சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» படித்ததில் பிடித்தது-7அ
by rammalar Yesterday at 20:26

» நகைச்சுவை உணர்வு கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 20:20

» என்னோட ஏரியா;வில பிச்சை எடுக்க வராதே!
by rammalar Yesterday at 7:30

» எல்லா உயிர்களையும் நேசி - விவேகானந்தர்
by rammalar Yesterday at 7:18

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by rammalar Yesterday at 7:15

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by rammalar Yesterday at 7:13

» சிகரெட் பிடிக்கிறதை படிப்படியா குறைச்சிட்டேன்!
by rammalar Yesterday at 7:03

» கட்சியிலிருந்து ‘அடி’யோட நீக்கிட்டாங்களாம்!
by rammalar Yesterday at 6:57

» சுந்தர்.சி இயக்கத்தில் தமன்னா
by rammalar Yesterday at 5:06

» பெங்களூரு இஸ்கான் கோவில் சிறப்புகள் என்னென்ன?
by rammalar Yesterday at 4:47

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Mon 17 Jun 2024 - 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Mon 17 Jun 2024 - 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Mon 17 Jun 2024 - 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Mon 17 Jun 2024 - 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Mon 17 Jun 2024 - 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Mon 17 Jun 2024 - 6:06

» பல்சுவை
by rammalar Mon 17 Jun 2024 - 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Mon 17 Jun 2024 - 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Mon 17 Jun 2024 - 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Mon 17 Jun 2024 - 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Mon 17 Jun 2024 - 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Mon 17 Jun 2024 - 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun 16 Jun 2024 - 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun 16 Jun 2024 - 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun 16 Jun 2024 - 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun 16 Jun 2024 - 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun 16 Jun 2024 - 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun 16 Jun 2024 - 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun 16 Jun 2024 - 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun 16 Jun 2024 - 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun 16 Jun 2024 - 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun 16 Jun 2024 - 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun 16 Jun 2024 - 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

அனாதைக்காதலன் கவிதைகள் Khan11

அனாதைக்காதலன் கவிதைகள்

Go down

அனாதைக்காதலன் கவிதைகள் Empty அனாதைக்காதலன் கவிதைகள்

Post by rammalar Mon 10 Jun 2024 - 11:50

அனாதைக்காதலன் கவிதைகள் 380191_256000997789648_223512901038458_762562_1748141228_n_large


:hearts:

தெளிந்த நன்

மழை நீரை

மட்டும்

அருந்தி வாழும்

அது

சாதகப் பறவை !

தேனினும் இனிய

உன்னை மட்டும்

எழுதும்

நான்

சாதகக் கவிஞன் !

♥அனாதைக்காதலன் கவிதைகள் Bfcf1d880022ea774ec0de97_large-+%281%29
 :hearts:

ஒரே ஒரு நாள்

நம் தூக்கத்தை

கலைத்து

எழுப்பியது

காதல்...

இன்று

ஒவ்வொரு

இரவிலும்

அதைத்

தூங்கவிடாமல்

கையிலும்

தோளிலும்

நெஞ்சிலுமிட்டுக்

கொஞ்சிக்

கொண்டிருக்கிறோம் !

நன்றாக

நம்மிடம்

மாட்டிக்கொண்டது

காதல் !

♥
அனாதைக்காதலன் கவிதைகள் Tumblr_lue5k0kxHU1r36cqko1_500_large
 :hearts:

உனக்கான

கவிதைகளாய்

என் எல்லா

நோட்டுகளிலும்

எழுதி வைத்தேன் ...

நான் விரும்பி

செய்த ஒரே

வீட்டுப்பாடம்

நீ மட்டும் தான்

அழகி !!

♥
அனாதைக்காதலன் கவிதைகள் Tumblr_lst602q4Ld1qejm4fo1_500_large

என் மௌனம்

உன் பெரும்

தேவை

என்கிற போது

என்அன்பின்

மொழிகள்

அனாதையாகிப்

போகிறதே

அதை நான்

என்ன செய்ய ?

ம்ம் ? என்ன செய்ய ?


அனாதைக்காதலன் கவிதைகள் Tumblr_ljwessBPvJ1qemntzo1_500_large_large
எண்ணற்ற

உறவுகளுடன்

தொடங்கிய

வாழ்க்கையின்

எல்லை

எங்கிருந்தாலும்

பரவாயில்லை

அங்கு நீ

மட்டும் நில் !

உன் மடியில் என்

எல்லா

மூச்சையும்

முடித்துக் கொண்டு

காற்றோடு

காற்றாகிவிட்டால்

சந்தோஷம் !

அனாதைக்காதலன் கவிதைகள் Tumblr_lr2y1w2fCZ1qk62x7o1_500_large_large
நன்றி- அனாதைக்காதலன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24616
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அனாதைக்காதலன் கவிதைகள் Empty Re: அனாதைக்காதலன் கவிதைகள்

Post by rammalar Mon 10 Jun 2024 - 11:52
அனாதைக்காதலன் கவிதைகள் Tumblr_lr2y1w2fCZ1qk62x7o1_500_large_large
  :hearts:
மண்ணை
மழை
முத்தமிடுகையில்
எழும்
வாசத்தையும்,

உன்னை

நான்

முத்தமிடுகையில்

எழும்

வெட்கத்தையும்

ஒன்றாய்க்

கலந்து

ஓர் உணவு

செய்து

அதற்கு

அன்பெனப்

பெயரிட்டுத்

தின்று கொழுக்க

வேண்டும்....

உயிரெல்லாம்

நீயாகவும்

உணர்வெல்லாம்

மழையாகவும்

சில்லெனக்

குளிர வேண்டும் !

♥
அனாதைக்காதலன் கவிதைகள் 4fc63b6cab95d3e9e07a09b3fd2d1a72_largeவரம்
கேட்கவில்லை,
நீயாய்
வந்தாய் .
சாபமும்
கேட்கவில்லை,
வந்த வழி
சென்றாய் .
விதியை
நொந்து

கொள்ள

விருப்பமில்லை.

உயிரும் உடலுமே

இங்கு நிலை

இல்லை !

இருப்பினும்

தூக்கிக் கொஞ்ச

ஆளில்லாமல்

தனித்துக் கிடக்கும்

அன்பை

நினைத்தால்

தான்

கத்தி அழத்

தோன்றுகிறது !

பாவம் !

ஒத்தையாய்

நிற்கிற

அத்தனை

அன்பும்

பாவம் .


அனாதைக்காதலன் கவிதைகள் Tumblr_lqfiwh79Wt1qgujfno1_500_large
 ●
ஒவ்வொரு
எழுத்தும்
உன்னை
எழுதிவிட்டு
எங்கேயோ
இருக்கிற
ஏதோஒரு
பெண்ணுக்காக
எழுதியதாக

நடிப்பது

நம் காதலுக்கு

நான்

வேறு வழியின்று

இட்டுக்

கொள்ளும் சூடு !
அனாதைக்காதலன் கவிதைகள் 546104_10150889703473993_1399971914_n

:hearts:
உன்னைப்
பிரதி எடுத்து
இடது கையில்
வைத்துக் கொண்டு
வலது கையில்

எல்லா

அழகையும்

தத்ரூபமாய்

வரைந்துவிட்டது

இயற்கை ...

சப்தமின்றி

பின்னால்

நின்று ரசித்த

வகையில் நான்

இயற்கையைவிட

இன்னும்

கொடுத்தவைத்த

காதலனாகிவிட்டேன் ! !

♥
அனாதைக்காதலன் கவிதைகள் 380252_447921701898334_1844748822_n
 ●
நீ
பார்த்த
நொடியிலேயே
பிடித்துப் போன
பொம்மையும்
பார்க்கப் பார்க்கப்
பிடித்துப் போன
நானும் என

ரெண்டு பெரும்

கொடுத்து

வைத்தவர்கள் !

உன் அணைப்பிலேயே

ஒவ்வொரு இரவும்

தூங்க !

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24616
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அனாதைக்காதலன் கவிதைகள் Empty Re: அனாதைக்காதலன் கவிதைகள்

Post by rammalar Mon 10 Jun 2024 - 11:52


அனாதைக்காதலன் கவிதைகள் 250855_447912801899224_763906212_n
 ●
வெறுமையாய்
தரைதொட்டுக்
கிடக்கிற
என் உடலுக்குள்
எந்த உணர்வுகளும்
இல்லை !
நீ மட்டும்
அவ்வப்போது
வந்து இருக்கிற
உயிரையும்
கிள்ளிவைத்துப்
பரிசோதித்துப்
போகிறாய் !
இருக்கிறேனா ?
நான் இன்னும்
இருக்கிறேனா
என்று !
இருக்கிறேன்
நான் ஏனோ
இன்னும்
இருக்கிறேன் !
அனாதைக்காதலன் கவிதைகள் 197683_447899768567194_1496461440_n

வெறுமையாய்
தரைதொட்டுக்
கிடக்கிற
என் உடலுக்குள்
எந்த உணர்வுகளும்
இல்லை !
நீ மட்டும்
அவ்வப்போது
வந்து இருக்கிற
உயிரையும்
கிள்ளிவைத்துப்
பரிசோதித்துப்
போகிறாய் !
இருக்கிறேனா ?
நான் இன்னும்
இருக்கிறேனா
என்று !
இருக்கிறேன்
நான் ஏனோ
இன்னும்
இருக்கிறேன் !

அனாதைக்காதலன் கவிதைகள் Tumblr_m0g2gaJxG41rprijqo1_500_large
 ●
என் கவிதை
வீட்டில்,
எல்லாம் "நீ"யாய்
நிறைத்துப்
பூட்டிவிட்டு,
சாவியை
எங்கேயோ
தொலைத்து
விட்டதைப்
போலிருக்கிறது
இந்த இரவு !
● 

அனாதைக்காதலன் கவிதைகள் 554692_444035228953648_1611365871_n

எங்கேயோ
பாறைகளின்
இடுக்குகளில்
பூத்திருக்கும்
ஒற்றை மலரைப்
பார்த்து
வேதனைப்
படாமல்
இருக்க
முடிவதில்லை !
அது நீ இல்லாத
நானாகவே
தெரிகிறது !
● 
அனாதைக்காதலன் கவிதைகள் F79b99a88a2afd8f18aaf7ca48618e04c7d2c4b3
 ♥
உன் மத்தாப்புப்
பேச்சு
எல்லோருக்கும்
பெருவரம் .
எனக்கும் உன்
மௌனமும்
சேர்த்து !
:hearts:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24616
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

அனாதைக்காதலன் கவிதைகள் Empty Re: அனாதைக்காதலன் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum