சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

நடு வீட்டில் ஓர் நச்சு செடி Khan11

நடு வீட்டில் ஓர் நச்சு செடி

4 posters

Go down

நடு வீட்டில் ஓர் நச்சு செடி Empty நடு வீட்டில் ஓர் நச்சு செடி

Post by ஷஹி Sun 17 Jul 2011 - 16:06

தாய்மார்களே! சீரியலும், சினிமாவும் தான் பொழுது போக்கு என்று இருக்கும் உங்களுக்கு, உங்கள் குழந்தை நல்ல பிள்ளைகளாக வள‌ர விருப்பம் இருந்தால் இதைப் படியுங்கள்.நடு வீட்டில் ஓர் நச்சு செடி Ss
உங்கள் தோட்டத்தில் தேவை இல்லாத களைகளை நீக்கித் தோட்டத்தை அழகுப் படுத்தும் நீங்கள் , ஏன் வீட்டின் உள்ளேயே உங்கள் கண் முன்னாடி களையை வளரவிடுகிறிர்கள்.

***

என்ன புரியலையா? இதை படித்து பாருங்கள் புரியும்.

***

குழந்தைகளைக் கொல்லும் எமன் தொலைக்காட்சி:

*

உங்கள் குழந்தைகள் பொம்மைத் துப்பாக்கி வாங்கிக் கேட்கிறார்களா? சுண்டுவிரலை உங்கள் நெற்றிப்பொட்டில் வைத்து டிஸ்ஸோ டிஸ்ஸோ என்று சப்தம் கொடுக்கிறார்களா? உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என்கிறார்களா? பெரியவர்கள் போல் பேசுகிறார்களா? விட்டத்தில் தொங்கிகொண்டு ஸ்பைடர்மேன் போல் தாவுகிறார்களா? பிற குழந்தைகளை கைகளால் தாக்கி விளையாடுகிறார்களா? என்னேரமும் சவுண்ட் எபெக்ட் கொடுக்கிறார்களா? கார்டூன் கீச்சு குரலிலும் கனத்த வில்லன் சப்தத்திலும் பேசுகிறார்களா? பாட்டு ,குத்தாட்டம் இவற்றில் அதிக ஆர்வம் காட்டுகிறார்களா? புத்தகம் வாசிப்பது , படிப்பு , விளையாட்டு இவற்றில் ஆர்வம் குறைந்து இருக்கிறார்களா?

*
இத்தனைக்கும் காரணம் டி வி & கணிணியில் தேவை இல்லாதா வன்முறை விளையாட்டுக்கள் தான்.
*
பள்ளிக் கூடம் முடிந்து வீடு வந்தது முதல் இரவு தூங்கும் வரை உளவியல் ரீதியாக குழந்தைகளை தாக்கி அவர்களின் பிஞ்சு உள்ளத்தை பழுக்கவைத்து சாகடித்துக் கொண்டிருக்கிறது இந்தத் தொலைக் காட்சி.

*
தொலைவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை அப்படியே அந்நேரமே வீட்டிலிருந்தபடியே பார்க்க முடிவது மிகச்சிறந்த அறிவியல் அற்புதம் தான்.ஆனால் இன்று தொலைக்காட்சிகள் வெறும் விளம்பர நிறுவனமாகவும், சினிமா தியேட்டராகவும் மாறி மக்கள் மதியை கொள்ளையடித்து பணம் சம்பாதிக்கின்றன. நம் வீட்டுக்கு நடுவே திறந்து கிடக்கும் இந்த பாதாள சாக்கடைக்கு ஒரு மூடியை போட்டு நம் குழந்தைகளும் பெண்களும் தவறி விழாமல் காப்போம்.பிஞ்சுக்களின் புலன்கள் வழி மூளையை கைப்பற்றி அழிக்கும் இந்த நஞ்சிலிருந்து நம் அன்புச் செல்வங்களை காப்போம்!

***
தொலைக்காச்சியில் என்ன காட்டுகிறார்கள்?
நடு வீட்டில் ஓர் நச்சு செடி 7சினிமா என்பது ஒரு பொழுது போக்குக் கலை, தொலைக்காட்சி என்பது ஒரு ஊடகம்.இரண்டும் வேறு.அனேக தொலைக்கட்சிகள் இதை உணராமல் தங்கள் நிகழ்ச்சிகள் முழுவதையும் சினிமாவை கொண்டே நிரப்பிக் கொள்கிறார்கள். ஒரு சுதந்திர தின நிகழ்ச்சியானாலும் திரைப்படக் கலைஞர்களின் பேட்டிகளைத் தான் காட்டுகிறார்கள். ( மக்கள் தொலைக்காட்சி விதிவிலக்காக சினிமாவை ஓரங்கட்டுவதை பாராட்டலாம்.)
*
திரைப்படங்களின் கொள்கையானது பெரும்பாலான ரசிகர்களின் மட்டமான ரசனையை குறிவைத்தும்.மனித மனங்களின் அழுக்குகள்,வக்கிரங்களுக்குத் தீனி போட்டும் இரண்டு மணி நேரம் திரை அரங்கத்துக்குள் ரசிகர்களை முடிந்த அளவு குஷிப் படுத்தி காசு சம்பாதிப்பதிலும் தான் இருக்கிறது.ஆண்கள் எடுக்கும் படங்களில் பெண்ணை இன்றுவரை போகப் பொருளாகத்தான் காட்டுகிறார்கள். இரட்டை அர்த்த வசனங்கள். கொச்சையான பாடல்கள் நிறைந்திருக்கின்றன. அத்தகைய தரத்திலுள்ள சினிமாவை குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் எல்லோரிடத்தும் ஒரே மாதிரியாக திணிப்பது மிகப்பெரிய தீமையான விளைவுகளை உண்டாக்கும். ஆத்தா ஆத்தோரமா வாரியா ?என்று அம்மாவை அழைக்கும் ஆபாச வரிகள் எல்லாம் குழந்தைகள் வாயிலே கொண்டு சேர்த்தது யார்?
*
எந்த சேனலை திருப்பினாலும் டிஸ்ஸூம் டிஸ்யூம் ,பம் ,தடால் முடால் அடி தடி சப்தம் ,பாம்கள் வெடிக்கிறது ,நீண்ட அரிவாள்கள் சகிதம் அலையும் முரடர்கள். தலையை கொய்வது ,துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, பெண்களை மானபங்கப் படுத்துவது, பழி தீர்ப்பது,வெட்டு குத்து,அழுகை,அலறல், காதல்,டப்பாங்குத்து ஆட்டம், துரத்தல்,பஞ்ச் டயலாக் என் சினிமா வெளிப் படுகிறது. பெரியவர்களுக்கு டென்சன் ,ரத்த அழுத்தத்தை அதிகரிக்க இது போதாதா?
*
எவ்வளவு எளிதில் சினிமாவில் பெண்கள் காதலிக்கிறார்கள். காதலியா ? கிராக்கியா எனுமளவு கதாநாயகிகளைக் காட்டுகிறார்கள்.டி வி சீரியல்களுக்கு ஜவ்வுபோல் இழுக்க முடிகிற, பல்வேறு கிளைகள், விழுதுகள் உள்ள ஆலமரம் போன்ற கதைகள் தான் மூலப்பொருள். அதில் கண்னீர் சிந்தி மூக்கை உறிஞ்சும் பெண்கள்,ஆஸ்பத்திரி , கற்பிணி, பிரசவம், சோரம் போதல் , பலதாரம்,ஒரு தலை மோகம், குடும்பத்துகுள் பழி வாங்குதல், துரோகம், வெட்டி வசனம் பேசுவது, அடுத்தது ஆட்டோவில் போவது ,அங்குமிங்கும் உலாத்துவது, ஆஸ்பத்திரி, கோமா, சதி ,வஞ்சனை இதைத் தான் திரும்பத்திரும்பக் காட்டுகிறார்கள்.
*
இந்தியாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பெண்களை கீழ்த்தரமாகவும், கொச்சைப் படுத்தியும் டிவி தொடர்கள் காண்பிக்கப் படுகின்றன என்று கூறுகிறது. ஏன் இவற்றில் எல்லாம் நல்லதை விடக் கெட்டதையே அதிகம் காண்பிக்கிறார்கள் என யோசித்துப்பார்த்தால் மக்கள் கெட்டதைத்தான் அதிகம் பார்க்க விரும்புகிறார்கள் என்பது புரிகிறது. அதை பார்ப்பதால் கெட்டவர்கள் தங்கள் மனசாட்சியின் உறுத்தலிலிருந்து ஆறுதல் தேடிக்கொள்கிறார்கள்.கெட்டதைக் காணும் சுவாரசியம் நல்லவற்றை காணுவதில் இருப்பதில்லை. அமைதியான் வீடு அன்பான் குடும்பம் என ஒரு வாரத்துக்கு மேல் கதையை இழுக்க முடியாது. இதை தெரிந்து கொண்டுதான் கதை எழுதுகிறார்கள்.
*
அரசியல் வாதிகள், மதவாதிகளி்ன் விளம்பரதிற்கும் மூட நம்பிக்கையை பரப்பவும் தான் தொலைக்காட்சி பெரிதும் உபயோகிக்கப்படுகிறது.
***
அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்:
*
குழந்தையிடம் தொலைக்காட்சியின் ஆதிக்கம் மற்றும் விபரீதம் பற்றிய ஒரு ஆய்வு புகழ்பெற்ற மிச்சிங்காம் பல்கலைகழகத்தில் மேற்கொள்ளப்பட்டது. மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்களை அது வெளியிட்டுள்ளது.நடு வீட்டில் ஓர் நச்சு செடி 12
1. சாதாரணக் குழந்தை பள்ளியில் செலவழிக்கும் நேரத்தைக் காட்டிலும் தொலைக்காட்சியில் அதிக நேரம் செலவழிக்கிறது.
*
2. சராசரியாக ஒருவாரத்திற்கு 20 மணிநேரம் தொலைகாட்சியில் செலவழிக்கிறது. இது மற்ற எல்லா செயல்களைக் காட்டிலும் அதிகமாகும்.( தூங்குவதைத்தவிர ).
*
3. சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதன் 7 முதல் 10 ஆண்டுகள் வரை நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறான்.
*
4. விளம்பரங்கள் குழந்தைகளை இலக்காக வைத்து தயாரிக்கப்படுகின்றன. மாதந்தோறும் ஆயிரக்கணக்கான வியாபார விளம்பரங்கள் தயார் செய்யப்படுகின்றன.
*
5. ஒருவருடத்திற்கு 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்களை குழந்தைகள் பார்க்கின்றன.
***
மேலும் வன்முறையும் தொலைக்காட்சியும் குழந்தைகளுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளில் ஐந்து முதல் ஆறு மடங்கு பெரியவர்களுக்கு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைக் காட்டிலும் வன்முறை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்படுகின்றன.சனி, ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன்முறைக்காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.8000 கொலைகளை பள்ளிப்படிப்பை முடிக்குமுன் குழந்தைகள் பார்க்கின்றன.10,000 கற்பழிப்புகள், அடிதடிகள், கொலைகள் ஓவ்வொருவருடமும் பார்க்கின்றன. அவற்றைப் பார்த்தது போல் வன்முறையில் ஈடுபட முனைகின்றன.
*
தொலைக்காட்சி மனதளவில் ஏற்படுத்தும் மாறுதல்களின் மூலம் சிறார்கள் பொறுமையை இழக்கிறார்கள். பலம் கொண்ட எதிரிக்கு அடங்கிப் போகும் மனப்பான்மையும் உத்வேகம், மன எதிர்ப்புச் சக்தி ஆகியவை சிறுகச் சிறுக இழக்கின்றனர் என்றும் தன்னிச்சையாக சிந்திக்கும் மனப்பான்மையை முற்றிலுமாக இழந்து இடர்பாடுகள் ஏதுமில்லாத ஒரு ரெடிமேட் உலகத்திற்காக இவர்கள் தவிக்கின்றனர் என்கிறது இன்னொரு அறிக்கை.
*
சமீபத்தில் Center on Alcohol Marketing and Youth (CAMY) மேற்கொண்ட ஆய்வில் வெளியான புள்ளிவிபரங்களின்படி 2001 க்கும் 2006 க்கும் இடைப்பட்ட காலத்தில் மது அருந்துதலை ஊக்குவிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 30% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.
*
புள்ளிவிபரங்கள் சேகரிக்கும் நிறுவனங்கள், "அதிக நேரம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் ஒரு குழந்தை, மூர்க்கத்தனமாகவும் புதிதாக படைப்புக்களை உருவாக்கும் உற்பத்தித் திறன் குறைவாகவும் பொறுமையற்றதாகவும் கற்பனைத் திறனற்றதாகவும் உடல் மற்றும் உள்ளப்பூர்வமாக மிகவும் பலவீனமாகவும் உருவாகிறது" என்பதைத் தமது ஆய்வறிக்கையின் முடிவுகளாக சமர்ப்பித்துள்ளன.
*
சிந்தனை ஆற்றல் குறைகிறது. செயலாற்றலும் பாதிக்கப்படுகிறது. சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடவேண்டிய வயதில் வயோதிகர்களைப் போல் இயக்கமில்லாமல் இருப்பார்கள். ஓடியாடாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து தொலைக் காட்சி பார்ப்பதால் குழந்தைகளின் உடலில் கொழுப்புச் சத்து சேருகிறது. நடக்கவும் ஓடவும் செய்யாமல் சற்று தூரத்திற்கு நடப்பதற்கே இயலாது கால் வலிக்கிறது என்று கூறுகிறார்கள். இது எதிர்காலத்தில் குழந்தையின் உடல் நலனைப் பாதிக்கும். அதோடு முரட்டுக் குழந்தைகளாகவும் இருப்பார்கள். அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் இத்தனையும் தெரிய வந்திருக்கிறது.(ரீடர்ஸ் டைஜஸ்ட்லிருந்து)

பாதிக்கப்படும் பசுந்தளிர்கள்:
நடு வீட்டில் ஓர் நச்சு செடி Pic31744
"மேலே உள்ள குழந்தைகளின் படத்தில் என்ன சந்தோஷத்துடன் அந்த குறும்பு விளையாட்டு" இது எல்லாம் நம் குழந்தைகலுக்கு எங்கே போயிவிட்டது.
நாம் இல்லை என்றாலும் மண்ணில், வீட்டில் சாதாரணமாக விளையாடுவது எல்லாம் இப்போது எங்கே போயிவிட்டது யோசிங்கள் பெற்றோரே!

இன்று நமது பிள்ளைகளின் நிலையைப் பார்த்தீர்களா? சதாவும் தொலைக் காட்சிப் பெட்டியின் முன்னால் தான் உட்கார்ந்திருக்கிறார்கள். விளையாடுவதற்குக் கூட வெளியே போவதில்லை. பக்கத்து வீடுகளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ அழைத்தால் கூட போவதில்லை. சிலைகளாக பள்ளிக்கூடத்திலிருந்து வந்ததும் உடையைக்கூட மாற்றாமல் அதன் முன் சிலைகளாக அமர்ந்துவிடுகிறார்கள். தேனீர், சாப்பாடு எல்லாம் அதன் முன்னால் தான். உட்கார்ந்து உட்கார்ந்து அவர்கள் களைத்துப் போய் படுத்துக் கொண்டே தொலைக் காட்சியை இமை கொட்டாது பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

1. இரண்டு மூன்று வயதுடைய குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பது மிகவும் ஆபத்தாகும். அந்த வயதில் தான் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அடைகிறது. அப்போது தொலைக் காட்சி பார்ப்பதால் மூளை வளர்ச்சி பாதிப்பு அடையும்.

2. தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மற்ற செயல்களை அதாவது விளையாடுவது, பழகுவது, வீட்டுப்பாடம் படிப்பது, பெற்றோருடன் நேரத்தை செலவிடுவது, சுகாதாரமான காற்றோட்டத்தை சுவாசிப்பது போன்றவற்றை கெடுக்கிறது.

3.எப்போதும் டிவி முன் இருக்கும் குழந்தைகள் டி விப் பெட்டியிலிருந்து வெளிப்படும் எக்ஸ் கதிர் தாக்குதலுக்கு தொடர்ந்து உட்பட்டு புற்று நோய் அபாயத்துக்குள்ளாகிறார்கள்.

4.அதிரடி சப்தங்களால் காது கேட்கும் திறனை விரைவில் இழக்கிறார்கள்.

5.எதையும் பார்ததே அறியும் குழந்தை புத்தகம் படிக்க பழகுவதில்லை.கிராபிக்ஸ் ஜாலங்கள் கண்டு பழகிய கண்களுக்கு வகுப்பறையில் டீச்சர் பாடம் நடத்துவது போராடிக்கும்.டிவி யின் காட்சிகளின் தாக்கம் உள்ளத்தில் ஆக்கிரமித்திருப்பதால் பள்ளிக்குச் செல்லும் போது பாடத்தில் கவனம் இருப்பதில்லை.

6. குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதினால் பசியின்மை, தூக்கமின்மை, மந்தபுத்த, சகவாசமின்மை, முரட்டுத்தனம், ஆகிய பின்விளைவுகளைப் பெறுகின்றன.

7. திடீர் திடீரென மாறும் காட்சிகளால் எற்படும் ஒளி தாக்குதல்களால் விரைவில் கண்பார்வை போய் முதியவர்களை விட கனமான கண் கண்ணாடிகளை அணியவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டி ருக்கிறார்கள்.தூரக் கிட்டக் காட்சிக்கேற்ப்ப பார்வையை நிலை நிலை நிறுத்தும் தசைகள் செயல் திறன் குறைந்து விடும். நாலாபுறமும் பார்க்க வேண்டிய கண்கள் ஒரே இடத்தில் நிலை குத்தி நின்று விடுவதே இதற்குக் காரணம்.

8. பள்ளியில் சேருமுனனரே (Adults) பார்க்கும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை மிகவும் பாதிக்கின்றன.தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகக் கெட்ட நடத்தைகளை வளர்க்கின்றன.பெரியவர்களை விட அதிகமாகவே பெரியவர்களின் சமாச்சாரங்களையெல்லாம் கற்றுக் கொண்டு விடுகின்றன என்பது ஆய்வுகளில் வெளி வரும் அதிர்ச்சிகரமான தகவல்களாகும்.டீ.வி சீரியல்களில் குழந்தைகள் வக்கணையாக பேசுவதை இப்போதெல்லாம் சாதாரணமாக காணலாம். மழலைத் தன்மை விரைவில் மறைந்தே போய்விடுகிறது.

9. நினைப்பதை அடைய வன்முறை தான் தீர்வு என்று காண்பிக்கப்படுகின்றன.நல்வர்கள் கெட்டவர்களை அடிப்பது நல்லது போலவும் அது சாதாரணமானது போலவும் சித்தரிக்கப்படுகிறது. விளையாட்டுகளில் இது போன்று நிரூபிக்க குழந்தைகள் முயலுகின்றன.

10. தொலைக்காட்சியில் வரும் (Fast food )உணவு, இனிப்பு பதார்த்தங்களில் மட்டுமே ஆரோக்யமும் சத்தும் இருப்பது போல் குழந்தைகள் நினைக்கின்றன. ஆனால், உண்மையில் அவ்வாறில்லை.

11. மூன்று வயது வரை குழந்தைக்கு ஹீரோ அவன் தந்தை தான். அதன் பிறகு மனதிலிருந்து பெற்றவரை துரத்தி விட்டு தான் அமர்ந்துக் கொள்ள நிறைய ஹீரோக்கள் வந்து விடுகிறார்கள். தன் முன் நிஜமாக இருக்கும் உலகத்தை புரிந்து கொள்ளாமல், டிவியில் கற்பனையாக காட்டப்படும் உலகையே புரிந்து கொள்கிறான்.நிஜ உலகின் சவால்களை எதிர்கொள்ள தயாராகாமல் வளர்கிறான்

12. சுய சிந்தனை, கற்பனைத்திறன் என்பது குறைந்து, தொலைக்காட்சிகளில் போதிக்கப்பட்டதைப் பற்றி சிந்தனைகள் சுழல வைக்கப்படுகின்றன. குழந்தைகளின் நடை, உடை, முக பாவனைகள், பேச்சுத்திறன் என ஒவ்வொரு மனோபாவமும் மாற்றியமைக்கப்படுகிறது

13. மாயாஜால கிராபிக்ஸ் படங்கள் அறிவியலை தொழில் நுட்பங்களை பற்றிய அறிவை வளர்க்காமல் மதங்களையும்,மூட நம்பிக்கையை வளர்ப்பதற்க்குத்தான் அதிகம் பயன் படுகிறது. சினிமா மற்றும் சீரியல்களில் காண்பிக்கப்படும் ஹீரோக்களின் துணிச்சல்(?) மிகு சாகசங்களின் பின்னணியில், பச்சைப் பொய்யை உண்மை போலாக்க ஒரு தொழிற்சாலையே இயங்குகிறது என்ற உண்மை குழந்தைக்குப் புலப்படுவதில்லை.
*
14. ஸ்பைடர்மேன் போன்ற கற்பனைக் கதாபாத்திரங்களுடன் மனதளவில் வாழ்ந்து வரும் குழந்தைகள், அது போன்ற செயற்கை உருவாக்கத்திற்குப் பின்னால் நடக்கும் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ், கிராஃபிக்ஸ் போன்றவற்றினை அறிந்து கொள்வதில்லை.
*
15. சக்திமான் காப்பாற்றுவார் என்று தூக்குப் போட்டுக் கொண்டு இறந்த சிறுவன். அதே நம்பிக்கையில் தீக்குளித்து இறந்த சிறுவன் என்று தற்கொலை பட்டியலில் இடம் பிடித்துக் கொண்ட பிஞ்சுகள் அனேகம்.பவர் ரேஞ்சர் போன்ற கார்டூன்கள் பிஞ்சு குழந்தகளை மனநோயாளிகள் போல் மாற்றி விடுகிறது.
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

நடு வீட்டில் ஓர் நச்சு செடி Empty Re: நடு வீட்டில் ஓர் நச்சு செடி

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 16:12

அருமையான செய்திகள் நன்றி ஜவாஹிர் அவர்களே ://:-: ://:-: ://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நடு வீட்டில் ஓர் நச்சு செடி Empty Re: நடு வீட்டில் ஓர் நச்சு செடி

Post by ஷஹி Sun 17 Jul 2011 - 16:17

முனாஸ் சுலைமான் wrote:அருமையான செய்திகள் நன்றி ஜவாஹிர் அவர்களே ://:-: ://:-: ://:-:
:+=+: :];: :];:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

நடு வீட்டில் ஓர் நச்சு செடி Empty Re: நடு வீட்டில் ஓர் நச்சு செடி

Post by முனாஸ் சுலைமான் Sun 17 Jul 2011 - 16:18

#heart
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நடு வீட்டில் ஓர் நச்சு செடி Empty Re: நடு வீட்டில் ஓர் நச்சு செடி

Post by நேசமுடன் ஹாசிம் Sun 17 Jul 2011 - 17:33

ஜபாயிர் wrote:
முனாஸ் சுலைமான் wrote:அருமையான செய்திகள் நன்றி ஜவாஹிர் அவர்களே ://:-: ://:-: ://:-:
:+=+: :];: :];:

ஜவாயிர் முத்தமா கொடுக்கிறாரே வாய் நோகலியாப்பா :}
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடு வீட்டில் ஓர் நச்சு செடி Empty Re: நடு வீட்டில் ஓர் நச்சு செடி

Post by ஷஹி Sun 17 Jul 2011 - 17:42

சாதிக் wrote:
ஜபாயிர் wrote:
முனாஸ் சுலைமான் wrote:அருமையான செய்திகள் நன்றி ஜவாஹிர் அவர்களே ://:-: ://:-: ://:-:
:+=+: :];: :];:

ஜவாயிர் முத்தமா கொடுக்கிறாரே வாய் நோகலியாப்பா :}
:% :% :% :% :% (*(:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

நடு வீட்டில் ஓர் நச்சு செடி Empty Re: நடு வீட்டில் ஓர் நச்சு செடி

Post by நேசமுடன் ஹாசிம் Sun 17 Jul 2011 - 17:45

ஜபாயிர் wrote:
சாதிக் wrote:
ஜபாயிர் wrote:
முனாஸ் சுலைமான் wrote:அருமையான செய்திகள் நன்றி ஜவாஹிர் அவர்களே ://:-: ://:-: ://:-:
:+=+: :];: :];:

ஜவாயிர் முத்தமா கொடுக்கிறாரே வாய் நோகலியாப்பா :}
:% :% :% :% :% (*(:

அ....உ....என்னா கிளம்பிர்றாங்க பொல்லோட :,;: :,;:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நடு வீட்டில் ஓர் நச்சு செடி Empty Re: நடு வீட்டில் ஓர் நச்சு செடி

Post by ஹம்னா Sun 17 Jul 2011 - 18:46

மிகவும் சிறந்த பயனுள்ள பதிவு.


நடு வீட்டில் ஓர் நச்சு செடி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நடு வீட்டில் ஓர் நச்சு செடி Empty Re: நடு வீட்டில் ஓர் நச்சு செடி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum