்களை சந்திக்க செய்திருக்கிறது கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தொட்டுச் சொன்னேன் 

குறிப்பை மறந்து விட்டு கவிதையினை பாருங்கள் அக்கா எங்கு மாற்றம் வேண்டும் என்று சொல்லுங்கள் திருந்திக்கொண்டு திருத்திவிடுகிறேன் மிக்க நன்றி

அவமானச் சின்னமா ???? குழந்தை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by Nisha Wed 3 Feb 2016 - 16:33

திருத்துவதுக்கு ஏதுமில்லை. சொல்ல வந்த கருத்து சரியே. நன்று ஹாசிம்.பால்ய காதல்,பக்குவப்படாத வதுக்காதல்  அது  எவரில் வந்தாலும் தவறே! அதில் வேறு பட்ட கருத்தில்லை. 

எங்களுக்கும் இதே கட்டுப்பாடு உண்டு, அன்னிய நுகத்தில் அவிசுவாசிகளுடன் இணைக்கப்படக்கூடாது என்பது  கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியது.அதனால் அதை தவறு என நான் சொல்ல மாட்டேன்,  என் பிள்ளைகளுக்கும்  திருமணம் என வந்தால் எமது சபைக்குள் எம்மைபோல் இரட்சிப்புக்குள்ளான பெண்ணாய் , ஆணாய் இருக்க வேண்டும் என்பது சிறுவயது முதல் கொண்டே போதனை தான், அதே போல்  அவர்கள்  செய்யும் தவறுகளை கண்டு பிடித்து களைவதும் கூட எம் கடமை தான்.

இதற்கு அழகாக உதாரணம் சொலலாம். 
இரு காளை மாடுகள்... ஒருமனப்பட்டு வண்டி இழுக்கும் போது  வண்டி அமைதியாய் நிதானமாய் சேருமிடம் சேரும்,  இரு வேறுபட்ட  குணாதிசயம், பழக்க வழக்கங்கள் கொண்டோர் ஆரம்ப கால வாழ்க்கையில்   புரிதல் இருந்தாலும் நாட்கள் செல்லும் போது  புரிதல் குறைய வாய்ப்புண்டு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by Nisha Wed 3 Feb 2016 - 16:35

நீங்கள்  உங்கள் வலைப்பூவில்  இப்பதிவினை பதிந்தால் அதன் இணைப்பை இங்கே இடுங்கள். இங்கே இடும்  கருத்துக்களை அங்கும் இட  நேரடி தொடர்பாடல் கிடைத்து விடும்.  இல்லாவிட்டால் தேடிச்செல்ல வேண்டும். 

இயன்ற வரை இங்கே இடும் பின்னூட்டங்களை வலைப்பூக்களிலும் சிரமம் பாராது இட்டு விடுங்கள். அது   நீங்களும் நாங்களும் வளர உதவும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நண்பன் Wed 3 Feb 2016 - 16:37

நேசமுடன் ஹாசிம் wrote:நிச்சயமாக இந்த வயதுக் குழந்தைகள் தவறிழைத்தால் பெற்றோர்கள்தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் காரணம் விடலைப்பருவத்து கோளாறுகளை எதிர்கொள்ளும் விதமாக குழந்தைகளை வளப்படுத்தி வளர்க்க தவறும் போதுதான் இவ்வாறான சம்பவங்கள் நடந்தேறுகிறது  அதைத்தாண்டிய பருவத்தில் தவறிழைத்தால் அது பிள்ளைகளைச் சாரும் பக்குவம் வந்த பின்னர் தவறிழைத்தால் அவர்களே பொறுப்பாளிகள் 

குறிப்பில்தான் சம்பவத்தினை குறிப்பிட்டேனே தவிர கவிதையினை பொதுவாக எழுதினேன் இவை இவைகள்தான் எம்மை இவ்வாறான சந்தர்ப்பங்களை சந்திக்க செய்திருக்கிறது கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தொட்டுச் சொன்னேன் 

குறிப்பை மறந்து விட்டு கவிதையினை பாருங்கள் அக்கா எங்கு மாற்றம் வேண்டும் என்று சொல்லுங்கள் திருந்திக்கொண்டு திருத்திவிடுகிறேன் மிக்க நன்றி

இன்று பெற்றவர்களே பிள்ளைகளை மிஞ்சிய வழிகேட்டில் உள்ளார்கள் அதையும் நான் கண் முன்னே காண்கிறேன் 

40 வயது குமரு நான்கு பிள்ளைகளின் தாய் 
35 வயது இளம் வாலிபனுடன் தொடர்பு  வயிற்றில் நாலு மாதம் மடியில் பத்து மாதம்  என்ன கொடுமை என்ன கொடுமை

இப்படித்தான் நான் அதிகமாக பார்க்கிறேன் 

என்ன உலகம் இது  என்ன கொடுமை என்ன கொடுமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by Nisha Wed 3 Feb 2016 - 16:38

ஆமாம்ல! ஆனால்  இதற்கு காரணம் என்ன என என்றேனும் யோசித்தோமா ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நண்பன் Wed 3 Feb 2016 - 16:46

Nisha wrote:ஆமாம்ல! ஆனால்  இதற்கு காரணம் எனன் என என்றேனும் யோசித்தோமா ?

நன்றி கெட்ட உலகம் அது மட்டும் எனக்கு நல்லாத் தெரியுது  அழுகை அழுகை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Feb 2016 - 16:49

Nisha wrote:ஆமாம்ல! ஆனால்  இதற்கு காரணம் எனன் என என்றேனும் யோசித்தோமா ?
காரணம் அறிவைப் பயன்படுத்தாது ஆசையின் வழியில் அலைமோதுவதால் விழைகிறது

அவமானச் சின்னமா ???? குழந்தை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நண்பன் Wed 3 Feb 2016 - 17:00

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ஆமாம்ல! ஆனால்  இதற்கு காரணம் எனன் என என்றேனும் யோசித்தோமா ?
காரணம் அறிவைப் பயன்படுத்தாது ஆசையின் வழியில் அலைமோதுவதால் விழைகிறது

அறிவைப் பயன் படுத்தாததா?
அதெப்படி 20வருடம் ஒரு கணவனோடு வாழ்ந்து அவனுக்கு பெற்ற நான்கு பிள்ளைகள் 

இப்போது நான்கு மாதம் கள்ளனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் 
ஏன் இப்படி  என்று கேட்டால்  இவன் காட்டிய  பாசம் அவன்  காட்ட  வில்லை  
இவன் பாசம் எனக்கு பிடித்திருக்கிறது  டிஸ்யூம் டீஸ்யூம்

காரணம் புரிந்ததா இந்த நாலு மாசத்தில் இவன் காட்டிய பாசம் அந்த இருபது வருடத்தில் அவன் காட்ட வில்லையாம்  இதை உணர இருபது வருடங்கள் காத்திருந்திருக்கிறாள் அந்த குமரு என்ன கொடுமை என்ன கொடுமை  

நன்றி கெட்ட உலகமடா  என்ன கொடுமை என்ன கொடுமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by Nisha Wed 3 Feb 2016 - 17:03

நண்பன் wrote:

ஏம்பா. பத்து பதினைந்து வருடம் வாழ்ந்திட்டு மனைவியை விட்டு இன்னொரு பெண்ணோட போய் வாழும் ஆண்கள் இல்லையாப்பா? ஊருக்கு இளைச்சவள் பெண்ணுங்க தானாப்பா? இல்ல தெரியாமல் தான் கேட்கின்றேன்? அவ்வ்வ்வ்வ்வ்வூ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நேசமுடன் ஹாசிம் Wed 3 Feb 2016 - 17:33

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ஆமாம்ல! ஆனால்  இதற்கு காரணம் எனன் என என்றேனும் யோசித்தோமா ?
காரணம் அறிவைப் பயன்படுத்தாது ஆசையின் வழியில் அலைமோதுவதால் விழைகிறது

அறிவைப் பயன் படுத்தாததா?
அதெப்படி 20வருடம் ஒரு கணவனோடு வாழ்ந்து அவனுக்கு பெற்ற நான்கு பிள்ளைகள் 

இப்போது நான்கு மாதம் கள்ளனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் 
ஏன் இப்படி  என்று கேட்டால்  இவன் காட்டிய  பாசம் அவன்  காட்ட  வில்லை  
இவன் பாசம் எனக்கு பிடித்திருக்கிறது  டிஸ்யூம் டீஸ்யூம்

காரணம் புரிந்ததா இந்த நாலு மாசத்தில் இவன் காட்டிய பாசம் அந்த இருபது வருடத்தில் அவன் காட்ட வில்லையாம்  இதை உணர இருபது வருடங்கள் காத்திருந்திருக்கிறாள் அந்த குமரு என்ன கொடுமை என்ன கொடுமை  

நன்றி கெட்ட உலகமடா  என்ன கொடுமை என்ன கொடுமை
அதைத்தான் சுருக்கமாய் ஆசையென்றேன்

அவமானச் சின்னமா ???? குழந்தை  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by நண்பன் Wed 3 Feb 2016 - 19:07

Nisha wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:ஆமாம்ல! ஆனால்  இதற்கு காரணம் எனன் என என்றேனும் யோசித்தோமா ?
காரணம் அறிவைப் பயன்படுத்தாது ஆசையின் வழியில் அலைமோதுவதால் விழைகிறது

அறிவைப் பயன் படுத்தாததா?
அதெப்படி 20வருடம் ஒரு கணவனோடு வாழ்ந்து அவனுக்கு பெற்ற நான்கு பிள்ளைகள் 

இப்போது நான்கு மாதம் கள்ளனோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள் 
ஏன் இப்படி  என்று கேட்டால்  இவன் காட்டிய  பாசம் அவன்  காட்ட  வில்லை  
இவன் பாசம் எனக்கு பிடித்திருக்கிறது  டிஸ்யூம் டீஸ்யூம்

காரணம் புரிந்ததா இந்த நாலு மாசத்தில் இவன் காட்டிய பாசம் அந்த இருபது வருடத்தில் அவன் காட்ட வில்லையாம்  இதை உணர இருபது வருடங்கள் காத்திருந்திருக்கிறாள் அந்த குமரு என்ன கொடுமை என்ன கொடுமை  

நன்றி கெட்ட உலகமடா  என்ன கொடுமை என்ன கொடுமை

ஏம்பா. பத்து பதினைந்து வருடம் வாழ்ந்திட்டு மனைவியை விட்டு இன்னொரு பெண்ணோட போய் வாழும் ஆண்கள் இல்லையாப்பா? ஊருக்கு இளைச்சவள் பெண்ணுங்க தானாப்பா? இல்ல தெரியாமல் தான் கேட்கின்றேன்? அவ்வ்வ்வ்வ்வ்வூ!

அலோ எச்சுஸ்மி மேல நான் நிறைய கமன்ட் கொடுத்துள்ளன் அதையும் பாருங்க நான் ஏன் இப்படி எழுதினேன் என்பதையும் பாருங்க  என்ன கொடுமை என்ன கொடுமை

பெற்றவர்களை திட்ட வேண்டாம் என்று நீங்கள் சொன்னிங்க

பெற்றவர்கள் பிள்ளைகளை கவனமாக வளர்க்க வேண்டும் என்று சொல்கிறார் ஹாசிம்

பெற்றவர்களே இந்த வழிகேட்டில் உள்ள போது பிள்ளைகளின் நிலை என்னாகும் 

அதில் பெண்களுக்கு ஒரு தனி மதிப்பு மரியாதை இருக்க அதை மீறி நடக்கும் சில தாய்மார்கள் உள்ளார்கள் அவர்களை நான் சொன்னேன் நன்றி கெட்டவர்கள் என்று 
உங்கள் புரிதலுக்கு நன்றி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by சே.குமார் Fri 5 Feb 2016 - 17:23

வயதிற்கேற்ற வரயறைகளை
வகுத்தறிவித்து வளர்த்து 
அன்பு கலந்த நட்போடு 
அன்னியோன்யமாய்க் கலந்து 
அரிய செல்வமாய் நோக்கிடுங்கள் - நாளை 
விலை மதிப்பற்ற வைரங்காளய் மிளிரும் 

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

அவமானச் சின்னமா ???? குழந்தை  Empty Re: அவமானச் சின்னமா ???? குழந்தை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum