Latest topics
» மனித குணம்..!by rammalar Today at 6:42
» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41
» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28
» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26
» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25
» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21
» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06
» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59
» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54
» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44
» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43
» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32
» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02
» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52
» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37
» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36
» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34
» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32
» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20
» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19
» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18
» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17
» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16
» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13
» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12
» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08
» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29
» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20
மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில்
மாங்காடு திருத்தலம் சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லிக்கும்
குன்றத்தூருக்கும் இடையில் உள்ளது.
காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி என்று
அகிலமெல்லாம் போற்றிப் புகழ்வது போன்றே மாங்காடு
காமாட்சியம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றதாகும்.
இத்தலத்தைச் சுற்றிலும் வடவத்தீஸ்வரன் கோயில், அறுபத்து
மூன்று நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த
திருவேற்காடும், கீர்த்தனைகள் பல பாடி புகழ் பெற்ற
சுந்தரரேசுவரின் கோயில் உள்ள கோவூரும், சேக்கிழார்
அவதரித்த குன்றத்தூரும் வேறு பல தலங்களும் மாங்காட்டைச்
சுற்றி அமைந்துள்ளன.
இத்தலத்திற்கு ஆம்ராரண்யம், சூதவனம், மாலை என்ற
திருப்பெயர்களும் உண்டு. இங்கு கோயில் கொண்டு அருள்
வழங்கும் அன்னையின் பெயர். ஆதி காமாட்சியென்றும்
தபசு காமாட்சி என்ற பெயரும் பெற்று விளங்குகிறாள்.
இத்தலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக தோன்றிய பழைமை
வாய்ந்த தலமாகும். காஞ்சியில் திருத்தலம் தோன்றுவதற்கு
முன்பாகவே இத்தலம் தோன்றி விட்டது.
இத்திருக்கோயிலில் அர்த்த மேரு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த அர்த்தமேரு, ஸ்ரீ சக்கர எந்திரம் சந்தனம், அகில், பச்சைக்
கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடா மஞ்சீ,
கச்சோலம் போன்ற எட்டு வகையான வாசனைப் பொருள்களால்
உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அர்த்தமேருவிலேயே அன்னை வாசம் செய்கின்றாள்.
இத்தலத்தில் தான் பார்க்கவ முனிவரும், மார்க்கண்டேய
முனிவரும் கடுந்தவம் புரிந்து பேறு பெற்றனர். ஒருசமயம்
திருக்கயிலையில் பரமேஸ்வரனும், பார்வதியும் கண்ணாமூச்சி
விளையாட ஆவலுற்றனர்.
அச்சமயத்தில் இறைவனை சூரிய, சந்திரரின் திருநயனங்கள்
என்று கூறுகிறார்களே, அவற்றை மூடினால் என்னவாகும்
என்றெண்ணிய உமாதேவி இறைவன் திருநயனங்களை தம்
திருக்கரங்களால் மூடினார்.
கண்களை பொத்திய மாத்திரத்தில் உலகமே இருள் சூழ்ந்தது.
உயிர்கள் அனைத்தும் சுவாசிக்க முடியாமல் திணறின.
அது கண்ட இறைவன் வெகுண்டெழுந்து, உமாதேவியாரை
நோக்கி “பூவுலகில் அவதரித்து ஏகாம்பரம் என்றழைக்கப்படும்
ஒற்றை மரத்தடியின் கீழ் கடுந்தவம் புரிந்து எம்மை வந்து
அடைவாயாக என்று உத்தரவிட்டார்.
இறைவனது உத்தரவினை ஏற்றுக் கொண்ட அன்னை உமாதேவி
இம்மாங்காடுத் தலம் வந்தடைந்து ஐந்தணல் வளர்த்து,
பஞ்சாட்சரனை நினைந்து கடுந்தவம் புரிந்தாள்; அதன் பின்னர்
கச்சியம்பதி சென்றடைந்து கம்பநதிக் கரையில் சிவ பூசை புரிந்து,
தவத்தை மேம்படசெய்து முடித்து மீண்டும் இறைவனை
வந்தடைந்தாள் என்பது வரலாறு.
நன்றி:வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 21119
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|