சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்  Khan11

முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்

3 posters

Go down

முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்  Empty முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 17:39

நம் நாட்டில் பெண்களின் பிரச்சனைகள் அத்தனையும் திருமணத்தை மையமிட்டதாகவே உள்ளன.

திருமணம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்திலும் பெண்ணடிமை பிணைந்து கிடக்கின்றது.

இவை அனைத்தும் சமயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு சாதிகளின் வழியாகப் பாதுகாக்கப்படுகின்றன. என்று ஒரு பெண்ணியவாதி தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.
கருக்கலைப்பு, சிசுக்கொலை, மீறிப் பிறந்தால் வரவேற்பின்றி புறக்கணிப்பு, குழந்தை வளர்ப்பில் பராபட்சம், விளையாட்டுகளில் கூட வேறுபாடு, கல்வி அளிப்பதில் பாகுபாடு என்றிவ்வாறாக சீர், செனத்தி, நகை, நட்டு, வரதட்சணை, தற்கொலை, புகுந்த வீட்டுக் கொடுமைகள் என்ற தொடர்கதையாக நீள்பவை அனைத்தையும் பார்க்கும் போது மேற்கூறப்பட்ட கருத்து உண்மையே என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

கூடக்குறைவு ஏதுமின்றி பெண்களின் மீதான இக்கொடுமைகள் யாவற்றையும்

மனித வாலாற்றில் இஸ்லாம் மட்டும்தான் ஒழித்துக்கட்டி

பெண்ணினம் தன்னுடைய வாழ்வு மூச்சை சீராகச் சுவாசிக்க வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது

என்று நாம் முன்வைக்கிற அதே சமயம்,

தற்போதைய நிகழ்கால முஸ்லிம் சமூகத்தில் இக்கொடுமைகள் நிலவவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கவும் தயாராக இல்லை!
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் (கி.பி.எட்டாம் நூற்றாண்டில்) இந்தியாவில் இஸ்லாம் அறிமுகமானது என வைத்துக் கொண்டால் கூட

ஏறக்குறைய பன்னிரண்டு நூற்றாண்டு காலமாய் இங்கே இஸ்லாமும், முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொல்லவேண்டும்.

ஆனால், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல முடியுமேயொழிய இஸ்லாம் வாழ்ந்து வருகின்றது என்று சொல்லவே முடியாது.

பிரச்சனையின் அடிப்படைச் சிக்கலே இங்குதான் அவிழ்கின்றது.

ஓரிறைவனை மட்டுமே ஒப்புக்கொண்டு

அவன் காட்டிய வழியில் தான் வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வேண்டும்

என்கிற சத்திய நன்னெறியினை இந்தியவாழ் முஸ்லிம்கள் தத்தமது சமகாலத்தைய சகோதர சமயத்தார்களிடம் முறையாகக் கொண்டுபோய் சேர்த்தார்கள் இல்லையா?

என்கிற கேள்வியையே இங்கு நாம் ஒதுக்கித் தள்ளிவிடுவோம்.

கடவுட் கொள்கையிலும், பண்பாட்டிலும் பாரதூரமான வேறுபாடுகளைக் கொண்ட இருசமூகங்கள் அருகருகே கலந்து வசிக்கும்போது அவற்றிற்கிடையே பரஸ்பரம் நிகழும் தாக்கங்கள் எங்ஙனம் அமையும்?

அடிப்படைக் கொள்கையையோ, அவற்றின் கூறுகளையோ ஏற்றல்,

கலாச்சாரத்தின் சிற்சில அம்சங்களை ஒப்புக் கொள்ளல்,

நேரிடையாகவோ, எதிரிடையாகவே ஒருசில பண்பாட்டு மாற்றங்கள், சிதைவுகளுக்கு உட்படுதல் போன்ற தளங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன?

இத்தகைய எதிர்த் தாக்கங்கள் எந்தச் சமூகத்தில் அதிகமாகப் பிரதிபலித்தன?

எனும் கோணத்தில் ஆராயப் புகுந்தோமென்றால்

இந்திய முஸ்லிம்; பெண்கள் இன்றைக்கு சந்தித்து வருகின்ற எல்லாப் பிரச்சனைகள், அவலங்களுக்குமான முழுவிடை கிடைத்துவிடும்.

இஸ்லாமிய இறைக்கோட்பாடு இந்திய சமய நெறிகள், சித்தாந்தங்கள் பலவற்றிலும் பெருத்த மாறுதல்களை ஏற்படுத்தியது.

இஸ்லாமியப் பேரறிஞர் மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி இதுகுறித்து எழுதியுள்ள ஒரு கருத்து மேலோட்டமாகப் பார்க்கையில் அதிர்ச்சியை அளித்தாலும் ஆழக் கவனித்தால் உண்மை புலனாகும்.

அவர் எழுதுகிறார்: இஸ்லாமின் ஓரிறைக் கோட்பாடு காரணமாக சித்தாந்த மாறுபாட்டை சந்தித்தவை ஆர்ய சமாஜம், ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளே ஆகும்.

விளைவாக, உருவ வழிபாடு எனும் இணைவைப்புக் கருத்திலிருந்து (தவ்ஹீது எனும்) ஓரிறைக் கோட்பாட்டை நோக்கி நெருங்கிவர அவை முயன்றன.

நாம் பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டிருப்பதால் பண்பாட்டுத் தளத்தை கவனிப்போம்.

தன்னுடைய பண்பாட்டின் சிறப்புக் கூறுகள் பலவற்றை இஸ்லாம் பிறசமய நெறிகள், மரபு சித்தாந்தங்கள் போன்;றவற்றிற்கு ஷஏற்றுமதி செய்திருந்தாலும்,
குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு வீரியமிக்க பல்வேறு பண்பாட்டுத் தாக்கங்களை ஷஇறக்குமதி செய்து உள்வாங்கி கொண்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்  Empty Re: முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 17:40

உலமாக்கள், மார்க்க அறிஞர்களின் கவனமும் கண்காணிப்பும் இல்லாமல் போனதால் தான் இது நிகழ்ந்தது என்று தைரியமாகக் கூறலாம்

உருவ வழிபாட்டிற்கு இணையான தர்கா வழிபாடு,

ஆதீனமடாதிபதிகள், தனிநபர் வழிபாடு,

செய்வினை, ஜாதிகளுக்கு மாற்றாக உட்பிரிவுகள் பிராதரி (சகோதர இனப்பிரிவுகள்)

சூனியம் போன்றவற்றின் மாற்றாக ஆமில்கள்,

தங்கல்களின் அமைப்பு,

பஞ்சாங்கத்திற்குப் பதிலாதஃபால் கிதாபுகள்,

ஜோஸியம், ஜாதகம் போன்றவற்றை அப்படியே மனமொப்பி ஏற்றுக் கொள்ளும் தன்மை,

குலதெய்வங்கள் போன்று குல தர்காக்கள், நேர்ச்சை, நேர்ச்சை யாரை நோக்கி செய்யப்படுகின்றதோ அவர் பெயரையே குழந்தைகளுக்கு வைக்கும்போக்கு,

குடும்ப உறுப்பினர்கள் (ஆண்பெண் உட்பட) அனைவர் பெயரிலும் அக்குல தர்கா அவ்லியாவின் பெயர் இடம் பெறுதல்,

சிற்சில இடங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே பெயரையே சூட்டும் குணம்,

திருமணம், திருமண சடங்குகள், மூன்று நாள் முதல் ஏழு நாட்கள் வரை நடைபெறும் திருமண வைபவங்கள்,
சீர் செட்டுகள், நகை வரதட்சணைகள், மொய் வகையறாக்கள், அழைப்பு ஊர்வலங்கள், திருமணங்களைத் தொடர்ந்து படையெடுத்து வரும் பண்டிகை, விழா சீரியல்கள், வளைகாப்பு, குழந்தை பிறப்பு சீர்கள், கருக்கலைப்பு,

பெண்சிசுக் கொலை மட்டும் நானறிந்து அவ்வளவாக இல்லை

பெண் குழந்தை புறக்கணிக்கப்படுதல், வளர்ப்பில் பாகுபாடு பாரபட்சம், கல்வி மறுப்பு,

பத்தாம்பசலித்தனத்தின் அடையாளமாய் பெண் உருவாக்கம் என்று முஸ்லிம் சமூகத்தில் இன்று பிடிவாதமாய் நின்று நிலவிவரும்

இவை எதுவொன்றுமே இஸ்லாத்தின் அம்சங்கள் அல்ல.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஷஒட்டி உறவாடி வரும் மாற்றுமதத்தாரின் பண்பாட்டைப் பார்த்து கற்றுக் கொண்டவை

அல்லது சிலைவணக்கம் தவறு என்றுணர்ந்து நம் முன்னோர் இஸ்லாமிய ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தபோதும் விடாப்பிடியாக அக்கறையின்றி கொண்டு வந்த மிச்ச சொச்சங்கள் இவை.

மக்களுடைய மனப்போக்கு என்று இதை ஒதுக்கித் தள்ள முடியாது.

ஆலிம்கள் உலமாக்களின் பொறுப்பின்மை, கவனக்குறை என்று தான் கூறவேண்டும்.

இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றியவர்களே எங்களுக்கும் ஒரு சிலையைச் செய்து கொடு! என்று கேட்டிருக்கும் போது மக்கள் என்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்று காரணம் கட்ட முடியாது.

உலமாக்கள் ஏன் கவனம் செலுத்தாது விட்டுவிட்டனர் என்பது வேறொரு தலைப்பின் கீழ் விவாதிக்க வேண்டிய விஷயம்!

இஸ்லாம் முறையாக போதிக்கப்படவில்லை, பின்பற்றப்படவில்லை என்பது தான் கருத்தூன்றி இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்!

இதன் விளைவு எப்படி வெளிப்பட்டாக வேண்டுமோ அப்படியே வெளிப்படுகின்றது.

குரலற்றவர்களின் குரல் என்கிற தலைப்பில் தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்ட நூலொன்று சிறையில் இருந்தபோது என்கைக்கு வந்தது.

அந்நூலை தொடர்ச்சியாக வாசிக்கவே என்னால் இயலவில்லை.

கண்ணீர் ததும்பித் ததும்பி எழுத்துக்களை மறைத்துக் கொண்டே இருந்தது.

அடிகள் உதைகளுடனான வளர்ப்பு, குடிகாரத் தந்தையின் கொடுமை, பாலியல் சீண்டல்கள்,

முதிர்கன்னிகள், வரதட்சணை சித்ரவதைகள், கணவனின் கொடுமைகள்,

தலாக் பயமுறுத்தல்கள், நிர்க்கதியான நிலை,

போக்கிடமோ, புகலிடமோ ஏதுமற்ற அநாதரவு!

ஐயா, இவையெல்லாம் என்ன?

உலகமெல்லாம் சமத்துவம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இஸ்லாமின் சொந்த வீட்டில்தானா இவையனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்  Empty Re: முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 17:40

யா அல்லாஹ்! இவற்றுக்கெல்லாம் யார் காரணம்?

இஸ்லாமிய அமைப்பொன்றின் முன்பு ஊழியம் செய்து கொண்டிருந்த போது முஸ்லிம் பெண்கள் படும் பாட்டினை கண்களால் பார்த்திருக்கிறேன்.

நெருங்கிய உற்றார் உறவினர்களினால் நிகழ்த்தப்படும்; பாலியல் சீண்டல்களைப் பற்றி காது கொடுத்துக் கேட்டிருக்கிறேன்.

அவற்றால் மனம் பாதிக்கப்பட்ட பெண்களை பேதைச் சகோதரிகளைக் கண்டுள்ளேன்.

முறையற்ற தலாக்குகளால் சீரழிந்து போனோர்

தொலைந்து போன வாழ்வைத் தேடி அலைவதையும் கண்டுள்ளேன்.

இளம் வயதில் துணையற்றுப் போன (பெரும்பாலோர் தலாக் விடப்பட்டவர்கள்)

முஸ்லிம் பெண்களின் மறுவாழ்வுக்கென்றே திருப்பூர், குன்னூர் போன்ற இடங்களில் அமைப்புகள் இயங்குகின்றன.

தென்காசி பகுதியில் பழங்குடி முஸ்லிம் பெண்களை முறைப்படி திருமணம் செய்து கொடுப்பதெற்கென்றே சிலர் பாடுபட்டு வருகிறனர்.

இவர்கள் அனைவரும் தாங்கள் மேற்கொண்டுள்ள பணியை நிறைவேற்ற எப்படியெல்லாம் திணறுகிறார்கள் என்று நம்மில் யாருக்காவது தெரியுமா?

எழுத்துகளிலும், பயான்களிலும் முன்வைக்கப்படுகின்ற இஸ்லாம்தான் மொஹல்லாக்களிலும் வசிக்கின்றது என்றால் இவர்களுக்கு எல்லாம் எதற்கு இந்த வேலை?

இதற்கெல்லாம் யாரு காரணம்?

இறைவனா?

இறைத்தூதரா?

வான்மறை குர்ஆனா?

வழிகாட்ட வந்த நபிமொழியா?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!

இவைதாம் காரணம் என்றால் இப்படிப்பட்ட மார்க்கம் கண்டிப்பாக இறைமார்க்கமாக இருக்காது.

இத்தகைய போதனைகளுக்குப் பின்னணியில் உள்ள ந}ல் கட்டாயம் இறைமறையாக இருக்காது.

இஸ்லாமிய அறிவு கொடுக்கப்படாததும், இஸ்லாமிய வாழ்வும் ஒழுக்கமும் பயிற்றுவிக்கப் படாததும் தான் உண்மையான காரணங்கள் என்கிற ஒருமித்த முடிவிற்குத்தான் நீங்களும் நானும் இப்போது வரவேண்டியிருக்கிறது.

கற்பிப்பதும், பயிற்றுவிப்பதும் யார்மீது கடமை?

அக்கடமையை ஏன் அவர்கள் நிறைவேற்றாமல் போனார்கள்?

என்பனவெல்லாம் பக்கவாட்டில் முளைக்கின்ற துணைக்கேள்விகள்!

ஆனால் ஒன்றை மட்டும் நீங்களும் நானும் கண்டிப்பாக செய்யமாட்டோம்.

இஸ்லாத்தின் கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்குவது,

ஷரீஅத்தை சுட்டிக்காட்டி குற்றஞ்சுமத்தவது,

குர்ஆனுக்கு புதியதொரு விளக்கம் காணவேண்டும் என்று துடிப்பது,

பெண்கள் சட்டவாரியம் அமைப்பது,

வெகுஜன ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சிப்பது என்பன போன்ற செயல்கள் நம்மிடமிருந்து தோன்ற.மேற்கண்ட அவலங்களையெல்லாம் எவ்வாறு அகற்றுவது?

அதற்குரிய வழிமுறைகள் என்ன? என்பது பற்றியும் நாம் விரிவாக அலசி ஆராய வேண்டியுள்ளது.

சொல்லப் போனால் இஸ்லாமிய சமூக மறுமலர்ச்சியின் கட்டுமானமே அதன் மீது தான் அமையவேண்டியிருக்கும்.
அதுபோலவே பெண்ணுக்கான முழு முற்று விடுதலை - பரிபூரண விடுதலை இஸ்லாமின் மூலம் தான் சாத்தியம் என்பதை இக்கட்டுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வலியுறுத்தி உள்ளேன்

பெண்ணிய இயக்கங்கள் போராட்டங்கள் கூட இவ்விஷயத்தில் பெரிதாக ஒன்றும் சாதித்திட இயலாது என்றும் கூறுகிறோம்.
அதெப்படி இஸ்லாம் மட்டும் வெற்றியை ஈட்டும் அல்லது ஈட்டியது என்பதைக் காணலாம்.

''Jazaakallaahu khairan'' http://islamiyappaarvai.blogspot.com/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்  Empty Re: முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்

Post by ஹம்னா Sun 31 Jul 2011 - 20:03

##* ##*


முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்  Empty Re: முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்

Post by kalainilaa Sun 31 Jul 2011 - 23:09

இதுக்கு எல்லாம் ,முறையான ,இசலாத்தின் கல்வி இல்லாதது தான் மூலக் காரணம் .இம்மை படிப்புக்கு ,கொடுக்கும்,
கொடுத்த அளவுக்கு ஈமானுக்கு கொடுக்காததே காரணம் .,
நாம் வாழ்ந்து வரும் சூழ்நிலைகள்,தனி மனிதன் வழிபாடு ,இதுவும் காரணம் .மொத்தத்தில் இன்னும் அறியாமை விலகாமலே இருப்பது உண்மை!

நன்றி தோழரே .நல்ல பதிவு தந்தமைக்கு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்  Empty Re: முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்

Post by நண்பன் Sun 31 Jul 2011 - 23:12

:”@: @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்  Empty Re: முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும் (1)
» முஸ்லிம் பெண்களின் உரிமையும் விவாகரத்து முறைமையும் (2)
» முஸ்லிம் பெண்களின் ஆடையும், சில பௌத்த தேரர்களின் குற்றங்களும் (ஆதாரம் இணைப்பு)
» முஸ்லிம் பெண்களின் ஆடையை சிங்கள பெண்களும் பின்பற்ற வேண்டும். – வஜிர ஸ்ரீ நாயக்க தேரர்.
» பெண்களின் ஆடை பெண்களின் உடை எவ்வாறு அமைதல் வேண்டும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum