சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:00

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

பரிசு! Khan11

பரிசு!

Go down

பரிசு! Empty பரிசு!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 11 Jun 2011 - 12:37

இனிமையான காலைப் பொழுதில், கமலன் பள்ளிக்குச் செல்வதற்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். கமலனின் அம்மா காலை உணவை முடித்தபின் கமலனை உண்பதற்காக அழைத்தார்.

கமலன் "இதோ வருகிறேன்" என்று உள்ளிருந்து கூரல் கொடுத்தான். சற்றேன்று ஏதோ நினைவு வர "அடக்கடவுளே எப்படி மறந்தேன்! அம்மாவிடம் கேட்கனுமே, ஆனா அம்மா ம்.. முடியாதுன்னுதா சொல்லுவா, இருந்தாலும் கேட்டுப் பார்ப்போம்." என்று தனக்குள் கூறிக் கொண்டான் கமலன். ஒருவாறு சாப்பிட வந்த கமலுனுக்கு அம்மா சாப்பாடு போட்டுக் கொடுத்தார். கமலன் சாப்பிட்டுக் கொண்டே "அம்மா, அம்மா" என்று மெல்லமாக அழைத்தான். "ம்..என்னப்பா சொல்லு" என அம்மா கேட்க,

"அம்மா அது வந்து இன்னைக்கு எங்க ஸ்கூல்ல ஆசிரியர் தின விழா கொண்டாடுறாங்க, எங்களுக்கு படிச்சு கொடுத்த கிலாஸ் டீச்சருக்கு என் நண்பர்கள் எல்லாம் பரிசு கொடுக்குறாங்க" என்று கூறி கதையை சிறிது நிறுத்தினான். அம்மா கமலனைப் பார்த்து "ம்..அதனால?" என, "இல்லம்மா நானும் ஏதாச்சும் வாங்கி....கொ...கொடுக்கலாமேன்னு ஆசைப்படுறேன் மா" என்று இழுத்து இழுத்து சொல்லி முடித்தான் கமலன். அதற்கு அம்மா "கமலா நீ சொல்லறது சரிதான் இவ்வளவு நாள் படிச்சு கொடுத்த டீச்சருக்கு பரிசு வேண்டி கொடுக்கனுதாப்பா, ஆனா எங்க நிலை உனக்குத் தெரியாதா, பரிசு வேண்டனும்னா நிறைய காசு வேணுமே அதற்கு எங்க போறது, டீச்சருக்கு வாழ்த்து மட்டும் சொல்லுப்பா போதும், எங்க நிலைமய அவங்க புரிஞ்சுக்குவாங்க. சரியா. ம்..சரி நீ கிளம்புப்பா நேரமாச்சு"என்றார். கமலனின் அம்மா சொல்வது உண்மைதான், அவனது குடும்பம் மிக ஏழைதான், அவனால் ஆசிரியருக்கு பரிசு வாங்கிக் கொடுப்பது இயலாததுதான். கமலனும் அம்மா சொல்வதும் சரிதான், "பணம் இல்லத்தான்" என்று எண்ணி விட்டு பள்ளிக்கு புறப்பட்டான்.

போகும் வழியில் கமலன் "என்ன இருந்தாலும் ஆசிரியருக்கு ஏதாவது கொடுக்கனுமே, ச்சே பணமும் இல்ல, என்ன செய்வது" என்று எண்ணினான். சிந்தித்துக் கொண்டே நடந்து செல்கையில் மேலே இருந்து ஓர் அழகான இலை மரத்திலிருந்து உதிர்ந்து அவன் முன்னால் வீழ்ந்தது."என்ன விழுந்துச்சு?" என்று குனிந்து அவ் இலையை எடுத்தான்."அட இந்த இலை இவ்வளவு அழகாக இருக்கு" என்று அந்த இலையை பின்னும் முன்னும் திருப்பி திருப்பி பார்த்தான். சற்று என்று அவனுக்கொரு யோசனை தோற்றிற்று. "இப்படிச் செய்தா என்ன? இந்த இலையிலேயே ஓர் அழகான வாழ்த்த எழுதி டீச்சரிடம் கொடுத்துருவோம். வெறும் வாழ்த்தைச் சொல்லாம இதையும் கொடுத்தா டீச்சருக்கு பரிசும் கொடுத்த மாதிரி இருக்கும்ல" என்பதுதான் அவனது யோசனை. அவ்வாறே இலையில் எழுதி அவனிடம் இருந்த ஓர் சிறிய பையினுல் வைத்துக் கொண்டான்.

பள்ளியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக நடந்தேறியது. விழா முடிந்து அனைவரும் அவர் அவர் வகுப்பறைக்குச் சென்றனர். கமலனின் வகுப்பறையினுல் அவ்வகுப்பு ஆசிரியை வந்தவுடன் மாணவர்கள் அவரை சூழ்ந்த்து கொண்டனர். அனைவரும் தாங்கள் வைத்திருந்த பரிசுப் பொருட்களை ஆசிரியருக்கு கொடுத்து மகிழ்ந்தனர். அப் பரிசுப் பொருட்களை பார்த்தவுடன் கமலனுக்குச் சற்று தயக்கம் வந்துவிட்டது "எல்லா அப்படித்தான் பரிசு கொடுக்குறாங்க நான் எப்படி இதப் போய் கொடுக்கிறது,டீச்சர் என்ன நினைப்பாங்க? ச்சே...ம்.." என்று தனக்குள் அலட்டினான். "இருந்தாலும் கொடுப்போம், என்ன நினைச்சாலும் பருவால்ல" என்று சற்று தெளிவானான். ஆசிரியரின் அருகில் சென்றான். "டீச்சர் ஹாப்பி டீச்சர்ஸ் டெய்!" என்று தனது சட்டைப் பையினுல் இருந்து அந்தப் பையை எடுத்து நீட்டினான். ஆசிரியரும் "ரொம்ப நன்றி கமலன்" என்று அதை வாங்கிக் கொண்டார்.

அதைப் பிரித்தும் பார்த்தார். அழகான இலை ஒன்று இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அந்த இலையில் கமலன் எழுதியிருந்த வாழ்த்தை வாசித்து வியர்ந்தார். தன்மேல் கமலனுக்கு உள்ள பாசத்தை கண்டு மனம் மகிழ்ந்தார். கமலனை ஆரத் தழுவிக் கொண்டார் "ரொம்ப நன்றி கமலா மத்தவங்க கொடுத்த பரிசை விட எனக்கு இதுதான் விலையுயர்ந்த பரிசு",உன்னிடம் பணம் இல்லாட்டியும் ஏதாவது கொடுக்கனுமே என்று நினைச்ச பார்த்தியா! நீ உண்மையில் உயர்ந்தவந்தான்" என்றார். கமலானால் ஆசிரியரின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை. எல்லையற்ற இன்பம் கொண்டான். அன்றய தினம் கமலனுக்கும் சரி அந்த ஆசிரியைக்கும் சரி ஓர் மறக்க முடியா நாள் ஆனது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum