சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

கேள்வி பதில் கேள்வி பதில் Khan11

கேள்வி பதில் கேள்வி பதில்

Go down

கேள்வி பதில் கேள்வி பதில் Empty கேள்வி பதில் கேள்வி பதில்

Post by நண்பன் Fri 17 Jun 2011 - 12:20

கேள்வி பதில் கேள்வி பதில் கேள்வி பதில் கேள்வி
1. எங்களுக்கு மூன்று பிள்ளைகள். இவர்களில் இருவர் வெளிநாட்டில் உள்ளனர். தற்பொழுது வெளிநாட்டில் இருக்கும் இருவருக்கும் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லை. எமது வீடு மற்றும் ஏனைய சொத்துக்களை அவர்களுக்கு கைமாற்றுவதாயின் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் அறியத்தருக.

மார்க்கண்டு கொழும்பு

வெளிநாட்டில் இருக்கும் இருவருக்கும் இலங்கைப் பிரஜாவுரிமை இல்லை என்பதால் இவர்கள் இருவரும் வெளிநாட்டவர்கள் போன்று கருதப்பட்டு நடத்தப்படுவார்கள். நீங்கள் உங்களது சொத்தினை அவர்களுக்கு மாற்றவோ அல்லது கொடையாக வழங்கவோ முடியும். இது தொடர்பில் நீங்கள் 100/= முத்திரைக் கட்டணம் செலுத்த வேண்டும். பெற்றோர் தமது சொத்தினை இறுதி விருப்பாவணம் மூலம் கைமாற்றாவிட்டாலும் பொதுவாக பெற்றோர்களின் இறப்பின் பின்னர் பெற்றோர்களின் சொத்தானது பிள்ளைகளுக்குச் செல்லும். எனவே நீங்கள் உங்களது சொத்தினை இறுதி விருப்பாவணம் மூலம் அவர்களுக்கு கைமாற்றலாம் அல்லது கைமாற்றாது விடலாம்.

2. காணி விபரத்தாள் என்றால் என்ன என்பது தொடர்பில் அறியத்தருக.

காந்தன் வத்தளை

காணி விபரத்தாள் என்பது சொந்தமாக தனியார் காணி வைத்திருக்கும் மக்களுக்கு காணிப் பதிவு அலுவலகம் வழங்கும் ஓர் ஆவணமாகும். உங்கள் காணியின் தற்போதைய மற்றும் முன்னைய சொந்தக்காரர்கள், மற்றும் முன்பு செய்யப்பட்டிருக்கக்கூடிய எவையேனும் கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய ஒரு பதிவேடாகும் (உதாரணத்திற்கு ஈடுவைத்தல் போன்றது).

சட்டத்தரணிகள் இதை “உரித்து வரலாற்றுத் தொகுப்பு” அல்லது ஒரு “தடை வில்லங்கத் தாள்” என அழைப்பார்கள். இரண்டும் ஒன்றுதான்.

3. எனது சகோதரன் “பீ” அங்கத்துவ சான்றுப் பத்திரத்தினைத் தொலைத்து விட்டார். இவர் புது “பீ” அங்கத்துவ சான்றுப் பத்திரத்தினைப் பெற்றுக்கொள்ள முடியுமா என்பதை அறியத் தருக.

சதீஸ் கண்டி

ஆம். இவர் புது “பீ” அங்கத்துவ சான்றுப்பத்திரத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். உங்களது சகோதரன் “பீ” அங்கத்துவ சான்றுப்பத்திரத்தினைத் தொலைத்துவிட்டமையால் அவரை “பீ” விண்ணப்படிவம் ஒன்றினை பூர்த்தி செய்து அதனுடன் காசுக் கட்டளை ஒன்றினை தொழில் ஆணையாளர், கொழும்பு என வரைந்து அவற்றை உதவித் தொழிலாணையாளர், தபால் பெட்டி இலக்கம் 1725, கொழும்பு என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

4. எனது மகனின் பிறப்புச் சான்றிதழானது இன்னும் பதிவு செய்யப்படவில்லை. எனது மகன் பிறந்த இடத்தில் உள்ள பிரதேச செயலகத்தில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் சகல ஆவணங்களையும் நான் கொடுத்துள்ளேன். ஆயினும் பிரதேச செயலக அலுவலகமானது பதிவு செய்வது தொடர்பில் இன்னமும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பில் நான் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் அறியத்தருக.

சண்முகப்பிரியா, யாழ்ப்பாணம்

2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு சட்டத்தின் பிரிவு 5 (1) இன்படி சிறுவர் ஒவ்வொருவருக்கும் அவரின் அல்லது அவளின் பிறப்பை பதிவு செய்து கொள்வதற்கும் அவரின் அல்லது அவளின் பிறந்த திகதியிலிருந்து பெயரொன்றைக் கொண்டிருப்பதற்கும் உரிமையுண்டு. ஆகவே இச்சட்டத்தின் பிரிவு 6 மற்றும் பிரிவு 7 என்பவற்றுக்கிணங்க நீங்கள் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளருக்கெதிராக மேல்நீதிமன்றத்தில் மீறுகை இடம்பெற்ற தினத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் வழக்கினைத் தாக்கல் செய்ய முடியும்.

5. எனக்குத் ‘தனிப்பட்ட’ காணி இருக்கிறதா என்பதை நான் எப்படி அறிந்து கொள்வது தொடர்பில் அறியத்தருக.

சுந்தரலிங்கம், கிளிநொச்சி

உங்கள் காணிச் சொத்துவ ஆவணம் உறுதியொன்றாகவோ அல்லது கொடை ஒன்றாகவோ இருந்தால் நீங்கள் தனிப்பட்ட காணி வைத்திருக்கின்aர்கள் என பொருள்படும். ஓர் “உறுதி” ஆனது நொத்தாரிசு ஒருவரால் எழுதப்படுகின்றது. வழக்கமாக அதன் முகப்புப் பக்கத்தில் தபால் முத்திரை ஓட்டப்பட்டிருக்கும். ஒரு நில அளிப்பு “ஜெயபூமி”, “சுவர்ணபூமி” அல்லது “ரத்னபூமி” எனவும் அழைக்கப்படும். அதன் முகப்பில் ஒரு பெரிய சிவப்பு இலச்சினை ஒன்று இருக்கும்.

உறுதிகளும் நில அளிப்புக்களும் காணிப் பதிவகத்தில் பதிவு செய்யப்படுகின்றன. உங்களுடைய காணிச் சொத்துவ ஆவணத்தில் காணிப் பதிவக முத்திரை இருக்கிறதா என்று பாருங்கள்.

6. நான் குத்தகை உரிமையாளருடன் குத்தகை ஒப்பந்தமொன்றை செய்யத் தீர்மானித்துள்ளேன். ஆயினும் குத்தகை உரிமையாளர் குத்தகையினைப் பதிவு செய்யத் தேவயில்லை எனக் கூறுகின்றார். ஏன் இவர் இவ்வாறு கூறுகின்றார் என்பதற்கான காரணத்தை அறிய விரும்புகின்றேன். அத்துடன் குத்தகையைப் பதிவு செய்வதனால் அதற்கு கிடைக்கும் சட்டவலிதாந்தன்மை என்ன என்பதையும் அறியத்தருக.

விவேகானந்தன் , வவுனியா

குத்தகை உரிமையாளருக்கும் குத்தகைக்கு எடுப்போருக்கும் இடையில் குத்தகை ஒப்பந்தமொன்று காணப்படின் அக்குத்தகை ஒப்பந்தமானது கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்தல் தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் பிணக்கு காணப்படினும் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தமானது பதிவு செய்யப்படாத குத்தகை ஒப்பந்தத்தை விட வலிதானது. குத்தகை உரிமையாளர் பதிவு செய்ய மறுத்தால் நீர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குத்தகை உரிமையாளர் உங்களை ஏமாற்றி விடுவார்.

7. பதியப்படாத பிறப்பை எவ்வாறு பதிவு செய்தல் என்பது தொடர்பில் எனக்கு அறியத்தருக.

நிர்மலா வேப்பங்குளம், வவுனியா

பதியப்படாத பிறப்பைப் பதிவு செய்வதற்கு பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய காலம் கடந்த பிறப்பை பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் ஏற்கனவே பிரதேச செயலகத்திலிருந்து பெறப்பட்ட பிறப்பு பதியவில்லை என பெறப்பட்ட சான்றிதழையும் சேர்த்து அத்துடன் பின்வரும் ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

1. பிறந்த திகதி, இடம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்.

i. தங்களால் பெறக்கூடியவை

அ. வைத்தியசாலையில் பிறந்திருந்தால், வைத்தியசாலைக் கடிதம். ஆ. 1ம் ஆண்டில் சேர்க்கப்பட்ட பாடசாலை பதிவேட்டின் பிரதி, விடுகைப் பத்திரம்

2. தங்கள் வசம் இருப்பின்

அ. பிறந்தபோது எழுதப்பட்ட சாதகம் அல்லது பிறந்தவுடன் ஞானஸ்தானம் கொடுக்கப்பட்டிருப்பின் அச்சான்றுப் பிரதி. ஆ. தடுப்பூசி மட்டை

8. தயவு செய்து மத்திய சபைகள் ஆணைக்குழுவின் முகவரியை அறியத்தருக.

இளங்கோவன் திருகோணமலை

இல. 428/11இ

இரண்டாம் மாடி, மேயர் டென்சில் கொப்பேகடுவ மாவத்தை,

பத்தரமுல்லை.

9. கடந்த இரண்டு வருடாமாக கணக்கீட்டு மேற்பார்வை நிறுவனத்தின் நான் இலிகிதராக வேலை செய்து வருகின்றேன். இதுவரை நான் வருடாந்த விடுமுறைகள் எடுத்ததில்லை. எனது தொழில் தருனரும் விடுமுறை எடுக்கும்படி கூறவில்லை. கடந்த இரண்டு வருடத்திற்குமாக நான் எவ்வளவு நாட்கள் வருடாந்த விடுமுறைக்கு உரித்துடையேன் என்பது தொடர்பில் எனக்கு அறியத்தருக.

பாகிம் ,மொரட்டுவ

1. வருடாந்த விடுமுறை எடுப்பதற்கு நீங்கள் வேலைக்கு சேர்ந்த திகதியில் இருந்து ஒரு வருடத்தை பூர்த்தி செய்திருக்க வேண்டும். பின்வருமாறு விடுமுறை ஏற்புடையது.

2. வேலையானது ஜனவரி முதலாம் திகதி அல்லது அதற்கு பின்னர் ஆனால் ஏப்ரல் முதலாம் திகதிக்கு முன்னர் ஆரம்பமாகியிருப்பின் 14 நாட்களும்.

3. வேலையானது ஏப்ரல் முதலாம் திகதி அல்லது அதற்கு பின்னர் ஆனால் ஜூலை முதலாம் திகதிக்கு முன்னர் ஆரம்பமாயிருப்பின் 10 நாட்களும்.

4. வேலையானது ஜுலை முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் ஆனால் ஒக்டோபர் முதலாம் திகதி முன்னர் ஆரம்பமாயிருப்பின் 07 நாட்களும்.

5. வேலையானது ஒக்டோபர் முதலாம் திகதி அல்லது அதற்குப் பின்னர் ஆனால் டிசம்பர் முப்பத்தியோராம் திகதிக்கு முன்னர் ஆரம்பமாயிருப்பின் 04 நாட்களும்.

10. இந்தியாவில் அகதி முகாம்களில் பிறந்த இலங்கைக் குழந்தைகளின் பிறப்பைப் எவ்வாறு பதிவு செய்தல் என்பது தொடர்பில் எனக்கு அறியத்தருக.

தங்கேஸ்வரி, திருநகர்

மேற்படி பதிவினை மேற்கொள் ளுவதற்கு கீழ் குறிப்பிடப்படும் ஆவணங்களுடன் உங்கள் பிரதேச செயலகத்துடன் தொடர்பு கொள்ளவும்.

. பெற்றோரின் விவாகச் சான்று அல்லது அதனை உறுதிப்படுத்தும் ஆவணம்.

2. பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ்

3. பிள்ளைகளின் பட்டியல்

4. பிள்ளை இந்தியாவில் பிறந்ததென்பதை உறுதிப்படுத்தும் இந்தியாவில் வழங்கப்பட்ட சான்றிதழ்

5. பிள்ளை பிறந்தபோது பெற்றோர் இலங்கைப் பிரஜையாக இருந்தனர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணம்

6. பெற்றோரின் இலங்கைக் கடவுச் சீட்டின் பிரதி

7. பெற்றோர் அகதிகளாக இந்தியா சென்று வந்திருப்பின் அதனை உறுதிப்படுத்தும் ஆவணம்.

8. பெற்றோர் தற்போது வதியும் கிராம சேவை அலுவலரின் கடிதம்

9. பெற்றோரின் விபரங்களை உறுதிப்படுத்தும் ஆவணம்.

1. பெற்றோரின் விவாகச் சான்று அல்லது திருமணம் செய்துவைத்த குருவின் கடிதம் அல்லது சத்தியக்கூற்று.

2. பெற்றோரின் பிறப்புச் சான்று (இருப்பின்)

3. அப்பெற்றோருக்கு பிறந்த எல்லாப் பிள்ளைகளினதும் பெயர், பால், பிறந்த திகதி, பிறந்த இடம் காட்டும் பட்டியல்.

4. அப்பெற்றோருக்கு பிறந்த பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்.

5. பெற்றோரின் அடையாள அட்டை.

6. குடும்பப் பதிவு அட்டை

7. கிராம சேவையாளரின் அறிக்கை

8. இவ்வருடத் தேடலுக்கான 100 ரூபா முத்திரை

11. நான் பிரசித்தி பெற்ற கம்பனி ஒன்றில் வேலை செய்து வந்தேன். அது ஒரு குழுக்கம்பனி. அக்கம்பனியில் இருந்து விலகி வேறொரு கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தேன். முன்னர் நான் வேலை செய்த கம்பனியானது எனது இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் இராஜினாமா செய்தபடியால் நான் பணிக்கொடை பெற முடியாது என நான் முந்தி நினைத்தேன். ஆயினும் அண்மையில் நான் தொழில் திணைக்களத்தில் வழக்கினைத் தாக்கல் செய்தால் பணிக்கொடையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிந்து கொண்டேன். அத்துடன் அக்கம்பனியில் நான் 10 வருடம் வேலை செய்தேன். தற்பொழுது எனது பிரச்சினை என்னவெனில் நான் வேலை செய்த குழுக்கம்பனியானது மூடப்பட்டுவிட்டது. ஆயினும் தொழில் முதல்வர் கொழும்பில் வசித்து வருகின்றார். இது தொடர்பில் எனக்கு ஆலோசனை வழங்குக.

சரவணன் கொழும்பு

உங்களது முன்னைய தொழில்தருனரிடம் 15 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் இருந்திருப்பின் அத்துடன் உங்களது தொழிலானது பண மோசடி அல்லது சொத்துக்கு நட்டம் அல்லது தீங்கு ஏற்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக அன்றி முடிவுறுத்தப்பட்டிருப்பின் உங்களது தொழில்தருனர் 1983 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் பணிக்கொடை அளிப்பதிலிருந்து விலக முடியாது. நீங்கள் ஏற்கனவே உங்களது தொழிலிருந்து இராஜினாமா செய்தபடியால் உங்களது பணிக்கொடை தொடர்பில் நீங்கள் தொழில் ஆணையாளருக்கு முறைப்பாடொன்றினை மேற்கொள்ள வேண்டும்.

12. இலங்கையில் உள்ள வெளிநாட்டுக் கம்பனிக்கெதிராக வழங்கப்பட்ட நடுத்தீர்ப்பானது வெளிநாட்டவரின் நாட்டிலும் அமுல்படுத்த முடியுமா என்பது தொடர்பில் அறியத்தருக.

முகைதீன், மட்டக்களப்பு

1958 ஆம் ஆண்டு நியூயோர்க் கென்வென்சனானது உலகில் உள்ள பெரும்பான்மை நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஒரு நாட்டில் வழங்கப்பட்ட நடுத்தீர்ப்பானது நீதிமன்றத்தினூடாக வேறு நாடுகளிலும் அமுல்படுத்த முடியும். நடுத்தீர்ப்பு யாருக்கெதிராக வழங்கப்பட்டதோ அவர் நடுத்தீர்ப்பு பொறுப்பிலிருந்து விலக முடியாது. ஏனெனில் 1958 ஆம் ஆண்டு நியூயோர்க் கென்வென்சனின் கீழ் சர்வதேச அமுல்படுத்தல் நியாயாதிக்கம் நடுத்தீர்ப்புக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தினகரன் இலங்கை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum