சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? Khan11

பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா?

Go down

பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? Empty பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா?

Post by *சம்ஸ் Sun 25 Feb 2018 - 14:32

பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251343562775_did-Sridevi-had-a-fainting-spell-in-Dubai-hotel-bathroom_SECVPF
திருமண விழாவில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலில் உள்ள பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக தெரியவந்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? Empty Re: பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா?

Post by *சம்ஸ் Sun 25 Feb 2018 - 14:37

நடிகை ஸ்ரீதேவி மறைவுக்கு நடிகர்-நடிகைகள், டைரக்டர்கள் அனுதாபம் தெரிவித்து உள்ளனர்.


கமல்ஹாசன்:- மூன்றாம் பிறை படத்தின் பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமை தான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள். ஸ்ரீதேவியின் திறமைக்கு இளம் வயது நடிப்பே சாட்சி. அவரை கடைசியாக சந்தித்த நினைவுகள். திரை உலகின் அனைத்து புகழுக்கும் தகுதியானவர்.


பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_1_Sridevi-KamalRajini-Tribute5._L_styvpf

ரஜினிகாந்த்:- ஸ்ரீதேவியின் மரணத்தை அறிந்து நான் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். நல்ல நண்பரை இழந்து விட்டேன். திரையுலகம் உண்மையான மிகப்பெரிய சாதனையாளரை இழந்துவிட்டது.


அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் நானும் வேதனையை உணருகிறேன். எனது இதயம் நிறைந்த அனுதாபங்கள் நாங்கள் அவரை இழந்து விட்டோம்.


பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_2_Sridevi-KamalRajini-Tribute4._L_styvpf




குஷ்பு:- ஸ்ரீதேவி இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததும் என்னால் நம்ப முடியவில்லை. ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று நினைத்தேன். அவர் எவ்வளவோ சாதித்துள்ளார். 15 வருடம் கழித்து தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வித்தியாசமான ஸ்ரீதேவியை நமக்கு காண்பித்திருந்தார். ஒரு மிகப்பெரிய இழப்பு இது.


ஸ்ரீதேவியை உயர்த்தியது அவருடைய தொழில் பக்திதான். அவர் மறைய வேண்டிய வயது இல்லை.

ராதா:- ஸ்ரீதேவி அழகான ஹீரோயினி. அவருடன் நான் சந்திப்பு என்ற படத்தில் சேர்ந்து நடித்தேன். அப்போதுதான் நான் அவரை முதன் முதலாக சந்தித்தேன். அவர் ராணி போல இருந்தார். அவர் அதிகமாக பேசமாட்டார். ஆனால் அவரது சிரிப்பு மறக்க முடியாதது. அவரது மேக்கப், நடனமாடும் ஸ்டைல் எல்லாவற்றையும் பார்த்து ரசித்துள்ளேன். 1980 காலகட்டத்தில் இந்தியில் முன்னணியில் இருந்தார்.


கிளாமரில் நான் நடிக்கும் போது ஸ்ரீதேவி நடித்த காட்சிகளை டி.வி.யில் போட்டு பார்த்து தான் நடித்தேன். அவர் இறந்ததை நம்ப முடியவில்லை. இப்போது அம்மாவாக இருக்கிறார். 2 குழந்தைகள் இருக்கிறார்கள். அந்த பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி அவர் எவ்வளவு ஆசையுடன் இருந்திருப்பார். நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. அவர் ஒரு இடத்துக்கு வந்தால் எல்லோரும் அவரை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த அளவுக்கு அவர் அழகானவர். எனது அக்காள் அம்பிகாவுக்கு அவர் தோழி. அவர்கள் இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள். கிளாமர், கேரக்டர் இரண்டையும் அவர் சிறப்பாக செய்வார். அவர் திரும்பவும் பிறப்பார். அவரது குழந்தைகளுக்கு கடவுள்தான் சக்தி கொடுக்க வேண்டும்.


நக்மா:- ஸ்ரீதேவி இறந்தது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அந்த தகவலை கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்து விட்டேன். அதை நம்ப முடியவில்லை. அவரது பசுமையான நினைவுகளை என்னால் மறக்க முடியவில்லை. அவர் எனது அப்பாவின் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ‘அவ்வாத்’ இந்தி படத்தில் ஜிதேந்தரா, ஜெயப்பிரதாவுடன் ஸ்ரீதேவியும் நடித்துள்ளார். அப்போது எனக்கு ‘டீன் ஏஜ்’ வயது. அவர் என்னுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். எல்லா படத்திலும் அவர் சிறப்பாக நடித்திருப்பார். அவர் ஒரு நல்ல பெண்.
பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_3_Sridevi-KamalRajini-Tribute2._L_styvpf


குட்டி பத்மினி:- அவர் இங்கு இருந்தவரை தமிழ்நாட்டில் நம்பர் ஒன் நடிகை. தெலுங்கிலும் நம்பர் ஒன். கன்னடம், மலையாளத்திலும் நடித்துள்ளார். 20 முதல் 25 வருடம் வரை தொடர்ந்து கதாநாயகியாக இருந்தார். இது எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய வி‌ஷயம் இல்லை. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. சகாப்தம் அவருடன் முடிந்து விட்டது. வேறு எந்த கதாநாயகியும் அத்தனை வருடம் நீடித்து நிலைக்கவில்லை. எல்லா கதாநாயகர்களுடனும் அவர் நடித்துள்ளார். கடைசி வரை அவரது திறமை மாறவில்லை. குழந்தைத்தனம் மாறாத முகம் அவருடையது. குறைந்த வயதிலேயே பத்மஸ்ரீ விருது வெற்றார். நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் இறந்தது நம்ப முடியாத வி‌ஷயம்.


கவுதமி:- ஸ்ரீதேவி இறந்தது ரொம்ப அதிர்ச்சி யாக உள்ளது. எத்தனையோ தலைமுறைகளுக்கு அவர் உதாரணமாக இருக்கிறார். இவரை பற்றி நினைக்கும் போது அவர்கள் நிரந்தரமாக இருப்பதாக ஒரு நினைப்பு நமக்கு வரும். இந்த வி‌ஷயத்தை கேட்டு ரொம்ப அதிர்ச்சியாக உள்ளது. எனக்கு சினிமா என்ன என்று தெரிய ஆரம்பித்ததில் இருந்து அவர் இருந்து கொண்டே இருந்தார். நான் ரொம்பவும் நேசிக்கிற நடிகை அவர். நடிப்பு மட்டுமல்ல ஸ்டாராக இருப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்தவர் அவர். இந்தியாவில் இருந்து உலக அளவில் புகழ் பெற்ற முதல் நடிகை அவர்.


நடிகர் பார்த்திபன்:- நடிகை ஸ்ரீதேவி இறந்தது வருத்தமாக இருக்கிறது. துயரமாக இருக்கிறது. மயிலு என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது தோகை விரித்தாடும் மயில் கிடையாது. நம்ம ஸ்ரீதேவி தான். 16 வயது என்று சொன்னாலே நமக்கு ஞாபகம் வருவது ஸ்ரீதேவி. நான் அவருடன் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிந்துள்ளேன். பாக்யராஜ் இயக்கிய படத்தில் நான் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்துள்ளேன். அதில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். அவரது அழகை பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். எல்லாவற்றிலும் சரியாக இருக்கக் கூடியவர் அவர்.


பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_4_Sridevi-KamalRajini-Tribute3._L_styvpf

ஷுட்டிங்குக்கு முந்தைய நாளே அவருக்கு வசனம் கொடுத்து விட வேண்டும். காலையில் ஷுட்டிங்குக்கு வரும் போது அதை சரியாக மனப்பாடம் செய்து கொண்டு வருவார். அவருடைய கூந்தல், மேக்கப், குரல், நடந்து வருவது எல்லாவற்றிலுமே தனி கவனம் செலுத்துகிற நடிகை அவர்.


மெழுகு சிலைகள் இருக்கும் லண்டனில் நான் ஒரு முறை அவரை சந்தித்தேன். அவர் நடந்து வருவதை பார்த்து அவரிடம் சொன்னேன். சிலை நடந்து வருகிறது என்றேன். அந்த சிலை போல அழகுள்ள ஸ்ரீதேவி இன்று உயிரில்லாமல் இருப்பது பெரிய வருத்தமான வி‌ஷயம். அவர் சாதித்த வி‌ஷயத்தை இன்னொரு நடிகை சாதிக்க முடியுமா? என்று தெரியவில்லை. அவ்வளவு உயரத்துக்கு போன நடிகை அவர்.


ரேகா: நான் ஒரு முறை அவரை சந்தித்துள்ளேன். நட்சத்திர நிகழ்ச்சியில் அவர் எனது கையை பிடித்து புன்னகை மன்னன் படத்தில் சிறப்பாக நடித்துள்ளீர்கள் என்றார். நாமெல்லாம் உயர்ந்து பார்க்கிற ஒரு நடிகை நம்மை பார்த்து இப்படி சொல்கிறார்களே என்று நினைத்தபோது பெருமையாக இருந்தது. இது நடந்து 25 வருடம் இருக்கும். அப்போது உள்ள நடிகைகள் போல இப்போது உள்ளவர்கள் இல்லை. அவரது தியாகம், மேக்கப், உடை அலங்காரம் போன்றவற்றை யாராலும் மிஞ்ச முடியாது.


தியாகத்துடன் நடிப்பதில் நிறைய நடிகைகள் இருக்கிறார்கள் அதில் முதலில் இருப்பது ஸ்ரீதேவி என்று நினைக்கிறேன். அவருடன் பணிபுரியும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்காதது எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் அர்த்தம். நல்ல குணம் உள்ளவர். அனைவரையும் மதிப்பவர். சினிமாவை நேசிப்பவர் என்று பலர் அவரைப் பற்றி சொல்லி கேள்விப்பட்டு இருக்கிறேன். அவரது பேட்டிகளை பார்க்கும் போது மகளை நடிக்க வைக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருந்தது. அந்த பெண்ணை நடிக்க வைத்து பார்க்கும் முன்பே காலன் கொண்டு போய்விட்டார்.
பாத்ரூமில் மயங்கி விழுந்ததால் நடிகை ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததா? 201802251333191756_5_Sridevi-KamalRajini-Tribute6._L_styvpf

இது பெரிய வருத்தமாக இருக்கிறது. இன்று இருப்பவர்கள் நாளை இருக்கிறோமா என்பது தெரியாது. எனவே இருக்கும் வரை அனைவரையும் நேசித்து தியாக உணர்வுடன் இருக்க வேண் டும். ஸ்ரீதேவி இறந்தது பொய்யான செய்தியாக இருக்கும் என்று முதலில் நினைத்தேன். அவருக்கு குறைந்த வயது. இன்னும் அவர் என்ன கனவெல்லாம் வைத்திருந்தார் என்று தெரியவில்லை. நான் அவரை இழந்ததாகவே கருதுகிறேன். அவரது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.


ஒய்.ஜி.மகேந்திரன்:- அவரது குடும்பத்தை எனக்கு நன்றாக தெரியும். அவருடன் முதலில் கங்கா, யமுனா, சரஸ்வதி படத்தில் சேர்ந்து நடித்தேன். அதன் பிறகு போக்கிரி ராஜா, மூன்றாம் பிறை, நான் அடிமை இல்லை என்பது போன்ற பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளேன். அவர் அந்த காலத்தில் எனது குடும்ப நண்பராக இருந்தவர். அவர் இறந்ததை என்னால் நம்பவே முடியவில்லை.


நான் அடிக்கடி அவருக்கு போன் செய்து வாழ்த்து சொல்வேன். ரஜினி வீட்டு கல்யாணத்துக்கு வரும் போது என்னை பார்த்து பேசினார். நான் அவருக்கு ரசிகராக இருந்தேன். சிறந்த நடிகை, நடனத்திலும் சிறந்தவர். இந்த செய்தியை கேட்பதற்கு அதிர்ச்சியாக உள்ளது. அவருக்கு சின்ன வயதுதான். இதை என்னால் ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை. இதை என்னால் நம்பவே முடியவில்லை. ரொம்ப அநியாயம். கடவுள் ரொம்ப கொடுமையாக இருந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.


நயன்தாரா:- ஸ்ரீதேவியின் மரண செய்தி அறிந்து உண்மையாகவே அதிர்ச்சி அடைந்தேன். உண்மையாகவே மரியாதைக்குரிய சாதனை புரிந்த சிறந்த பெண்மணி. இது மோசமான நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.


நடிகர் விவேக்:- இந்திய சினிமாவின் கனவு தேவதை காற்றில் கலந்தது. ஆயினும் நமது நெஞ்சில் எப்போதும் நிழலாடும்.


நடிகர் அக்‌ஷய்குமார்:- நடிகை ஸ்ரீதேவியின் மறைவு துரதிருஷ்டவசமானது.


நடிகை லட்சுமி:- யதார்த்தமான குழந்தை போன்றவர் ஸ்ரீதேவி.


நன்றி maalaimalar


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum