சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

ஸ்கிரீன் ஷாட் . Khan11

ஸ்கிரீன் ஷாட் .

2 posters

Go down

ஸ்கிரீன் ஷாட் . Empty ஸ்கிரீன் ஷாட் .

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 20:31

ஸ்கிரீன் ஷாட் . C-malar-7

திரைக் காட்சியில் சில விஷயங்கள் உங்களுக்கு வேண்டாததாகத் தெரிகிறது. அதில் குறிப்பிட்ட விண்டோ தான் உங்களுக்குத் தேவை என்று நினைக்கிறீர்கள்
பல நேரங்களில் ஸ்கிரீன் ஷாட் என்ற சொற்களைக் கேட்டிருப்பீர்கள். பலர் இது ஏதோ கம்ப்யூட்டர் மானிட்டருடன் சேர்ந்த சொற்கள் என்று விட்டிருப்பார்கள். அடிப்படையில் ஸ்கிரீன் ஷாட் என்பது ஒரு படம். நீங்கள் ஷாட் எடுக்கையில் உங்கள் கம்ப்யூட்டரின் மானிட்டரின் திரையில் என்ன காட்சி அளிக்கிறதோ அது படமாய்க் கிடைப்பது தான் ஸ்கிரீன் ஷாட்.

அப்படியானால் சில தோற்றங்களை வேர்ட் தொகுப்பில் அல்லது பவர் பாயிண்ட் பிரசன்டேஷனில் இணைக்கலாமே என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றும் அல்லவா? குறிப்பாக மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் செயல்பாடு குறித்து சொல்லித் தருகையில் பல திரைத்தோற்றங்கள் அப்படியே காட்டுவதற்குக் கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று ஆசிரியர்கள் எண்ணியிருக்கலாம். இதை எப்படி செயல்படுத்துவது? உங்கள் மானிட்டரில் தோன்றும் காட்சியினை ஸ்கிரீன் ஷாட்டாக எடுக்க நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பிரிண்ட் ஸ்கிரீன் Prt Sc கீயை ஒரு முறை அழுத்த வேண்டியதுதான்.

இது ஆரோ கீகளுக்கு மேலாக உள்ள கீகளில் மேலாக இடது மூலையில் இருக்கும். அல்லது சில கீ போர்டுகளில் எப்12 கீக்கு அடுத்தபடியாக இருக்கும். இனி அடுத்தபடியாக இதனை எந்த புரோகிராம் பைலில் ஒட்ட வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த புரோகிராம் பைலுக்குச் சென்று கண்ட்ரோல் + வி (Ctrl + V) கீகளை அழுத்துங்கள். இப்போது திரைக் காட்சியில் சில விஷயங்கள் உங்களுக்கு வேண்டாததாகத் தெரிகிறது. அதில் குறிப்பிட்ட விண்டோ தான் உங்களுக்குத் தேவை என்று நினைக்கிறீர்கள். மீண்டும் மானிட்டரில் காட்சியைக் கொண்டு வாருங்கள்.

இப்போது Alt + Print Screen அழுத்துங்கள். இப்போது டாஸ்க்பார் மற்றும் தேவையற்ற பார்கள் இல்லாமல் நீங்கள் விரும்பும் புரோகிராமின் தோற்றம் மட்டும் உங்களுக்குக் கிடைக்கும். இதிலும் சிலவற்றைக் கட் செய்து அல்லது உங்கள் குறிப்புகளை அதில் எழுதி இணைக்க வேண்டும் என்றால் படங்களை எடிட் செய்திடும் பெயிண்ட் அல்லது அடோப் போட்டோ ஷாப், எம்.எஸ். பிக்சர் எடிட்டர் போன்ற புரோகிராம்களில் புதிய பைல் ஒன்றைத் திறந்து அங்கு கிளிப் போர்டில் பிடித்த காட்சியை பேஸ்ட் செய்து தேவையான எடிட்டிங் வேலைகளை மேற்கொண்டு, தேவை என்றால் பைல் பார்மட்டை மாற்றி பின் பேஸ்ட் செய்திடலாம்.


ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஸ்கிரீன் ஷாட் . Empty Re: ஸ்கிரீன் ஷாட் .

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 20:52

ஸ்கிரீன் ஷாட் . C-malar-7a

வேர்ட் டிப்ஸ்…

டாகுமெண்ட் எத்தனை வகை தோற்றம்?

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பல வகைகளில் பார்க்கலாம். இதனை View என அழைக்கிறோம். பொதுவாக வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குபவர்கள் டாகுமெண்ட் வியூ மொத்தம் நான்கு வகை என்று சொல்வார்கள். ஆனால் டாகுமெண்ட்களைப் பார்வையிட ஏழு வகையான தோற்றங்களைத் தருகிறது. அவை Normal, Web Layout, Print Layout, Reading Layout, Outline, Web Page Review மற்றும் Print Preview இதில் முதல் ஐந்தும் வியூ மெனுவிலும் கீழாக உள்ள ஐகான்கள் மூலமாகவும் கிடைக்கிறது.

அடுத்த இரண்டும் File மெனுவிலிருந்து பெறலாம்.
நார்மல் வியூ: பெயருக்கேற்றார் போல டைப் செய்திடவும், டெக்ஸ்ட்டை திருத்துவதற்கும் வடிவமைப்பதற்கும் ஏற்ற தோற்றத்தினை இது தருகிறது. இந்த தோற்றத்தின் நோக்கம் டெக்ஸ்ட் என்பதால் பக்கத்தின் லே அவுட் எளிமையாக இருக்கும். பக்க வரையறைக் கோடுகள், தலைப்பு மற்றும் அடிக்குறிப்புரைகள், அசையும் கிராபிக் உருவங்கள் ஆகியவை இருக்காது. இந்த தோற்றத்தை ஸூம் மூலம் பெரிது படுத்தி வைத்து திருத்தலாம்.



பிரிண்ட் லே அவுட் வியூ: டாகுமெண்ட் இறுதியாக அச்சில் எப்படி தோற்றமளிக்கும் என்பதனை இது காட்டுகிறது. டெக்ஸ்ட், கிராபிக்ஸ் மற்றும் டாகுமெண்ட்டிற்கான பிற சேர்க்கைகள் இதில் காட்டப்படும். இதனால் டெக்ஸ்ட் மட்டுமின்றி அதனுடன் இணைந்த ஹெடர், புட்டர், வரிசைகள், படங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்திட இந்த தோற்றம் எளிதானது.
ரீடிங் லேஅவுட் வியூ: ஆபீஸ் 2003 தொகுப்பில் தான் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தோற்றத்துடன் இரண்டு ஸ்பெஷல் டூல்பார்கள் தரப்படுகின்றன. ரீடிங் லே அவுட் தோற்றத்தினை ஸ்டாண்டர்ட் டூல் பாரில் கடைசியாக உள்ள ரீட் டூல் பட்டனைக் கிளிக் செய்வதன் மூலமும் பெறலாம். அல்லது ஆல்ட் + ஆர் பட்டனகளை அழுத்தியும் பெறலாம். இதில் திறந்த ஒரு புத்தகத்தின் பக்கங்கள் தோற்றமளிப்பது போல டாகுமெண்ட் தோற்றமளிக்கும். எனவே இதில் தோன்றுகின்ற ஸ்கிரீன் எண்ணிக்கையும் பக்கங்களின் எண்ணிக்கையும் ஒன்றுக்கொன்று ஒத்துப் போகாமல் இருக்கும். டாகுமெண்ட்டின் இரண்டாவது பக்கம் இந்த தோற்றத்தில் ஐந்தாவது பக்கமாகவோ நான்காவது பக்கமாகவோ இருக்கலாம்.

இதே தோற்றத்தில் டாகுமெண்ட் மேப் என்ற டூல் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால் டாகுமெண்ட்டின் தலைப்புகள் மட்டும் காட்டப்படும். எனவே இந்த தலைப்புகளை வைத்து டாகுமெண்ட்டில் எளிதாக நீங்கள் சென்று உங்களுக்குத் தேவையான பகுதியை அடைந்து திருத்த முடியும்.


ஸ்கிரீன் ஷாட் . X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஸ்கிரீன் ஷாட் . Empty Re: ஸ்கிரீன் ஷாட் .

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 20:56

ஸ்கிரீன் ஷாட் . C-malar-7b

வெப் லே அவுட் வியூ: இன்டர்நெட்டில் வெளியிடுவதற்கான பக்கங்களைத் தயாரிக்கும் போது இந்த வியூ பயன்படுகிறது. இதில் டெக்ஸ்ட் அமைந்துள்ள பேக்ரவுண்ட் தெரியும். டெக்ஸ்ட் படங்களைச் சுற்றி சரியாக அமைக்கப்பட்டிருக்கும். வெப் பிரவுசர் வழியாகப் பார்க்கையில் டெக்ஸ்ட்டில் இருக்கும் கிராபிக்ஸ் எப்படி தோற்றமளிக்குமோ அது போல இந்த தோற்றம் இருக்கும்.
அவுட்லைன் வியூ: இந்த வியூவில் டாகுமெண்ட் ஒன்றின் கட்டமைப்பு காட்டப்படும். டாகுமெண்ட்டைத் திருத்தி அமைக்க வேண்டும் என்றால் தலைப்புகளை மட்டும் இழுத்து மாற்றி அமைக்கலாம். இதிலேயே முழு டெக்ஸ்ட் இல்லாமல் தலைப்புகளை மட்டும் காட்டும்படியும் செய்திடலாம்.

வெப் பேஜ் ரிவியூ: உங்கள் டாகுமெண்ட் இணையத்தில் எப்படி தோற்றமளிக்கும் என்று இதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதற்காகவே இந்த தோற்றம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் காட்டப்படும். பிரிண்ட் பிரிவியூ: இந்த தோற்ற வழியில் உங்கள் டாகுமெண்ட் அச்சில் எப்படி இருக்கும் என்பதனைக் காட்டும். ஒரு தோற்றத்தில் ஒரு பக்கம் காட்டும்படி இது அமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் விரும்பினால் பல பக்கங்கள் ஒரே தோற்றத்தில் இருக்கும்படியும் அமைக்கலாம்.

அழிக்க முடியாத பைல்கள்


ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும்.

பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும்.



ஸ்கிரீன் ஷாட் . C-malar-7c

சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம். எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.


ஸ்கிரீன் ஷாட் . X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஸ்கிரீன் ஷாட் . Empty Re: ஸ்கிரீன் ஷாட் .

Post by *சம்ஸ் Wed 19 Jan 2011 - 20:58

சிறந்த பதிவு பகிர்விற்க்கு நன்றி சரண்யா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஸ்கிரீன் ஷாட் . Empty Re: ஸ்கிரீன் ஷாட் .

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 21:01

1. முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள்.

இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது. டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!

டிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்

கம்ப்யூட்டர்களை செட் செய்திடுகையில் வழக்கமாக முக்கிய டிரைவ் இ ஆகவும் மற்றவை அதனைத் தொடர்ந்தும் அமைக்கப்படுகின்றன. இணைத்து எடுக்கக் கூடிய பென் டிரைவ் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தும் போது கம்ப்யூட்டரில் உள்ள இயக்கத் தொகுப்பு தானாகவே ஒரு எழுத்துப் பெயரை சூட்டிக் கொண்டு பின் அதனை எடுத்தவுடன் நீக்கி விடுகிறது. ஆனால் A முதல் Z வரை இந்த டிரைவ்களுக்குப் பெயர் சூட்டலாம், அதுவும் நீங்களே சூட்டலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள டிஸ்க் மேனேஜ்மென்ட் ஸ்நாப் இன் (Disk Management snapin) என்ற சாப்ட்வேர் சாதனம் இந்த வசதியைத் தருகிறது.


ஸ்கிரீன் ஷாட் . C-malar-7d

உங்களுடைய கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ்களுக்கு அ மற்றும் ஆ எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹார்ட் டிரைவின் இயக்கத் தொகுப்பின் செயல் பகுதி இக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ் இல்லை என்றால் அ மற்றும் ஆ எழுத்துக்களையும் நீங்கள் விரும்பும் டிரைவிற்குப் பயன்படுத்தலாம். ஆனால் ஏதேனும் ஒரு நாளில் பிளாப்பி டிரைவ் இணைக்கையில் இந்த எழுத்துக்கள் தேவை என்பதால் அவற்றை நீக்கி மற்ற எழுத்துக்களை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். டிரைவ் அல்லது அதில் உள்ள ஒரு பிரிவு அல்லது வால்யூம் ஆகியவற்றிற்கு நீங்கள் விரும்பும் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தை முதல் முதலாக எப்படி அதன் பெயராக அமைக்கக் கீழ்க்கண்டவாறு செயல்படுங்கள். முதலில் வழக்கம் போல உங்கள் கம்ப்யூட்டர் பயனாளராக கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்குங்கள்.

1. பின் Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக்கிடவும். (குறிப்பு: கண்ட்ரோல் பேனலில் category view என்ற வகைப் பிரிவில் மட்டுமே இந்த வசதி தரப்பட்டிருக்கும். எனவே அந்த வகையை முதலில் திறந்து கொள்ள வேண்டும்.)


2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. இதில் நீங்கள் எழுத்து அமைத்திட விரும்பும் டிரைவில் அல்லது பிரிவில் ரைட் கிளிக் செய்திடவும். அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. கிடைப்பதில் Add என்பதைக் கிளிக்கிடுக.

5. இப்போது “Assign the following drive letter” என்பதில் கம்ப்யூட்டர் ஏற்கனவே தேர்ந்தெடுத்து காட்டும் எழுத்து உங்களுக்குப் பிடித்திருந் தால் அதனையே தேர்ந்தெடுக்கவும். இல்லையேல் உங்களுக்குப் பிடித்தமான எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். டிரைவ் ஒன்றுக்கு அல்லது அதன் பிரிவிற்கு ஒரு எழுத்து ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தால் அதனை எப்படி மாற்றி, விரும்பும் எழுத்தை அமைப்பது என்று பார்ப்போம்.




ஸ்கிரீன் ஷாட் . X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஸ்கிரீன் ஷாட் . Empty Re: ஸ்கிரீன் ஷாட் .

Post by ஹம்னா Wed 19 Jan 2011 - 21:09

1.Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.

2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.

3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது கவனமாக Change என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.

5. “Assign the following drive letter” என்ற பிரிவில் நீங்கள் விரும்பும் எழுத்தைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

6. எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தவா என்று செய்தி கிடைக்கையில் கவனமாக ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடுங்கள். இனி நீங்கள் மாற்றம் செய்த பிரிவு அல்லது டிரைவில் அதற்கான பெயர் எழுத்து வழக்கமாகக் காட்டப்படும் இடங்களில் எல்லாம் தென்படும்.

ஏற்கனவே கொடுத்த எழுத்தை நீக்குவதற்கு கீழ்க்குறிப்பிட்டுள்ள படி செயல்படுங்கள்.


1.Start > Control Panel கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் Performance and Maintenance என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடுக.
2. இப்போது Administrative Tools என்பதில் கிளிக் செய்து அதன்பின் Computer Management என்பதில் இருமுறை கிளிக் செய்திடவும். கிடைக்கும் பிரிவுகளில் இடது பக்கம் இருக்கும் Disk Management என்பதற்குச் சென்று கிளிக் செய்திடவும்.
3. எழுத்து மாற்ற விரும்பும் டிரைவில் அல்லது அதன் பிரிவில் ரைட் கிளிக் செய்திடுக. அதன்பின் Change Drive Letter and Paths என்பதில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கவனமாக Remove என்ற பிரிவில் கிளிக் செய்திடவும்.
5. இந்நிலையில் எழுத்தை நீக்கவா என்ற எச்சரிக்கைச் செய்தி கிடைக்கும். இப்போது ஙுஞுண் என்பதில் கிளிக் செய்திடவும். இந்நிலையில் அந்த பகுதிக்கு அளிக்கப்பட்ட பெயர் எழுத்து நீக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு தேவைப்படும் எழுத்தினை உங்கள் டிரைவிற்குக் கொடுத்து பார்க்கலாம்.

பொருளடக்கம் தயாரிக்கும் முறை

வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்தி ஆவணம் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள். அதன் பொருள் குறித்து பொருளடக்கம் (Table of Contents) ஒன்றைத் தயாரிக்க எண்ணுகிறீர்கள். இதற்கு ஒவ்வொரு வரியாகச் சென்று பொருள் குறித்த வார்த்தைகளைத் தயார் செய்து பின் பொருளடக்கத்திற்கெனத் தனியாக டைப் செய்திடத் தேவையில்லை. தேவையைக் குறிப்பிட்டு விட்டால் வேர்ட் தொகுப்பு தானாகவே இந்த பொருளடக்கத்தினைத் தயாரித்து வழங்கும்.


முதலில் எந்த வரிகளில் உள்ள சொற்கள் உங்கள் பொருளடக்கத்தில் வரவேண்டும் என்பதனை முடிவு செய்து அவற்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதன்பின் பாண்ட்ஸ் புல் டவுணை அடுத்து இருக்கும் இடத்தில் கர்சரை வைத்து மெனுவைப் பெறவும். பின் பொருளடக்கத்தில் மெயினாக வரவேண்டிய சொற்களை Header என்பதற்கு மாற்றவும். துணைத் தலைப்புகளை Header 2 2 என்பதற்கு மாற்றவும். இப்போது எங்கு உங்களுக்கு பொருளடக்க அட்டவணை வேண்டுமோ அங்கு கர்சரை வைத்துக் கொண்டு பின்“Insert” மற்றும் “Index and Tables” என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பல ஆப்ஷன்களுடன் வரும் டயலாக் பாக்ஸில் “Table of Contents” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் அதிலேயே கொடுத்துள்ள வசதிகளைப் பயன்படுத்தி பக்க எண்கள் வேண்டுமா என்பதனையும் முடிவு செய்து பின் ஓகே கிளிக் செய்திடவும். பின் பொருளடக்க அட்டவணை கிடைக்கும். அதன்பின் ஆவணத்தில் மாற்றங்கள் செய்தால் எந்த பீல்டை அப்டேட் செய்திட வேண்டுமோ அதில் கர்சரை வைத்துக் கொண்டு ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் “Update Field” என்பதனைக் கிளிக் செய்துவிடவும்.

சந்தோஷத்திற்கு ஒரு வெப்சைட்

நாம் அனைவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். பல கோடி ரூபாய் கிடைத்துவிட்டால் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியாது. எது சந்தோஷம்? எப்படி சந்தோஷமாக இருக்கலாம்? சந்தோஷத்தை எப்படி அளக்கலாம்? அதற்கான டெஸ்ட் என்ன? சந்தோஷமாய் இருக்க பல டிப்ஸ் என முழுக்க மகிழ்ச்சியாய் இருப்பது குறித்த தகவல்களுடன் ஓர் இணைய தளம் உள்ளது. இந்த தளத்தை http://news.bbc.co.uk/1/hi/programmes/happiness_formula/ என்ற முகவரியில் பார்க்கலாம்.


நீங்கள் ஒரு நிறுவன அதிகாரி. வயது 49. பூங்கா ஒன்றிற்குப் போகிறீர்கள். அங்கு சிறுவர்கள் ஆடும் ஊஞ்சல் ஒன்று இருக்கிறது. சுற்றும் முற்றும் பார்க்கிறீர்கள்; ஒருவரும் இல்லை. உடனே அதில் அமர்ந்து ஆசை தீர ஐந்து நிமிடம் ஆடுகிறீர்கள். சந்தோஷம் தாங்கவில்லை. இதை மிச்சம் இருக்கும் வாழ்நாள் பூரா நினைப்பீர்களா இல்லையா? இப்படி பல நிகழ்வுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

நம் முன்னால் நம்மை வழி நடத்தும் நாய்க்குட்டி, வீட்டில் பொக்கை வாய் காட்டிச் சிரிக்கும் குழந்தை, நண்பன் சந்தோஷமாய்ச் சிரிக்கும் சிரிப்பு, பொன் வறுவலில் சிக்கன் பீஸ், கும்மாளமாய் சிரித்து மகிழும் இளம் நண்பர்கள் என எத்தனையோ விஷயங்கள் உள்ளன. மீண்டும் எண்ணிப் பாருங்கள். இவை அனைத்தும் மகிழ்ச்சி தர உங்கள் மனது தான் காரணம். இதற்கு மனதை எப்படி வயப்படுத்துவது என்பதனையும் இந்த தளத்தில் காணலாம். சந்தோஷமாய் இந்த தளத்திற்கு ஒரு விசிட் அடியுங்கள்.



ஸ்கிரீன் ஷாட் . X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஸ்கிரீன் ஷாட் . Empty Re: ஸ்கிரீன் ஷாட் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum